அத்தியாயம் 31
துணியைத் தோய்த்து முடித்து விட்டு சுபா பின்னாடி இருந்து வீட்டிற்குள் வர மணி பத்தானது. அந்த பச்சை நிற பழைய சேலை அணிந்திருந்தவளின் புடவை எங்கும் ஈரமாய் இருந்தது. அவள் உள்ளே வரும் போது அனைவரும் உறங்கியிருந்தனர். தீபிகா மற்றும் அரவிந்த் குடும்பம் ஒரு அறையில் துளசி ஹாலில் அஸ்வின் மற்றும் சித்து மற்றொரு அறையில் உறங்கி இருந்தனர்.
அஸ்வின் வந்ததில் இருந்து சுபாவிடம் பேசவில்லை சேலையை வேற மாற்ற வேண்டுமே ஹாலில் மாற்ற முடியாது இங்கு இருக்கிற இரண்டு அறையில் தான் மாற்ற வேண்டும் பாத்ரூம் ரொம்ப சிறியது அங்கே சேலையை மாற்ற முடியாது என்று யோசித்துக் கொண்டே அறையினுள் வந்தாள். அங்கு சித்து அஸ்வினைக் கட்டிக்கொண்டு உறங்கியிருந்தான்.
இருவரும் தூங்குகிறார்கள் என்று உறுதிப்படுத்திக் கொண்டு கதவைச் சாற்றி சேலையை கழட்ட ஆரம்பித்தாள். மாற்று சல்வாரை கையில் எடுக்கும் பொழுது அவளின் வெற்று இடையில் ஒரு கை அழுத்தியது போல் இருந்தது.
அந்த அதிர்ச்சியில் திரும்பியவள் தனக்கு மிக நெருக்கமாக அஸ்வின் இருப்பதைக் கண்டாள். அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்த சுபா தன் மேல் புடவை இல்லாததை நினைத்து புடவையை எடுக்க முற்பட்டாள். அதை அவள் எடுக்கும் முன் அஸ்வினின் நீளமான கை அதைப்பற்றி அவளின் மேல் போற்றியவன் சித்துவை அலுங்காமல் தூக்கி கதவைத் திறந்து துளசியின் பக்கத்தில் பாதுகாப்பாக படுக்க வைத்துவிட்டு அறையினுள் வந்து கதவைச் சாற்றினான் அஸ்வின்.
அதுவரைக்கும் சுயநினைவே இல்லாத மாதிரி கண்ணை இமைக்காமல் அஸ்வினையே பார்த்துக் கொண்டிருந்த சுபா கதவைச் சாற்றி விட்டு தன்னை நெருங்கி வரும் அஸ்வினைக் கண்ட பிறகு தான் சுயநினைவிற்கே வந்தாள். அவன் அவளை நெருங்கி அவள் முகத்தை தன் இரு கைகளால் ஏந்தினான்.
இவை அனைத்திற்கும் சம்மதிக்கும் விதமாய் சுபா அவனுக்கு இடையூறு கொடுக்காமல் இருந்தாள். அவள் முகத்தை ஏந்தியவன் அவளுடைய இதழ்களைச் சிறை செய்தான். பின் அவளுடைய ஆடைகளை எல்லாம் நீக்கினான்.
சுபாவுக்கு அவனை தடுக்க தோணவில்லை. பின் சுபாவை தன் கைகளில் ஏந்தியவன் அவளை கட்டிலில் படுக்க வைத்து இவனும் தன் ஆடைகளை களைந்து விட்டு சுபாவை ஆட்கொண்டான்.
சுபாவின் மேல் அவன் வைத்திருக்கும் காதல் அங்கே காமமாய் பிரதிபலித்தது.
சுபாவால் அஸ்வினைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு வெட்கம் அவள் முகத்தில்… இப்படியே விடியற்காலை வரை சுபாவை தூங்க விடாமல் உறவாடிக் கொண்டே இருந்தான்.
அதிகாலை நான்கு மணி வரை இருவரும் ஈருடல் ஓர் உயிராய் உறவாடிவிட்ட பின் நிம்மதியாக அஸ்வின் உறங்கினான். சுபாவிற்கு தான் உறக்கமே வரவில்லை. ஒரு போர்வையை வைத்து தன்னை போத்திக் கொண்டவள் தூங்கிக்கொண்டிருந்த அஸ்வினை ரசித்தாள்.
அப்போது தான் ரேவதி சொன்ன விஷயம் இவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது. மற்ற பெண்களிடம் நெருக்கமாக இருக்கும் கணவரால் பொண்டாட்டி கூட நெருக்கமாக இருக்க முடியாது என்பது…
அப்படிப் பார்த்தால் அஸ்வின் தன்னிடம் இருந்த விதம் கண்டிப்பாக அவன் வாழ்க்கையில் சுபாவைத் தவிர வேறு பெண்ணிற்கு அஸ்வின் தன் மனதை கொடுக்கவில்லை என்பதை உணர்ந்து உடைகளை உடுத்திக்கொண்டு நிம்மதியாக தூங்கினாள்.
காலை விடிந்த பின் முதலில் எழுந்த அஸ்வின் தன் உடைகளை மாற்றிக்கொண்டு கதவைத் திறக்கும் முன் வெள்ளந்தியாக தூங்கும் தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டுச் சென்றான்.
வெளியே கதவைத் திறக்கும் போது அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர்.
வெளியே ஜாகிங் சென்று வீட்டிற்கு வருவதற்குள் அனைவரும் முழித்து தங்களின் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அரவிந்த்தும் தீபிகாவும் சர்வேஷ் துங்கிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் தாத்தாவின் வீட்டிற்கு கிளம்பத் தொடங்கினர்.
அப்போது சுபா இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.
தீபிகா, “சித்து எப்படி இங்க தூங்குறான் நேற்று இரவு ரூம்ல தான படுத்திருந்தான்?” என்று புரியாமல் கேட்டாள். அவள் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கும் போது தான் அஸ்வின் வீட்டினுள்ளே வந்தான். சுபாவும் அஸ்வினும் மாறி மாறி பார்த்துக்கொண்டனர்.
“ஏய் மக்கு கொஞ்சம் வாய மூடு” என்று தீபிகாவின் காதில் வந்து அதட்டினான் அரவிந்த்.
“சுபா நான் குளிக்கணும் நீ ரூம்க்கு வா” என்று அவளை அழைத்து விட்டு உள்ளே சென்றான் அஸ்வின். சுபாவும் பின்னாடியே சென்றாள்.
“ஓ! இவங்களுக்குள்ள கதை அப்படி போகுதா? அக்கா பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கா ங்க நிம்மதியா இருக்கு.” என்றாள் தன் கணவனிடம்.
“ம்ம்ம், இரண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர அவ்வளவு லவ் பண்றாங்க. ஆனா அதை சொல்லிக்க தான் மாட்டுறாங்க” என்றாள் தீபிகா.
“அவங்க சொல்லலனு உனக்கு தெரியுமா லூசு எல்லாத்தையும் சுபா உன்கிட்ட ஷேர் பண்ண மாட்டா” என்றான் அரவிந்த்.
உள்ளே நுழைந்த சுபா அஸ்வினிடம் வந்து, “காபி வேணுமா?” என்று கேட்டாள்.
“நான் குளிச்சிட்டு வெளியே கிளம்பணும் சுபா ஒரு மூணு நாள் வேலை இருக்கு. நீ எப்போ சென்னை வருவ?” என்று கேட்டான்.
“அது வந்துங்க அப்பா கோவமா இருக்காரு கொஞ்ச நாள் சமாதானப் படுத்தி விட்டு வரேன்” என்று தயக்கமாக கூறினாள்.
“ம்ம், உன்னை இங்க இருந்து இப்போ கூட தூக்கிட்டு போய்டுவேன். ஆனா நீயா என்னை நம்பி வரணும். அதான் எனக்கு வேணும் உங்க அப்பாவ என் முன்னாடி கோவ பட சொல்லு பார்க்கலாம். அந்த தைரியம் அவருக்கு இல்லை அதான் உங்க அப்பா நல்ல நேரம் நான் வரும் போது எஸ்கேப் ஆயிட்டாரு” என்றான் சாதாரணமாக.
“நீங்க எனக்காக தான் மதுரைக்கு வந்தீங்களா?” என்று ஆச்சரியமாக கேட்டாள்.
ஷேவ் பண்ணிக்கொண்டிருந்த அஸ்வின், “என்ன பேசலாம் செய்ற உனக்கு என்கிட்ட பேச லாம் தெரியுமா?” என்று மெலிதாய் புன்னகைத்தவனை அதிசயமாய் பார்த்தாள்.
“எனக்கு தீடிரென்று ஒரு முக்கியமான வேலை வந்திருச்சு அதான் மதுரை வந்தேன். அப்படியே உங்கள பார்த்துட்டு போலாம்னு வந்தேன்” என்று கூறியவன் குளித்து முடித்து விட்டு சித்துவிடம் சிறிது நேரம் விளையாடியவன் காலை உணவை சாப்பிட்டு விட்டு சுனிதாவை பார்க்க திருநகர் கிளம்பினான்.
