அத்தியாயம் 13
தீபிகாவிற்கு ஏனோ அரவிந்த் நினைப்பாகவே இருந்தது. அரவிந்தைக் காண வேண்டும் அவனைப் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.
அப்போது வீட்டில் சபேசன் மற்றும் துளசி பேசும் சத்தம் கேட்டு வெளியில் சென்றாள். அங்கு துளசி சபேசனின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தார்.
“சுபா இல்லாம எனக்கு கஷ்டமா இருக்கு அவள் அரவிந்த கல்யாணம் பண்ணிருந்தா கூட நான் சந்தோஷமா இருந்திருப்பேன் ஆனா அஸ்வின நினைச்சா பயமா இருக்கு” என்று அழுதார்.
“எனக்கும் அந்த பயம் இருக்கு இப்போ சுபா வேலைக்கும் போறது இல்ல. அது இன்னும் பயமா இருக்கு. இந்த மாதிரி ஒரு வாழ்க்கையில இருக்கும் போது அவள் வேலைக்கு போனா ஆறுதலா இருக்கும். நீ சுபாக்கு கால் பண்ணி அவளை வேலைக்கு போக சொல்லு துளசி” என்றார்.
“ஏன்பா அத போன்ல சொல்லணும் பேசாம சென்னைக்கு போய் அக்கா வீட்டுக்கே போய் அவளை பார்த்து சொல்லலாம்.அவளோட மார்க் ஷீட்ஸ் கூட இங்க தான் இருக்கு அப்பா அதையும் கொடுத்திடலாம்” என்றாள்.
“மார்க் ஷீட்ஸ் இங்கயே இருக்கட்டும் தீபு அது எதுக்கு?” என்றார் சபேசன்.
”அப்பா ஒருவேளை அக்கா வேலை பார்த்த கம்பெனில அவளை மறுபடியும் வேலைக்கு எடுக்கலனா அடுத்த வேலைக்கு யூஸ் ஆகும்லபா அதான்” என்றாள்.
“அதுவும் சரி தான் மா துளசி அதை எடுத்து வை” என்றார்.
“அப்பா இன்னொரு விஷயம் என்னோட பிரண்ட் ஒருத்திக்கு ரொம்ப நாளா ஒரு பிரச்சனை இருக்கு அவளுக்கு ஆறுதல் சொல்ல நான் அவ வீட்டிற்கு போய்ட்டு வரேன்பா” என்றாள்.
”எங்கம்மா இருக்கு அந்த பொண்ணு வீடு?” என்று கேட்டார்.
“அது வந்து பெரியார் பஸ் ஸ்டான்ட் பக்கத்திலபா” என்றாள்.
“சரி கவனமா போய்ட்டு வாம்மா” என்றார்.
“அம்மா நான் பிரெண்ட் வீட்டிற்கு போய்ட்டு வரேன்” என்று தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டுச் சென்றாள்.
பெரியார் பஸ் நிலையம் பக்கத்தில் இருக்கும் அரவிந்தின் ஃபைனான்ஸ் கம்பெனியில் தன் வாகனத்தை நிறுத்தி விட்டு ரிசப்ஷனில் சென்று கம்பெனி எம். டி யை பார்க்க கேட்டாள்.
“நீங்க யாரு மேடம் அப்பாயின்ட்மெண்ட் இருக்கா?” என்று கேட்டாள்.
“நான் அவங்க அத்தை பொண்ணு தீபிகானு சொல்லுங்க அவங்க கிட்ட” என்றாள். தன் முன் இருக்கும் இன்டெர் காமில் கால் செய்து அரவிந்த்திடம் பேசிய அந்தப் பெண் தீபிகாவை உள்ளே செல்லுமாறு கூறினாள்.
அரவிந்த்தின் அறைக் கதவை திறந்து, “ஹாய் அரவிந்த் எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“நான் நல்லா இருக்கேன் தீபி என்ன பார்க்கணும்னா வீட்டிற்கே வந்துருக்கலாமே! ஏன் ஆபிஸிற்கு எல்லாம் வர?” என்று கேட்டான்.
“ஏன் அத்தான் நான் உங்கள ஆபிஸ்ல வந்து பார்க்க கூடாதா என்ன?” என்று கேட்டாள்.
“நீ சின்ன பொண்ணு தீபிகா இங்கெல்லாம் நீ வந்தா உன்னை தப்பா பேசுவாங்க. இப்போ தான் கல்யாணம் வேற நின்னிருக்கு யாருக்கும் சுபாவிற்கு நடந்த விஷயம் தெரிய கூடாதுன்னு நானே கல்யாணம் நிறுத்திட்டேன்னு இங்க பொய் சொல்லிருக்கேன். இப்போ அவள் தங்கை நீ இங்கே வரது பார்த்தா நல்லா இருக்காது” என்றான்.
”ஏன் அத்தான் நீ இவ்வளவு நல்லவனா இருக்க அதான் என் மனசுக்குள்ள இருந்து போக மாட்டுற” என்று தன் இதயத்தின் மேல் கை வைத்து காட்டினாள்.
”என்ன உளர்ற தீபிகா?” என்று கேட்டான்.
”உளறல் இல்ல அத்தான் நான் உன்னை காதலிக்கிறேன் உன்னை தான் கல்யாணம் பண்ணுவேன்” என்றாள்.
“ஸ்டாப் இட் தீபிகா நீ சின்ன பொண்ணு சும்மா காதல் கீதல்னு சொல்லாம ஒழுங்கா உன் வாழ்க்கைய பாரு” என்றான்.
“நான் சின்ன பொண்ணு இல்ல எனக்கு இருபத்தி ஒன்று வயசு ஆகுது அத்தான் அடுத்த வருஷம் எம்.காம் முடிஞ்ச உடனே எனக்கு மாப்பிள்ளை பாத்துருவாங்க. அப்போ நான் வீட்டுல உன் பேர தான் சொல்லுவேன்” என்றாள்.
“எனக்கு உன் மேல லவ் லாம் இல்ல வரவும் வராது சோ இப்போ நீ இடத்தை காலி பண்ணு” என்றான்.
”நீ என்ன லவ் பண்றேனு சொல்லுற வரைக்கும் நானும் உன்னை விட போறது இல்லை அத்தான் இப்போ கிளம்புறேன்” என்று கிளம்பி விட்டாள்.
‘நம்ம அத்தானுக்கு ஆறுதல் கொடுக்க வந்தோம் ஆனா ஒரு அதிர்ச்சி கொடுத்துட்டோமே ஆனால் இதுவும் ஒரு வகையான ஆறுதல் தான’ என்று மனதில் நினைத்தாள்.
“இவள் ஏன் இப்படி பண்ணுறா இவளை நல்ல தோழியா தான் நான் நினைக்கிறேன். ஒருவேளை அவளுக்கு என் மேல பரிதாபம் வந்திருக்கலாம் இது நல்லதல்ல இவளை இனிமேல் நம்ம அவாய்ட் பண்ணனும்” என்று முடிவெடுத்தான்.
துணியைத் தோய்த்து முடித்த சுபா சமையல் செய்ய சென்றாள். அங்கு பொன்னம்மாள் சாம்பார்க்கு தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்திருந்தாள். சமையலை முடிக்கும் பொழுது மணி பதினொன்னே முக்கால் ஆனது. பின் அனைத்தையும் பேக் செய்து மறுபடியும் குளித்து ரெட் கலர் சல்வார் அணிந்து ரொம்ப சிம்பிளாக கிளம்பினாள்.
அப்போது அதைப் பார்த்த சசிகலா, “சுபாம்மா உன் கணவன் அஸ்வின் இந்தியாவிலேயே மிகப் பெரிய கார் கம்பெனியின் ஓனர் அவன் மனைவி நீ இப்படி ரொம்ப சிம்பிளா ஆபிஸ் போனா அதுக்கும் கத்துவான் அதனால மேக்கப் கொஞ்சமாவது பண்ணுமா” என்றார்.
பின் தன் நீளமான கூந்தலை போனி ட்டைல் போட்டு இயற்கையாகவே அழகாக இருக்கும் கண்களில் மை இட்டு கல் பேன்ஸி பொட்டை வைத்து விட்டு தன் உடைக்கு ஏற்றார் போல் ரெட் கலர் வளையம் அணிந்து பெரிய கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள் பார்க்க அழகாய் இருந்த அவளுக்கு வாழ்க்கையே போனதே தன்னைப் பார்க்க அவளுக்கே பிடிக்கவில்லை.
பின் அனைவரிடமும் விடைபெற்று விட்டு
அங்கு எட்டு வருடங்களாக டிரைவராய் இருக்கும் மூர்த்தியிடம், “அண்ணா அவங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு போகணும் வர்றீங்களா?” என்று கேட்டாள்.
“வாங்க போலாம் சின்னம்மா” என்றார்.
காரில் சென்றுக் கொண்டிருந்த சுபாவிற்கு கொஞ்சம் களைப்பாக இருந்தது. காலையில் இருந்து சரியாக சாப்பிடாமல் இடைவெளி இல்லாமல் வேலை செய்து அவளுக்கு களைப்பாக இருந்தது. ஆனால் சரியான நேரத்திற்குள் செல்ல வேண்டுமே என்று மனதிற்குள் பதற்றம் வேறு.
இப்படியே அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே கிண்டியில் இருக்கும் ஏ.கே கார்ஸ் என்னும் பெயர் ஒரு பெரிய கேட்டின் பக்கம் பொரிக்கப்பட்டிருக்கும் அலுவலகம் வந்து சேர்ந்தாள். அதைப் பார்த்த சுபா வியந்தாள்.
அஸ்வினின் வீட்டுக் கார் மற்றும் டிரைவர் என்பதனால் செக்யூரிட்டி எதுவும் கேட்காமல் உள்ளே அனுப்பினார்.
“நீங்க உள்ளே போய்ட்டு வாங்கமா நான் இங்கயே இருக்கேன்” என்று மூர்த்தி சுபாவின் கார்க் கதவை திறந்து விட்டார். “சரி அண்ணா” என்று சொல்லி உள்ளேச் சென்றவள் கண்ணாடியிலே செய்த கட்டிடத்தைக் கண்டு திகைத்தாள். இதற்குள் எப்படி நாம் செல்வது எங்கே கேட்பது மணி வேற பன்னிரண்டு ஐம்பது ஆகுதே என்று முழித்துக்கொண்டிருந்தாள்.
தான் உருவாக்கிய புது மாடல் காரினை தன்னுடைய சர்வீஸ் பார்ட்னரான விக்கியிடம் காட்டிக்கொண்டிருந்தான்.
விக்கி வி.கே மோட்டார்ஸ் இன் சி. இ. ஓ. இந்தியாவில் அஸ்வினுடைய கார்ஸ் அனைத்தையும் அஸ்வினுடைய ஏ. கே. மோட்டார்ஸ் மற்றும் வி. கே. மோட்டார்ஸ் தான் சர்வீஸ் செய்துக் கொண்டிருக்கிறார்கள் அதுபோக விக்கி வாசுதேவனின் நண்பனுடைய மகன் அதனால் வாசுதேவன் விக்கியிடம் கொட்டேஷன் வாங்கி கொடுத்தார்.
பொதுவாக அஸ்வின் தான் வடிவமைத்த கார்களை தன்னுடைய ஏ.கே மோட்டார்ஸ் இல் தான் செர்வீஸ் செய்யுமாறு வடிவமைப்பான் அதற்கு வேறு எங்குமே சர்வீஸ் கொடுக்க முடியாத அளவிற்கு வடிவமைப்பான்.
ஆனால் இந்தியாவில் அவனுடைய ஏ.கே மோட்டார்ஸ் மொத்தம் 1200 கிளைகளைக் கொண்டுள்ளது அது முழுதுமே சிட்டி கார்ப்பரேஷன் மற்றும் முனிசிபாலிடியில் தான் இருந்தது அஸ்வின் தயாரிக்கும் கார்கள் ஒரு லட்சத்தில் இருந்து 1000 கோடி மதிப்புள்ள கார்களை தயாரிக்கிறான்.
அதனால் நடுத்தர வர்க்கத்திலிருந்து பணக்காரர்கள் வரை அனைவரும் தரத்தை விரும்பி வாங்குவர். கிராமப்புறங்களில் புதிதாக கிளைகளை உருவாக்க தான் அஸ்வின் யோசித்தான்.
ஆனால் அங்கு மக்கள் புதிதாக ஒரு பரிச்சையம் இல்லாத கார் சர்வீஸ் சென்டரில் நம்பி கார்களைத் தருவது கடினமான விஷயம். எனவே அஸ்வின் சர்வீஸ் டீலிங் பார்ட்னர்ஷிப் கிராமப்புறங்களில் நன்கு பரிச்சயமான வி.கே மோட்டார்ஸ் இல் டீலிங் எடுத்தான். கிராமத்தில் மட்டும் இருக்கும் எல்லா வி.கே மோட்டார்ஸ் இல் வி.கே & ஏ.கே மோட்டார்ஸ் என்று பலகையில் இருக்கும்.
வி.கே மோட்டார்ஸ் இன் சி.இ.ஓ ஆன விக்கி என்கிற விக்னேஷ் இந்தியாவின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவனின் மகன் தன்னுடைய தந்தை மேற்கொண்ட தொழில்கள் அனைத்தையும் இப்போது அவன் கையில் எடுத்திருக்கிறான்.
ஆனாலும் இவனுக்கு அஸ்வின் மேல் ஒரு பொறாமை வாசுதேவன் மற்றும் விக்கியுடைய தந்தை தயாளன் ஒரே பள்ளி, கல்லூரியில் படித்தவர்கள் வாசுதேவன் வீட்டில் பண வசதி இருந்தாலுமே தயாளன் வீடு அதற்கு ஒரு படி மேல் இருவருமே நெருங்கிய நண்பர்கள்.
அவர்களுக்கு கல்யாணம் ஆன பிறகு ஒரே வருடத்தில் தான் குழந்தை பிறந்தது. அவர்கள் வளரும் போது கூட அப்போது இருந்தே விக்கியை விட அஸ்வின் தான் அழகிலும் படிப்பிலுமே முன்னில் இருந்தான்.
அவனின் ஏ.கே கார்ஸ் இன் வளர்ச்சியைக் கண்ட விக்கிக்கு பொறாமை ஏறிக்கொண்டது. இப்போது உலகப் புகழ் பெற்ற அஸ்வின் முன் விக்கி பெரிதல்ல. எனவே அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அஸ்வினோடு டீலிங் வைத்தான்.
இத்தோடு ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் ஒரு புது காரை வடிவமைத்த அஸ்வின் அதனுடைய செயல்பாடுகளை விக்கியோடு ஒரு பிரைவேட் மீட்டிங்கில் பகிர்ந்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் சுபா அவன் கம்பெனிக்கு வந்தாள்.
என்ன செய்வதென்று என்று முழித்த சுபா அங்கு ரிசப்ஷனில் இருக்கும் பெண்ணிடம், “அஸ்வின் சாரைப் பார்க்க வேண்டும்” என்று கூறினாள்.
“நீங்க யாரு மேடம்” என்று கேட்டாள் அந்த பெண். ‘இதற்கு நம்ம என்ன சொல்றது?’ என்று யோசித்துக் கொண்டிருந்த சுபாவை தன்னுடைய மீட்டிங் கேபினிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அஸ்வின் சுபாவை அவமானப் படுத்த வேண்டும் என்று நினைத்தவன் அவளை வேலைக்காரி என்று அறிமுகப்படுத்த நினைத்தான். ஏனெனில் சுபாவுடன் தனக்கு கல்யாணம் ஆனது யாருக்கும் தெரியாது என்பதால் அவளை வேலைக்காரி என்று
அவமானப்படுத்த நினைத்தான்.
உடனே ரிசப்ஷன் பெண்ணிற்கு தன்னுடைய இன்டெர்காமிலிருந்து கால் செய்து சுபாவை அவனுடைய அறைக்கு அனுப்பச் சொன்னான்.
சுபாவிடம் மூன்றாவது தளம் போங்க லிஃப்ட் இருக்கு என்று சொல்லிவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தாள் அந்தப் பெண்.
அதன்படி மூன்றாவது தளம் சென்ற சுபா எம்டி அறை எங்கே என்று தேடிக்கொண்டிருந்த போது தான் எம்டி அன்ட் சிஇஓ அறை என்று அறைக்கதவில் கோல்டன் பிளேட்டில் பொறிக்கப்பட்டு இருந்தது.
அங்கு உள்ளே செல்லலாமா இல்லை வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது “யார் நீங்க? எதுக்கு இங்க வெயிட் பண்றீங்க உங்கள நான் இங்கு பார்த்தது இல்லையே” என்று கேட்டான் விக்கி.
இதற்கு என்ன சொல்வது என்று சுபா யோசித்துக் கொண்டிருக்கும் போதே வெளியே வந்த அஸ்வின், “விக்கி நீ இன்னும் கிளம்பலயா?” என்று கேட்டான்.
அவன் பக்கத்தில் சென்ற விக்கி அஸ்வினிடம் ரகசியம் பேசுவது போல், “யார் அஸ்வின் இந்த பொண்ணு பார்க்க ரொம்ப அழகா இருக்கா அவளை பார்த்தா அவள் மேல இருந்து கண்ணே எடுக்க தோணமாட்டிங்குது ப்பா அழகான கண்கள் அழகான உதடுகள் அப்பறம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“ஸ்டாப் இட் விக்கி அவள் என்னுடைய மனைவி மரியாதையா பேசு” என்று கர்ஜித்தான்.
சின்ன வயதிலிருந்தே விக்கி இப்படி தான் பெண்களை அஷ்வினிடம் வர்ணித்துக் கொண்டிருப்பான். அஸ்வின் இதில் கலந்துக் கொள்ள மாட்டான்.
ஆனால் பெண்கள் அனைவரும் அஸ்வினைப் பார்த்து தான் பேச வருவார்கள் விக்கிக்கு அதுவும் பிடிக்காது.
