அத்தியாயம் 4
அவர்கள் சொல்லால் செயலால் அதிர்ச்சி அடைந்தவன் தன்னுடைய நியாயத்தை எடுத்து உரைக்க வந்தான். ஆனால் அவனை பேசவிடாமல் “இப்போவே வெளியே போ” என்று சென்று விட்டனர்.
அஸ்வின் யோசித்தான் இந்த விஷயம் தெரிந்தது மூன்று பேருக்குத் தான். அது தான் அந்தப் பெண் மற்றும் அரவிந்த். தீபிகா மறைந்திருந்து கண்டது யாருக்கும் தெரியாது.
சுப்பிரமணியன் மற்றும் லஷ்சுமி தீபிகா தான் சொன்னாள் என்று கடைசி வரைச் சொல்லவில்லை. கண்டிப்பாக அரவிந்த் சொல்ல வாய்ப்பில்லை அந்த சுபா தான் சொல்லிருப்பாள்.
‘என்னை ரொம்ப விரும்புற என் தாத்தா, பாட்டியே என்னை அடிச்சிட்டு பொறுக்கினு சொல்லிட்டாங்க. என் பின்னாடி எவ்வளவு பொண்ணுங்க சுத்துறாங்க அவங்கள மதிக்காம இருக்கிற நான் பொறுக்கியா?? யேய் சுபா உனக்கு அழிவு காலம் ஆரம்பிச்சுருச்சு டி என் வீட்டுக்கு என்ன வரவிடாம பண்ணிட்டு நீ இங்க சந்தோஷமாக இருக்கியா?’
‘நீ என்ன இன்னிக்கு அடிச்சதுக்கே உனக்கு தண்டனை கொடுக்கல அதுக்குள்ள உன்னோட வாழ்க்கையின் அழிவ தேடிட்ட’ என்று அவளை மனதில் வறுத்தெடுத்தவன், தன்னுடைய திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிக் கொண்டு அவன் நேரே சென்றது சுபா இருக்கும் அறைக்கு.
அஸ்வினின் செயலால் தூக்கம் இல்லாமல் தங்கள் அறையில் நடந்துக் கொண்டிருந்தாள் சுபா அங்கு தீபிகா தூங்கிக் கொண்டு இருந்தாள். அப்போது அவள் கதவை வேகமாக தள்ளி விட்டு உள்ளே புயலைப் போல் நுழைந்தான் அஸ்வின்.
இந்நேரத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அவனின் வருகையைப் எதிர்பாராத சுபா தீபிகாவை காண வந்திருப்பான் என்று முதலில் நினைத்தாள். ஆனால் அவன் தன்னை நோக்கி ஆக்ரோஷமாக வருவதை பார்த்தவள் பயந்தாள்.
அவள் அருகே வேகமாக வந்தவன் அவளை சுவற்றில் தள்ளி அவள் இரு கையை முறுக்கி, “என்ன டி பண்றது லாம் கேவலமான வேலை ஆனால் பயந்த பொண்ணு மாதிரி சீன் கிரியேட் பண்ற. உன் வயசு என்ன?” என்று கர்ஜித்தான்.
அவன் சத்தத்தில் தீபிகா அசைந்ததைப் பார்த்தவன் சுபாவை தரையில் தள்ளி விட்டு அவள் எழுந்திருக்க முடியாத அளவிற்கு தன் கைகளை வைத்து அவளின் இரு கைகளை சிறை செய்தான். “நான் கேட்டா பதில் சொல்லணும் சொல்லுடி உன் வயசு என்ன?” என்று அவள் அருகில் அமைதியாக கத்தினான்.
அவனின் இந்த தொடுகையை அருவருப்பாக உணர்ந்த சுபா, “பன்னிரெண்டு” என்று அழுதாள்.
“உன்னை இப்போ பழிவாங்குற வயசு எனக்கு இல்ல நீ முழுசா என்னோட தண்டனைகளை அனுபவிக்கணும் அதுக்கு ஏத்த வயசு உனக்கு இல்ல ஆனா நீ பண்ற எல்லா வேலையும் உன் வயசுக்கு மிஞ்சுனது தான்.”
“நான் எதுவும் பண்ணலங்க நீங்க எதுக்கு என்கிட்ட இப்படி நடந்துக்குறீங்க நான் எங்க வீட்டுக்கு போகணும்” என்று அழுதாள். அவள் அழுவதைப் பார்த்துக் கடுப்பானவன் அவளை பளார் என்று அறைந்தான்.
அதில் உறைந்த சுபாவின் வாயை பொத்தி, “என்னை எங்க வீட்டுல இருந்து வெளியே அனுப்பிட்டு நாடகம் ஆடுறியா? முட்டாள்!! ஆழம் தெரியாமல் காலை விட்டுட்ட அனுபவிடி நல்லா. நான் உன்னை பழிவாங்க வருவேன் சும்மா இப்போ விட்டுட்டு போறேனு நினைச்சிக்காத. நான் உன் வாழ்க்கையில் திரும்பி வர வரைக்கும் நிம்மதியா இரு அதுக்கு அப்புறம் உனக்கு வாழ்க்கையே நரகம் தான்.”
பின் அவளை தள்ளி விட்டுச் சென்றான். தனது காரை எடுத்துக் கொண்டு சென்னைக்கு விரைந்தான். தனக்கு என்ன நடக்குது என்றே புரியாமல் அந்த தரையிலேயை விழுந்து அழுது தூங்கி விட்டாள் சுபா.
அடுத்த நாள் காலை விழித்த சுபாவிற்கு நடந்தது எல்லாம் கனவா என்று கூட தோன்றியது. ஆனால் தன் கன்னம் சிவந்து இருந்ததை வைத்தே நடந்தது எல்லாம் உண்மை என்றே அறிந்தாள்.
பின் துளசிக்கு கால் செய்து தனக்கு இங்க இருக்க பயமாய் இருக்கிறதாய் கூறினாள். பயந்து போன துளசி உடனடியாக தன் தந்தையின் வீட்டிற்கு வந்து சுபாவை அழைத்துச் சென்றார்.
துளசியுடைய பெற்றோரிடம் தன் கணவன் தன்னுடைய மகள்களை தேடுவதாய் பொய் சொல்லி விட்டு அழைத்துச் சென்றார். வீட்டிற்கு வந்த பின் ஒரு வாரம் சுபா யாரிடமும் பேசவில்லை.
இதனைப் பார்த்த துளசி தீபிகாவிடம், “சுபாவை யாராவது அங்கு திட்டினார்களா?” என்று கேட்டார். ஆமாம் என்று தான் பார்த்து நடந்தவை எல்லாம் கூறினாள்.
இதைக் கேட்ட துளசி சுபாவிடம் சென்று, “சுபிக்குட்டி அஸ்வின் உன்னை அடிச்சிட்டான்னு தீபு சொன்னா. என்ன மன்னிச்சிடு மா என்னால தான் எல்லாமே. இனிமேல் நீ எங்கயும் தனியா போகாத” என்று கூறினார்.
“ஆனால் எனக்கு அஸ்வின் பத்தி தெரியும் சுபி அவன் ரொம்ப நல்லவன் ஏன் உன்னை கட்டிப்பிடித்து இந்த மாதிரி மிருகத்தனமாக நடந்துக்கிட்டான்னு தெரியல”
“இந்த விஷயத்த அப்படியே விட்டுருங்க துளசிம்மா உங்களுக்கு இந்த விஷயம் யார் சொன்னா?” என்று கேட்டாள்.
“தீபிகா தான் சொன்னா” என்றார்.
“ஆமாம் அக்கா நான் தான் தாத்தா பாட்டி கிட்ட சொன்னேன்.அதுக்கு அடுத்த நாள் அஸ்வின் அத்தான் வீட்ட விட்டு போய்ட்டாங்க நான் சொன்ன அப்பறம் பயந்துட்டாங்க. என்னோட சுபி அக்காக்கு நான் தான் பாதுகாப்பு” என்று சிரித்தாள்.
அப்போது தான் சுபா யோசித்தாள் அஸ்வின் மிருகத்தனமாய் தன்னை நடத்தியதற்கு காரணம் தாத்தா பாட்டியிடம் தீபிகா சொன்னது தான் என்று நினைத்துக் கொண்டு தன்னிடம் அப்படி நடந்துக் கொண்டிருக்கிறான்.
ஆனாலும் அவர் நடந்த விதம் தப்பு ஒரு பெண்ணை மிருகத்தனமாக நடத்துபவன் ராட்சசன். தன் தங்கை தன் மீது உள்ள பாசத்தை நினைத்து சந்தோஷப்பட்டாள். தான் பட்ட துன்பம் கூட பெரிதாக நினைக்கவில்லை.
சுபாவிடம் ஆறுதல் சொன்னவளை, “துளசிம்மா நான் அப்பா கிட்ட சொல்லமாட்டேன் கவலைப்படாதீங்க” என்று கட்டிபிடித்தாள். அதிலிருந்து சுபாவை துளசி தீபிகா இல்லாமல் வெளியில் அனுப்ப மாட்டார்.
தற்போது கண்ணீரை துடைத்த சுபா துளசியிடம் சென்று, “அம்மா நீங்க எல்லாம் கல்யாணத்திற்கு போயிட்டு வாங்க” என்றாள். அதற்கு மேல் சுபாவைக் கட்டாயப்படுத்தவில்லை துளசி.
மாளவிகாவின் கல்யாணம் சிறப்பாக நடந்தது. சுபாவைத் தவிர அனைவரும் சென்றிருந்தார்கள். அரவிந்த் குடும்பத்தினர் சுபாவை ரொம்ப விசாரித்தனர். வாசுதேவன் மற்றும் சசிகலா மாப்பிள்ளை வீட்டாரை கவனிக்க சரியாக இருந்தது.
அஸ்வின் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து முடிக்கும் தருணத்தில் இருந்ததால் அவனால் கல்யாணத்திற்கு வர இயலவில்லை. தனக்காக தங்கைக்கு காலம் கடக்க வேண்டாம் என்று அஸ்வின் கூறிய பின்னரே கல்யாண தேதி முடிவு செய்தனர்.
தன்னுடைய லாப்டாப்பில் தங்கையின் கல்யாண வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பார்த்த அஸ்வினின் கண்கள் சுபாவைத் தேடின. அவள் அங்கு இல்லை என்று தெரிந்ததும் ஒரு வெற்றிப் புன்னகை இருந்தது அவன் முகத்தில்…
தன் மேல் உள்ள பயத்தினால் அவள் கல்யாணத்திற்கு வரவில்லை என்று கொடூரமாக சிரித்தான். “சுபா வர்ஷினி இன்னும் எவ்வளவு நாள் என்கிட்ட இருந்து பதுங்கி ஓடுவனு நான் பார்க்குறேன் டி” என்று அசுரன் போல் சிரித்தான்.
