அத்தியாயம் 7
சுபாவை பழிவாங்குவதற்காக முதற்கட்டமாக அவளுடைய அலுவலகத்தில் நுழைந்த அஸ்வின் நேராகச் சென்றது ராகுலின் அறைக்கு. “ஹே அஸ்வின் எப்படி இருக்க? ஒருவழியா இந்தியா வந்துட்ட மிஸ்டர் ஹாண்ட்சம்” என்றான்.
“யா ராகுல் ஃபைனலி ஐ அம் ஹியர்” என்றான்.
“உன் வீட்டில அம்மா அப்பா அப்பறம் தங்கச்சி எப்படி இருக்காங்க?” என்று கேட்டான் ராகுல்.
“எல்லாரும் நல்லா இருக்காங்க உன் வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்று கேட்டான் அஸ்வின்.
“எல்லாரும் நலம் டா உன்னோட ஆர்ட்டிக்கில்ஸ் நிறைய பார்த்தேன் செமயா இருந்தது எங்கயோ போய்ட்ட அஸ்வின் இப்போ இனிமேல் சென்னை தானா?” என்று கேட்டான் ராகுல்.
“ஆமா ராகுல் இந்தியால இருக்குறத இனிமேல் பார்க்க போறேன்” என்றான்.
“ராகுல் நீ நான் சொல்றத கண்டிப்பா செய்யணும் அந்த சுபா வர்ஷினிக்கு ஓவர் டைம் வொர்க் குடு வீக்கென்ட்ஸ் லாம் ஆபிஸுக்கு வர வை அவளுக்கு வொர்க் பிரஷர் குடு” என்றான்.
“நீ சொல்லி நான் செய்யலனா நீ என்ன சும்மாவா விட போற? கண்டிப்பா பண்றேன். ஆனா அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகப்போகுதாமே? நீ என்கிட்ட அந்த பொண்ண பத்தி கேட்டதுல இருந்து அந்த பொண்ண பார்ப்பேன் டா…”
“என்னமா அழகா இருக்கா கொடுத்து வெச்சவன் டா அவ புருஷன்… இன்னிக்கு கூட சேலை கட்டிட்டு வந்துருக்கா தேவதை மாதிரி இருக்கா” என்றான்.
“நான் சொன்ன வேலைய செய் ராகுல் நான் கிளம்பறேன்” என்று அஸ்வின் கிளம்பிவிட்டான். மாலை தன்னுடைய
வேலையை முடித்து சுபா கிளம்ப தயாரானாள்.
அப்போது அவளுடைய டீம் மேட் ரியா விற்கு பிறந்தநாள் என்பதால் அவளுடைய டீம் அனைவரும் பக்கத்தில் இருக்கும் ரெஸ்டாரென்ட்டில் சாப்பிடுவதற்காகச் சென்றனர்.
துளசியின் அறிவுரைப்படி சுபா அலுவலகம் விட்டால் ஹாஸ்டல் வேறு எங்கும் செல்லாமல் இருந்தாள். அலுவலத்தில் இருந்து ஹாஸ்டல் செல்ல கேப் வசதி இருந்ததால் நிம்மதியாக பத்திரமாக இருந்தாள்.
ரியாவின் பிறந்தநாளில் அனைவரும் ரெஸ்டாரென்ட்டில் சாப்பிடச் சென்றனர். சுபா வரவில்லை என்று கூறினாள். ஆனாலும் அனைவரும் அவளை வற்புறுத்தி அழைத்துச் சென்றனர்.
எல்லாரும் நன்றாக சாப்பிட்டு புகைப்படங்கள் எடுத்து விட்டு கிளம்ப மணி ஒன்பது ஆனது.
சுபா ரியாவின் காரில் நுங்கம்பாக்கம் பேருந்து நிறுத்தம் வரை சென்றாள். அதற்குப்பிறகு தானே பஸ் பிடித்து செல்வதாய் கூறினாள். ரியாவிற்கு அவளை தனியாக விட்டுச் செல்ல மனமில்லை.
ஏனெனில் ரியாவின் வீடு பெரம்பூரில் இருந்ததால் ரியாவை கிளம்ப சொல்லிவிட்டு சாலிகிராமம் செல்லும் பேருந்திற்காக வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தாள்.
மணி ஒன்பதரை ஆன சமயத்தில் பேருந்து நிறுத்தத்தில் ஆள் அரவமே இல்லை சுபாவிற்கு இந்நேரத்தில் ஆட்டோ பிடிக்க பயமாக இருந்ததால் பேருந்திற்காக நின்றாள்.
அப்போது தீடிரென பின்னால் இருந்து யாரோ அவளுடைய முகத்தில் கைக்குட்டை வைத்து மூடினர். அதற்கு அப்புறம் சுபா தன் சுய நினைவை இழந்தாள்.
கண் விழித்து பார்த்த போது சுபா ஏதோ குளிர்சாதன அறையில் இருந்தாள். ‘தனக்கு என்ன ஆச்சு இங்கு எப்படி வந்தோம்?’ என்பதை யோசித்துக் கொண்டிருந்தாள்.
அச்சமயம், “வெல்கம் மிஸ் சுபா வர்ஷினி! எப்படி இருக்க கல்யாணம் எல்லாம் முடிவாயிடிச்சு போல சந்தோஷமா இருக்கியே அது தப்பாச்சே! உன்ன இந்த இடத்திற்குக் கொண்டு வர ரொம்ப டைம் ஆயிடுச்சு” என்று அசுரன் போல் சிரித்தான் அஸ்வின்.
ஏனென்றால் அஸ்வின் ராகுலிடம் சுபாவிற்கு ஓவர் டைம் வோர்க் கொடுக்க சொன்னதின் நோக்கம் சுபா கேபை மிஸ் செய்வாள் அதற்கு அப்புறம் அவளைக் கடத்தி கொண்டு வரலாம் என்ற நோக்கத்துடனே அவ்வாறு கூறினான்.
ஆனால் அவனுக்கு சூழ்நிலை இன்று சாதகமாக அமைந்ததால் சுபாவை பின்தொடர்ந்து அவளுக்கு மயக்கம் கொடுத்து கடத்தினான்.
“யார் நீங்க என்னை ஏன் கடத்தி வச்சிருக்கீங்க? உங்கள நான் இது வரைக்கும் பார்த்தது கூட இல்ல ப்ளிஸ் என்ன விட்டுருங்க” என்று கெஞ்சினாள். அஸ்வினைப் பார்க்க இங்கிதம் உள்ளவன் போல் இருப்பதால் சுபா தன்னிடம் எல்லை மீறுவான் என்று நினைக்கவில்லை.
ஆனால் ஒரு ஆண் பார்க்க நன்றாக தோற்றமளித்தாலும் அவன் மனதில் வன்மமும் அழுக்கும் இருப்பதை இப்பேதை அவள் அறியவில்லை.
“உன்ன விடுறதுக்கா இங்க கூட்டிட்டு வந்துருக்கேன். என்னோட வேலை முடிஞ்ச அப்பறம் நானே உன்ன தூக்கி போட்டுருவேன் டி” என்று அவளை நெருங்கினான்.
“எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு ப்ளிஸ் என்ன விட்டுருங்க உங்கள கெஞ்சி கேட்கிறேன்” என்று கதறி அழுதாள்.சுபாவை நெருங்கிய அஸ்வினின் கண்களில் பழிவெறி இருந்தது.
அவளை தன்னுடைய தம்பி மணக்கபோகிறான் என்று தெரிந்தும் சுபாவை நாசமாக்க முடிவு பண்ணினான். அவள் இருந்த கட்டிலை நெருங்கியவன் தன்னுடைய சட்டையை கழட்டினான். அவனிடம் இருந்து தப்பிக்க சுபா எழுந்து ஓட முயன்றாள்.
ஆனால் அவனின் பலமான கைகளில் அவளை சிறை செய்தவன் அவளிடம் தன்னுடைய முரட்டு தனத்தை காட்டினான். அவள் இதழ்களை நோக்கி குனிந்து அவளுடைய இதழைப் பருகினான். அவனிடம் இருந்து விடுபடமுடியாமல் சுபாவின் கண்களில் இருந்து அழுகை ஆறாய் வந்தது. பின் அவளை இறுக்கமாக அணைத்து அவளின் வெற்று இடையில் அவன் கையை அழுத்தினான்.
அடுத்து அவளின் ஆடைகளை கழட்ட ஆரம்பித்தான். தன்னுடைய முந்தானையை இறுக்கி பிடித்திருந்தவளை முரட்டு தனமாக கன்னத்தில் அறைந்து அவளின் சேலையை உருவினான்.
இதுவரை தொலைக்காட்சியில் நாளிதழ்களில் மட்டுமே கற்பழிப்பு செய்திகளை கேள்விப்பட்ட சுபா தனக்கே அது நிகழப்போவதை நினைத்து தன் உயிர் இக்கணமே போகணும் என்று நினைத்தவள் பக்கத்தில் இருக்கும் ஏதாவது இரும்பு கண்ணாடி பொருள்களைத் தேடினாள்.
ஆனால் இவள் இப்படி செய்ய முற்படுவாள் என்று யூகித்த அஸ்வின் முன்னமே அந்த அறையில் எவ்வித பொருள்களையும் வைக்கவில்லை. தன்னால் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதால் தன்னை நினைத்து கதறி அழுதாள்.
அவளை மெத்தையில் தள்ளி விட்டவன் அவளிடம் தன்னை ஆட்கொண்டான். அவனிடம் போராடி துவண்டு போனாள். சுபாவைத் தன்னவள் ஆக்கிய அஸ்வின் பின் அவளை விடுவித்து அவளுடைய ஆடைகளை அவள் மேல் தூக்கிப்போட்டு, “நீ இப்போ என்னோட இருந்தது எல்லாமே வீடியோ எடுத்து வச்சிருக்கேன்.தற்கொலை பண்ணனும்னு நினைச்சேனா உன் குடும்பத்துக்குப் போட்டுக் காட்டிடுவேன் என்ன புரியுதா டி?” என்று உறுமினான்.
அஸ்வினுக்கு சுபாவினால் பொறுக்கி என்று தன்னை தூக்கி வளர்த்த தாத்தா பாட்டி வெறுத்ததால் சுபாவை சிதைக்க வேண்டும் என்று நினைத்தான். இதுவரை பெண்கள் தன்னிடம் உரசினாலும் அவர்களிடம் அஸ்வின் நெருங்கி பழகியது இல்லை.
ஆனால் சுபாவை விருப்பமே இல்லாமல் அவளை சீரழித்தவனுக்கு அவள் இதற்கு அப்புறம் தற்கொலை செய்ய முற்படுவாள் என்று யூகித்தான். அவள் அவ்வாறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வீடியோ எடுத்தேன் என்று பொய் சொன்னான்.
யாரென்றே தெரியாதவன் இதுவரைப் பார்த்தது கூட இல்லை எங்கிருந்தோ வந்து தன் மானத்தை தன் வாழ்க்கையைக் கெடுத்து விட்டான் என்று அந்த இடத்திலேயே அழுதுக்கொண்டிருந்தாள் சுபா. “இனிமேலும் நீ நிச்சயமானவன் கூட கல்யாணம் பண்ணுவியா!!!” என்று கர்ஜித்தான்.
அதைக் கேட்டு மேலும் அழுத சுபாவைப் பிடித்து உலுக்கி, “உன்ன தான் கேட்கிறேன் சொல்லு. நான் கேட்டா பதில் வரணும்.” என்று ஆக்ரோஷமாக கேட்டான். பயத்தில் வெடவெடக்க, “நான் யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்” என்று அழுதாள்.
பின் அவளை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து அந்த பங்களாவின் வெளியே தள்ளிவிட்டான்.அந்த பங்களா அஸ்வின் மூன்று வருடங்கள் முன்னாடி வாங்கியது ஈசிஆர் ரில் இருக்கும் அந்த பங்களாவை வாங்கியது அவனது பெற்றோர்களைத் தவிர யாருக்கும் தெரியாது.
வேலையாட்கள் அனைவருக்கும் இதனால் இரண்டு நாள் விடுமுறை கொடுத்தான். தான் அஸ்வின் என்று சுபாவிடம் சொல்லாமல் இருந்ததை நினைத்து சிரித்தான்.
‘ஏய் நான் யாருன்னு தெரியாம கொஞ்ச நாள் துடிச்சுப் போ… நான் அஸ்வின் தான்னு உனக்கு இப்போதைக்கு தெரியக்கூடாது எவனோ ஒருத்தன் உன்ன கற்பழிச்சிட்டான்னு போய் வெளிய சொல்லு நான் யாருன்னு தெரியாம நீ துடிக்கணும்’ என்று மனதில் வன்மமாக நினைத்தான்.
சுபாவை தள்ளிய அஸ்வின் கதவை சாத்திவிட்டு உள்ளேச் சென்று விட்டான். அந்த இடத்தை சுற்றிலும் பார்த்தவளுக்கு பயமாக இருந்தது. காலை நேரமானாலும் அடர்த்தியான செடிகள் மரங்கள் சூழ்ந்து இருந்த அந்த பங்களாவைப் பார்க்க அவளுக்கு படபடப்பாக இருந்தது. முடிந்த அளவு வேகமாக வெளியேற வேண்டும் என்று நினைத்து மடமடவென எழ முற்பட்டாள்.
ஆனால் நேற்றைய சம்பவத்தால் அவளால் எழ முடியவில்லை. ஆனாலும் கஷ்டப்பட்டு எழுந்து வேக வேகமாக அந்த பங்களாவைத் தாண்டினாள். தான் எந்த இடத்தில் இருக்கோம் என்று கூட அவளுக்கு தெரியவில்லை சுற்றிலும் காடு வீடுகள் எதுவும் இல்லை தூரத்தில் ஒரு ஆட்டோ வந்தது.
பொதுவாக ஆட்டோவில் தனியாக சுபா செல்ல மாட்டாள். துளசியின் அறிவுரை அது இப்போது வாழ்க்கையே நாசமாய் போச்சு இனிமேல் ஆட்டோவை பார்த்து பயப்பட என்ன இருக்கிறது என்று நினைத்து கலங்கியவள், ஆட்டோவைப் பார்த்து கை அசைத்தாள். அதில் ஒரு வயதானவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்தார்.
அவரிடம், “கோயம்பேடு போகணும் அங்கிள்” என்றாள். “ஏறுமா” என்று கூறிய பின் ஏறினாள். நேற்று அவளிடம் இருந்த கைப்பையில் பணம் இருந்ததால் இப்போது கொடுக்க பணம் வைத்திருந்தாள்.
இந்த கைப்பை தன்னிடம் எப்படி வந்தது என்று யோசித்தாள். அந்த அசுரன் அவளை வெளியே தள்ளிய சமயம், ”எங்கேயும் போய் செத்துத் தொலையாத ஒழுங்கா வீடு போய் சேரு அப்படி நீ தற்கொலை பண்ண நினைச்சனா வீடியோ லீக் ஆகிடும் அப்புறம் உன் குடும்ப மானம் கெட்டுரும்” என்று அவள் கைப்பையை வீசினான். அவனை நினைத்தவுடன் அவளது உடல் உதற ஆரம்பித்தது.
அந்த ஆட்டோ ஓட்டுனரிடம், “இது என்ன இடம்?” என்று கேட்டாள். “இது ஈசிஆர்மா எந்த ஏரியானு தெரியாம இங்க வந்துட்டியாமா? நான் சொல்லுறேன்னு தப்பா நினைக்காதமா… என் பொண்ணு வயசு இருக்கும் உனக்கு இந்த மாதிரி ஆள் இல்லாத இடத்திற்கு தனியா வராத மா பாதுகாப்பு இல்ல” என்றார்.
‘நானா வந்தேன் இங்க என்ன கடத்திட்டு வந்து வதைச்சிட்டான் அவன்’ என்று நினைத்தவள், “சரி அங்கிள்” என்று மரியாதைக்காக பதிலளித்தாள்.
கோயம்பேடு சென்றவுடன் மதுரைச் செல்லும் பேருந்தில் ஏறி டிக்கெட் எடுத்து படுக்கை வசதி உள்ள அந்த பேருந்தில் மேலே இருக்கும் படுக்கையில் சென்று படுத்த சுபா கதறி கதறி அழ ஆரம்பித்தாள்.
“துளசிம்மா என்ன எப்படி லாம் பாதுகாத்தீங்க இப்படி சீரழிஞ்சுப் போய்ட்டேனே நீங்க பயந்த மாதிரியே நடந்துருச்சே… நான் எப்படி உங்ககிட்ட எனக்கு நடந்தத சொல்றது அப்பாக்கு இது தெரிஞ்சா எப்படி துடிச்சிடுவாரு அய்யோ முருகா இப்படி ஒரு நிலமை வந்தும் உயிரோட இருக்கேனே!” என்று கதறினாள்.
தன்னுடைய திருவான்மியூர் வீட்டை அடைந்த அஸ்வின் அவன் அறைக்குச் சென்று குளித்துவிட்டு தன் வீட்டிலேயே இருக்கும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்தான்.
அவனின் நினைவுகள் எல்லாம் சுபாவை பழிவாங்கி விட்டோம் ஆனால் அவளுக்கு இன்னும் இருக்கு என்று நினைத்திருந்த சமயம் அவனுடைய ஸ்பையிடம் இருந்து கால் வந்தது.
”பாஸ் சுபா மேடம் இப்போ மதுரைக்கு பஸ்ஸில் போய்கிட்டு இருக்காங்க” என்றான்.
”சரி அப்போ நீயும் மதுரைக்கு கிளம்பு. அவள நீ கவனிச்சிட்டே இருக்கணும்” என்றான் அஸ்வின்.
“கண்டிப்பாக பாஸ்” என்றான்.
