அத்தியாயம் 32

திருநகர் வந்தடைந்த அஸ்வின் சுனிதாவின் வீட்டு முகவரியை காண்பித்து ஒரு கடையில் எப்படிச் செல்ல வேண்டும் என்று கேட்டறிந்து வந்தான். அங்கு பூட்டியிருந்த கதவைத் தட்டினான். ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு கதவைத் திறந்தாள் சுனிதா.

 

“நீங்க அஸ்வினா?” என்று கேட்டாள்.

 

“ஆமா நான் தான் அஸ்வின் நேஹாவோட பிரண்ட் திங்க்ஸ் லாம் பேக் பண்ணிட்டீங்களா?” என்று வெளியே நின்றே கேட்டான்.

 

“உள்ளே வாங்க” என்று சுனிதா கூறிய பின்பு தான் அஸ்வின் உள்ளே சென்றான். அங்கு ஹாலிலேயே உட்கார்ந்த அஸ்வின் வீடு கலைந்திருப்பதைக் கண்டான். ‘என்ன இந்த பொண்ணு வீட்டை இப்படி குப்பையா வெச்சிருக்கு?’ என்று நினைத்தவன் சுனிதா கொடுத்த காபியைக் குடித்து விட்டு அமைதியாக இருந்தான்.

 

“அது வந்து நான் இன்னும் திங்க்ஸ் பேக் பண்ணல நாளைக்கு வரீங்களா? கொஞ்சம் திங்க்ஸ் வேற பர்சேஸ் பண்ணணும் நாளைக்கு ஈவ்னிங் ஒரு ஐந்து மணிக்கு வாங்க ப்ளிஸ்” என்றாள்.

 

“ஓகே நாளைக்கு திங்க்ஸ் வாங்கிட்டு இந்த வீட்டை காலி பண்ணிடலாம். அப்பறம் இங்க பக்கத்துல நல்ல லேடிஸ் ஹாஸ்டல் விசாரித்து வரேன்” என்று கிளம்ப தயாரானான்.

 

“ஹலோ மிஸ்டர் ஹேண்ட்சம் வந்து இரவு என் கூட துணைக்கு இருக்க மாட்டீங்களா? அதுக்கு தான அக்கா அனுப்பிருக்கா நீங்க ரொம்ப நல்லவர்னு செர்ட்டிஃபிகேட் கொடுத்தாளே” என்றாள் சுனிதா.

 

இம்முறை கடுப்பான அஸ்வின், “உன் வயசு என்ன?” என்று கேட்டான்.

 

“இருபத்தி ஏழு” என்றாள் சுனிதா.

 

“இந்த மாதிரி மத்த ஆம்பளைங்க கிட்ட கேட்டு வெச்சிராத உன் வயசுக்கு தகுந்த மாதிரி மெச்சூரிட்டியா நடந்துக்கோ” என்று கிளம்பினான்.

 

அன்று ஈவ்னிங் வரை நல்ல ஹாஸ்டலைத் தேடிய அஸ்வின் அட்வான்ஸ் கொடுத்து விட்டு நேஹாவிற்கு கால் செய்தான். “தாங்க யூ சோ மச் அஸ்வின் எவ்வளவு ஆச்சுனு சொல்லு நான் அக்கவுண்ட்டுக்கு பணம் அனுப்புறேன்” என்றாள்.

 

“இல்லை நேஹா வேண்டாம் சுனிதாவ நான் என் தங்கை மாதிரி நினைக்கிறேன் நானே அவளுடைய செலவுகளைப் பார்த்துக்குறேன்” என்றான் தீர்மானமாக.

 

அப்போது அஸ்வினுக்கு குழந்தைகள் ஆசிரமத்திலிருந்து கால் வந்தது. “அஸ்வின் தம்பி, நான் தான் பா குழந்தைகள் ஆஸ்ரமம் செயலாளர் பேசுறேன் நாலு வருஷமா மாசா மாசம் இந்த அனாதை குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு இருபது ஆயிரம் கொடுக்குறீங்க. அதே மாதிரி நாளை உங்கள் மனைவி பிறந்தநாளுக்காக இந்த நாலு வருஷமும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தலா ஐந்தாயிரம் கொடுப்பீங்க ஆனா நேரில் மட்டும் வர மாட்டுறீங்க ஏன்” என்று கேட்டார் செயலாளர்.

 

“சார் முதல் தடவை நான் அங்க வரும் போது என் மனைவியோடு வரணும்னு தான் நினைக்கிறேன். நாளைக்கு என் மனைவி பிறந்ததாள் இந்நேரம் என் பிஏ அசோக் குழந்தைகளுக்கு தர வேண்டிய கேஷ் அன்ட் டிரெஸ் எடுத்துட்டு வந்திருப்பாரே?” என்று கேள்வியாய் கேட்டான்.

 

“அவர் அப்போவே வந்திட்டாரு தம்பி… குழந்தைகள் உங்கள பார்த்து நன்றி சொல்லணும்னு ரொம்ப நாளா ஏங்கிட்டு இருக்குங்க. அதான் நன்றி சொல்ல கால் பண்ணேன் தம்பி” என்றார் சந்தோஷமாக.

 

“பரவாயில்லை சார் அவங்க சந்தோஷமா இருக்கட்டும் அவங்க பேங்க் அக்கவுண்ட்ல அந்த பணத்தை போட்ருறுங்க” என்று கால்லை கட் செய்தான்.

 

சுபாவின் பிறந்தநாளுக்காக இரண்டு கேஜி பைன் ஆப்பிள் ஃபிரஷ் கேக்கை ஆர்டர் செய்து வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஃபிரிட்ஜில் வைக்க முடிவு செய்தான். இரவு ஏழு மணிக்கு வந்தவன் ஹாலில் யாரும் இல்லாததைக் கண்டு வாங்கி வந்த கேக்கை உள்ளே வைத்தான். இரவு பத்து மணி ஆனதும் அனைவரும் உறங்கச் சென்றனர். ஆனால் அஸ்வின் மட்டும் உறங்காமல் லாப்டாப்பை பார்த்துக்கொண்டிருந்தான்.

அஸ்வின் அமைதியாக லாப்டாப்பை ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டே இருந்தான்.

 

அவனின் நடவடிக்கையைக் கண்ட சுபா பயந்தே போனாள். ‘என்ன இவர் நேற்று நம்ம கிட்ட நெருக்கமா இருந்தாரு. இன்னிக்கு யாரோ மாதிரி இருக்காரு ஒருவேளை நம்ம தான் அவசரப்பட்டு அவர் கிட்ட மயங்கிட்டோமோ!’ என்று மனதில் ஆயிரம் குழப்பம் இருந்தது சுபாவிற்கு.

 

சித்துவிற்கு கதைகள் கூறிக்கொண்டே அவனை தூங்கவைத்து விட்டான் அஸ்வின்.

 

‘இதற்கு மேல் முழித்தால் தேவை இல்லாத குழப்பங்கள் வரும் பேசாமல் தூங்கிடலாம்’ என்று சித்துவின் பக்கத்தில் தூங்கினாள் சுபா.

 

இரவு பனிரெண்டு மணி ஆன போனது கேக்கோடு சுபாவை எழுப்பினான் அஸ்வின்.

 

“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபா… உனக்கு வாழ்க்கைல நான் நிறைய கஷ்டங்கள் கொடுத்திட்டேன். இனிமேல் நீ ரொம்ப சந்தோஷமா இருக்கணும்” என்று அவளின் நெற்றியில் முத்தம் இட்டவன் அவளை கேக்கை வெட்ட சொன்னான். பின் அவளுக்காக வாங்கிய அந்த தங்க நிற சேலை மற்றும் ஒரு டைமண்ட் நெக்லஸை பரிசளித்தான்.

 

சுபாவிற்கு தன்னுடைய சந்தோஷத்தை எப்படி உணர்கிறாள் என்று கூட தெரியவில்லை அவளுக்கு அஸ்வின் இப்படி மாறி விட்டான் என்பது கனவு மாதிரி தோன்றியது. அப்போது தீபிகா, அரவிந்த் மற்றும் துளசி சுபாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி கேக்கை ஊட்டினர்.

 

“அக்கா, எல்லாமே அஸ்வின் அத்தான் பிளான் தான் இந்நேரம் நாங்க கூட தூங்கிருப்போம். ஆனா அவர் தான் எங்களை தூங்க கூடாதுன்னு கட்டளை போட்டுட்டார்” என்றாள் தீபிகா. அந்த தருணத்தில் அனைவரும் மகிழ்ந்தனர். பின் அனைவரும் உறங்கச் சென்றனர்.

 

காலை விடிந்த பின் சித்விக் மற்றும் சுபாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றான். பின் துளசி மதியம் பாயசத்தோடு இலை சாப்பாடு பறிமாறினார். அச்சமயத்தில் தான் சுனிதா அஸ்வினுக்கு கால் செய்தாள்.

 

“நான் ரெடி கொஞ்சம் திங்க்ஸ் பர்சேஸ் பண்ணணும் வர்றீங்களா?” என்றாள்.

 

“ம்ம், வரேன்” என்று கூறிவிட்டு  சுபாவினைத் தேடினான்.ஆனால் அவள் தீபிகாவோடு எங்கோ வெளியே சென்றிருந்தாள். “அத்தை சுபா எங்கே?” என்று கேட்டான் துளசியிடம்.

 

“அவ பேங்க்குக்கு போய்ருக்காப்பா” என்றார்.

 

“நான் அவசரமா வெளியே கிளம்பணும் கொஞ்சம் சித்விக்க பார்த்துக்குறீங்களா?” என்று கிளம்பினான். திருநகர் சென்றடைந்த அஸ்வின் அவளை காரிலே அழைத்துச் சென்றான்.

 

மதுரையில் உள்ள அந்த பெரிய ஜவுளிக்கடையில் சுனிதாவின் சொல்படி வண்டியை நிறுத்தினான்.

 

“நீங்களும் வாங்க அஸ்வின்” என்றாள் சுனிதா. சித்துவிற்கு எதாவது வாங்கலாம் என்று அவனும் உள்ளே நுழைந்தான்.

தீபிகா சுபாவை அழைத்துக் கொண்டு அந்த பெரிய ஜவுளிக்கடையில் உள்ளே நுழைந்தாள்.

 

“அக்கா, நான் உனக்கு பிறந்தநாள் பரிசா டிரெஸ் வாங்கித்தரேன்” என்று அவளை இழுத்துச் சென்றாள். பெண்களின் ஆடைகளுக்கான தளத்திற்கு சென்றார்கள். அப்போது அஸ்வின் சுனிதாவிடம் எதோ பேசிக்கொண்டே எதையோ வாங்கிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட தீபிகா சுபாவை அங்கு காணுமாறு சொன்னாள். அவர்கள் இருவரைக் கண்ட சுபா அதிர்ந்தாள்.

 

“அக்கா அத்தான் கூட நிக்குறது உன் காலேஜ் பிரண்ட் சுனிதா தான?” என்றாள்.

 

“ஆமாம்” என்று தலையசைத்தவள் அமைதியாக நின்றாள். பின் அஸ்வின் கீழே இருக்கும் தளத்திற்கு சென்று விட்டான். பில் போட வரும் போது சுனிதாவே சுபாவைக் கண்டாள்.

 

“யேய் சுபா எப்படி இருக்க உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு நல்லா இருக்கியா?” என்று சிரிப்போடு விசாரித்தாள்.

 

“ஹாய் தீபி எப்படி இருக்க?” என்று கேட்டாள் சுனிதா. சுபாவின் முகம் சுருங்கியதைப் பார்த்து தீபி அஸ்வின் மேல் உள்ள நம்பிக்கையால், “நீ யார் கூட பேசிட்டு இருந்த சுனிதாக்கா?” என்று கேட்டாள். அப்போதாவது சுபா வின் குழப்பம் தெளியும் என்று.

 

“ஓ… அதுவா அவர் பெயர் அஸ்வின் என் அக்காவோட பிரண்ட் செம ஸ்மார்ட்டா இருக்காருல… அவரை நான் லவ் பண்றேன் சுபா ஆனா அது அவருக்கே தெ…” என்று சொல்லும்போது போதே, “நிறுத்து சுனிதா நான் கிளம்பறேன்” என்று வேகமாக கீழே சென்று விட்டாள்.

 

“இங்க பாரு சுனிதா நான் இப்போ உடனே போகணும் உன் ஃபோன் நம்பர் கொடு உன்கிட்ட நான் பேசணும்” என்று அவள் நம்பரை வாங்கி சேவ் பண்ணி விட்டு அவளும் கீழே சுபாவை தேடிச் சென்றாள். ஒரு மூலையில் நின்று அழுதுக்கொண்டிருந்த சுபாவை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் முழித்தாள்.

 

“அக்கா எங்கேயோ தப்பு நடந்திருக்கு கா, நீ ஏன் அவ முழுசா பேசுறதுக்குள்ள ஓடி வந்துட்ட” என்று கேட்டாள் தீபிகா.

 

“ஓ அந்த கருமத்தை நான் நின்னு நிதானமா வேற கேட்கணுமா?” என்று தீபிகாவை முறைத்தாள்.

 

அஸ்வின் சுனிதாவின் திங்க்ஸை வெகேட் செய்துவிட்டு அவளை நல்ல ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு விடை பெற்றான்.

 

“அஸ்வின் அவ்வளவு தானா?” என்று கேட்டாள்.

 

புருவத்தை சுருக்கியவன், “வேற என்ன?” என்று கேட்டான்.

 

“அது வந்து நான் உங்களை காதலிக்கிறேன் நீங்க ஸ்மார்டா இருக்கீங்கன்னு மட்டும் இல்லை நீங்க ரொம்ப கண்ணியமானவரா இருக்கீங்க” என்றாள்.

 

“இங்க பாரு சுனிதா எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு தேவை இல்லாம மனச குழப்பிக்காத நான் உன்னை என் தங்கச்சி மாதிரி நினைச்சு தான் ஹெல்ப் பண்ணேன்” என்று அவளிடம் விடைபெற்று கிளம்பினான்.

 

மாடியில் ரொம்ப நேரம் அழுதுக்கொண்டிருந்த சுபாவை அரவிந்தும் தீபிகாவும் ஆறுதல் படுத்தினர்.

 

“சுபா, அஸ்வின் பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப நல்லவன் அவன் உன்கிட்ட மட்டும் தான் அப்படி நடந்துருக்கான். எதுவா இருந்தாலும் அஸ்வின் வந்ததுக்கு அப்பறம் பேசிப் பாரு சில விஷயங்கள் பேசினா சால்வ் ஆயிடும் அந்த பொண்ணு சுனிதா பத்தி அஸ்வின் கிட்ட நியாயமான ரீசன் இருக்கலாம்” என்று அரவிந்த் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மாடிக்கு அஸ்வின் வந்தான்.

 

“சுபா என்னாச்சு ஏன் அழற?” என்று பதற்றமாகக் கேட்டான்.

 

“என்கிட்ட பேசாதீங்க ப்ளிஸ் உங்கள நம்பி ஏமாறுதே எனக்கு வேலையா போச்சு. முன்னாடி சோனியா இப்போ சுனிதாவா? நீங்க தயவு செஞ்சு யார் கூட வேணாலும் போங்க ஆனா என்ன மட்டும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று அழுதாள்.

 

“சுபா என்னை பேசவிடு…” என்று அவன் சொல்லும் போதே தன் காதை மூடிக்கொண்டாள்.

 

“டாம் இட்… ஏன் அவளால என்ன நம்பவே முடியலை அரவிந்த்” என்று விறுவிறுவென தன் டிராலியை எடுத்துக்கொண்டு தன் காரில் வேகமாக சென்னை புறப்பட்டான்.

 

 

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!