அத்தியாயம் 23
அப்போது தான் சுபாவும் ரேவதியும் பார்த்துக்கொண்டனர். சுபாவை பெங்களுரிலேயே இருக்க சொன்ன ரேவதி தன் கதையை கூறி முடித்தாள். ஆனால் சுபா தன் கதையை விளக்கி சொல்லவில்லை.
ஒருவன் தன்னை கெடுத்து மிரட்டி திருமணம் செய்து தன்னை அவனுக்கு பணியவைத்து வேறு ஒரு பெண்ணோட தொடர்பில் இருக்கிறான். இவ்வளவே அவள் அஸ்வினைப் பற்றிக் கூறியது அஸ்வினுடைய பேரும் ரேவதிக்குத் தெரியாது.
ரேவதி விக்கியின் புகைப்படத்தை சுபாவிடம் காட்டியிருக்கிறாள் ஆனால் சுபா அவனை பார்க்கும் போதே ஒரு அருவருப்புடன் தான் பார்ப்பாள். அவனின் புகைப்படத்தைப் பார்த்த போது எங்கோ பார்த்த ஞாபகம் சுபாவிற்கு இருந்தது. ஆனால் அவள் மெனக்கிடாமல் விட்டுவிட்டாள்.
சுபா தன் அப்பா அம்மா தன் தங்கையைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டு இருப்பாள் ரேவதியிடம்… அப்போது ரேவதி ஒருமுறை சுபாவிடம், “சரி நீ உன்னோட அந்த பிடிக்காத ஹஸ்பண்ட் இன்னொரு கல்யாணம் செஞ்சா தான் உன் அப்பா அம்மா கிட்ட போவனு சொல்லிருக்க அவர் கல்யாணம் பண்ணாருனு உனக்கு எப்படி தெரிய வரும் டி” என்று சந்தேகமாக கேட்டாள் ரேவதி.
“நான் அந்த வீட்ட விட்டு வந்து நாலு வருஷம் ஆகிடுச்சு டி அவர் இந்நேரம் அவள கல்யாணம் பண்ணி இப்போ அவங்களுக்கு குழந்தை கூட இருக்கலாம். ஆனாலும் எனக்கு கன்ஃபார்ம் ஆகிட்டா நான் என் அப்பா அம்மா கூட சேர்ந்திடுவேன்” என்று தயக்கமாகச் சொன்னாள் சுபா.
“ம்ம்ம், சரி நான் நாளைக்கு ஆகாஷை கூட்டிட்டு சென்னை போய் அவனை பார்க்கலாம்னு இருக்கேன் பத்து லட்சம் அவன் தான் கொடுக்கணும் டி எனக்கு வேற வழி இல்ல” என்று கவலையுடன் கூறினாள் ரேவதி.
அவளைத் தேற்றிய சுபா, “சரி நான் வெளியே போய்ட்டு வரேன்” என்று கூறிவிட்டு பக்கத்தில் இருக்கும் ATM சென்றாள் சுபா.ரூபா ஐயாயிரம் பணத்தை எடுத்தவள் வீடு திரும்பும் பொழுது அங்கு சாலையில் ஒரு கார் நின்றுக்கொண்டிருந்தது அதனைக் கண்டவள் அதிர்ந்தாள்.
ஏனெனில் அந்த காரின் முன் பலகையில் ஏ.கே என்று லோகோ இருந்தது. இது அஸ்வினுடைய பிரான்ட் கார்ஸ் இதைப் பார்த்து ஒரு நிமிடம் அப்படியே நின்றவள் பின் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.
இந்த ஊரில் நிறைய பேர் இவரோட கார்கள் வெச்சிருக்காங்க இவ்வளவு நாள் நம்ம இதை நோட் பண்ணல இன்னிக்கு ஏன் நம்ம இதை நோட் பண்றோம் என்று யோசித்துக்கொண்டிருந்த போதே வீடு வந்ததால் அந்த எண்ணத்தை கைவிட்டவள் நேராக ரேவதியிடம் சென்று ரூபா ஐயாயிரத்தை கொடுத்தாள். முதலில் மறுத்த ரேவதி பின் சுபாவின் கட்டாயத்தால் அதை வாங்கிக் கொண்டாள்.
அடுத்த நாள் ரேவதி ஆகாஷை அழைத்துச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தாள். அப்போது சுபா அவளிடம், “ரேவதி நானும் உன் கூட வரேன்” என்றாள்.
“என்னாச்சு சுபா? நீ சென்னை பக்கமே வர மாட்டீயே அப்போ ஏன்?” என்று புரியாமல் கேட்டாள்.
“ஆகாஷ் டிஸ்சார்ஜ் ஆகி இரண்டு நாள் தான் ஆகுது. அவன் ஐந்து வயசு பையன் சித்து மாதிரி தான் ஆகாஷ் எனக்கு… நீ அவனை பார்க்க கண்டிப்பா ஆகாஷையும் கூட கூட்டிட்டு தான் போவ ஏனா உனக்கு சொந்தம்னு அங்க யாரும் இல்லை.”
“அந்த ஆளும் நீயும் பேசுறதெல்லாம் சின்ன பையனான இவனை பாதிச்சிரகூடாது அதனால நானும் சித்துவும் வரோம். ஆகாஷ் கூட அங்க பக்கத்துல ஹோட்டல்ல இருக்கோம். நீ மட்டும் அவனை பார்த்துட்டு வா” என்றாள் சுபா.
“நீ சொல்றதும் எனக்கு சரின்னு தான் தோணுது டி சரி எல்லாரும் கிளம்பலாம்” என்று அனைவரும் பஸ்ஸில் கிளம்பினர். சித்விக்கிற்கும் ஆகாஷிற்கும் ஒரே சந்தோஷம் பயணத்தை குழந்தைகள் இருவரும் மகிழ்ச்சியாக அனுபவித்தனர்.
சென்னை வந்த பின் ஒரு ஆட்டோ பிடித்து நேராக கோடம்பாக்கத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்தனர். காலையில் அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் ரேவதி கிளம்பினாள். புனித்தின் உதவியோடு விக்னேஷின் ஆபிஸ் முகவரியை வாங்கியவள் வேறு எந்த விவரமும் புனித்திடம் கேட்கவில்லை.
விகே மோட்டர்ஸ் தலைமைச் செயலகம் கிண்டி கிளையை அடைந்த ரேவதி நேராக ரிசப்ஷன் பெண்ணிடம் விக்னேஷை பார்க்க வேண்டும் என்று கூறினாள்.
“மேடம் நீங்க யாரு அப்பாயின்மெண்ட் இருக்கா? சார் இப்போ மீட்டிங்ல இருக்காரு” என்று அந்தப் பெண் கூறினாள்.
அவளிடம் மொட்டையாக, “நான் காத்திருக்கேன்” என்று சொல்லி விட்டு ஒரு இருக்கையில் அமர்ந்தாள். நேரம் சென்றுக்கொண்டே இருந்தது. இதற்கு மேல் பொறுமை தாங்காமல் ரேவதி தானாகவே எழுந்து எம்டி அறை என்று போடப்பட்டிருந்த பலகையைப் பார்த்து,
“எக்ஸ்க்யூஸ்மீ” என்று கேட்டு அவர்களின் முக வேறுபாட்டைக் கண்டு கொள்ளாமல் உள்ளே நுழைந்தாள்.
இவளைக் கண்ட விக்னேஷ் அதிர்ச்சி ஆனான். அஸ்வினுடன் முக்கியமான டீலிங் மீட்டிங்கில் இருந்தவன் அடுத்து கண்டது அஸ்வினின் முக மாற்றத்தை தான்…
இது என்ன என்பது போல் புருவத்தை சுருக்கி விக்னேஷைக் கேள்வியாய் நோக்கினான்.
ரேவதி எதையும் பொருட்படுத்தாமல் விக்னேஷின் அருகில் வந்து, “என் குழந்தை…” என்று ஒரு நிமிடம் இடைவேளை விட்டு, “உனக்கும் எனக்கும் பிறந்த ஆகாஷிற்கு இருதயத்தில் ஒரு பிரச்சனை ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க பத்து லட்சம் ஆகுமாம்.”
“எனக்கு என் பையன் நல்ல படியா சரி ஆகணும். ஆனா பணம் தான் உன்கிட்ட நிறைய இருக்கே… நீ இந்நேரம் கல்யாணம் பண்ணி உனக்கு ஒரு குழந்தை கூட இருக்கலாம் எனக்கு நீ வேண்டாம். என் பையன் உயிரை காப்பாத்து ப்ளிஸ்… பணம் கொடு” என்று திடமாக ஆரம்பித்தவள் அழுகையோடு முடித்தாள்.
இதை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த அஸ்வின் விக்னேஷின் பதிலுக்காகக் காத்திருந்தான்.
“ஹே யூ பிளடி வுமன் எவ்வளவு திமிர் டி உனக்கு? நான் உன்னை காதலிக்கிறேனு சொன்னேனா? சொல்லு… உன் கிட்ட வழிஞ்சேன் ஆமா உன்கிட்ட கிஸ் கேட்டேன்… நீ நல்ல குடும்பத்துல பிறந்த பொண்ணா இருந்தா என்னை செருப்பால அடிச்சிருக்கணும் இல்லை எனக்கு இதுல விருப்பம் இல்லைனு விலகிருக்கணும்.”
“ஆனா நீ சீ… என் கூட இருந்த அதுவும் சந்தோஷமா… நீ என் கூட மட்டும் தான் இப்படி இருந்தியா இல்லை எவ்வளவு பேர் கூட இருந்திருப்பியோ கண்டவனுக்கு பிறந்ததுக்கு எல்லாம் செய்ய நான் இளிச்சவாயன் இல்லை கிளம்பு டி” என்று அவளை அசிங்கப்படுத்தினான்.
ஆகாஷிற்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டாள் ரேவதி. “ப்ளிஸ் உன்னை கெஞ்சி கேட்கிறேன் என் பையன் உயிரை காப்பாத்து வேணும்னா உன் கூட இன்னொரு தடவை இருக்கேன் அதுக்காவது பணம் கொடு” என்று கதறி அழுத ரேவதி விக்னேஷின் காலில் விழுந்து விட்டாள்.
“இனஃப்” என்று எழுந்த அஸ்வின், “வாட் இஸ் திஸ் விக்கி வாட்ஸ் ஹாப்பனிங் ஹியர் ஐ வான்ட் ட்ரூத் அலோன்” என்றான் அஸ்வின் கடுப்பாக. விக்கிக்கு அஸ்வினின் கோவம் பற்றி தெரியும்.
அஸ்வினிடம் பேசவே விக்கி பயப்படுவான் அதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று அஸ்வின் இது நாள் வரை நியாயத்தை தவறியது இல்லை சுபா விஷயத்தில் தவிர…
அவனுடைய ஆண்மைத்தனமான செயல் பேச்சு அனைவரையும் தன் சொல் படி பணியவைக்கும். இரண்டாவது இப்போது விக்கியை பொறுத்த வரை அஸ்வின் ஒரு எட்டாக் கனி அஸ்வின் நினைத்தால் விகே மோட்டர்ஸை ஒன்னும் இல்லாமல் ஆக்க முடியும் ஏனெனில் அவனுக்கு பண பலம் அப்படி இருந்தது.
விக்கி பெண்களோடு வழிவான் குழைவான் என்பது அஸ்வின் அறிந்த செயல் தான் ஆனால் ஒரு பெண்ணோடு உறவாடிவிட்டு அந்த பெண்ணையும் குழந்தையையும் கழட்டி விட்டது அஸ்வினுக்கு எரிச்சலைக் கூட்டியது.
அஸ்வினிடம் உண்மையை மறைக்க முடியாது என்று உணர்ந்த விக்கி அவள் கூறியது உண்மை என்பதை ஒத்துக்கொண்டான். ஆனாலும் விக்கி இதை விடாமல், “அவள் என் கூட மட்டும் தான் பிசிக்கல் ரிலேஷன்சிப்ல இருந்திருப்பானு என்ன நிச்சயம்?” என்று கேட்டான்.
இதைக் கேட்ட அஸ்வின் விக்கியின் சட்டையைப் பிடித்து விட்டான்.
“அந்த பொண்ணு கண்ல உண்மை தெரியுது சோ உனக்கு ஒரு ஆப்ஷன் தரேன் விக்கி நீ அவளை கல்யாணம் பண்ணிக்கணும் இல்லன்னா ஏகே அன்ட் விகே ஸ் டீலிங் வில் கம் டு அன் என்ட்” என்றான் தீர்மானமாக.
“அஸ்வின் திஸ் ஸ் நாட் ஃபேர் திஸ் ஸ் மை பெர்ஸ்னல்” என்றான் விக்கி சலிப்பாக.
“நீ உன் பெர்ஸ்னல் எத்திக்ஸ தான் பிரஃபஷன்லயும் காட்டுவ அன்ட் இட்ஸ் மை டிசிஷன் டு டிசைடு வெதர் டு கன்டினியூ பிசினஸ் டீலிங் வித் யூ ஆர் நாட் நான் நினைச்சா உன் கொட்டேஷன் சரி இல்லன்னு உன் கேரியரையே முடிச்சிட முடியும்” என்றான் அஸ்வின் திமிராக.
