அத்தியாயம் 10
மண்டபத்தில் சுபாவை தயார் செய்துக் கொண்டிருந்தனர். வீட்டில் நடந்த கலவரம் எதுவும் சுபாவிற்கு தெரியாது.
பச்சை நிற பட்டில் தன்னுடைய மென்மையான அழகிய முகத்தில் அழகாக ஒப்பனை செய்யப்பட்டு தேவதைப் போல் காட்சியளித்தாள். மண்டபத்திற்கு வந்த துளசி, சபேசன், பாபு, ஈஸ்வரி, மாளவிகா, அவினாஷ் மற்றும் வாசுதேவன், சசிகலா நேராக மணமேடைக்குச் சென்றனர்.
உறவினர்களுக்கு அஸ்வினின் பெயர் மணப்பலகையில் இருப்பது அதிர்ச்சி அளித்தது. பிறகு விஷயத்தைக் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தனர்.
சுபாவின் நண்பர்கள் மற்றும் அவளுடைய ஆபிஸ் பிரண்ட்ஸிற்கு நிச்சயம் முடிந்த வரை தெரியும். அதன்பின் அவளுக்கு நேர்ந்த சம்பவத்தால் யாரிடமும் கல்யாணத்தைப் பற்றிக் கூறவில்லை.
தன்னுடைய டீம் ஹெட்டிற்கு ஒரு மாதம் தன்னால் வரமுடியாது லாஸ் ஆஃப் பே மூலம் எடுத்துக் கொள்கிறேன் என்று ஈமெயில் அனுப்பியிருந்தாள். துளசி தீபிகாவை அழைத்து நடந்த விஷயங்களை சொல்ல நினைத்தார். ஆனால் தீபிகா சுபாவோடு இருந்தாள். தான் அங்குச் சென்றால் இங்கு தனியாக சபேசன் கல்யாணத்தை நிறுத்திவிடக்கூடாது. அதனால் அவர் கூடவே இருந்தார்.
ஐயர் மந்திரங்களைக் கூற மாப்பிள்ளை தோரணத்தில் கம்பீரமாக வந்து அமர்ந்தான் அஸ்வின்.
‘உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா என்கிட்ட கெட்டுப்போன நீ இன்னொருத்தன கல்யாணம் பண்ண வந்துருக்க உனக்கு அப்போவே தாலி கட்டி அடக்கியிருக்கணும் டி இப்போ நான் உனக்கு தாலி கட்டுறதுக்கு காரணமே நீ வேற யாரையும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்க கூடாது. இனிமேல் நீ தினம் தினம் சித்ரவதை அனுபவிப்ப டி’ என்று மனதிற்குள் கர்ஜித்தான்.
தீபிகா சுபாவை மணமேடைக்கு அழைத்து வந்தாள் மாப்பிள்ளை இடத்தில் அஸ்வின் இருப்பதை கண்ட தீபிகா அதிர்ந்தாள். அந்த அதிர்ச்சியில் நேராக தன் அன்னையிடம் சென்று என்ன என்பதை விசாரித்தாள். சுபா மணப்பெண் அறையிலிருந்து வரும்பொழுதே குனிந்து தான் வந்தாள் அவள் நிமிரவே இல்லை.
அப்படியே வந்தவள் மணமேடையில் அமர்ந்தாள். அனைவரும் மாப்பிள்ளை இடத்தில் இருக்கும் அஸ்வினை அவள் கவனிக்கவில்லை என்பதை கண்டுகொண்டனர். தீபிகாவிற்கு நடந்ததைக் கேட்டு கண்களில் கண்ணீர் வந்தது துளசி அவளைக் கட்டுப்படுத்தினார்.
‘இன்னும் நான் தான் மாப்பிள்ளையா உன் பக்கத்தில் இருக்கேன்னு பார்க்காம இருக்க நீ என்ன பார்க்கும் போது எப்படி பயந்து நடுங்குவ அந்த காட்சிய நான் பார்க்கணும்’ என்று மனதில் வக்கிரமாக சிரித்துக் கொண்டான்.
ஐயர், “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று உரக்கச் சொல்ல அஸ்வின் தன் வலிய கரங்களால் சுபாவிற்கு தாலியைக் கட்டினான். பின் தன் நீண்ட கரங்களால் அவளின் நெற்றியில் குங்குமத்தை வைத்தான். அதுவரை தலைகுனிந்து இருந்த சுபா நிமிர்ந்தாள். அப்போது அவள் நேரே நின்றிருந்த அரவிந்தைக் கண்டு திகைத்தாள்.
தான் காண்பதை அவளால் நம்ப முடியவில்லை இது கனவா என்று நினைத்த சுபா தன் முன் இருப்பது அரவிந்த் தான் என்பதை உணர்ந்தாள். அப்போது தனக்கு தாலி கட்டியது யார் தன் பக்கத்தில் அமர்ந்திருப்பது யார் என்பதை ஒரு பதற்றத்தோடு பயத்தோடு அஸ்வின் அமர்ந்திருக்கும் பக்கம் திரும்பினாள்.
அங்கு தன் வாழ்க்கையைக் கெடுத்து தன்னை உயிருள்ள பிணமாய் நாசமாக்கியவன் கழுத்தில் மாலையோடு பட்டு வேஷ்டியில் தன் பக்கத்தில் அமர்ந்து தன்னையே அனல் வீசும் பார்வையோடு பார்த்துக்கொண்டிருப்பதை கண்ட சுபாவிற்கு தலை சுற்றியது.
அஸ்வினைக் கண்ட சுபாவின் கண்களில் மடமடவென அழுகை வந்தது. தன்னுள் ஆயிரம் கேள்விகள் எழுந்தது. முதலில் தன்னை ஏன் அரவிந்த் கல்யாணம் பண்ணவில்லை ஒரு வேளை அரவிந்த் இவன் தான் என்னை கற்பழித்தான் என்பதை அறிந்து கூட்டிக் கொண்டு வந்துட்டாரா?
அதற்கு வாய்ப்பில்லை ஏனென்றால் இவனைப் பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில் கண்டறிய வாய்ப்பில்லை பின் எப்படி இது நடந்தது என்று குழம்பியவளின் கையை இறுக்கமாக பிடித்து அவளுடைய பேர் தெரியாத கணவன் அக்னி குண்டத்தை சுத்த அழைத்துச் சென்றான். அவனுடைய கையின் அழுத்தத்தைத் தாங்கமுடியாமல் வலியில் துடித்தாள். வேறு வழியின்றி அவனோடு பின் சென்றாள்.
முன்பு அரவிந்த்துடன் அன்று மாலை ரிசப்ஷன் நடக்கவிருந்தது. ஆனால் அஸ்வின் சென்னையில் இருப்பதனால் ரிசப்ஷன் ரத்து செய்யப்பட்டது. பின் ஆசிர்வாதம் பெறும் போது கூட யார் காலில் விழுகிறோம் என்ற நினைப்பே சுபாவுக்கு இல்லை தன் தந்தை அன்னை மற்றும் தங்கையின் அழுத முகத்தைப் பார்த்த சுபாவிற்கு அவர்களிடம் பேச வேண்டும் அழ வேண்டும் என்ன நடந்தது என்று கேட்க வேண்டும் என மனம் துடித்தது.
ஆனால் தன் கையை சிறை செய்து வைத்திருந்த பேர் தெரியாத கணவனுடன் கல்யாணம் முடிந்த கையோடு பாலும் பழமும் சாப்பிட பாபு வீட்டிற்கு மணமக்களை அழைத்துச் சென்றனர்.
அங்கு மாளவிகா தான் பாலும் பழமும் கொடுத்தாள். காலையில் இருந்து சாப்பிடாத சுபாவிற்கு அதிர்ச்சியின் மேல் அதிர்ச்சியில் மயக்கமே வரும் மாதிரி இருந்தது. அதனால் தன் பிடிக்காத கணவன் சாப்பிட்டு கொடுத்த மிச்சத்தை வேறுவழியின்றி பசியில் சாப்பிட்டாள்.
பின் பாபு சுபாவிடம் ரூமில் போய் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்க சொன்னார். இவராவது நம்மிடம் எதாவது நடந்ததை சொல்லமாட்டாரா என்று தவித்த சுபாவிற்கு கிடைத்தது ஏமாற்றமே ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு அவர் எங்கோ சென்றுவிட்டார்.
இப்போது அந்த வீட்டில் இருப்பது பாபு, மாளவிகா அவினாஷ் மற்றும் அஸ்வின் இதில் பாபுவைத் தவிர யாரையும் தெரியாத நிலையில் ரூமில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்தாள். அப்போது வலிய காலடி சத்தம் கேட்டது. உள்ளே வந்த அஸ்வின் சுபாவிடம், “ரிஜிஸ்டர் ஆபிஸ் போகணும் கிளம்பு” என்று கூறி வெளியேச் சென்று விட்டான்.
‘என்ன சுத்தி என்ன நடக்குதுன்னு புரியல முருகா என்ன காப்பாத்துங்கனு’ மனதில் வேண்டினாள் சுபா.
பின் ஹாலிற்கு சென்றவளுக்கு கண்ணில் பட்டது மாளவிகா மற்றும் அவினாஷ் தான் “வாங்க சுபா கிளம்பலாம்” என்றான் அவினாஷ். சுபாவும் வேறு வழியின்றி அவர்கள் பின்னே சென்றாள். அவினாஷ் மற்றும் மாளவிகா தங்களின் காரில் ஏறினர் சுபாவும் அவர்களோடு ஏறச் சென்றாள்.
அப்போது அவள் முன்னே தன் பென்ஸ் காரை நிறுத்தி, ”ஏய் நீ இதுல ஏறு” என்றான் அஸ்வின் திமிராக. அவளும் பயந்து பின் சீட்டில் ஏற கதவைத் திறந்தாள். அப்போது, “யூ இடியட் நான் உனக்கு டிரைவர் இல்ல என் வீட்டுக்கு வேலைக்காரியாய் வரக் கூட உன் மேல எனக்கு மதிப்பு இல்ல முன்னாடி வந்து ஏறு டி” என்று கர்ஜித்தான்.
சுபாவிற்கு அழுகை பயங்கரமாக வந்தது ஜன்னல் பக்கமாக திரும்பி அழ ஆரம்பித்தாள். என்னுடைய வாழ்க்கை ஏன் இப்படி ஆனது இந்த அரக்கனோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பயமாக இருக்கிறதே என்று மனதில் சோர்வடைந்தாள்.
ரிஜிஸ்டர் ஆபிஸ் வந்தடைந்த பின்பு அவள் ஓரமாக ஒரு இடத்தில் இருக்க அஸ்வின் அங்கு பிஸியாக இருந்தான் மாளவிகா மற்றும் அவினாஷ் சாட்சி கையெழுத்து போடுவதற்காக நின்றுக் கொண்டிருந்தனர். எல்லா பிராஸஸும் முடிந்த பின்பு அங்கு வேலை பார்க்கும் ஒருவர், “பொண்ணோட பெயர் என்ன?” என்று கேட்டார்.
அதற்கு அஸ்வின், “கல்யாணத்திற்கு முன்னாடி சுபா வர்ஷினி சபேசன் கல்யாணத்திற்கு அப்புறம் இப்போ சுபா வர்ஷினி அஸ்வின் குமார்” என்றான் கம்பீரமாக. இதைக் கேட்ட சுபாவின் தலையில் இடியே விழுந்தது.
தன்னை கல்யாணம் செய்தது அஸ்வினா? தன்னை கற்பழித்து சீரழித்தது சின்ன வயதில் என்னை பழிவாங்குவேன் என்று மிரட்டி அடித்து கொடுமைப்படுத்தினானே அவனா என்று மனதிற்குள் பயமும் பதற்றமும் ஏறிக்கொண்டே இருந்தது. ஒருவேளை தன் காதில் தப்பாக விழுந்திருக்குமோ என்று நினைத்தாள்.
அப்போது அவினாஷ் அவளை கையெழுத்து போட அழைத்தான். அஸ்வின் தான் கையெழுத்து போடும் இடத்தில் அஸ்வின் குமார் வி என்று தன் கையெழுத்தை இட்டான். அதனைக் கண்ட சுபாவின் இதயம் படபடவென்று துடித்தது பயத்தில் அப்போ இவன் அவன் தான் என்று முடிவுக்கு வந்தவளின் கண்களில் பொலபொலவென கண்ணீர் வந்தது.
கையெழுத்து போடாமல் பேனாவைப் பிடித்திருந்த அவளுடைய கை நடுங்க ஆரம்பித்தது. அவள் காதருகில் வந்து, “இப்போ கையெழுத்து போட போறியா இல்லை உன் கைய உடைச்சிடவா” என்று கர்ஜித்தான் அஸ்வின்.
அவள் உடனே நடுங்கிய கையோடு சுபா வர்ஷினி என்று கையெழுத்து இட்டாள். அப்போது அவளுடைய கண்ணீர்த் துளிகள் அந்த காகிதத்தில் விழுந்தது. இதனைக் கண்ட அஸ்வினுக்கு மனதில் வெற்றிப்புன்னகை வந்தது.
