அத்தியாயம் 25
சுபா திங்க்ஸை பேக் செய்துக் கொண்டிருந்த போது கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. ‘யாராக இருக்கும்? ஒருவேளை கிளீனிங்க்கு யாராவது வந்திருப்பார்களா?’ என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தவளுக்கு பேரதிர்ச்சி.
அவள் யாருக்கு பயந்து நான்கு வருடம் வீட்டை விட்டு தன் குடும்பத்தை விட்டு தன் ஊரை விட்டு விலகியிருந்தாளோ அவனே அவள் கண் முன் நிற்கிறான். ஏனெனில் அவள் கண்டது அவளுடைய கணவன் அஸ்வின். அஸ்வினைக் கண்ட மறுகணம் சுபாவிற்கு நடுக்கம் வந்தது.
யாரை இவ்வளவு வருடம் விரும்பினானோ யாரை இந்த அளவு நேசித்தானோ யாரை இவ்வளவு நாள் பிரிந்தானோ தன் மனைவியிடம் அவன் காதலை காட்டவில்லை என்றாலும் ஏன் தன் மனைவி மேல் உள்ள காதல் அவனே உணரவில்லை என்றாலும் தன் ஆண்மைத்தனம் மூலம் அவளை பணியவைத்து அவளை தினமும் தன்னவள் ஆக்கி அதற்கோர் உயிர்க்கொடுத்து அவளை பார்க்காமல் தவித்துக் கொண்டிருந்த அஸ்வினின் தேடல் இன்றோடு முடிகிறது.
வாசலில் நின்றுக்கொண்டிருந்த அஸ்வினைக் கண்ட சுபா என்ன செய்வதென்று அறியாமல் சிலையாய் நின்றாள். அஸ்வின் சுபாவைத் தாண்டி உள்ளே வந்தான். அப்போது சுபா பின்னாடி நகர்ந்து ஒதுங்கினாள். உடனே தன் காலால் அந்த ரூமின் கதவைத் தள்ளிவிட்டு கதவைத் தாழிட்டான்.
அவனின் இச்செயலில் பதறிய சுபா தலை குனிந்தாள். “உன்னை எனக்கு தேடி கண்டுபிடிக்குறது ரொம்ப ஈஸி சுபா, ஆனா நான் ஏன் இந்த நாலு வருஷம் இதை பண்ணலைனா தப்பு உன் மேல நீயே என்னை தேடி வரணும்னு நினைச்சேன். பட் அதுவும் நடக்கல கடைசியா விதி உன்னை என்கிட்ட இழுத்துட்டு வந்திடுச்சு. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் குழந்தையை சுமந்திட்டு என்கிட்ட இருந்து பிரிஞ்சு லெட்டர் எழுதி வெச்சிட்டு போயிருப்ப” என்று சுபாவை அடிக்க கையை ஓங்கினான்.
“அம்மா மா!” என்று ஓடிவந்து சுபாவின் காலை அணைத்துக் கொண்டான் சித்விக். சித்விக்கை கண்டவுடன் அடிக்க ஓங்கிய கையை தானாக இறக்கினான்.
“அம்மா” என்று அவளை அணைத்து அழுதுக்கொண்டே இருந்தான் சித்விக். அவனை தூக்கிய சுபா அவனை அணைத்துக் கொண்டு, “சித்து இங்க பாரு அம்மாக்கு ஒண்ணும் இல்லை அம்மா நல்லா இருக்கேன் சித்விக்! இங்க பாரு அம்மாவ” என்று அவனை சமாதானப்படுத்தவே ஐந்து நிமிஷம் ஆனது.
இதை தன் இரு கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் அஸ்வின்.
“சித்து இங்க அப்பா கிட்ட வா” என்று அழைத்தான் அஸ்வின்.
“அப்பானா யாரு?” என்று முழித்தான் சித்விக். சுபாவை அனல் வீசும் பார்வை பார்த்தான் அஸ்வின். தான் ஒருவன் அப்பா இருப்பது கூட தன் மகனுக்கு சொல்லி கொடுத்து வளர்க்கவில்லை என்றால் அவளுக்கு அவன் மீது துளி கூட விருப்பம் இல்லை.
ஆனால் அவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் இது அஸ்வினின் ரத்தம்… அவள் கண்டிப்பாக சொல்லிருக்க வேண்டும் என்று சுபாவின் மீது கடும் கோபத்தில் இருந்தான்.
“அது வந்து எனக்கு பஸ் இருக்கு நான் கிளம்பணும்” என்று தயக்கமாகக் கூறினாள்.
“நீ எங்கேயும் கிளம்ப முடியாது இனி… சுபா என்ன மேலும் மேலும் கோபப்படுத்தாத நம்ம பையன் முன்னாடி நான் கோபப்படகூடாதுனு பார்க்கறேன். உனக்கு நான் அரைமணி நேரம் டைம் கொடுக்குறேன். அதுக்குள்ள நீ ரெடி ஆகணும்” என்றான்.
“முடியாது நான் உங்க கூட வரமாட்டேன். ப்ளிஸ் என்னால உங்க கூட வாழ முடியாது நான் இப்போ தான் நிம்மதியா இருக்கேன்” என்றாள்.
“உன்னை…” என்று அஸ்வின் சொல்லிக்கொண்டிருக்கும் போதே கதவு தட்டப்பட்டது. சுபா வேகமாக சென்று கதவைத் திறந்தாள். அங்கே ரேவதி, ஆகாஷ் மற்றும் விக்கி நின்றுக்கொண்டிருந்தனர். விக்கிக்கு இங்கே சுபாவைப் பார்த்தது அதிர்ச்சி ஆனது ரேவதிக்கு இங்கே அஸ்வினைப் பார்த்தது அதிர்ச்சி ஆனது.
“விக்கி, தயா அங்கிள் ரேவதி அன்ட் ஆகாஷ வீட்டிற்கு கூட்டிட்டு வர சொன்னாங்க இப்போ நம்ம எல்லாருமே ரூம் வெகேட் பண்ணனும்” என்றான் அஸ்வின்.
“சார், உங்கள பாத்து தாங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சிட்டே இருந்தேன். இவள் என்னோட பிரண்ட் சுபா” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “சுபா என்னோட மனைவி சித்விக் என்னுடைய மகன்…உங்களுக்கு எவ்வளவு வருஷம் சுபாவ தெரியும்” என்று திமிராகக் கேட்டான்.
அவன் சொன்னதில் அதிர்ச்சி அடைந்தாலும் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்ட ரேவதி, “சார், நாலு வருஷம்” என்றாள்.
“ஓ அப்போ நாலு வருஷமா நீங்க தான் அவளுக்கு துணையா?” என்று ஏளனமாகக் கேட்டவன், “என்னை இன்னிக்கு பார்த்தீங்க தான ஏன் சுபா உங்க கூட தான் இருக்கானு சொல்லல?” என்று அழுத்தமாக கேட்டான்.
“சார்,சுபா அவளோட பெர்ஸ்னல் பெருசா பேசுனது இல்லை உங்க பேர் கூட எனக்கு தெரியாது உங்க போட்டோவும் சுபா கிட்ட இல்லை” என்று பயத்தில் உளறினாள்.
இம்முறை சுபாவைப் பார்த்து முறைத்தவன், “உன் வீட்டுக்கு போனு கூட நீங்க ஏன் சொல்லல? சோ உங்களுக்கும் துணையா ஒருத்தர் வேணும்னு அவளை உங்க கூட அப்படியே இருக்க வெச்சிட்டீங்க அம் ஐ ரைட்?” என்று கர்ஜித்தான்.
இதில் அதிர்ந்த ரேவதி அழத் தொடங்கினாள்.
“அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நானே தான் விருப்பப்பட்டு இருந்தேன். ரேவதி என்னை வெளிய அனுப்பி இருந்தாலும் நான் உங்ககிட்ட கண்டிப்பா வந்திருக்க மாட்டேன்” என்று முடிவாகச் சொன்னாள் சுபா. இதைக் கேட்ட அஸ்வின் தன் கையை இறுக்கி கதவில் ஓங்கி ஒரு அடி அடித்தான்.
“நான் கீழே இருக்கேன் பத்து நிமிஷத்துல எல்லாரும் ரெடி ஆகி கீழ வரணும்” என்று சுபாவிடம் திரும்பி அவள் முன் ஒரு விரலைக் காட்டி, “இனிமேல் உன் வாழ்க்கை என்னோடு தான் சுபா… நாலு வருஷம் என்ன ஏங்க வெச்சிட்ட அதுக்கும் சேர்த்து என் கூட இனி வாழப்போற” என்று அதிகாரமாக கூறிவிட்டு சித்துவிடம் சென்றான்.
“சித்விக் கண்ணா நான் உன் அப்பா இப்போ எல்லாரும் நம்ம வீட்டுக்கு போறோம். அங்கே தாத்தா பாட்டி லாம் இருக்காங்க” என்றான். அப்போதும் சித்விக் தன் அம்மாவை விட்டு விலகவில்லை.
“நீ பண்ண தப்புலயே பெரிய தப்பு நான் இங்க ஒருத்தன் அப்பான்னு இருக்கேன்னு கூட என் பையனுக்கு நீ சொல்லி குடுக்கல என் பெயர் கூட அவனுக்கு தெரியல இதுக்குலாம் நீ என்ன பதில் சொல்லப் போற சுபா?” என்று கை முஷ்டியை இறுக்கினான். அதற்கு அவளிடம் பதில் இல்லை அமைதியாக பயந்து நின்றாள்.
பின் மறுபடியும் சித்துவிடம் பேசியவன், “அப்பா உனக்கு சாக்லேட், ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கி தரேன் சித்து வெளிய போலாமா?” என்று கேட்டான்.இம்முறை அவனிடம் பாய்ந்தான் சித்து. அஸ்வினிடம் ஒரு வெற்றிப் புன்னகை வந்தது.
“விக்கி, ஆகாஷ கூட்டிட்டு வா” என்று தன்னோடு அழைத்துச் சென்றான்.
அவர்கள் சென்ற பின் ரேவதி சுபாவை வந்து கட்டி அணைத்தாள்.
“இவர் தான் உன் கணவனா? எனக்கு தலையே சுத்திரிச்சு பத்து நிமிஷம் அய்யோ அவர் எங்க கூட பேசுனதுக்கும் உன் கூட பேசுனதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு டி,உன் மேல ரொம்ப உரிமையா இருக்கார்னு தோணுது அவரை ஏன் டி விட்டுட்டு வந்த?” என்று கேட்டாள் ரேவதி.
“நீயும் இப்படி கேட்டுட்டல்ல… அவர் என்னை ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணல என்ன பழிவாங்க என்னை கெடுத்து என் கல்யாணம் அன்னிக்கு என்னை மிரட்டி கல்யாணம் பண்ணி அதுக்கு அப்புறம் என்னோட மார்க் ஷீட்ஸ் வெச்சு மிரட்டி அவர் கூட தினமும் இரவு என்ன இருக்க வெச்சாரு அதையும் மீறி எனக்கு அவரை பிடிச்சுது.”
“ஆனா அந்த சோனியாவும் இவரும் கட்டிப்பிடிச்சத நானே பார்த்தேன். என்கிட்ட அவளே சொன்னா அஸ்வின நான் கல்யாணம் பண்ணிக்க போறேனு அப்போ எனக்கு என்ன தோணும்? நானும் உணர்ச்சிகள் உள்ள பொண்ணு தான இன்ஃபாக்ட் நான் வீட்ட விட்டு கிளம்புறதுக்கு முன்னாடி அவரே சொன்னாரு. ஒருவேளை சோனியாவ கல்யாணம் பண்ணிருந்தா கூட லைஃப் நல்லா இருந்திருக்கும் போல அவள் என்ன மனசால விரும்பறானு சொன்னாரு. எந்த ஒரு பொண்டாட்டியாலயும் இந்த மாதிரி வார்த்தைகள் தாங்கிக்க முடியாது ரேவதி…”
“நான் அஸ்வின என் மனசால விரும்புறேன் அது எப்படினு எனக்கு இப்போ வரைக்கும் தெரியல. அவர் அந்த மாதிரி பேசுன அப்புறம் அவர் சோனியா கூட வாழட்டும்னு தான் நான் விலகி வந்துட்டேன். ஆனா இப்போ நான் அவரை சந்திப்பேன்னு நினைச்சு கூட பார்க்கல.”
“அவர் சோனியாவ கல்யாணம் பண்ணியிருப்பாருனு நினைச்சு அதனால தான சித்து கிட்ட கூட நான் அவன் அப்பா பத்தி பேசல அஸ்வின் போட்டோ என்கிட்ட இல்லை.”
“ஆனா அஸ்வின் குமார்னு கூகுள் பண்ணாலே அவர் பிக்ஸ் இருக்கும் சித்துக்கு இப்போ அப்பானு காட்டி அவர் இப்போ சோனியா கூட வாழ்ந்து ஒரு குழந்தை இருந்தா சித்து ஹர்ட் ஆயிட கூடாதேனு தான் நான் இதுவரைக்கும் அவன் அப்பா பத்தி பேசல” என்று அழுதாள் சுபா.
“சுபா அழாத டி, ப்ளிஸ் ஆனா எனக்கு என்னமோ அஸ்வின் சார் உன்னை ரொம்ப விரும்புற மாதிரி தான் எனக்கு தோணுது இதை நீயும் சீக்கிரம் உணருவ. ஆனா விக்கி அஸ்வினுக்கு தெரிஞ்சவர் தான் நீ அவரை பார்த்தது இல்லயா? நான் உன்கிட்ட விக்கி போட்டோ காட்டியிருக்கேனே” என்று கேட்டாள் ரேவதி.
“அது நடக்காது ரேவதி… அஸ்வின்க்கு என்னை பிடிக்காது சரி நீ அதை விடு இனிமேல் நான் அவர் கூட தான் இருக்கணுமாம். என்னால இனி எஸ்கேப் ஆக முடியாது சித்து விஷயத்துல வேற என் மேல ரொம்ப கோவமா இருக்காங்க ரொம்ப பயமா இருக்கு” என்று முடித்தவள் பின்,
“விக்கி அவரை நான் பார்த்தேனா இல்லையானு எனக்கே தெரியல ஒருவேளை நான் அவரை பார்த்துத்திருந்தாலும் எனக்கு அவரை ஞாபகம் இல்லை அதான் நீ போட்டோ காட்டும் போது தெரியல” என்றாள்.
“உனக்கு எதாவது பிரச்சனைனா எனக்கு கால் பண்ணி ஷேர் பண்ணு டி, என்னால உனக்கு சொலூஷன் குடுக்க முடியலனா கூட அட்லீஸ்ட் கன்சோல் பண்ணுவேன்ல” என்றாள்.
“ம்… ஆகாஷ ஹாஷ்பிடல் கூட்டிட்டு போனல என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள் சுபா.
“டாக்டர் அவினாஷ் அஸ்வின் சாரோட தங்கை ஹஸ்பண்ட தான் பாத்தோம் இப்போதைக்கு ஆப்ரேஷன் வேண்டாம் ஒரு ஆறு மாசம் ஆகட்டும்னு சொன்னாரு. அவனுக்கு சாப்பாடு ரொம்ப ஹெல்த்தியா தர சொன்னாரு.”
“நிறைய சுண்டல் பாதாம் பிஸ்தா லாம் தர சொன்னாங்க இது மைனர் பிரச்சனை தானு சொன்னாரு. அதுல இருந்து ஏதோ மனசு நிம்மதியா இருக்கு” என்று கூறினாள் ரேவதி.
அப்போது விக்கி உள்ளே வந்தான். அஷ்வின் காரில் காத்திருப்பதாக இவர்களை கிளம்பச் சொன்னான். பின் ஹோட்டலை வெகேட் செய்துக் கொண்ட பின் ரேவதி விக்கியோட காரில் ஏறினாள். சித்விக்கோடு அஸ்வின் தன் காரில் இருந்தான். சுபா அப்படியே ஏறாமல் விக்கியின் கார் பக்கமே நின்றுக் கொண்டிருந்தாள்.
இதைப் பார்த்த அஸ்வின் கடுப்பில் வேண்டும் என்றே கியர் போடாமல் ஆக்ஸ்ஸிலிரேடரை மட்டும் அழுத்தி கார் சத்தம் கொடுத்தான். தன் மேல் உள்ள கோபத்தில் தான் இப்படி செய்கிறான் என்று உணர்ந்த சுபா காரில் முன் சீட்டில் ஏறிக்கொண்டு சித்விக்கை மடியில் வைத்துக் கொண்டாள். இரண்டு காரும் வேகமாக தியாகராஜ நகரில் உள்ள தயாளன் வீட்டிற்குச் சென்றது.
தன் மருமகள் மற்றும் பேரனை வரவேற்க தயாளன் மற்றும் அவர் மனைவி வாசலில் காத்துக் கொண்டிருந்தனர். விக்கி காரில் வந்த ரேவதியின் பின் அஸ்வின் காரில் இருந்து இறங்கிய சுபாவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களிடம் ரேவதி மற்றும் ஆகாஷை ஒப்படைத்த அஸ்வின், “அங்கிள் முதல்ல சட்டப்படி இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்க நான் கிளம்பறேன்” என்று திரும்பும் போது, “அஸ்வின்… சுபா…” என்று இழுத்தார் தயாளன்.
“அங்கிள் இந்த டீடெயில்ஸ் லாம் ரேவதி கிட்ட கேட்டுக்கோங்க நான் இப்போ கிளம்பணும்” சுபாவை ஒரு பார்வை பார்த்து,
“எனக்கு நிறைய வேலை இருக்கு ஒரு நாள் வீட்டிற்கு கூட்டிட்டு வரேன்” என்று சுபாவை கூட்டிக்கொண்டு திருவான்மியூர்க்கு தன் காரில் விரைந்தான்.
