# Anu Jey Novels ## Posts - [அத்தியாயம் 31](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-2/): துணியைத் தோய்த்து முடித்து விட்டு சுபா பின்னாடி இருந்து வீட்டிற்குள் வர மணி பத்தானது. அந்த பச்சை நிற பழைய சேலை அணிந்திருந்தவளின் புடவை எங்கும் ஈரமாய் இருந்தது. அவள் உள்ளே வரும் போது அனைவரும் உறங்கியிருந்தனர். தீபிகா மற்றும் அரவிந்த் குடும்பம் ஒரு அறையில் துளசி ஹாலில் அஸ்வின் மற்றும் சித்து மற்றொரு அறையில் உறங்கி இருந்தனர்.    அஸ்வின் வந்ததில் இருந்து சுபாவிடம் பேசவில்லை சேலையை வேற மாற்ற வேண்டுமே ஹாலில் மாற்ற முடியாது இங்கு இருக்கிற இரண்டு அறையில் தான் மாற்ற வேண்டும் பாத்ரூம் ரொம்ப சிறியது அங்கே சேலையை மாற்ற முடியாது என்று யோசித்துக் கொண்டே அறையினுள் வந்தாள். அங்கு சித்து அஸ்வினைக் கட்டிக்கொண்டு உறங்கியிருந்தான்.   இருவரும் தூங்குகிறார்கள் என்று உறுதிப்படுத்திக் கொண்டு கதவைச் சாற்றி சேலையை கழட்ட ஆரம்பித்தாள். மாற்று சல்வாரை கையில் எடுக்கும் பொழுது அவளின் வெற்று இடையில் ஒரு கை அழுத்தியது […] - [அத்தியாயம் 30](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-2/): சுபாவின் வீட்டிற்கு போலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த அஸ்வின் அந்த பைப்பாஸ் சாலையில் கவனத்துடன் தனது காரில் மதுரை சென்றுக் கொண்டிருந்தான்.   சபேசனுக்கு மனதே சரியில்லை சுபாவிற்கு வேறு ஒரு வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தவர்,    “துளசி, என் நண்பன் திருநெல்வேலில இருக்கான் அவன் இவ்வளவு நாள் அவன் மகன் கூட யூ எஸ் ல இருந்தான் போன வாரம் தான் வந்தான் நான் அவனை பார்த்துட்டு அப்படியே நெல்லை அப்பர் கோவில் திருச்செந்தூர்னு ஒரு பத்து நாள் போய்ட்டு வரேன். நீயும் சுபாவும் பத்திரமா இருந்துக்கோங்க” என்று தன் பொருள்களை எடுத்து வைத்தார்.   “அப்பா என்ன பா நீங்க எங்க கூட நேரம் கழிக்காம உங்கள் நண்பனை பார்க்க போறீங்க” என்று பொய்யாக கோபமாக இருந்தாள் சுபா.   சுபாவின் தலையைக் கோதியவர்,  “என்னது என் மகள் சுபா கோபப்படுகிறாளா? ஆச்சரியமாக […] - [அத்தியாயம் 29](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-2/): இத்தோடு சுபா சென்று இரண்டு வாரங்கள் ஆனது. தன் வீட்டில் அமைதியாக பால்கனியில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த அஸ்வின் மனதில், ‘இனிமேல் சுபாவைக் கூப்பிட நான் செல்ல மாட்டேன். அவளே என் மேல் நம்பிக்கை வைத்து என்னைத் தேடி வரவேண்டும்’ என்று முடிவை எடுத்து விட்டு மனதில் யோசித்துக் கொண்டிருந்தான்.   அப்போது தான் அஸ்வினிற்கு ஒரு தெரியாத நம்பரிலிருந்து கால் வந்தது. யார் என்று யோசித்துக் கொண்டே கால்லை எடுத்தான். “ஹாய் அஸ்வின் நான் நேஹா பேசுறேன் ப்ளிஸ் ப்ளிஸ் ஃபோன வெச்சிராத நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.   தன் தலையைக் கடுப்பாக கோதியவன், “சொல்லு” என்றான்.   “அஸ்வின் உனக்கே தெரியும் அப்போவே எங்க அப்பா அம்மா வயசானவங்க எனக்கு ஒரு தங்கச்சி வேற இருக்கா, இரண்டு வருஷம் முன்னாடியே என் அப்பா மாரடைப்புல இறந்துட்டாங்க.”   “என் அம்மாவும் தங்கச்சியும் தான் மதுரைல இருந்தாங்க. […] - [அத்தியாயம் 28](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-2/): அன்று இரவு சுபா இன்னொரு அறையில் படுத்துக்கொண்டாள் சித்து மட்டும் தன் தந்தையோடு படுத்துக் கொண்டான். அடுத்த நாள் சுபா சித்துவை எழுப்ப அஸ்வினின் அறைக்குச் சென்றாள். அங்கு சித்து தூங்கிக்கொண்டிருந்தான் அஸ்வின் தன் வோர்க் அவுட்ஸை முடித்துக்கொண்டு குளித்து முடித்து வெளியே வந்தவன் சுபாவிடம் என்ன என்பது போல் பார்வைப் பார்த்தான்.   “மாமா, இன்னும் அரை மணி நேரத்தில கிளம்பணும்னு சொன்னாங்க. அதான் சித்து முழிச்சிட்டானானு பார்க்க வந்தேன்” என்று அவன் அறையை விட்டு வெளியே செல்ல போனாள்.   “அவனை தூக்கிட்டுப் போ அவன் கிளம்பும் போது நான் இருந்தா அவன் அழுவான். அவனை குளிக்க லாம் வெக்க வேண்டாம் அப்படியே தூக்கிட்டு போய் கார்லயும் படுக்க வெச்சிடு” என்று சுபாவின் கையில் இருபது ஆயிரம் ரூபாயை கொடுத்தான். “இது எனக்கு வேண்டாம்” என்றாள் தயக்கமாக…   “நான் பெங்களூர்ல வேலைக்கு போன பணம் இருக்கு” என்றாள்.   […] - [அத்தியாயம் 27](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-2/): தன் காரை எடுத்துக் கொண்டு அஸ்வின் வேகமாக பீச்சிற்குச் சென்றான். அவனுக்கு சுபாவின் மீது கோபமும் இருக்கிறது காதலும் இருக்கிறது. சுபா தன்னுடைய குணத்தை புரிந்துக் கொள்ளவில்லை. அஸ்வினின் மனதில் இப்போது பழைய நினைவுகள் வந்தது. சுபா வீட்டை விட்டுப் போனதும் மாளவிகா சோனியாவோடு வந்து சோனியாவை திருமணம் புரிய கேட்டாள்.   குழந்தை உண்டானவள் என்று கூட பார்க்காமல் அவளின் கேள்வி அவனுக்கு எரிச்சல் மூட்டியதால் அவளை அடிக்க கையை ஓங்கினான். பின் அவளின் நிலையை அறிந்து கையை கீழே இறக்கினான். அப்போதே முடிவு செய்தான் இனி சோனியாவை வேலையில் வைக்க கூடாது என்று அவளை வேலையை விட்டு தூக்கினான்.   சுபாவிற்கு தன் மீது வருத்தம் இருக்கலாம் ஏனெனில் அவளை அடைந்த முறை தப்பு ஆனால் தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் அளவிற்கு தாம் என்ன செய்தோம் என்று யோசித்துக் கொண்டிருந்த அஸ்வினிற்கு எரிச்சல் தான் வந்தது. எவ்வளவு […] - [அத்தியாயம் 26](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-53/): வீடு வரும் வரை காருக்குள் அமைதி நிலவியது. சித்து மட்டும் ரோட்டில் போகிறவர்களைப் பார்த்து இவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டு வந்திருந்தான். வீடு வந்ததும் அஸ்வின் சித்துவை தூக்கிக்கொண்டு உள்ளேச் சென்றான்.    சுபாவிற்கு இந்த வீட்டைப் பார்த்த பின் பழைய நினைவுகள் அவளைச் சூழ்ந்தது. வீட்டினுள் சென்ற அஸ்வின் சுபா வருவது போல் தெரியவில்லை என்றவுடன் வெளியேச் சென்று அவளின் கையை இறுக்கமாகப் பிடித்து உள்ளே கூட்டிக்கொண்டு வந்தான்.   முதலில் அவர்களைக் கண்டது பொன்னம்மாள் தான். “அம்மா அய்யா சுபாம்மா வந்துட்டாங்க” என்று சந்தோஷத்தில் கத்தினாள். வாசுதேவனும் சசிகலாவும் உடனே ஹாலிற்கு விரைந்தனர்.   சுபாவை கண்டவருக்கு வார்த்தையே வரவில்லை. அப்போது அஸ்வின் கையில் இருக்கும் அந்த மூன்று வயது சிறுவனிடம் நெருங்கிய சசிகலா அஸ்வினிடம், “எங்க பேரனா?” என்று வியப்பாகக் கேட்டார்.   “ஆமாம்மா” என்று சித்விக்கை தன் அம்மாவிடம் கொடுத்தான் புது ஆள் என்பதால் அழுதான் சித்விக். அதனால் […] - [அத்தியாயம் 25](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-2/): சுபா திங்க்ஸை பேக் செய்துக் கொண்டிருந்த போது கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. ‘யாராக இருக்கும்? ஒருவேளை கிளீனிங்க்கு யாராவது வந்திருப்பார்களா?’ என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தவளுக்கு பேரதிர்ச்சி.   அவள் யாருக்கு பயந்து நான்கு வருடம் வீட்டை விட்டு தன் குடும்பத்தை விட்டு தன் ஊரை விட்டு விலகியிருந்தாளோ அவனே அவள் கண் முன் நிற்கிறான். ஏனெனில் அவள் கண்டது அவளுடைய கணவன் அஸ்வின். அஸ்வினைக் கண்ட மறுகணம் சுபாவிற்கு நடுக்கம் வந்தது.   யாரை இவ்வளவு வருடம் விரும்பினானோ யாரை இந்த அளவு நேசித்தானோ யாரை இவ்வளவு நாள் பிரிந்தானோ தன் மனைவியிடம் அவன் காதலை காட்டவில்லை என்றாலும் ஏன் தன் மனைவி மேல் உள்ள காதல் அவனே உணரவில்லை என்றாலும் தன் ஆண்மைத்தனம் மூலம் அவளை பணியவைத்து அவளை தினமும் தன்னவள் ஆக்கி அதற்கோர் உயிர்க்கொடுத்து அவளை பார்க்காமல் தவித்துக் கொண்டிருந்த அஸ்வினின் தேடல் இன்றோடு முடிகிறது. […] - [அத்தியாயம் 24](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-3/): “நீ இந்த பொண்ண கல்யாணம் பண்ணா என்கிட்ட சொல்லு பிசினஸ் டீலிங் பேசலாம்” என்று தன் இடத்தை விட்டு எழுந்த அஸ்வின் வேகமாக வெளியே சென்றான். அஸ்வின் வெளியே சென்றதும் அவனைப் பின் தொடர்ந்து ஓடினாள் ரேவதி. “சார் ப்ளிஸ் நில்லுங்க எனக்கு அவன் கூட வாழ எல்லாம் விருப்பம் இல்லை… “   “சார் நான் இங்க கோடம்பாக்கத்தில விக்ரம் ரெசிடென்சி ஹோட்டல்ல என் தோழி கிட்ட பையன விட்டுட்டு வந்திருக்கேன். பணத்தை வாங்கிட்டு அப்படியே கிளம்பிடலாம்னு இருக்கேன்.ஆனா என் பையனுக்கு அவன் தான் பொறுப்பு அவனை மாதிரி கெட்டவன் கூட வாழுறதுக்கு காலம் முழுசா இப்படியே இருந்துட்டு போய்ட்டுவேன் சார் ஆனா நீங்க எனக்காக பண்ண நினைக்கிற உதவிக்கு ரொம்ப நன்றி சார்” என்றாள்.   அவளை வித்தியாசமாக பார்த்த அஸ்வின், “அவன் கெட்டவன் தான் ஆனா நீங்க அதை விட கெட்டவங்களா ஆகிடாதீங்க” என்றான்.   அவனைப் புரியாமல் […] - [அத்தியாயம் 23](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-2/): அப்போது தான் சுபாவும் ரேவதியும் பார்த்துக்கொண்டனர். சுபாவை பெங்களுரிலேயே இருக்க சொன்ன ரேவதி தன் கதையை கூறி முடித்தாள். ஆனால் சுபா தன் கதையை விளக்கி சொல்லவில்லை.    ஒருவன் தன்னை கெடுத்து மிரட்டி திருமணம் செய்து தன்னை அவனுக்கு பணியவைத்து வேறு ஒரு பெண்ணோட தொடர்பில் இருக்கிறான். இவ்வளவே அவள் அஸ்வினைப் பற்றிக் கூறியது அஸ்வினுடைய பேரும் ரேவதிக்குத் தெரியாது.    ரேவதி விக்கியின் புகைப்படத்தை சுபாவிடம் காட்டியிருக்கிறாள் ஆனால் சுபா அவனை பார்க்கும் போதே ஒரு அருவருப்புடன் தான் பார்ப்பாள். அவனின் புகைப்படத்தைப் பார்த்த போது எங்கோ பார்த்த ஞாபகம் சுபாவிற்கு இருந்தது. ஆனால் அவள் மெனக்கிடாமல் விட்டுவிட்டாள்.   சுபா தன் அப்பா அம்மா தன் தங்கையைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டு இருப்பாள் ரேவதியிடம்… அப்போது ரேவதி ஒருமுறை சுபாவிடம், “சரி நீ உன்னோட அந்த பிடிக்காத ஹஸ்பண்ட் இன்னொரு கல்யாணம் செஞ்சா தான் உன் அப்பா அம்மா […] - [அத்தியாயம் 22](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-52/): அடுத்த நாள் காலை ரேவதிக்கு சந்தோஷமாக விடிந்தது. அவள் எழுந்தவுடன் தன் ஆடைகளை சரி செய்து விட்டு விக்னேஷைத் தேடினாள். விக்னேஷ் தான் செய்த முட்டாள் தனத்தை எண்ணி கடுப்பில் இருந்தான்.    பெண்களிடம் சுற்றும் விக்னேஷ் பொதுவாக யாரிடமும் எல்லை மீறியதில்லை. ஆனால் ரேவதி விஷயத்தில் எப்படி அவசரப்பட்டோம் என்று  நினைத்தவன் முன் ரேவதி வெட்க முகத்துடன் வந்து நின்றாள்.   ரேவதியிடம் முகம் கொடுத்து பேசாமல்,  “கிளம்பலாமா?” என்று கேட்டு அவளுடைய பதிலை எதிர்ப்பார்க்கலாம் இவன் தன்னுடைய காரில் ஏறினான்.    ரேவதியும் வேகமாக வந்து முன் இருக்கையில் அமர்ந்தாள். தன்னைப் போல் அவனும் வெட்க நிலையில் இருக்கிறான் என்று நினைத்த பெண் மனம் அவனை அமைதியாக பார்த்துக்கொண்டே வந்தாள். விக்னேஷ் பார்க்க அழகாக இருக்க மாட்டான் என்றாலும் ரேவதிக்கு அவனை பிடித்தது ஏனென்று அவளுக்கு தெரியவில்லை.    திருவான்மியூரில் தங்கள் ஆபிஸ் அக்கம்டேஷனில் ரேவதியை விட்டவன் அவளிடம் எதுவும் […] - [அத்தியாயம் 21](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-2/): ரேவதியை பெங்களூரில் விட்டுவிட்டு சுபா விடைபெற்று செல்ல முற்பட்டாள்.  ஆனால் ரேவதிக்கோ அவளை அனுப்ப மனம் வரவில்லை தன்னோடு இருக்குமாறு வற்புறுத்தி அவளை தன்னுடன் இருக்க வைத்தாள்.   தன்னுடைய தாய் சிறிய வயதில் இருக்கும் பொழுதே தொற்றுநோய் வந்து இறந்த பின் தனது தந்தை ரமேஷ் மட்டுமே ரேவதிக்கு உலகம் பெங்களூரில் வசிக்கும் தமிழர்களான இவள் குடும்பம் சொந்தக்காரர்களின் ஒட்டுதல் இல்லாமல் தான் இருந்தனர்.    பார்க்க துருதுருவென அழகாக வலம் வந்தாள். கல்லூரி முடியும் தருணத்தில் அவளுடைய தந்தை திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.   இதனை நினைத்து பித்து பிடித்த மாதிரியானாள் ரேவதி. ஆவளுடைய நெருங்கிய தோழிகள் அவளுக்கு ஆதரவாய் இருந்தனர். ஆனாலும் ரேவதியின் முகத்தில் சிரிப்பில்லை.    இப்படியே சென்ற தருணத்தில் தான் அவளுக்கு வி.கே மோட்டர்ஸில் இருந்து ஒரு லெட்டர் வந்தது. தன் தந்தை ஐந்து வருடங்களாக வி.கே மோட்டார்ஸில் பணிபுரிந்தார். அதற்கு முன் ஒரு தனியார் […] - [அத்தியாயம் 20](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-2/): “இங்க பாருங்க மிஸஸ் ரேவதி நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க ஆகாஷ்க்கு இப்போ வயசு அஞ்சு ஆகுது ஹார்ட்ல ஒரு ஹோல் இருக்கு அதை நம்ம ஆப்பரேட் பண்ணி சரி பண்ணிடலாம் இந்த வயசுலயே செஞ்சிட்டா அவனுக்கு நல்லது” என்றார் டாக்டர் பிரஸீத் கிருஷ்ணா.   அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த ரேவதிக்கு ஒரு கால் வந்தது. “ஆமா அந்த ஹாஸ்பிடல் தான் நான் டாக்டர் ரும்ல இருக்கேன் வா” என்று கால்லை கட் செய்து விட்டாள்.   டாக்டர் பேசிக்கொண்டிருக்கும் போதே, “எக்ஸ்க்யூஸ் மீ டாக்டர் மே ஐ கம் இன்” என்று ஒரு பெண் ஒரு சின்ன பையனோடு வந்தாள்.   “எஸ் கம் இன் யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார்.   “டாக்டர் ஷீ  ஸ் மை பிரண்ட் வர்ஷினி… இது அவளோட பையன் சித்விக் ஷி இஸ் மை வெல்விஷ்ஷர்” என்றாள் […] - [அத்தியாயம் 19](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-2/): இன்றோடு சுபா அஸ்வினுடைய வீட்டை விட்டுச் சென்று நான்கு வருடங்கள் ஆகிறது. அன்று மாலை மாளவிகாவின் மகள் மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர் ஒரு ஹாலில்.   “அம்மா அண்ணன் வருவாரா இல்லையாம்மா குட்டிக்கு இன்னிக்கு பிறந்தநாள்னு தெரியும்ல” என்றாள் அன்னையிடம்.   “அவன் ஆபிஸ்ல இருந்து வரல இன்னும்… நமக்காக இல்லைனாலும் குட்டிக்காக வருவான்” என்றார் சசிகலா.   அரவிந்த் மற்றும் தீபிகாவிற்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. அவர்களுக்கு சர்வேஷ் என்கிற ஒரு வயது குழந்தை இருந்தது. பாபுவும் ஈஸ்வரியும் கூட கலந்திருந்தார்கள்.   சபேசன் மற்றும் துளசி, சுபா சென்றதிலிருந்து அஸ்வினுடைய குடும்பத்தில் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டனர். அரவிந்தின் குணத்திற்காக தீபிகாவை கல்யாணம் செய்து வைத்தனர். தீபிகாவும் அஸ்வினின் குடும்பத்தோடு பேச மாட்டாள்.   சுபா சென்ற இந்த நான்கு ஆண்டுகளில் அஸ்வினுடைய ஆறுதல் இரண்டே பேர் தான் ஒன்று அரவிந்த் இன்னொன்று மாளவிகாவின் மகள் அவந்திகா.    […] - [அத்தியாயம் 18](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-2/): சுபாவின் பக்கத்தில் நடந்து வந்த அஸ்வின் அவளை நெருங்கி அவளுடைய முகத்தை தன் இரு கைகளில் ஏந்தினான். முதலில் அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்தவன் அவளின் விசும்பல் சத்தம் கேட்டு அவளை விட்டுவிட்டான்.   ”என்ன ஆச்சு?” என்றவனின் குரலில் எரிச்சல் இருந்தது.   “எனக்கு பயமா இருக்கு ப்ளிஸ் என்னை விட்டுருங்க” என்றாள் கெஞ்சுதலாக.   ”உன் மனசுல நீ என்ன நினைச்சிட்டு இருக்க சுபா இன்னிக்கு நமக்கு முதலிரவு நீ ஒண்ணும் சின்ன குழந்தை இல்லை அதே மாதிரி நமக்கு இது முதல் தடவையும் இல்லை” என்று அழுத்தமாக அவளைப் பார்த்து சொன்னான்.   “நீங்க சோனியாவ கட்டிப்பிடிச்சத நான் பார்த்தேன். உங்களுக்கு அவளை பிடிச்சிருக்குனா என்னை விட்டுருங்க. நான் எங்க அப்பா அம்மா கூடவே போய்டுறேன்” என்றவளின் குரல் கரகரத்தது.   ”இன்னும் ஒரு வார்த்தை பேசுன நான் மனுஷனா இருக்க மாட்டேன். நான் சோனியாவை கட்டிப்பிடிச்சேன் நீ […] - [அத்தியாயம் 17](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-2/): இதைக் கேட்ட சுபாவிற்கு கண்களில் கண்ணீர் மூண்டது.   ”நான் சொன்னேன்றதுக்காக தான் அஸ்வின் அவர் கேபின் பக்கத்துல இருக்கிற அவரோட பெர்ஸ்னல் ரூம்ல என்னை கூட்டிட்டு போய் எனக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டாரு. நாங்க இவ்வளவு க்ளோஸா இருக்கோம் இத பார்த்தும் நீ அவர் வாழ்க்கைய விட்டு போகலைனா உனக்கு மானமே இல்லை போல” என்று பொறிந்து விட்டு அஸ்வினின் பக்கத்தில் நின்றுக் கொண்டாள்.    தீபிகா நேற்றே அரவிந்த்திற்கு அறிவுரை கூறினாள். “நீங்க சுபிக்கா விஷயத்துல தலையிடாதீங்க அஸ்வின் அத்தான் அவள் மேல பொஸஸிவ்வா இருக்கிற மாதிரி எனக்கு தோணுது. நீங்க இன்வால்வ் ஆனா அது அவருக்கு இன்னும் தான் எரிச்சலா இருக்கும் அதனால நீங்க அமைதியா இருங்க” என்றாள்.   தீபிகா சொன்னதில் நியாயம் இருப்பதை உணர்ந்த அரவிந்த் அவளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டான். ஏனெனில் தன் அண்ணன் தன் நண்பன் அஸ்வினை ரொம்பவே மிஸ் பண்ணினான் இப்போது […] - [அத்தியாயம் 16](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): “ச்சி உன்னோட புத்திக்காக தான் நான் தீபிகாவ கல்யாணம் பண்ண சம்மதிச்சேன். அப்ப கூட உன் புத்தி மாறலனா நீ மனுஷனே இல்லை” என்றான் அரவிந்த்.   “ஹா ஹா எஸ் நான் மனுஷனே இல்ல நான் ஒரு மான்ஸ்டர் அன்ட் அரவிந்த் யூ நீட் டூ க்ரோ அப் எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் இருந்தது போன வாரம் வரைக்கும் சுபானு சுத்திட்டு இருந்த அவள நான் கெடுத்துட்டேன்னு தெரிஞ்சும் நீ அவளை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட…”   “இப்போ திடீர்னு தீபிகாவ கல்யாணம் பண்ண கேட்டவுடன் சம்மதிச்சிட்ட ரியலி யு ஆர் கிரேஸி சுபா மேல அவ்வளவு பாசம்” என்று நக்கலாக சிரித்துவிட்டு கோபமாக மாற்றினான். அப்போது காஃபி என்று அஸ்வினிடம் ஒரு கப்பை நீட்டினாள் சுபா.   “நீ எப்படி இங்க அம்மா கிட்ட தான காஃபி கேட்டேன்” என்று தன் புருவத்தை சுருக்கினான்.   ”அத்தை தான் […] - [அத்தியாயம் 15](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-2/): அவினாஷின் முகம் இதைக் கேட்டவுடன் ஏமாற்றம் அடைந்தது. அவினாஷ் ஒரு சிறந்த டாக்டர் இத்தனை நாள் வரை அஸ்வினின் பண பலத்தை அவன் நேரடியாகவோ இல்லை வேறு எதற்காகவோ பயன்படுத்தியதே இல்லை.    மாளவிகாவும் பிறந்த வீட்டில் கிடைத்த வசதி வாய்ப்பு இங்கு இல்லை என்று உணர்ந்தாலும் அவினாஷோடு சந்தோஷமாகவே இருந்தாள். சோனியா பார்க்க இக்காலத்து மார்டன் பெண்ணாக தோற்றமளித்ததாலும் ஒரு தடவை அஸ்வினைப் பிடித்திருக்கிறது அண்ணி அவரை திருமணம் செய்யணும்னு நினைக்கிறேன் என்று நேரடியாகவே கேட்டதிலுமே மாளவிகாவிற்கு ஏதும் தப்பாக தோன்றவில்லை.    அவினாஷின் முகமாற்றத்தைக் கண்ட அஸ்வின், “அவினாஷ் உங்களுக்காக இதை செய்றேன். சோனியா என்ன படிச்சிருக்கா?” என்று கேட்டான்.   “அவள் எம்.காம் முடிச்சு இரண்டு வருஷம் ஆகுது அஸ்வின்” என்றான்.   “ம்ம், ஓகே. அப்போ அக்கவுண்ட்ஸ் பார்ப்பா தானே ஒரு ஒன் வீக்ல எச்ஆர்டில இருந்து கால் வரும் அப்புறம் அவங்களே சொல்லுவாங்க எப்போ ஜாயின் […] - [அத்தியாயம் 14](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-2/): சுபாவை இந்த வீட்டு வேலைக்காரி என்று அறிமுகப்படுத்த நினைத்தவன் விக்கி சொன்ன வார்த்தைகளின் விளைவால் அவள் தன்னுடைய மனைவி என்றான்.   இதைக் கேட்டு அதிர்ந்தவன், ‘அஸ்வின் ஏன் தன்னிடம் கல்யாணம் ஆன விஷயம் சொல்லவில்லை எங்கயோ இடிக்குதே’ என்று நினைத்தான் விக்கி.   சுபாவினைப் பார்த்த அஸ்வின், “சுபா நீ உள்ளே போ” என்று அதே கோபமான குரலில் கூறினான். அவ்வளவு நேரம் அங்கு நிற்க சங்கடமாக உணர்ந்தவள் உடனே உள்ளேச் சென்றாள்.   ‘என்னனு கண்டுபிடிப்போம் ஆனாலும் இவ்வளவு அழகா இருக்காளே ச்சா இவன் ரொம்ப குடுத்து வெச்சவன் தான்’ என்று நினைத்தவனை, “திஸ் ஸ் த லாஸ்ட் வார்னிங் விக்கி இந்த வார்னிங்கே உனக்கு சுபா என் மனைவினு தெரியாது அதனால இத சும்மா விடறேன். இல்லனா என்னோட கோபத்தின் ஆழம் உனக்கு தெரிஞ்சது தான் சோ பீ கேர்ஃபுல்” என்றான் அதட்டலாக.   ”சாரி அஸ்வின் ஆனா […] - [அத்தியாயம் 13](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-3/): தீபிகாவிற்கு ஏனோ அரவிந்த் நினைப்பாகவே இருந்தது. அரவிந்தைக் காண வேண்டும் அவனைப் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.    அப்போது வீட்டில் சபேசன் மற்றும் துளசி பேசும் சத்தம் கேட்டு வெளியில் சென்றாள். அங்கு துளசி சபேசனின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தார்.   “சுபா இல்லாம எனக்கு கஷ்டமா இருக்கு அவள் அரவிந்த கல்யாணம் பண்ணிருந்தா கூட நான் சந்தோஷமா இருந்திருப்பேன் ஆனா அஸ்வின நினைச்சா பயமா இருக்கு” என்று அழுதார்.   “எனக்கும் அந்த பயம் இருக்கு இப்போ சுபா வேலைக்கும் போறது இல்ல. அது இன்னும் பயமா இருக்கு. இந்த மாதிரி ஒரு வாழ்க்கையில இருக்கும் போது அவள் வேலைக்கு போனா ஆறுதலா இருக்கும். நீ சுபாக்கு கால் பண்ணி அவளை வேலைக்கு போக சொல்லு துளசி” என்றார்.   “ஏன்பா அத போன்ல சொல்லணும் பேசாம சென்னைக்கு போய் அக்கா வீட்டுக்கே போய் அவளை பார்த்து […] - [அத்தியாயம் 12](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-2/): மாலை ஆறு மணியளவில் சென்னை திருவான்மியூரில் உள்ள தன்னுடைய வீட்டை அடைந்தான். அங்கு சசிகலாவும் மாளவிகாவின் மாமியாரும் ஆரத்தி எடுப்பதற்காக காத்திருந்தனர். அந்த வீட்டை கண்ட சுபா திகைத்தாள்.   மாளிகை போல் இருந்த அந்த வீடு இந்த கால இன்டீரியர்ஸ் செய்யப்பட்டு பார்க்கவே மார்டனாக இருந்தது. மாளவிகாவின் மாமியாருக்கு எல்லா விஷயத்தையும் அவினாஷ் கூறினான்.    அஸ்வினின் செயல் ஏமாற்றம் அளித்தாலும் சுபாவையே மனம் புரிந்ததால் அமைதியாக விட்டுவிட்டார் வாசுதேவன். தன் சம்மந்திக்கு கால் செய்து நடந்த விஷயத்திற்காக மன்னிப்பு கேட்டார்.   இவ்விஷயத்தை அறிந்த சோனியா அதிர்ச்சி அடைந்தாள்.அஸ்வினின் ஆண்மைத்தனமான அழகில் மயங்கியவள் அவனை எப்படியாவது தன் வசம் இழுக்க யோசித்தாள். ஆனால் இந்த அஸ்வினை அவ்வளவு எளிதாக அடைய முடியாது என்று தெரிந்த பின்னர் தன் வீட்டிலேயே அஸ்வினை மணக்க விரும்பியதைக் கூறினாள்.    அவினாஷ் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருதய டாக்டராக இருக்கிறான். அஸ்வின் […] - [அத்தியாயம் 11](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-2/): ஒருத்தரைப் பழிவாங்க இந்த அளவு ஒருவரால் முடியுமா அதுவும் தப்பு என்னிடம் இல்லாமலே தனக்கு ஏன் இப்படி நேர்ந்தது தன் நிலையை நினைத்து மௌனமாக இருந்தாள் சுபா. கார் நேராக சபேசனின் வீட்டிற்குச்சென்றது.   மண்டபத்தில் இருந்த அனைவரும் ரிசப்ஷன் இல்லையெனில் மாப்பிள்ளை பெண் வீட்டு குடும்பத்தாரிடம் சொல்லி விட்டு மதிய உணவு சாப்பிட்டு விட்டுச் சென்றனர். சபேசன் வீட்டை அடைந்த பின் அங்கு துளசி ஆரத்தி எடுத்தார்.உள்ளே அனைவரும் இருந்தனர்.   வாசுதேவன் மற்றும் சசிகலா சுபாவிடம் வந்து, “எங்களை மன்னிச்சிருமா நாங்க தான் உன்னோட மாமனார் மாமியார் அஸ்வினின் பெற்றோர்கள் நீ பயப்படாதே மா நாங்க உன்னை நல்லா பார்த்துப்போம். இதோ இவ தான் என் பொண்ணுமா அஸ்வினுக்கு தங்கச்சி மாளவிகா…”   “இவர் எங்க மாப்பிள்ளை மாளவிகாவின் கணவன் அவினாஷ் தம்பி” என்று அறிமுகப்படுத்தினார். சுபா மாளவிகாவைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். ஆனால் மாளவிகா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். […] - [அத்தியாயம் 10](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-2/): மண்டபத்தில் சுபாவை தயார் செய்துக் கொண்டிருந்தனர். வீட்டில் நடந்த கலவரம் எதுவும் சுபாவிற்கு தெரியாது.    பச்சை நிற பட்டில் தன்னுடைய மென்மையான அழகிய முகத்தில் அழகாக ஒப்பனை செய்யப்பட்டு தேவதைப் போல் காட்சியளித்தாள். மண்டபத்திற்கு வந்த துளசி, சபேசன், பாபு, ஈஸ்வரி, மாளவிகா, அவினாஷ் மற்றும் வாசுதேவன், சசிகலா நேராக மணமேடைக்குச் சென்றனர்.    உறவினர்களுக்கு அஸ்வினின் பெயர் மணப்பலகையில் இருப்பது அதிர்ச்சி அளித்தது. பிறகு விஷயத்தைக் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தனர்.   சுபாவின் நண்பர்கள் மற்றும் அவளுடைய ஆபிஸ் பிரண்ட்ஸிற்கு நிச்சயம் முடிந்த வரை தெரியும். அதன்பின் அவளுக்கு நேர்ந்த சம்பவத்தால் யாரிடமும் கல்யாணத்தைப் பற்றிக் கூறவில்லை.    தன்னுடைய டீம் ஹெட்டிற்கு ஒரு மாதம் தன்னால் வரமுடியாது லாஸ் ஆஃப் பே மூலம் எடுத்துக் கொள்கிறேன் என்று ஈமெயில் அனுப்பியிருந்தாள். துளசி தீபிகாவை அழைத்து நடந்த விஷயங்களை சொல்ல நினைத்தார். ஆனால் தீபிகா சுபாவோடு இருந்தாள். தான் […] - [அத்தியாயம் 9](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-2/): வீட்டிற்கு வந்த அஸ்வினை மாளவிகாவின் குடும்பம் அனைவரும் வியந்து பார்த்தனர். மாளவிகாவின் கணவன் அவினாஷின் தங்கை சோனியா அஸ்வினைப் பார்த்து வாயைப் பிளந்தாள்.    ஆறடி உயரத்தில் இருக்கும் அஸ்வின் பார்க்க சிவப்பான நிறத்தில் கட்டுக்கோப்பான உடலைக் கொண்டவன் ஆண்களே பொறாமைப்படும் ஆண்மைதனத்தில் இருந்தான். வந்தவர்களை வரவேற்று நேராக தங்கை மாளவிகாவிடம் சென்று, “சாரி டா என்னால கல்யாணத்திற்கு வர முடியல” என்று வைர நெக்லசை பரிசாக கொடுத்தான்.   “ஹாய் அவினாஷ், நீங்க ரொம்ப பாவம் இந்த அழு மூஞ்சிய வெச்சிட்டு எப்படி சமாளிக்கறீங்க எனிவேஸ் கங்கிராட்ஸ் வெல்கம் டு அவர் பேமிலி” என்று கைகுலுக்கினான்.   ”தாங்க்ஸ் அஸ்வின் எங்க அண்ணா பயங்கர அழகா இருப்பாங்கன்னு இவ சொல்லிட்டே இருப்பா ரியலி யு ஆர் ஸ்மார்ட்” என்றான்.    அவினாஷின் தந்தை தாயிடம் மரியாதைக்கு பேசிவிட்டு தன்னுடைய அறைக்குச் செல்ல மேலே ஏறினான். “ஹாய் அஸ்வின் ஐ அம் சோனியா […] - [அத்தியாயம் 8](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-3/): தன் வீட்டை அடைந்த சுபா உள்ளே செல்ல பயந்து நடுங்கினாள்.  “அக்கா வாட் ஏ சர்ப்ரைஸ் சொல்லாம திடீரென வந்துருக்க அம்மா, அப்பா… சுபி வந்துருக்கா” என்று சந்தோஷத்தில் குதித்தாள்.   இதைக்கேட்டு வந்த துளசி மற்றும் சபேசன் சுபாவை பார்த்தவுடன் அணைத்துக் கொண்டனர். தன் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் துளசி மீது சாய்ந்து அழுதாள்.   “என்ன ஆச்சு சுபா?” என்று கேட்டார். “உங்கள எல்லாம்  ரொம்ப மிஸ் பண்ணேன்மா அதான் பார்க்க வந்துட்டேன்” என்றாள்.   “உன்னோட முகம் ஏன் வாடிப் போயிருக்கு உடம்பு சரி இல்லயா?” என்று கேட்டார். “இல்லம்மா பயணம் பண்ண அலுப்பாக இருக்கும் நான் கொஞ்ச நேரம் படுத்துட்டு வரேன்” என்று தன் அறைக்குச் சென்றாள்.    தன்னுடைய வீட்டில் சொன்னால் நிலைமை தலைகீழாய் மாறிவிடும் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று நினைத்தாள். ஆனால் அரவிந்த்திடம் இந்த விஷயத்தை எப்படியாவது சொல்ல வேண்டும் என்று முடிவு […] - [அத்தியாயம் 7](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-2/): சுபாவை பழிவாங்குவதற்காக முதற்கட்டமாக அவளுடைய அலுவலகத்தில் நுழைந்த அஸ்வின் நேராகச் சென்றது ராகுலின் அறைக்கு. “ஹே அஸ்வின் எப்படி இருக்க? ஒருவழியா இந்தியா வந்துட்ட மிஸ்டர் ஹாண்ட்சம்” என்றான்.   “யா ராகுல் ஃபைனலி ஐ அம் ஹியர்” என்றான்.   “உன் வீட்டில அம்மா அப்பா அப்பறம் தங்கச்சி எப்படி இருக்காங்க?” என்று கேட்டான் ராகுல்.   “எல்லாரும் நல்லா இருக்காங்க உன் வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்டான் அஸ்வின்.   “எல்லாரும் நலம் டா உன்னோட ஆர்ட்டிக்கில்ஸ் நிறைய பார்த்தேன் செமயா இருந்தது எங்கயோ போய்ட்ட அஸ்வின் இப்போ இனிமேல் சென்னை தானா?” என்று கேட்டான் ராகுல்.   “ஆமா ராகுல் இந்தியால இருக்குறத இனிமேல் பார்க்க போறேன்” என்றான்.    “ராகுல் நீ நான் சொல்றத கண்டிப்பா செய்யணும் அந்த சுபா வர்ஷினிக்கு ஓவர் டைம் வொர்க் குடு வீக்கென்ட்ஸ் லாம் ஆபிஸுக்கு வர வை […] - [அத்தியாயம் 6](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-2/): அரவிந்த சிங்கப்பூர் சென்றவுடன் நிச்சயம் முடிந்த கையோடு சுபா சென்னை செல்ல திங்க்ஸ் பேக் பண்ணினாள். துளசியும் தீபிகாவும், “அவள் இன்னிக்கே போகணுமா?” என்று கேட்டனர்.   “நிறைய வேலை இருக்கு மா கல்யாணத்துக்கு வேற லீவ் எடுக்கணும். அரவிந்த் கல்யாணம் அப்பறம் அவரோட சென்னை பிரான்ஞ்ச பார்த்துக்கப் போறதா சொன்னாரு. அதனால என் வேலைக்கு பிரச்சனை இல்ல” என்றாள்.    சபேசனிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின் சுபா கிளம்பும் போது துளசி,  “எனக்கு என்னமோ மனசு படபடவென்று அடிக்குது சுபிக்குட்டி பேசாம கல்யாணம் வரைக்கும் எங்கயும் போகாம இரேன்” என்றார்.   “சுபா நீ கிளம்பு உன் அம்மா பயத்துக்கு அளவே இல்லாம போச்சு. நீ நிம்மதியா போ” என்றார்.    துளசியின் பரிதவிப்பை உணர்ந்த சுபா, “துளசிம்மா ஏன் கவலைப்படுறீங்க? நான் என் ஆபிஸ் அப்பறம் ஹாஸ்டல் இத விட்டு எங்கயும் போக மாட்டேன். கவலைப்படாம இருங்க” என்று தைரியம் […] - [அத்தியாயம் 5](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-2/): நாட்கள் சென்றது சுபா பி.எஸ்.சி முடிக்கும் தருணத்தில் அவளுக்கு கேம்பஸ் பிலேஸ்மேன்ட் வந்தது. அதில் நல்ல கம்பெனிக்கு தேர்வானாள். இந்த சந்தோஷத்தை வீட்டில் பகிர்ந்தாள்.   துளசிக்கு சுபாவை சென்னைக்கு தனியாக வேலைக்கு அனுப்ப விருப்பமில்லை. ஆனால் சபேசன் சுபாவிற்கு தைரியம் வர வேண்டும் அதனாலேயே இந்த கூட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எண்ணினார்.   சுபா சென்னையில் ஹாஸ்டலில் தங்கி வேலைக்குப் போனாள். மதுரைக்கு மாதம் ஒரு முறையாவது சென்று வந்தாள். அஸ்வினை அவள் மறந்து கூட விட்டாள். இப்படியே மூன்று வருடங்கள் கழிந்தது. 23 வயது பாவையான சுபா பார்க்க தேவதை போல் இருந்தாள்.    அவளுடைய அலுவலகத்தில் கூட நிறைய ஆண்கள் தங்கள் காதலை அவளிடம் கூறினர். ஆனால் சுபா தன் பெற்றோர்கள் பார்க்கிற மாப்பிள்ளையை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தாள்.   சுபாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். அன்று வெள்ளிக்கிழமை எப்போதும் போல […] - [அத்தியாயம் 4](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-2/): அவர்கள் சொல்லால் செயலால் அதிர்ச்சி அடைந்தவன் தன்னுடைய நியாயத்தை எடுத்து உரைக்க வந்தான். ஆனால் அவனை பேசவிடாமல் “இப்போவே வெளியே போ” என்று சென்று விட்டனர்.    அஸ்வின் யோசித்தான் இந்த விஷயம் தெரிந்தது மூன்று பேருக்குத் தான். அது தான் அந்தப் பெண் மற்றும் அரவிந்த். தீபிகா மறைந்திருந்து கண்டது யாருக்கும் தெரியாது.   சுப்பிரமணியன் மற்றும் லஷ்சுமி தீபிகா தான் சொன்னாள் என்று கடைசி வரைச் சொல்லவில்லை. கண்டிப்பாக அரவிந்த் சொல்ல வாய்ப்பில்லை அந்த சுபா தான் சொல்லிருப்பாள்.   ‘என்னை ரொம்ப விரும்புற என் தாத்தா, பாட்டியே என்னை அடிச்சிட்டு பொறுக்கினு சொல்லிட்டாங்க. என் பின்னாடி எவ்வளவு பொண்ணுங்க சுத்துறாங்க அவங்கள மதிக்காம இருக்கிற நான் பொறுக்கியா?? யேய் சுபா உனக்கு அழிவு காலம் ஆரம்பிச்சுருச்சு டி என் வீட்டுக்கு என்ன வரவிடாம பண்ணிட்டு நீ இங்க சந்தோஷமாக இருக்கியா?’   ‘நீ என்ன இன்னிக்கு அடிச்சதுக்கே உனக்கு […] - [அத்தியாயம் 3](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-03/): “அஸ்வின் என்ன பண்ற அவள விடு அவ யாருன்னு உனக்கு தெரியுமா முதல்ல?” என்று கத்தினான் அரவிந்த்.   “ஷட் அப்(Shut up)  அரவிந்த் இவ யாரா வேணா இருக்கட்டும் ஆனா என்ன சீண்டினா அழிஞ்சிடுவா அவ கிட்ட சொல்லி வை” என்று சுபாவை பார்த்து முறைத்து விட்டு மாடி ஏறிச் சென்றான்.   “ஐ அம் ரியலி சாரி(i am really sorry) சுபா ஆனா என்ன நடந்திச்சு அஸ்வின் நெருப்பு மாதிரி எனக்கு கூட நிறைய பொண்ணுங்க பிரெண்ட்ஸ் இருக்கு ஆனா அஸ்வின்க்கு அப்படி இல்ல அவன் பொண்ணுங்கள பார்க்க கூட மாட்டான்.    அவன் என்ன விட இரண்டு வருஷம் தான் பெரியவன் ஆனா ரொம்ப மெச்சூரிட்டியா நடந்துப்பான். அப்படி பட்டவன் உன் கழுத்தை பிடிச்சு ஏன் நெறிச்சான்?  சம்திங் ஃபிஷ்ஷி(something fishy)” என்றான்.   ‘அரவிந்த் அவர பத்தி இவ்வளோ சொன்னதுக்கு அப்பறம் நம்ம அவர் தடுக்கி […] - [அத்தியாயம் 2](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-2/): பழசை எல்லாம் நினைத்து பார்த்த சபேசனுக்கு துளசியின் மீது பெரும் மதிப்பு 20 வருடங்கள் தன்னுடைய வார்த்தையை கடைப்பிடிக்கிறார். சில நேரங்களில் தீபிகாவை விட சுபாவிற்கே செல்லம் குடுப்பார்கள். சுபாவோ தீபிகா விற்காக விட்டு கொடுப்பாள். தீபிகாவிற்கும் சுபா என்றால் உயிர்.   தன்னுடைய அன்னை வயிற்று அக்கா இல்லை ஆனாலும் ஒரு தாயைப் போல பொறுப்பாக தன்னை வளர்த்தவள் தீபுவின் சுபா. கல்யாணம் ஆன பொழுது துளசி சுபா மட்டும் போதும் வேறு குழந்தை வேண்டாம் என்று நினைத்தார்.    ஆனால் சபேசன் பார்வதிக்கு ஒரே மகன் வயதின் முதிர்வு காரணமாக இறந்து விட்டார்(சபேசன், துளசி கல்யாணம் நடந்து ஒரு மாசத்திற்குள்). அப்போது அவரை தாயாய் ஆதரித்தது துளசி தான். சகோதரன், சகோதரி இல்லாத நிலை அப்போது தான் புரிந்தது. இந்நிலை சுபாவிற்கும் ஏற்பட கூடாது என்று நினைத்தார்.    அனைவருக்கும் அன்று மீனாட்சி அம்மனின் தரிசனம் கிடைத்தது. சுபா யாதவா […] - [அனல் 4](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-4/): அவளின் செய்கையிலேயே புரிந்துக் கொண்டான் அவள் படமே பார்ப்பது இல்லை என்று…    “உன் வீட்ல சொல்லிட்டேன்… இப்போ வந்துடுவாங்க” என அவன் சொல்ல, அவளின் முகத்தில் அதீத பயத்தைக் கண்டான் இஷாக்..   குடும்பம் வருகிறார்கள் என்றால் நிம்மதியாக இருக்க வேண்டிய பெண் ஏன் பதறுகிறாள் என யோசித்தவனோ எதையும் வெளிக்காட்டாமல்,    “உன் அப்பா, அம்மா…” என முடிக்காமல் இழுத்தான்..    பெரியப்பா எண்ணில் நிறைய கால்கள் வந்ததில் இருந்தே அவனுக்கு ஒரு சந்தேகம்.. ஒருவேளை இவளுக்கு அப்பா, அம்மா இருக்கிறார்களா இல்லை தன் வீட்டை போல் இருந்தும் இல்லை என்பது போலா என…    “அம்மா, அப்பா நான் பத்தாவது முடிக்கும் போதே இறந்துட்டாங்க சார்…” என சொல்லும் போதே அவளின் கண்களில் நீர் சூடாக கொட்டியது..    “உனக்கு ஏதாவது பிரச்சனைன்னா எனக்கு கால் பண்ணு” என அவளின் செல்லில் தன்னுடைய பேர்ஸ்னல் நம்பரை சேவ் செய்து […] - [அத்தியாயம் 52 (இறுதி)](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-52-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): “பிரியா, திவாகர் அத்தான் உங்ககிட்ட ஒதுக்கம் காட்டுனது தப்பு தான். ஆனால் யோசிச்சுப் பாருங்க, உங்களுக்காக தேவ் என்னை கல்யாணம் செய்தார். திவா அத்தான் என்னை அவர் தங்கை போல் நினைக்கிறார். அதற்கு உங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர் செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று யமுனா கூறும் போதே, “ஐய்யயோ அண்ணி! நான் சும்மா திவாகரை வெறுப்பேற்றினேன். தேவ் அண்ணாவிற்கு மட்டும் நீங்கள் என்னிடம் வந்து இப்படி மன்னிப்பு கேட்டீங்க என்று தெரிந்தால், என்னைத் திட்டி தீர்த்திடுவார்” என்று யமுனாவை கட்டிப்பிடித்து, “நீங்களும் தேவ் அண்ணாவும் மேட் ஃபார் ஈச் அதர் அண்ணி, உங்கள் இருவருக்கும் சுத்தி தான் போடணும்” என்று யமுனாவின் கன்னத்தில் கைவைத்து கொஞ்சினாள்.  திவாகரிடம், “பரவாயில்லை திவா, கடைசியா இம்பார்ட்டெண்ட் ரோல் மாதிரி, ஏதோ ஹீரோ மாதிரி பெர்ஃபார்ம் பண்ணிருக்கீங்க. ஆனா அண்ணா வந்த அப்புறம் பேக் டு காமெடியன்… எப்படியோ தேவ் அண்ணா அண்ட் […] - [அத்தியாயம் 51](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-51/): “உன்னை வலுக்கட்டாயமாக அடைந்து, ஒரு குழந்தையைக் கொடுத்த தேவ் வில்லன் இல்லாமல் பின்ன ஹீரோவா?” என்று நக்கலாகக் கேட்ட திவாகரிடம்,  “ஆமாம் அவர் என் ஹீரோ தான்… அவர் ஒன்னும் என்னை வலுக்கட்டாயமாக அடையவில்லை. எங்களுடைய சொல்லாக் காதலுக்கு கிடைத்த பரிசு தான் ஆராதனா” என்று பைத்தியம் போல் கத்தியவளிடம், “அப்புறம் ஏன் அண்ணி, அன்னிக்கு அமைதியாக இருந்து என் அண்ணாவை அவமானப்படுத்துனீங்க?” என்று குறுக்கிட்ட பிரியாவின் கையைப் பிடித்து தடுத்தான் திவாகர்.  “அதைப் பற்றி கேட்க உனக்கு ரைட்ஸ் இல்லை பிரியா, அந்த கேள்வியை யமுனாவிடம் தேவ் மட்டும் தான் கேட்க வேண்டும்” என்று கூறிய திவாகர், “நானும் உன் மனதில் தேவ் இல்லை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன் யமுனா. ஆனால் தேவ் இங்கே வந்தபோது உன் மனதில் இருந்த தவிப்பு, உன்னுடைய ஏக்கம், அப்புறம் நாங்கள் திருத்தணி போன சமயம் தேவ் இங்கே வந்ததை மறைத்தது… என்ன அதிர்ச்சியாய் பாக்குற? […] - [அத்தியாயம் 50](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-50/): “தேவ் ப்ளீஸ், உங்களிடம் ஒரு உதவி கேட்கிறேன்” என்று கலங்கிய விழிகளுடன் யமுனா கூறும்போது தான் கவனித்த தேவ், “சொல்லு யமுனா, என்ன வேண்டும்?” என்று கேட்டான். தேவ்வின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் யமுனாவால் கண்டுகொள்ள முடியவில்லை. “எனக்கு மென்சஸ் வந்திருச்சு. சானிடரி நாப்கின் வேண்டும், ப்ளீஸ் வாங்கிட்டு வர முடியுமா? எனக்கு வயிறு வலிக்குது. குழந்தையை வெச்சிட்டு ஒன்னும் பண்ண முடியலை” என்று வயிற்றைப் பிடித்து தரையிலேயே அமர்ந்தவளைப் பாவமாகப் பார்த்தான்.  “சரி யமுனா… ஆராதனாவை நான் கூட கூட்டிட்டுப் போறேன். நீ கதவை மூடாமல் இரு” என்று மடமடவென கதவருகில் சென்றவன், “என்ன பிராண்ட் வாங்கணும்?” என்று தயங்கிக் கேட்டான். அவனின் கேள்விக்கு பதில் உரைத்தவளுக்கு, தேவ்வின் நடவடிக்கையில் வித்தியாசம் தெரிந்தது. தேவ் கூறியது போலவே ஐந்தே நிமிடத்தில் பொருளோடு வந்தவன், அதை யமுனாவிடம் ஒப்படைத்துவிட்டு ஆராதனாவை கையில் ஏந்திக்கொண்டே பால்கனிக்குச் சென்றான்.  ரெஸ்ட் ரூம் சென்று விட்டு […] - [அத்தியாயம் 49](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-49/): “பிரியா, உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா, உன் அண்ணனுக்கு வீட்டு முகவரி கொடுத்துருப்ப?” என்று கர்ஜித்த திவாகரை சொடக்கிட்டு அழைத்த தேவ், “உன் வீட்டை கண்டுபிடிக்குறது எனக்கு பெரிய விஷயம் இல்லை திவாகர். பிரியாவுக்கும் நான் வந்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றான். “இப்போது எதற்கு இங்கே வந்த? முதல்ல வீட்டை விட்டு கிளம்பு” என்று திவாகர் கூறி முடிப்பதற்குள், ஆக்ரோஷமாக எழுந்த தேவ், தன் கூலர்ஸைக் கழற்றி, “அன்னிக்கு நான் இருந்த மனநிலை சரியில்லை. அதனால நீ பேசுன பேச்சுக்கு பதில் பேசவில்லை. என்னை ஒருமையில் அழைக்கிற அளவுக்கு நீ பெரிய ஆள் இல்லை திவாகர். என்னிடம் மரியாதையா பேசு” என்று கர்ஜித்தவனைப் பார்த்த அனைவரும் பயந்தனர்.  ‘மறுபடியும் என்னை கூட்டிட்டு போய்ட்டு காயப்படுத்துவாரு, இதான் என் வாழ்க்கை’ என்ற பயத்தில் இருந்தவளுக்குத் தெரியவில்லை, இனி தேவ் யமுனாவின் பக்கம் திரும்பப் போவதில்லை என்று. “நீ… நீங்கள் யமுனாவை இனி தொல்லை […] - [அத்தியாயம் 48](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-48/): மூன்று தனி அறைகளைக் கொண்ட திவாகரின் வீட்டில், யமுனா மற்றும் ஆராதனா ஒரு அறையிலும், சேகர் மற்றும் விஜயலட்சுமி இன்னொரு அறையிலும், திவாகர் மற்றும் பிரியா இன்னொரு அறையிலும் இருந்தனர். தேவைக்கு மட்டுமே பிரியாவிடம் பேசிய திவாகரை, இரவு எப்படியாவது, திவாகரிடம் தஞ்சம் புகுந்தாவது அவன் மனநிலையை மாற்றலாம் என்று நினைத்தாள்.  அப்படித் தான் இரவு பத்து மணியளவில் அனைவரின் அறையிலும் விளக்கு அணைந்த பின், திவாகர் மட்டும் தன்னுடைய லாப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான். தர்ஷியைத் தூங்க வைத்தவள், கணவன் தன்னை கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டு கலங்கினாள். தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு, திவாகரை எப்படியாவது தன் வசம் இழுக்க வேண்டும் என்று நினைத்தாள். கணவனை ஒன்றரை வருடங்களாக பிரிந்த மனைவிக்கு இருக்கும், வலி, ஆசை, மோகம் அவளுக்கும் இருக்கும் தானே.  அலங்காரம் முடிந்த பின் திவாகரிடம் வேண்டும் என்றே பேச்சுக் கொடுத்தாள். அவள் முகத்தைப் பார்க்காமல் லாப்டாப்பில் […] - [அத்தியாயம் 47](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-47/): “யமுனா, உங்களுக்குள்ள எல்லாம் சரியா இருக்குன்னு நினைத்து தான் நான் முன்னாடி அமைதியா இருந்தேன். இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது” என்று தேவ்விடம் திரும்பிய திவாகர், “நாங்கள் யமுனாவை அழைத்துக்கொண்டு போகிறோம்” என்று கூறினான்.  அதுவரை குழந்தையிடம் விளையாடிக்கொண்டிருந்தவனின் சிரித்த முகம் இறுக்கமானது. “உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டுப் போகத்தான் உனக்கு உரிமை இருக்கு. என் பொண்டாட்டியை கூட்டிட்டுப் போக நினைச்சாலும் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று குழந்தையோடு எழுந்தான். “ஆராதனா பாப்பா, உன் அம்மா யமுனா அழுறாங்க பாரு” என்று வேண்டும் என்றே யமுனாவிற்கும் தனக்கும் பிறந்த குழந்தை என்பதைத் தெரிவிக்க இப்படிச் சொன்னான்.  இதைக் கேட்டு அதிர்ந்த மூவரும், “யமுனா இந்தக் குழந்தை?” என்று தயங்கும்போதே, “ஆராதனா என் குழந்தை தான் மாமா” என்று கதறி அழுதவள், தன் கண்களைத் துடைக்க முயன்றும் கண்ணீர் உருண்டோடியது.  “என்ன யமுனா, உன் குழந்தை என்று சொல்ற? நம் குழந்தைன்னு சொல்லு. […] - [அத்தியாயம் 46](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-46/): ஏற்கனவே கிறக்கத்தில் இருந்த யமுனா, தேவ்வின் மீது உள்ள காதலால், அவன் ஆட்டிப் படைக்கும் பாவையானாள். யமுனாவை கட்டிலில் போட்டு, அவளிடம் ஒன்றரை வருடங்கள் கழித்து தன் தேடலைத் தொடங்கியவன், இவ்வளவு மாதங்கள் யமுனா இல்லாமல் ஏங்கியதை மஞ்சத்தில் உணர்த்தினான். அவளின் உச்சி முதல் பாதம் வரை முத்தங்களைப் பதித்தவன், மென்மையாகத் தன் தேடலை முடித்துக் கொண்டான்.  தேவ்வின் வெற்று மார்பில் படுத்திருந்த யமுனாவிடம் மறுபடியும் நெருங்கிய தேவ், இம்முறை அவளிடம் முரட்டுத்தனமாக தேடலைத் தொடங்கினான். இதை உணர்ந்த யமுனாவிற்கு ஏதோ வித்தியாசம் தோன்ற, அவனுடைய முரட்டுத்தனம் இன்னும் கூடியது. ஒரு கட்டத்திற்கு மேல் அவன் முரட்டுத்தனத்திலும் தன்னை சந்தோஷமாக இழந்தவள் தூங்கியே விட்டாள். நள்ளிரவு இரண்டு மணிக்கு விழித்த யமுனா, பால்கனியில் தனக்கு முதுகு காட்டி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த தேவ்வைப் பார்த்து வெட்கினாள். அவன் தன்னைத் திரும்பிப் பார்ப்பதற்குள், தன் ஆடைகளைத் தேடி அணிந்தவள், தேவ்விடம் பேச பால்கனிக்குச் சென்றாள்.  […] - [அத்தியாயம் 45](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-45/): யமுனாவும் ஒரு மனுஷி தான், அவள் புரோகிராமிங் செய்த மிஷின் இல்லை என்பதை தேவ் அறிந்தாலும், அவ‍ளை அந்த நொடி காயப்படுத்த வேண்டும் என்றே, “யமுனா… யமுனா…” என்று கம்பீரமாகக் கத்தியவன், தன் இரும்பு கைகளை வைத்து கதவைத் தட்டினான். படபடத்து எழுந்த யமுனா, தேவ்வின் குரல் கேட்டு தன் முகத்தை சரி செய்து, கதவைத் திறக்கும்போதே, “மணி என்ன ஆச்சு? குழந்தைக்கு பால் கொடுக்குற டைம் போயே அரை மணி நேரம் ஆச்சு. அப்படி என்ன தூக்கம் மகாராணிக்கு?” என்று கையைக் கட்டி கடுமையாகக் கேட்டான்.  “ஐய்யோ சாரிங்க! இதோ ஐந்தே நிமிடத்தில் வந்திடறேன்” என்று பாத்ரூமில் சென்று முகத்தை கழுவிவிட்டு ஒரு டவலில் துடைத்தவள், தேவ்வைத் தாண்டி குழந்தை சத்தம் கேட்டு கீழே ஓடினாள்.  குறைந்த பட்சம் தனக்கு ஏதாவது பதிலடி கொடுப்பாள் என்று நினைத்திருந்தான் தேவ். இதுவே பழைய யமுனாவாக இருந்திருந்தால் அதுதான் நடந்திருக்கும். ஆனால் இப்போது யமுனா […] - [அத்தியாயம் 44](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-44/): அலாரம் வைத்து காலையில் ஐந்திற்கு விழித்த யமுனா, மடமடவென காலைக்கடன்களை முடித்து விட்டு கையோடு தலைக்கு குளித்தாள். குழந்தை அழும் சத்தம் கேட்டவுடன், பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அந்த சத்தத்தில் விழித்த தேவ், டவலை வைத்து மூடிக்கொண்டு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான்.  ஆனால் யமுனாவோ பிசிக்கலி பிரெஸ்சன்ட் பட் மென்ட்டலி ஆப்ஸ்சன்ட் போன்று காட்சியளித்தாள். யமுனாவின் மனதில் குழப்பத்திற்கு மட்டும் பஞ்சமே இல்லை. வாழ்க்கையே ஒரு முடிச்சுக்குள் இருக்கிறது அதை எப்படி அவிழ்க்க வேண்டும் என்பதை யோசித்தாலே மனது சோர்வாக இருந்தது. தேவ்வும் குளித்து முடித்து விட்டு இருவருக்கும் காஃபி ஆர்டர் செய்தான். சோஃபாவில் அமர்ந்து குழந்தைக்கு தேவையான திங்க்ஸை எடுத்து லாவகமாக ஒரு பேக்கில் வைத்துக்கொண்டிருந்த யமுனாவை ஃபோனைப் பார்த்துக் கொண்டே அமைதியாய்ப் பார்த்தான். கல்யாணத்திற்கு முன் இருந்த யமுனாவிற்கும் இப்போது இருந்த யமுனாவிற்கும் நிறைய மாற்றங்கள் இருப்பதை உணர்ந்தான். இப்போது இருக்கும் யமுனா மிகுந்த பொறுப்பு […] - [அத்தியாயம் 43](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-43/): தேவ்வின் அறைக்குச் செல்ல நினைக்கும்போதே, கை கால்கள் உதறியது. ‘உனக்கு இருக்குனு சொன்னானே, என்ன பண்ண போறான்?’ என்று பதறியவளின் கால்கள், தேவ்வின் அறைக்கு வெளியே நின்றது.  எப்படி இருந்தாலும் உள்ளே சென்று தான் ஆக வேண்டும் என்பதால் பெருமூச்சுவிட்டு, “உள்ளே வரலாமா?” என்று கேட்டுச் சென்றாள். மானை வேட்டையாட காத்துக் கொண்டிருக்கும் வேங்கை போல், யமுனாவின் மீது அழுத்தமான பார்வை விட்டவன், “கிளம்பு” என்று கூறிவிட்டு தன் கார் கீயை எடுத்தான்.  “எ… எங்க கிளம்பணும்?” என்று தடுமாறினாள்.  “உன்கிட்ட எங்கே போறோம்னு சொல்லிட்டு போற அளவுக்கு நீ தகுதியான ஆள் இல்லை. என்னை அனாவசியமாக கேள்வி கேட்பது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்” என்று தன் விரலைக் காட்டி மிரட்டியவன்,  “இப்போது வரியா இல்லை தூக்கிட்டு போகணுமா?” என்று நெருங்கியவனைக் கண்டு மிரண்டவள், “வேண்டாம்… நானே வருகிறேன்” என்று பின்னாடி சென்றாள். இவர்கள் இரண்டாம் முறை தனியாக வெளியே செல்வதைக் […] - [அத்தியாயம் 42](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-42/): “ஆ… ரேஷ் என்ன ஆச்சு, நான் ஆபிஸில் இருக்கிறேன்” என்று யமுனா கூறும்போது,  “யம்மு, ஆராதனா அழுதுட்டே இருக்கா. பாட்டில் பால் குடிக்க மாட்டுறா, சோறு ஊட்டுனா சாப்பிடலை. பாவம் பிள்ளை பதினைந்து நிமிஷமா விடாமல் அழுறா” என்று கூறும்போதே யமுனாவின் கண்களில் கண்ணீர் கொட்டியது.  “யம்மு லைன்ல இருக்கியா? அம்மா ஃபோனில் சொன்னாங்க, நீ தாய்ப்பால் கொடுக்கும் நேரம் இதுன்னு. ஒரு அரை மணி நேரம் பெர்மிஷன் போட்டு வந்து பால் குடுத்துட்டு போடீ” என்றாள் ரேஷ்மி.  “சரி டீ” என்று கூறிவிட்டு காலை கட் செய்த யமுனா மனதில், ‘தன் சொந்தக் குழந்தைக்கு பால் கொடுக்க, குழந்தையின் தந்தையிடமே கை ஏந்தும் தாய் நானாக மட்டும் தான் இருப்பேன், திமிரு பிடிச்சவன்! கல் நெஞ்சக்காரன்!’ என்று நினைக்கையில், “என்ன ஆச்சு, எதுக்கு அழுதுட்டு இருக்க?” என்று கேட்டவனின் குரலில் அதட்டல் மட்டுமே தெரிந்தது.  “அது… வந்து என் குழந்தைக்கு பால் […] - [அத்தியாயம் 41](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-41/): “என்ன ஷிரீஜா மேடம், உங்களுடைய அக்கவுண்ட்டிற்கு வாய் இல்லையா? நீங்களே பேசிக்கொண்டு இருக்கீங்க. அவங்களை வேலையில் வைக்கணுமா வேண்டாமா?” என்று நக்கல் தொனியில் தேவ் பேசிய விதம், ஷிரீஜாவிற்கே வருத்தத்தைக் கொடுத்தது. “சாரி சார், அது வந்து கைக்குழந்தை வெச்சிட்டு இருக்கா, கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க” என்று ஷிரீஜா கூறியபோது அதிர்ந்த தேவ், அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், “கணவன் வெளிநாடுன்னு சொல்றீங்க? அப்போது எதுக்கு மேடம் மிஸஸ் யமுனா கைக்குழந்தையுடன் கையேந்திட்டு நிற்க வேண்டும்?” என்று இம்முறை அவனுடைய வார்த்தையில் கடுமை இருந்தது.  தேவ்வின் லாஜிக்கான கேள்வியில் வாயடைத்துப் போன ஷிரீஜா, என்ன விடை சொல்வது என்று தெரியாமல் விழித்தார். யமுனா ஊமை போல் வாயைத் திறக்கக் கூட பயந்து, தலையை நிமிராமல் இருந்தாள்.  மேலும் தொடர்ந்த தேவ், “ஓகே ஷிரீஜா மேடம், அது அவங்க பர்சனல் தட்ஸ் நாட் மை பிராப்ளம். எனக்கு நாளையில் இருந்து இந்த அக்கவுண்ட்டண்ட் யமுனா […] - [அத்தியாயம் 40](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-40/): “பிரனிதா, இதை தேவ் உன்னிடம் தரச் சொன்னான்” என்று செக்கைக் கொடுத்தவர், “ஆதிரா இனி உன்னோடு இருக்கட்டும்” என்று கூறும்போதே அவரின் கண்கள் கலங்கியது. வேறு வழி இல்லை என்று தெரிந்த பின்னர் மனதைக் கல்லாக்கிக் கொண்டு குழந்தையை அவள் கையில் வாங்கியவர், முத்தமிட்டு திரும்பி பிரனிதாவிடம் கொடுத்தார்.  ‘தங்களின் கைக்குள்ளேயே வளர்ந்த குழந்தை, இப்போது தங்களைவிட்டு போகிறது என்றால் மனது எவ்வளவு கனமாக இருக்கும்? இன்னும் இந்த விஷயம் பிரியாவிற்கும் குணாவிற்கும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தால், எப்படி கஷ்டப்படுவார்கள்?’ என்று நினைத்தவர், ‘இது தான் விதி என்று இருக்கும்போது, அதை யாரால் தான் மாற்ற முடியும்?’ என்று குழந்தையை பிரனிதா கையில் கொடுத்தார்.   “ஆன்ட்டி தேவ் எங்கே?” என்று கேட்ட பிரனிதாவிடம், “அவன் அவசர வேலையாக வெளியே சென்றுவிட்டான். நீ கிளம்பும்மா, ஆதிராவின் படிப்பு செலவு அனைத்துமே அவளின் பெயரில் பாங்கில் இருக்கிறது. நீ பள்ளி செலவின் பில்லை தேவ்வின் ஆபிஸிற்கு […] - [அத்தியாயம் 39](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-39/):  யமுனா சென்றபின் தேவ், ‘போய்டுடீ என்னை விட்டு… என் கூட காதலில் சேராமல் உடம்பிற்காகச் சேர்ந்தேன் என்று சொல்லிட்டு, என்னை கொன்னுட்ட!’ என்று வெறுமையாக நினைத்தான். ஆனால் யமுனா தேவ்வின் மேல் கொண்ட காதலால் தான், தேவ்வோடு சங்கமித்தாள் என்பதை யமுனா சொல்லாமல் தேவ் எப்படி அறிவான்.  சீதாலட்சுமி வெளியே வந்து யமுனாவைத் தேடிக்கொண்டிருந்தபோது, “அம்மா, யமுனா போய்ட்டா… இனி இங்கு வர மாட்டாள். அவளைப் பற்றி இனி என்னிடம் பேசாதீர்கள்” என்று கூறிவிட்டு வெளியே சென்ற மகனை, அதிர்ச்சியாகப் பார்த்தார் சீதாலட்சுமி.    *** ஒன்றரை வருடங்கள் கழிந்தது.  கேரளாவில் உள்ள அழகிய ஊரான திருச்சூரில், ஒரு பெரிய வீட்டில் தனது ஒன்பது மாதம் முடிந்த குழந்தை ஆராதனாவுடன் வசித்து வந்தாள் யமுனா. அன்று தேவ்வின் வீட்டில் இருந்து கிளம்பியவள், தன் மொபைலில் தன்னுடன் கல்லூரியில் படித்த நெருங்கிய தோழி ரேஷ்மிக்கு கால் செய்தாள்.  “ஹாய் ரேஷ், நான் யமுனா பேசுறேன். […] - [அத்தியாயம் 38](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-38/): தன் அம்மாவை அழைத்து, ஆதிராவை வெளியே எடுத்துச் செல்லுமாறு கூறிவிட்டு, “வேற என்ன சொல்ல சொல்ற? எனக்கு நீ பிறக்கவில்லை என்று என்னால் கூற முடியாது. அதற்காக உன்னையும் விட்டுக் கொடுக்க முடியாது. பிரனிதா ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறாள், நான் அவளுக்கு பணத்தைக் கூட கொடுக்கத் தயார்.  ஆனால், அவள் வாங்கத் தயாரில்லை. அவளுக்கு குழந்தை வேண்டுமென தீர்மானமாக இருக்கின்றாள். இந்த விஷயத்தில் நான் ஒரு அந்நியன் ஆகிட்டேன் யமுனா. ஆதிராவின் அப்பா நான் இல்லாமல், என்னால் எப்படி ஆதிராவை பிரனிதாவிடம் இருந்து பிரிக்க முடியும்? டாம் இட்” என்று தன் கையைக் கோபத்தில் சுவற்றில் குத்தியவனுக்கு, கோபம் அளவுக்கு அதிகமாக இருந்தது. “தேவ் ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க” என்று கூறும்போது, “விடு யமுனா, உனக்கு என்னுடைய வலி புரியாது” என்று தன் கார் கீயை எடுத்துக்கொண்டு ஆபிஸிற்குச் சென்றான்.  ஆபிஸிற்குச் சென்ற தேவ், பிரனிதாவின் அடுத்த படி எப்படி இருக்கும், […] - [அத்தியாயம் 37](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-37/): அப்படியே நீண்ட நேரம் ஷவரில் அமர்ந்து அழுதவள், “யமுனா… கதவைத் திற, எவ்வளவு நேரமாய் குளிச்சிட்டு இருக்க?” என்ற தேவ்வின் சத்தத்தைக் கேட்டு பதறியவள், மடமடவென ஷவரை ஆஃப் செய்துவிட்டு கண்களைத் துடைத்தாள். அங்கு இருந்த டவலை தலையில் கட்டி, உடையை அணிந்து கதவின் மேல் கையை வைத்தவள், எப்படி தேவ்வை எதிர்கொள்ள போகிறோம் என்று நினைத்து ஒரு பெருமூச்சுவிட்டு கதவைத் திறந்தாள்.  “என்ன பண்ணிட்டு இருந்த யமுனா இவ்வளவு நேரம்? ஏன் உன் முகம் ஒருமாதிரி இருக்கு?” என்று யமுனாவை தேவ் நெருங்கும் போதே, “அது… ப்ளீஸ் தேவ், உங்களிடம் நான் கொஞ்சம் பேசவேண்டும்” என்று தன் வாயைக் கை வைத்து மூடினாள். அப்போதே தேவ்விற்கு கோபம் சுர்ரென்று ஏறியது.  கோபத்தில் தன் நெற்றியில் கை வைத்து தடவியவன், “நேற்று இரவு நீதான என்கூட இருந்த, அப்போ எதுக்கு இப்படி வியர்டா பிஹேவ் பண்ற?” என்று தன் கைகளைக் கட்டி திமிராகக் […] - [அத்தியாயம் 36](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-36/): “ஏங்க?” என்று அமைதியாக அழைத்தவளை ஒரு பார்வை பார்த்த தேவ், “காலையில் ஒரு ஆயிரம் தேவ் போட்டு பேசுன, இப்போது என்ன செலக்டிவ் அம்னீஷியாவா?” என்று நக்கலாகக் கேட்டான். “அம் சாரி… நான் அப்போது இருந்த நிலைமையில் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேன். உங்களை வேற தவறா பேசிட்டேன். நீங்கள் சொன்ன அப்புறம்தான் எனக்கு புரிஞ்சிது” என்று தயங்கினாள். ‘நீ என்னை எப்போது தான் சரியா புரிஞ்சிருக்க யமுனா?’ என்று மனதில் நினைத்தவன், யமுனாவிடம் எதுவும் கூறாமல் மறுபடியும் வேலையில் இறங்கினான். “ஏங்க பசிக்குது” என்று இழுத்தாள். “நானும் மதியத்தில் இருந்து சாப்பிடவில்லை, வா போலாம்” என்று எழுந்தவன், அறையை ஆக்செஸ் கார்ட் மூலம் பூட்டிவிட்டு, யமுனாவை ரூஃப் டாப்பிற்கு அழைத்துச் சென்றான். ஏழு மாடிகளைக் கொண்ட அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மாடியில் உள்ள ரூஃப் டாப் ரெஸ்டாரென்ட், இரவின் அழகில் வண்ண விளக்குகளுடன் பார்க்கவே அழகாக இருந்தது. அங்கே ஓர் இருக்கையில் […] - [அத்தியாயம் 35](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35/): அந்த ஹோட்டலின் இரண்டாம் தளத்திற்குச் சென்றவனின் பின் பயத்தோடு சென்றவள், தேவ் ஒரு அறையைத் திறந்துகொண்டு உள்ளே சென்ற பின், அந்த அறைக்குள் செல்லாமல் வெளியே நின்றாள். “நம்முடைய முதல் சந்திப்பில் பயந்துட்டு வெளியே நின்ன மாதிரி, இப்போதும் பயந்துட்டு நிக்குறியா?” என்று நக்கலாகக் கேட்டவனிடம், “இல்லை உள்ளே வரேன்” என்று நுழைந்தாள். பணக்காரர்கள் தங்கும் பிரிமீயம் அறை போல் தோற்றம் அளித்தது அந்த அறை.  உள்ளே யமுனா வந்ததும், அவளைத் தாண்டி வந்து கதவைச் சாற்றிய தேவ் யமுனாவிடம் திரும்பி, “போய் உட்காரு, நம்ம எப்படியோ இன்று இரவு இங்கே தான் தங்கப் போறோம். அதுக்கு முன்னாடி உன்கிட்ட பேச வேண்டிய விஷயம் இருக்கு, உட்காரு” என்று கூறியவனை பிரம்மை பிடித்தது போல் பார்த்தவள், சோஃபாவில் அமர்ந்தாள்.  அவளுக்கு எதிரே அமர்ந்த தேவ், “யமுனா, நீ ஆதிராவின் மேல் உயிரையே வெச்சிருக்க. பட் நீ ஆதிராவை கவனிக்கிறேன்னு உன்னை கவனிக்காமல் இருக்க. […] - [அத்தியாயம் 34](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34/): யமுனாவிற்கு மனசு ஆறவில்லை. ‘எப்படி ஒருவரால் அவர்கள் பேசிய சுடு சொல் துன்புறித்தியதை எல்லாம் மறந்து, அவருடன் நிகழ்காலத்தில் வாழ முடியும்? அதுவும் இதுவரை தேவ்வின் வாயில் இருந்து அவன் யமுனாவிற்கு செய்த கொடுமைகளை மனதில் நினைத்து, ஒரு சாரி கூட வராமல் இருக்கும் நிலையில், தேவ்வின் இந்த அணைப்பு மற்றும் அவன் தற்போது கூறிய வார்த்தைகள் யமுனாவிற்கு எரிச்சலாக இருந்தது. தேவ்வின் அறைக்கு அவள் காஃபி எடுத்துச் சென்ற போது, அவன் ஏதோ ஆங்கில நாவலை படித்துக் கொண்டிருந்தான். அவனிடம் காஃபியைக் கொடுத்துவிட்டு அங்கேயே நின்ற யமுனா, “எனக்கு என் மாமா, அத்தை கூட கொஞ்ச நாள் இருக்க வேண்டும் போல இருக்கு” என்று கூறிவிட்டு தேவ்வின் பதிலுக்காக நின்றாள். யமுனாவிற்கு தேவ்விடம் இருந்து விடுபட வேண்டும். அவளால் இந்த திமிர் பிடித்த, தவறை உணராத தேவ்வுடன் இருக்க பிடிக்கவில்லை.  “இரண்டு வருடம் நீ எங்கே இருக்கனு கூட உன் மாமா, […] - [அத்தியாயம் 33](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33/): “யமுனா நீ ஆதிராவைத் தூக்கிட்டு உள்ளே வா” என்று தன் அறைக்குள் சென்றான் தேவ். அவனை பின்னால் இருந்து முறைத்த யமுனா மனதில், ‘மத்தவங்க கதையைப் பார்க்க இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கு. ஆனால் நம்ம கதையைப் பார்த்தா பயமா இருக்கே’ என்று எண்ணியவள் ஆதிராவைத் தூக்கச் சென்றாள். ஆனால் ஆதிரா அவளிடம் வராமல் அழுதாள்.  என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த யமுனா, ஆதிராவிடம் சென்று, “ஆதிரா குட்டி, நீங்க இப்போது அம்மா கிட்ட வந்தா நான் நிறைய கதைகள் சொல்லுவேன். சாக்லேட் தருவேன், வெளியே கூட்டிட்டு போவேன்” என்று கூறியவுடன், “நீங்கள் உண்மையாகத் தான் சொல்றீங்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்ட குழந்தையை, தன் கைகளில் அள்ளிக் கொண்டாள் யமுனா.  “நிஜமாத்தான் சொல்றேன் செல்லம்” என்று கன்னத்தில் முத்தமிட்டவள், இரண்டு வருடம் கழித்து தன் வயிற்றில் பெறாத மகளை ஏந்திய சந்தோஷத்தில், அவளுக்கு ஆனந்தக் கண்ணீரே வந்தது. தேவ்வின் அறைக்குச் செல்கின்றோம் என்ற எண்ணத்தை மறந்தவள், […] - [அத்தியாயம் 32](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32/): ‘இந்த அத்தை நல்லவங்க தான், ஆனாலும் நமக்கு பிரச்சனை தான், தேவ்வை உசுப்பேத்தி விட்டுட்டாங்க. இவன் சும்மாவே ஆடுவான், இப்போது என்ன சொல்லப் போறானோ?’ என்று மனதில் பதறியவள், தன் தலையைக் குனிந்து கொண்டாள்.  “நீங்க பிரியாவுடைய மாமனார், மாமியார் என்பதனால் தான் மரியாதை கொடுத்துப் பேசிட்டு இருக்கேன். என் பொண்டாட்டிக்கு நீங்க தாய்மாமாவாக இருந்தால் போதும், இந்த மாமா வேலை எல்லாம் என்னிடம் நடக்காது” என்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவன், “இந்த விஷயம் நீங்களா பேசினீர்களா? இல்லை யமுனா இப்படிப் பேசச் சொன்னாளா?” என்று ஆக்ரோஷமாகக் கேட்டான்.  இவன் இப்படித் தான் பேசுவான் என்று யூகித்த யமுனா இம்முறை, “நானே அப்படிப் பேசச் சொல்லி இருந்தாலும் என்ன தப்பு? உங்களுக்கு நான் பிடிக்காதவள் தான?” என்ற யமுனா, மனிஷா அங்கு இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை மறந்து விட்டாள்.  மேலே நின்று கொண்டிருந்த மனிஷாவைப் பார்த்த தேவ், யமுனாவிடம் நெருங்கி […] - [அத்தியாயம் 31](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31/):  தேவ்வின் அறை எங்கே என்று சீதாலட்சுமியிடம் கேட்டு, யமுனா தேவ்வின் அறைக்கு வந்து முதலில் குளித்து விட்டு, உடையை மாற்றி ஒரு காஃபி குடித்தாள். ஆதிரா மனிஷாவோடு விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளைக் கண்ட மனிஷா இவளை முறைத்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.  ‘இது என்ன வம்பா போச்சு, என் புருஷனை இவள் கல்யாணம் பண்ண நினைச்சு என்னை முறைப்பாளாம், என்ன பெண்ணோ இவள்? முன்னாடி மாயா இப்போது இவளா?” என்று சலிப்பாக நினைத்தவள், ‘நாம் ஏன் தேவ்வின் பின்னால் பெண்கள் சுத்தினால் இவ்வளவு யோசிக்க வேண்டும்? இது நமக்கு தேவை இல்லாத உணர்வு’ என்று மனதை வேறு பக்கம் திருப்பினாள் யமுனா. *** தேவ் மற்றும் விக்ரம், கிஷோரை சந்திப்பதற்காக அந்த பிரபல நட்சத்திர ஓட்டலில் காத்துக்கொண்டிருந்தனர். “விக்ரம், நீயும் உன் தங்கையும் வீட்டை விட்டு கிளம்புறது தான் நல்லது” என்றான் தீர்மானமாக.  ‘நாம் யமுனாவுடன் பேச நினைப்பதற்குள், இவன் அந்தப் […] - [அத்தியாயம் 30](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30/): அந்த சின்னப் பெண்ணைப் பார்த்த உடனே, அவள் ஆதிரா என்று கண்டு கொண்ட யமுனா, “ஆதிரா…” என்று சந்தோஷத்துடன் கத்தினாள். ‘ஓ இவள் தான் யமுனாவா?’ என்று ஆதிராவை தன் கையில் பிடித்து நடந்து வந்த மனிஷாவைப் பார்த்த யமுனா, ‘யார் இந்தப் பெண்? ஆதிராவை உரிமையோடு கை பிடித்து நடந்து வருகிறாளே, ஒருவேளை தேவ்வின் மனைவியா?’ என்று மனதில் ஆயிரம் குழப்பம் மற்றும் கேள்விகளுடன் பார்த்தாள்.  “ஆதிரா உன்னுடைய யமுனாம்மா வந்துட்டாங்க பாரும்மா” என்று சீதாலட்சுமி ஆதிராவைத் தன்னோடு அமர வைத்தாள்.  மிகவும் ஆவலாக ஆதிராவின் கன்னத்தைக் கொஞ்சியவளிடம், “யார் நீங்க? டோன்ட் டச் மீ. மனிஷா ஆன்ட்டி யார் இவங்க?” என்று மனிஷாவிடம் கேட்ட ஆதிராவை, அதிர்ச்சியுடன் பார்த்தாள் யமுனா.  ஆதிராவிடம் இதை எதிர்பார்க்காத யமுனா, அதிர்ச்சியில் உறைந்து இருந்தாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மனிஷாவிற்கு வெற்றிப் புன்னகை வந்தது. அதை கவனித்த யமுனாவிற்கு மனதில் ஒரு பதற்றம்.  ‘ஒருவேளை […] - [அத்தியாயம் 29](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29/): நேராக விக்ரமிடம் திரும்பியவன், “உன் தங்கையை இந்த இடத்தை விட்டு கிளம்ப சொல்லு விக்ரம், இல்லை என்றால்… நான் மனிதனாக இருக்க மாட்டேன்” என்றான் ஆக்ரோஷமாக.  மனிஷாவை இழுத்துக்கொண்டு விக்ரம், தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் சென்று அறிவுரை கூற ஆரம்பித்தான். “மனிஷா, அண்ணா சொல்வதைக் கேளு. யமுனா தேவ்வின் வாழ்க்கையில் இருப்பது தான் நியாயம். உனக்கு நான் ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்க்கிறேன். இல்லை நீ கூட வேறு ஒரு பையனைப் பிடித்திருந்தால் சொல்லு. ஆனால் தேவ்வின் மீது உள்ள உன் காதலுக்கு உயிர் இல்லை” என்றான் விக்ரம்.  “நீ என்ன சொன்னாலும் என் மனது மாறாது அண்ணா, எனக்கு தேவ்வின் மீது உள்ள காதல் மாறாது! அதான் தேவ்விற்கும் யமுனாவிற்கும் ஒத்து வரவில்லை என்று தானே பிரிந்திருப்பார்கள். ஆதிரைவை விட்டு அந்தப் பெண்ணால் செல்ல முடிந்தது என்றால், அவளால் திரும்ப வரவே முடியாது அண்ணா… நான் யமுனாவிடம் பேச வேண்டும். […] - [அத்தியாயம் 28](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28/): “எனக்கும் அது தெரியவில்லை தேவ், போட்டு வாங்குறேன்” என்றவன், கிஷோர் இன்னும் வரவில்லை என்றவுடன், “கிஷோர்…” என்று கத்தினான்.  “சாரி சாரி போலாம், என் காரில் போலாம். உங்களுடைய கார் இங்கேயே இருக்கட்டும்” என்றான். “இல்லை கிஷோர், விக்ரம் உன்னோடு வருவான். நான் என்னுடைய காரில் வருகிறேன்” என்று இடத்தை விட்டு எழுந்தான் தேவ். பின் மூவரும் கிளம்பினர்.  கிஷோருடன் காரில் வந்து கொண்டிருந்த விக்ரம், “நீ காதலிக்கும் பெண்ணுடைய குடும்பம் பற்றித் தெரியுமா?” என்று கேட்டுப் பார்த்தான். “காதலுக்கு எதுக்கு குடும்பம் பற்றி தெரியணும்? அவள் பார்க்க தேவதை போல் இருப்பாள், அது போதாதா?” என்று சந்தோஷத்துடன் பாட்டை பாடிக்கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். ‘ஒருவேளை அப்பெண் திருமணம் ஆனவள் என்று தெரிந்தால், இவனே விலகிடுவானோ?’ என்று யோசித்த விக்ரம், ‘முதலில் அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசினால் தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்’ என்று நினைத்தான்.  மணி பதினொன்று இருக்கும் […] - [அத்தியாயம் 27](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27/): கொட்டிவாக்கத்தில் இருக்கும் கிஷோரின் வீட்டிற்குச் சென்ற தேவ் மற்றும் விக்ரமை வரவேற்றார் குல்தீப் சிங். அவரைப் பார்த்தவுடன் தேவ்விற்கு ஏதோ சந்தேகமாகவே இருந்தது. ஆனாலும் நடப்பதைப் பார்ப்போம் என்று அமைதியாக உள்ளே சென்றான்.  “அங்கிள் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று விக்ரம் சொன்னான். ஆனால் நீங்கள் பார்க்க நல்லா தான் இருக்கீங்க?” என்று வெளிப்படையாகவே கேட்டான் தேவ்.  “ஹாஹா நீ நம்பர் ஒன் பிசினஸ் டைகூன்னா சும்மாவா, நல்ல புத்திசாலி தான் நீ தேவ்” என்று சிரித்தவர், “நீ சொல்றது உண்மை தான் தேவ், என் உடம்பில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் மனது பிரச்சனையாக இருக்கிறது” என்று வருத்தப்பட்டார் குல்தீப். “என்ன ஆச்சு அங்கிள், கிஷோர் எங்கே?” என்று கேட்டான் விக்ரம்.  “ஹே தேவ்… விக்ரம்… வாட் அ சர்ப்ரைஸ்! நீங்கள் எப்படி இங்க?” என்று சந்தோஷமாகக் கேட்டான் கிஷோர். “மாதாஜி… தேவ், விக்ரம் வந்திருக்காங்க” என்று தன் அன்னையை […] - [அத்தியாயம் 26](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26/): “அவங்க எல்லாரும் வந்தாலுமே, ஆதிராவுக்கு அன்னை பாசம் வேண்டும் இல்லையாப்பா? நானும் இன்னும் எவ்வளவு வருஷம் உயிரோடு இருப்பேன் என்று தெரியவில்லை. அதனால் யமுனாவை…” என்று அவர்கள் கூறி முடிப்பதற்குள், “அம்மா நிறுத்துங்க… அந்தப் பெயரைக் கூட என்கிட்ட சொல்லாதீங்க, எரிச்சலாக இருக்கிறது” என்று தன் அறைக்குச் சென்றான் தேவ். *** “அண்ணா, திடீரென்று இந்தியா கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் அதிர்ச்சியாக போச்சு. ஆனால் தேவ்வும் வருகிறார் என்று சொன்னதுக்கு அப்புறம் தான், நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றாள் மனிஷா. “எப்படி இருந்தாலும் நம்ம சொந்த நாடு இந்தியாதான, குஜராத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, பிறகு லண்டன் வந்தோம். இப்போது மறுபடியும் நம்முடைய தாய் நாட்டிற்கு செல்லப் போகிறோம்” என்றான் விக்ரம். அடுத்த நாள் இரவு, லண்டனிலிருந்து அனைவரும் விமானத்தில் இந்தியாவிற்குக் கிளம்பினார்கள். விமானம் இந்தியாவை நோக்கி கிளம்பியதும், தேவின் மனதில் யமுனா வந்து வந்து போனாள். ‘நான் உனக்காக சென்னை […] - [அத்தியாயம் 25](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25/): “இன்னியோட அப்பா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அதற்குக் காரணம் அந்த யமுனா. அவளின் விலாசம் தான் முக்கியமா?” என்று கடுப்பானான். “அண்ணா, உங்களை எதிர்த்து பேசுறேனு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்கள் தான யமுனாவை வெளியே அனுப்புனீங்க. அதே மாதிரி யமுனா அண்ணி இல்லாமல் வீடே நல்லா இல்லை. அந்த கவலையில் தான் அப்பா இறந்தாங்க” என்று கூறி முடித்தாள்.  “என்னிடம் விளக்கம் கூறுகிற அளவிற்கு நீ வளரவில்லை பிரியா… அதான் அவளுடைய செல் நம்பர் இருக்கே, அதற்கு கால் பண்ணி கேட்க வேண்டியது தானே. எதற்கு கண்டவளின் விலாசத்தை நான் சொல்ல வேண்டும்? முதலில் அவள் உனக்கு இப்போது அண்ணி இல்லை. அப்படிக் கூப்பிடாதே” என்று இந்த முறை கொதித்தான். “அண்ணா, யமுனாவுடைய சிம் கார்டு உபயோகத்தில் இல்லை” என்று பிரியா போராட முடியாமல் முடித்தாள்.  ‘யமுனா ஏன் சிம் கார்ட்டை மாற்றினாள்? அப்போது தன்னுடைய தொடர்பு அவளுக்கு தேவை இல்லையென்று […] - [அத்தியாயம் 24](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24/): “மன்னிச்சிடுங்க தேவ், எனக்கு வேலைக்கு வருவதற்கு விருப்பம் இருக்கு. இனி இப்படி கண்டிப்பா நடக்காது” என்ற மனிஷா, “சார், இன்னிக்கு என்ன சாம்பார்? வாசம் தூக்குது, சீதா ஆன்ட்டி காலையிலேயே சமையலை முடிச்சிட்டாங்களா?” என்று பேச்சை வளர்த்தாள். அவளிடம் அனாவசியமாக பேச்சை எப்போதும் வளர்க்காத தேவ், இம்முறையும் அவளுக்கு பதில் அளிக்காமல், தனது லண்டன் பிரான்சுக்குச் சென்று விட்டான். ஆதிராவுடன் விளையாடிக் கொண்டிருந்த சீதாலட்சுமியிடம், “ஆன்ட்டி, உங்களுடைய மகனுக்கு இன்னிக்கு என்ன ஆச்சு? சும்மாவே சிடுசிடு, இன்னிக்கு பயங்கர சிடுசிடு” என்று சொல்லி முடிக்கும் போதே, சீதாலட்சுமியின் அழுத முகத்தைக் கவனித்தாள் மனிஷா.  “ஆன்ட்டி என்ன ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று விசாரித்தாள். “இன்னிக்கு தேவ்வுடைய அப்பா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அதான் மனசு கஷ்டமா இருக்கு” என்று அழுதார். “ஐ அம் சாரி ஆன்ட்டி, நீங்க தப்பா எடுக்கவில்லைன்னா, நான் ஒன்னு கேட்கவா?” என்று தயங்கினாள்.  “கேளும்மா” […] - [அத்தியாயம் 23](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/):  “அம்மா… அம்மா வாங்க அப்பா வந்திட்டாங்க” என்று யமுனாவை இழுத்தாள் ஆதிரா. அப்போது அந்த அறைக்கு திவ்யா மற்றும் பிரியா வந்தனர். அவர்களைக் கண்டதும் ஆதிரா அவர்களிடம் திரும்பி, “அம்மா அப்பா பார்க்கணும்” என்று அடம்பிடித்தாள்.   “பிரியா ப்ளீஸ் ஆதிராவை நீங்க தூக்கிட்டுப் போங்க என் மனசு சரி இல்லை” என்று கடுப்பாகக் கூறினாள் யமுனா. திவ்யாவிடம் கண் அசைவில் செய்கை காட்டிய பிரியா ஆதிராவை வெளியே தூக்கிக்கொண்டுச் சென்றாள்.   யமுனாவிடம் திரும்பிய திவ்யா, “யமுனா காலையில் கீழே இறங்கி வந்தபோது நல்லா தான இருந்த அப்போ ஏன் இப்போ இப்படி சோகமா இருக்க உனக்கும் தேவ் அத்தானுக்கும் எதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள்.   தேவ்வின் மேல் இருந்த கோபத்தில், “ஆமாம்… என் பிரச்சனையே தேவ் தான்” என்று அவள் கடுப்பில் கூறும் போது அந்த அறைக்குள் சரியாக தேவ் வந்தான். தேவ் அப்போது அங்கு வருவான் என்று […] - [அத்தியாயம் 22](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/):  “அம்மா… அம்மா வாங்க அப்பா வந்திட்டாங்க” என்று யமுனாவை இழுத்தாள் ஆதிரா. அப்போது அந்த அறைக்கு திவ்யா மற்றும் பிரியா வந்தனர். அவர்களைக் கண்டதும் ஆதிரா அவர்களிடம் திரும்பி, “அம்மா அப்பா பார்க்கணும்” என்று அடம்பிடித்தாள்.   “பிரியா ப்ளீஸ் ஆதிராவை நீங்க தூக்கிட்டுப் போங்க என் மனசு சரி இல்லை” என்று கடுப்பாகக் கூறினாள் யமுனா. திவ்யாவிடம் கண் அசைவில் செய்கை காட்டிய பிரியா ஆதிராவை வெளியே தூக்கிக்கொண்டுச் சென்றாள்.   யமுனாவிடம் திரும்பிய திவ்யா, “யமுனா காலையில் கீழே இறங்கி வந்தபோது நல்லா தான இருந்த அப்போ ஏன் இப்போ இப்படி சோகமா இருக்க உனக்கும் தேவ் அத்தானுக்கும் எதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள்.   தேவ்வின் மேல் இருந்த கோபத்தில், “ஆமாம்… என் பிரச்சனையே தேவ் தான்” என்று அவள் கடுப்பில் கூறும் போது அந்த அறைக்குள் சரியாக தேவ் வந்தான். தேவ் அப்போது அங்கு வருவான் என்று […] - [அத்தியாயம் 21](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/):  “ஹலோ சீனியர் சென்னையில் இருந்து எப்போ வந்தீங்க?” என்று அவனிடம் திரும்பியவள் அவள் பக்கத்தில் அவளை முறைத்து நின்றுக்கொண்டிருந்த திவாகரைப் புரியாமல் பார்த்தாள்.   “ஹே பிரியா நான் உன் கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும். நீயும் தமிழ் நானும் தமிழ் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று மனீஷ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “ஸ்டாப் இட் மனீஷ் பிரியா என்னுடைய மனைவி எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆகப் போகிறது. என்ன பிரியா அமைதியாய் இருக்க நீ சொல்லு என்னுடைய மனைவி என்று” என்று அவளை அழுத்தமாகப் பார்த்தான்.   “ஆமாம் சீனியர் நாங்க இரண்டு பேரும் கணவன் மனைவி” என்று மனீஷிடம் கூறினாள் பிரியா.   “ஹேய் பிரியா, சாரி எனக்கு தெரியாது யூ கைய்ஸ் கேரி ஆன்” என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான் மனீஷ்.   பிரியாவும் வேறு எங்காவது போலாம் […] - [அத்தியாயம் 20](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/): “இதைப் பற்றி என்கிட்ட பேசாதீங்க பிரியா ப்ளீஸ்” என்று பேச்சை மாற்றினாள் யமுனா. அன்று வந்த அதே துர்க்கை அம்மன் கோவிலுக்கு வந்தார்கள். “அண்ணி நீங்க இருங்க நான் விளக்கு ஏத்திட்டு வந்திடறேன்” என்று விளக்கேற்ற சென்றுவிட்டாள் பிரியா. கடைசி முறை இந்த கோவிலுக்கு வந்த போது திவ்யா சொன்னதை நினைத்துப் பார்த்தாள் கணவனின் ஆரோக்கியத்திற்காக அவரின் நலனுக்காக துர்க்கை அம்மனை வேண்டி விளக்கேற்றினால் நல்லது என்பதை நினைத்துப் பார்த்தவள் பக்கத்தில் இருந்த பூஜை சாமான் கடையில் விளக்கை ஹிந்தியில் கேட்டு வாங்கியவள் நேராக அம்மன் சன்னதியில் விளக்கேற்றி வேண்ட ஆரம்பித்தாள். “அம்மா துர்க்கை தாயே தேவ் கொஞ்ச நாளா என்கிட்ட விலகி விலகிப் போறாரு… எனக்கு முதல்ல அவர் அப்படி பண்ணது நிம்மதியாக இருந்தது ஆனா இப்போ என்னால தேவ்வை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவரின் மேல் அக்கறை காட்டாமல் இருக்க முடியவில்லை அவரின் நெருக்கத்தை விட அவரின் ஒதுக்கம் என்னை […] - [அத்தியாயம் 19](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19/): அன்று இரவு தேவ்வுடன் சேர்ந்து மாயாவும் வந்தாள். தேவ் வந்தவுடன் தேவ்வை வந்து அணைத்துக் கொண்டாள் பிரியா. தேவ்வை பார்த்த உடன் பிரியா கண்களில் அழுகை வர ஆரம்பித்தது. “என்ன ஆச்சு பிரியா? எப்படி இருக்க? ஏன் அழுகுற? எதாவது பிரச்சனையா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டான் தேவ். “அதெல்லாம் இல்லை அண்ணா உங்களைப் பார்த்த ஆனந்தக் கண்ணீர் தான் வேற எதுவும் இல்லை நான் சந்தோஷமாக இருக்கேன் அண்ணா… ஆதிரா யமுனா அண்ணி கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டாளே” என்றாள். “ம்ம், சரி” என்று யமுனாவை ஒரு முறை பார்த்தவன் தன் அறைக்குச் சென்று விட்டான். “என்ன பிரியா ஆடி மாசம்னு உன்னையும் உன் புருஷனையும் பிரிச்சு வெச்சிட்டாங்க போல” என்று கண்ணடித்து கிண்டல் செய்தாள் மாயா. இவள் எப்போதும் இப்படி தான் விவகாரமாகக் கிண்டல் செய்வாள் என்று போலியாகச் சிரித்தாள் பிரியா. தேவ் எப்போது வருவான் என்று காத்துக்கொண்டிருந்த யமுனா […] - [அத்தியாயம் 18](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/): “ஹேய் போய் உன் கணவருக்கு நன்றி சொல்லு உனக்காக அவர் என்ன வாங்கிட்டு வந்திருக்காருனு வெளியே போய் பாரு…” என்ற யமுனா குணாவிடம் செய்கை செய்தாள். திவ்யாவின் கண்ணை மூடிய குணா அவளை பொறுமையாக அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். “குணா என்ன வாங்கிருக்கீங்க? என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியலை ப்ளீஸ் சொல்லுங்க” என்று கேட்ட திவ்யாவை கார் பார்க்கிங்கிற்கு அழைத்துச் சென்றான் குணா. பின் கண்ணைத் திறந்து விட்டான் குணா. “என்ன குணா கார் பார்க்கிங் கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று யோசனையாகக் கூறினாள். தேவ்வின் வீட்டில் மொத்தம் ஐந்து கார்கள் இருக்கும் எல்லாமே உலகத் தரம் வாய்ந்த பிரான்ட் கார்கள். அதனால் திவ்யாவால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. “உனக்கு ரொம்ப பிடிச்ச பென்ஸ் அங்க புதுசா நிக்குது பாரு. அது உனக்காக நான் வாங்கிய கார்” என்று அங்கு கறுப்பு நிறத்தில் கம்பீரமாக நின்ற புதிய காரைக் காட்டினான் குணா. “எனக்கு […] - [அத்தியாயம் 17](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/): தேவ்வின் கைகளை தன் முகத்தில் இருந்து எடுக்க யமுனா முயற்சி செய்தாள். இதனை அறிந்த தேவ் அவளின் முகத்தின் பக்கம் தன் முகத்தினை எடுத்துச் சென்று அவளின் இதழ்களில் தேனைப் பருகினான்.  யமுனா இந்த முறை அவனை தடுக்கவில்லை அழவில்லை அதையே ஒப்புதலாக எடுத்துக்கொண்ட தேவ் யமுனாவிடம் உரிமையை நிலை நாட்ட முயற்சி செய்தான். அந்த நீண்ட இதழொற்றல் பின் யமுனாவின் வெற்று இடையில் தன் கையை வைத்து அழுத்தம் கொடுத்தான். அவளை இறுக்கமாகக் அணைத்தவன் அவளின் சேலை முந்தானையைப் பிடித்து கழட்ட தொடங்கினான்.   அதுவரை ஏதோ கனவுலகத்தில் இருந்த யமுனா திடீரென்று முழிப்பு வந்தவளாய் தேவ்வை தள்ளிவிட்டு அவனின் கன்னத்தில் அறைந்தாள். தன்னை மீறி கோபமும் அழுகையும் மாறி மாறி வந்தது யமுனாவிற்கு ஏதோ வேகத்தில் தேவ்வை அடித்துவிட்டாள். யமுனா அவனை அடித்த அடுத்த நிமிடம் தேவ்வும் அவளின் கன்னத்தில் அறைந்தான்.   பின் அவளுடைய கையை மடக்கி திருப்பியவன், […] - [அத்தியாயம் 16](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16/): அவளின் கண்களை ஊடுருவினான்.”யமுனா உன் மாமன் மகன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்?” என்று தன் சட்டையை கழட்டியவன் யமுனாவிடம் திரும்பி, “பிரியா உன் கிட்ட எப்படி பேசுனா?” என்று அதட்டிக் கேட்டான். “என்கிட்ட அவங்க பேசுனது எப்படினு தெரியல ஆனால் அவங்க சந்தோஷமா பேசல” என்றவள் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். தேவ் அவளிடம் எதுவும் கூறாமல் குளிக்கச் சென்றான். யமுனா பொருள்களை சீர்படுத்திவிட்டு கீழேச் சென்று காஃபி போட்டு எடுத்துக்கொண்டு தேவ்விடம் வந்தாள். அவன் காஃபியை வாங்கிய பின் யமுனா கீழேச் சென்றாள். அதன்பின் அவள் தேவ்வின் அறைக்கு வரவில்லை. மாயா யமுனாவை முறைத்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் யமுனா அவளைக் கண்டுகொள்ளவில்லை. கீழே சாப்பிட வந்த தேவ் தன் தாய் தந்தையிடம், “நாளைக்கு நீங்களும் அப்பாவும் பிரியாவை பார்த்துட்டு வாங்க” என்றான். அவர்களும், “சரி” என்றனர். பின் இரவு யமுனா இம்முறை அறைக்குள் செல்லும் போது ஆதிரா தூங்கிக் […] - [அத்தியாயம் 15](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): அவளை விடுவித்தவன், “எப்படி இருந்தாலும் அவள் நம்ம வீட்டு விருந்தினர் யமுனா, நீ லூசுனு சொன்னது தப்பு தான் இனி அப்படி பேசாத” என்று அவள் பதிலை எதிர்ப்பார்க்காமல் குளிக்கச் சென்று விட்டான். ‘தன் அத்தை பெண்ணை லூசுனு சொல்லிட்டேனாம் சொன்னவுடன் பொண்டாட்டி மேலயே இவருக்கு கோபம் வருது’ என்று நினைத்த யமுனா, ‘ச்ச என்ன இது நம்ம இப்படி லாம் யோசிக்க ஆரம்பிச்சிட்டோம்… ச்சே அவன் யாருக்கு சப்போர்ட் பண்ணா நமக்கென்ன? நம்ம எப்படியோ டைவர்ஸ் தானே வாங்க போறோம்’ என்று தன் மனதை அவளே சமாதானப்படுத்திவிட்டு சமையலறைக்குச் சென்றாள். கமலாம்மாள் காலை சாப்பாடு செய்துக் கொண்டிருந்தார். யமுனா வந்தவுடன் அவளுக்கு காஃபி போட்டு கொடுத்தார். “யமுனாம்மா வந்துட்டியா! இன்னிக்கு பிரியாவையும் மாப்பிள்ளையையும் விருந்துக்கு அழைச்சிருக்கோம். அதனால் பாயசம் பண்ணனும் நீ இன்னிக்கு பருப்பு பாயசம் செஞ்சிடு மா, கமலா சாம்பார் ரசம் அவியல் காய் லாம் பண்ணிடுவா” என்றார் சீதாலட்சுமி. […] - [அத்தியாயம் 14](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/): ‘அவனுக்கு எப்படி என்னை அப்படி செய்ய தோன்றியது இதுவரைக்கும் யாரையும் நான் என்கிட்ட நெருங்க விடாமல் இருந்தேன். ஆனா இவனோட பலத்திற்கு முன்னால் என்னை காத்துக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் நேற்று அவன் எல்லை மீறாமல் நான் இந்த வாழ்க்கையை பிடிச்சு அவனை தேடி போகணுமாம்… ச்ச என்னலாம் பேசுறான் நமக்கு சொல்லி அழுறதுக்கு கூட இந்த வீட்டில் யாரும் இல்லை’ என்று நினைத்தவள், ‘என்ன நடந்தாலும் இனிமேல் வாயேத் திறக்க கூடாது அப்படி இருந்து தான் ஆகணும் வேற வழி இல்லை’ என்று கீழேச் சென்றாள். அங்கு அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். “என்ன அண்ணி உங்க மருமகள் எழுந்திருக்கிற நேரத்தைப் பார்த்தீங்களா?” என்று ஏளனமாகக் கேட்டார் பனிமலர். “என் மனைவி எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறாள்னு பார்க்க எனக்கு தெரியும் அத்தை நீங்க விருந்தினரா வந்தீங்கனா அந்த மாதிரியே நடந்துக்கோங்க” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த தேவ் அதிகாரமாக சொல்லிவிட்டான். யமுனாவை சாப்பிட அழைத்தார் […] - [அத்தியாயம் 13](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/): யமுனாவிற்கு குழப்பமாக இருந்தது. ‘ஒருவேளை புலி பாய்வதற்காகத் தான் பதுங்குகிறதோ’ என்று நினைத்தவள் மனதில் பயம் உண்டானது. ‘இல்லை யமுனா நீ தைரியமா இருக்கணும் மிஞ்சிப் போனா அடிப்பான் ஆனா அவன் அடிச்சா நம்ம தாங்குவோமா’ என்று குழம்பியவள், ‘சரி யோசிச்சா நமக்கு இரவு தூக்கம் கூட வராது’ என்று தூங்கச் சென்றாள். சாயாவுடன் ஆதிரா விளையாடிக் கொண்டிருந்தாள். ஆதிராவிற்கு சாப்பாடு கொடுக்க வந்தாள் யமுனா. “யமுனா அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மாயா அக்கா மாதிரி லிப்ஸ்டிக் அதெல்லாம் போடாமலே அழகா இருக்கீங்க” என்றாள். “நானும் அதெல்லாம் போடுவேன் சாயா ஆனா இப்போலாம் போட விருப்பம் இல்லை” என்றாள் யமுனா சோகமாக. “அக்கா நீங்க ரொம்ப க்யூட்டா பேசுறீங்க…நேற்று என் அம்மாக்கு நல்ல பதிலடி கொடுத்தீங்கக்கா அவங்க உங்களை அப்படி பேசிருக்கக் கூடாது… மாயா அக்கா கல்லூரி முடிச்சிட்டு இங்க தான் தேவ் அத்தானுடைய ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கப் […] - [அத்தியாயம் 12](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/): இதனைக் கண்ட பிரியாவிற்கு குற்ற உணர்ச்சி பயங்கரமாக வந்தது. ‘தன்னுடைய வாழ்க்கைக்காக இவள் வாழ்க்கை அழிந்து விட்டதே’ என்று அவளும் அழ ஆரம்பித்தாள். “ஐய்யோ இரண்டு பேரும் அழுகையை நிறுத்துங்க ப்ளீஸ்… திவ்யா இனி தயவுசெஞ்சு நீ சந்தோஷமா இருக்கணும் என்னால் உன் கிட்ட பழைய மாதிரி நெருக்கமா இருக்க முடியாது… ஆனா அதுக்காக உன் கிட்ட பேசாமல் முகத்தை தூக்கி வெச்சிட்டுலாம் இருக்க மாட்டேன்… உனக்கு உறுதுணையாய் இருப்பேன் இப்போ இரண்டு பேரும் கொஞ்சம் அழுகையை நிறுத்துங்க” என்று அவள் சொல்லும் போதே சீதாலட்சுமி உள்ளே வந்தார். “என்ன யமுனா நீ இன்னும் மேக்கப் லாம் பண்ணாம இருக்க இன்னும் அரை மணி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துருவாங்க அந்த மேக்கப் பண்ற பெண்ணை தேவ்வுடைய பெங்களூர் அத்தையும் அத்தை மகள்களும் மேக்கப் போட அந்தப் பெண்ணைப் பிடிச்சு வெச்சிட்டாங்க… நான் போய் அந்தப் பெண்ணை அழைச்சிட்டு வரேன் யமுனா நீ […] - [அத்தியாயம் 11](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): அதுவும் அவனுடைய தேவ் ரெசார்ட்டில் தான் நிறுத்தினான். அவனைப் பார்த்து ஹோட்டலில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அதை எதையும் கண்டு கொள்ளாமல் ஒரு காட்டேஜிற்கு யமுனாவை இழுத்துச் சென்று கதவைச் சாற்றினான். யமுனாவிற்கு இதயம் பட படவென துடிக்க ஆரம்பித்தது திக்கு திக்கென்று இருந்தது. ஆனால் அவள் கூறியதில் ஏதும் தப்பு இருந்ததாய் அவளுக்கு தோணவில்லை ஒரு பெண்ணாய் தன் கற்பின் மேல் உள்ள பயத்தில் தான் கேட்டாள்.   “என்ன டி சொன்ன..? என் கூட ஒரே அறையில் இருக்க உனக்கு பயம் அப்படி தான நான் உன்னை எதாவது பண்ணிடுவேன் அப்படிதான” என்றவனின் குரலில் அழுத்தம் இருந்தது.   “நான் நினைச்சிருந்தேன்னா உன்னை என்னோட மனைவி ஆக்காமல் அன்னிக்கே உன்னை பார்த்த அன்னிக்கே என்னால உன்னை அடைஞ்சிருக்க முடியும்… ஆனா நான் அப்படி பட்டவன் இல்லை நான் கல்யாணம் தாலி இதுக்கெல்லாம் மதிப்பு கொடுக்கிறவன். இப்போ உன்னை எதுக்கு […] - [அத்தியாயம் 10](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): “நான் வினய் கூடவே போய்டுறேன்… எங்க அப்பா அம்மாக்கும் இது தெரியும் இந்தக் குழந்தைக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லை… சோ அதை நான் எடுத்திட்டு போய் ஒரு அனாதை ஆசிரமத்தில போட்டுட்டு போய்டுறேன்” என்று அவள் சொல்லி முடிக்கும் போதே தேவ் தன் சட்டையின் பெல்ட்டை எடுத்து அவளை அடி வெளுத்தான். அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பியவன், ‘எனக்கு தெரிஞ்சே ஒரு குழந்தை அனாதை ஆகக் கூடாது ஆவளுக்கு நான் இருக்கேன் இனி தந்தையாய்…’ என்று முடிவெடுத்து அவளை வெளியே அனுப்பினான்.   “டைவர்ஸ் ஆகி ஒரு வருஷம் ஆகப் போகுது ஒரு தடவை கூட அந்தப் பிரனிதா இந்தக் குழந்தையைப் பார்க்க வரலை அதற்குப் பின் தேவ்வுடைய கட்டளை ஆதிரா வளர்ந்தாலும் தன் பிறப்பைப் பற்றித் தெரிய கூடாது என்று. தேவ்விற்கு தன்னுடைய பெர்ஸ்னல் விஷயத்தை யாரிடமும் பகிரப் பிடிக்காது பாதி பேருக்கு அவனுக்குக் கல்யாணம் நடந்தது கூடத் தெரியாது” […] - [அத்தியாயம் 9](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): கண்ணை முழுதாகக் கூடத் திறக்காமல், “உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா?” என்று நன்றாகக் கண்ணை விழித்தாள். அவள் கத்தியதில் ஆதிரா பயந்து அழுதவள் பின் தந்தையின் அறைக்கு ஓடினாள். ஆதிரா என்று தெரியாமல் இப்படி பண்ணிட்டோமே பாவம் சின்னக் குழந்தை என்று உண்மையாக அவளுக்காக வருந்தியவள் அவள் பின்னே ஓடினாள். “அப்பா… அம்மா கத்து” என்று அவனிடம் அழுதாள். ஆதிராவோடு பழகியவர்கள் எளிதில் அவளுடைய மழலை பாஷையை புரிந்துக்கொள்வர். அப்போது தான் யமுனா ஒடி வந்து, “சாரி ஆதிரா, நான் நீயென்று தெரியாமல் அப்படி கத்திட்டேன்” என்றாள்.    “ஆதிரா அழுகுற அளவுக்கு என்ன நடந்தது” என்று அமர்த்தலான கோபத்துடன் கேட்டான். நடந்ததை கூறி முடிக்கும்போது, “ஆதிரானு இல்லை யார் வந்து உன்னை எழுப்புனாலும் இனிமேல் பொறுமையா இருக்கணும்…எதாவது எமர்ஜென்சினு உன்னை எழுப்பினா கூட இப்படி தான் தூங்குவியா?” என்று சலிப்பாகக் கேட்டான்.   “முதல்ல உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்ற நினைப்பு உனக்கு […] - [அத்தியாயம் 8](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): ‘இருபத்தி இரண்டு வயசான நான் எப்படி ஒரு இரண்டு வயசு குழந்தை அம்மாவா ஆக முடியும்..?’   “யமுனா என்ன பண்ணிட்டு வந்திருக்க நீ… ஆதிரா சின்ன குழந்தை உன்னை அம்மாவா நினைக்கிறாள் அவள் கிட்ட ஆன்ட்டினு சொல்லிட்டு வந்திருக்க… இங்க பார் நீ ஆதிராக்கு அம்மாவா மட்டும் தான் இங்க இருக்கணும்” என்றான் தேவ் அதிகாரமாக.   “என்னை விட நீங்க ஏழு வயசு பெரியவர் உங்களுக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறது…நான் என்னுடைய வாழ்க்கையே இப்போது தான் ஆரம்பிக்கிற வயசு ஆனால் அதுக்குள்ள வாழ்க்கை முடிந்தே போச்சு…அது மட்டுமில்லாமல் உங்களைக் கல்யாணம் பண்ணினால் திவா அத்தான் வேலை இருக்குமென்று சொன்னீங்க… ஆனால் வேலையில இருந்து தூக்கிட்டீங்க பத்திரமும் கொடுக்கல ஒரு வாரத்தில் அவங்களுக்கு சிறையென்று சொல்லிருக்கீங்க கொடுத்த வாக்கு நீங்க காப்பாற்றலை இதான் உங்கள் கொள்கையா?” என்று கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்.   மறுபடியும் இம்முறை […] - [அத்தியாயம் 7](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): தன் வாழ்க்கையை நினைத்து நொந்தவள் பல் துலக்கி குளித்து விட்டு சாப்பிட்டு உடை அணிந்து வெளியே வர மணி பத்து ஆனது. கீழே இறங்கிச் சென்றவள் அங்கே ஹாலில் யாரும் இல்லை என்பதைப் பார்த்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் சோபாவில் போய் அமர்ந்தாள். “உனக்கு கிளம்ப இவ்வளவு நேரமா? ஆல்மோஸ்ட் மதியமே ஆக போகுது. எனக்கு நான் ஒன்னு சொன்னா அதன்படி பக்காவா நடக்கணும் காலைல உன் மாமாவ பார்க்கணும்னு சொன்னா இந்நேரம் அங்க இருந்திருக்கணும். நான் உன்னை நகை போட சொல்லிருந்தேனே ஏன் போடல?” என்று திமிராகக் கேட்டான். “எனக்கு இதுல லாம் இன்ட்ரெஸ்ட் இல்லை ஏன் இந்த கல்யாணமும் பிடிக்கல உங்களை சுத்தமா பிடிக்கல” என்று கத்தினாள். அவளை தரதரவென்று இழுத்து தனது அறைக்கு கொண்டு போய் கதவை சாத்தினான் தேவ். இச்செயலில் அதிர்ந்த யமுனா பயந்தாள். “லுக் யமுனா நீ ஒன்றும் சின்ன குழந்தை இல்லை நான் எப்போதும் […] - [அத்தியாயம் 6](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): தேவ் அவளை கண்டுகொள்ளாமல் தன்னுடைய போட் ஹியர்ஃபோன்ஸை எடுத்து போட்டுக் கொண்டவன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான். சாப்பாடு வரும் நேரம் வந்த உடனே, ‘உன் நடிப்பு போதும் யமுனா சாப்பாடு வருது எனக்கு மயக்கமே வர மாதிரி இருக்கு மயங்கி விழுந்தாலும் இவன் நம்மளை வெச்சி செஞ்சிருவான் அதனால் சாப்பாட்டைச் சாப்பிடு’ என்று நினைத்தவள் தூங்கி எழுந்திருக்கும் மாதிரி நடித்தாள். சாப்பிட்டு முடித்து விட்ட பின் அமைதியாக வானத்தை வெறித்தாள். ‘இவன் கூட பத்து நிமிஷம் இருக்கிறதே பத்து வருஷம் மாதிரி இருக்கிறது’ என்று மனதில் புலம்பியவள் அவனைத் தொடாமல் உட்கார்ந்து இருப்பதில் கவனமாக இருந்தாள். விமானம் நியூ டெல்லி வந்த பின்னர் தங்களுடைய பேக்கேஜ் கிடைத்து வெளியே வர மணி ஒன்பதரை ஆனது. பின் தன் ஓட்டுநருக்குக் கால் செய்த தேவ், “அன்குஷ் டிபார்சர் நம்பர் மூன்றுக்கு வா” என்று ஹிந்தியில் பேசினான். ‘ஐய்யோ நமக்கு ஹிந்தி வேற தெரியாதே இதைப் […] - [அத்தியாயம் 5](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): இவர்கள் பேசிய சலசலப்பிலேயே விழித்த யமுனாவிற்கு அவளுடைய செல்லிற்குக் கால் வந்தது. ஏதோ தெரியாத நம்பர் என்று தூக்க கலக்கத்திலேயே அட்டெண்ட் செய்த யமுனா, “ஹ… லோ!!!” என்று சோம்பல் முறித்தாள்.   “இன்றைக்குக் கல்யாணம் இருக்குனு தெரிந்தும் இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்க யூ இடியட் இன்னும் ஒன் ஹவர்ல நீ வடபழனி கோவில்ல இருக்கவேண்டும் இல்லன்னா என்னுடைய இன்னொரு ஃபேஸ் நீ பார்ப்ப உன்னை சும்மா விட மாட்டேன்” என்று கட் செய்து விட்டான். தூக்கக் கலக்கம் போய் யார் இது இவ்வளவு கடுமையாகப் பேசியது என்று ட்ரூகாலரில் பார்த்தாள்.   அதில் “சத்யதேவ்” என்று இருந்தது. அதைப் பார்த்தவுடன் படபடப்பில் தொலைப்பேசியைக் கட்டிலில் போட்டாள்.   “ஏய் இன்றைக்கு உனக்கு கல்யாணமென்று தெரிந்தும் இப்படி தூங்குற” என்றாள் திவ்யா. அவளைக் கோபத்தில் எரிக்கும் பார்வையைப் பார்த்தாள் யமுனா.   “ஆமா இது ஆசைப்பட்டு பண்ணுற கல்யாணம் பாரு அதான் […] - [அத்தியாயம் 4](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): யமுனாவிற்கு சுத்தமாக எதிலுமே விருப்பம் இல்லை அடுத்த நாள் அலுவலகம் சென்ற யமுனாவை எச்ஆர்டியில் இருந்து அழைத்தனர். “ஹாய் யமுனா உங்கள் லாஸ்ட் டேட் இந்த வாரம் ஃபிரைடே சத்யதேவ் எங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டாரு. நீங்க ஒரு ரெஸிக்னேஷன் மெயில் மட்டும் அனுப்புங்க. அப்புறம் ஒன் வீக்ல ரிலீவ் ஆகுறதுனால மூன்று மாசம் சம்பளம் கட்டவேண்டும் அதை சத்யதேவ் தரேன்னு சொல்லிட்டாரு யமுனா” என்றான் எச்ஆர் ஹரி. “அதான் நீங்களே எல்லாம் பண்ணீட்டீங்களே ஹரி அப்போது எதற்கு என்ன கூப்பிட்டீங்க?” என்றாள் கோபத்தோடு. “எப்படி ஹரி இதெல்லாம் அவன் ஒரு மல்டிமில்லினியராகவே இருக்கட்டும் அதுக்காக ஒரு பொண்ணு லைஃப்ல இப்படி விளையாடக் கூடாது என்னை இப்படி லாக் பண்ணிட்டான் அவன்” என்று ஹரியிடம் கத்தினாள். “ஐ அம் சாரி யமுனா உங்கள் பிரச்சனை என்னனு எனக்கு தெரியல இது டாப் மேனேஜ்மென்ட்ல இருந்து பண்ண சொன்னாங்க அவ்வளவு தான் எனக்குத் தெரியும்” […] - [அத்தியாயம் 3](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): அப்போது அவளுக்கு ஒரு கால் வந்தது அழைப்பைப் பார்த்த யமுனா அதில் தன்னுடைய மாமா கால் செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். “யமூ குட்டி எப்படி டா இருக்க?” என்றவரின் குரல் தழுதழுத்தது. சேகருக்கு தற்போது 70 வயது இருக்கும் சிறிய வயதிலேயே தங்கள் அப்பா அம்மாவை இழந்த பதினைந்து வயது சேகர் தன்னுடைய எட்டு வயது தங்கை சாந்தியை ஒரு தந்தை போல் பாதுகாத்தார். அவளை படிக்கவைத்து இவரும் படித்து பகுதி நேரத்தில் வேலைப்பார்த்துப் படித்து முடித்தவுடன் அரசுப் பணியில் சேர்ந்தார். சாந்தியைக் கல்யாணம் பண்ணி வைக்கவே அவருக்கு வயது 35 ஆனது. தன்னுடைய வாழ்க்கையைத் தனியாக வாழலாம் என்று நினைத்த போது சாந்தி தன் கணவன் வழி சொந்தமான விஜயலட்சுமியைப் மணம் முடிக்க கூறினாள்.  விஜயலட்சுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவள் ஆனாலும் அவளுக்குப் பேராசை அதிகம் தங்கை மற்றும் மாப்பிள்ளை சங்கரின் வார்த்தைக்காகக் கல்யாணமும் செய்தார். திவாகர் பிறந்து […] - [அத்தியாயம் 2](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): யமுனாவிற்கு மண்டையே குழம்பியது. அந்த நிமிடம் உட்கார்ந்து யோசித்தவள் திவாகருக்கு கால் பண்ணினாள்.   “யமுனா நானே சென்னைக்குத் தான் வந்துக் கொண்டு இருக்கேன். உன் விடுதி முகவரி எஸ்.எம்.எஸ் அனுப்பு” என்று காலை கட் செய்து விட்டான். அவளும் அனுப்பினாள்.   ‘நாம் திவ்யாவைப் பற்றிப் பேச நினைத்தோம் இவர் என்ன புது கதை சொல்கிறார்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள் யமுனா.    யமுனாவிற்கு யோசித்து யோசித்து தலையே வலித்தது. அடுத்த நாள் திவாகர் யமுனாவின் விடுதியில் வாசல் முன் நின்று யமுனாவை அழைத்தான்.   “பக்கத்தில் இருக்கிற பீச்சுக்கு போகலாம்” என்றான்.    “சரி அத்தான் அங்க டெல்லியில் மாமா அத்தை லாம் எப்படி இருக்காங்க? மாமாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையென்று சொன்னாங்க. இப்போது எப்படி இருக்காங்க?” என்று கேட்டாள்.   “அப்பாக்கு இப்போது பரவாயில்லை யமுனா. எல்லாரும் நல்லா இருக்காங்க ஆனால் நான் தான் நல்லா இல்ல” என்றான்.  […] - [அத்தியாயம் 1](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-2/): அந்த பரபரப்பான சூழலில் அனைவரும் தங்களுடைய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இரவு பன்னிரண்டு மணி ஆன அளவிலும் கூட சாலைகள் வெறிச்சோடவில்லை. ஏனென்றால் இது ஒரு தூங்கா நகரம். ஆம் இச்சூழல் மதுரையில் மட்டுமே இருக்கும்.மதுரை என்றாலே சிறப்பு. நமது தமிழ்ச்சங்கம் பிறந்த ஊர்.    காலை ஆறு மணி அளவில் பழங்காநத்தம் திருவள்ளுவர் தெரு 3வது சந்தில் “துர்கா இல்லம்” என்று போடப்பட்டிருக்கும் வீட்டிலிருந்து சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது.    “சுபா எழுந்திரு ஆறு மணியாச்சு. இன்று வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகணும்” என்று கூறினார் துளசி.  “அம்மா! அக்கா பாவம் நேத்து ரொம்ப நேரம் அவளோட காலேஜ் ப்ராஜெக்ட்க்கு வொர்க் பண்ணிட்டு இருந்தா. அதனால நம்ம மட்டும் போயிட்டு வரலாம்” என்றாள் அவ்வீட்டின் கடைக்குட்டி தீபிகா.   ”நம்ம எல்லாரும் போயிட்டு வரலாம்னு நினைச்சேன்“ என்றார் துளசி. இந்த உரையாடலில் பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தார் அந்த […] - [அத்தியாயம் 1](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1/): சென்னை  தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும்.அத்தகைய ஊரில் அமைந்துள்ள சோழிங்கநல்லூரில் மென்பொருள் நிறுவனங்கள் ஏராளமாக இருக்கிறது. சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில், தன் அறையில் அழுதுக்கொண்டு இருந்தாள் திவ்யா. திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்டுள்ள திவ்யாவிற்கு அப்பா அம்மா சிறிய வயதிலேயே பிரிந்தனர்.  இருவரும் மனம் வேறுபாட்டால் வெவ்வேறு பாதையில் சென்றனர். அவர்கள் திவ்யாவை ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டனர். பதினைந்து வயதான திவ்யா அழுது கெஞ்சியும் அவர்கள் மனது கல்லாகவே இருந்தது. மாதா மாதம் அவளுக்குப் பணம் அனுப்பினார்கள்.  ஆனால் திவ்யாவிற்கு வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது இப்படியே ஏழு வருடங்கள் சென்றது. அப்போது தான் அவள் வாழ்க்கையில் வந்தாள் யமுனா என்னும் தேவதை.  யமுனாவின் அப்பா அம்மா அவள் சிறு வயதிலேயே ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள். அப்போது இருந்து அவளுடைய மாமா சேகர் தான் அவளை வளர்த்தார். தன்னுடைய மகன் மேற்படிப்பிற்காக டெல்லி […] - [அனல் 3](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-3/): அனல் 3 இதைக் கேட்டதில் இருந்து மகேஷ் மட்டும் இல்ல ஆடிப்போனது காயத்ரியும் தான்..   ஏனெனில் மகேஷ் பிரியாவை காதலித்து திருமணம் செய்த வரை அவருக்குத் தெரியும்…   மகேஷிற்கு என்ன தான் தந்தை நெருக்கம் ஆனாலும் இவ்விஷயத்தை அவரிடம் எப்படி எடுத்துச் செல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை…   அதனால் தான் சில மாதங்கள் முன்னர் தாயிடம் தன் காதலைப் பற்றிச் சொன்னவன் அப்படியே அவளைத் திருமணம் செய்யவேண்டிய நிலையையும் சொன்னான்..   முதலில் காயத்ரி எதிர்த்தார் தான்… ஆனால் மகேஷ் விடாது அன்னையிடம் கெஞ்ச, எங்கே இஷாக்கை போல் மகேஷூம் தன்னை விட்டு தூரமாக சென்றுவிடுவானோ என பயந்து சம்மதித்தாலும், இந்த வீட்டை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற மலைப்பும் கவலையும் அவரை சூழ்ந்துக் கொண்டது…    சக்கரவர்த்தி முன்னர் சித்ரா அடங்கி இருப்பதும் அவர் வெளியில் சென்ற பின்னர் ஓவராக ஆடுவதும் காலம் காலமாக நடந்துக் கொண்டுருக்கும் […] - [அனல் 2](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-2/): Nibhuna Fashion Designing என்கிற படாதகை தங்க நிறத்தில் ஜொலித்துக் கொண்டு இருந்தது…    இங்கு வந்து இருக்கும் பெண்கள் ஆண்கள் கூட உயர்தர மக்களா பார்க்கவே படு ஸ்டைலாக அழகாக இருந்தார்கள்… அவளைத் தவிர…    அவள் முத்துமாரி… திறமையால் மட்டுமே இந்த இளம் வயதில் பிரபல காஸ்ட்யூம் டிசைனர் நிபுனாவின் அசிஸ்டெண்ட்டாக இருக்கிறாள்…    அங்கு நிபுனாவை சந்திக்க வர பிரபலங்கள் ஏராளம்…    ஏன் அங்கு நிபுனாவிடம் வேலை பார்க்கும் உதவியாளர்களும் அதிகம்… அனைவருமே கன கச்சிதமாக தங்களை அழகு படுத்தக் கொண்டு தான் வருவார்கள்…    முத்துமாரியோ உடையில் மட்டுமே கச்சிதம்… முகத்தில் எந்தவொரு செயற்கை தனத்தையும் செய்ய மாட்டாள்…    ஒரு சின்ன கல் பொட்டு, காதுக்கு சின்ன கம்மல், கழுத்தில் மெலிசான சயின் அவ்வளவு தான்…    “ஏய் முத்துமாரி இந்த இன்டஸ்ட்ரி வந்து உன் பெயரை மாத்தாம இருக்க?”,    “கொஞ்சமாவது மேக்கப் […] - [அனல் 1](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-1/):   இதுல ஒரு ஹீரோ இல்லங்க மூனு ஹீரோ.. அதுல ஒருத்தன் மட்டும் தான் இந்த கதையின் முதன்மையான ஹீரோ… அன்பானவன்… மகேஷ் சக்கரவர்த்தி அடங்காதவன்…  இஷாக் சக்கரவர்த்தி அசராதவன்… விஷாக் சக்கரவர்த்தி இதுல யார் ஹீரோன்னு தானே யோசிக்குறீங்க… கதைக்குள்ள போக போக உங்களுக்கே தெரியும்… அத்தியாயம் 1 சிவகாமி இல்லம், காஞ்சிபுரம் சூரியன் தோன்றும் முன்னர் இருக்கும் மிக குளிரான அதிகாலை சமயம் அது.. சுற்றி எங்கும் தோட்டங்களும், தென்னை மரங்களும் குளு குளுவென பூத்துக் குளுங்க அந்த சிறிய வீடு அழகாக காட்சியளிக்கப்பட்டது… அந்த வீட்டின் பெரியவரான சிவகாமி விடியற்காலையிலேயே எழுந்து குளித்து ஹாலை ஒட்டியிருந்த பூஜை அறை முன்னர் அமர்ந்து கடவுளை வேண்டிக் கொண்டு இருந்தார்… “முருகா.. நான் எப்போயும் உன் கிட்ட வேண்டுறது எல்லாம் ஒன்னே ஒன்னு தான் ப்பா எம் பேத்திகளுக்கு நல்ல வாழ்க்கை அமையணும்” என மனதார வேண்டினார். “பிரியா எழுந்திரு, முத்து […] - [பிரியாதிரு 6](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-6/): பிரியாதிரு 6  “ஐ வான்ட் விக்னேஷ் டேடி”(I want Vignesh Daddy)” என்று அவள் சொல்லி இருக்க, முதலில் அபினவ் ஷர்மாவிற்கு அத்தனை ஆத்திரம்..  ஏனெனில் அவர் அளவுக்கு விக்னேஷ் பிறவி கோடீஸ்வரன் இல்லை என்பது வேறு விஷயம்! இப்போதும் கூட விக்னேஷ் ஊட்டியில் பெரிய பங்களா கட்டி இருக்கின்றான். கோயம்புத்தூரில் இருந்த தன்னுடைய லாக்கர் பிசினஸ் மற்றும் பயிற்சிக்  கூடத்தை மூடிவிட்டு ஊட்டியில் பல ஏக்கர் கணக்கு இடம் ஒருவரிடம் வாங்கி இங்கு பார்த்துக்கொள்கிறான்.  சோனியாவை தன் வீட்டை விட்டு தன் வாழ்க்கையை விட்டு துரத்திய கையோடு தான் தன் பிசினஸ் மொத்தத்தை அங்கே மூடிவிட்டு ஊட்டி சென்று விட்டான். அவளை அவ்வளவு நேசித்தான்.. இப்போது அவ்வளவு வெறுக்கிறான்! விக்னேஷ் பொதுவாகவே கறார் பேர்வழி தான்.. அபினவ் சர்மாவிடம் கூட அவன் ரொம்ப ஒட்ட மாட்டான்! தன் வேலையில் சரியாக இருப்பான். அதை தாண்டி அவரின் மீது அவனுக்கு நல்ல மரியாதை […] - [பிரியாதிரு 5](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-5/): பிரியாதிரு 5 “எனக்கு கிறுக்கு எல்லாம் பிடிக்கலங்க…  உண்மையை தான் சொல்றேன்! உங்க தங்கச்சி குடும்பம்றதுனால நீங்க சோனியாவுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க” என்றார் லதா. “நிறுத்து லதா.. எனக்கும் சோனியா மேல கோபம் இருக்கு. அந்த பொண்ணு இவனுக்காக சாகுற நிலைக்கு போயிருக்கு.. அந்த பொண்ணு இவனை பிரியா கூடாதுன்னு இருக்கற போது நம்ம எப்டி அதுக்கு வழுக்கட்டாயமா விவாகரத்து கொடுக்க முடியும்” என்றார் முருகன் ஆதங்கமாக. “ஏன் ப்பா.. அவ சொன்ன பொய். பித்தலாட்டம் எல்லாம் கோர்ட் ல சொன்ன விவாகரத்து கிடைக்காதா.. கண்டிப்பா கிடைக்கும்” என்றான் விக்னேஷ். “உன் தங்கச்சியோட வாழ்க்கையும் இதுல அடங்கி இருக்கு விக்னேஷ்” என முருகன் சோர்வாக இழுக்க, “நானும் அப்படி நினைச்சு பயந்தேன் தான்.. ஆனால் மாப்பிள்ளையே சோனியா பண்ண தப்புக்கு அவளை மன்னிக்காமல் தான் இருக்காரு, அப்போ எதுக்கு நம்ம அந்த பொண்ணுக்காக யோசிக்கணும்” என்று  ஆதங்கமாக கேட்டார். “எனக்கு அவ வேண்டாம் […] - [காதலா 5](https://anujeytamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be-5/): காதலா 5   யாழினி என்று வீட்டில் செல்லமாக அழைக்கப்படும் மதுரயாழினியும் சரண்யாவும் சிறிய வயதில் இருந்தே பள்ளித் தோழிகள்…    நான்காம் வகுப்பில் இருந்து ஒரே வகுப்பில் தான் படித்தார்கள்… அப்போதிருந்தே இருவரும் நெருங்கிய தோழிகள் தான்…    ஆனாலும் சரண்யாவின் வீட்டிற்கு வரும் பழக்கமெல்லாம் யாழினிக்கு இல்லை.    ஏனெனில் யாழினி வீடும், சரண்யா வீடும் திருமான்மியூரில் இருந்தாலும் யாழினி வசித்து வந்தது வசதி குறைந்தவர்கள் வாழும் இடம்… ஆனால் சரண்யாவோ மாளிகையில் வாழ்ந்து வந்தவள்.    அதனாலேயே யாழினியை சரண்யா வீட்டிற்கு அனுப்ப மாட்டார்கள்.    யாழினியின் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளை யாரிடமும் ஏச்சு பேச்சுகள் வாங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.    ஏனெனில் வெற்றியின் பள்ளியில் படிக்கும் நண்பன் ஒருவன் வசதியுள்ள பையன் தான்.அவன் வீட்டிற்கு சென்று வெற்றியின் உடையை கேலி பேசி அவன் வீட்டிற்கு வந்த அனுபவம் எல்லாம் இருக்கிறது. அதனால் யாழினியை அங்கு […] - [பிரியாதிரு 4](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-4/): பிரியாதிரு 4   பட்டுச் சேலையில் பார்க்க தேவதை பொல் ஜொலித்தாள் அமிர்தா… எந்த அழகில் ஆத்மன் மயங்கி விழுந்தானோ, இப்போது இத்தனை வருடங்கள் கழித்து வயதும் உடலும் முதிர்வு பெற்று தேவலோகத்து அழகியாவே அவனின் கண்களுக்கு விருந்தளித்தாள் அமிர்தா…    அவளை கண் இமைக்காமல் கண்களாலேயே காதலித்துக் கொண்டுருந்தான் ஆத்மன் ரெட்டி…    அவனின் பெற்றொர்களுக்குமே இப்போது தான் புரிந்தது… ‘கட்டுனா இவளை கட்டுவேன் டா’ என்பது போல் தீர்மானமாக ஆணித்தனமாக பெற்றோர்களிடம் சொல்லி இருந்தானே…    அவர்கள் ஊரில் இல்லாத அழகான பெண்களா என்று கூட பெற்றவர்களுக்கு தோன்றியது… ஆனால் பாந்தமான முகத்துடன் அமிர்தாவை கண்ட பின்னர் தான் அவர்களுக்குமே மகனின் காதல் அழுத்தம் புரிந்தது…    விருப்பமே இன்றி தலை குனிந்து நின்றிருந்தவளை கண்டவனோ அவளின் நாணம் என்றே நினைத்துக் கொண்டான்…    பின்னே தன்னை அவளால் நிராகரிக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்றே ஆணவனுக்கு […] - [காதலா 4](https://anujeytamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be-4/): காதலா 4   பால்கனியில் வந்து நின்ற யாழினிக்கு கண்ணீர் தான் வந்தது…    “என்ன மனுஷன் இவன்! ஹனிமூன் வேஸ்ட் ஆஃப் டைம்மாமே… அவனுக்கு என்ன அவனுக்கு வேண்டியது கிடைச்சிருச்சு… ச்ச” என்று கடுகடுத்துக் கொண்டவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர்.    அவளின் செல் ஒலிக்கும் சத்தம் கேட்க, அதை எடுத்து பார்த்தவளின் முகத்தில் அத்தனை கோபம்…    கால் செய்தது சுந்தர் தான்… அவள் ஃபோனை எடுக்கவேயில்லை…   “உன்னை மலைப்போல நம்பினேனே சீனியர்… இப்படி என்ன நம்ப வைச்சிட்டு கழுத்தை அறுத்துட்டியே!” என்று கண்ணீர் வடித்தவள், அவனை கோபத்தில் பிளாக் செய்துவிட்டு வேலைக்கு கிளம்பினாள்.   தன் ஸ்கூட்டியில் ரேடியோ ஷ்டேஷன் சென்றிருந்தாள் யாழினி. தனக்கு ஏற்கனவே நிச்சயமாகியிருந்த கல்யாணத்தை நிறுத்தி விட எண்ணியதால் தான் வேலைப் பார்க்கும் இடத்தில் அதை சொல்லாமல் மறைத்திருந்தாள் யாழினி.    இப்போது இந்த திடீர் திருமணத்தை பற்றி சொல்ல பிடிக்காமல், தாலியை […] - [காதலா 3](https://anujeytamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be-3/): காதலா 3   அந்த பெரிய பங்களா வீட்டில் இப்போது ஷ்யாம், பாட்டி, யாழினி மற்றும் வேலையாட்கள் மட்டுமே இருந்தார்கள்.    சரண்யாவிற்கு தனியாக ஒரு பீச் பங்களாவை ஷ்யாம் கல்யாணத்திற்காக பரிசலித்திருக்க, அதை வெற்றி ஸ்திரமாக மறுத்துவிட்டான்.    சரண்யாவும் தன் அண்ணனிடம் வேண்டாம் என்று கெஞ்சுதலாக மறுத்துவிட, அதன் பின் ஷ்யாமும் தங்கையை கட்டாயப்படுத்தவில்லை.    இதுவரை வெற்றியும், ஷ்யாமும் அவர்களுக்குள் தேவையைத் தாண்டி எதுவும் பேசிக் கொண்டதில்லை.    வெற்றி ஓரிரு முறை ஷ்யாமிடம் ஃபரண்லியாக பேச முனைந்தான் தான். ஆனால் ஷ்யாம் தான் பிடி கொடுக்கவே இல்லை.    சரண்யாவும் அமைதி குணம் கொண்டவள் தான்… ஆனால் யாழினியுடன் பழகி, பழகி அவளின் வைப்பிற்கு தகுந்தது போல் இவளும் விரும்பியே கலகலவென மாறிக் கொண்டாள். ஆனாலும் தன் அண்ணனிடம் மட்டும் அவள் அமைதி ரூபம் தான்.    பெற்றோர்கள் சென்ற பின்னும் யாழினி வாசலை விட்டு அசைந்த […] - [காதலா 2](https://anujeytamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be-2/):   தன்னுடைய BMW காரை பார்க் செய்து விட்டு வந்தவன் தனக்கு முதுகு காட்டி பீச்சை வெறித்துக் கொண்டிருந்த யாழினியை தொடாமல் ஆனால் நெருங்கியபடி, “ஹே யாழினி! ரொம்ப நேரமா எனக்காக காத்திருக்கியா” என்று அவளின் செவிமடலில் கிறக்கும் குரலில் அவன் தீண்ட,    அவனின் இந்த தீடீர் வருகையில் திடுக்கிட்டவளோ ஆணவனின் உஷ்ணமூச்சு தன் ஸ்பரிசத்தை தீண்டியதில் அவளின் உடலில் லேசான அதிர்வு…   அவளின் மனதில் பெரிய குற்ற உணர்வு…    அதற்கு மேல் அவளால் அங்கு நிற்க முடியவில்லை… தோழியின்றி அவனை எதிர்க்கொள்ள யாழினிக்கு தைரியமும் இல்லை.    அவனுடனான தனிமை அவளுக்கு பயத்தை தான் கொடுக்கிறது.    “சு…ந்தர் நான் கிளம்பணும். கொஞ்சம் தலைவலி” என்று அவள் அவனிடம் சங்கத்துடன் சொல்ல,    “என்னாச்சு யாழினி?” என்று அக்கறையுடன் அவன் கேட்க,    “கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரி ஆயிடும்… நான் கிளம்பவா” என்று கேட்டாள்.    […] - [பிரியாதிரு 3](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-3/): “என்னைப் பார்த்தா உங்களுக்கு பிராஸ்டிடீயூட் மாதிரி இருக்கா” என கோபம் கொப்பளிக்க கேட்டவளை தீயென முறைத்தவன்,    “நீ பாடுனதுக்கு பணம்..” என்றபடி அவளின் கையில் திணித்தவன், “என் கிட்ட எகுறணும்னு நீ உன்னை அசிங்கப்படுத்திக்காத” என்றான் இறுக்கமான குரலில்.    அவளுக்கு இருந்த ஆத்திரத்துக்கு இந்த செக்கும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம் என சென்றுருப்பாள்…    ஆனால் இது அவளின் திறமைக்காக கிடைத்த அங்கீகாரம் அல்லவா… கண்களில் கண்ணீருடன் அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவள் தளர்ந்த நடையுடன் வேளியேற, அவளை அவளுக்கே தெரியாமல் பின் தொடர்ந்த ஆத்மன் ரெட்டி அவள் ஹாஸ்டல் வரை சரியாக செல்கிறாளா என்பதை பார்த்துவிட்டு தான் திரும்பி சென்றான்…    ஹாஸ்டலுக்கு வந்தவள் குமுறி குமுறி அழ, அனன்யாவிடம் இருந்து கால் வந்தது…    “ரொம்ப பயமா இருக்கு அம்மு…” என மீண்டும் அனன்யா பதற, அமிர்தாவின் எண்ணவோட்டத்திலோ ஆத்மன் ரெட்டி..    ‘என் கிட்ட […] - [பிரியாதிரு 2](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-2/): “பிரபல கால்பந்து வீரர் விக்னேஷிற்கும் அவர் கேப்டனாக இருக்கும் ராயல் வின்னர்ஸ் டீமின் ஓனரான அபினவ் சர்மா மகள் ப்ரீத்தா சர்மாவிற்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக சர்ச்சைகள் வருகின்றது…”   “இது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல இருவரும் கைக்கோர்த்து மால்திவ்ஸில் தங்கள் விடுமுறையை கழிக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிறது”…    பிரபல செய்தி தொலைக்காட்சியில் இவ்வாறு ஓடிக்கொண்டிருப்பதை விழி அகலாமல் பார்த்துக் கொண்டு இருந்த சோனியாவின் கண்களிலோ பொழ பொழ வென கண்ணீர் சிந்திக் கொண்டு இருந்தது… ஏனெனில் அவள் கண்ட காட்சியோ அவளை உயிரோடு கொன்றது!   இதற்கு மேலும் அவளால் இந்த உலகத்தில் வாழ முடியும் என்று அவளுக்கு துளியும் தோன்றவில்லை..    தொலைக்காட்சியில் அவள் கண்ட காட்சி அத்தகையது.. விக்னேஷ் ஒரு பெண்ணின் இதழோடு இதழ் கோர்த்து இருப்பது போல காட்சி அது…   வாழ்க்கை என்பது ஒரு வட்டமாமே!    அது சோனியாவிற்கு தான் மிகவும் […] - [எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே!](https://anujeytamilnovels.com/%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80/): குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி இருக்கிறது… அவளின் தந்தையின் வீட்டில் தான் இப்போது இருந்தாள்… “உன் புருஷன் வீட்டுக்கு கிளம்பலயா ராதிகா.. அவர் இன்னிக்கு உன்னை வர சொன்னாரே…” என்றார் ராதிகாவின் சிற்றன்னை தேவி. “இன்னும் மூனு நாள் கழிச்சு கண்டிப்பா கிளம்பிடுறேன் சித்தி” என சமாளிக்கும் பொருட்டு இழுத்தாள். “இது என் பொறந்த வீடு ஏன் ஒரு நாள் அதிகமா நான் இங்க இருக்க கூடாதா” என கேட்க கூட மாட்டாள்… அவளின் மன பதற்றம் அப்படி எல்லாம் அவளை கேட்க விடுவதில்லை.. பிள்ளைக்கு பால் கொடுத்து இப்போது தான் உறங்க வைத்துருப்பாள்… அவளின் ஃபோன் சட்டென்று ஒலித்து கால் வருவதை அவளுக்கு உணர்த்த, அதனை கண்டவளுக்கோ உடல் எல்லாம் நடுங்க தொடங்கியது.. எப்போதும் போல் அழையாத விருந்தாளியாய் அவளின் மன பதற்றம் வந்தது… இதயம் எல்லாம் வேகமாக துடித்தது… காரணம் அவளுக்கு கால் செய்வது அவளது கணவன் டி […] - [பிரியாதிரு 1](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-1/): அனந்தகிரி ஹில்ஸ், ஹைதராபாத் அன்று காலை எப்போதும் போல் நேரத்திற்கே விழித்து இருந்தாள் அமிர்தா..  இரண்டாம் வருடம் எம்பிஏ வில் இருக்கிறாள்… இன்னும் மூன்று மாதத்தில் முடிந்துவிடும்…  ஏனோ மனம் சற்று வெறுமையாக இருந்தது…  அவளின் தோழி சாருபாலாவும் அமேரிக்காவில் இருக்க, அவளுடன் தன் பாட்டி லட்சுமியும் இருக்க, அனன்யா வேறு இப்போது சென்னையில் இருக்கிறாள்…  அனைவரிடமும் ஃபோனில் பேசலாம் தான்… ஆனால் நேரில் இருப்பது போன்ற உணர்வு வராது இல்லையா…  அதுவும் இப்போது வீட்டின் பொறுப்பை ஏற்று இருப்பது விஜய், அமிர்தாவின் பெரியப்பா மகன்…  இந்திரஜித்தின் மினி வெர்ஷன் தான் விஜய்… (இந்திரஜித் மற்றும் சாருபாலாவின் கதை இந்திரனின் ஊர்வசியே அதை படித்தால் அவர்களின் கதை புரியும்). உண்மையை சொல்ல வேண்டும் என்றால் விஜய் மீது இந்திரஜித்தின் அளவிற்கு அமிர்தாவிற்கும், அனன்யா விற்கும் பயம் இல்லை தான்… அதே சமயம் பிடிப்பும் இல்லை…  என்ன இருந்தாலும் இந்திரஜித் முதலில் இருந்தே தங்கைகள் […] - [காதலா 1](https://anujeytamilnovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be-1/): அத்தியாயம் 1   “ஹலோ சென்னை மக்களே! வெல்கம் டூ ‘Chill with யாழி’ வித் மீ யாழினி. நீங்க கேட்டுக்கிட்டு இருக்குறது ரேடியோ ****  இங்க பாட்டு சூப்பர் டூப்பர் மச்சி” என்று தான் பணிபுரியும் ரேடியோ ஸ்டேஷனில் தன்னுடைய காந்தக் குரலில் அன்றைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தாள் யாழினி.   அவளின் நிகழ்ச்சியை கேட்க சென்னையில் தனி வாசகர்கள் பட்டாளமே இருக்கிறது…    “இன்னிக்கு கிளைமேட் ரொம்ப ஜில்லுன்னு இருக்கு… இந்த டைம்ல என்ன சாப்பிட்டா நீங்க செமயா இருக்கும்ன்னு ஃபீல் பண்றீங்க… அத நீங்க மட்டுமே மனசுல வைச்சிக்காம என்னோட ஷேர் பண்ணுங்க….” என்று அவள் சொல்லி முடிக்க, முதல் காலர் லைனில் வந்தார்.   “ஹலோ RJ யாழினியா” என்று மறுமுனையில் உற்காசமாக ஒலித்தது ஒரு ஆணின் குரல்.    “ஆமா RJ யாழினி தான்… ஹாய் உங்க பெயர்? எங்க இருந்து பேசுறீங்க?” என்று […] - [பிரியாதிரு 39](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-39/): பிரியாதிரு 39   “உனக்கு பார்த்தா தெரியலையா என்ன!” என்றவனோ அவளைக் கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் அவளை அவனின் கைகளில் அள்ளியபடியே ஹோட்டலின் அறைக்குள் சென்றான்.    அங்கிருந்த கட்டிலில் அவளை விடுவித்தவன், சீக்கிரம் குளிச்சிட்டு ரெடி ஆகு.. நான் கொடுக்குற டிரெஸ்ஸை தான் நீ போடணும்.. அப்போ தான் எனக்கு செம மூட் வரும்” என்று அவன் கண்களில் மோகத்துடன் சொல்ல,    “நீங்க சாருபாலாவோட அண்ணனா இருந்துட்டு எப்படி இவ்வளவு லோவா பிஹேவ் பண்றீங்க” என ஆதங்கத்துடன் கேட்டாள் சோனியா.    சோனியாவால் இத்தகைய விக்னேஷை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..    “என்கிட்ட நீ என்ன பேசுனாலும் பதில் வராது.. தேவை இல்லாம இப்போ எனர்ஜிய வேஸ்ட் பண்ணாத! நைட் நிறைய ரௌண்ட் போகும் மயங்கி விழுந்துட போற.. அதனால பேசாம எனர்ஜிய சேவ் பண்ணு” என்றவனோ அவள் இருந்த அறைக் கதவை சாற்றிவிட்டு சில நொடிகளுள் ஒரு பையோடு திரும்பி […] - [அத்தியாயம் 41](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-41-2/):   கோதைக்கு அன்று நிறைய வேலை இருந்தது. அதுபோக திடீரென்று ஒரு பிரைட் புக்கிங் வேறு வந்தது. ரீதா வேறு ஒரு புக்கிங்கிற்கு சென்றுருந்தாள்.    அதனால் கோதையிடம் வந்த ஹரிஷ், “நாளைக்கு ஒரு பிரைட் புக்கிங் இருக்கு கொடைக்கானல்ல. ரீதாவுக்கு இங்கே புக்கிங் இருக்கு, அதனால நீ தான் கொடைக்கானல் கிளம்பணும்” என்று அதிகாரமாகச் கூறிவிட்டுச் சென்று விட்டான்.    கோதை வேலைக்குச் சேர்ந்த ஒரு வாரத்தில் இன்று தான் ஹரிஷ் அவளிடம் வந்து பேசுகிறான். “சார், கொடைக்கானலா, வேற யாரையாவது போகச் சொல்லுங்க. எனக்கு அவுட்டோர் புக்கிங் வேண்டாம் சார்” என்று பொறுமையாக மறுத்தாள்.   வாழ்க்கை அவளுக்கு கொடுத்த அடி அவளை அத்தனை முதிர்ச்சியாக்கி பொறுப்பானவளாக்கி இருந்தது…    “எனக்கும் உன்னை கூப்பிடணும்னு ஆசை இல்லை. ஆனா நீ மட்டும் தான் இருக்க, அன்ட் மோர் ஓவர் நீ இங்க சம்பளத்துக்கு வேலை பார்க்குற. நான் சொல்றதை நீ […] - [அத்தியாயம் 40](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-40-2/): வம்சி சிஇஓ என்பதால் அவனை முக்கால்வாசி பேர் நேரில் கண்டிருக்க வாய்ப்பில்லை. அவனுடைய அறைக்குச் செல்ல அவனுக்கு என்று தனி லிஃப்ட் இருக்கிறது. அதில் அவன் மட்டுமே செல்வதற்கு உரிமை. அதுவும் கட்டிடத்தின் பின்னே இருப்பதால் அவனை யாரும் பார்க்க முடியாது.   வம்சி நுழைந்தவுடன் எதேச்சையாக திரும்பிய அந்த டீமில் இருக்கும் விக்னேஷ், “சிஇஓ வா?” என்று வாயைப் பிளந்து டக்கென்று அவன் டீமில் இருக்கும் ரவியின் கையில் இருக்கும் ஃபோனை பிடுங்கி ஆஃப் செய்து விட்டான்.    வேண்டா வெறுப்பாய் ஆடிக்கொண்டிருந்த ராதை பாட்டு நின்ற உடனே நிம்மதி என்று ஆடுவதை நிறுத்தியவள் அனைவரும் ஏன் பேயறைந்த மாதிரி இருக்கிறார்கள் என்று பார்த்தாள்.    ஹாலின் கதவின் பக்கத்தில் நின்று கையைக் கட்டிக்கொண்டு அனைவரையும் ஒரு கேள்வி பார்வை பார்த்துக் கொண்டிருந்த வம்சியைக் கண்டு ராதைக்குத் தலையே சுற்றியது. அஜய்க்கு வேறு நடுங்க ஆரம்பித்தது.   “ஏன் பாட்டை நிறுத்திட்டீங்க?” […] - [அத்தியாயம் 39](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-39-2/): வம்சியின் காரில் ஏறிய ராதைக்கு சிந்தனை அனைத்துமே முதல் நாள் வேலை எப்படி இருக்குமோ என்கிற  நினைப்பு மட்டுமே இருந்தது. தன் பக்கத்தில் உட்கார்ந்து ஒருவன் இறுக்கமாக வந்து கொண்டிருக்கிறான் என்பதை அவள் கவனிக்க தவறிவிட்டாள்.    தன் ஜாக்குவார் காரை தனக்குரிய தனி பார்க்கிங்கில் விட்ட வம்சி, “இறங்கு” என்று மட்டும் ஒற்றை வார்த்தை கூறினான்.   அவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்பதை உணராதவள், அங்கு தாரிகா வந்து தன்னைப் பார்த்து மெலிதாக புன்னகைத்த போது தன் சுய உணர்வுக்கு வந்து மறு புன்னகை செய்தாள்.    “தாரிகா, நீ  ராதையை கூட்டிட்டு உள்ளே போ, நமக்கு இப்போ போயிட்டு இருக்குற நம்மளோட பெஸ்ட் ப்ராஜெக்ட் ஆன ‘அட்ரி’ல தான் ராதை டெவலப்பரா இருக்கணும்” என்றபடி தன் கூலர்ஸைப் போட்டுவிட்டு கர்வமாக காரை சாற்றியவன் ராதையைத் திரும்பிக் கூட பார்க்காமல் முன்னே சென்றுவிட்டான்.   ‘வீட்டுல அவர் பாட்டி கிட்ட […] - [பிரியாதிரு 38](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-38/): பிரியாதிரு 38   அன்று இரவு சோனியா எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை…    அன்றைய நாள் வேலையை முடித்து விட்டு கிளம்ப எத்தனித்த சோனியாவுக்கு விக்னேஷ் அவளை அவனின் அறைக்கு அழைத்ததாய் ஒரு செய்தி வர, பெண்ணவளுக்கோ மனபாரம் தான் கூடியது..   முந்தைய முறை அவன் ஃபோனில் பேசிய விஷயங்கள் எல்லாம் பெண்ணவளின் நினைவுகளுக்குள் எவ்வளவு தடுத்தும் வலுக்கட்டாயமாக நுழைந்திருக்க, அவனை சந்திக்கவே வேண்டாம் என மறுத்த இதயத்தை உடைக்கவே அவளுக்கு மீண்டும் விக்னேஷிடம் இருந்து அழைப்பு வர,    ‘இவன் வேணும்னே என்னைப் போட்டு இப்படி படுத்துறான்..’ என மனதில் அலறியவள் வேறு வழியின்றி அவனின் கேபினிற்குள் செல்ல,    “நான் கூப்பிட்டு எவ்வளவு நேரம் ஆச்சு” என தன் நாற்காலியில் சாய்வாக அமர்ந்தபடி கேட்டவனின் புருவம் உயர்ந்தது..    அவனை பார்க்கவும் அவளுக்கு முடியவில்லை அவனை பார்க்காமலும் அவளால் இருக்க முடியவில்லை…   […] - [பிரியாதிரு 37](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-37/): பிரியாதிரு 37   தன் அறையில் அமர்ந்துருந்த அமிர்தாவோ மன பாரத்தில் கண்களை மூடியபடி அமர்ந்துருக்க,    “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க அமிர்தா” என தீயாய் விழுந்தது ஆத்மனின் குரல்…    அவனின் கோபக் குரலில் திடுக்கிட்டவள் கண்களை சோர்வாக திறக்க, அவளை வேகமாக எழ வைத்து கைகளை இறுக்கியவன்,    “எதுக்கு டி அப்பா, அம்மா கிட்ட டைவர்ஸ் விஷயத்தை பத்தி பேசுன..” என அதட்டும் குரலில் கேட்டான்.    “எப்படி இருந்தாலும் அவங்களுக்கு தெரிய தானே வேணும்” என்றாள் வெறுமையாக.    “அவங்களுக்கு எப்போ தெரியணும்னு நான் தான் அதை டிசைட் பண்ணனும்.. நீ இல்ல” என எகிறியவனிடம்,    “எப்போ தெரியணும்… டைவர்ஸே கொடுக்காம நீங்க சிந்துஜாவோட குடும்பம் நடத்துறீங்களே… அவ உங்க குழந்தையை சுமந்த அப்புறம் எனக்கு டைவர்ஸ் கொடுப்பீங்களா!” என்று அவள் கேட்ட நொடி தரையில் சுருண்டு விழுந்துருந்தாள் அமிர்தா..    ஆம், […] - [அத்தியாயம் 38](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-37-3/): அடுத்த நாள் காலை வம்சி எழுந்திருக்கும் முன்னரே ராதை எழுந்து குளித்து விட்டு கீழேச் சென்றாள். வம்சியின் அம்மா என்ன பேசினாலும் அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விடவேண்டும் என முடிவெடுத்து சென்றாள்.    அங்கு காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உட்கார்ந்திருந்தனர் பெரியவர்கள். “என்னம்மா நேத்து பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சு?” என்று புன்முறுவலோடு கேட்டார் விஸ்வநாதன்.    “ஆ… நல்லா இருந்துச்சு தாத்தா” என்று மெலிதாய் புன்னகைத்த ராதைக்கு, காஃபி எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார் காந்திமதி பாட்டி.   வயதில் பெரியவர் தனக்கு எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பதா என்று மனதில் சங்கடம் எழுந்தாலும் தான் எப்படி இந்த வீட்டு கிச்சனில் நுழைவது என்ற அச்சத்துடன் இருந்தாள் ராதை.    “பாட்டி சாரி, எனக்கு கிச்சன்ல உள்ளே போக அனுமதி இருக்கானு கைட தெரியல. அதான் நான் காஃபி போடல. இல்லனா நானே போட்டிருப்பேன்” என்று வருந்தினாள். […] - [அத்தியாயம் 37](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-37-2/): அத்தியாயம் 37   பெங்களூர் செல்லும் வழியெல்லாம் ஒரே மழை. அந்த ஹைவேயில் வம்சியின் கார் சற்று வேகமாகவே சென்றுக்கொண்டு இருந்தது. அவன் மனதில் இருந்த இறுக்கம் அவன் முகத்திலும் தென்பட்டது.    அவர்கள் வீடு வந்து சேர மணி இரவு பத்து ஆனது. அவன் வரும் போதே அவனுக்காக அவன் அன்னை லட்சுமி காத்துக்கொண்டு இருந்தார்.   அவர்கள் வந்தவுடன் வம்சியை அமரச் சொல்லி சாப்பிடுமாறு அழைத்தார். “நான் ஃபிரஷ் ஆயிட்டு வரேன்” என்றவன் பின்னோடு ராதையும் சென்றாள்.    ‘இப்படியே எவ்வளவு நாள் இவ மகாராணி மாதிரி இருப்பா, நான் அவளுக்குச் சேவை செய்யணுமா?’ என்று குத்தலாக தன் மனதில் புலம்பிக் கொண்டார் அவர்.   வம்சி தன் அறைக்குச் சென்றதும் நேராக குளிக்கச் சென்றான். ராதைக்கும் சேலை கசகசப்பாக தான் இருந்தது. வம்சி குளித்து முடித்து வந்ததும் ராதை தன் சுடிதாரை எடுத்துக் கொண்டு உள்ளேச் செல்லும் போது, […] - [அத்தியாயம் 36](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-36-2/): அத்தியாயம் 36   “என்ன வீரப்பா, வீட்டை வாங்க ஆள் வராங்கனு சொன்ன இன்னும் ஒருத்தரையும் காணுமே?” என கவலையாகக் கேட்டார் விஜயகுமார்.    “சார் அவர் சொன்னா சொன்ன டைம்க்கு வந்திருவாரு. இதோ பாருங்க தம்பியோட கார் வந்திடுச்சு” என்று மரியாதை கொடுக்கும் விதமாய் எழுந்தார் வீரப்பா.    காரிலிருந்து கம்பீரமாக இறங்கியவனைக் கண்டதும் அதிர்ச்சியில் தானாக எழுந்தார் விஜயகுமார். ஏனெனில் அதிலிருந்து அப்படி கம்பீரமாக இறங்கியது வம்சி வேதந்த் கிருஷ்ணா.   “என்ன வீரப்பா இவனா வீடு வாங்கப் போறான்?” என்று கடுப்பாகக் கேட்டவரிடம், “சார் வம்சி தம்பியை முதல்ல இவன் அவன்னு மரியாதை இல்லாம பேசாதீங்க, அவரோட தகுதிக்கு இந்த வீடெல்லாம் ஒன்னுமே கிடையாது. ஏதோ உங்க நல்ல நேரம் அவர் இந்த வீட்டை வாங்குறார்” என்று வீரப்பா பெருமை அடித்துக் கொண்டிருக்கும் போதே அவர்களை நெருங்கிய வம்சி, “எல்லாம் ரெடியா வீரப்பா?” என்று அதிகாரத் த்தொனியில் கேட்டான். […] - [அத்தியாயம் 35](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35-2/): அத்தியாயம் 35   “அம்மா கொசு கடிக்குது என்னால இங்கே இருக்க முடியல” என்று அழுத மகளைப் பார்க்க பாவமாகவும் அதேசமயம் எரிச்சலாகவும் இருந்தது மைதிலிக்கு. இவளால் தானே இந்த நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள் என்று அவர் நினைக்கும் போதே அவருக்கு அவருடைய அண்ணன் சேதுராமனிடம் இருந்து கால் வந்தது.   “மைதிலி, கோதை! வம்சிக்கு கால் பண்ணாளாம் ம்மா, வம்சி அவளுக்கு எந்த உதவியும் செய்ய தயாரா இல்லை. அவக்கிட்ட பேசவும் விருப்பமில்லைனு சொல்லிட்டான். என்னால வம்சியை மீறி எந்த உதவியும் பண்ண முடியாது மா, என்னை மன்னிச்சுடு” என்று தயங்கியவரிடம்,    “அண்ணா, நீங்க ஏன் என்கிட்ட மன்னிப்பு கேட்கணும்? எங்களோட இந்த நிலைமைக்குக் காரணம் நாங்க தான். இதை நாங்க அனுபவிச்சு தான் ஆகணும். வம்சியோட கோபம் நியாயமானது.”   “ஆனால் அவன் என் பொண்ணு ராதையோட வாழ்க்கையையே சீரழிச்சுட்டான். இப்போ அவ எங்க இருக்கானு கூட எனக்கு […] - [அத்தியாயம் 34](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-3/): அத்தியாயம் 34   “பாட்டி, வம்சி அண்ணா ஏன் இப்படி பண்றாங்க? அந்தப் பெண்ணோட பாட்டி இன்னிக்கு இறந்து போய் இருக்காங்க… இதுல இன்னொரு விஷயம் இருக்கு கொஞ்ச நேரம் முன்னாடி கோதை கால் பண்ணினா, அவங்க வீட்டை அவங்க அப்பா விக்க போறாங்களாம்! வம்சி அண்ணாக்கு கால் பண்ணிட்டே இருந்தாளாம். ஆனா அண்ணா கால்லை எடுக்கவே இல்லயாம்” என்று யசோதா புலம்பி முடிக்க மறுபடியும் உள்ளே வந்தான் வம்சி.   “யசோ, இந்த கோதைக்கு என்ன பிரச்சனை சும்மா சும்மா எனக்கு கால் பண்ணிட்டே இருக்கா?” என்று கடுப்பானான் வம்சி.   “அண்ணா, அது வந்து… அவங்க வீட்டை விக்க போறாங்களாம். அதான் உன்கிட்ட ஏதாவது உதவி கேட்க கால் பண்ணாளாம்…” என்று யசோதா தயங்கி கொண்டிருக்கும் போதே,    “ஓ நினைச்சேன்… இந்த விஷயம் எதுவுமே ராதையோட காதுக்குப் போகக் கூடாது… அப்பா, அம்மாகிட்டயும் நீ இதைப்பத்தி இப்போவே சொல்லிடு. […] - [அத்தியாயம் 33](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-3/): அத்தியாயம் 33   வம்சி கூறியதைக் கேட்ட ராதை அழுதுக் கொண்டே பேசாமல் நின்றிருந்தாள்.    ஐந்து நிமிடங்கள் தன் இருக்கையில் அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், பின் பொறுமை இழந்து தன் சுழற்நாற்காலியை விட்டு எழுந்து தன் வேக நடையுடன் ராதையின் பக்கத்தில் சென்று, ஒரு நிமிடம் அவளின் கண்களைப் பார்த்தான்.    அதே சோகம், அதே அழுகையில் இருந்தவளை, தன் இரு கைகளில் ஏந்தி வேகமாக வெளியே நடந்தான். வம்சி இவ்வாறு செய்வான் என்று நினைக்காத ராதை, அவனின் இந்தச் திடீர் செய்கையில் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் பேச்சிழந்து நின்றாள்.    பின் சுயம் பெற்றவளாய், “சார் ப்ளீஸ் சார்… என்னை விட்டுடுங்க… நான் எங்கேயாவது போய்டுறேன்” என்று விடாதுஅழுதவளிடம்,    “இப்போ மட்டும் நீ உன் அழுகையை நிறுத்தாம அமைதியா வராம இருந்தா, என்னோட கோப முகத்தைத் தான் நீ பார்ப்ப” என்றபடி அவளை முறைத்தவன், அவளை தன் […] - [அத்தியாயம் 32](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-3/): அத்தியாயம் 32   பெங்களூர் சென்றுக் கொண்டுருக்கும் போதே தாரிகாவுக்கு கால் செய்த வம்சி, “தாரிகா, இன்னிக்கு இன்டர்வியூ ஸ்டார்ட் பண்ணு. பட் கோமகள் ராதையை மட்டும் கடைசியா தான் கூப்பிடணும். லெட் ஹேர் பீ த ஃபிஃப்ட்டியத் பெர்ஸன்” என்று காலை கட் செய்தவன், காரை ஓட்டியபடி தன்னுடைய அம்மாவுக்கு கால் செய்தான்.    “சொல்லு வேதந்த், நாங்க இப்போ பெங்களூர் வந்திட்டு இருக்கோம்” என்று பட்டும் படாமல் பேசினார்.   “ம்ம் நீங்கள் என்கிட்ட கோபப்பட்டா நஷ்டம் உங்களுக்குத் தான் அம்மா… என்னால உங்கக்கிட்ட பேசாம எவ்வளவு நாள் வேணும்னாலும் இருக்க முடியும். ஆனா உங்களால அப்படி இருக்க முடியாது. அதனால தேவை இல்லாம என்கிட்ட முகத்தைத் திருப்பாதீங்க…”   “இன்னிக்கு நைட் என்னோட ரூம்ல ஃபலவர்ஸ் டெக்கரேஷனோட ரெடி ஆகி இருக்கணும்… எதுக்குனு தெரிஞ்சிக்கோங்க ம்மா.. இன்னிக்கு நைட் நான் என்னோட பொண்டாட்டியோட வருவேன்” என்று அழுத்தமாகக் கூறியவன், […] - [அத்தியாயம் 31](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-3/): அத்தியாயம் 31   அனைவரும் இராஜேஸ்வரி பாட்டியை அடக்கம் செய்த பின் கிளம்ப ஆரம்பித்தனர். சில சொந்தங்கள், வம்சியின் குடும்பம் மற்றும் பிரகாஷின் குடும்பம் மட்டுமே அங்கு எஞ்சி இருந்தது.    “விஜயகுமார், ஏன் இப்படி அசையாமல் இருக்கீங்க? என்னை மன்னிச்சிருங்க… பிரகாஷ் என்னை மீறிட்டான். அவன் எங்களோட கைக்குள்ள அடங்கல. ராதை அவனுக்கு கிடைக்கலைனு பைத்தியம் மாதிரி நடந்துக்குட்டான். அவனால தான் இராஜேஸ்வரி அம்மா இறந்துட்டாங்க” என்று அழுதார் பிரகாஷின் தந்தை ஆறுமுகம்.    இதைக் கேட்ட வம்சிக்கு ஆத்திரம் வந்தது. பிரகாஷின் மேல் இல்லை கோதையின் மேல். ‘இவ செஞ்ச முட்டாள் தனத்துல ஒரு உயிரே போயிடுச்சு’ என்று மனதில் கடுகடுத்தவன் தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு, அமைதியாய் மற்றவர்கள் பேசுவதைக் கவனித்துக்கொண்டிருந்தான்.   ஆனால் எதற்குமே விஜயகுமார் அசையவில்லை. பிரகாஷின் அன்னை விஜயாவிற்கு ராதையைப் பிடிக்கவில்லை தான். ஆனால் தன் மகன் இப்படி பைத்தியம் போல் நடந்துக் கொள்வதை […] - [அத்தியாயம் 30](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-3/): அத்தியாயம் 30   “என்னடி, என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டோம்னு சந்தோஷமா இருக்கியா? கண்டிப்பா ஒரு நாள் என் கண்ணுல நீ படுவ அப்போ உன்னை…” என்ற வம்சியின் கம்பீரமான குரல் தன் காதில் விழுந்ததும் அந்த ராத்திரியில் அலறி அடித்துக் கொண்டு எழுந்தாள் ராதை.    அவள் கண்டது கனவு என்பதை உணரவே அவளுக்கு சில நொடிகள் எடுத்தது…    பக்கத்தில் இருக்கும் தண்ணீர் ஜாடியை எடுத்து பருகியவளின் உடல் வியர்த்தது. ‘என்ன இது, கனவுல அவனோட குரலைக் கேட்டாலே இப்படி வெடவெடக்குது. கடவுளே எனக்கு மன தைரியத்தைக் கொடு… அவனுக்கு தான் என்னை பிடிக்காதே, அப்போ என் கதை முடிஞ்சிடுச்சுனு நிம்மதியா தானே இருப்பான்’ என்று தன்னையே சமாளித்தவள் மீண்டும் படுத்துக் கொண்டாள்.   அடுத்த நாள் காலை ராதைக்கு இதமாக விடிந்தது. பெங்களூரின் குளிர் அவள் மனதிற்கு ஒரு விதமான இதத்தைக் கொடுத்தது. காலை ஐந்தரை மணிக்கு எழுந்த ராதை […] - [அத்தியாயம் 29](https://anujeytamilnovels.com/3558-2/): அத்தியாயம் 29   பேருந்து பெங்களூர் மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தை அடைந்தது. “ராதை வா இறங்கலாம். இங்க இருந்து நாம போக வேண்டிய இடம் கே பி அக்ரஹாரா. ஆட்டோ ஏறி போகலாம்” என்று ராதையை அழைத்துக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறினாள். அப்போது கூட ராதை தன் ஸ்டோலைக் கழட்டவில்லை.   கே பி அக்ரஹாரத்தில் ஒரு விடுதியில் நின்றது ஆட்டோ. பின் இருவரும் அந்த விடுதிக்குள் நுழைந்தனர். ஏற்கனவே தான் வருவதைப் பற்றி வார்டனுக்கு தெரிவித்து இருந்ததால் வார்டனைக் கண்ட பின்னர் வனிதா, ராதைக்கும் ஒரு அறை கேட்டாள்.   முதலில் மறுத்த வார்டன் பின்பு தெளிவாக, “இங்க பாரும்மா, இது வொர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல். இந்த பொண்ணு வனிதாக்கு வேலை இருக்கு அவ தங்குறா, ஆனா உனக்கு வேலை இல்லாம நான் எப்படி உன்னை தங்க வைக்குறது? இதெல்லாம் முடியாத காரியம், நீ இங்கே தங்க முடியாது” என்று உறுதியாகக் […] - [அத்தியாயம் 28](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-3/):   அத்தியாயம் 28   “லட்சுமி என்ன ஆச்சு? ஏன் இப்படி கத்திட்டு இருக்க… வீட்டுல எல்லாரும் தூங்குறாங்கனு தெரியும் தானே” என்று அழுத்தமாக சொல்லிக் கொண்டே வந்த சேதுராமன், ஷிவானி மற்றும் அவளின் தந்தை சிவக்குமார் அங்கு இருந்ததைப் பார்த்தார்.    ‘என்ன இந்நேரம் இவங்க வந்திருக்காங்க?’ என்று யோசித்தவரோ, அவர்களின் முகத்தில் இருந்த உணர்வுகளைக் கண்டு ஏதோ பிரச்சனை என்பதை புரிந்துக் கொண்டவர் அவர்களை அமரச் சொன்னார்.   “ஏங்க வேதந்த் ஏதோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்… அதை ஷிவானிக்கிட்ட சொல்லிருக்கான்” என்றபடி அழுதார் லட்சுமி.    அப்போது சரியாக உள்ளே வந்த வம்சி, “ஆமா, நான் கல்யாணம் பண்ணிட்டேன். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது அந்த அனாதை பொண்ணு கோமகள் ராதை… என்னை சீண்டுன அந்த ராதையை படுகுழியில் தள்ளத் தான் அவளுக்கு இந்தக் கல்யாணம்ன்ற நரகம்…”   “இந்த கல்யாண விஷயத்தை முதல்ல நான் ஷிவானி கிட்ட […] - [அத்தியாயம் 27](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-3/): அத்தியாயம் 27   வம்சி அனைவரின் முன் மிரட்டியதின் விளைவு, அவன் மேல் உள்ள பயத்தில் தன் தாலியின் மேலிருக்கும் கையைத் தானாக எடுத்தாள் ராதை.    “ராதை நீ அவனுக்குப் பயப்படாத… இந்தக் கல்யாணம் செல்லவே செல்லாது, நீ எனக்கு தான் மனைவியாக போற” என்றான் பிரகாஷ் விடாமல்.    ‘இவன் என்ன லூசா?’ என்று எண்ணிய வம்சி, “நீ ஒரு சுயநலவாதினு தான் நினைச்சேன். ஆனா இப்போ தான் தெரியுது நீ சரியான பைத்தியம்… என் பொண்டாட்டியை நீ எப்படி கல்யாணம் பண்ண முடியும்? அப்படி பண்ண நினைச்சாலே நீ உயிரோட இருக்க மாட்ட பிரகாஷ்” என கர்ஜித்த வம்சி,    “எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க… ராதை என்னோட பொண்டாட்டி! அவளுக்கு நாங்க இருக்கோம், இந்த கல்யாணம் செல்லாதுனு யாராவது சொன்னீங்கனா அவங்க கதையை முடிச்சுடுவேன். நான் செய்யமாட்டேன்னு மட்டும் யாரும் தப்புக் கணக்கு போடாதீங்க, நான் ஒன்னு சொன்னா […] - [அத்தியாயம் 26](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-2/): அத்தியாயம் 26   குளித்து முடித்து விட்டு பிரகாஷ் கொடுத்த அந்த சிவப்பு வண்ண காட்டன் சில்க்கை அணிந்து தலையை ஓபன் ஹேர் விட்டு தன் கண்களில் கண்மை இட்டவள் முதல் முறையாக தன்னைக் கண்ணாடியில் பார்த்தாள்.    தன்னை முதல் தடவையாக அழகாக உணர்ந்த ராதை தன் பெரியம்மா கொடுத்த மல்லிப்பூ வை தன் தலையில் சூடி, தன் பாட்டியிடம் சென்று தன்னைக் காட்டினாள்.   “பாட்டி நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன், என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்றபடி காலில் விழுந்தாள். தன் பேத்தியின் அழகைக் கண்ட பாட்டி அவளுக்கு திருஷ்டி சுத்திப் போட்டு மனதார வாழ்த்தினார்.   “உன் நல்ல மனசுக்கு ஏத்த மாதிரி உனக்கு நல்ல புருஷன் அமையப் போறான்மா, அதனால கடவுள்கிட்ட போய் உன்னோட நன்றியை சொல்லிட்டு வாம்மா” என்று சந்தோஷத்துடன் பேத்தியைக் கோவிலுக்கு வழி அனுப்பினார் ராஜேஷ்வரி பாட்டி. மைதிலி மற்றும் விஜயகுமார் ராதையை சேலையில் […] - [அத்தியாயம் 25](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-3/): அத்தியாயம் 25   பிரகாஷின் பெற்றோர்கள் ராதையை, பிரகாஷிற்கு மணக்க கேட்டு, நிச்சயத்திற்கு நாளையும் குறித்துக் கொண்டுச் சென்று விட்டனர்.    அவர்கள் சென்ற பின் வீடே ரணகளம் ஆனது. கோதை அன்றும் அனைத்து பொருட்களையும் போட்டு உடைத்தாள். அவளை எப்படி அடக்குவது என்றே யாருக்கும் தெரியவில்லை.    தான் ஆசைப்பட்ட பிரகாஷ், இப்போது ராதைக்குச் சொந்தம் ஆகப் போகிறான் என்பது அவள் மனதில் நெருப்பை உண்டாக்கியது.   இராஜேஸ்வரி பாட்டி ராதையிடம் அமர்ந்து, “நீ இதை எல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காத ராதைம்மா, நீ எடுத்த முடிவு தான் சரி” என்று அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்.   தன் பெரியம்மா, பெரியப்பாவிற்காகத் தான் இந்தக் கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்ட விஷயத்தைப் பாட்டியிடம் கூறாமல் இருந்த ராதை, பாட்டி சொல்வதையெல்லாம் கேட்டு அமைதியாக இருந்தாள்.   தன் அறைக்குள் சென்று கதவைச் சாற்றிய கோதை, ரொம்ப நேரமாக தன் நகங்களைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். […] - [அத்தியாயம் 24](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-4/): அத்தியாயம் 24   வீட்டிற்கு வரும் வரை அமைதியாக இருந்த கோதை, வீட்டிற்குள் வந்ததுமே அனைத்து பொருட்களையும் தூக்கி வீசினாள்.    “முதல்ல அந்த அனாதையை இந்த வீட்டை விட்டே வெளியே அனுப்புங்க… அவளால தான் என் வாழ்க்கையே போச்சு” என்று கத்தினாள்.    “கோதை! வாய மூடு, வம்சியோட சேர்ந்து எல்லா வேலைகளையும் பண்ணிட்டு, இப்போ ராதையைப் பத்திப் பேசுறதுக்கு உனக்கு தகுதி கிடையாது” என்று திட்டிய மைதிலியை முறைத்தாள் கோதை.    யாரும் தனக்கு இங்கே ஆறுதல் இல்லை என்று உணர்ந்த கோதை, தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.    ராதையோ தான் தேர்வான கம்பெனியின் ஆஃபர் லெட்டர் கிடைத்து விட்டால், இந்த வீட்டை விட்டு வெளியேச் சென்று விடலாம் என்று யோசித்தாள்.    இனி கோயம்புத்தூரில் இருந்தால் தனக்கு பிரச்சனைகள் அதிகம் என்று நினைத்து, வேறு ஒரு கம்பெனிக்கு விண்ணப்பம் கொடுத்துப் பார்க்கலாம் என்று முடிவு […] - [அத்தியாயம் 23](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-2/): அத்தியாயம் 23   வம்சி பிரகாஷைக் கீழே தள்ளி விட்டதில் அவன் நெற்றி கீழே பட்டு ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. அதில் அனைவரும் பதற, உடனே அவன் தந்தை ஆறுமுகம் முதலுதவி தருவதற்காக அவனை வேகமாக அழைத்துச் சென்றார்.    “ஏய் ராதை, உனக்கு இப்போ சந்தோஷமா? உன்னால என் பையன் இப்போ அடி வாங்கிட்டு நிக்குறான்” என்று அழுது கத்திய விஜயா மேலும், “என்னால இந்த அனாதை பெண்ணை எல்லாம் எனக்கு மருமகளாக ஏத்துக்க முடியாது. அதுக்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்” என்று தீர்மானமாகக் கூறினார்.   வம்சியின் குடும்பத்தில் அனைவரும் எதுவும் பேசாமல் தங்களுடைய காட்டேஜிற்கு நகர்ந்தார்கள்.    “டேய் விஜயகுமார், உன் பொண்ணு கோதையை ரொம்ப அருமையா வளர்த்துருக்க! எவ்வளவு கெட்ட புத்தி அவளுக்கு, இருபத்தி மூனு வயசுலயே எவ்வளவு நஞ்சோடு இருக்கா” என்று கத்திய இராஜேஸ்வரி பாட்டி, அங்கு வம்சியிடம் அடி வாங்கி சோர்ந்து […] - [பிரியாதிரு 36](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-36/): பிரியாதிரு 36   மாலை நான்கு மணி இருக்கும்…    எப்போதும் தங்களுடன் கலகலப்பாக பேசும் அமிர்தா இப்போது சில நாட்களாக அமைதியே உருவமாக இருப்பது தான் இப்போது ஆத்மனின் பெற்றோர்களின் கவலை…    ஆத்மன் வந்ததும் அவனிடம் பேசவேண்டும் என அவர்கள் முடிவெடுத்துருக்க, அவர்களின் எண்ணத்தின் நாயகனே வந்துவிட்டான்…    ஆம், அவனின் படமோ அமோக வெற்றி.. படம் வெளியாகி முழுதாக ஒரு வாரம் கூட ஆகவில்லை என்றாலும் கூட இதுவரை 650 கோடிகள் அபார வசூலை எடுத்து விட்டது…    அதிலும் அமிர்தாவின் குரலில் வந்த பாடலோ முன்பே வா பாடலை போல கிளாசிக் காதல் பாட்டாக எல்லா இசைத்தளங்களிலும் ட்ரென்டிங்கில் வந்துருக்கிறது…    தன் வீட்டிற்குள் நுழைந்த ஆத்மனை வரவேற்றார்கள் அவனின் பெற்றோர்கள்…    தன் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை எல்லாம் தன்னுடைய வேலையில் என்றுமே ஆத்மன் காட்டியதில்லை.. அப்படித் தான் கடைசி மூன்று நாட்கள் தன் மனதில் […] - [அத்தியாயம் 22](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-3/): அத்தியாயம் 22   இங்கு கோதையோ அவளுக்கான கேக்கை வெட்டத் தொடங்கினாள். பிரகாஷ், வனிதா மற்றும் இராஜேஸ்வரி பாட்டி மட்டும் இன்னும் ராதை வரவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அனைவரும் அவளுக்கு வாழ்த்து பாட்டு பாட, சந்தோஷத்துடன் கேக்கை வெட்டிக் கொண்டுருந்தாள் கோதை.  கேக்கை வெட்டி முடித்தப் பின் அனைவருக்கும் கேக்கை கொடுத்து விட்டு விஜயகுமார் பேச ஆரம்பித்தார்.    “இங்க வந்து பார்ட்டி சிறப்பாக நடைபெற உதவின அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னிக்கு என்னோட பொண்ணு கோதையோட இருபத்தி மூனாவது பிறந்தநாள்.”   “இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஏன்னா என் பொண்ணு ஆண்டாள் கோதைக்கும் என்னோட பிரண்ட் ஆறுமுகத்தோட மூத்த பையன் பிரகாஷ் சிவமாறனுக்கும் நாங்க கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்றோம்” என்று சந்தோஷமாகக் கூறினார்.   ஏற்கனவே ராதை இல்லாததில் கடுப்பான பிரகாஷ் அவளைத் தேடி அவள் இருக்கும் காட்டேஜிற்குச் சென்று பார்த்தான். ஆனால் தான் அவள் […] - [பிரியாதிரு 35](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-35/): பிரியாதிரு 35   ‘நான் டைவர்ஸ் கேட்கலன்னா ஆத்மனே என்கிட்ட ஒரு நாள் டைவர்ஸ் கேட்டு வாங்கிருப்பாரு.. நானே அவருக்கு ஈஸியா வேலையை முடிச்சு கொடுத்துட்டேன்’ என மனதில் வெறுமையாக சொன்னவளுக்கோ கண்களில் இருந்து சூடாக கண்ணீர் வந்து விடும் போல உணர்வு வர, பட்டென்று அவளின் அறை நோக்கி அவள் செல்ல,    “அமிர்தா” என அவசர சத்தத்துடன் அழைத்த ராஜேஷ் ரெட்டி, “நீ ஆத்மனை தப்பா எடுத்துக்காத ம்மா.. சிந்துஜா பண்ணின விஷயத்துக்கு அவன் பொறுப்பு இல்ல… இனி இந்த மாதிரி நடக்காம நாங்க பாத்துக்குறோம்” என உறுதியாக சொல்ல,    “அவர் விருப்பம் இல்லாம இது நடந்துருக்கும்னு நினைக்குறீங்களா மாமா இல்ல தெரிஞ்சே என்னை ஏமாத்த முயற்சி பண்றீங்களா!” என முகத்தை கூட அவர்கள் புறம் திருப்பாமல் அவள் கூறிவிட்டு சென்ற விதம் ஆத்மனின் பெற்றோர்களை கவலையில் கிடத்தியது…    படம் பெரிய லெவலில் ஹிட் ஆகும் என்கிற […] - [அத்தியாயம் 22](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-2/): அத்தியாயம் 22   இங்கு கோதையோ அவளுக்கான கேக்கை வெட்டத் தொடங்கினாள். பிரகாஷ், வனிதா மற்றும் இராஜேஸ்வரி பாட்டி மட்டும் இன்னும் ராதை வரவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அனைவரும் அவளுக்கு வாழ்த்து பாட்டு பாட, சந்தோஷத்துடன் கேக்கை வெட்டிக் கொண்டுருந்தாள் கோதை.  கேக்கை வெட்டி முடித்தப் பின் அனைவருக்கும் கேக்கை கொடுத்து விட்டு விஜயகுமார் பேச ஆரம்பித்தார்.    “இங்க வந்து பார்ட்டி சிறப்பாக நடைபெற உதவின அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னிக்கு என்னோட பொண்ணு கோதையோட இருபத்தி மூனாவது பிறந்தநாள்.”   “இன்னிக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஏன்னா என் பொண்ணு ஆண்டாள் கோதைக்கும் என்னோட பிரண்ட் ஆறுமுகத்தோட மூத்த பையன் பிரகாஷ் சிவமாறனுக்கும் நாங்க கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்றோம்” என்று சந்தோஷமாகக் கூறினார்.   ஏற்கனவே ராதை இல்லாததில் கடுப்பான பிரகாஷ் அவளைத் தேடி அவள் இருக்கும் காட்டேஜிற்குச் சென்று பார்த்தான். ஆனால் தான் அவள் […] - [அத்தியாயம் 21](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-3/): அத்தியாயம் 21   அன்று மாலை ஆறு மணிக்கு கோதையின் பிறந்தநாள் பார்ட்டிக்கு கேக், கூல்டிரிங்ஸ், ஸ்நாக்ஸ் மற்றும் இசைக் குழுவை ஏற்பாடு செய்திருந்தனர் அவளுடைய பெற்றோர்கள். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதில் அவர்கள் பிஸியாக இருந்தார்கள்.   தனக்கு அலங்காரம் செய்வதற்காகவே ஊட்டியில் இருக்கும் ஒரு பிரபல மேக்கப் ஆர்டிஸ்டை ஏற்பாடு செய்திருந்தார் கோதை. ஒரு நீல வண்ண சேலையை உடுத்தியவள், அலங்காரத்தில் பார்க்க கொழு கொழுவென பொம்மை போல அழகாக இருந்தாள். ஆனால் அவள் மனதில் பதற்றம் மட்டும் இருந்து கொண்டே இருந்தது. அவளுடைய இந்த பிளான் நடந்தால் மட்டும் தான் பிரகாஷை நெருங்க முடியும் என யோசித்தவள் ராதைக்கு போன் செய்தாள்.   தன் பெரியம்மா, பெரியப்பா கொடுத்த அழகிய பூ வேலைப்பாடு கொண்ட பிங்க் கலர் சல்வாரை அணிந்து அமர்ந்துருந்த ராதை ஒருவித பயத்துடனே இருந்தாள்.    கோதையின் அழைப்பு வந்ததும் அவசரமாக ஃபோனை எடுத்து, […] - [பிரியாதிரு 34](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-34/): பிரியாதிரு 34   இரவு நேர தென்றல் காற்று ஆத்மனை தீண்டினாலும் அவனின் மனதில் வெறுமை மட்டுமே சூழ்ந்து இருந்தது…    தென்றல் காற்றை அனுபவிக்கும் நிலையில் ஆணவன் இல்லை…    சற்று நேரம் அங்கு நடந்தவனோ அவனின் அறை நோக்கி செல்ல, “ஆத்மா.. அமிர்தா சாப்பிடாமலேயே தூங்கிட்டா” என்றார் கவிதா.    அதற்கு யோசனையாக தலையசைத்தவன், அவனின் அறைக்குள் செல்ல, அமிர்தாவோ அவள் அமர்ந்து இருந்த சோஃபாவிலேயே உறங்கி விட்டுருந்தாள்.    அவளை எழுப்ப மனமில்லாதவனோ, உறங்கும் அவளை குழந்தை போல தன் கைகளில் ஏந்தி அவளை கட்டிலில் படுக்க வைத்தான்…    அந்த அசைவில் விழித்த அமிர்தாவோ பட்டென்று விழித்து விட, “சாப்பிட்டு தூங்கு” என்றுவிட்டு கட்டிலில் படுக்க ஆயத்தமானான் ஆத்மன்.    “நான் சாப்பிட்டா உங்களுக்கு என்ன சாப்பிடாட்டி உங்களுக்கு என்ன!” என கோபம் கலந்த ஆதங்கத்துடன் கேட்டாள் அமிர்தா.    இப்போது ஆத்மனுக்கும் ஏறிக்கொள்ள, “ஃபுட் வேஸ்ட் […] - [அத்தியாயம் 20](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-3/): அத்தியாயம் 20   வம்சி உறங்கி எழுந்திருக்கும் போது மணி பன்னிரண்டு ஆகி இருந்தது. அவன் எழுந்திருக்கும் போதே அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் கோதை.    “க்ருஷ் மணி இப்போவே பன்னிரண்டு ஆயிடுச்சு, ஈவினிங் ஆறு மணிக்கு பார்ட்டி ஸ்டார்ட் ஆயிடும். சோ நம்ம சீக்கிரம் பிளான் பண்ணனும்” என்றாள் படபடப்பாக.    ‘ஐய்யோ இவ முழு பைத்தியமாவே ஆயிட்டா போல எந்நேரமும் கிரிமினல் மாதிரி யோசிச்சிட்டே இருக்காளே’ என்று மனதில் நினைத்தவனோ, “சொல்லு…” என்று சொல்லும் போதே அவனுடைய தாய், தந்தை மற்றும் தாத்தா, பாட்டி அவனைக் காண வந்தனர்.   “வம்சி டிராவல் எல்லாம் எப்படி இருந்துச்சு?” என்று கேட்டார் தந்தை சேதுராமன்.    “நாட் பேட் டாட்” என்றவன் தன் அன்னையைப் பார்த்து, “எனக்கு ஒரு காஃபி எடுத்துட்டு வாங்க ம்மா” என்று பிரஷ் செய்ய எழுந்தான்.    வம்சி பிரஷ் செய்து முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வரும் […] - [அத்தியாயம் 19](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-3/): அத்தியாயம் 19   அதிகாலை ஊட்டி காட்டேஜை வந்தடைந்த வம்சி முதலில் கண்டது என்னவோ சோகமாக காட்டேஜின் டெரேஸில் அமர்ந்து இருந்த கோதையைத் தான்.    “என்ன கல்யாணப் பொண்ணு, தூக்கம் கூட வராம உன் லவ்வரோட டிரீம்ஸ்ல இருக்கியா?” என வம்சி கேட்டதில் பட்டென நினைவுக்கு வந்த கோதை, “கிருஷ் வந்துட்டியா… உனக்காக தான் நான் தூங்காம காத்துக்கிட்டு இருந்தேன்” என்று அழத் தொடங்கினாள்.    “ஏய்! கோதை ரிலாக்ஸ்.. நான் தான் வந்துட்டேன்ல, நீ எனக்கு கால் பண்ணி அழுகுற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டவனிடம், நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள் கோதை.   “கோதை இங்கப் பாரு உனக்கு நான் ஒரு சஜஷன் சொல்றேன். எப்பவுமே உன்னை உயிரா நினைக்கிறவனை மட்டும் கல்யாணம் பண்ணு. அவனுக்கு தான் உன்னை பிடிக்கவே இல்லையே, அப்போ எதுக்கு அவனுக்காக இப்படி துடிக்கிற?” என்று சலிப்பாக கேட்டான் வம்சி.    […] - [பிரியாதிரு 33](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-33/): பிரியாதிரு 33   “என்ன சொல்றீங்க விக்னேஷ்.. விளையாடாதீங்க!” என்று சோனியா பதற,   “இனிமேல் தானே நான் விளையாடவே போறேன்! அதுக்கு முன்னாடியே இப்படி சொன்னா என்ன அர்த்தம் எக்ஸ் பொண்டாட்டி” என்று நக்கலாக சொன்னான் விக்னேஷ் கார்த்திக்.   “இப்போ எதுக்கு தேவ இல்லாம என் அண்ணாவ இழுக்குறீங்க.. அவருக்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சா!” என்று அவள் ஆவேசமாக பேசிக் கொண்டு இருக்கும் போதே,   “நிறுத்து டி” என அலட்சியமாக சொன்னவன், “உன் அண்ணனுக்கு ஒன்னும் தெரியாது அதை தெரியவும் நான் விட மாட்டேன்.. பட் உன் அண்ணனை பத்தி தான் இந்த விஷயமே! நீ மட்டும் டாப் மேனேஜ்மெண்ட் கிட்ட என்னை கம்ப்ளைண்ட் பண்ணி தான் பாரு.. உன் அண்ணன் என் தங்கச்சிய கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி அவன் மத்த பொண்ணுங்களோட இருந்த..” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, “ஸ்டாப் இட்” என்றபடி தன் காதுகளை […] - [பிரியாதிரு 32](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-32/): பிரியாதிரு 32   “நான் பண்ணின எல்லாமே தப்பு தான்! என் தப்பை உணர்ந்து நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டேனே…” என ஆதங்கத்துடன் கேட்டாள்.    “ஸ்டாப் இட் பிளடி பிட்ச்” என அந்த அறையே அதிரும் அளவுக்கு அவன் கத்த,    அவன் சொன்ன வார்த்தையில் வாயடைத்து விட்ட சோனியா, “மைன்ட் யுவர் டன்க்! பிட்ச் ன்னு இனி ஒரு தடவை நீங்க என்ன கூப்பிட்டா உங்களுக்கு மரியாதை கெட்டுடும்” என்றாள் ஆவேசமாக.    “உன்னை இப்படி கூப்பிட்டா உனக்கு வலிக்குதுல இதே மாதிரி தானே பாலாவை நீ தினமும் வார்த்தையாலே டார்ச்சர் பண்ண.. அவ எப்படி வலியில துடிச்சிருப்பா” என்றான் வேதனை கலந்த ஆவேசத்துடன்.    “நான் அண்ணியை டார்ச்சர் பண்ணேன் தான்.. இப்போ என்னோட எல்லா தப்பையும் நான் உணர்ந்துட்டேன்… அண்ணியே என்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டாங்க ஆனா நீங்க” என பட்டென்று நிறுத்தியவளை வெறுமையாக பார்த்தவனோ,    […] - [தீ 10](https://anujeytamilnovels.com/%e0%ae%a4%e0%af%80-10/): அத்தியாயம் 10   ‘ஐய்யோ இவனா!’ என நெஞ்சில் கைவைத்து பதறியவள் ஃபோனை பயத்துடன் எடுக்க,    “முதல் கால்லயே ஏன் ஃபோனை எடுக்கல” என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான் சர்வஜித்.    “அ… அது நான் எடுக்குறதுக்குள்ள கட் ஆயிடுச்சு ங்க” என திணறியபடி பதில் கொடுத்தாள்…    அவளின் குரலிலேயே அழுது இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன், “அழுதிருக்கியா!” என கேட்டான்…    அதற்கு அவளிடம் பதில் இல்லை… மௌனம் மட்டும் தான்!    “உன்னைத் தான் கேட்குறேன் அழுதியா… பொய் சொன்னா அதுக்கும் சேர்த்து உன்னை செய்வேன்” என அழுத்தமாக சொன்னான்…    “ஆ… ஆமா சார்!” என அவள் சொல்ல,    “சாகணும்னு தோணுதோ” என குதர்க்கமாக கேட்டான் சர்வஜித்…    இப்போது அவளிடம் திணறல் இல்லை…    “ஆமா சார் சாகணும்னு தான் தோணுது” என்றாள் வேகமாக…    “நீ சாக கூடாது ஆனா செத்துட்டே இருக்கணும் […] - [அத்தியாயம் 18](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-3/): அத்தியாயம் 18   “பிரகாஷ் என்ன சொல்ற… விளையாடாத?” என அவன் சொன்னதை நம்பாமல் கேட்டாள் கோதை.    கோதை பிரகாஷிடம்  பேசுவதைப் பார்த்து அந்த டீ குடித்துக்கொண்டுருந்த பெண்ணும் கோதையின் பக்கத்தில் வந்து நின்றாள்.    பிரகாஷ் இன்னும் தன் கையை விடாமல் இருக்க, ராதை அவனிடம் இருந்து விடுபட முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.    “இங்க பாரு கோதை, நீ எனக்கு ஒரு நல்ல ஃபிரண்ட் அவ்வளவு தான். ஆனா எனக்கு ராதை மேல இருக்குறது லவ்.. லவ் அட் ஃபர்ஸ்ட் சைட். நான் அவளைத் தான் கல்யாணம் பண்ணுவேன்… கண்டிப்பா பண்ணிப்பேன்” என்று தீர்மானமாகக் கூறினான் பிரகாஷ்.   அப்போது அந்த இடத்திற்கு வந்த வனிதா மற்றும் விஜய் தான் பிரகாஷை இழுத்து ராதையை விடுவித்தனர். ராதையோ அழுதுக்கொண்டே வேகமாக நடந்து காட்டேஜை நோக்கி சென்றாள். கோதையோ அதே இடத்தில் அசையாமல் நின்று அழுதுக் கொண்டிருந்தாள்.    “ஏய் […] - [பிரியாதிரு 31](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-31/): அத்தியாயம் 31   இரவு பத்து மணி ஆகி இருந்தது… நாளை காலையில் நான்கு மணிக்கே எழுந்திருக்க வேண்டும். அப்போது தான் ஃபுட்பால் ஈவண்ட் க்கு சென்று மீண்டும் கிரவுண்ட்டை சுத்தமாக தயார் செய்ய முடியும்… அதை செய்வதற்கு சோனியாவின் டீம் இருந்தாலும் சோனியா தானே மேற்பார்வை பார்க்க வேண்டும்….    ஆனால் பெண்ணவளுக்கோ தூக்கம் என்பதே எட்டாத கனி போல் ஆகி விட்டது… காரணம் அவன்.. அவன் ஒருவன் மட்டுமே… விக்னேஷ் கார்த்திக்!    கண்களை இறுக்க மூடி உறங்க முயற்சித்தாலும் காலையில் தன்னிடம் அவன் நடந்துக் கொண்ட விதமே ஞாபகத்திற்கு மீண்டும் மீண்டும் வந்து அவளின் மன நிம்மதியைக் குலைத்தது…    அன்று காலை…    சிங்கத்தின் குகைக்குள் பயந்து நுழையும் மான் போல மெல்ல தயங்கி அடியெடுத்து வைத்தவள் மூடப்பட்டுருந்த கதவைத் தட்ட, “எஸ் எம் இன்” என கம்பீரம் கலந்த திமிரோடு குரல் கொடுத்தான் விக்னேஷ் கார்த்திக்..  […] - [தீ 9](https://anujeytamilnovels.com/%e0%ae%a4%e0%af%80-9/): அத்தியாயம் 9   பரிமளா சிலையாக உறைந்து நிற்க…   ‘அவன் ஒன்னு சொன்னான்… இவ வேற மாதிரி இருக்கா’ என புரியாமல் விழித்த பிரியாவோ,    “நீ அங்க பெட்ல போய் படு… நம்ம பிரோசீஜரை ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்றவளோ, வெளியில் செல்ல, தன் கையில் இருந்த தனது செல்லில் காப்பர் டீ என்றால் என்ன, அது எப்படி இருக்கும் என்று எல்லாவற்றையும் வேகமாக ஆராயத் தொடங்கினாள் பரிமளா…    “ஜித்து உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என சர்வஜித்தை அழைத்த பிரியா,”எல்லாம் முடிஞ்சதா?” என்று கைகளை கட்டியபடி அசையாது நின்று கேட்டான் சர்வஜித்…    “அதைப் பத்தி தான் பேசணும்” என பிரியா இழுக்க,    “அதைப் பத்தி பேச ஒன்னும் இல்ல” என்றான் அழுத்தமாக…    “இங்கப் பாரு… அவ காப்பர் டீ ன்னா என்னனு கேட்குறா… வயசு இருபது தான் ஆகுது” என்று ஒரு மருத்துவராகவும், சக […] - [அத்தியாயம் 17](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-3/): அத்தியாயம் 17   “சரிடி, எப்படி இருந்தாலும் இந்த வருஷம் கோதை பேர்ட்டேக்கு அந்த கனடா குடும்பம் வரும். இது தெரிஞ்சது தானே, அப்போ எப்படி இருந்தாலும் நீ பார்த்துத் தானே ஆகணும். அதனால கவலைப்படாம தைரியமா ஃபேஸ் பண்ணு” என்றாள் வனிதா ஆறுதலாக.    “அது இல்லடி, இந்த நாலு வருஷம் அந்த குடும்பம் மொத்தமா வந்தது கிடையாது. நான் பர்த்டே போட்டோஸ் பார்த்துருக்கேன். அந்த தாத்தா, பாட்டி இல்லனா அந்த அங்கிள், ஆன்ட்டி தான் வருவாங்க. ஆனா இப்போ மொத்த குடும்பமே வரப்போகுதுனு பாட்டி சொன்னாங்க. அதான் கொஞ்சம் பயமா இருக்கு” என்றாள் ராதை.    “சரி விடு ராதை, நான் ஒன்னு சொல்லவா, பேசாம பிரகாஷ் அத்தானை நீ கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு என்னமோ அதான் பெட்டர்னு தோனுது” என்றாள் வனிதா யோசனையாக.   “நான் அவரை விரும்பலை டி, அதுவும் இல்லாம அவர் மேல கோதை அக்கா […] - [பிரியாதிரு 30](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-30/): பிரியாதிரு 30   சாருபாலா மற்றும் அனன்யாவிடம் பேசி வைத்த பின்னர் தான் அமிர்தாவிற்கு ஒரு நல்ல தெளிவு கிடைத்தது…    இப்போதும் கூட ஆத்மனிடம் தனக்கான உரிமையை கெஞ்ச அவளின் ஈகோ தடுத்தது…    மாறாக அவனின் மனதில் என்ன தான் உள்ளது என்பதை வெளியே கொண்டு வர வேண்டும் என முடிவெடுத்தாள்…    ஒருவேளை அவனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றால் அவனிடம் வாழ்க்கை பிச்சை கேட்க அவளுக்கு விருப்பமில்லை…    அவள் நினைத்தால் அவனின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கலாம்…    ஆனால் அப்படி கேட்க அவளுக்கு தான் முடியவில்லை.. ஏனெனில் அவள் பக்கமும் சில தவறுகள் இருக்கிறதே…    அன்று இரவு போல வீட்டிற்கு வந்தான் ஆத்மன் ரெட்டி.    அப்போது அமிர்தா கவிதா வுடன் நான் கிச்சனில் பேசிக்கொண்டு இருந்தாள்…    நாட்கள் கழித்து இன்று தான் அவனை வீட்டில் பார்க்கிறாள்… இன்று சிந்துஜாவுடன் வந்தான் தான் […] - [தீ 8](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-5/): அத்தியாயம் 8   அடுத்த இரண்டு நாட்களும் பரிமளாவின் கண்ணில் சர்வஜித் படவில்லை…   ‘ஒருவேளை கல்யாணம் பண்ணிக்க போறதுனால என்னை தண்ணி தெழிச்சு பிழைச்சுப் போன்னு விட்டுடுவானா!’ என நினைக்கும் போதே அவளின் மனம் நிம்மதி அடைந்தாலும் மனமெல்லாம் வெறுமை…    அவளுக்கான வாழ்க்கை என்று இனி எதுவும் இல்லை என்கிற ஆதங்கம்…    இத்தனை நாட்களாக அவளின் பெற்றோர் செய்த ஃபோன் கால்ஸ்ஸிற்கும், மெசேஜிற்கும் அவள் ஒரு முறை கூட செவி சாய்க்கவே இல்லையே!    தன்னை இந்த இடத்தில் தள்ளியவர்கள் மீது அத்தனை கோபம்… கடுப்பு மற்றும் எரிச்சல்!!!!    மூன்றாவது நாள் காலை ஐந்து மணி போல பரிமளாவிற்கு கொடுக்கப்பட்ட அறையின் கதவு வேகமாக தட்டப்பட, ஆழ்ந்த நித்திரையில் இருந்தவளோ சத்தம் கேட்டு பதறி அடித்துக் கொண்டு எழுந்தாள்…    விட்டால் கதவையே உடைத்து விடும் அளவிற்கு கதவு தட்டப்பட,    “ஒரு வேளை திருடனா!” என […] - [அத்தியாயம் 16](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-2/): அத்தியாயம் 16   ராதை நீண்ட நேரமாக ஏதோ யோசித்துக் கொண்டிருக்கும் போதே வனிதா அவளை உலுக்கினாள்.   “என்னனு சொல்லுடி, அப்போ தான் என்னால உன் பயத்துக்கு ஏதாவது தீர்வு சொல்ல முடியும்” என்றாள் வனிதா.    “சொல்றேன் டி…” என நீண்ட பெருமூச்சுவிட்டவள், “என்னுடைய சின்ன வயசுல நான் நிறைய பேசுவேன். என் பேச்சை எல்லாரும் ரசிப்பாங்க. சந்தோஷப்பட்டான் சிரிப்பாங்கனு கூட பாட்டி சொல்லுவாங்க…”   “எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து என் பெரியப்பா, பெரியம்மாவை நான் அப்பா, அம்மானு தான் கூப்பிட்டுட்டு இருந்தேன்…”   “அவங்க தான் என்னோட உண்மையான அப்பா, அம்மானு நினைச்சிட்டு தான் நான் பத்து வருஷம் வளர்ந்தேன்… என் பெரியப்பா, பெரியம்மா, பாட்டி எல்லாருமே என்கிட்ட நான் யாருன்ற உண்மையை மறைச்சி தான் வளர்த்தாங்க.”   “கோதை அக்காவும் என்னை சொந்த தங்கச்சினு தான் நினைச்சிட்டு இருந்தாங்க… எங்க பேர் கூட ரத்த […] - [தீ 7](https://anujeytamilnovels.com/%e0%ae%a4%e0%af%80-7/): அத்தியாயம் 7   பரிமளா கண் விழிக்கும் போது ஒரு மருத்துவமனையில் இருந்தாள்…   ஆம், பாத்ரூமில் வலுக்கி விழுந்ததில் அவளின் பெண் உருப்பில் இருந்து குருதியாய் வெளியே வந்தது அந்த புதிதாய் பூத்த சிசு…   பக்கத்தில் இருந்த கோமதி அம்மா தான் கரகரத்த கரலில் விளக்கினார்…   பிரெக்நென்சி கிட் கொடுத்தவர் ஆயிற்றே! அவருக்கும் மனது பதைபதைத்தது.. தாயைப் போல…   சர்வஜித்திற்கும் பரிமளாவிற்கும் கணவன் மனைவி உறவு இல்லை என அவருக்கு சொல்லாமலேயே புரிந்தது..   பெரிய இடத்து விடயம் அப்படித் தான் இருக்கும் என தான் உண்டு தன் வேலை உண்டு என அவர் இருந்தாலும், பரிமளாவை அவர் ரொம்பவே மதித்தார்…   பாத்ரூமில் குருதி ஓட சுருண்டு விழுந்தவள் கஷ்டப்பட்டு எழுந்து கதவைத் திறப்பதற்கும், அவளைத் தேடி வந்த சர்வஜித் அவளை பாத்ரூமில் இருந்து வந்ததைக் காணவும் சரியாக இருக்க, தன் காலில் கீழே ஓடும் […] - [பிரியாதிரு 29](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-29/): பிரியாதிரு 29    அமிர்தாவின் கதறல் அழுகையை கண்டு அனன்யாவும் சாருபாலாவும் அதிர்ந்து பேசாது இருந்தார்கள்..    அவர்கள் இதை அமிர்தாவிடம் எதிர்ப்பார்க்கவில்லை…   அவள் அழுது முடிக்கட்டும் என இருவரும் காத்திருக்க, அவளோ அழுவதை நிறுத்தும் எண்ணமே இன்றி விசும்பி விசும்பி அழுதாள்.    “அன்னு என்ன டி இவ அழுதுக்கிட்டே இருக்கா” என அனன்யாவிடம் சாருபாலா கவலையுடன் சொல்ல,    “அம்மு… அழாத டி” என்ற அனன்யாவிடம் கூற்று எல்லாம் அமிர்தாவின் காதுகளில் விழவில்லை…    “அம்மு ப்ளிஸ் டி” என சாருபாலா விடாது கெஞ்ச,    “என்னால முடியல பாலா.. மனசெல்லாம் வலிக்குது…” என கரகரத்த குரலில் சொன்னாள் அமிர்தா.    “இதுக்கு தான் நான் உன்கிட்ட முதல்லயே சொன்னேன்… ஆத்மன் உன்னை சுத்தி வராரு.. அவர் காதல் உண்மைன்னு எனக்கு தோணுச்சுனு.. அப்போ நீ எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரி போல சர்வாவை அவர் கூட கம்பேர் பண்ணி […] - [அத்தியாயம் 15](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-3/): அத்தியாயம் 15   இப்படியே ஒரு வாரம் சென்றது. அன்று கோதையின் இருபத்தி மூன்றாவது பிறந்தநாளை ஒட்டி அனைவரும் ஊட்டிக்கு கிளம்ப தயாராகினார்கள்.    விஜயகுமாரின் காரிலேயே அனைவரும் ஏறினர். அவருடையது எட்டு பேர் அமரும் வசதி கொண்ட கார் என்பதால் அவர்கள் குடும்பத்திற்கு அது சரியாக இருந்தது.   இங்கே பிரகாஷ் வீட்டில் அனைவரும் தயாராக தொடங்கினார்கள். வனிதாவும் அவள் குடும்பமும் காலையிலேயே விஜயா வீட்டிற்கு வந்தனர். பிரகாஷ் சிவமாறனை அழைத்த ஆறுமுகம், தாங்களும் ஊட்டி வருவதாய் விஜயகுமார் கண்டிப்பாக வர சொன்னதையும் கூறினார்.    தன் தந்தையும் விஜயகுமாரும் தொழில்துறை நண்பர்கள் என்று பிரகாஷ் சிவமாறனுக்குத் தெரியும், ஆனாலும் ஏதோ ஒன்று அவனுக்கு இடித்தது.    ‘எப்படி இருந்தாலும் நான் ராதையை கல்யாணம் செய்ய கேட்க இது தான் நல்ல வாய்ப்பு, அம்மா அப்பாவும் வராங்க. இதான் நல்ல சான்ஸ்’ என்று நினைத்தான் பிரகாஷ்.   பிரகாஷ் சிவமாறனின் வண்டியில் […] - [அத்தியாயம் 14](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-3/): அத்தியாயம் 14   பிரகாஷும் அதற்கு சரி என்று தான் கூறினான். அந்த சமயத்தில் ராதையின் வீட்டில் தன் காதலைப் பற்றி கூறிவிடலாம் என்று பிரகாஷும் முடிவெடுத்தான்.   அதே சமயம் பிரகாஷின் வீட்டில் விஜயகுமார், மைதிலி மற்றும் கோதை வந்துருந்தார்கள். வந்தவர்களோ பிரகாஷை தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக கேட்டிருக்க, பிரகாஷின் தந்தை ஆறுமுகமும் உடனே ஒப்புக்கொண்டார்.    ஏனெனில் அவர்கள் இருவரும் தொழில்துறை நண்பர்கள் தானே! அதுவும் இல்லாமல் விஜயகுமாரின் குடும்பத்தின் பின்னணியும் அவருக்கு தெரியும் அல்லவா!    “அப்புறம் விஜயகுமார் நீங்க எங்களுக்கு சம்மந்தி ஆகப் போறீங்க, ரொம்ப சந்தோஷம். ஆனாலும் இந்த விஷயத்தை பிரகாஷுக்குத் தெரியாமல் பண்றது தான் என் மனசுக்கு ஏதோ நெருடலாக இருக்கு” என்றார் ஆறுமுகம்.   “ஏங்க சும்மா இருங்க, பிரகாஷை எப்படி ஒத்துக்க வைக்கணும்னு எனக்கு தெரியும். கோதை தான் இந்த வீட்டு மருமகள்” என்றார் விஜயா புன்னகையுடன். அங்கு நின்றுக் கொண்டிருந்த […] - [தீ 6](https://anujeytamilnovels.com/%e0%ae%a4%e0%af%80-6/): அத்தியாயம் 6   ‘எது எப்படியோ சிக்கன் சமைக்குறதுல இருந்து நம்ம இன்னிக்கு எஸ்கேப் ஆயிட்டோம்…’ என நிம்மதி பெருமூச்சு விட்டவள், அடுப்பில் பால் சட்டியை வைத்து காய்ச்சாத பாலை ஊத்தி கொதிக்க வைத்தாள்…   அப்படியே அவளின் மனதும் அவனை நினைத்து கோபத்தில் கொதித்தது!    அதே கறுப்பு சட்டையில் தான் இருந்தாள்..’ ‘இதை முதல்ல மாத்தணும்’ என அடுப்பை அணைத்தவள், அவளுக்கான அறைக்கு சென்று தான் கொண்டு வந்த ஒரு சுடிதாரை எடுத்து அணிந்துக்கொண்டாள்…    அதன் பின்னர் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது… பால்லை காய்ச்சியவள் அவனுக்கு எடுத்துச் செல்ல மனதிற்குள் ஒரு பதற்றம்…    இந்த பதற்றம் மற்றும் படபடப்பு அவன் இப்படித் தான் என நன்கு அறிந்த பின்னரும் கூட ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும் அவளுக்கு தோன்றுகிறதே!    அவனின் அறைக் கதவை மெதுவாக திறந்துவிட்டு உள்ளே சென்றவளிடம், “திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழையுற […] - [அத்தியாயம் 13](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-4/): அத்தியாயம் 13   ராதையின் அறைக்குச் சென்ற கோதை, “ராதை வந்து… உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றாள் சற்று தடுமாற்றமாக.    “என்னக்கா சொல்லுங்க” என்றவளிடம், “நீ நாளைக்கு நம்ம கம்பெனியோட புது சிஇஓ ஆக போறல, அதனால பிரகாஷ் உன்கிட்ட அபிஷியலா பேசணும்னு சொன்னாரு” என்றாள்.    “என்னக்கா சொல்றீங்க? அவர் கிட்ட நான் எதுக்கு பேசணும்? அதுவும் மணி இப்போ நைட் பத்து ஆகப்போகுது” என்றாள் கடுப்பாக.    “ஏய் என்ன நீ ஓவரா பேசுற, பிரகாஷ் என்னுடைய புருஷன் ஆகப் போறவரு, உனக்கு அப்போ அத்தான் முறை… ஏதோ முக்கியமான வேலை இருக்கும் அதான் பேசணும்னு சொல்றாரு” என்று திமிராக ஆரம்பித்தவள், “ப்ளீஸ் ராதை பேசு” என்று கெஞ்சுதலோடு முடித்தாள்.   “ஓகே கா, உன் மொபைலில் போட்டு கொடு நான் பேசறேன்” என்றாள் ராதை.    “ராதை, என் மொபைல்ல நான் கால் போட்டு […] - [தீ 5](https://anujeytamilnovels.com/%e0%ae%a4%e0%af%80-5/): அத்தியாயம் 5   சரியாக மதியம் இரண்டு மணிக்கு வீட்டின் கதவை தட்டினான் சர்வஜித்…   கதவை தட்டியும் அது திறக்கப்படவில்லை…   ஏதோ தப்பு என உணர்ந்தவனோ, அந்த பெரிய வீட்டின் பின் பக்கம் இருக்கும் நுழைவு வாயிலின் கதவை நோக்கி சென்றான்…   அவனிடம் எப்போதுமே வீட்டின் சாவிகள் இருக்கும்…   அதனால் பின் வாசல் சாவியை வைத்து திறந்தவன் உள்ளே சென்று, “ஏய்!” என கர்ஜித்தபடியே செல்ல, அப்போதும் ஒரு பதிலும் இல்லை…    அவளுக்கான அறையிலும் அவள் இல்லை என கண்டவனுக்கு ஏதோ பெரிய பிரச்சனை என்று புரிய, அவன் நேராக சென்றது பாத்ரூமிற்கு தான்…    அவனின் யூகிப்பு சரியாக இருந்தது…    பாத்ரூமில் பரிமளா மயங்கி விழுந்திருந்தாள்… அதுவும் அவள் எடுத்த வாந்தியின் மீதே!    சிக்கனை சமைக்க முயன்று முயன்று, கொமட்டி கொமட்டி, வாந்தி வாந்தியாய் எடுத்து அதை சுத்தம் செய்து மறுபடியும் […] - [பிரியாதிரு 28](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-28/): பிரியாதிரு 28   அமிர்தாவிற்கு ஆத்மன் தன்னை கண்டுக்கொள்ளாமல் இருப்பதைக் கண்டு கண்களில் கண்ணீர் படர ஆரம்பித்தது…    “ஐ நீட் டூ கோ நானா” என தந்தையிடம் சொன்னவன் ஃபோன் பேசியபடியே வெளியே சென்றான்..   “ஆத்மா இரு..” என்றபடி அவனின் தோளை லேசாக உரசியபடி சிந்துஜாவும் செல்ல, அதைக் கண்ட அமிர்தாவிற்கோ அந்த கண்ணீரிற்கு நடுவிலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது…    அமிர்தாவின் பாட்டு இந்தியா முழுவதும் பட்டையைக் கிளப்பியது…    அனன்யா, சர்வா, சாருபாலா என அனைவரும் கால் செய்து அமிர்தாவிற்கு சந்தோஷத்துடன் வாழ்த்து சொல்ல, அனைவருக்கும் நன்றி சொன்ன அமிர்தாவிற்கோ மனதில் ஒரு வெறுமை…    “உனக்கு உலகத்துலேயே ரொம்ப பிடிச்ச விஷயம் இன்னிக்கு நடந்துருச்சுல அம்மு.. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என அனன்யா மற்றும் சாருபாலா கான்பரன்ஸ் கல்லில் சொல்ல,    “ஆமா இந்த ஒரு நாளுக்காக தான் அத்தனை வருஷம் ஏக்கத்தோட, கனவோட, எதிர்ப்பர்ப்போட […] - [அத்தியாயம் 12](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-3/): “நான் உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன், நீ அப்படியே பொம்மை மாதிரி நின்னுட்டு இருக்க?” என்று அவள் கண் முன்னே சொடக்கிட்டான் பிரகாஷ். அப்போது தான் அதிர்ச்சியில் இருந்து சுயநினைவிற்கே வந்தாள் ராதை.   “நீங்க நினைக்குற மாதிரியான பொண்ணு நான் கிடையாது. உங்களை என்னோட அக்கா கோதை உயிருக்கு உயிராக விரும்புறா… அதுவும் இல்லாம வனிதா உங்களை தான் கணவரா நினைச்சுட்டு இருக்கா” என்று சொல்லும் போதே அவளின் கன்னத்தில் அறைய கையை ஓங்கிய பிரகாஷ் சட்டென்று கையை இறக்கி,    “என்னை என்ன ஏலத்துல விக்குற பொருள்னு நினைச்சுட்டு இருக்கியா..? உன் இஷ்டத்துக்கு ஒருத்தி என்னை விரும்புறா, இன்னொருத்தி என்னை கல்யாணம் பண்ண நினைக்குறானு சொல்லிட்டு இருக்க, என் மனசுல நீ தான் இருக்க… நீ மட்டும் தான் இருக்க! உன் மனசுலயும் இனி நான் தான் இருக்கணும்! நான் மட்டும் தான் இருக்கணும்” என்றவனோ தன் காரை எடுத்துக்கொண்டு […] - [தீ 4](https://anujeytamilnovels.com/%e0%ae%a4%e0%af%80-4/): எப்படியோ ஒரு மணி நேரத்திற்குள் சமையலை அடித்து பிடித்து செய்து முடித்தாள்…    ஒரு மணி நேரமாக அவளுக்குள் எத்தனை பயம், படபடப்பு, பதற்றம் சூழ்ந்தது என அவளுக்கு மட்டுமே தெரியும்..    இன்னும் சொல்லப் போனால் பதற்றத்தில் அவளுக்கு இதயம் தடதடத்து, தலையெல்லாம் சுற்றியது…    ஆனாலும் அவனிடம் இன்று தண்டனை வாங்க அவளுக்கு இதற்கு மேல் உடலிலும் மனதிலும் தெம்பு இல்லை…    சாப்பாடு மேஜையில் அனைத்தையும் வேகமாக அடிக்கி வைத்தவள், நேரத்தை பார்த்து மூச்சு வாங்க அவனை அழைக்க சென்றாள்…    “ச…சார்… சாப்பாடு ரெடி” என தத்து தடுமாறி மூச்சு வாங்க அழைத்தாள்…    தன் லேப்டாப்பில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டுருந்தவனோ, பரிமளா அழைத்த நொடி தன் கைக் கடிகாரத்தை பார்க்க, அவன் சொன்ன ஒரு மணி நேரம் முடிய இன்னும் மூன்று நிமிடங்கள் இருந்தது…    “என்ன லட்சணத்துல சமைச்சு வைச்சிருக்கன்னு பார்க்குறேன்… சாப்பாடு […] - [தீ 3](https://anujeytamilnovels.com/%e0%ae%a4%e0%af%80-3/): அத்தியாயம் 3   பரிமளா வேகமாக உடைகளை அணிந்து வெளியே வர, “ஏய்! என்னோட பெத்ரூம் பாத்ரூமை கழவுற பொம்பளைங்க தகுதி கூட உனக்கு இல்ல! எவ்வளவு திமிர் இருந்தா இங்க குளிச்சிட்டு வந்திருப்ப” என கர்ஜித்தபடி எழுந்தவனோ பரிமளாவை நோக்கி வேக எட்டுக்கள் வைத்து வர, பரிமளாவிற்கு பயத்தில் இதயம் வேகமாக அடித்தது…   தன் அறையில் பிரத்யேகமாக இருக்கும் உயர்தர குப்பைத் தொட்டியை எடுத்தவன் பட்டென்று பரிமளாவின் மீது கொட்டி விட்டான்… இதைச் சற்றும் எதிர்பாராதவள் அதிர்ச்சியில் உறைநிலைக்கே சென்றுவிட்டாள்…    “இந்த மாதிரி அதிங்கபிரசங்கி வேலை பண்ணா உனக்கு இதை விட மோசமா தண்டனை கிடைக்கும்… போ! உனக்கு கொடுத்த ரூமுக்கு போய் குளிச்சிட்டு வா… இன்னும் பத்தே நிமிஷம் தான் உனக்கு டைம்… அதுக்கு அப்புறம் ஒரு செகண்ட் அதிகமானாலும் உன்னை வைச்சு செஞ்சிடுவேன்” என மிரட்டியவன், “யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நௌ” என சொல்ல, வேக […] - [அத்தியாயம் 11](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-3/): தன்னை சமாதானப்படுத்திய பாட்டியிடம், “குட் நைட்” சொல்லிவிட்டு வந்து படுத்தாள் ராதை. ‘பாட்டி சொன்னது போல  கடவுள் பாத்துப்பாரு’ என்கிற நம்பிக்கையோடு உறங்க சென்றாள் ராதை.   அங்கு வனிதாவோ வீட்டிற்கு வந்ததுமே தேடியது பிரகாஷ் சிவமாறனை தான். “ஏய் வனிதா, என்ன ஆச்சு உனக்கு?” என புரியாமல் கேட்டார் வனிதாவின் தாய்.    “ஒன்னும் இல்லம்மா, அத்தை எங்க?” எனக் கேட்டவளின் குரலைக் கேட்டு வெளியில் வந்த விஜயா, “வா வனிதா, எப்படி இருக்க?” என சந்தோஷத்துடன் விசாரித்தார்.    “அத்தை, பிரகாஷ் அத்தான் கிட்ட நான் பேசணும்” என்றவளிடம், “ஏன்டி என்ன ஆச்சு?” எனக் கேட்டார் விஜயா.   “அவர் என் ஃபோன் நம்பர் வாங்குனாரு, ஆனா அவர் இதுவரைக்கும் எனக்கு கால் பண்ணவே இல்ல. ஒரு தடவை கூட” என்று முடிக்கும் போதே அழ ஆரம்பித்தாள்.   “வனிதா அழாத, நீயும் படிப்பை முடிச்சிட்ட, பிரகாஷூக்கும் இப்போ இருபத்தி […] - [தீ 2](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-5/): அத்தியாயம் 2 அடுத்த பத்து நிமிடத்தில் பரிமளா இருந்த அறைக்கதவு தட்டப்பட, பயத்துடன் கதவைத் திறந்தாள் பரிமளா…  “ஐய்யா, உன்னை மேல வர சொன்னாரு தாயி… மாடி ஏறுனா வலது பக்கத்துல இருக்குற முதல் அறை” என சொல்லிவிட்டு கிளம்பினார் அந்த வீட்டு வேலையாள்.  மருட்சியுடன் தலையை ஆட்டிய பரிமளாவோ, சர்வஜித் காட்டிய பயத்திலேயே முகத்தை கழுவிவிட்டு அங்கிருந்த ஆடையான சேலையை எடுத்து அணிந்திருந்தாள்…  அது ஒரு விலை மலிவான சேலை..  அதை அவள் எடுத்து தன் கண் முன்னே விரித்து பார்க்கும் போதே, அறையின் மறுப்பக்கம் தெரிந்தது… அப்படி ஒரு கண்ணாடி போன்ற வகை! அதை அவள் உடுத்துவதற்கு உடுத்தாமலேயே இருக்கலாம்…  கெஞ்சினாலும் சரி கொஞ்சினாலும் சரி ஏன் காலைப் பிடித்து கதறினாலும் சரி அவன் தன் மேல் இரக்கம் காட்டப்போவதில்லை என உணர்ந்தவளோ, அந்த சேலையை பற்றி ஆராய்வதை விட்டு விட்டு அதை உடுத்திக் கொண்டாள்…  சிறிய வயதில் இருந்தே […] - [அத்தியாயம் 10](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-2/): இருவரும் அன்று மதியம் கோவைக்கு வந்தடைந்தார்கள். ராதையை அழைக்க, கோதை தன்னுடைய காரில் வந்திருந்தாள். வனிதாவை அழைக்க, பிரகாஷின் தம்பி விஜயேந்திரபூபதி வந்திருந்தான்.    ராதையைக் கண்ட கோதையோ அவளை இரண்டு வருடங்கள் கழித்து பார்த்த மகிழ்ச்சியில் சந்தோஷத்துடன் கட்டி அணைத்தாள். ராதையுமே தன் அக்காவுடன் பாசப் பிணைப்பில் இணைந்து அகம் மகிழ்ந்தாள். அதன் பின்னர் வனிதாவிடம் பிரியாவிடை பெற்று தன் அக்காவுடன் சென்றாள்.    “ஹலோ டாக்டர் எப்படி இருக்கீங்க?” எனற்படி விஜய்யிடம் விளையாடினாள் வனிதா.    “நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க? பார்த்தாலே தெரியுது ஒரு சுத்து பெருத்துப் போயிருக்க” என்றான் கிண்டலாக.   “ஏய் ரொம்ப வாய் பேசாத, வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று பேச்சை தொடர்ந்தாள் வனிதா. அப்படியே அவர்களுடைய வீடு வந்தது.   இங்கு பாட்டி, விஜயகுமார் மற்றும் மைதிலி ராதையை வரவேற்க வெளியில் காத்திருந்தார்கள்.    “வாங்க இன்ஜினியர் மேடம்… […] - [பிரியாதிரு 27](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-27/): பிரியாதிரு 27   அவசர அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார்கள் ராஜேஷ் ரெட்டியின் குடும்பம்… அமிர்தாவோ கதறி கதறி அழ, கவிதாவும் அப்படி அழுதார்…    ராஜேஷ் ரெட்டி துவண்டு விட, சுவாதியின் கண்களில் குளம் கட்டியது.    அஜய் க்கும் பதற்றம் அதிகமாகியது…    “ஆத்மன் சார் MRR ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்காரு” என ஒருவன் கால் செய்து சொல்லிவிட்டு உடனே கட் செய்துருக்க, அமிர்தாவோ ஸ்தம்பித்து உறைந்து விட்டாள்…    அந்நொடி அவள் அதிர்ச்சியில் மயங்கியும் விழுந்திருக்க, சுற்றி இருந்தவர்கள் அவளின் முகத்தில் நீர் ஊற்றி எழுப்பி அவளை எழச் செய்து, இதோ இப்போது மொத்த குடும்பமும் மருத்துவமனையில்…    “டேரக்டர் ஆத்மன் இங்க அட்மிட் ஆயிருக்காங்க எந்த வார்ட்” என ரிசெப்ஜனில் இருந்த பெண்ணிடம் ஓடி வந்து கேட்டது அமிர்தா தான்..    மயங்கி எழுந்ததில் இருந்து “நான் உடனே ஆத்மனைப் பாக்கணும்” என பைத்தியம் போல கத்திக் கொண்டு […] - [தீ 1](https://anujeytamilnovels.com/%e0%ae%a4%e0%af%80-1/): “மொத்தம் இருபத்தி ஓரு லட்சம்…” என தன்னுடைய நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்த சர்வஜித்தோ தன் பற்களை நரநரத்தபடி கர்ஜித்தான்…    “ச… சார்” என குரல் நடுங்க பரிமளா விசும்ப,    “நாளைக்குள்ள பணம் வட்டியோட வந்தாகணும்”  என்று அவளை பார்த்து கனல் தெறிக்க சொன்னான்.    “ச… சார் இப்போ ப.. பணம் கையில இல்ல” என சொல்லி முடிக்கும் போதே பெண்ணவளின் தொண்டை குழி வறண்டது…   “வாட்… பணம் கையில இல்லயா!” என புருவம் உயர்த்தி அவன் பார்த்த பார்வைக்கு எரிக்கும் சக்தி இருந்தால் அது கண்டிப்பாக பரிமளாவை எரித்திருக்கும்…    அதற்கு என்ன விடை சொல்வாள்… தலை குனிந்து தான் இருந்தாள்… கண்களில் கண்ணீர் மட்டும் விடாமல் சுரந்து கொண்டே இருந்தது   “நாளைக்குள்ள பணம் வரலன்னா… நீ என்கிட்ட வரணும்! இந்த இருபத்தி ஓரு லட்சம் வட்டியோட முடியற வரை உன்னை […] - [அத்தியாயம் 9](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-3/): “அத்தான் ரொம்ப சாரி, அவ கொஞ்சம் ரிசர்வ்டு டைப். அதனால இப்படி சொல்லிட்டு போயிட்டா, ஆனா ரொம்ப நல்ல பொண்ணு. என்னோட பெஸ்ட் பிரண்ட். நான் வினிதாகிட்ட பேசி உங்களுக்கு அவளோட நம்பர் வாங்கி கொடுக்குறேன்” என்றாள் வனிதா.    “இல்லை வனிதா, எனக்கு யாரோட நம்பரும் வேண்டாம்… சார்ட் ஒட்டிட்டாங்க, நீ டிரெயினல் ஏறி உட்காரு, நான் கிளம்பறேன்” என்றவனோ வேக நடையுடன் தன் காரை நோக்கி சென்று ஏறினான். அவனின் கோபத்தில் கார் வேகமாக சீறிப் பாய்ந்தது…    ஒரு இடத்தில் ஓரமாக தன் வண்டியை நிறுத்திய பிரகாஷ், ராதை தன்னை அவமானப்படுத்தியதை நினைத்து கடும் கோபத்தில் இருந்தான். இதுவரை மற்ற பெண்கள் தன்னை நாடி வந்துதான் பிரகாஷ் பார்த்திருக்கிறான். ஆனால் ராதையோ அவனை அவமதிப்பது போல் நடந்துக் கொண்டது அவனுக்கு எரிச்சலை உண்டாக்கியது.   “நீ என்னை எவ்வளவு ஒதுக்கினாலும் வெறுத்தாலும் இந்தப் பிறவியில உனக்கு கல்யாணம் நடந்தால், […] - [அத்தியாயம் 8](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-4/): “ஏய் ராதை, உன் மனசுல அப்படி என்ன தான் ஓடிட்டு இருக்கு, ஏன் நான் எப்போ பிரகாஷ் அத்தான் பத்தி பேசுனாலும் பேச்சை மாத்துற?” என ராதையிடம் ஃபோனில் பேசிக்கொண்டிருக்கும் போது கேட்டு விட்டாள் வனிதா.    “அப்படி எல்லாம் இல்லடி, அவரைப் பத்தி பேச எனக்கு எதுவும் இல்ல அன்ட் அவரைப் பத்தி நான் எதுக்கு டி பேசணும்.. அதான்” என முடித்தாள் ராதை.    “ஏன் ராதை, உன் அக்கா எப்போ எனக்கு போட்டிக்கு வந்தாளோ அப்போ இருந்து நீ இப்படி தான் அத்தானை பத்தி பேசினாலே பட்டும் படாம பேசுற, ஏன் உன் அக்காக்கு தான் பிரகாஷ் அத்தான் கிடைக்கணும்னு நீ நினைக்குறியா?” என கோபமாகக் கேட்டாள் வனிதா.   இதைக் கேட்ட ராதைக்கோ கோபம் வந்துவிட்டது. “இங்க பாரு வனிதா, நீயும் நானும் ஆல்மோஸ்ட் எட்டு வருஷமா ஃபிரண்ட்ஸா இருக்கோம்.”   “ஆனா நீ என்னை பத்தி […] - [அத்தியாயம் 7](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-2/): தன் பாட்டிக்கு மாத்திரை கொடுத்து விட்டு அவளுடைய அறைக்குச் சென்று விட்டாள் ராதை. அனைவரிடமும் விடைபெற்ற பிரகாஷ், ராதையை தான் தேடினான், அவள் அங்கு இல்லை என்பதை உணர்ந்தவன் ஏமாற்றம் அடைந்தான்.    வீட்டிற்கு வந்த பிரகாஷிற்கு ராதையின் நினைப்பாகவே இருந்தது. ‘எவ்வளவு அழகான கண்கள்… அவளோட பால் வண்ண முகம்… அந்த அழகுக்கு அழகு சேர்க்குறது போல அவளுடைய அடக்கம், பணிவு, அமைதி…’ என அவளைப் பற்றிய நினைப்பு அவனைத் தூங்க விடாமல் செய்தது.    ‘நான் ராதையை காதலிக்குறேன்! அவளை கண்டிப்பா என்னுடையவள் ஆக்குவேன்!’ என்று முடிவு செய்தவன், தன் காதல் விஷயம் முதலில் ராதைக்கு தெரிய வேண்டும் என்றே நினைத்தான்.    அடுத்த நாள் காலை பிரகாஷ் ராதையை பற்றிய விஷயங்களைச் சேகரிக்க ஒரு ஆளை நியமித்தான். வனிதாவின் தோழி என்ற வரை அவனுக்குத் தெரிந்து கொண்ட விஷயமே என்றாலும், ராதையின் அன்றாட வாழ்வியல், சென்னையில் கல்லூரியைத் தவிர […] - [அத்தியாயம் 6](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-3/): “மைதிலி, நீ கோதையை கொஞ்சம் கண்டிச்சு வெக்கணும். அவ எப்போ பார்த்தாலும் காரை எடுத்துட்டு சுத்திட்டு இருக்கா, இதெல்லாம் பார்க்க நல்லாவா இருக்கு?”    “அவளை மாதிரி தானே ராதையும்.இவ எவ்வளவு பொறுப்பா படிச்சிட்டு இருக்கா. கோதைக்கு படிப்பு தான் வரல, ஆனா ஒழுக்கம் அது ரொம்ப முக்கியம்! இன்னிக்கு உன் புருஷன் வந்ததும் அவளை கண்டிக்க சொல்லு” என்றார் இராஜேஸ்வரி.   வீட்டிற்கு வந்த கோதையிடம், “எங்க போய் சுத்திட்டு வர கோதை? உனக்கு வர வர திமிரு அதிகம் ஆயிடுச்சு, இப்போ எங்க போன?” என்று சற்று கோபமாக விசாரித்தார் மைதிலி.    “நான் பிரகாஷ் சிவமாறன் வீட்டிற்குப் போனேன், நான் அவரை காதலிக்கிறேன் மா! அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்று கோதை திமிராக கூறினாள்.    “படிச்சு உருப்பட முடியல, இருபது வயசுல காதல்னு என்கிட்டயே தைரியமா சொல்றியா?” என்று கோதையை அடிக்க கையை ஓங்கினார் மைதிலி. […] - [அத்தியாயம் 5](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-4/): ராதை வீட்டிற்கு வரும்போது கோதையும் வனிதாவும் கேரம்போர்ட் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.    ‘என்ன கோதை அக்கா, இன்னிக்கு அதிசயமா வனிதா கூட விளையாடிட்டு இருக்கா?’ என்கிற யோசனையோடு வனிதாவிற்கு, “ஹாய் வனி…” என்று சொன்னாள் ராதை.   வனிதாவோ, “ஹாய் டி.. ராதை நம்ம ப்ராஜெக்ட் வொர்க்குக்கு நீ என்னை இங்க வீட்டுக்கு வர சொன்னல, பேசாம நீ எங்க வீட்டுக்கு வாயேன்டி” என்றாள்.    “இல்லடி, நீ வேற உன் அத்தை வீட்டுல இப்போ இருக்கேன்னு சொன்னல, வேண்டாம் நீ இங்கயே வா அதான் எனக்கு ஈசியா இருக்கும்” என்றாள் ராதை.   அப்போது, “ராதை நான் ஒரு கேள்வி கேட்பேன், நீ அதுக்கு சரியா பதில் சொல்லணும்” என்றாள் கோதை.    தன் பாட்டிக்கு கவனமாக மருந்துகளை எடுத்துக் கொண்டே, “கேளுங்க கா” என்றாள்.    “நான் அழகா இருக்கேனா? இல்ல வனிதா அழகா இருக்காளா?” எனக் கேட்டாள்.  […] - [அத்தியாயம் 4](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-4/): விஜயா நினைத்தபடி தன் அண்ணன் மணிகண்டனிடம், “எனக்கு ஏதோ தனிமையா இருக்குற மாதிரி இருக்கு ண்ணா… பேசாம நீயும் அண்ணியும் இங்க வந்திருங்க, எனக்கு பேச்சு துணைக்கு அண்ணி இருப்பாங்கல” என்றவரோ தனிமையில் வாடுவது போல் நடித்தார்.    கோயம்புத்தூரில் ஒரு பிரைவேட் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்த மணிகண்டன் என்றும் பேராசை படமாட்டார். தன் தங்கையிடம் காசு, பணம் எதிர்பார்க்க மாட்டார். எனவே, முதலில் முடிவாக மறுத்தவர் தங்கை தொடர்ந்து அழுததால் மட்டுமே வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார். பின் விஜயாவுடன் அவர் அண்ணன் குடும்பமும் குடியேறினார்கள்.    ராதையும் வனிதாவும் விடுமுறைக்காக கோவை வந்தார்கள். ரயில் நிலையத்துக்குச் சென்று ராதையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார் விஜயகுமார்.    “அம்மு எப்படி இருக்க? ஏன் இப்படி மெலிஞ்சு போய்ட்ட?” என்று கவலைப்பட்டார் மைதிலி.    “அப்படி எல்லாம் இல்ல பெரியம்மா, நீங்க நல்லா இருக்கீங்களா?” என்று அவள் கேட்கும் போதே […] - [அத்தியாயம் 3](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-3/): சென்னையில் இருக்கும் அந்தப் பிரபலமான பொறியியல் கல்லூரியில் பிரகாஷ் சிவமாறனின்  கார் நின்றது. அவனை வரவேற்ற அந்த கல்லூரியின் மாணவர் சங்க தலைவர் வினித், அவனை அழைத்து விருந்தினர் அறையில் அமர வைத்து, அவனுக்கு பழச்சாறு வழங்கினான்.    அவன் வந்த விஷயம் தெரிந்ததும் அவனைப் பார்க்க வந்த அந்தக் கல்லூரியின் முதல்வர், “வாங்க மிஸ்டர் பிரகாஷ் சிவமாறன், நீங்க இங்க வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம். உங்களை மாதிரி யங் பிசினஸ் டைகூன் இங்க வந்து கலந்துக்கிட்டா, எங்க காலேஜ் மாணவர்களுக்கு பெரிய இன்ஸ்பிரேஷனா இருக்கும். ப்ளிஸ் வாங்க… நாம இப்போ ஆடிட்டோரியம் போகலாம்” என்றவரோ  பிரகாஷை அழைத்துச் சென்றார்.    அங்கு அரங்கமே பிரகாஷைக் கண்டபின் அதிர்ந்தது. “ஏய் ராதை, இவர் தான் என் அத்தை பையன். இவரைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்றாள் வனிதா சந்தோஷத்துடன்.    “வாவ் கங்கிராட்ஸ் டி” என்றவளோ அதன் பின்னர் அமைதியாக […] - [அத்தியாயம் 2](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-4/): அன்று கோதையின் இருபதாவது பிறந்தநாள். கோவையில் இருக்கும் பிரபலமான கலைக் கல்லூரியில் பி.காம் மூன்றாம் வருடம் படித்து வருகிறாள். அவளுடைய பிறந்தநாளுக்காக வீடே கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டது.    பார்க்க அழகாக இருக்கும் கோதை எப்போதும் தன்னுடைய அழகில் மெனக்கிடுவாள். இன்று அவளின் பிறந்தநாளுக்காகத் அவளின் தந்தை வாங்கிக் கொடுத்த வைர நெக்லஸை அணிந்து கண்ணாடியில் தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்தாள்.    “கோத! ஏய் கோதை… இந்தா ராதை வீடியோ கால் பண்ணிருக்கா” என்று வயது முதிர்ச்சி அடைந்த இராஜேஸ்வரி பாட்டி கொம்பை ஊன்றியபடி அவளிடம் வந்தார்.    “ஹாய் கோதை க்கா, ஹாப்பி பர்த்டே… எப்பயும் போல பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க க்கா… பெரியம்மா, பெரியப்பா எல்லாம் எப்படி இருக்காங்க? அப்புறம் இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?” என்று வரிசையாக கேட்டாள் ராதை.   “தாங்க் யூ ராதை, எல்லாரும் நல்லா இருக்கோம், நீ எப்படி இருக்க? ஒழுங்கா சாப்பிடுறியா? அப்புறம் […] - [அத்தியாயம் 1](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-4/): அத்தியாயம் 1   வான் எங்கும் கரு மேகங்கள் சூழ, இடியுடன் மின்னல் கூடும் அந்த வேலையில் கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில், யாரும் உதவிக்குக் கூட இல்லாமல் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் சரஸ்வதி.    “ஏன்மா, உன் புருஷன் பேரும் செல் நம்பரும் கொடுமா, அட்டென்டர் இல்லாம இங்க யாரும் இருக்கக்கூடாது” என்றாள் அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு செவிலியர் பெண்.    அப்போது கோயம்புத்தூரின் சூலூரில் இருக்கும் அந்தப் பிரபலமான துணி கம்பெனியின் முதலாளி இருக்கையில் அமர்ந்திருக்கும் விஜயகுமாருக்கு கால் வந்தது.    “ஹலோ விஜயகுமார் ஸ்பீக்கிங்!” என்று கம்பீரமாகக் கூறினான்  அவன்.   “ஹலோ சார், நான் AGK ஹாஸ்பிடல்ல இருந்து கால் பண்றேன். சரஸ்வதினு இங்க ஒருத்தங்க பிரசவ வலில அட்மிட் ஆயிருக்காங்க. அவங்களுக்கு அட்டென்டர்னு யாருமே இல்ல. உங்க நம்பர் கொடுத்தாங்க, கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார்” என்று மருத்துவமனையின் முகவரியைக் கொடுத்தாள் […] - [பிரியாதிரு 26](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-26/): அவனின் குரலில் இருந்த கம்பீரம் அவளுக்கு வசீகரம் தாண்டிய பயத்தைக் கொடுக்க அவனுக்கு பதில் கொடுக்க முடியாமல் விழித்தாள் சோனியா.    அவள் விழிப்பதை புருவம் உயர்த்தி பார்த்தவன், “இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கணு கேட்டேன்” என்றான் அதட்டலாக.    “தூ.. தூக்கம் வரல சார்” என திக்கித் திணறி சொன்னவளுக்கோ மனதில் ஒரு அழுத்தம்.. ஒருவேளை விக்னேஷ் தன்னை தவறாக நினைத்து விட்டானோ என அவளின் மனது குமுறியது..    அவளின் கண்களில் தெரிந்த சோர்வு, அழுத்தம் அவனுக்கு புரிந்தது.. அவள் மனதில் இது தான் ஓடுகிறது என்பதையும் கூட அவன் யூகித்தான்..    “நான் உன்ன தப்பா நினைக்கல சோனியா” என சொல்லத் துடித்த வார்த்தைகளை தன் கோபத்தால் கட்டுப்படுத்திக் கொண்டவன்,    “நீ பண்ணின காரியத்துக்கு எல்லாம் நான் நிறைய நாள் தூங்காம பேய் போல முழிச்ச உட்கார்ந்துருக்கேன்.. உனக்கு ஒரு நாளைக்கே வலிக்குதோ” என நக்கலாக […] - [பிரியாதிரு 25](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-25/): அமிர்தா கண் விழிக்கும் போது அவளுடன் இருந்தது கவிதா, ஸ்வாதி மற்றும் அஜய்   ஆம், தன் தங்கையைப் பார்க்க அஜய் வந்துருக்க, ஸ்வாதிக்கும் அதே ஆர்வம்…    அவர்கள் வரும் பொழுது இங்கே அமிர்தா இல்லை..    ராஜேஷ் ரெட்டிக்கு ஏற்கனவே காலையில் இருந்து ஏகப்பட்ட கால்கள்..    “ஆத்மன் ஏன் ஆடியோ லான்ச்சை ரெண்டு நாள் கழிச்சு தள்ளி வைச்சிருக்கார்” என வரிசையாக கால்கள் வந்தன.    ஒரு சில பத்திரிக்கைகளிலோ, “ஆத்மனுக்கும் சிந்துஜா வுக்கும் இருந்த ரகசிய தொடர்பில் விரிசல்.. அதனால் படத்தின் ஆடியோ விழா பின்னர் தேதிக்கு செல்கிறது” என வதந்திகள் வர ஆரம்பித்தது…    இத்தனைக்கும் சிந்துஜாவுக்கும் ஆத்மனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட விஷயத்தை அவர்கள் பத்திரிக்கையில் வெளியிடவில்லை…    ஆனாலும் சிலருக்கு விஷயம் கசிந்திருந்தது..  இந்த பிரச்சனையை ராஜேஷ் ரெட்டி சரிப்பார்த்து கொண்டுருக்க, ஆத்மனுக்கு அழைத்துப் பார்த்தார் கவிதா..    அவனோ அழைப்பை எடுத்தால் தானே…  […] - [பிரியாதிரு 24](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-24/): அவள் இதனை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை…    சட்டென தன்னிலை மீண்டவள் அந்த அறையை விட்டு ஓட எத்தனிக்க அவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்த ஜீவனோ,    “இப்படி உன்னை சுலபமா விட்டுறதுக்காக இத்தனை வருஷம் உன்னை அடைய வெறியா இருந்தேன்… சும்மா சொல்லக் கூடாது! உன் பாட்டை விட நீ ஆளு செமயா இருக்க. நீ சிங்கிங் காம்படீஷன்ல வின் பண்ணும் போதே உன்னை அடையணும்னு முடிவு பண்ணிட்டேன்…”   “அத் த சேம் டைம் உன் வாய்ஸ்ஸூம் ரொம்ப போதையா இருந்துச்சு.. அதனால உன்னை பாட வைச்ச அப்புறம் உன்னை எனக்கு பணிய வைக்கலாம்ன்னு நினைச்சா.. அப்போ வந்தான் அந்த ஆத்மன்…அந்த மியூசிக் டிரேக்டர் வைச்சு விஷயத்தை தெரிஞ்ச ஆத்மன்… என்னை மேலிடத்துல போட்டுக் கொடுத்து உன்னை அடைய விடாம பண்ணிட்டான்.. அதுக்கு மேல என் மேல கைய வைச்சு பெரிய தப்பு பண்ணிட்டான்…” என்றவனின் கரமோ ஆத்மன் […] - [பிரியாதிரு 23](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-23/): பிரியாதிரு 23   அங்கு நிறைய மெஹந்தி கோன்களை வைத்து தான் இருந்தாள் சோனியா.. அதை ஆள் வைத்து எடுத்து திருடிவிட்டு வேண்டும் என்றே பிரச்சனையை கிளப்புகிறாள் ப்ரீத்தா.    ஏற்கனவே சோனியா அங்கு இல்லாததால் குழப்பத்தில் இருந்த விக்னேஷ் இப்போது ப்ரீத்தா இப்படி கத்துகையில் எரிச்சலாக இருந்தது..    “மெஹந்தி கோன்க்கு ஏன் இப்படி சீன் கிரியேட் பண்ற ப்ரீத்தா.. இன்னிக்கு ஹால்டி ஃன்ஷன் தான் மெஹந்தி இல்ல” என கடுப்பான த்தொனியில் கேட்டான் விக்னேஷ்.    ‘என்ன திட்டுறதுக்காவது இப்போ பேசினாரே!’ என மனதில் குளிர்ந்தவள்,    “அது விக்கி..” என அவள் திணறிக்கொண்டு இருக்கும் போதே,    “மேடம் சோனியா அப்படி எல்லாம் விட்டு போக மாட்டாங்க… இந்தப் பொண்ணு கிட்ட அஞ்சு நிமிஷம் கடைய பாத்துக்க சொல்லிட்டு போனாங்க… இன்னும் காணும்” என்றான் பிரனவ்.    விக்கிக்கு ஏதோ தப்பாகப் பட்டது…    “அப்படி என்ன அவ […] - [பிரியாதிரு 22](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-22%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-22/): ஆத்மனின் அறைக்குள் வரவே அமிர்தாவிற்கு கடுப்பாக இருந்தது..   இதோ சர்வாவைப் பார்த்துவிட்டு வந்து விட்டாள்.    ராஜேஷ் மற்றும் கவிதா அமிர்தாவை எதுவும் கேட்கவில்லை…    யாரிடமும் எதுவும் பேசவில்லை அமிர்தா.. வந்ததில் இருந்து சாப்பிடவும் இல்லை…    மனமெங்கும் வெங்கட் மற்றும் சர்வா சொன்னது தான் அவளுக்கு நியாபகத்தில் வந்தது…    “அழாதீங்க அமிர்தா… உங்களுக்கு நல்ல வாய்ப்பு வந்துருக்கு! நாளைக்கு சாயந்தரம் மூனு மணிக்கு நான் சொல்ற ஸ்டுடியோக்கு வாங்க… தெலுங்கு, தமிழ் சினிமாலயே ஃபேமஸ் இயக்குனரான ஜீவன் சார் தான் உங்களுக்கு முதல்ல வாய்ப்பு கொடுத்தாரு. அதை தான் இந்த ஆத்மன் தட்டி பறிச்சான். இப்போ அவரே உங்களுக்கு மறுபடியும் வாய்ப்பு தர தயாரா இருக்காரு” என அவன் ஆர்வமாக சொல்ல, சற்று குழப்பத்துடன் விழித்தாள் அமிர்தா.    “என்ன யோசிக்குற அம்மு.. நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் போயிட்டு வந்திடலாம்” என்று அவன் உறுதியாக சொல்ல, […] - [பிரியாதிரு 21](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-21/): அமிர்தா இறங்கியது என்னவோ ஒரு உயர் தர உணவகத்தில் தான்..    அமிர்தா இறங்கி சென்றதுமே டிரைவருக்கு ராஜேஷ் ரெட்டியிடம் இருந்து கால் வந்தது..    “சார்” என்று அவன் சொல்ல,    “அமிர்தா இப்போ எங்கே இறங்குனா?” என யோசனையாக கேட்டார்.    “இங்க கோதாவரி ரெஸ்டாரென்ட்ல சார்” என்றான் பவ்வியமாக.    “அவ சேஃபா தானே இருக்கா… அவளை நல்லா பாத்துக்கோ” என்று வைத்து விட்டார்.    மருமகள் மீது அவருக்கு சந்தேகம் இல்லை.. அக்கறை மட்டுமே!    அங்கு ரெஸ்டாரென்ட்டில் சர்வாவுடன் ஒரு ஆடவன் அமர்ந்து இருந்தான்…    “சர்வா” என்றபடி அமிர்தா வர,    “உட்காரு அம்மு” என்றவனிடம்,    “அதுக்கு நேரம் இல்லை சர்வா.. ஆத்மன் என்ன பண்ணாரு!” என பதற்றமாக கேட்டாள்.    “அவன் பண்ணின அயோக்கியத்தை நீயே கேளு அம்மு” என்றவனோ, பக்கத்தில் அமர்ந்திருந்த ஆடவனிடம் திரும்பி,    “வெங்கட்.. இதான் அமிர்தா” […] - [பிரியாதிரு 20](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-20/): இத்தனை நேரம் ப்ரீத்தாவை கண்டுக் கொள்ளாத விக்னேஷ் சோனியா பார்ப்பதை உணர்ந்து வேண்டும் என்றே ப்ரீத்தாவிடம் புன்னகை முகமாய் பேசினான்.    ப்ரீத்தாவிற்கோ அத்தனை ஆனந்தம்.. இத்தனை நேரம் தன்னை கண்டுகொள்ளாத விக்னேஷ் இப்போது புன்னகை முகமாய் பேசுகிறான் அல்லவா!   இப்போதும் கூட சோனியா விக்னேஷை உயிருக்கு உயிராக காதலிக்கிறாள். விக்னேஷூம் அப்படி தானே அவளை காதலித்தான்.  சோனியா அவனுக்கு செய்த பொய்கள், பிழைகள் இதை எல்லாம் அவன் மன்னிக்க தயாராக இல்லை. அதிலும் தன் குழந்தை கலைந்த விஷயத்தில் அவன் எரிமாலையாய் பொங்கி விட்டான்.   அதில் உண்மையாக சோனியாவின் தவறு இல்லை தான்.  ஆனால் அதை புரிந்து கொள்ளும் நிலையில் விக்னேஷ் இல்லை.    சங்கீத் விழா கோலாகலமாக நடந்து முடிந்தது…    அன்றிரவு சோனியாவிற்கு கொடுக்கப்பட்ட அறையில் அவள் படுக்க முனைந்த போது ஏதோ பெண் சொனியா என்று பெயரை உச்சரிப்பது அவளின் காதில் விழ, தன் […] - [பிரியாதிரு 19](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-19/): அன்று இரவாகி இருந்தது..    ஆத்மனின் அறையில் அமர்ந்து இருந்த அமிர்தாவோ சற்று நேரம் முன்னர் தான் அவளின் அக்கா அனன்யாவிடம் பேசி வைத்தாள்.    கவிதா கொடுத்த உடையை தான் அணிந்து இருந்தாள்..    இரவு பத்து இருக்கும்… ஆத்மன் இன்னும் வந்தபாடில்லை.    ‘அவன் வருவானா மாட்டானா… எங்க போனான்!’ என்கிற யோசனையில் அவள் மனம் உழன்றுக் கொண்டு இருக்கும் போதே,    “அமிர்தா” என்றழைத்தபடி உள்ளே வந்தார் கவிதா.    “சொ.. சொல்லுங்க ஆன்ட்டி” என்றாள் தடுமாற்றத்துடன்.    “ஆத்மன் சிந்துஜாவோட மூவி டிஸ்கஷன்ல இருக்கான்… அவன் வர நேரம் ஆகும்.. நீ துங்கு” என்று சொல்லிவிட்டு அவர் செல்ல, அமிர்தாவிற்கு தான் மனது குபுகுபுவென எரிந்தது.    அவளுக்கு ஒருப்பொட்டு தூக்கம் வரவில்லை.    ‘அந்த சிந்துஜா அவருக்கு ரொம்ப நெருக்கமா இருக்கா… அவ அவ்வளவு நெருக்கம்ன்னா என்னையே ஏன் காதலிக்குறேன்னு சொல்லிட்டு திரிஞ்சாரு…’ என யோசித்து […] - [பிரியாதிரு 18](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-18/): தன்னை வெளியேற சொல்லி விக்னேஷின் வருங்கால மாமனார் வீட்டில் கேட்டதில் இருந்தே சோனியாவிற்கு மனது சரியில்லை.    ஒருவேளை விக்னேஷின் வேலை தானா இது என்று அவளுள் படர்ந்த கவலை அது!    அவனை மறந்து விட்டோம் என்று ஒரு மாயவலையை அவளே பின்னி இருக்க அவளின் இதழ் தீண்டி அப்படி ஒரு வலையே நீ பின்னவில்லை என்று நிருபித்த கையோடு அவளை வார்த்தைகளால் வதைத்து மனதளவில் சாகடிக்கிறான் அல்லவா!    இதோ இப்போது இந்நொடி கிளம்பி விட்டால் தான் என்ன என்று அவளுக்குத் தோன்றியது.   ப்ரீத்தாவின் தந்தை பிரனவ்விடம் சொன்ன விஷயம் சோனியாவை வந்ததையும் போதே, தான் சென்றுவிடுவது தான் சரி என்றே அவளுக்குத் தோன்றியது.ஏனெனில் விக்னேஷ் ப்ரீத்தாவுடன் ஜோடியாக இருப்பதைக் காண அவளுக்கு மனதில் திராணி இல்லை…   “உனக்கு கொடுத்த வேலையை முடிச்சிட்டு கிளம்பு சோனி..” என கால் செய்து அவளின் அண்ணன் இந்திரஜித் சொன்ன பின்னர் […] - [பிரியாதிரு 17](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-17/): “அமிர்தா.. உன் அண்ணி உன் கிட்ட பேசணுமாம்” என புன்னகைத்தபடி தன்னவளிடம் ஃபோனை கொடுத்தான் இந்திரஜித்.    “ஏய் அம்மு” என பாசமாக ஆரம்பித்த சாருபாலா அமிர்தாவின் திடீர் திருமணத்தைப் பற்றி கேட்கவில்லை…    அவளுக்கு அனன்யா மூலம் தெரிந்தது.. அமிர்தாவின் நலன் மட்டுமே அவளின் கருத்தில் பட, திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்று பொய் சொன்னாள் அமிர்தா.    ஆத்மனை யாரிடமும் அவளால் விட்டுக்கொடுக்க முடியவில்லை.. மஞ்சள் கயிறு மகிமை அவளுள் தொடங்கிவிட்டது போல..    சாருபாலா பேசி முடித்த வைத்த பின்னர் தன் கணவனின் ஃபோனை அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டுச் செல்ல, “ஓய்” என்றழைத்தான் இந்திரஜித்.    அதை காதில் வாங்கியும் வாங்காது போல் சென்ற மனைவியின் கைப்பிடித்த இந்திரஜித், “இன்னும் கோபம் போகலையா டி!” என ஏக்கமாக கேட்டான்.    “பின்னே என்கிட்ட அம்முக்கு கல்யாண விஷயத்தை நீங்க சொல்லாம அப்படியே மறைச்சிட்டீங்க.. அப்போ உங்களுக்கு நான் […] - [பிரியாதிரு 16](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-16/): சிந்துஜாவுடன் தொழில் ரீதியாக சந்திக்க இருவரும் ஒரு ரெஸ்டாரென்ட்டிற்கு வந்திருந்தார்கள்…    அவர்கள் எப்போதும் தொழில் ரீதியாக மூவியுடைய பட்ஜெட், எங்கே ஷூட்டிங், யார் நாயகன் நாயகி என்பதை எல்லாம் அங்கு சாப்பிட்டுக் கொண்டே அமர்ந்து பேசுவது வழக்கம் தான்…    அப்படி தான் இன்றும் அவன் வந்திருந்தான்.    “என்னை விட ஒன்னும் அந்த அமிர்தா அழகு இல்லையே ஆத்மன்” என ஆதங்கமாக கேட்டாள் சிந்துஜா.    அவள் சொன்னதைக் கேட்டு அவளை முறைத்தவனோ, “உனக்கு பொறாமை” என்று முறைத்தவனோ,   “உலக அழகியே வந்தாலும் என் மனசுக்கு பிடிச்ச ஒருத்தின்னா அது அமிர்தா மட்டும் தான்… இதை உன் கிட்ட முன்னாடியே சொல்லித் தான் நான் இந்த கல்யாணத்தை நிறுத்த சொன்னேன்” என அவர்களுக்கு முடிவான கல்யாணத்தைப் பற்றி சொன்னான் ஆத்மன் ரெட்டி.    ராஜேஷ் ரெட்டி ஆத்மனின் திருமணப் பேச்சை சிந்துஜாவுடன் ஆரம்பிக்க காரணம் சிந்துஜாவின் காதல்.    […] - [பிரியாதிரு 15](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-15/): சர்வாவின் நிலை இப்போது என்னவாக இருக்கும் என அமிர்தாவால் நன்றாகவே உணர முடிந்தது..    அதிலும் அவன் அழுது போட்ட வாய்ஸ் நோட்டை கேட்கவே அவளுக்கு மனம் தாளவில்லை.. அவனுக்காக ரொம்ப வருந்தினாள்.   உடனே அவனுக்கு கால் செய்தாள்.     “அம்மு” என கரகரத்த குரலில் சொன்னவன்,    “பேசாம விவாகரத்து அப்ளை பண்ணு அம்மு..” என்றான் அழுதபடியே.    “சர்வா எல்லாமே கை மீறிப் போச்சு.. இனி உனக்கான வாழ்க்கையை நீ பாரு” என சோர்வான குரலில் சொன்னவளிடம்,    “என்ன கை மீறிப் போச்சு.. எதுவும் கை மீறி போகல.. எப்படி உன்னை அவன் கல்யாணம் பண்ணின விஷயம் வெளியில தெரிஞ்சிது” என ரொம்ப நேரம் தனக்குள் ஓடிக்கொண்டுருந்த சந்தேகத்தைக் கேட்டான்.    ஏனெனில் ஆத்மன் மற்றும் அமிர்தாவின் திருமண செய்தி ஒரு செய்தி போல தான் வெளியில் வந்ததே தவிர அன்று ஹோட்டலில் அவளை அவதுறாக பேசியது […] - [பிரியாதிரு 14](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-14/): சோனியா சற்றும் எதிர்ப்பார்க்கும் முன்னர் அல்லவா விக்னேஷ் அவளின் இதழ்களை கொய்திருந்தான்..   தன் முழு பலம் கொண்டு அவனை தள்ளி விட கைகள் சென்ற சில நிமிடங்களிலேயே அவனின் முத்தத்திற்குள் மூழ்கி அவனுள் மூழ்கித் தான் போனாள் தன் மனக் கட்டுப்பாட்டையும் மீறி!    அவள் விக்னேஷின் மீது வைத்திருக்கும் காதல் தான் இன்னும் மாறாமல் நிலைத்து இருக்கிறதே…    அவளின் வெற்றிடையை தன்னோடு சேர்த்து இறுக்கியபடி நீண்ட நேரமாக இதழ் ஒற்றி விட்டு வேகமாக தள்ளிவிட்டபடி விடுவித்தவன், “இதுக்கு நானே நீ ஆசைப்பட்ட… என்னை மயக்கி உன் கூட படுக்க வைச்சு மறுபடியும் என்னை உன்னோட டிராப்ல இழுக்க பாக்குற… ரைட்” என கர்ஜித்தான் விக்னேஷ்.    சில நொடிகள் முன்பு அவளை ஆளுமையாக வன்மையாக தான் முத்தமிட்டான்… ஆனால் தன்னை இத்தனை இழிவாக நினைத்து முத்தமிட்டு இருப்பான் என அவள் கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்கவில்லை…   “விக்..னேஷ்..” என தடுமாறியவளின் […] - [பிரியாதிரு 13](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-13/): இந்தியா முழுவதுமே இன்று பிளாஷ் நியூஸ் இல் வந்தது என்னவோ ஆத்மன் ரெட்டி மற்றும் அமிர்தா தான்..   “பிரபல இந்திய இயக்குனர் ஆன ஆத்மன் ரெட்டிக்கும், அமிர்தா என்னும் பெண்ணிற்க்கும் ரகசியமாக திருமணம் நடந்து முடிந்து இருந்தது. இன்று இது தான் டாப் டிரெண்டடிங் நியூஸ்” என்று அனைத்து தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பாகிக் கொண்டு இருந்தது.    இதோ இந்த நொடி அமிர்தா ஆத்மனின் வீட்டில் தான் இருக்கிறாள். நேற்று அந்த பிரலயமே வந்திருக்க, அமிர்தா அவ்வளவு அழுது கதறிய பின்னர் பத்திரிக்கையாளர்களோ ஆத்மனின் கண் அசைவில் பயந்து விலகி விட்டார்கள்..    அதன் பின்னர் அமிர்தாவிற்கே என்ன செய்வதென்று தெரியவில்லை…    அனன்யாவிற்கு இனி பிரச்னை இல்லை தான்.. ஆனால் ஆத்மன் ரெட்டி இதே போல் பிரச்சனையை திருப்பி கொண்டு வர மாட்டான் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை தானே…    அதனால் அவளுக்கு அவனின் வீட்டிற்கு செல்வதைத் தாண்டி வேறு […] - [பிரியதிரு 12](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-12/): பிரியதிரு 12 “வேற யாரையாவது அனுப்புங்களே பிரமோத்…” என்று தயங்கி சொல்லியும் விட்டாள்..    “நோ சோனியா அப்படி வேலை எல்லாம் மாத்திக்க முடியாது.. இனி இந்த மாதிரி கேட்காதீங்க” என கறாராக சொல்லிவிட்டு செல்ல, சோனியாவின் கும் வேறு வழியில்லை…    ரெட் கலர் டிசைனர் சேலையில் பார்க்க தேவதை போல் மிளிர்ந்தாள் சோனியா… பின்னே அவள் தான் பேரழகி ஆயிற்றே…    வெகு தயக்கத்துடன் விக்னேஷூக்கு கொடுக்க வேண்டிய பானங்களை எடுத்துக் கொண்டு அவனின் அறை நோக்கி நடந்தாள்…    வந்த கூட்டத்தில் ப்ரீத்தாவின் குடும்பத்துக்கோ சோனியா வந்திருப்பது தெரியாது…    தெரிந்தாலும் அவர்களால் இந்திரஜித்தை மீறி என்ன செய்துவிட முடியும்…    ஆம், சோனியா ஒன்றும் வேண்டும் என்றே வரவில்லையே.. அவளின் நேரம் அவள் வேலைக்கு சேர்ந்த இடத்தில் இங்கு வந்து விட்டார்கள்…    தன் தங்கை மீது தப்பு இல்லாமல் அவளின் மீது கலங்கத்தை உண்டாக்க விட […] - [பிரியாதிரு 11](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-11/): சோனியா சைன் மட்டும் தானே போட்டு கொடுத்து இருக்கிறாள்… அது இன்னும் விவாகரத்து இல்லை என்றாலும் கூட விக்னேஷ் அபினவ் சர்மாவிற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறான்…  இதோ இன்று ஜெய்ப்பூர் கிளம்ப இருக்கிறான்… அவனின் திருமணத்திற்காக!  ஆம், வீம்பில் எடுத்த முடிவு இங்கு வந்து நிற்கிறது…  சோனியா பிரச்சனை செய்யட்டும் என்று விக்னேஷ் வேண்டும் என்றே ஒவ்வொரு முடிவும் எடுத்திருக்க, சோனியாவிடம் இருந்து தான் இங்கு ஒரு அரவமும் இல்லை..  முருகன் அதீத கோபத்தில் இருக்கிறார்… மகனிடம் பேசவில்லை..  லதாவிற்கு ஒருப்பக்கம் சந்தோஷம் என்றாலும் இன்னோரு பக்கம் ஏதோ மகன் அவசரப்படுகிறானோ என்கிற பயம்…  இதில் முருகனோ, “நீ மட்டும் இந்த கல்யாணத்துக்கு போனா என் பொண்டாட்டியே கிடையாது” என சொல்லியிருக்க, லதாவும் செல்லவில்லை…  இதோ ஜெய்ப்பூரிற்கு ஃபிளைட் ஏறி விட்டான்…  அபினவ் சர்மாவின் மகளுக்கும் பிரபல இந்திய கால்பந்து வீரர் விக்னேஷ் கார்த்திக்கிற்கும் திருமணம் என்று இந்தியா முழுவதும் பரவியது…  பெரிய […] - [பிரியாதிரு 10](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-10/): அமிர்தாவை எப்படி அடையலாம் என்று மனக்கணக்கில் திட்டம் போட ஆரம்பித்தான் ஆத்மன் ரெட்டி..  ஏனெனில் அவனுக்கு இந்திரஜித்தைப் பற்றித் தெரியும்… அவனின் பாதுகாப்பில் ஒரு பெரும் சிங்கத்தின் பாதுகாப்பில் இருக்கும் குட்டி பெண் சிங்கமாக அமிர்தா இருப்பாள் என்று ஆத்மனுக்குத் தெரியும்..  அவளை எப்படி சாமர்த்தியமாக அடையலாம் என்று அவன் திட்டம் இட்டுக்கொண்டு இருக்கும் போதே அவனின் எண்ணத்தின் நாயகியே முகத்தில் பயம் கலந்த சாயத்துடன் வெளியே வந்து ஒரு ஆட்டோவைப் பிடிக்க, காரினுள் இருந்த ஆத்மன் ரெட்டியை பாவம் அவள் கவனித்து இருக்கவில்லை.  ஆனால் தன் அறை பால்கனியில் இருந்து செல்லும் அமிர்தாவை கண்காணித்த இந்திரஜித்தோ ஆத்மன் ரெட்டியை அவனின் காரை வைத்தே கண்டு கொண்டான்…  ‘இவன் ஏன் இங்க வந்துருக்கான்!’ என புருவத்தை உயர்த்திய இந்திரஜித்தோ, ஒருவனுக்கு கால் செய்து,  “அமிர்தாவை ஃபாலோ பண்ணு… அவ ஏதாவது தப்பு பண்ண நினைச்சாலும் நீ நடக்க விட கூடாது.. அதை மீறி […] - [அத்தியாயம் 5](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-3/): “நீ கொஞ்சம் ஓவர் ரியாக்க்ஷன் தான் கொடுக்குற விஜி. அவங்க பெரிய பணக்காரங்க அதுவும் இல்லாமல் நம்ம ஆளுங்களாவது ஏதாவது புரளி பேசுவாங்க. ஆனால் ஜானின் தாத்தா விக்டரின் குடும்பம் ஜெம் மாதிரி. அவ்வளவு இங்கிதம் தெரிஞ்சவங்க. ஏன் நம்ம நிஷாவே வீட்டில் நம்ம சாமியை வெச்சு கும்பிடுறா. அப்போது அவங்க எவ்வளவு நல்லவங்கனு யோசிச்சுப்பாரு.”   “அக்கா மறந்துட்டீங்களா, விமலா அக்காவின் மரணத்திற்குக் காரணமே நிஷாவின் திடீர் காதல் திருமணம் தான்.”   “நான் ஒன்னும் மறக்கல. எனக்கு தெரிந்து விமலா அக்காக்கு அறிவு இல்லைனு தான் சொல்வேன். பெத்த மகள் முழுகாமல் இருக்கிறாள், அதைப் பார்க்கும் பாக்கியம் அவளுக்கு இல்லை… ஏன் இந்த காலத்தில் காதல் திருமணம் என்பது கொலை குற்றமா? இதுக்கு ஏன் இவ்வளவு ரியாக்ட் பண்ணனும்?” என்று வாதாடினார் சாலா.   இதற்கு மேல் பேசினால் அது மரியாதையாய் இருக்காது என்று தன் வாயை அடைத்துக் கொண்டார் […] - [அத்தியாயம் 4](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-3/): “உடுத்த தான் உடை வாங்கணும் நிஷா, புதுப்புது மாடல் வந்துக்கிட்டே தான் இருக்கும். நம்ம தகுதிக்கு ஏற்றாற் போல் தான் உடை வாங்க முடியும்” என்றார் விஜி மூஞ்சில் அடித்தார் போல.   ஷர்மிக்கு அழுகையே வருவது போல இருந்தது. என்ன தான் இந்த பதில் நிஷாவைத் தாக்கி இருந்தாலும், தான் இந்த இடத்திலும் ஏழை என்பதை மறைமுகமாய் உணர்கிறாள் ஷர்மி.   “வா விஜி…” என்று அப்போது வந்த பிரேமா ஆர்த்தியைப் பார்த்து, “ஏய் ஆர்த்தி, காரட் ஜூஸ் கேட்டுட்டு இங்க என்ன பண்ற? அங்கே விசாலாட்சி பெரியம்மா கிட்ட வாங்கிக்கோ.”   “சரிம்மா” என்று சமையலறைக்குள் ஓடிவிட்டாள் ஆர்த்தி.   “அப்புறம் பிரேமா, எதற்கு சாலா அக்கா வரச் சொன்னாங்க?” என்றார் விஜி.   “இரு இரு, முதலில் காஃபி குடி பொறுமையா பேசலாம்.”   ஷர்மி அங்கு போடப்பட்டிருந்த பெட்டில் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்தாள்.   “ஹாய் […] - [அனல் 10](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-10/): “யாரு அந்த கருப்பியா!” என அதிர்ந்து கேட்டார் சித்ரா.    “நம்ம வீட்டு வேலைக்காரி மாதிரி இருக்கா அவ” என சகுந்தலா தேவி அதட்ட,    “அப்படிப்பட்டவளை கட்டுனா மட்டும் தான் இஷாக் அத்தான் அவ பக்கம் சாயாம இருப்பாரு” என்றாள் விசித்திரா தந்திரமாக…    இருவருக்குமே விசித்திரா சொல்வது புரிந்துவிட்டது…    இதோ இப்போது மகன் மற்றும் மருமகள் முன்னே கம்பீரமாக நின்றவர்,    “விஷாக் தான் இந்த வீட்டுல மூனாவது பையன்… அங்கே பவித்ரா தான் சின்னப் பொண்ணு… அதனால பவித்ரா தான் அவனுக்கு பொருத்தம்… முத்துமாரி இஷாக்குக்கு தான் ஒத்து வரும்” என்றார் பட்டென்று.    “ஆனா அத்தை இஷாக் அந்தப் பொண்ணை” என சொல்ல முடியாமல் திணறினார் காயத்ரி.    மகன் அப்பெண்ணை வாட்டி வதைத்து விடுவானோ என்கிற பயம் அவருக்கு..    “நான் சொன்னா சொன்னது தான்… இந்தா பவித்ரா ஃபோட்டோவை விஷாக்குக்கு காட்டு” என்றார் […] - [பிரியாதிரு 9](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-9/): “அது தானே உனக்கு வேணும்… நீ ஏன் டி பேய் அடிச்ச மாதிரி இருக்க.. உன் கண்ணுல தண்ணீ வருது!” என்று புரியாமல் கேட்டாள்  அனன்யா.  “அவன் கத்துனதுல கண்ணுக்குள்ள இருந்த ஸ்டாக் படார்ன்னு வெளியே வந்திருச்சு டி” என பதறி சொன்னவள்,  “எப்படியோ அவனை உசுப்பேத்தி கல்யாணத்தை நிறுத்தியாச்சு.. இப்போ தான் நிம்மதியா இருக்கு” என்று அமர்ந்து சாய்ந்தாள் அமிர்தா.  “என்ன.. காதல் மன்னன் கல்யாணத்தை நிறுத்திட்டாரா” என நம்ப முடியாமல் வாயைப் பிளந்து கேட்டாள் அனன்யா.  “ஆமா.. இனி எப்படி வருவான்? அதான் கத்திட்டு கட் பண்ணிட்டு போயிட்டான்.. அப்புறம் ஃபோனும் வரல” என நிம்மதி பெருமூச்சுடன் சொன்னவளுக்கு தெரியவில்லை ஆத்மனைப் பற்றி அவனின் அதீத காதலைப் பற்றி!  “எனக்கு அப்படி தோணலயே” என அனன்யா முனுமுனுக்க,  “என்ன!” என்று புரியாது கேட்டாள் அமிர்தா.  “ஒன்னும் இல்ல டி” என அனன்யா சமாளித்துவிட்டாள்.  கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆத்மனிடம் இருந்து […] - [பிரியாதிரு 8](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-8/): இரண்டு வருடங்களுக்கு முன்னர்..  திருமண தேதி நெருங்கிக் கொண்டே இருக்க, என்ன சொன்னாலும் ஆத்மன் ரெட்டி திருமணத்தை நிறுத்தும் அறிகுறியே காட்டவில்லை…  “இன்னிக்கு எப்படியாவது அந்த ஆத்மன் ரெட்டி கிட்ட பேசி எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தறேன் பாரு” என அனன்யாவிடம் வீராப்பாக பேசிய அமிர்தா ஃபோனை பார்க்க, அதுவே அணைக்கப்பட்டு இருந்தது..  “ஏன் அன்னு.. உன் ஃபோன் கொடு டி.. என் ஃபோன்ல சார்ஜ் இல்ல” என சலிப்பாக ஃபோனை கேட்டாள் அமிர்தா.  “என்கிட்ட ஆத்மன் ரெட்டி நம்பர் கொடுத்து வைச்ச போல கேட்குற” என தன் கம்ப்யூட்டரில் ஏதோ வேலை செய்தபடி தங்கையைப் பார்த்துக் கேட்டாள் அனன்யா.  “நான் அவன் நம்பரை மனப்பாடம் பண்ணி வைச்சு இருக்கேன்.. அதனால கொடு” என்று அவள் சொல்ல,  “ஓஒ.. பிடிக்கல பிடிக்கலைன்னு அவர் நம்பரை எல்லாம் மனசுலயே சேமிச்சு வைச்சு இருக்க” என்று அனன்யா கலாய்த்தாள். “தினமும் ரெண்டு தடவையாவது கால் பண்ணிடுறான்.. […] - [அனல் 9](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-9/): “கண்ணா” என பாட்டி இழுக்க,    “இப்படி எல்லாத்துக்கும் என்னை ஃபோர்ஸ் பண்ணீங்கன்னா நான் எதுக்குமே ஒத்துக்க மாட்டேன் பாட்டி” என்றான் அழுத்தமாக.    அதில் பயந்தவர் எங்கே வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறி விடும் பயத்தில்,”சரி ப்பா உன் விருப்பபடி தான் எல்லாமே… அந்த விருப்பத்துல விசித்திரா இருந்தா கட்டிக்கோ… அவ உனக்காக ரெடி தான்” என்று அடங்கி போனார் பாட்டி…    “எனக்கு பிளைட்க்கு டைம் ஆகுது… நான் வைக்குறேன் பாட்டி” என சொன்னவனிடம்,    “என் மகனோட உயிருக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி இஷாக்” என பேரன் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து அகம் மகிழ்ந்தார் சகுந்தலா தேவி.    “சரி.. நான் வைக்குறேன்” என கால்லை கட் செய்தவனோ,”உங்க மகனுக்காக இல்ல என் அப்பாவுக்காக” என ஆழ்ந்து மூச்செடுத்து விட்டான் இஷாக்…    தன் அறையில் உள்ள பால்கனியில் நிலாவை வெறித்துக் கொண்டு […] - [அனல் 8](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-8/): பிரபல மருத்துவமனை அது…    இன்று வெளிவந்து இருக்க வேண்டிய திரைப்படம் அது…  இசை!    இஷாக் வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் இது என்று கூட சொல்லலாம்..    இதுவரை பண்ணிறாத கதாப்பாத்திரத்தை இந்தப் படத்தில் எடுத்து இருந்தான்…    தன் முழு உழைப்பை கொடுத்தும் நடித்து இருந்தான்…    நேற்றிரவு வீட்டில் நடந்த கலவர நேரத்தில் பிரொடீயூசரிடம் இருந்து கால்…    யோசனையுடன் ஃபோனை எடுத்தவனிடம், “இஷாக்… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்பா.. உன்னால தான் எல்லாமே… உன்னை நம்பி ஒரு மடங்கு பணம் போட்டா மூனு மடங்கா திரும்பி வரும்” என சந்தோஷத்துடன் சொல்லி வைத்தவர், இன்று அதிகாலை மாரடைப்பால் அவதிப்பட்டு பிரபல ஹாஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டார்…    அதனால் இந்த படம் இன்று ரிலீஸ் ஆகாமல் ஒத்திப்போக வேண்டிய நிலையில் தள்ளப்பட,    பிரொடீயூசரிடம் சிரித்து பேசாது இருந்தாலும் அவர் மீது மரியாதை வைத்திருந்த இஷாக் […] - [அத்தியாயம் 3](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/): ஷர்மி மற்றும் ஐஸ்வர்யா கூட்டத்தோடு கூட்டமாக சக மாணவிகளுடன் சென்றனர்.   அங்கே வாசிக்கப்பட்ட மாணவிகளின் பட்டியலில் இருவரின் பெயரும் இருந்ததால், இருவரும் நிம்மதியாக ‘பி’ பிரிவில் அமர்ந்தனர். பொதுவாகக் கல்லூரி நேரங்களில் மொபைல் ஃபோன் யூஸ் பண்ணக் கூடாது என்பதினால், ஒன்று செல்லை அணைத்திருக்க வேண்டும் இல்லை சைலன்ட் மோர்டில் வைத்திருக்க வேண்டும்.  ஐஸ்வர்யாவுடன் தன் நட்பைப் பலப்படுத்திய ஷர்மி, தான் உண்டு தன் படிப்பு உண்டு என இருந்தாள். கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம் இருக்கும், அன்று பீரியட் அக்கவுண்ட்ஸ் என்பதினால் அனைவரும் கேல்குலேட்டர் வைத்திருக்க வேண்டும்.   அக்கவுண்ட்ஸ் கிளாஸ் சென்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஷர்மியின் முதுகில் யாரோ தட்டினர். பின்னே திரும்பிப் பார்த்த சர்மியிடம், “ஹாய் இங்க நாங்கள் மூன்று பேர் உட்கார்ந்து இருக்கோம். ஆனால் ஒருத்தர் கிட்டயும் கேல்குலேட்டர் இல்லை. உங்களுடைய ரோவில் மூன்று பேரும் கேல்குலேட்டர் வைச்சு இருக்கீங்க. இஃப் யூ டோன்ட் மைன்ட் […] - [அத்தியாயம் 2](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-3/): “டேய்! நான் படிக்கிறது காமர்ஸ் க்ரூப் டா, டாக்டருக்கு இல்லை. அச்சோ காமெடி… டாடி இப்படி ஒரு மக்குப் பையனை நான் பார்த்ததே இல்லை” என்று விளையாட்டாக தம்பியைக் கலாய்த்தாள். “பே குண்டு.” “போடா நான் குண்டென்றால் நீ குரங்கு.” “இரண்டு பேரும் ஆரம்பிச்சிட்டீங்களா… விஜி சீக்கிரம் சாப்பாடு கொண்டு வா மணி ஆகுது, முதல் நாள் அன்றைக்கே தாமதம் ஆக்கக் கூடாது… அனிதா உன் கல்லூரி நேரம் பதினொன்றில் இருந்து மாலை ஐந்து வரை, ஆனால் நீ காலையில் ஐந்தரை மணிக்கே எழுந்திரு. அப்போது தான் படிக்க முடியும்.” “சரி டாடி” சாப்பிட்டுவிட்டு தன் தந்தையுடன் கல்லூரிக்குச் சென்றவளின் மனதில் ஆயிரம் ஆசைகள் கனவுகள் ஒரு வித படபடப்பும் கூட. “என்ன அனிதா அமைதியாய் வர?” “ஒன்றும் இல்லை டாடி, முதல் நாள் கல்லூரி என்பதால் ஒருவித படபடப்பாக இருக்கிறது.” “அனிதா இங்கப் பாருடா, நீ இப்போது படிக்கப் போறது ரொம்ப […] - [அத்தியாயம் 1](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-3/): “அனிதா, எழுந்திரு சிஏ கிளாஸிற்கு கிளம்ப நேரம் ஆச்சு” என்று எழுப்பினார், அனிதா என்று வீட்டில் அழைக்கப்படும் சர்மிளாவின் தந்தை கண்ணன். “டாடி ப்ளிஸ் டாடி, நேற்று இரவு தூங்கவே மணி ஆயிடுச்சு. ஃபவுண்டேஷன் எக்ஸ்ஸாம்க்கு படித்துக் கொண்டு இருந்தேன்” என்று தூக்கக் கலக்கத்தில் கூறினாள் சர்மிளா. “அனிதா, இரவு நேரத்திற்குப் படுத்துவிட்டு காலையில் சீக்கிரமாக எழுந்து படிப்பதுதான் நல்லது. சரி எழுந்திரு கிளாஸிற்கு நேரம் ஆச்சு உன்னை அப்படியே நுங்கம்பாக்கத்தில் விட்டுவிட்டு நான் ஷெட்டிற்குச் செல்லவேண்டும்.” அவளின் உயிருக்கு உயிரான டாடி இவ்வளவு கூறிய பின் விழிக்காமல் இருப்பாளா தந்தையின் செல்லப் பெண்? எழுந்துவிட்டு தன் காலைக்கடன்களை முடித்துவிட்டு, குளித்துவிட்டு வரும்போதே தன் கணவனிடம் மகளுக்காக வாதாடிக் கொண்டிருந்தார் விஜி. “ஏங்க, நம்ம அனிதா இப்போது தான் பிளஸ் டூ முடித்துக்கொண்டு லீவில் இருக்கிறாள். இப்போதே அவளுக்கு எதுக்கு சிஏ படிப்பு எல்லாம்… கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இருக்கட்டுமே அதற்குப் பிறகு […] - [அனல் 7](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-7/): அவளிடம் பவித்ரா கெட்ட பெண், அவளுக்கு பாவம் பார்த்தால் உன்னையே முழங்கி விடுவாள், அவளுக்கு இடம் கொடுத்தால் உன்னையே உன் இடத்தை விட்டு துரத்தி விடுவாள் என பவித்ராவை பற்றி எத்தனை புகட்டுதல் முத்து மாரிக்கு சொல்லப்பட்டது…    அதனால் தானே அப்படி ஒருத்தி அவளின் வீட்டில் மாடாய் உழைத்தும் முத்துமாரி கண்டுக்கொள்ளாமல் இருந்தாள்…    ஆனால் இப்போது தன் வீட்டினரின் பொய்கள் அவளை அலசி ஆராய சொல்லி வலியுறுத்தியது…    அவள் இவ்வாறு யோசித்துக் கொண்டு இருக்க, “எங்க தகுதிக்கு பெரிய கோடீஸ்வரங்க அழகான பொண்ணுங்களை வைச்சிட்டு காத்துக்கிட்டு இருந்தாங்க… ஆனா மகேஷ் தான் அவசரப்பட்டுட்டான்” என சலிப்பாக பெருமூச்சுவிட்டார் சகுந்தலா தேவி…    “ஆமா ஆமா… உனக்கு வேற பொண்ணே கிடைக்கலயா மகேஷ்… உன்னால இப்போ உன் தம்பி தான் கஷ்டப்படப்போறான் இந்தப் பொண்ணு பார்க்க எங்க வீட்டு வேலைக்காரி மாதிரி இருக்கு” என முத்துமாரியை ஏளனமாக பார்த்தபடி சொன்னார் […] - [அனல் 6](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-6/): அதற்காக அவன் பிரியாவை வெறுக்கவில்லை… ஆனாலும் அவனுக்கு இந்த கோபம் மட்டுப்பட சில நாட்கள் தேவைப்படுகிறது…    மூன்று பெண்களுக்கும் மூன்று விதமான நிலை… பிரியாவிற்கு மகேஷின் செயலில் குழப்பம், பவித்ராவிற்கு பயம் முத்துமாரிக்கு கோபம் கலந்த பிடித்தமின்மை…    மகேஷின் கார் அந்தப் பெரிய மாளிகையில் நின்றது…    அதற்குள் இரத்த பரிசோதனை விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட, அவர்களுக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு…    விசித்திரா கடும் கோபத்தில் இருப்பதால் அவள் யாரிடமும் பேசவில்லை… சித்ராவோ அப்படி என்ன தன் மகளை விட பேரழகி வரப் போகிறாள் என எளக்காரமாக காத்துக் கொண்டு இருந்தார்…    வீட்டில் சகுந்தலா தேவி, காயத்ரி மற்றும் சக்கரவர்த்தி இருக்க…    விஷாக் ஆபிஸிற்கு சென்று இருந்தான்… காயத்ரி எவ்வளவு சொல்லியும் அவன் கோபத்துக் கொண்டு கேட்காது சென்று விட்டான்… தன் விருப்பத்தை மதிக்காமல் திருமணம் செய்து வைக்கும் இடத்தில் என்ன நடந்தால் […] - [பிரியாதிரு 7](https://anujeytamilnovels.com/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81-7/): பிரியாதிரு 7 அடுத்த நாள் மாலை ஆத்மன் ரெட்டி சொன்ன இடத்துக்கு வந்தாள் அமிர்தா..  அந்த அறைக் கதவை தட்டும்போதே அவளுக்கு இதயம் தடதடக்க ஆரம்பித்தது..  அனன்யாவை மனதில் வைத்தபடி உள்ளே சென்றவளை வரவேற்றது வெறும் அறை தான்..  ‘யாருமே இல்லயா!’ என அமித்ரா யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவளை பின்னிருந்து இறுக்கி அணைத்தான் ஆத்மன் ரெட்டி.. அதில் அவளின் மேனி சிலிர்க்க அவளையும் மீறி கண்களை மூடினாள் அவளின் செவி மடலில், “கொஞ்சம் கண்ணைத் திறந்து பாரு பங்காரம்” என்று சொல்ல, அவளும் அவனின் சொல்லுக்கு கட்டுப்படும் அடிமை போல மெல்ல கண்களை விழிக்க அவளின் கண்களோ கேமராக்கள் ஒளியில் சுருங்கியது..  ஆம்.. அவளின் எதிரே சுற்றி ஏராளமான கேமராக்கள்.  “சார்.. இந்த பொண்ணு யாரு!” என்று ஒருவனும், “உங்க கிட்ட படம் பண்ண வாய்ப்பு கேட்டு வந்தாங்களா!” என்று இன்னொருவனும், “வாய்ப்பு கேட்டு வந்த பொண்ணை ஆத்மன் ரெட்டி […] - [அனல் 5](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-5/): அனைத்தையும் சொல்லிவிட்டு கால்லை அணைத்து விட்டான் மகேஷ்…   பிரியாவிற்கு தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை…   அங்கே மாமியாருடன் ஃபோனில் பேசிக்கொண்டுருந்த மீனாட்சியோ, “பாத்தீங்களா அத்தை… நல்லா ஊமக் கொட்டான் மாதிரி இருந்துட்டு அவ பண்ணின வேலைய… எவனோ ஒருத்தன் அவளை பெரிய ஹாஸ்பத்திரியில சேர்த்துட்டு பில்லு வேற கட்டிட்டு போயிருக்கானாம்…” என அசிங்கமாக பேசினார்…   தன் சொந்தத்தில் வேறு ஏதாவது பெண் இருந்தால் கூட இவ்வளவு கடுப்பு பிரியாவிற்குத் தெரியாது…   பவித்ரா தான் வாக்கப்பட்டு போகும் பணக்கார வீட்டிற்கு வருவதை எண்ணிப் பார்த்தாலே பிரியாவிற்கு பத்திக்கொண்டு வந்தது…   ஆனாலும் இப்போது அவளுக்கு வேறு வழியும் இல்லை…   அன்று இரவே பவித்ராவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்கள்…   வீட்டிற்கு செல்லும் வரை பிரியா வாயேத் திறக்கவில்லை…   முத்துமாரிக்கு கால் அடித்தால் அவளும் எடுப்பது போல் இல்லை..   அடுத்த நாள் […] - [அத்தியாயம் 35 (இறுதி )](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தது சுபாவின் இந்நிலையைக் கண்ட சபேசன் துளசியிடம் அவளுக்காக வருத்தப்பட்டார். அந்த சம்பவத்திற்கு பிறகு அஸ்வினும் சுபாவுடன் சித்துவிற்காக கூட பேசவில்லை. இத்தகைய சமயத்தில் தான் ஒரு நாள் தீபிகா சுபாவிற்கு கால் செய்தாள். “சொல்லு தீபி” என்று சொல்லும் போதே சுபாவின் குரலில் ஒரு சோர்வு இருந்தது.   “நாளைக்கு அஸ்வின்க்கும் சோனியாவிற்கும் கல்யாணம் கா” என்றாள். இதைக் கேட்ட சுபாவிற்கு இதயமே நிற்பது போல் உணர்ந்தாள்.   “முடியாது அவர் அப்படி பண்ண கூடாது” என்று அழுதாள்.   “நீ தானக்கா சொன்ன சோனியாவோ சுனிதாவோ யார் கூடனாலும் போங்கனு அதான் அவர் சோனியாவ தேர்ந்து எடுத்து இருக்காரு. என்னமோ உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு அதான் சொன்னேன் உனக்கு மண்டபம் முகவரி வாட்ஸ்அப் பண்ணிருக்கேன் நாளைக்கு காலைல ஆறு மணிக்கு முகூர்த்தம்” என்று கால்லை கட் செய்தாள்.   அனைத்தும் பிரம்மை போல் தோன்றிய சுபா அடுத்து […] - [அத்தியாயம் 34](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-2/): அடுத்த நாள் வீடு கோலாகலத்தோடு விடிந்தது. பாபுவையும் ஈஸ்வரியையும் கல்யாணத்திற்கு தயார் செய்திருந்தனர். அரவிந்த்தும் தீபிகாவும் தான் இதை எடுத்துச் செய்வதால் அவர்களுக்கு  சுபாவுடன் பேச நேரமில்லை. அங்கு வந்த சுபா அஸ்வினைத் தான் தேடினாள். வேண்டும் என்றே ரகுவை வேற கூட அழைத்து வந்தார் சபேசன்.   அவர் வீட்டு மாப்பிள்ளை என்பதால் யாரும் அவரிடம் இதைப் பற்றி விசாரிக்கவில்லை. வாசுதேவனும் சசிகலாவும் சுபாவை கண்டும் காணாமல் திரும்பினர். சுபாவிற்கு அது வருத்தத்தை அளித்தது.சிறிது நேரம் கழித்து ரெடி ஆகிய அஸ்வினை முதலில் கண்டது சித்விக் தான்.   “அப்பா” என்று ஓடிப்போய் அவனைக் கட்டிக் கொண்டான். நீல முழு கை சட்டையும் வேஷ்டியும் அணிந்து பார்க்க கம்பீரமாய் இருந்தான் அஸ்வின். சுபா அரக்கு நிறத்தில் பட்டு உடுத்தி அழகாக மின்னினாள். ஆனால் அவளை அஸ்வின் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இதில் மனம் நொந்தவள் அமைதியாக இருந்தாள் யார் இருந்த புதியவன் என்று […] - [அத்தியாயம் 33](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-2/): அஸ்வின் சென்று ஒரு வாரம் ஆனது. ஆனால் அவனிடமிருந்து பிறகு ஒரு காலும் சுபாவிற்கு வரவில்லை. தீபிகாவும் அரவிந்தும் சென்னைக்கு கிளம்பினர் கிளம்பும் முன் சுனிதாவின் நம்பரை சுபாவிற்கு கொடுத்துவிட்டு சென்றாள்.    அந்த நம்பர்க்கு பேசி ஒரு பிரோயஜனமும் இல்லை என்று அதை அலட்சியமாய் விட்டுவிட்டாள் சுபா. இப்படியே ஒரு மாதம் சென்றது.   இருமுறை சித்விக்கிடம் பேச மட்டும் கால் செய்தான் அஸ்வின். சுபாவிடம் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. சபேசனுக்கு அஸ்வின் வந்து சென்றதே தெரியாமல் துளசி பார்த்துக்கொண்டார்.   அடுத்த வாரம் பாபு, ஈஸ்வரி அறுபதாவது கல்யாணம் கொண்டாடப்படும் நிலையில் அனைவரும் துளசியின் வீட்டிற்கு வருவதாய் முடிவெடுத்தனர்.   இது குடும்ப விழா என்பதால் சபேசனும் மறுப்பு தெரிவிக்கவில்லை. துளசியின் வீட்டிற்கு வந்த பின் ஒரு நாள் கழித்து அனைவரும் வாசுதேவன் தந்தை வீட்டிற்கு செல்வதாய் முடிவெடுத்தனர்.    துளசியும், சபேசனும் பாபுவோடு பேசினர். வாசுதேவனும் […] - [அத்தியாயம் 32](https://anujeytamilnovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-2/): திருநகர் வந்தடைந்த அஸ்வின் சுனிதாவின் வீட்டு முகவரியை காண்பித்து ஒரு கடையில் எப்படிச் செல்ல வேண்டும் என்று கேட்டறிந்து வந்தான். அங்கு பூட்டியிருந்த கதவைத் தட்டினான். ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு கதவைத் திறந்தாள் சுனிதா.   “நீங்க அஸ்வினா?” என்று கேட்டாள்.   “ஆமா நான் தான் அஸ்வின் நேஹாவோட பிரண்ட் திங்க்ஸ் லாம் பேக் பண்ணிட்டீங்களா?” என்று வெளியே நின்றே கேட்டான்.   “உள்ளே வாங்க” என்று சுனிதா கூறிய பின்பு தான் அஸ்வின் உள்ளே சென்றான். அங்கு ஹாலிலேயே உட்கார்ந்த அஸ்வின் வீடு கலைந்திருப்பதைக் கண்டான். ‘என்ன இந்த பொண்ணு வீட்டை இப்படி குப்பையா வெச்சிருக்கு?’ என்று நினைத்தவன் சுனிதா கொடுத்த காபியைக் குடித்து விட்டு அமைதியாக இருந்தான்.   “அது வந்து நான் இன்னும் திங்க்ஸ் பேக் பண்ணல நாளைக்கு வரீங்களா? கொஞ்சம் திங்க்ஸ் வேற பர்சேஸ் பண்ணணும் நாளைக்கு ஈவ்னிங் ஒரு ஐந்து மணிக்கு வாங்க ப்ளிஸ்” […] ## Pages - [Family & Relationship](https://anujeytamilnovels.com/tag-family-relationship/): Family & Relationship - [Competitions](https://anujeytamilnovels.com/competitions/) - [Competition](https://anujeytamilnovels.com/competition/) - [Story Rankings](https://anujeytamilnovels.com/story-rankings/) - [Writers Ranking](https://anujeytamilnovels.com/writers-ranking/) - [Writers](https://anujeytamilnovels.com/writers/) - [Author Profile](https://anujeytamilnovels.com/author-profile/) - [Author Dashboard](https://anujeytamilnovels.com/author-dashboard/) - [Youtube](https://anujeytamilnovels.com/youtube/): YouTube Links - [Mobile Exclusive Content](https://anujeytamilnovels.com/mobile-exclusive-content/) - [Latest posts](https://anujeytamilnovels.com/latest-posts/): Latest posts - [Teaser](https://anujeytamilnovels.com/teaser/):   இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் anujeynovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் Teaser - [Pratilipi Exclusive Novels](https://anujeytamilnovels.com/pratilipi-exclusive-novels/):   இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் anujeynovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் Pratilipi exclusive novels - [Completed Novels](https://anujeytamilnovels.com/completed-novels/):   இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் anujeynovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் Completed novels - [Ongoing Novels](https://anujeytamilnovels.com/ongoing-novels/):   இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் anujeynovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் Ongoing novels - [Mobile App Exclusive Novels](https://anujeytamilnovels.com/mobile-app-exclusive-novels/):   இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் anujeynovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் Mobile app exclusive novels - [All Novels](https://anujeytamilnovels.com/all-novels/):   இந்த தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் anujeynovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் Ongoing novels Mobile app exclusive novels Pratilipi exclusive novels Teaser Completed novels - [Teaser on mobile app](https://anujeytamilnovels.com/teaser-page-mobile/) - [Coming Soon](https://anujeytamilnovels.com/coming-soon/) - [Password Reset](https://anujeytamilnovels.com/password-reset/) - [Account](https://anujeytamilnovels.com/account/) - [Logout](https://anujeytamilnovels.com/logout/) - [Members](https://anujeytamilnovels.com/members/) - [Register](https://anujeytamilnovels.com/register/) - [Login](https://anujeytamilnovels.com/login/) - [User](https://anujeytamilnovels.com/user/) - [Footer Link - Contact](https://anujeytamilnovels.com/elementor-page-1412/): Contact - [Disclaimer](https://anujeytamilnovels.com/disclaimer/): Last Updated: 28 October 2025 The content on Anu Jey Novels is provided for reading and entertainment purposes. While we strive for quality, we do not guarantee accuracy or completeness of any novel, character, or storyline. Third-Party Ads Advertisements are provided by third-party ad networks (e.g., Google AdSense, AdMob). We are not responsible for ad content or practices of those networks. Usage Risk Use the Website and App at your own risk. We are not liable for any loss or damage resulting from use of the site or app. Contact If you have concerns or complaints, contact us at anujeynovels@gmail.com. © […] - [Terms and Conditions](https://anujeytamilnovels.com/terms-and-conditions/): Last Updated: 28 October 2025 By accessing Anu Jey Novels (Website or App), you agree to these Terms & Conditions. Use of Content You agree not to copy, download, redistribute, or reuse novel content without permission from the copyright owner. Unauthorized use of content may result in account suspension or legal action. Account & Membership Rules Members must provide accurate name, phone, and email information. Do not share your login credentials. We reserve the right to modify or revoke access for violations. Device & Access Notes Access or release timing of content may differ between devices and the app. We may […] - [Contact us](https://anujeytamilnovels.com/contact-us/): Thank you for visiting anujeytamilnovels.com. We are always happy to hear from our readers, authors, and partners. If you have any questions, feedback, or collaboration requests, feel free to reach out to us. You can contact us anytime at: anujeynovels@gmail.com. We usually respond within 24–48 hours. Contact Guidelines For story-related queries, mention your author name and story title. For collaboration requests, include your brand/website details. For content corrections or issues, provide the page link. Important Note Anujeynovels.com currently offers support only through email. We do not provide phone support or a physical mailing address. - [About us](https://anujeytamilnovels.com/about-us-2/): I am Anu Jey. I am married and am a mother of one little munchkin. I was working in a private bank for about 6 years. I started writing just as a timepass and eventually it has become my passion now. I have written around 10 long format novels and 2 short stories in tamil. I have written love stories, family based novels and also mystery, suspense and thriller based stories with some twist and turns.   - [Home](https://anujeytamilnovels.com/):   Hi Dears, Download our app to view exclusive contents Ongoing novels Mobile app exclusive novels Pratilipi exclusive novels Teaser Completed novels - [Privacy Policy](https://anujeytamilnovels.com/privacy-policy/): Last Updated: 28 October 2025 Welcome to Anu Jey Novels (“Website”, “We”, “Our”). We operate anujeytamilnovels.com and the Anu Jey Novels mobile app. We respect your privacy and are committed to protecting your personal information. Information We Collect Name Email address Phone number Login details (username, password — encrypted) Usage data, IP address, device information App analytics data via AdMob / Firebase How We Use Your Information To provide reading access to novels and content To communicate with registered members To improve the user experience For security and account protection To show relevant advertisements (AdSense & AdMob) Cookies & Third-Party Ads […] ## Optional - [Agent (MCP protocol)](websites-agents.hostinger.com/anujeytamilnovels.com/mcp) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)