அத்தியாயம் 24
“நீ இந்த பொண்ண கல்யாணம் பண்ணா என்கிட்ட சொல்லு பிசினஸ் டீலிங் பேசலாம்” என்று தன் இடத்தை விட்டு எழுந்த அஸ்வின் வேகமாக வெளியே சென்றான். அஸ்வின் வெளியே சென்றதும் அவனைப் பின் தொடர்ந்து ஓடினாள் ரேவதி. “சார் ப்ளிஸ் நில்லுங்க எனக்கு அவன் கூட வாழ எல்லாம் விருப்பம் இல்லை… “
“சார் நான் இங்க கோடம்பாக்கத்தில விக்ரம் ரெசிடென்சி ஹோட்டல்ல என் தோழி கிட்ட பையன விட்டுட்டு வந்திருக்கேன். பணத்தை வாங்கிட்டு அப்படியே கிளம்பிடலாம்னு இருக்கேன்.ஆனா என் பையனுக்கு அவன் தான் பொறுப்பு அவனை மாதிரி கெட்டவன் கூட வாழுறதுக்கு காலம் முழுசா இப்படியே இருந்துட்டு போய்ட்டுவேன் சார் ஆனா நீங்க எனக்காக பண்ண நினைக்கிற உதவிக்கு ரொம்ப நன்றி சார்” என்றாள்.
அவளை வித்தியாசமாக பார்த்த அஸ்வின், “அவன் கெட்டவன் தான் ஆனா நீங்க அதை விட கெட்டவங்களா ஆகிடாதீங்க” என்றான்.
அவனைப் புரியாமல் பார்த்தாள் ரேவதி.
“என்ன மீறி விக்கியால ஒண்ணும் செய்ய முடியாது. அவன் எவ்வளவு யோசிச்சாலும் அவனுடைய பதில் உங்கள கல்யாணம் பண்றதா தான் இருக்கும். உங்க பையன அப்பா கிட்ட சேர்க்காம பிரிக்கிற நீங்க அத விட மோசமானவங்க” என்று திரும்பியவன்,
“இந்த உலகத்துல தன் கணவரிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கிற எல்லா பெண்களும் மோசமானவங்க தான்” என்று கர்ஜித்து விட்டு சென்று விட்டான்.
‘என்ன இவர் என்னமோ சொல்றாரு நமக்கு அது புரியலையே யார் அப்பா யார் குழந்தை எனக்கும் விக்கிக்கும் கல்யாணமே ஆகலையே?’ என்று அஸ்வின் கூறியதைக் கேட்டு குழம்பினாள்.
“நீ நினைச்சது நடந்திருச்சுல உன் வசதிப்படி எனக்கு இன்னும் கல்யாணம் வேற ஆகல… இப்போவே அஸ்வின் கம்பெனில இருந்து டீல் டெர்மினேஷன் மெயில் வந்திருச்சு. இந்தா இதுல பன்னிரண்டு லட்சம் இருக்கு எப்படி இருந்தாலும் ஆகாஷ் என் ரத்தம் அதுக்காகவாது நமக்கு கல்யாணம் நடக்கணும்.”
“அவனுக்கு ஆப்ரேஷன் இங்க சென்னைல தான் பண்ணனும். அஸ்வினோட தங்கைக் கணவர் பெரிய இருதய மருத்துவர் அங்க தான் ஆகாஷ கூட்டிட்டுப் போகணும். அன்ட் ஒன் திங் நான் பொண்ணுங்க கூட சுத்திருக்கேன். ஆனா உன்கிட்ட மட்டும் தான் எல்லை மீறியிருக்கேன்.”
“அதனால தான் என்னவோ நான் கல்யாணம் பண்ணல இன்னும்… அதுக்காக உன்னை நான் லவ் பண்றேனு மட்டும் நினைக்காத ஏதோ ஒன்னு உறுத்துது. என்னோட விசிட்டிங் கார்ட் வெச்சிக்கோ ஈவ்னிங் கால் பண்ணு ஆகாஷ டாக்டர் அவினாஷ் கிட்ட கூட்டிகிட்டு போகணும்” என்று கிளம்பிவிட்டான் விக்கி.
நடப்பது கனவா நினைவா என்று முழித்துக்கொண்டிருந்தாள் ரேவதி. யாரோ ஒருவர் அவரைப் பார்த்து பயந்து விக்கி இவ்வளவு ஒத்துக்கொண்டாரே என்று அஸ்வினைக் கடவுளாகக் கருதினாள்.
ஹோட்டல் வந்த பின் ரேவதி அனைத்தையும் சுபாவிடம் கூறினாள். சுபாவிற்கு சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது.
“கடவுள் உன்னை காப்பாத்திட்டாரு டி” என்றாள் சுபா.
“எனக்கு இப்போ கடவுளே அந்த சார் தான் டி, அவருக்கு பயந்து தான் விக்கி இப்படி ஆயிட்டான் அவர் பார்க்க செம ஹாண்ட்சமா இருந்தாரு. ஆனா அவர் பெயர் தான் டி தெரியல விக்கி சொன்னாரு ஆனா நான் விக்கி பேசுன அதிர்ச்சில கவனிக்கல அவரைப் பார்த்து நான் கண்டிப்பா தாங்க்ஸ் சொல்லணும்” என்றாள் ரேவதி.
ஈவ்னிங் விக்கிக்கு கால் செய்தாள் ரேவதி. அதற்குள் அஸ்வின் தயாளன் மற்றும் அவர் மனைவியிடம் விஷயத்தைக் கூறினான். தன் மகனின் செயலில் அதிருப்தி அடைந்த பெற்றோர்கள் அஸ்வினால் சமாதானம் ஆனார்கள்.
“என் மருமகளையும் பேரனையும் நம்ம கூட்டிட்டு வந்திரலாம் பா இந்த விஷயம் லாம் விக்கிக்கு சொல்ல வேண்டாம்” என்றார். அஸ்வின் பொதுவாக இந்த மாதிரி விஷயத்தில் தலையிட மாட்டான்.
ஆனால் தயாளன் மிகவும் அருமையான மனிதர். தன் தந்தையின் உயிர்த் தோழர் அவர் மீது கொண்ட மதிப்பினால் அவனும் ஒப்புக்கொண்டான். அப்போது தீடிரென்று தயாளனுக்கு என்ன தோன்றியதோ!
“அஸ்வின் இந்த மாமாக்காக ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுபா, எனக்கும் உங்க அத்தைக்கும் பெருசா லக் இல்லை நாங்க ஆரம்பிச்சு வெச்ச எந்த விஷயமும் அமோகம் ஆகல அதனால நீ மட்டும் மருமகளை கூட்டிட்டு வரியா? உன் தங்கச்சிய கூட்டிட்டு வர மாதிரி நினைச்சிக் கூட்டிட்டு வாப்பா இங்க” என்று கையெடுத்து கும்பிட்டார்.
“அங்கிள் நான் கண்டிப்பா கூட்டிட்டு வரேன் உங்களுக்காக… அந்த பொண்ணு கோடம்பாக்கத்தில விக்ரம் ரெசிடென்சில இருக்கேன்னு சொன்னா நான் போய் கூட்டிட்டு வந்திடுறேன்” என்று அஸ்வின் கிளம்ப ஆயத்தமானான்.
விக்கிக்கு கால் செய்த ரேவதி டாக்டரைப் பார்க்க ரெடி என்று தான் இருக்கும் ஹோட்டல் முகவரியைக் கொடுத்தாள். ஆகாஷைக் கிளப்பிக்கொண்டு அவனுடைய ரிப்போர்டஸை எடுத்துக்கொண்டு சுபாவிடம் விடைபெற்று விட்டுக் கிளம்பும் போது,
“ரேவதி உனக்கு இனிமேல் எல்லாமே நல்லது தான் நடக்கும். அது வந்து நான் இன்னிக்கு நைட் பஸ்ஸில் பெங்களூர் கிளம்பலாம்னு இருக்கேன். ஏனா ஆகாஷ் உங்க பிரச்சனைல கஷ்டப்பட கூடாதுன்னு நினைச்சு தான் வந்தேன். அதான் இப்போ ஆல்மோஸ்ட் ஒகே ஆயிடுச்சுல… அதனால நான் சித்துவோட கிளம்புறேன் ஏனா எனக்கு சென்னையில இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ஏதோ பதற்றமா பயமா இருக்கு” என்றாள்.
தனக்காக சென்னை வந்த சுபாவை கட்டி அணைத்து அழுதாள் ரேவதி.
“உன்னை மாதிரி எனக்கு பிரண்ட் யாருமே இல்லை சுபா, நான் கெட்டுப் போய்ட்டேன்னு என் பிரண்ட்ஸ் என்ன கேவலப்படுத்திட்டு போய்ட்டாங்க. ஆனா நீ ஒருத்தி என் வாழ்க்கையில தேவதை மாதிரி வந்து என் கூட இருந்து செலவுகள் பண்ணி எனக்கு ஒரு சப்போர்ட் சிஸ்டமா இருந்திருக்க நீ கிளம்பு சுபா எப்படி இருந்தாலும் நான் பெங்களூருக்கு திங்க்ஸ் எடுக்க வருவேன் உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ண போறேன்” என்று அழுதாள் ரேவதி.
“நீ நிறைய கஷ்டங்கள் அனுபவிச்சிட்ட இனிமேல் உன் வாழ்க்கையில சந்தோஷம் மட்டும் தான் இருக்க போகுது. சரி நீ ஹாஸ்பிடல் கிளம்பு நானும் திங்க்ஸ் பேக் பண்ணனும். இன்னும் இரண்டு மணி நேரத்துல கோயம்பேடுல இருந்து பஸ் நான் கீய ரிசப்ஷன்ல குடுத்துட்டு போய்டுறேன்.”
“நீ ஆகாஷோட சேஃப்பா இரு அப்போ அப்போ கால் பண்ணு. நான் வேற அங்க போய் சித்துவ கவனிக்க ஒரு ஆள் போடணும் நான் ஆபிஸ்ல இருந்து வர வைக்கும் பார்க்குற மாதிரி” என்றாள் சுபா.
“மேரி மேடம் கிட்ட கேட்டா ஆள் பார்த்து கொடுப்பாங்க டி” என்றாள் ரேவதி. கீழே வாசலில் விக்கி காரோடு காத்திருந்தான். ஆகாஷோடு சுபாவிடம் விடைபெற்று விட்டு ஹோட்டல் வாசலிற்கு வந்தாள் ரேவதி. அங்கு விக்கி தன் காரை வைத்துக் கொண்டு காத்திருந்தான்.
அவனைப் பார்த்து, “யார் மா இவர்? எங்க போறோம்?” என்று கேட்டான் ஆகாஷ். இவனிடம் என்ன சொல்வது என்று ரேவதி முழித்துக்கொண்டிருந்த போதே, “நான் தான் உன் அப்பா ஆகாஷ் நம்ம இப்போ வெளில போறோம்” என்று ஆகாஷை தூக்க முற்பட்டான் விக்கி.
ஆனால் ஆகாஷ், “நான் உங்க கிட்ட வரமாட்டேன்” என்று தன் அம்மாவுடைய துப்பட்டாவில் மறைந்துக் கொண்டான்.
ஆகாஷூடைய செயல் விக்கிக்கு வருத்தத்தை அளித்தது. முதல் முறையாக விக்கிக்கு இரத்த பாசம் உணர்வு ஏற்பட்டது. அவனின் முக மாற்றத்தைக் கண்ட ரேவதி, “ஆகாஷ் மிங்கில் ஆக கொஞ்ச நேரம் ஆகும்” என்றாள். பின் அவர்களை தன் காரில் கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றுக் கொண்டிருந்தான்.
அஸ்வின் விக்ரம் ரெசிடென்சிக்கு வந்தடைந்த பின் அந்த ஹோட்டல் ரிசப்ஷனில் ரேவதி என்கிற பெயரில் புக் ஆன ரூம் நம்பர் கேட்டான். அவர், “ரூம் எண் 26 முதல் தளம்” என்றார். தன் அறையில் சித்விக்கை தூங்க வைத்த சுபா திங்க்ஸை பேக் செய்துக் கொண்டிருந்தாள்.
