அத்தியாயம் 18
சுபாவின் பக்கத்தில் நடந்து வந்த அஸ்வின் அவளை நெருங்கி அவளுடைய முகத்தை தன் இரு கைகளில் ஏந்தினான். முதலில் அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்தவன் அவளின் விசும்பல் சத்தம் கேட்டு அவளை விட்டுவிட்டான்.
”என்ன ஆச்சு?” என்றவனின் குரலில் எரிச்சல் இருந்தது.
“எனக்கு பயமா இருக்கு ப்ளிஸ் என்னை விட்டுருங்க” என்றாள் கெஞ்சுதலாக.
”உன் மனசுல நீ என்ன நினைச்சிட்டு இருக்க சுபா இன்னிக்கு நமக்கு முதலிரவு நீ ஒண்ணும் சின்ன குழந்தை இல்லை அதே மாதிரி நமக்கு இது முதல் தடவையும் இல்லை” என்று அழுத்தமாக அவளைப் பார்த்து சொன்னான்.
“நீங்க சோனியாவ கட்டிப்பிடிச்சத நான் பார்த்தேன். உங்களுக்கு அவளை பிடிச்சிருக்குனா என்னை விட்டுருங்க. நான் எங்க அப்பா அம்மா கூடவே போய்டுறேன்” என்றவளின் குரல் கரகரத்தது.
”இன்னும் ஒரு வார்த்தை பேசுன நான் மனுஷனா இருக்க மாட்டேன். நான் சோனியாவை கட்டிப்பிடிச்சேன் நீ அதை பார்த்த ரைட்…”
“அவள் தான் என்ன கட்டிப்பிடிச்சா இரண்டுக்கும் அர்த்தம் வேற பதினோரு வருஷம் முன்னாடியும் இப்படி தான் நீ விழக்கூடாதுனு உன்னை தாங்கி பிடிச்சு என்னோட அணைச்சேன். அப்பயும் என்னை தப்பா தான் புரிஞ்சிக்கிட்ட இப்பவும் என்ன தப்பா தான் புரிஞ்சிருக்க” என்று கர்ஜித்தான்.
சிலையாய் நின்ற சுபாவிடம்,
“நான் நினைச்சா உன்னை பலவந்தமா இப்போ அடைய முடியும். ஆனா நான் அப்படி பண்ண மாட்டேன் நீயே என்ன தேடி இப்போ வரணும் வருவ வர வைப்பேன்” என்று அதட்டியவன் தன் அலமாரியைத் திறந்து ஒரு ஃபைலை எடுத்தான்.
அதைப் பார்த்த சுபா அதிர்ந்தாள். இது அவளுடைய மார்க் ஷீட்ஸ் இருக்கும் ஃபைல் இது எப்படி இங்கே வந்தது.
‘அய்யோ கடவுளே! இது என்னோட வாழ்க்கை ஆச்சே!’ என்று நினைத்துக் கொண்டிருந்தவள் கண்ணில் அழுகை அருவியாய் கொட்டியது.
அதை அவள் முன் கொண்டு வந்தவன், “உன்னோட மார்க் ஷீட்ஸ் இப்போ சாம்பலா எரிய போகுது” என்று லைட்டரை ஆன் செய்தான்.
“ப்ளிஸ் என்னோட முழு வாழ்க்கை அதுல தான் இருக்கு அத எதுவும் பண்ணிடாதீங்க” என்று கெஞ்சினாள்.
“இதை நான் எரிக்கக்கூடாதுனா நீ இப்போ எனக்கு வேணும் அதுவும் நீயா என்ன தேடி அங்க வரணும் உன்னோட முழு சம்மதத்தோடு நீ எனக்கு கிடைக்கணும்” என்று மிரட்டிவிட்டு கட்டிலில் சென்று அமர்ந்தான்.
தலையே சுற்றியது போல் உணர்ந்தாள் சுபா. சோனியா கட்டிப்பிடித்தாலும் அஸ்வின் கட்டிப்பிடித்தாலும் ஒன்று தான் எப்படி சோனியாவிடம் நெருக்கமாக இருந்துவிட்டு தன்னிடம் இப்படி எதிர்பார்க்கிறார் தன்னை என்னவென்று நினைத்திருக்கிறார் என்று மனதுள் ஆயிரம் கேள்விகள் குழப்பங்கள் எழுந்தது. ஆனால் எதற்கும் அவளுக்கு விடையும் தீர்வும் கிடைக்கவில்லை.
“இன்னும் ஐந்து நிமிஷத்துல நீ இங்க வரலைன்னா நான் இதை எரிச்சிடுவேன். என்னால ரொம்ப நேரம் வெயிட் பண்ண முடியாது” என்று திமிராக பேசினான் அஸ்வின். என்ன செய்வதென்று தெரியாமல் நின்று ஐந்து நிமிடங்கள் ஆனது.
பின்னர் அவள் அழுதுக்கொண்டே அதே இடத்தில் நின்றாள். தன் லைட்டரை ஆன் செய்து ஃபைலின் முனையில் நெருப்பை வைத்தான் அஸ்வின். அதைக்கண்ட சுபா தன்னை மீறி ஓடி வந்து, “வேண்டாம் நீங்க சொல்றதை நான் செய்றேன் அணைச்சிருங்க ப்ளிஸ்” என்றாள் அழுதுக்கொண்டே.
அந்த மார்க் ஷீட்ஸை அலமாரியில் வைத்து
பூட்டியவன் சுபாவிடம் நெருங்கினான். அவளுக்கு பின்னால் இருந்து அவளை அணைத்தவன் அவளின் கூந்தலின் நறுமணத்தை முகர்ந்து அதை முன்னால் தள்ளியவன் அவளின் கழுத்தில் முத்தம் இட்டான்.
பின் அவளை தன் முன்னே திருப்பி அவனின் இதழை அவளோடு சேர்த்து இதழொற்றினான். நீண்ட நேரம் நீடித்த இந்த இதழொற்றல் சுபாவின் சிணுங்கலில் ஒரு முடிவுக்கு வந்தது. அவளை விடுவித்தவன் அவளை தூக்கிக் கொண்டு கட்டிலிற்குச் சென்றான்.
பின் சுபாவை தன்னவள் ஆக்கினான். இரவு முழுதும் அஸ்வின் சுபாவை விடவில்லை. சுபாவிற்குக் காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை அவ்வளவு அலுப்பாக இருந்தது. தன்னைக் கட்டிக்கொண்டு படுத்திருந்த கணவனின் கைகளை எடுக்க முயன்றாள்.
ரொம்ப முயற்சி செய்து அவன் முழிக்காமலே அவன் கையை எடுத்தவள் தன் நிலை குறித்து தன் மேலே கோபம் எழுந்தது. ‘நேற்று அவரோட இருந்த போது எனக்கு அது பிடிச்சிருந்தது அவர் என்னோட மேலும் மேலும் இருந்த போதும் நானும் விருப்பத்துடன் தான் அவரோட இருந்தேன்’ என்று நினைத்த மனசாட்சியை எண்ணி கூனிக் குறுகினாள்.
தன் ஆடைகளை சரி செய்துக் கொண்டவள் அவன் விழிக்கும் முன் பல் தேய்த்து குளித்து முடித்து கீழே செல்ல வேண்டும் என்று கடகடவென செயல்பட்டாள். கீழே சென்றவள் நேராக சமையலறைக்குச் சென்று வேலையைத் தொடங்கினாள்.
நேற்று நடந்த அனைத்தும் அவள் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. அவளால் சரியாக வேலையில் ஈடுபட முடியவில்லை எப்படி அஸ்வினை எதிர்கொள்ள போகிறோம்…
‘அவரால் எப்படி இன்னொரு பெண்ணிடம் நெருக்கமாக இருந்துவிட்டு என்னையும் அவர் ஆசைக்கு மிரட்டி பணிய வைக்க முடிந்தது. எனக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை’ என்று மனதில் போராட்டம் தொடர்ந்தது. அதற்கு தன் உடலும் அவனுடன் ஒத்துப்போனதை நினைத்து தான் அவளுக்கு இன்னும் அவமானமாக இருந்தது.
அஸ்வின்க்கு காபியை கொடுத்து விட்டு அவன் முகத்தைக் கூட பாராமல் கீழே வந்தாள். பின் சாப்பாடு வைத்த போதும் அவள் குனிந்த தலை நிமிரவேயில்லை. அவன் அலுவலகம் சென்ற பின் தான் மூச்சே விட்டாள்.
பின் மதியம் சாப்பாடுக் கொண்டு செல்லும் போது கூட ஏதோ பயமாக இருந்தது. அவள் அவன் அறைக்கு செல்லும் போது அவன் இல்லை அங்கேயே உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு கால் செய்து அவனின் பெர்ஸ்னல் அறைக்கு உள்ளே வருமாறு அழைத்தான். உள்ளே சென்று அவனின் சாப்பாடு டேபிளில் கொண்டு வந்ததை அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.
அவன் வந்தவுடன் சாப்பாட்டை எடுத்து வைத்தாள். அவர்களுக்குள் பேச்சுவார்த்தை ஏதும் இல்லை அஸ்வின் சாப்பிட்டு முடித்தவுடன் அவள் இடத்தை சுத்தம் செய்து கிளம்ப தயாரானாள். அஸ்வினிற்கு சுபாவின் மேல் கோபம் பயங்கரமாக இருந்தது.
அவளுக்கு அவன் மேல் நல்ல அபிப்ராயம் இல்லை என்பதை உணர்ந்தவனுக்கு அவள் மேல் காதலும் இருந்தது ஆனால் அந்தக் காதலையும் அவன் உணரவில்லை. சோனியாவைப் பற்றி எதாவது விளக்கம் கூறுவானா என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு கிடைத்தது ஏமாற்றமே.
அன்றும் இரவு அதே போல் அஸ்வின் அவளின் மார்க் ஷீட்ஸைக் காட்டி அவளை தன் ஆசைக்குப் பணிய வைத்தான்.
ஆனால் அதன் பின்னர் அப்படி ஒன்று நடந்த மாதிரியே காட்டிக் கொள்ள மாட்டான். சுபாவிற்கு தான் இப்படி ஒரு வாழ்க்கை அருவருப்பாக இருந்தது.அஸ்வின் வீட்டின் மாடியிலேயே அப்போ அப்போ சிகரெட் பிடிக்க ஆரம்பித்தான். இதைக் கண்ட சசிகலா சுபாவிடம் வந்தார்.
“எனக்கு தெரியும்மா உங்களோடது நார்மல் கல்யாணம் இல்லை. ஆனா அஸ்வின் இப்போலாம் சிகரெட் பிடிக்கிறான்மா, அவன் முன்னாடி லாம் அப்படி இல்லை உங்க இரண்டு பேருக்கும் எதாவது பிரச்சனையா இருந்தா பேசித் தீர்த்துக்கோங்க” என்றார்.
இப்படியே ஒரு மாதம் சென்றது. தன் மாமியார் சொன்னதையே நினைத்தவள் அஸ்வினிடம் இதைப் பற்றி பேசலாம் என்று யோசித்தாள். அன்று ஒரு நாள் மதியம் சுபா சாப்பாடு கொண்டு வரும் போது அவனுடைய பெர்ஸ்னல் அறையில் ஒரு பெண்ணின் சிரிக்கும் சத்தம் கேட்டது.
உள்ளே செல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவளின் மனது படபடத்தது.ஒரு ஐந்து நிமிடம் பொறுத்து பார்த்தவள் மனதை கல்லாக்கிக் கொண்டு உள்ளேச் சென்றாள் சுபா.
அங்கு அஸ்வின் சோனியாவோடு சிரித்து பேசிக்கொண்டிருந்தான். சுபாவைக் கண்டும் காணாத மாதிரி அவளோடு பேசிக் கொண்டிருந்தான்.
“எனக்கு இன்னிக்கு சாப்பாடு வேண்டாம் நீ வீட்டுக்கு போ எனக்கு முக்கியமான வேலை இருக்கு” என்று கிளம்ப சொன்னான். அஸ்வின் உள்ளே சோபாவில் அமர்ந்து இருக்க அவனுக்கு எதிர் சோபாவில் அமர்ந்துக் கொண்டிருந்தாள் சோனியா.
“அஸ்வின் நம்ம தான் இப்போ வெளியே போறோம்ல அங்க கூட சாப்பிடலாமே” என்றாள். சுபா இன்னும் கிளம்பாமல் இருப்பதைப் பார்த்து, “ம்ம்… நீ கிளம்பு சுபா” என்றான் அழுத்தமாக.
சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவளுக்கு அழுகை வந்தது. கீழே சென்றுக் கொண்டிருக்கும் போதே சுபாவிடம் வழியை மறைத்தாள் சோனியா.
“நீ நாங்க கட்டிப்பிடிச்சத நேர்ல பார்த்துமே கூட ஒதுங்கி போகலனா சரியான ஜடமா இருப்ப போல… நாங்க நெருக்கமா இருக்கோம்னு தெரிஞ்சும் இப்படி நந்தி மாதிரி குறுக்க இருக்கியே” என்று எரிந்து விழுந்தாள்.
“அவருக்கு வேணும்னா டிவோர்ஸ் குடுக்க சொல்லுங்க ஸைன் பண்ணி தரேன்” என்று அழுதுக்கொண்டே வீட்டிற்கு சென்று விட்டாள்.
அன்று காலையில் இருந்தே அஸ்வின் மனது கடுப்பாக இருந்தது. ‘அவளுக்கு நம்ம மேல பாசமே இல்லையா? தினமும் இரவு நான் தூங்கின அப்புறம் அழுவுறா, அவள் என்னை எப்பவுமே புருஷனா ஏத்துக்க மாட்டாளா?’ என்று சிகரெட்டைப் பிடித்தான். அச்சமயத்தில் தான் சோனியா அஸ்வினின் அறைக்கு வந்தாள்.
”என்ன விஷயம் சோனியா?” என்று புருவத்தை உயர்த்தினான்.
“அது வந்து மூன்று நாள்ல அண்ணா அண்ணிக்கு கல்யாண நாள் அதற்கு நான் கிஃப்ட் வாங்கலாம்னு இருக்கேன். அது வந்து இரண்டு பேருக்கும் விலை உயர்ந்த வாட்ச் வாங்கணும். எனக்கு என்ன செலக்ட் பண்ணனும்னு தெரியாது நீங்க இருந்தீங்கனா ஆன்லைன்ல நல்ல பிராண்ட் சூஸ் பண்ணுவீங்க அதான்.”
“சரி ஓகே லஞ்ச் டைம் இங்க வந்திரு சூஸ் பண்றேன்” என்றான்.
‘இவன் கிட்ட நெருங்குறது ரொம்ப கஷ்டம் போல எவ்வளவு மேக் அப் பண்ணிட்டு வந்து பேசுனாலும் கண்டுக்க மாட்டிக்கிறான்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு கிளம்பினாள்.
அவன் சொன்ன மாதிரியே மதியம் கேபினுக்கு வந்தவள் அஸ்வின் அவனுடைய அறையில் இருப்பதை அறிந்து உள்ளேச் சென்றாள். அஸ்வின் சுபாவிற்காக அந்த அறையை லாக் போடாமல் சாத்தி வைத்திருந்தான்.
ஆனால் சோனியா வந்ததை அவன் உள்ளே இருக்கும் சிசிடிவி யில் கவனிக்கவில்லை கவனித்து இருந்தால் வெளியே வந்திருப்பான். உள்ளே வந்தவளை வெளியே அனுப்பினால் நல்லா இருக்காது என்றே அவளை அங்கேயே உட்கார வைத்து செலக்ட் செய்ய தொடங்கினான்.
எதுவுமே பிடிக்கவில்லை என்று வேண்டும் என்றே இழுத்தடித்த சோனியா ஷோரூமில் பார்க்கலாம் ஈவ்னிங் போகலாம் என்றாள்.இருட்டும் நேரத்தில் அவளோடு தனியாய் சென்றால் நல்லா இருக்காது என்பதால் சாப்பிட்டு விட்டு வருவதாய் கூறினான்.
அப்போது தான் சுபா அங்கு வந்தாள். வந்தவள் உள்ளே வராமல் கதவின் பக்கத்தில் நின்றது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அனைத்தையும் சிசிடிவியில் கண்டவன் சுபா தன்னை நம்பாமல் ஒட்டுக்கேட்கிறாள் என்றே தவறாக நினைத்தான்.
அவளுக்கு தன் மேல் சுத்தமாக நம்பிக்கை இல்லை என்று உறுதிபடுத்திக்கொண்டான். அந்த கடுப்பில் தான் அவளை வேண்டும் என்றே கண்டுகொள்ளாமல் சாப்பாடும் வேண்டாம் என்று அவளை அனுப்பினான்.
‘என்னது இவ்வளவு நேரம் சுபா சாப்பாடு எடுத்துட்டு வருவானு சீன் போட்டாரு. ஆனா அவ கிட்ட இப்போ எரிஞ்சு விழுறாரு இதை நமக்கு சாதகமா யூஸ் பண்ணிக்கலாம்’ என்று சோனியா சுபாவிடம் அப்படி கூறினாள்.
அப்பாவி சுபா அழுதுக்கொண்டே வீட்டிற்கு சென்றவள் சாப்பிடாமல் படுத்துவிட்டாள். அவள் எழுந்திருக்கும் போது தலை பாரமாக இருந்தது. இரண்டு நாளாகவே சுபாவிற்கு காலை எழுந்ததும் வாந்தி வருகிற மாதிரி இருந்தது. அவளுக்கு அந்த மாதம் நாள் வேற தள்ளி போயிருந்தது.
வெளியேச் சென்று ஹோம் பிரக்னன்சி கிட்டை வாங்கி வீட்டில் செக் பண்ணிப் பார்த்த சுபாவிற்கு சந்தோஷம் கலந்த பயம். ஆம் சுபாவின் வயிற்றில் அஸ்வினையுடைய இரத்தம் இருப்பது உறுதியானது. இதை யாரிடம் எப்படிச் சொல்ல என்றே தெரியாமல் தன்னை மீறி கண்ணில் இருந்து சந்தோஷக் கண்ணீர் வந்தது.
தாய்மையின் உணர்ச்சி அவளுக்கு புதிதாக இனிமையாக இருந்தது. இந்த விஷயத்தை சசிகலாவிடம் கூறினாள்.வாசுதேவனும் வீட்டில் இருந்ததால் அவருக்கும் விஷயம் தெரிந்து மகிழ்ச்சி ஆனார்கள்.
அதற்குள் சசிகலா துளசிக்கு கால் செய்து விஷயத்தை சொல்லவும் அங்கே குடும்பமே சந்தோஷமாக இருந்தது. அன்று இரவு வீட்டிற்கு வந்த அஸ்வினுக்கு ஸ்வீட் கொடுத்தார் சசிகலா. “அஸ்வின் ஒரு ஹாப்பி நியூஸ் நீ அப்பா ஆக போற நாங்க எல்லாம் தாத்தா, பாட்டி ஆக போறோம்” என்றார்.
ஒரு நிமிடத்தில் சந்தோஷப்பட்டவன் பின் அமைதியாய் ஆனான்.
சசிகலாவிற்கு அவன் நடந்த விதம் பயமாக இருந்தது தான் தந்தையாய் ஆகப் போகிறோம் என்பதை விட ஒரு மனிதனுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்கும் அப்போது ஒரு வேளை இவன் சுபாவை உண்மையாக மனைவியாய் கருதாமல்…
‘ஐயோ கடவுளே! அந்த பொண்ணு ரொம்ப பாவம் அஸ்வின் ஏன் இப்படி கல் நெஞ்சுக்காரன் ஆனான்’ என்று தனக்கே தெரியாமல் குழம்பினார்.
தன்னுடைய அறைக்கு வந்த அஸ்வின் அங்கு அவன் அறையில் கீழே பாயை விரித்து படுத்துக்கொண்டிருந்த சுபாவைப் பார்க்க ஒரு நிமிடம் பாவமாக இருந்தது.
‘ஏன் சுபா என்னோட குழந்தைய சுமந்துட்டு இருக்கிற உனக்கு நான் வேண்டாம் ஆனால் என்னோட குழந்தை மட்டும் வேண்டுமா! அவ்வளவு மோசமானவனாக உனக்கு இருக்கேனா..?’
‘மனசு ரொம்ப வலிக்குது சுபா நான் தந்தை ஆன விஷயம் முதல்ல எனக்கு தான தெரிஞ்சிருக்கணும். இந்த சந்தோஷமான விஷயத்தை நீ தான எனக்கு முதல்ல சொல்லிருக்கணும் உனக்கும் எனக்கும் இருக்கிற அந்த அந்தரங்கம் அந்த உறவு இந்த உலகத்துல இது நம்ம இரண்டு பேர் குள்ள தான் அப்போ நான் அப்பாவான விஷயம் என் அம்மாவே சொன்னாலும் இந்த விஷயத்துல அவங்க மூணாவது மனுஷங்கதான்’ என்று பால்கனியில் சிகரெட் பிடித்தவன் தூங்கிக்கொண்டிருந்த சுபாவிடம் மனதினால் கேள்வி எழுப்பினான்.
சுபா தூங்கி எழுந்த போது அஸ்வின் அவனுடைய லாப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். சுபாவிற்கு முதல் தடவையாக அஸ்வினை எதிர்கொள்ள வெட்கமாக இருந்தது. அவனுடைய அணுகுமுறை தப்பாக இருந்தாலும் சுபாவின் மனதும் அவனோடு ஒன்றிவிட்டதே இது அவளுக்கும் தெரியாத ஒன்று…
தனக்கு அவன் மேல் இருக்கும் காதலின் பிரதிபலிப்பு பயமாக பதற்றமாக வெளிப்பட்டது. அஸ்வினும் ஒரு தடவை கூட அவளை மென்மையாய் கையாளவில்லை. அவனுடைய முரட்டு தனமும் திமிரும் தான் சுபாவின் கண்முன் வந்து நின்றது.
“சாரி தூங்கிட்டேன் காஃபி குடிச்சீங்களா? எடுத்துட்டு வரவா நீங்க மதியானம் சாப்பிடலையே எதாவது சாப்பிடுறீங்களா?” என்று கேட்டாள். கல்யாணம் ஆன இந்த ஒன்றரை மாதத்தில் இன்று தான் சுபா அஸ்வினிடம் முதல் முறையாக இப்படி அக்கறையாக பேசினாள்.
ஏனோ அஸ்வினால் இதை ரசிக்க முடியவில்லை சந்தோஷப்பட முடியவில்லை அவளின் இந்த கரிசனம் தன்னை அவள் காத்துக் கொள்ளும் ஆயுதமாய் நினைத்தான்.
அவளின் முகத்தைப் பாராமலே, “அம்மா காஃபி கொடுத்துட்டாங்க சுபா… அப்புறம் நீ என்னை பார்த்து பயப்படவேண்டாம் நான் இனிமேல் உன்னை எதுவும் பண்ண மாட்டேன். இன்ஃபாக்ட் நீ ரூம் கூட சேன்ஜ் பண்ணிக்கோ.
நீ பிரக்னன்ட் ஆயிருக்கனு தெரிஞ்சும் உன்னை இரவு வற்புறுத்த நான் மிருகம் இல்லை. அதுக்கு தான என்கிட்ட அன்பா பேசுற மாதிரி நடிக்குற இப்போ… இந்தா உன் மார்க் ஷீட்ஸ் நீ பொன்னம்மாள வர சொல்லி உன் திங்க்ஸ அந்த ரூம்க்கு வெகேட் பண்ணிக்கோ” என்றான்.
அஸ்வினின் முரட்டு தனத்தில் வாழ்ந்த சுபாவால் அவனுடைய பாரா முகமும் அவனுடைய நிராகரிப்பும் தாங்க முடியவில்லை கண்ணில் வலியுடன் கூடிய அழுகை தாரை தாரையாய் வந்தது.
”என்ன உங்க ரூம விட்டு போக சொல்றீங்களா? இல்லை உங்க வீட்டை விட்டே வாழ்க்கையை விட்டே போக சொல்றீங்களா?” என்று அழுதுக்கொண்டே கேட்டாள். “அது உன் இஷ்டம்” என்று அவளைப் பார்க்காமலே கூறினான்.
“என்னைய அனுப்பிட்டு நீங்க சோனியா கூட சந்தோஷமா இருக்க முடிவு பண்ணிட்டீங்க. அதான் உங்க குழந்தை என் வயித்துல இருக்குனு தெரிஞ்சும் நீங்க என்ன அவாய்ட் பண்றீங்க. அப்போ இவ்வளவு நாளா என்ன ஒரு விபச்சாரி மாதிரி தான் யூஸ் பண்ணிருயிக்கீங்களா?” என்று மனதில் உள்ள வலி கடும் சொல்லாய் தான் என்ன பேசுறோம் என்றே தெரியாமல் வெளியே வந்தது.
கன்னத்தில் விழுந்த அறையோடு கீழே சுருண்டு கிடந்தாள் சுபா.
”ச்சீ நல்ல குடும்பத்துல பிறந்துட்டு பேசுற பேச்சா இது எப்படி டி உன்னால இவ்வளவு அசிங்கமா பேச முடியுது. எப்போ பார்த்தாலும் சோனியா சோனியா யூ ஆர் டீகிரேடிங் மை கேரக்டர் யூ ஸ்டுபிட் உமென் யு ஆர் போட்ரேயிங் மீ அஸ் அன் உமனைஸர்” என்று கத்தினான்.
“என் லைஃப்ல நான் பண்ண பெரிய தப்பு உன்னை தொட்டது தான் அதனால தான் என் லைஃப் இப்போ நரகத்துல வந்து நிக்குது. நீ சொன்ன மாதிரி அந்த சோனியாவ கல்யாணம் பண்ணிருந்தா கூட நான் நிம்மதியா இருந்துருப்பேன் போல அவள் என்னை மனசால விரும்பறா.”
“நீ பிரக்னன்ட்டா இருக்கிறதுனால தான் இப்போ என் முன்னாடி உயிரோட இருக்க இல்லன்னா நீ பேசின பேச்சுக்கு ச்ச்ச உன் மூஞ்ச பார்க்கவே பிடிக்கல… நீ எனக்கு வேண்டாம் ஆனா என் குழந்தை என்கிட்ட தான் இருக்கணும் வளரணும். உன்கிட்ட இருக்க விட மாட்டேன் நீ வெளிய போடி கெட் லாஸ்ட்” என்று ரூம் கதவை ஓங்கி அடித்துவிட்டு வெளியேச் சென்று விட்டான்.
‘முடிந்தது எல்லாமே முடிந்தது அவர் வாயில இருந்தே என்னை பார்க்க பிடிக்கலனு சொல்லிட்டாரு. இப்போ கூட சோனியாவ விட்டு குடுக்க மாட்றாரு என்னோட இருந்தததையே நரகம்னு சொல்லிட்டாரு. இதுக்கு அப்புறமும் நான் ஏன் உயிரோட இருக்கணும்.’
‘ஆனா அஷ்வின் உங்களுக்கு தெரியாது நான் உங்கள எவ்வளவு விரும்புறேன்னு ஆனா எப்போ ஏதோ ஒரு சோனியாவ உங்க பொண்டாட்டியை விட உயர்வா பேசுனீங்களோ அப்போவே நீங்க எனக்கு தேவை இல்லை. ஆனா இந்த குழந்தை எனக்கு வேணும். உங்க பார்வையில நான் இருந்தா என் குழந்தைய என்கிட்ட இருந்து பிரிச்சிடுவீங்க.’
‘நான் இப்போ மதுரை போனாலும் என்ன நிம்மதியா இருக்க விட மாட்டீங்க’ என்று யோசித்தவள் தன் துணிகளை பேக் செய்து விட்டு தன்னுடைய மார்க் ஷீட்ஸை எடுத்தவள் அதை வெறித்துப் பார்த்தாள்.
‘இதை காப்பாத்த தான இவ்வளவு நாள் இரவு அவருக்கு ச்ச’ என்று நினைத்தவளின் உடல் நடுங்கியது. அதை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்பினாள். அவள் கிளம்பும் போது நேரம் ஒன்பது மணி ஹாலில் யாரும் இல்லை என்பதைப் பார்த்தவள் மடமடவென வெளியில் சென்றாள்.
“சுபாம்மா எங்க போறீங்க?” என்ற செக்யூரிட்டி அலறல் காதில் விழுந்தும் விழாத மாதிரி ரோட்டில் நடந்துச் சென்றாள். அந்நேரம் பார்த்து டிரைவர் மூர்த்தி இரவு சாப்பிடச் சென்றதால் அவரும் இல்லை. உள்ளே சென்ற செக்யூரிட்டி, “அம்மா, அய்யா வாங்க” என்று அலறினார்.
“என்ன ஆச்சு ப்பா? ஏன் இப்படி கத்துற?” என்றார் வாசுதேவன்.
“ஐயா சுபாம்மா ஏதோ பேக் தூக்கிட்டு வெளியே போறாங்க கூப்பிட்டாலும் திரும்ப மாட்றாங்க” என்றான். இதைக் கேட்டு வெளியே ஓடிப் போய் பார்த்தனர் வாசுதேவன் மற்றும் சசிகலா ஆனால் சாலையே வெறிச்சோடி இருந்தது.
“நான் காரை எடுத்துட்டு போய் பார்த்துட்டு வரேன். நீ பயப்படாதே சசி… அஸ்வின் எங்கே? அவன் கார் இல்லை அவனுக்கு கால் பண்ணு” என்று படபடப்பாக காரை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
இதுவரை அஸ்வின் பார் பக்கம் சென்றது இல்லை. ஆனால் இன்று முதன் முதலாக ஈசிஆரில் இருக்கும் பாரில் சென்று குடித்தான். குடித்துக்கொண்டே இருந்தான். இன்னும் குடித்தால் நம்மை அது கட்டுக்குள் கொண்டு வந்திரும் என்று தன் காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தான்.
சசிகலா அவனுக்கு ஃபோன் பண்ணிக்கொண்டே இருந்தார். ஆனால் அவன் ஃபோனை பார்க்கவில்லை பார்க்கும் மனநிலையிலும் இல்லை. வீட்டிற்கு வந்து நேராய் அவன் அறையில் தூங்கியவன் அடுத்து காலை பத்து மணிக்கு தான் எழுந்தான்.
அஸ்வின் எழுந்திருக்கும் போதே அவனுடைய தலை பலமாக வலித்தது. நேற்று நடந்தவை நினைத்து மனது சலிப்பானது. அவள் மேல் கோபம் இன்னும் போகவில்லை. அப்போது கீழே ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததைக் கேட்டு வந்தான். அங்கு வாசுதேவனும்,அரவிந்தும் பதற்றமாகவும் சசிகலா, துளசி மற்றும் சபேசன் அழுதுக்கொண்டிருந்தனர்.
“அம்மா என்ன ஆச்சு?” என்று கேட்டு வந்தவனிடம், “என் பொண்ணை என்ன டா பண்ண பாவி..?” என்று அஸ்வின் சட்டையைப் பிடித்தவர், “எனக்கு முதல்ல இருந்தே உன்னை அவளுக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்ல…”
“இதோ இங்க இருக்காங்களே இந்த பெரிய மனுஷங்க இவங்களை நம்பி அவளை இங்க அனுப்பினேனே அவள் வாழ்க்கைய கெடுத்து அவள சுக்குநூறாக்கி உன் குழந்தைய சுமக்க வெச்சு அவளை வெளியே அனுப்பிட்டியே அவள் இன்னும் மதுரைக்கு வரல… அவ உயிரோடு இருக்காளா இல்லையானு கூட தெரியல” என்று அழுதார் சபேசன்.
அஸ்வினுக்கு ஒன்றும் புரியவில்லை தன் அம்மாவிடம் திரும்பி, ”அம்மா சுபா எங்க சொல்லுங்க மா சுபா எங்க?” என்று தன் அன்னையை உலுக்கினான்.
“சுபா நேத்து நைட் வீட்ட விட்டு எங்கயோ போய்ட்டா… உனக்கு கால் பண்ணா நீ தான் குடிச்சிட்டு வந்து கிடந்தியே… நீயெல்லாம் மனுஷனாடா பூ மாதிரி இருந்த பொண்ண கசக்கி அனுப்பிட்டியே“ என்று கத்தினார் வாசுதேவன்.
அந்த அதிர்ச்சியில் சோபாவில் பொத்தென்று உட்கார்ந்தான் அஸ்வின்.
“பெரியப்பா நான் போலீஸ்ல இன்பார்ம் பண்ணிருக்கேன் சுபா கிடைச்சிடுவா நீங்க யாரும் கவலைப்படாதீங்க” என்று அஸ்வினைப் பார்த்தவன்,
“அவளுக்காக இல்லனாலும் அவள் குழந்தைக்காகவாவுது அவள் நன்றாக இருப்பாள்” என்றான் அரவிந்த்.
“அம்மா அஸ்வின் அய்யா ரூம்ல இந்த லெட்டர் இருந்தது” என்று ஓடிவந்தாள் பொன்னம்மாள். அந்த லெட்டரை வாங்கினான் அஸ்வின். அவனிடம் அதை பிடுங்கி, “இதை படிக்க கூட உனக்கு தகுதி இல்லை” என்று வாங்கிய வாசுதேவன் சத்தமாக படித்தார்.
அன்புள்ள அத்தைக்கு சுபா எழுதுகிறேன்.
“நான் அவருக்கு பொருத்தமானவள் இல்லை. எனக்கு என்னுடைய குழந்தை மட்டுமே போதும் வேற எதுவும் வேண்டாம். இனிமேல் என் வாழ்க்கை அவரோட இல்லை அவருக்கு வேறு ஒரு திருமணம் நடத்தி வைத்துக்கொள்ளுங்கள்.”
“இந்த ஒன்றரை மாதம் நீங்களும் மாமாவும் என்னை உங்களுடைய மகள் போல் பார்த்துக்கொண்டீர்கள். என்னை நினைத்து கவலைப் படாதீர்கள் என் குழந்தைக்காக இருப்பேன். என் அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அவருக்கு இன்னொரு திருமணம் முடிந்த பின் என் அப்பா அம்மாவிடம் நான் செல்வேன்.
“நான் எடுக்கும் முடிவிற்கு முழு பொறுப்பு நான் தான். இதற்கும் உங்களுடைய மகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விடைபெறுகிறேன். இப்படிக்கு சுபா” என்று முடிக்கும்போது வாசுதேவன் கண்ணிலும் கண்ணீர். அஸ்வினை தவிர அனைவரின் முகத்திலும் கண்ணீர் ஆறாய் ஓடியது.
இத்தோடு முதல் பாகம் முடிகிறது. சுபா உயிரோடு இருக்காளா? அப்படி உயிரோடு இருந்தால் எங்கு இருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.
