அத்தியாயம் 29

இத்தோடு சுபா சென்று இரண்டு வாரங்கள் ஆனது. தன் வீட்டில் அமைதியாக பால்கனியில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த அஸ்வின் மனதில், ‘இனிமேல் சுபாவைக் கூப்பிட நான் செல்ல மாட்டேன். அவளே என் மேல் நம்பிக்கை வைத்து என்னைத் தேடி வரவேண்டும்’ என்று முடிவை எடுத்து விட்டு மனதில் யோசித்துக் கொண்டிருந்தான்.

 

அப்போது தான் அஸ்வினிற்கு ஒரு தெரியாத நம்பரிலிருந்து கால் வந்தது. யார் என்று யோசித்துக் கொண்டே கால்லை எடுத்தான். “ஹாய் அஸ்வின் நான் நேஹா பேசுறேன் ப்ளிஸ் ப்ளிஸ் ஃபோன வெச்சிராத நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.

 

தன் தலையைக் கடுப்பாக கோதியவன், “சொல்லு” என்றான்.

 

“அஸ்வின் உனக்கே தெரியும் அப்போவே எங்க அப்பா அம்மா வயசானவங்க எனக்கு ஒரு தங்கச்சி வேற இருக்கா, இரண்டு வருஷம் முன்னாடியே என் அப்பா மாரடைப்புல இறந்துட்டாங்க.”

 

“என் அம்மாவும் தங்கச்சியும் தான் மதுரைல இருந்தாங்க. ஒரு மூன்று மாசம் முன்னாடி என் அம்மாவும் இறந்துட்டாங்க. இப்போ என் தங்கச்சி மதுரைல தனியா இருக்கா அங்க பக்கத்துலயே வேலைக்கு போய்ட்டு இருக்கா எனக்கு இந்தியால மொத்தம் தெரிஞ்சவங்க ரொம்ப கம்மி தான் சொந்தக்காரன் யாரும் என் தங்கச்சி சுனிதாவுக்கு உதவ முன் வரமாட்டுறாங்க பொறுப்பு அவங்க தலையில விழுந்திரும்னு பயந்து ஓடிட்டாங்க.”

 

“என்னால இப்போ அங்க வரமுடியாத சூழ்நிலை அவளுக்கும் இங்க வர வீஸா கிடைக்கல இன்னும் மூணு மாசத்துல நான் அங்கே கண்டிப்பா வந்திடுவேன். அவளை பாதுகாக்கணும்னு என் பிரண்ட் ஒரு பொண்ணுக்கு கால் பண்ணி சொன்னேன். ஏன்னா என் தங்கச்சி தனியா வீட்டில இருக்க பயப்படுறா வயசு 27 ஆகுது ஆனாலும் அவள் என்ன மாதிரி தைரியசாலி இல்லை.”

 

“என் பிரண்ட் அந்த பொண்ணு தினமும் இரவு வந்து அங்க அவ கூட படுத்துப்பா இப்படியே போச்சு அவளும் நிம்மதியா தான் இருந்தா, ஆனா இரண்டு நாள் முன்னாடி அந்த இரவு யாரோ கதவை தட்டிருக்காங்க. இவளும் என் பிரண்ட் மாலதினு நினைச்சு கதவை திறந்திருக்கா, ஆனா அங்க நின்றது மாலதியோட ஹஸ்பண்ட் அவனை இவ இரண்டு மூணு தடவை மாலதியை ட்ராப் பண்ணும் போது பார்த்துருக்கா, அவன் நேரா உள்ளே வந்து இவ கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணிருக்கான்.”

 

“இவ பயங்கரமா கத்தி இருக்கா ஆனா யாரும் ஹெல்ப் பண்ண வரல. இவ நல்ல நேரமோ என்னவோ எங்க வீட்டு பின்னாடி கதவு ஓபன்ல இருந்திருக்கு. அதுல இருந்து தப்பிச்சு போய் பக்கத்து வீட்டுல ஒரு தாத்தா, பாட்டி  இருக்காங்க அங்க போய் அவங்க வீட்டுல அடைக்கலம் அடைஞ்சிட்டா.”

 

“அந்த மாலதிக்கும் அவ புருஷன் பண்ணது நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ணி அழுதாள். அன்னிக்கு மாலதிக்கு உடம்பு முடியலனு புருஷன் கிட்ட சொல்லி சுனிதாவை கூட்டிட்டு வர அனுப்பியிருக்கா அப்போ தான் இந்த பொறுக்கி ராஸ்கல் இப்படி பண்ணிருக்கான்.” என்று உண்மையாக அழுதாள் நேஹா.

 

நேஹா பேசியதைக் கேட்டு அமைதியாக இருந்த அஸ்வினிடம், “அஸ்வின் ப்ளிஸ் நீ என்ன யோசிக்குறேனு எனக்கு தெரியும் நாலு வருஷம் முன்னாடி லிவிங் டுகெதர்ல இருக்கலாம் ஜாலியா இருக்கலாம்னு சொன்னேன் தான்.”

 

“என் தங்கச்சிய பத்தி தான் நீ யோசிக்குற ஆனா ஒன்னு அஸ்வின் அவள் என்ன மாதிரி குணம் கிடையாது ரொம்ப அடக்கமான பொண்ணு பயந்த சுபாவம் ப்ளிஸ்… இப்போ நீ தான் அவளை காப்பாத்தணும் உன்னை பத்தி எனக்கு தெரியும் நீ ஒரு ஒழுக்கமான நம்பிக்கையானவன் உன்னால மட்டும் தான் அவளை பொறுப்பா பாதுகாக்க முடியும் ப்ளிஸ் எனக்காக இத பண்ணு” என்று அழுதாள். 

 

“நேஹா ஜஸ்ட் ரிலாக்ஸ் நான் மதுரைக்கு போய் அவளை அங்க இருந்து வெகேட் பண்ணி ஒரு நல்ல பாதுகாப்பான லேடிஸ் ஹாஸ்டலில் கொண்டு போய் சேர்த்து விட்டு வந்திடறேன் எனக்கு அவள் அட்ரெஸ் அன்ட் ஃபோன் நம்பர் அனுப்பு” என்றான் அஸ்வின்.

 

அவளிடம் அதைப் பெற்ற பின் தன்னுடைய ஃபோன் நம்பரையும் அவளுக்கு அனுப்ப சொன்னான். அடுத்த இரண்டு நாளுக்கு அஸ்வினின் வேலைப் பளூ அதிகம் ஆனதால் வெள்ளி இரவு காரை எடுத்துக் கொண்டு மதுரைச் சென்றான். வீட்டில் யாரிடமும் இந்த விஷயத்தைப் பற்றி ஒரு வார்த்தை அஸ்வின் கூறவில்லை.

 

பொதுவாகவே சசிகலா அஸ்வினை துருவி துருவி கேள்வி கேட்க மாட்டார். வாசுதேவனும் அஸ்வினும் பேசியே நான்கு வருடங்கள் ஆனதால் அவர் அஸ்வினிடம் கேட்டு தெரிந்துக் கொள்ள வில்லை. தான் வெளியூர் செல்கிறேன் வர ஒரு வாரம் ஆகும் என்று தன் அன்னையிடம் கூறிவிட்டுச் சென்றான்.

 

அவன் சென்ற பின் வாசுதேவன் சசிகலாவிடம் வந்தார்.  “உன் மகன் போக்கே சரியில்லை வீட்டுல பொண்டாட்டி புள்ளை இல்லை அவங்கள மதுரைக்கு அனுப்பி வெச்சிட்டு இவன் ஒன் வீக் டூர் போறானா?” என்று நக்கலாகக் கேட்டார். 

 

சமையல் அறையில் இருந்த சசிகலா இவர் கூறியதைக் கேட்டு வேகமாக வெளியில் வந்து, “வாய மூடுங்க என் மகனைப் பற்றி ஒரு வார்த்தை நீங்க பேசாதீங்க அஸ்வின் சுபாவ மதுரைக்கு அனுப்ப ஒத்துக்க மாட்டேன் சொன்னான். சுபாவ மதுரைக்கு அனுப்பி வெச்சது நீங்க… விருப்பப்பட்டு போனது சுபா… இதுல என் மகனை ஏன் இழுக்குறீங்க நாலு வருஷமா அவன் கிட்ட இப்படி பேசாம இருக்கீங்களே… நீங்க எல்லாம் என்ன தகப்பன் அஸ்வின் சுபாவ நாசம் பண்ணி தான் சொந்தம் ஆக்கினான்.”

 

“அது அவன் பண்ண பெரிய தப்பு தான்… நான் அதை ஒத்துக்குறேன் ஆனா சுபாவ கழுத்த பிடிச்சு அஸ்வின் வெளிய தள்ளவில்லை… சுபாவே தான் ஒரு கடிதம் எழுதி வெச்சிட்டு வெளிய போய்ட்டா, நாலு வருஷம் அவ எப்படி யார் கூட இருந்தானு ஒரு வார்த்தை இவன் கேட்டானா? ஏன்னா அவனுக்கு பொண்டாட்டி மேல நம்பிக்கை அவள் நல்ல பெண் என்று அஸ்வினிற்குத் தெரியும் ஆனால் சுபா அப்படி பண்ணல..”

 

“அவள் நல்ல பொண்ணாவே இருந்தாலும் தன் கணவன் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லை என்னால அஸ்வினோட ஃபிலிங்கஸ முழுசா புரிஞ்சிக்க முடியலனாலும் கொஞ்சம் புரிஞ்சிக்க முடியுது. அவன் வாழ்க்கைய நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவனுக்கு சுபா மேல இருக்கும் காதல் சுபாவிற்கு அவன் மேல் இல்லை.”

 

“இல்லனா இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கோ அப்போ தான் நான் என் அம்மா அப்பாவோடு போவேன் என்று கடிதம் எழுதி வெச்சிருக்க மாட்டா,அப்போ அவளுக்கு நம்ம அஸ்வின் வேண்டாம் தான… “

 

“மனசளவுல சுபா இல்லாத இந்த நாலு வருஷம் அவளை மட்டுமே நினைச்சு வேற ஒரு கல்யாணம் பண்ணாம வாழ்ந்துருக்கான் ஒரு பொண்ணுக்கு இதுக்கு மேல எப்படி அவள் கணவன் உத்தமன் என்று நிரூபிக்க முடியும்.”

 

“அவனுக்கு பொண்டாட்டி புள்ள இருந்தும் பிரிஞ்சு இருக்குறான் அவன் கூட சேர்ந்த அரவிந்த், விக்கி இப்போ ஃபேமிலியா செட்டில் ஆயிட்டாங்க. இவன் மட்டும் எல்லாம் இருந்தும் தனியா இருக்கான். இருக்க வெச்சிட்டா சுபானு தான் சொல்லுவேன். எனக்கு சபேசன் துளசி மேல கூட கோபம் இல்லை வருத்தம் தான் இருக்கு.”

 

“ஏன்னா அவங்ககிட்ட நான் இங்க சந்தோஷமாக தான் இருக்கேன். என் புருஷனோடு சேர்ந்து மதுரை வரேனு அவங்கள அனுப்பிருக்க வேண்டியது சுபா… எனக்கே இவ்வளவு கோபம் வருதுன்னா அப்போ அஸ்வினுக்கு எவ்வளவு கோபம் இருக்கும் அவ மேல.”

 

“நான் முடிவு பண்ணிட்டேன்ங்க அஸ்வினோட சந்தோஷம் எனக்கு முக்கியம் அவன் வாழ்க்கை சிறப்பா இருக்கணும் அதனால கூடிய சீக்கிரமே அஸ்வின் கிட்ட சோனியாவ கல்யாணம் பண்றத பத்தி பேசப் போறேன். அவன் ஒத்துக்க மாட்டான் ஆனா அவன ஒத்துக்க வெக்க நான் எந்த ஒரு எல்லைக்கும் போவேன்” என்று அழுத முகத்தோடு கூறினார் சசிகலா.

 

சசிகலா கூறியதில் பாதி நியாயம் இருப்பதாய் உணர்ந்த வாசுதேவன், “காலம் பதில் சொல்லட்டும்” என்று சொல்லி சென்று விட்டார்.

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!