அத்தியாயம் 2

பழசை எல்லாம் நினைத்து பார்த்த சபேசனுக்கு துளசியின் மீது பெரும் மதிப்பு 20 வருடங்கள் தன்னுடைய வார்த்தையை கடைப்பிடிக்கிறார். சில நேரங்களில் தீபிகாவை விட சுபாவிற்கே செல்லம் குடுப்பார்கள். சுபாவோ தீபிகா விற்காக விட்டு கொடுப்பாள். தீபிகாவிற்கும் சுபா என்றால் உயிர்.

 

தன்னுடைய அன்னை வயிற்று அக்கா இல்லை ஆனாலும் ஒரு தாயைப் போல பொறுப்பாக தன்னை வளர்த்தவள் தீபுவின் சுபா. கல்யாணம் ஆன பொழுது துளசி சுபா மட்டும் போதும் வேறு குழந்தை வேண்டாம் என்று நினைத்தார். 

 

ஆனால் சபேசன் பார்வதிக்கு ஒரே மகன் வயதின் முதிர்வு காரணமாக இறந்து விட்டார்(சபேசன், துளசி கல்யாணம் நடந்து ஒரு மாசத்திற்குள்). அப்போது அவரை தாயாய் ஆதரித்தது துளசி தான். சகோதரன், சகோதரி இல்லாத நிலை அப்போது தான் புரிந்தது. இந்நிலை சுபாவிற்கும் ஏற்பட கூடாது என்று நினைத்தார். 

 

அனைவருக்கும் அன்று மீனாட்சி அம்மனின் தரிசனம் கிடைத்தது. சுபா யாதவா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறாள். அதே கல்லூரியில் தீபிகா இயற்பியல் முதலாம் ஆண்டு படிக்கிறாள். இருவரும் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால் சுபா தான் பார்ப்பவர்கள் கவரும் விதத்தில் இருப்பாள்.

 

ஐந்தரை அடியில் உள்ள சுபா நீளமான மீன் போன்ற கண்கள் கொண்டவள். மஞ்சள் நிறத்தில் தேகம் கொண்டவளுக்கு அடர்த்தியான நீ்ண்ட தலைமுடி. செய்து வைத்த சிற்பம் போல் இருக்கும் சுபா தன் இயற்கை அழகை மெனக்கிட மாட்டாள். 

 

பார்க்க மாடர்ன் பெண் மாதிரி இருக்கும் தீபிகா மாநிறத்தில் துளசியின் ஜாடையில் இருப்பாள். இவளைப் பார்ப்பவர்கள் இவள் அழகி என்று தான் சொல்லுவார்கள். இவள் பேசினால் வீட்டில் சிரிப்பு சத்தம் கண்டிப்பாக இருக்கும் அவ்வளவு சுட்டி. 

 

இப்படி தெளிவான நீரோட்டமாய் சென்ற இவர்கள் வாழ்க்கையில் விரைவில் சூறாவளி வர நேரிடும் என்பதை அறியாமல் சந்தோஷமாக இருந்தனர். 

அத்தகைய சமயத்தில் தான் துளசிக்கு வாசுதேவனிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. “ஹலோ! அண்ணா எப்படி இருக்கீங்க? அண்ணி எப்படி இருக்காங்க பசங்க எப்படி இருக்காங்க?” என்று கேட்டார் துளசி.

 

“எல்லாரும் நல்லா இருக்காங்க மா. நீ மாப்பிள்ளை தீபுக்குட்டி லாம் எப்படி இருக்கீங்க?” என்று கேட்டார். 

 

“எல்லாரும் நல்லா இருக்கோம்” என்றார். தப்பித் தவறி கூட சுபாவைப் பற்றி வாசு விசாரிக்கவில்லை. அப்போது தான் வாசு சொன்னார் தன் மகள் மாளவிகாவிற்கு திருமணம் நிச்சயம் ஆனது என்று. வாசுதேவன் தன் குடும்பத்தோடு பத்து வருடங்கள் முன்னர் சென்னையில் குடியேறினார்.

 

அவர் தனியாக தொழிலை ஆரம்பித்தார். “வாசு ட்ராவல்ஸ்” “வாசு ஜீவல்லர்ஸ்” இவை இரண்டிலும் வெற்றியைக் கண்டார். மாளவிகாவின் திருமணத்திற்கு அனைவரும் வர வேண்டும். 

 

நான் மாப்பிள்ளையிடமும் பேசுகிறேன் என்று வைத்தார். மாளவிகாவின் திருமணத்திற்காக ஷாப்பிங் சென்றனர். அப்போது சுபாவையும் அழைத்தனர். “எனக்கு அடுத்த மாதம் ப்ராஜெக்ட் வேலை அதிகமாக இருக்குமா. அதனால என்னால கல்யாணத்திற்கு வர முடியாது” என்றாள்.

 

துளசி சுபாவின் தலையை கோதிவிட்டு, “சுபிக்குட்டி மனச போட்டு குழப்பிக்காத. சின்ன வயசுல நடந்தது மறந்துரு” என்றார். “துளசிம்மா அரவிந்த் இப்போ கூட என்கிட்ட தொலைப்பேசில பேசுவான். எங்க நட்பு தொடர்ந்து எட்டு வருஷம் நல்லா போகுது. அரவிந்த்னால பாபு மாமாவும் ஈஸ்வரி அத்தையும் கூட என்கிட்டே அன்பா இருக்காங்க. 

 

உங்களுக்காக சுப்பிரமணியன் தாத்தா, லஷ்சுமி பாட்டி என்கிட்ட அன்பா இருக்காங்க எனக்கு இதுவே போதும். சில விஷயங்களை என்னால மறக்க முடியல அம்மா மறக்கவும் முடியாது” என்று அழுதுக் கொண்டேச் சென்றாள் சுபா. 

 

தன் அறையில் வந்து படுத்துக் கொண்ட சுபாவிற்கு தூக்கமே வரவில்லை. தன் வாழ்க்கையில் நடந்த கொடுமையை நினைத்துப் பார்த்தாள்.

 

 *******

 

எட்டு வருடங்களுக்கு முன்பு துளசி தன் மகள்களை மே மாதம் விடுமுறைக்காக தன் தந்தையின் வீட்டிற்கு அனுப்பினாள். தீபிகா எல்லா மே மாதம் விடுமுறைக்கும் செல்வாள்.

 

ஆனால் சுபா அங்கே செல்ல மாட்டாள் அத்தகைய சமயத்தில் தான் சுபா பூப்படைந்தாள். தன்னுடைய வீட்டிலேயே விமர்சையாக செய்தார் சபேசன்.

 

அப்போது தான் மே மாதம் விடுமுறை தொடங்கின. லஷ்சுமி அம்மா துளசிக்கு தொலைப்பேசியில் அழைத்து சுபாவிற்கு உளுந்தங்களி செய்து தரச் சொன்னார். 

 

துளசி எவ்வளவு முறை முயன்றும் சரியான பதத்திற்கு வரவில்லை பொதுவாக புதிதாக வயதிற்கு வந்த பெண்களுக்கு களி ரொம்ப முக்கியம் அது அவர்களுடைய கர்ப்பப்பைக்கு நல்லது. அதனால் இம்முறை விடுமுறைக்கு சுபாவையும் சேர்த்து அனுப்ப சொன்னார் இங்கு ஒரு மாதம் தான் செய்து தருவதாக கூறினார்.

 

முதலில் மறுத்த துளசி சுபாவின் நலனுக்காக சபேசனிடம் சம்மதம் வாங்கி சுபாவையும் தீபிகாவோடு அனுப்பினார். சுபா எவ்வளவு மறுத்தும் துளசி கேட்கவில்லை. 

 

ஏனெனில் தீபிகா போன்று சுபாவிற்கும் நிறைய சொந்தங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடக்காது அதான் விதி இதை யாராலும் வெல்ல முடியாது. 

 

அடுத்த நாள் காலை சபேசன் சுபா மற்றும் தீபிகாவை துளசியின் தந்தை வீட்டில் விட்டு தீபிகாவிடம் சுபாவை நன்கு பார்த்துக் கொள்ளுமாறு அறிவுரைத்து விட்டு கிளம்பினார். சுபாவை யாரும் சந்தோஷமாக வரவேற்கவில்லை அதே சமயம் அவளிடம் முகம் சுளிக்கவும் இல்லை. 

 

லஷ்சுமி அம்மா சுபாவை நன்கு கவனித்தார் அவளுக்காக களி மற்றும் சத்துள்ள சாப்பாடு கொடுத்தார்கள். தீபிகா அரவிந்த் உடன் விளையாடுவாள். அரவிந்த்… பாபு,ஈஸ்வரியின் ஒரே மகன். பதினைந்து வயதான அரவிந்திற்கு சுபாவின் அமைதி ஏதோ நெருடியது.

 

அவளிடம் தானே அறிமுகப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக நட்பை வளர்த்தான் அரவிந்த். அரவிந்தின் நண்பர்களும் சுபா தீபிகாவிற்கு நண்பர்கள் ஆனார்கள். இப்படி பட்ட சூழலில் தான் வாசுதேவனின் பிள்ளைகள் விடுமுறைக்காக சென்னையில் இருந்து வந்தனர்.

 

காலையில் உணவு சாப்பிடுவதற்காக அனைவரும் கூடினர். சுபா குளித்துக் கொண்டு இருந்ததால் தீபிகா சாப்பிடுவதற்கு சென்றாள். அப்போது தான் மாளவிகா சாப்பாடு மேஜையில் சாப்பிடுவதை பார்த்தாள். “ஹாய் மாளவிகா! எப்படி இருக்க?” என்று கட்டிபிடித்தாள். 

 

அப்போது குளித்து விட்டு வந்த சுபா தீபிகாவின் சத்தம் கேட்டு மாடியிலிருந்து வேகமாக கீழே இறங்கி வந்தாள் தாவணி அணிந்திருந்ததால் கால் தடுக்கி விழப் போனாள்.

 

அப்போது ஒரு வலிய ஆண் கரம் அவளுடைய இடையைப் பிடித்து அவள் விழாமல் இருக்க கட்டிப்பிடித்து அணைத்தது. இச்செயலில் அதிர்ந்த சுபா அவன் யார் என்ன என்பது கூட அறியாமல் பளார் என்று அறைந்து விட்டாள்.

 

“யார் டி நீ? எவ்வளவு திமிர் இருந்திருந்தால் உன்ன விழாம காப்பாத்துன என்னை அடிப்ப” என்று கர்ஜித்தான்.

 

“நீங்க காப்பாற்றும் முறை தப்பு அதான் அப்படி பண்னேன். நான் விழாம இருக்கணும்னா என் கையை மட்டும் பிடிச்சு தடுத்திருக்கலாம். இப்படி செய்யணும்னு அவசியம் இல்ல” என்றாள் சுபா.

 

சுபா சின்ன வயசிலிருந்தே அமைதி ஒரு ஆண்மகனிடம் அவள் அதிர்ந்து கூட பேசினது இல்லை. அவள் இப்படி நடந்தது இதுவே முதற்முறை அதற்கு காரணம் சுபா பூப்படைந்தவுடன் துளசி அறிவுறுத்திய குட் ட்ச் பேட் டச். 

 

ஒரு  ஆடவனின் தொடுகை தப்பாக இருந்தால் நம்மை காத்துக் கொள்ள அதை தைரியமாக தட்டி கேட்க வேண்டும் அப்போது தான் பின்னாளில் தன்னை தொல்லை செய்ய மாட்டான் என்று அறிவுறுத்தினார்.

 

அதை மனதில் பதித்துக்கொண்ட சுபா கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த ஆடவனை அடித்தாள். தான் முதற்முறையாக தைரியமாக செயல்பட்டுவிட்டோம் என்று நிம்மதியாக இருந்தாள். ஆனால் பாவம் தான் செய்த செயல் அவள் நிம்மதியை அழிக்க போகிறது என்பதை அந்த பன்னிரண்டு வயதுப் பெண் அறியவில்லை.

 

சுபா சொன்ன அந்த விளக்கத்தை கேட்டு மேலும் கடுப்பானவன் அவளை பளார் என்று அறைந்து, “உன் மனசுல என்ன உலக அழகின்னு நினைப்பா? உன்ன காப்பாத்துனவனுக்கு தாங்க்ஸ் சொல்லாம கைய ஓங்குற.” என்று மடமடவென அவள் கையை முறுக்கி அவள் கழுத்தை நெரித்தான். இச்செயலில் பயந்த சுபா மூச்சுத்திணறி அழ ஆரம்பித்தாள். 

 

அவனுக்கு அப்பொழுதும் கோபம் அடங்கவில்லை. அப்போது அரவிந்த், “அஷ்வின் நிறுத்து” என்று கத்தினான். இதை தீபிகாவும் கண்டதை யாரும் அறியவில்லை.

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!