அத்தியாயம் 17
இதைக் கேட்ட சுபாவிற்கு கண்களில் கண்ணீர் மூண்டது.
”நான் சொன்னேன்றதுக்காக தான் அஸ்வின் அவர் கேபின் பக்கத்துல இருக்கிற அவரோட பெர்ஸ்னல் ரூம்ல என்னை கூட்டிட்டு போய் எனக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டாரு. நாங்க இவ்வளவு க்ளோஸா இருக்கோம் இத பார்த்தும் நீ அவர் வாழ்க்கைய விட்டு போகலைனா உனக்கு மானமே இல்லை போல” என்று பொறிந்து விட்டு அஸ்வினின் பக்கத்தில் நின்றுக் கொண்டாள்.
தீபிகா நேற்றே அரவிந்த்திற்கு அறிவுரை கூறினாள். “நீங்க சுபிக்கா விஷயத்துல தலையிடாதீங்க அஸ்வின் அத்தான் அவள் மேல பொஸஸிவ்வா இருக்கிற மாதிரி எனக்கு தோணுது. நீங்க இன்வால்வ் ஆனா அது அவருக்கு இன்னும் தான் எரிச்சலா இருக்கும் அதனால நீங்க அமைதியா இருங்க” என்றாள்.
தீபிகா சொன்னதில் நியாயம் இருப்பதை உணர்ந்த அரவிந்த் அவளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டான். ஏனெனில் தன் அண்ணன் தன் நண்பன் அஸ்வினை ரொம்பவே மிஸ் பண்ணினான் இப்போது அவர்களின் பெர்ஸ்னலில் இருந்து வெளியே வந்தவன் தன் அண்ணனை மிஸ் பண்ணிய தருணங்கள் நினைத்து
தீபிகாவிடம் பகிர்ந்தான். அதனின் பிரதிபலிப்பே இப்போது அஸ்வினை கட்டிக் கொண்டான்.
இதனைக் கண்ட தீபிகாவின் கண்ணில் ஒரு ஆனந்தக் கண்ணீர் அப்படியே தூரத்தில் நின்றுக்கொண்டிருந்த சுபாவினைக் கண்டாள். அவள் கண்ணிலுமே ஆனந்தக் கண்ணீர் என்று நினைத்தாள். ஆனால் சுபா சோனியா வந்து அஸ்வின் கூட இருக்கும் நெருக்கம் பற்றி கூறிய அதிர்ச்சியில் வருத்தத்தில் வந்த கண்ணீர் என்று யாருமே அறியவில்லை.
“அரவிந்த் நீங்க எல்லாருமே இங்க இருங்க நான் சோனியாவை அவ வீட்டுல விட்டுட்டு வந்திடறேன்” என்று சோனியாவை அழைத்தான். சுபா என்கிற ஒருத்தி இருப்பதையே மறந்து விட்டவன் காரை ஸ்டார்ட் செய்து ஓட்டிக்கொண்டிருந்தான். அப்போது தான் அவளை நம்ம பார்க்கவே இல்லையே அரவிந்துடன் சேர்ந்த சந்தோஷத்தில் அவளை பார்க்க மறந்து விட்டான் என்பதை உணர்ந்தான்.
சுபாவிற்கு அழுகை கரை புரண்டு வந்தது. என்னை அவர் பார்க்க கூட இல்லை அப்படியே போய்ட்டார் அப்போ சோனியா சொன்னது உண்மை தான் என்று அழுதுக்கொண்டிருந்தாள் இதனைக் கண்ட தீபிகா, “அக்கா என்ன ஆச்சு ஏன் இப்படி அழுகுற?” என்று கேட்டாள்.
“ஒண்ணும் இல்லை டி அரவிந்த்தும் அவரும் சேர்ந்துட்டாங்கல்ல அந்த சந்தோஷம்” என்றாள். ஆனால் தீபிகாவால் இதனை நம்ப முடியவில்லை. அவளை யோசிக்க விடாமல் இருக்க, “அரவிந்த் கிட்ட போகலாம் வா” என்று அவளை அழைத்துச் சென்றாள் சுபா.
பின் அரவிந்த் தீபிகாவிடம்,
”வீட்டுல எப்போ கல்யாணம் வெச்சிக்கலாம்னு கேட்டாங்க நீ படிச்சு முடிச்ச அப்புறம்னு சொல்லிருக்கேன்” என்றான்.
”நான் கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் படிக்கிறேனே அத்தூ” என்று வழிந்தாள்.
“நீ படிக்கிற லட்சணம் தான் எனக்கு தெரியுமே” என்றான்.
“அடுத்த வருஷம் தான் கல்யாணம் தீபி… அதுவரைக்கும் நம்ம தனியா மீட் பண்ண கூடாது உனக்கு என்னை மிஸ் பண்ற மாதிரி தோணுச்சுனா வீட்டுக்கு வா” என்றான்.
“சரியான சாமியார்” என்று முணுமுணுத்தாள் தீபிகா.
அன்று மாலையில் தன்னுடைய ஸ்கூட்டியை சோனியாவே பஞ்சர் ஆக்கிவிட்டு அஸ்வினின் கேபினுக்கு வந்தாள். அப்போது அஸ்வின் அவன் கேபினை ஒட்டி இருக்கும் தன்னுடைய பெர்ஸ்னல் அறையில் உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான்.
அங்கு சோனியா இருப்பதைக் கண்ட அஸ்வின், “என்ன ஆச்சு சோனியா கிளம்பாம இங்க என்ன பண்ற?” என்று கேட்டான்.
“அது வந்து அஸ்வின் என்னோட ஸ்கூட்டி பஞ்சர் ஆயிடுச்சு அதனால என்னை கொஞ்சம் வீட்ல டிராப் பண்றீங்களா?” என்று கெஞ்சிக் கேட்டாள்.
“ம்ம், ஓகே நீ கீழே வெயிட் பண்ணு வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு சுபாவிடம் கால் பண்ணி அவள் எங்கே இருக்கிறாள் என்பதை அறிந்துக் கொண்டு சோனியாவை அழைத்துக் கொண்டு வந்தான். சோனியா முன்னாடி மாளவிகாவிடம் இந்த மாதிரி மெசேஜ் பண்ணிருந்தாள். அதையே இப்போது சுபாவிடம் காட்டிவிட்டு ஒரு கதையை உருவாக்கி சுபாவை அழ வைத்தாள்.
அஸ்வின் வருகைக்காக அரவிந்த், தீபிகா காத்துக் கொண்டிருந்தனர் சுபாவும் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டாள். நம்ம எப்படி இருந்தாலும் அவர் முறைப்படி கல்யாணம் பண்ணவில்லையே அப்போ நமக்கு இவ்வளவு தான் உரிமை மரியாதை என்று தனக்குள்ளேயே அழுதாள்.
தான் ஏன் அஸ்வினுக்காக இவ்வளவு வருந்துகிறோம் என்ற கேள்விக்கு அவளுக்கே விடை தெரியவில்லை.
சோனியாவை அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு அஸ்வின் திரும்பி மெரினா பீச்சுக்கு வந்து அரவிந்த்திற்க்கு கால் செய்தான். ”அரவிந்த் எங்க இருக்க?” என்று கேட்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான். அப்போதே மணி எட்டு ஆகிவிட்டது.
தீபிகா அரவிந்த்தின் கண்ணைப் பார்த்து செய்கை காட்டினாள்.அதை உணர்ந்த அரவிந்த், ”அஸ்வின், நானும் தீபிகாவும் இங்க பக்கத்துல தான பார்த்தசாரதி கோவில் இருக்கு போய்ட்டு வந்திடுறோம் அரைமணி நேரத்தில இங்க இருப்போம்” என்று அவனிடம் சொல்லி விட்டுச் சென்றான்.
சுபா ஏதோ நினைவிலே இருந்ததால் அஸ்வின் வந்ததை மற்றும் அரவிந்த், தீபிகா சென்றதை கவனிக்கவில்லை அங்கே போடப்பட்டிருந்த சிமெண்ட் பென்ச்சில் உட்கார்ந்திருந்த சுபாவின் பக்கத்தில் அமர்ந்தான் அஸ்வின்.
‘நம்ம வந்து உட்கார்ந்துட்டு இருக்கோம் இவ என்னன்னா எங்கயோ பார்த்துட்டு இருக்கா’ என்று நினைத்த அஸ்வின் “சுபா” என்று அழைத்தான். தீடிரென்று அஸ்வினின் கம்பீரக் குரல் கேட்டதும் திடுக்கிட்டவள் தன் பக்கத்தில் அவன் உட்கார்ந்ததிருந்ததைப் பார்த்து பயந்து எழுந்தாள்.
“சாரி நான் உங்களைப் பார்க்கல” என்றாள்.
”ம்ம், ஏன் ஏதோ டல்லா இருக்க எனி ப்ராப்ளம்” என்று கேள்வியாய் கேட்டான்.
‘இவனிடம் சோனியா சொன்னதை கூறிவிடலாமா அதைக் கூறுவதற்கு முதலில் நமக்கு என்ன உரிமை இவனிடம் இருக்கிறது இங்க இரண்டு பேருக்கும் பேச்சு வார்த்தையே இல்லை தீபிகா கிட்ட பேசுற அளவு கூட என்கிட்ட பேச மாட்டிக்கிறாரு என்னை அப்போ அவ்வளவு கீழ் தகுதில தான் வெச்சிருக்காரு’ என்று அவளே மனப் போராட்டத்தில் யோசித்துக் கொண்டிருந்தாள்.
உடனே எழுந்து, “நான் ஒரு கேள்வி கேட்டா பதில் வரணும் சுபா என்ன யோசிச்சிட்டு இருக்க நீ?“ என்று அதட்டலாகக் கேட்டான்.
“ஒண்ணும் இல்லைங்க இரவு நேரம் தனியா இங்க இருக்குறது எனக்கு பயமா இருக்கு அரவிந்த் தீபி எங்கேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்” என்று உளறிவிட்டாள்.
சுள்லென்று அஸ்வினுக்கு ஏறியது கோபம்… “ஏய் என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது நான் ஒண்ணும் உன்னை கடிச்சு திண்ணுற மாட்டேன். என்னைப் பார்த்தா உனக்கு பயமா இருக்குதுல நான் உன் பக்கத்தில் இருக்கும் போதே தனியா இருக்கனு சொல்றனா அப்போ உன் பயமே என் மேல தான்…” சிறு இடைவெளிக்குப் பின் அவளின் இரு தோள்களைப் அழுத்தமாகப் பற்றி தன் இரு கைகளால் பிடித்தவன்,
“லுக் சுபா நான் ஒண்ணும் உன்னை மறுபடியும் ரேப் பண்ணிட மாட்டேன். என்னை பார்த்து அதுக்கு தான பயப்புடுற என்னை நீ ஒரு மனுஷனாவே நினைக்கல. அப்பறம் தான ஒரு புருஷனா நினைப்ப உன்னைய பொறுத்த வரைக்கும் நான் ஒரு பொறுக்கி அதான் கடைல உன்னை தொட்ட போது உனக்கு அருவருப்பாக இருந்தது” என்று கர்ஜித்தவன் அவளின் தோள்களில் பயங்கரமாக அழுத்தம் குடுத்தான்.
அப்படியே அவன் பிடியை இறுக்கினான். அவள் வலியில் அழுவதைப் பார்த்து அவளை தள்ளி விட்டான்.தன்னுடைய உடம்பில் அவன் கொடுத்த வலியை விட மனதில் கொடுத்த வலியை எண்ணியே அழுதாள்.அவன் சுடும் சொற்கள் அவளுக்கு பயத்தை உண்டாக்கியது.
சுபாவிற்கு ஏனோ தன் மனதையே புரிந்துக் கொள்ள முடியவில்லை. இவளை தள்ளிய பின் அஸ்வின் கொஞ்சம் தூரமாக சென்று ஒரு சிகரெட்டை பத்த வைத்தான்.
இது நாள்வரை அஸ்வின் சிகரெட் பிடிப்பதை அவள் பார்த்தது இல்லை ஒருவேளை வீடு என்பதால் பிடிக்காமல் இருந்தாரா? இல்லை நம்மை பிடிக்காமல் சிகரெட் பிடிக்கிறாரா? என்று மனதில் ஆயிரம் குழப்பம் எழுந்தது.
அஸ்வின் பொதுவாக டிரிங்ஸ் சோஸியல் டிரிங்கிங் என்று சொல்லும் அளவிற்கு தான் குடிப்பான். ஆனால் சிகரெட்டை உபயோகப்படுத்தமாட்டான். கல்யாணம் ஆன பின்னர் சுபாவை பழிவாங்கவே அவளை மணம் புரிந்தோம் என்று தன்னையே ஏமாத்திக் கொண்டிருக்கும் அவனுக்கு சுபாவின் அருகாமை தேவைப்பட்டது ஏனென்று அவனுக்கே தெரியவில்லை.
‘ஒருவேளை அவளின் அழகு நம்மையும் டிஸ்டர்ப் பண்ணுகிறதா?’ என்று நினைத்தவன் அவள் தன்னிடம் பேசவே பயப்படுகிறாள் தன்னுடைய நெருக்கத்தில் அருவருக்கிறாள் என்று அவ்வப்போது சிகரெட் பிடிக்கிறான்.
நம்ம அவரை கோபப்படுத்திக்கொண்டே இருக்கோமே இது எங்கே போய் முடிய போகிறது என்று சுபா பயந்தாள். அரவிந்தும், தீபிகாவும் பார்த்தசாரதி கோவில் சென்று சாமி கும்பிட்டு வந்தபோது அஸ்வின் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான்.
சுபா கடல் அலைகளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அரவிந்த்திற்கு அஸ்வின் இப்படி இறுக்கமாக சிகரெட் பிடிப்பதை பார்ப்பதற்கு மனது பாரமாக இருந்தது.
பின் அனைவரும் பக்கத்தில் இருக்கும் அந்த பெரிய ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்குச் சென்றனர். அஸ்வின் சுபாவிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனின் இந்த அமைதி சுபாவிற்கு மேலும் அச்சத்தை கிளப்பியது.
அரவிந்த், தீபிகா, அஸ்வின் நன்றாக பேசிக்கொண்டிருந்தனர். சுபாவின் மனது மட்டும் சோனியா சொன்ன விஷயம் மற்றும் அஸ்வினின் நடவடிக்கை குழப்பத்தில் ஆழ்த்தியதால் தீபிகாவிடமும் கூட பேசாமல் வந்தாள்.
வீட்டிற்கு அஸ்வினும் அரவிந்த்தும் சேர்ந்து பேசிக்கொண்டு வருவதை பார்த்த பெரியவர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். பின் சுபா பால் கொடுக்க அஸ்வின் அறைக்குச் சென்றாள்.
அவளின் முகத்தைக் கூட பார்க்காமல், “பாலை அங்க வெச்சிட்டு போ” என்று அவளைப் போகச் சொன்னான். சுபா தன் மார்க் ஷீட்ஸை தீபிகாவிடம் வாங்கி விட்டு பேசிக்கொண்டு அப்படியே அங்கு அவளோடு படுத்து விட்டாள்.
அடுத்த நாள் காலை விடிந்தவுடன் வீடே பரபரப்பாக இருந்தது. அனைவரும் இன்று மாலை ரிசப்ஷன் என்பதால் சுறுசுறுப்பாக செயல் பட்டனர்.
”அக்கா மத்தியானம் சாப்பிட்டு பார்லர் போகணும் அப்படியே அங்க ஃபேஸியல் பண்ணிட்டு அவங்களே உனக்கு ஹேர்ஸ்டைல் அன்ட் மேக்ஓவர் பண்ணிவிட்டுருவாங்க” என்று சுபாவிடம் கூறினாள்.
அன்று மதியம் வரை அஸ்வின் சுபாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏதோ அபாயத்தின் அறிகுறி போல் உணர்ந்த சுபாவிற்கு அவன் சொன்ன வார்த்தை மனதிலேயே ஒலித்தது.
‘உன்னை நான் ரேப் பண்ணிட மாட்டேன் அப்படீன்னு சொல்லிருக்காரு அதனால பயப்படவேண்டாம்’ என்று தன்னையே சமாதானப் படுத்தினாள்.
மதியம் உணவு சாப்பிட்ட பின்னர் சுபாவை க்ரீன் ட்ரெண்ட்ஸ் பார்லர்க்கு அழைத்துச் சென்றாள் தீபிகா. அங்கு ஐபிரோ திரெட்டிங் ஃபேஸியல் செய்து முடிக்கவே மாலை ஐந்து ஆனது. ஆறரைக்கு ரிசப்ஷன் என்பதால் அங்கு இருந்து நேராக லீலா பேலஸிற்குச் சென்றனர்.
அங்கு தங்களுடைய பார்ட்டி ஹால் அறையில் வந்து மேக்கப் செய்யும் பெண் சுபாவிற்கு மேக்கப் செய்ய ஆரம்பித்தாள். வீட்டில் அனைவரும் அவரவர்களின் காரில் லீலா பேலஸ் வந்தடைய ஆறு மணி ஆனது. அஸ்வின் அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறையில் ரெடி ஆகிக் கொண்டிருந்தான்.
அரவிந்த், பாபு,சபேசன் விருந்தினர்களை வரவேற்றனர். வாசு மற்றும் சசிகலா அரேன்ஜ்மென்ட்ஸ் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மாளவிகா குடும்பம் மற்றும் தயாளன் குடும்பம் வந்தடைந்தனர்.
ரெட் கலர் லெஹன்கா அணிந்து பார்க்க மெழுகு பொம்மை போல் காட்சியளித்தாள் சுபா. மாளவிகா, சுபா ரெடி ஆகிக் கொண்டிருந்த அறைக்கு வந்து பார்த்தாள்.
கூடவே சோனியாவும் வந்தாள். இருவரும் சுபாவின் அழகைப் பார்த்து வாயடைத்து போனார்கள்.
ஆனால் அவளை கண்டுகொள்ளாமல் வெளியே வந்தனர். ‘நம்ம இவகிட்ட சொன்னதை நம்பலையா? அவளை பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுதே?’ என்று நினைத்த சோனியா, ‘வேற பிளான் போடணும்’ என்று யோசித்தாள்.
அப்போது தயாளன் குடும்பத்தோடு வந்தனர். விக்கியால் அது காதல் திருமணம் என்பதை நம்பமுடியவில்லை. இதில் ஏதோ விஷயம் உள்ளே இருக்கு அதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.
அஸ்வின் ரெடியாகிய பின் அங்கு போடப்பட்டிருந்த அலங்கார மேடையில் வந்து நின்றான். தீபிகா சுபாவை அழைத்துக் கொண்டு வந்து அஸ்வினின் பக்கம் அவளை நிற்க வைத்தாள்.தீபிகா இவ்வாறு பொறுப்பாக செயல் படுவதைப் பார்த்து அரவிந்த்திற்கு ஆனந்தமாக இருந்தது.
அஸ்வின் இன்னும் சுபாவின் முகத்தை பார்க்கவில்லை. சுபாவிற்கு இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற படபடப்புடன் இருந்தாள். அப்போது போட்டொகிராஃப்பர் அவர்கள் இருவரும் தங்களின் முகம் பார்க்குமாறு போஸ் கொடுக்க சொன்னார்.
அப்போது தான் அஸ்வின் சுபாவைப் பார்த்தான். அவள் அழகிய நிலவைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்தாள். பார்த்தவுடன் அவள் அழகில் ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.
ஏனோ அஸ்வினிற்கு சுபாவின் அழகிய முகம் நளினமான பெண்மை அவனை கிறக்கவைத்தது. இவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்த துளசிக்கு கண்களில் தண்ணீர் வந்தது.
ஏனெனில் தன் மகளின் வாழ்க்கை இவனால் சின்னாபின்னமாகி இருந்தது ஆனால் அவனே அதை சீர்படுத்தச் செய்கிறான் என்றே அவருக்கு தோன்றியது. தீபிகா அவ்வப்போது அஸ்வினைப் பற்றி துளசியிடம் கூறினாள்.
அவ்வளவு பெரிய கொடியவனாக அஸ்வின் அவருக்கு தெரியவில்லை. அவர் அறிந்த அஸ்வின் ஒரு நேர்மையானவன் பெண்களின் விஷயத்தில் கண்ணியமானவன்.
அதனால் அவருக்கு அஸ்வினின் மேல் சிறிய நம்பிக்கை இருந்தது சபேசனுக்கு அஸ்வினை பிடிக்கவில்லை. ஆனால் வேற வழியும் இல்லை என்பதனால் அமைதியாக இருந்தார்.
பெரிய விஐபி எல்லாம் கலந்துக் கொண்டனர் அவர்களை சுபாவிடம் அறிமுகம் செய்து வைத்தான். பின் தயாளனும் அவர் மனைவியும் வாழ்த்தி பரிசு கொடுத்தனர்.
விக்கி அவன் முறை வரும் போது யோசனையாக, அஸ்வினை அணைத்து, “கங்கிராட்ஸ் டா” என்றான். பின் சுபாவிடம் “கங்கிராட்ஸ்” என்று சொல்லி தன் கையை அவளிடம் குலுக்க கொடுத்தான்.
தான் வேலை பார்த்த நிறுவனத்தில் ஷேக் ஹாண்ட்ஸ் செய்யும் பழக்கம் சுபாவிற்கு இருந்தது. ஆனால் வெளியே யாரிடமும் இந்த மாதிரி கை குலுக்க மாட்டாள்.
இப்போது விக்கியாக கையை நீட்டிக்கொண்டிருக்கும் போது அவளுக்கு குடுக்க ஏனோ விருப்பமில்லை. உடனே அஷ்வின் அவனின் கையை தன் பக்கம் திருப்பி, “தாங்க்ஸ்” என்று சொன்னான்.
அந்தக் குரலில் கோபம் இருந்தது விக்கிக்கு அது அவமானமாய் இருந்தது. ‘சரி எனக்கு டைம் வரும் பொழுது பார்த்துக்குறேன்’ என்று மனதில் நினைத்து கிளம்பினான். பின் அடுத்து ராகுல் அவனுடைய குடும்பத்தோடு வந்தான்.
“ஹாய் மச்சான் கங்கிராட்ஸ்!” என்று அணைத்தான்.ராகுல் மற்றும் அவன் குடும்பத்தை அறிமுகப் படுத்தி வைத்தான். அவனைப் பார்த்து திகைத்த சுபா அமைதியாக இருந்தாள்.
தன்னால் வாயை திறந்து இவர் எப்படி இங்க என்று கூட கேட்க முடியாது என்று தலைகுனிந்தாள். அவளும் தன்னை சாதாரணமாக வைத்துக்கொள்ள முயன்றாலும் தோற்றே போனாள்.
அடிக்கடி போட்டோகிராஃப்பர் வேற மேடம் கொஞ்சம் சிரிங்க ப்ளிஸ் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
‘என்னது இந்த அண்ணா நம்மளயே சொல்றாரு அப்படி பார்த்தா அவர் சிரிச்சே பார்த்தது இல்ல’ என்று அவனைப் பார்த்தாள்.
தன் அழகிய வெண் பற்கள் தெரிய அழகாக சிரித்துக் கொண்டிருந்தான் அஸ்வின்.
‘இவருக்கு சிரிக்கலாம் தெரியுமா என்ன!’ என்று அவனை ரசித்துக் கொண்டிருந்தவள் அவன் அதைப் பார்த்து விடக் கூடாது என்று திரும்பி விட்டாள்.
சோனியா மேடை ஏறவில்லை அவளுக்கு இவர்களைப் பக்கத்தில் ஜோடியாக பார்க்க சுத்தமாக பிடிக்கவில்லை. தீபிகாவுடன் அரவிந்த்தும் சேர்ந்து அந்த இடத்தையே கலகலப்பாக்கினர். மாளவிகா குடும்பம் விடைபெற்றுக் கொண்டிருந்த போது சோனியாவைக் காணவில்லை.
அப்போது சுபாவிற்கு அழைப்பு வந்தது ஒரு புது எண்ணில் இருந்து யார் என்று நினைத்து கால்லை அட்டென்ட் செய்தவள், “அஸ்வினும் நானும் எவ்வளவு க்ளோஸ்னு சொல்லியும் நீ கேட்கலல்ல மாப்பிள்ளை ரும்க்கு வந்து பாரு நாங்க எவ்வளவு க்ளோஸ்னு” என்றாள்.
இதயம் படபடவென்று துடித்துக் கொண்டிருந்தது சுபாவிற்கு… “இப்போது ரூமிற்கு போகலாமா? இல்லை வேண்டாமா?’ என்று யோசித்துக் கொண்டிருந்த போதே தன்னை மீறி கால்கள் அஸ்வினுக்கு கொடுக்கப்பட்ட அறைக்குச் சென்றது ரிசப்ஷன் முடிஞ்ச அப்புறம் ரெஸ்ட் எடுப்பதற்காக அஸ்வின் அங்கு சென்றவுடன் சுபாவிற்கு இப்படி கால் பண்ணிவிட்டு சோனியாவும் அஸ்வினின் அறைக்கு அழுகையோடு உள்ளே சென்றாள்.
அவளை தன் அறையில் எதிர்பாராத அஸ்வின், ‘இவள் ஏன் இங்கு வருகிறாள்?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே பாசாங்கு அழுகையுடன்,
“அஸ்வின் என்னால முடியல நீங்க தான் எனக்கு ஒரு வழி சொல்லணும்” என்று அழுதாள்.
“என்ன ஆச்சு சோனியா?” என்று கேட்டுக்கொண்டிருந்த போதே அஸ்வினை கட்டிப் பிடித்தாள் சோனியா.
சுபா வருகிறாளா என்பதை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அவள் வந்தவுடன், “அஸ்வின் ப்ளிஸ்” என்று நடித்தாள். இதைப் பார்த்த சுபா அழுதுக்கொண்டே அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாள்.
இச்செயலில் திடுக்கிட்ட அஸ்வின், “சோனியா ரிலாக்ஸ் வாட் ஹாப்பண்ட்” என்று விலக்கினான்.
சுபா சென்றதை உறுதி படுத்திக் கொண்டவள்,
“நான் உங்களை முழு மனதாக விரும்புகிறேன் உங்களை கல்யாணம் பண்ண நினைச்சேன். இது மாளவிகா அண்ணிக்கும் தெரியும் என்னால உங்கள மறக்க முடியல” என்று அழுதாள். உண்மையாகவே தன்னை காதலித்திருக்கிறாள் என்று அவளை ஆறுதல் படுத்தினான்.
“சோனியா ஜஸ்ட் பீ கூல் என்னால உன் உணர்ச்சிகளை புரிஞ்சிக்க முடியுது ஆனா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை வரும் சோ டேக் கேர்” என்று அந்த அறையில் இருந்து வெளியே வந்து விட்டான்.
அஸ்வின் நேஹா அவள் காதலை சொன்ன போது அவளுடைய தொடர்பையே துண்டித்து விட்டான். ஆனால் சோனியாவிடம் அப்படி செய்ய முடியவில்லை.
ஏனெனில் அவள் மாளவிகாவின் நாத்தனார் அதுவும் இல்லாமல் இதற்கு மாளவிகாவும் பொறுப்பு காதல் என்ற ஒன்றை அவள் வளர விட்டிருக்க கூடாது. எனவே சோனியாவே உணருவாள் என்று வெளியே வந்தபோது துளசி குடும்பமும் பாபு குடும்பமும் விடைபெற்றுக் கொண்டிருந்தனர்.
சுபா அங்கு அழுதுக்கொண்டிருந்தாள். “நானும் உங்க கூடவே வரேன்மா ப்ளீஸ் என்னையும் கூட்டிட்டு போங்க” என்று அழுதாள்.
“அது முடியாதுமா நீயும் மாப்பிள்ளையும் முறையா நம்ம வீட்டுக்கு வரணும் இனிமேல்” என்றார் துளசி. அவள் அழுவதை யோசனையாக பார்த்துக்கொண்டிருந்தான் அவள் கணவன் அஸ்வின்.
சுபாவிற்கு வாழ்க்கையே வெறுத்தது. எதற்கு நாம் உயிரோட இருக்கிறோம் தன் கணவன் இன்னொரு பெண்ணை கட்டி பிடித்ததை நினைத்து தீயில் நிற்பதை போல் உணர்ந்தாள்.
மாளவிகா குடும்பம் விடைபெற்ற பின்னர் துளசி மற்றும் பாபு குடும்பமும் விடைபெற்றனர். தனியாக நின்ற சுபா மனதளவிலும் தனிமையாய் உணர்ந்தாள்.
“சுபா நீ முதலில் மாமா காருல வீட்டுக்கு போய் அங்க என்னோட அறையில் ஒரு சாரி மற்றும் பிளவுஸ் இருக்கு மா அதை போட்டுட்டு அங்கேயே வெயிட் பண்ணு நானும் அஸ்வினும் இங்க செட்டில் பண்ணிட்டு வந்திடுறோம் அப்புறம் சுபாம்மா குளிச்சிடாத” என்றார்.
அப்போது எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லாததால் “சரி” என்று வாசுதேவனோடு காரில் சென்று விட்டாள். அவர் அவளை வீட்டில் விட்டு எங்கோ வெளியில் கிளம்பினார்.
அன்று மதியம் பெரியவர்கள் சாப்பிடும் போது சசிகலா ஆரம்பித்தார். “இன்று இரவு அஸ்வினுக்கும் சுபாக்கும் சடங்கு நடத்தணும்” என்றார்.இதுவே துளசிக்கும் சரி என்று பட்டது. அதனால் இரவு அஸ்வினின் அறையை அலங்காரம் செய்ய வேலைக்காரர்களுக்கு உத்தரவிட்டார் சசிகலா.
இந்த பேச்சு நடக்கும் பொழுது அஸ்வினும் அங்கு இருந்தான். அதனால் முதலிரவைப் பற்றிய விஷயம் சுபாவிற்கு மட்டும் தான் தெரியாது. ஏனென்றால் அப்போது அவள் வீட்டில் இல்லை பார்லருக்கு
தீபிகாவோடு சென்றிருந்தாள்.
சசிகலாவும் அஸ்வினும் வீட்டிற்கு வரும் போது சுபா அவர் சொன்ன புடவையில் ஹாலில் அமர்ந்துக் கொண்டிருந்தாள். “அஸ்வின் நீயும் ரெடி ஆகி கீழே வாப்பா” என்றார்.
ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிட்டு வந்த அஸ்வின் சுபாவை அழுத்தமாகப் பார்த்தான். அவளிடம் எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லை. பின் சசிகலா இருவரையும் அமர வைத்து தலையில் எண்ணெய் தேய்த்தார்.
‘எதுக்கு இதெல்லாம் பண்றாங்க?’ என்று யோசித்த சுபா முதலிரவு ஏற்பாடாக இருக்கும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.
பின் இருவரையும் குளித்து வர சொன்னார். “சுபா நீ என் ரூம் போ மா அங்க உனக்கு புடவை செட் இருக்கும்” என்றார். சுபாவும் அவர் சொல்வதை எல்லாம் செய்தாள். தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்து விட்டு ஒரு சல்வாரை அணிந்து வெளியே வந்து தலையை டிரையரில் காய வைத்தாள்.
பின் கட்டிலில் இருந்த புடவையைப் பார்த்தாள். அது ஒரு விலை உயர்ந்த சீனா சில்க் சாரி பார்க்க அழகாக இருந்தது. ஆனால் எதற்கு இப்போது புது சாரி என்று நினைத்தவள் சாரியை மாற்றினாள்.
பின் அங்கு அதன் பக்கத்தில் இருந்த பவுடர் பொட்டு கண்மையைப் பார்த்தவளுக்கு ஏதோ இடித்தது தலையை ஓபன் ஹாரில் போட்டு ஒரு சின்ன க்ளிப் மாட்டினாள். இதெல்லாம் எதற்கு என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
“பார்க்க அவ்வளவு அழகா இருக்கம்மா இந்தா பூ வெச்சிக்கோ” என்று தலையில் வைத்துவிட்டார் சசிகலா.
“அத்தை தூங்க தான போறேன் எதற்கு இதெல்லாம்?” என்று ஒரு சந்தேகத்தில் கேட்டாள்.
“இன்னிக்கு உனக்கும் அஸ்வினுக்கும் முதலிரவுமா அங்க ரூம்ல அஸ்வின் இருக்கான் நீ கிளம்பு” என்று எளிமையான ஒப்பனையில் இருந்த மருமகளை ரசித்தார்.
‘என்னது முதலிரவா இதை நான் எதிர்பார்க்கலையே இப்போ என்ன பண்றது?’ என்று அதிர்ந்தாள்.
“சுபா இந்தா பால் செம்பு எடுத்துட்டு போமா” என்று அவளை வெளியே அனுப்பினார். என்ன செய்வதென்று திகைத்து நின்றவள் இப்போது உள்ளே செல்லாமல் இருக்க முடியாது நமக்கு வேற வழியும் இல்லை அஸ்வின் அவள் விருப்பம் இல்லாமல் தொட மாட்டேன் என்று நேற்று கூறிய கூற்றை மனதில் வைத்துக்கொண்டு மெல்ல சென்று அஸ்வின் அறைக் கதவை திறந்தாள்.
அறைக் கதவை திறந்து உள்ளே சென்றவுடன் அமைதியாக கதவு பக்கமே நின்றாள். மெதுவாக நிமிர்ந்து பார்க்கும் போது வேஷ்டி சட்டையில் கம்பீரமாக தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு கட்டிலின் பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்தான் அவளுடைய கணவன்.
அஸ்வினின் அறையில் சுபா படுத்த மூன்று நாட்களில் அவன் அறைக் கதவை மூடவில்லை. ஆனால் இப்போது அவளைப் பார்வையாலே அளந்தவன் நேராக அவளைக் கடந்து சென்று கதவைத் தாழிட்டான். இதே சுபாவிற்கு பீதியைக் கொடுத்தது ஆனாலும் அவன் சொல் மீற மாட்டான் என்று தன்னையே சமாதானம் செய்துக் கொண்டாள்.
பின் அவனிடம் பாலைக் கொடுத்தாள் அதை வாங்கியவன் அங்கிருந்த டேபிளில் வைத்தவன் திரும்பி சுபாவைப் பார்த்தான். அந்தப் பார்வையில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த
சுபாவிற்கு ஏதோ அபாயக்குறி தோன்றியது.
