அத்தியாயம் 33
அஸ்வின் சென்று ஒரு வாரம் ஆனது. ஆனால் அவனிடமிருந்து பிறகு ஒரு காலும் சுபாவிற்கு வரவில்லை. தீபிகாவும் அரவிந்தும் சென்னைக்கு கிளம்பினர் கிளம்பும் முன் சுனிதாவின் நம்பரை சுபாவிற்கு கொடுத்துவிட்டு சென்றாள்.
அந்த நம்பர்க்கு பேசி ஒரு பிரோயஜனமும் இல்லை என்று அதை அலட்சியமாய் விட்டுவிட்டாள் சுபா. இப்படியே ஒரு மாதம் சென்றது.
இருமுறை சித்விக்கிடம் பேச மட்டும் கால் செய்தான் அஸ்வின். சுபாவிடம் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை. சபேசனுக்கு அஸ்வின் வந்து சென்றதே தெரியாமல் துளசி பார்த்துக்கொண்டார்.
அடுத்த வாரம் பாபு, ஈஸ்வரி அறுபதாவது கல்யாணம் கொண்டாடப்படும் நிலையில் அனைவரும் துளசியின் வீட்டிற்கு வருவதாய் முடிவெடுத்தனர்.
இது குடும்ப விழா என்பதால் சபேசனும் மறுப்பு தெரிவிக்கவில்லை. துளசியின் வீட்டிற்கு வந்த பின் ஒரு நாள் கழித்து அனைவரும் வாசுதேவன் தந்தை வீட்டிற்கு செல்வதாய் முடிவெடுத்தனர்.
துளசியும், சபேசனும் பாபுவோடு பேசினர். வாசுதேவனும் சசிகலாவும் பாபுவோடு தான் பேசினர். ஏனெனில் அஸ்வின் குடும்பத்திற்கும் சுபா குடும்பத்திற்கும் பேச்சுவார்த்தை முறிந்தது. அஸ்வின் சுபாவைக் கண்ட எதையுமே வீட்டில் சொல்லவில்லை.
அன்று காலை சுபா தன்னுடைய ஃபோனை எடுத்துப் பார்த்தாள் அதில் ரேவதியுடைய மிஸுடு கால்ஸ் ஏழு முறை இருந்தது. அவளுக்கு என்னவோ என்று கால் செய்தாள் சுபா. ஃபோனை எடுத்த ரேவதி அழத் தொடங்கினாள்.
“ஏன் டி பேசிட்டு இருக்கும் போதே நீ பாட்டு கட் பண்ணிட்டு போய்ட்ட” என்றாள்.
“சாரி டி அது அன்னிக்கு ஏதோ டென்சன்ல பண்ணிட்டேன். ஆனா அதுக்காகவா அழற?” என்று சந்தேகமாய் கேட்டாள்.
“இல்லை டி நேற்று இரவு என்ன ஆச்சு னா நானும் ஆகாஷும் திருவான்மியூர் பீச் போயிருந்தோம். அவன் கிட்ட மாமாவோட ஃபோன் இருந்தது அவன் எல்லாத்தையும் வீடியோ எடுத்துட்டு இருந்தான். அப்போ விக்கி ஒரு பொண்ணோட இருந்தான். அதையும் வீடியோ எடுத்துட்டான். அம்மா, அப்பா என்றான் ஐந்து வயசு பையனுக்கு அவங்க பண்ற அசிங்கம் புரியல… இவன் பாட்டுக்கு வீடியோ எடுத்திட்டு இருந்தான். நாங்க அங்க இருந்தது விக்கிக்கு தெரியாது அவன் எங்களை பார்க்கலை நானும் அவனை விட்டுப்புடிச்சா சரி ஆயிடுவானு நினைச்சேன்.”
“ஆனா இவன் ஆட்டம் அதிகமா ஆயிடுச்சு அதனால உடனே அஸ்வின் அண்ணாக்கு கால் பண்ணேன். அவர் வீடு பக்கம்றதுனால ஐந்து நிமிஷத்துல வந்துட்டாரு. வந்தவர் ஆகாஷை அவர் வீட்டுல விட்டுட்டு வந்துட்டாரு. ஏனா அவன் இதெல்லாம் பார்க்க கூடாதுன்னு ஃபீல் பண்ணாரு. அவனை அவங்க வீட்ல விட்டுட்டு வந்து என்ன பண்ணாருனு தெரியுமா?” என்று ஆவேசமாகக் கூறினாள்.
“என்ன நடந்தது டி ஒண்ணும் பிரச்சனை இல்லையே?” என்று பயத்துடன் கேட்டாள் சுபா.
“நான் உனக்கு வாட்ஸ்அப்பில் வீடியோ அனுப்பிருக்கேன் பாரு” என்று ஃபோனை கட் செய்தாள்.
வீடியோ எடுக்குற அளவுக்கு என்ன நடந்திருக்கும் என்று பதற்றத்துடனே வாட்ஸ்அப் மெசேஜை ஓபன் செய்தாள். அஸ்வின் நேராக சென்று படகின் பின்னாடி இருந்த விக்கியும் அவன் கூட வந்த அரைகுறை ஆடை பெண்ணின் முன்னாடி போய் நின்றான். இவனைக் கண்ட விக்கி அதிர்ச்சி அடைவதற்குள் அவனைப் பிடித்து பயங்கரமாய் அடித்தான் அஸ்வின்.
“நானும் நீ திருந்திருப்பனு நினைச்சா இன்னும் உன் பொறுக்கி தனத்தை விடாம இருக்க” என்று அந்த பெண்ணை எரிப்பது போல் முறைத்தான். அதில் பயந்து ஓடிச் சென்று விட்டாள் அந்தப் பெண்.
“எப்படி டா உனக்கு இப்படி தப்பு மேல தப்பு பண்ண தோணுது நீயெல்லாம் உயிரோடவே இருக்க கூடாது ஆனா உன்னை நம்பி உனக்கு மனைவியும் குழந்தையும் இருக்கு அதனால உயிரோட விடுறேன்.”
“நம்ம வாழ்க்கையில் தப்பு பண்ணா நம்ம மனசு எவ்வளவு வலிக்கும் தெரியுமா? அந்த வலி எனக்கு இப்போ புரியுது சுபாவ பழிவாங்கணும்னு நினைச்ச நான் அவளை வேற விதமா பழி வாங்கிருக்கலாம். ஆனா எந்த ஒரு பொண்ணும் அனுபவிக்க கூடாத வலியை நான் அவளுக்கு கொடுத்திடுக்கேன். அவளை கற்பழிச்சு அவளோட வாழ்க்கையையே நாசமாகிட்டேன். கல்யாணம் பண்ண அப்புறமும் அவளை துன்புறுத்தி இருக்கேன்.”
“இதெல்லாம் எனக்கு சுபா என்ன விட்டு போன நாலு வருஷம் அந்த தனிமை… நான் பண்ண தப்பை உணர வெச்சிடுச்சு. அவ என்னை மனசால நம்பணும் அதுக்கு தான் நான் வெயிட் பண்றேன். ஒருத்தனுக்கு ஒருத்தி தான் இருக்கணும்…”
“நியாயப்படி பார்த்தா உன்னை விட நான் மோசமானவன் நீ விருப்பத்தோடு ஒரு பொண்ண ஏமாத்தின, நான் விருப்பமே இல்லாம ஒரு பொண்ணு வாழ்க்கையே அழிச்சிட்டேன் அதுக்கு பிராயச்சித்தமா மாசா மாசம் அனாதை குழந்தைகளுக்கு இருபது ஆயிரம் அனுப்புறேன். அப்பயும் என் தப்ப நியாயப்படுத்த முடியாது ஆனாலும் நான் என் தப்பை உணர்ந்துட்டேன்…”
“நீயும் உன் தப்பை உணருவனு நினைச்சேன். ஆனால் மேலும் மேலும் தப்பு பண்ணி பாவத்தை சேர்க்காத இனிமேல் உனக்கு உயிர் மேல பயம் இருந்தா ஒழுக்கமா நடத்துக்கோ உனக்கும் எனக்கும் இனி அபிஷியலா எந்த சம்பந்தமும் இல்லை” என்று அவனைக் கீழே தள்ளி விட்டு சென்று விட்டான்.
இதைப் பார்த்த சுபாவிற்கு தன்னை மீறி கண்களில் சந்தோஷக் கண்ணீர் வந்தது. தன் கற்பை அழித்த அஸ்வின் அவன் அவளை அடைந்த விதம் தப்பு என்று உணர்ந்ததினால் அவள் மனதில் சிறு நிம்மதி நிலவியது. ஆனாலும் சுனிதாவின் விஷயம் மனதில் ஞாபகம் வந்து அவளின் நிம்மதியைக் கெடுத்தது.
ரேவதிக்கு கால் செய்த சுபா, “என்னடி நீயே இந்த வீடியோ எடுத்திருக்க” என்று கேள்வியாய் கேட்டாள்.
“அந்த விக்கி எதாவது திமிருத் தனம் பண்ணா அவனை மிரட்ட தான் சரி அஸ்வின் அண்ணா பேசுனதை கவனிச்சியா?” என்று கேட்டாள்.
“மண்ணாங்கட்டி” என்று ஃபோனை கட் செய்தாள்.
‘நீ இப்படியே பண்ணி உன் வாழ்க்கை உன் கைய மீறி போயிடப் போகுது சுபா’ என்று மனதில் அவளுக்காக வருந்தினாள் ரேவதி.
பாபு, ஈஸ்வரி கல்யாணம் இன்னும் இரு நாட்களில் என்பதால் அனைவரும் சென்னையில் இருந்து கிளம்ப ஆரம்பித்தனர். அஷ்வின் முதலில் வரவில்லை என்று கூறினான். ஆனால் பாபு மற்றும் அரவிந்த் அவனிடம் கெஞ்சிக் கொண்டே இருந்ததால் அஸ்வினும் புறப்பட தயாரானான்.
மாளவிகா அவினாஷோடு டெல்லியில் நடக்கும் டாக்டர்களின் கான்பரன்ஸிற்கு சென்றதால் அவர்களால் வர முடியவில்லை.
சபேசன் வீட்டின் கதவு தட்டப்பட்டது யாரென்று கதவைத் திறந்த சுபாவிற்கு யாரோ புதியவன், “ஹேய் சுபா வாவ் யூ ஆர் சோ பியூடிஃபுல்” என்றான்.
“வாப்பா ரகு, சுபா இது யாருன்னு தெரியலையா? நம்ம திருநெல்வேலி மகாதேவன் மகன் இவங்களைப் பார்க்க தான் நான் அங்க போயிருந்தேன்” என்று சொல்லும்போதே துளசி வந்தார்.
ரகுவைக் கண்டதும் எதற்கு இங்கு வந்தான் என்று புரிந்த துளசியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“சுபா… ரகு இங்க தான் தங்க போறார் நாளனிக்கு பாபு, ஈஸ்வரி கல்யாணம் முடிஞ்சதும் எல்லார் முன்னாடி உனக்கும் ரகுக்கும் கல்யாணம் பேசி முடிக்கப் போறேன்” என்று சாதாரணமாகக் கூறினார்.
“அப்பா என்ன பா சொல்றீங்க? என்னால இன்னொரு கல்யாணம் பண்ண முடியாதுப்பா அது ஒருநாளும் நடக்காது” என்றாள் தீர்மானமாக.
“துளசிம்மா என்ன இது அதுவும் இப்போ சென்னையில இருந்து எல்லாரும் வருவாங்க எதுக்கு இப்போ இவரை தங்க வைக்கணும்” என்று அவரிடம் கேட்டாள்.
“உன்னை விட எனக்கு கோபம் அதிகமா இருக்கும்மா, ஆனால் வந்தவனை போனு இனிமேல் சொல்ல முடியாது. அவங்க எல்லாரும் போன அப்பறம் இந்த கல்யாணம் வேண்டாம்னு தெளிவா சொல்லிடு” என்றார் துளசி.
“ஐ நோ வாட் ஹாப்பண்ட் டு யூ பட் ஐ வான்ட் டு மேரி யூ பியூட்டி” என்று வழிந்தான் ரகு. அவனை முறைத்துக் கொண்டிருந்தான் சித்து. தன் தந்தையின் செயலை நினைத்து கவலையில் ஆழ்ந்தாள் சுபா.
அரவிந்த், தீபிகா மற்றும் பாபு ஈஸ்வரி துளசியின் வீட்டை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்ற சபேசன் தன் நண்பனின் மகன் ரகுவை அறிமுகப்படுத்தினார்.
“அமெரிக்கால பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறார் இவருக்கு தான் சுபாவை மணம் முடிக்க பேசப் போகிறேன்” என்று வேண்டும் என்றே கூறினார். இதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்.
“வாசுதேவன் குடும்பம் எங்கே அவர்களுக்கு தான் இந்த நல்ல விஷயத்தை முக்கியமா சொல்லணும்” என்று நக்கலாகப் பேசினார்.
“அவங்க எல்லாரும் பெரிய வீட்டுக்கு போய்ட்டாங்க அப்போ நாங்களும் கிளம்புறோம்” என்று எழுந்த பாபு மற்றும் ஈஸ்வரியுடன் அரவிந்த்
தீபிகாவும் எழுந்தனர். அவர்கள் கடும் கோபத்தில் தான் இப்படி செய்கிறார்கள் என்று உணர்ந்த சுபா மற்றும் துளசி செய்வதறியாது திகைத்து நின்றனர்.
அனைவரும் கிளம்பி காரில் ஏறும் போது துளசி மட்டும் பின்னாடியே சென்று, “பாபு அண்ணா எனக்கும் சுபாக்கும் இதுல சுத்தமா உடன்பாடு இல்லை தயவு செஞ்சு இங்கு நடந்தது…” என்று அவர் முடிக்கும் முன்பே, “அஸ்வின் குடும்பத்திற்கு நாங்க சொல்ல மாட்டோம்” என்று காரைக் கிளப்பி விட்டுச் சென்றனர்.
“அந்த பொண்ணு சுபா இப்பயும் வாயைத் திறக்கலனா அந்த பொண்ணோட வாழ்க்கையை அதுவே பாதாளத்துல தள்ளப் போகுது. அஸ்வின் இஸ் அ ஜெம்” என்று கூறிவிட்டு அமைதியானார் பாபு. தீபிகாவும் அரவிந்தும் தங்களின் முகங்களைக் கவலையாகப் பார்த்துக் கொண்டனர்.
