அத்தியாயம் 28
அன்று இரவு சுபா இன்னொரு அறையில் படுத்துக்கொண்டாள் சித்து மட்டும் தன் தந்தையோடு படுத்துக் கொண்டான். அடுத்த நாள் சுபா சித்துவை எழுப்ப அஸ்வினின் அறைக்குச் சென்றாள். அங்கு சித்து தூங்கிக்கொண்டிருந்தான் அஸ்வின் தன் வோர்க் அவுட்ஸை முடித்துக்கொண்டு குளித்து முடித்து வெளியே வந்தவன் சுபாவிடம் என்ன என்பது போல் பார்வைப் பார்த்தான்.
“மாமா, இன்னும் அரை மணி நேரத்தில கிளம்பணும்னு சொன்னாங்க. அதான் சித்து முழிச்சிட்டானானு பார்க்க வந்தேன்” என்று அவன் அறையை விட்டு வெளியே செல்ல போனாள்.
“அவனை தூக்கிட்டுப் போ அவன் கிளம்பும் போது நான் இருந்தா அவன் அழுவான். அவனை குளிக்க லாம் வெக்க வேண்டாம் அப்படியே தூக்கிட்டு போய் கார்லயும் படுக்க வெச்சிடு” என்று சுபாவின் கையில் இருபது ஆயிரம் ரூபாயை கொடுத்தான். “இது எனக்கு வேண்டாம்” என்றாள் தயக்கமாக…
“நான் பெங்களூர்ல வேலைக்கு போன பணம் இருக்கு” என்றாள்.
“இங்க பாரு நீ சம்பாதிச்சு தான் என் மகனை வளர்க்குற நிலையில அவனும் இல்லை நானும் இல்லை உன் பணம் நீ வெச்சிக்கோ என் மகன் என் பொறுப்பு அதனால இதை வெச்சிக்கோ” என்று அவள் கையை பிடித்து அதில் இரண்டாயிரம் ரூபாய் பத்து நோட்டை வைத்தவன் அவளிடம் திரும்பி,
“உன் பேங்க் அக்கவுண்ட் டீடெயில்ஸ் எனக்கு அனுப்பு நான் பணம் அனுப்பி விடுறேன்” என்று தன் ஆபிஸ் சூட்டைப் போட்டு கிளம்ப தயாரானான்.பின் சுபாவின் கையில் இருந்த அவளின் மொபைலை பிடிங்கியவன் தனது செல் நம்பரை சேமித்து அவளிடம் கொடுத்தான்.
“எனக்கு எப்போலாம் சித்துவ பார்க்க தோணுதோ அப்போலாம் நான் கால் பண்ணுவேன். சித்து என்னை தேடி அழுதானா நீ எனக்கு வீடியோ கால் பண்ணனும்” என்றான் கட்டளையாக.
“சரி… பெங்களுரில் என் திங்க்ஸ் இருக்கு அது எடுக்க” என்று அவள் சொல்லும் போதே, “எடுக்க நீ போக வேண்டாம் ரேவதி அன்ட் விக்கி நாளைக்கு போய் வெகேட் பண்றாங்க உன் திங்க்ஸ் இங்க வந்திரும்” என்று தன் கூலர்ஸைப் போட்டான்.
சுபாவிடம் சொல்லாமலே கீழே சென்றான். சுபாவிற்கு மூஞ்சிலே அடித்த மாதிரி இருந்தது அவன் அப்படி செய்தது.
பின் சித்துவை எடுத்துக்கொண்டு கீழே வரும் போது அஸ்வின் கீழே இல்லை என்பதைக் கண்டவள் தன் மாமியாரிடம் இதைப் பற்றி பேசச் சென்றாள்.
“அவன் சாப்பிடாமலே சென்று விட்டான் மா” என்று வருத்தத்தோடு சொன்னார்.
“அத்தை, அம்மா அப்பா உங்க கிட்ட பேசலைனு வருத்தப்படாதீங்க கொஞ்ச நாள்ல எல்லாம் முன்னாடி மாதிரி ஆகிடும். நீங்க உடம்பை பார்த்துக்கோங்க மாமாவை பார்த்துக்கோங்க. சித்து அப்பாவையும் பார்த்துக்கோங்க” என்று விடைபெற்றுச் சென்றாள்.
கார் அந்த வீட்டை விட்டு நகரும் போது சுபாவிற்கு எதையோ தொலைத்தது போல் உணர்வு எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தூங்கிக்கொண்டிருந்த சித்துவை ரசித்துக் கொண்டே வந்தாள்.
சித்து பார்க்க அஸ்வினின் மறு உருவமாகவே தெரிந்தான் அவனைப் போல அதே அழகு அதே கம்பீரம். அவர்கள் பயணம் இனிதே முடிந்து மதுரை வந்துச் சேர்ந்தனர்.
முதலில் தந்தையை தேடி அழுத சித்துவிடம், “அப்பாக்கு நிறைய வேலை இருக்கு சித்து அதனால கொஞ்ச நாள் இங்க தாத்தா பாட்டி வீட்டுல ஜாலியா இருக்கலாம். தாத்தா வீட்டு பக்கத்துலயே பார்க் லாம் இருக்கு அங்க அம்மா உன்னை தினமும் கூட்டிட்டு போறேன்” என்று ஒருவாறு சமாளித்து சித்துவின் அழுகையை நிறுத்தினாள்.
சுபா மதுரை சென்றாளா இல்லையா என்பதையே நினைத்துக்கொண்டிருந்தான் அஸ்வின். அப்போது சசிகலாவிடம் இருந்து கால் வந்தது சுபா மதுரை சென்றடைந்து விட்டாள் என்பதை சொல்லிவிட்டுச் போனை வைத்தார்.
இப்படியே ஒரு வாரம் கழிந்தது சித்துவிற்கு வீடியோ கால் செய்தான் அஸ்வின். சுபா போனை ஆன் செய்து விட்டு சித்துவின் கையில் மட்டும் கொடுத்துவிட்டு அகன்றுவிட்டாள்.
அஸ்வினும் சுபாவிடம் ஒரு வார்த்தை பேசவில்லை தன் அம்மா அப்பாவுடன் இருந்தாலும் அஸ்வின் கூட இல்லாமல் இருந்தது சுபாவிற்கு ஏதோ ஒரு வெறுமையைக் கொடுத்தது. தன் வாழ்க்கையில் சோனியா என்ற ஒருத்தி இல்லாமல் இருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று நினைக்கத் தொடங்கினாள் சுபா.
அஸ்வினை சுபா உயிருக்கு உயிராக விரும்பினாள். ஆனால் அவளின் பிரச்சனை அஸ்வின் அவளை அடைந்த விதம் மற்றும் நடத்திய விதம் அதனால் அவளுக்கு ஏனோ அஸ்வின் மேல் நம்பிக்கை வர மறுத்தது.
தன் அம்மா அப்பாவுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது ரேவதியிடம் இருந்து சுபாவிற்கு கால் வந்தது.
“ஹான்… சொல்லு ரேவதி எப்படி இருக்க? ஆகாஷ் இப்போ எப்படி இருக்கான்” என்று விசாரித்தாள்.
“நீ பேசாத டி ஒரு வார்த்தை என்கிட்ட பேசுனியா? அங்க போனதும் என்னை மறந்துட்டல” என்றாள் ஆவேசமாக.
“ஏய் அப்படியெல்லாம் இல்லை டி ஆனா என்னவோ மனசே சரி இல்லை அதான் பேச முடியல நான் இப்போ மதுரைல அப்பா அம்மாவோடு இருக்கேன்” என்று கூறினாள்.
“ஏன் டி மறுபடியும் அஸ்வின் அண்ணா உன்னை எதாவது டார்ச்சர் பண்ணினாரா?” என்று கேட்டாள்.
“ச்சே ச்சே இல்லை டி உண்மையா அவர் கிட்ட என்னால மாற்றங்கள் பார்க்க முடியுது இப்போலாம்… ஆனால் அந்த கோபம் திமிர் அப்புறம் மத்தவங்கள கன்ட்ரோல் பண்ற ஹாபிட் மட்டும் மாறவே இல்லை அப்படியே தான் இருக்கு” என்றாள் சுபா.
“ம்ம், அவர் குணமே அதான் டி அதை எப்படி அவர் மாத்துவார் இங்க விக்னேஷ் அஸ்வின் ன்ற பேர கேட்டாலே பம்மிப் போறாரு. வீட்ல எப்போவுமே மாமா, அத்தை அஸ்வின் புராணம் தான்… உன்கிட்ட ஒரு உண்மைய நான் சொல்றேன் டி, விக்னேஷ் தினமும் நைட் லேட்டா தான் வராரு. அவரே என்கிட்ட சொன்ன விஷயம் உன் அளவுக்கு நான் யார் கிட்டயும் எல்லை மீறலனு…”
“ஆனால் அவர் பொண்ணுங்க கூட நல்லா ஆட்டம் போடுறாரு டி, என்னால அதை தாங்கிக்கவே முடியல நாங்க இரண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியாவே இல்லை மத்த பொண்ணுங்க கூட சுத்துறதுனால தான் என்னவோ இவனுங்களுக்கு லாம் பொண்டாட்டி அருமை தெரிய மாட்டேங்குது.”
“உன்கிட்ட சொல்லவே இல்லை பாரேன் இரண்டு நாள் முன்னாடி வடபழனி முருகன் கோவில்ல எனக்கு கல்யாணம் நடந்தது. அந்த கல்யாணத்தை நின்னு நடத்தி வெச்சது அஸ்வின் அண்ணா தான் அவருக்கு இப்போ இந்த விக்கி பண்ற அட்டகாசம் லாம் தெரியாது கல்யாணம் முடிஞ்ச கையோடு நான் அவர் கால்ல தான் விழுந்தேன்.”
“அவர் எனக்கு தெய்வம் மாதிரி விக்கியை மாத்திடுவேனு எனக்கு நம்பிக்கை இருக்கு சுபா ஏன்னா ஆகாஷ் மேல அவனுக்கு பாசம் இருக்கு அதனால என் வாழ்க்கை நல்லா தான் போகுது” என்றாள் ரேவதி.
“அது எப்படி டி உன்னால இப்படி சொல்ல முடியுது அவர் பொண்ணுங்க கூட சுத்துறாருனு உனக்கே தெரியுது அப்போ எப்படி உன்னோட வாழ்க்கை நல்லா போகுதுனு சொல்ல முடியுது.”
“ஒரு பொண்ணு புருஷன் தண்ணீ அடிச்சாலும் தாங்கிப்பா, சிகரெட் பிடிச்சாலும் தாங்கிப்பா, ஆனா பொண்ணுங்க விஷயத்துல மட்டும் வீக்கா இருந்தா தாங்கிக்கவே முடியாது என்னால அதை ஒருநாளும் ஏத்துக்க முடியாது முடியவே முடியாது” என்று போனை கட் செய்து விட்டு அதை கட்டிலில் தூக்கி எறிந்த சுபா அழத் தொடங்கினாள்.
“ஏன் அஸ்வின் என்னால உங்க மேல நம்பிக்கை வெக்க முடியலை. எனக்கு உங்க மேல இப்போ காதல் தான் இருக்கு நீங்க ஒவ்வொரு தடவையும் என்னை நெருங்கி வரும் போது எனக்கு பயம் கலந்த சந்தோஷம் இருந்தாலும் சோனியா உங்கள கட்டிப்பிடிச்சது என்னை அவ வெறுப்பேத்துனது மாளவிகா சோனியா வாட்ஸ்அப் மெசேஜ் இதான் ஞாபகம் வந்து என்னை கொல்லுது” என்று அழுதுக்கொண்டே இருந்தாள்.
“அம்மீ ஏன் அழற சாக்கி வேணுமா?” என்று கொஞ்சினான் சித்து. அவன் முன்னே அழுதால் நல்லதல்ல என்று தன் கண்ணை துடைத்துவிட்டு அவனுக்கு விளையாட்டு காட்டினாள்.
“ஏன் துளசி பேசாம சுபாவுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வெக்கலாமா?” என்று துளசியோடு ஆலோசித்துக் கொண்டிருந்தார் சபேசன்.
“அ…து தப்புங்க சுபாவிற்கு இப்போ குழந்தை இருக்கு அது போக அஸ்வினுக்கு தெரிஞ்சா நம்மளை சும்மா விட மாட்டார்” என்றார் துளசி.
“ஓ உன் அண்ணன் பையனு சப்போர்ட் பண்றியா? சித்விக் நம்ம பேரன் தான் ஆனால் சுபாவின் வாழ்க்கையில சந்தோஷம்னு ஒன்னே இல்லாம போச்சு. இதுக்கெல்லாம் காரணம் அஸ்வின் தான் பூ மாதிரி இருந்த பொண்ண நாசமாக்கி ஒரு குழந்தைய கொடுத்து அவளை வீட்ட விட்டு போகுற அளவுக்கு செஞ்சிருக்கான்.”
“அவன் லாம் மனுஷன் இல்லை இராட்சசன். சுபாவிற்கு வயசு இருபத்தி ஏழு தான் ஆகுது. இப்போ நான் உயிரோட இருக்கும் போதே அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுக்கணும்” என்றார் தீர்மானமாக.
“எப்படிங்க இதெல்லாம் முடியும்? முதல்ல சுபா இதற்கு சம்மதிக்க மாட்டா, அத்தோட சித்து மனநிலைமை நம்ம யோசிக்கணும்” என்றார் துளசி.
“ஓ நீ சொல்ற படி பாத்தா இந்நேரம் நீ என் மனைவியா ஆகியிருக்க மாட்ட… நானும் சுபாவின் மனநிலையை யோசித்து இருந்தா நீ இந்நேரம் என் பொண்டாட்டியா இருந்திருப்பியா?” என்று ஏளனமாகக் கேட்டார்.
இதைக் கேட்டு அதிர்ந்த துளசி அழத் தொடங்கினார். அவரால் சபேசனின் இத்தகைய கொடிய வார்த்தையை தாங்க முடியவில்லை. இதற்கு மேல் அவர் இடையிட்டார் என்றால் சபேசன் இன்னும் கேவலமாக பேசுவார் என்று அமைதியாக இருந்தார் துளசி.
ஆனால் அவரின் பயமே அஸ்வின் தான் அவனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் குடும்பத்தையே இரண்டாக்கிடுவான்.
“சட்டப்படி விவாகரத்து வாங்காமல் எப்படி அவளை இன்னொருவனுக்கு மணம் புரிவது இதனால் நிறைய சிக்கல் வரும்” என்றார் துளசி.
“முதல்ல சுபா மைன்ட்ல என்ன இருக்குனு தெரிஞ்சிக்கலாம்ங்க” என்றார் துளசி.
“அவளுக்கு அந்த அஸ்வின் கூட வாழ பிடிக்கல அதான் நம்ம கூப்பிட்ட உடனே மதுரை வந்துட்டா, அவளுக்கு அவனை பிடிச்சிருந்தா நம்ம கூட வந்திருக்க மாட்டா, சுபா கண்டிப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிப்பா நீ நான் சொல்ற வரைக்கும் சுபா கிட்ட இதை பத்தி பேசாத” என்றார் சபேசன் தீர்மானமாக…
