அத்தியாயம் 8

தன் வீட்டை அடைந்த சுபா உள்ளே செல்ல பயந்து நடுங்கினாள்.  “அக்கா வாட் ஏ சர்ப்ரைஸ் சொல்லாம திடீரென வந்துருக்க அம்மா, அப்பா… சுபி வந்துருக்கா” என்று சந்தோஷத்தில் குதித்தாள்.

 

இதைக்கேட்டு வந்த துளசி மற்றும் சபேசன் சுபாவை பார்த்தவுடன் அணைத்துக் கொண்டனர். தன் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் துளசி மீது சாய்ந்து அழுதாள்.

 

“என்ன ஆச்சு சுபா?” என்று கேட்டார். “உங்கள எல்லாம்  ரொம்ப மிஸ் பண்ணேன்மா அதான் பார்க்க வந்துட்டேன்” என்றாள்.

 

“உன்னோட முகம் ஏன் வாடிப் போயிருக்கு உடம்பு சரி இல்லயா?” என்று கேட்டார். “இல்லம்மா பயணம் பண்ண அலுப்பாக இருக்கும் நான் கொஞ்ச நேரம் படுத்துட்டு வரேன்” என்று தன் அறைக்குச் சென்றாள். 

 

தன்னுடைய வீட்டில் சொன்னால் நிலைமை தலைகீழாய் மாறிவிடும் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று நினைத்தாள். ஆனால் அரவிந்த்திடம் இந்த விஷயத்தை எப்படியாவது சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தாள். 

 

ஒரு வாரம் இப்படியே கழிந்தது சுபா யாரிடமும் பெரிதாக பேசவில்லை துளசி கல்யாண டென்சன் என்று நினைத்து விட்டார். தன் அறையில் தூங்கும் போது தினமும் அழுவாள். 

 

அப்போது தான் சுபாவின் பிறந்தநாள் வந்தது அவள் காலை எழுந்தவுடன் தன்னுடைய அறையை விட்டு வெளியே வந்தாள். அப்போது அவளுடைய அம்மா, அப்பா, தங்கை வீட்டை நன்றாக பலூன்கள் வைத்து அலங்காரம் பண்ணி கேக்கோடு அவளை வாழ்த்தினர்.

 

இப்படி இருப்பவர்களிடம் தான் கற்பழிக்கபட்டோம் என்பது அவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் உயிரே போய்விடும் அதனால் கல்யாணத்தை எப்படியாவது முதலில் நிறுத்த வேண்டும் என்று நினைத்தாள். 

 

தான் எதற்கு பிறந்தோம் தனக்குலாம் ஒரு பிறந்தநாளா இப்படி நடைபிணமாய் வாழ்வதற்கு சாகலாம் என்று நினைக்கையில் அந்த ராட்சசன் சொன்னது நினைவு வந்தது. உடனே பயந்து தன் நினைப்பை விட்டுவிட்டாள்.

 

சபேசன் மற்றும் துளசி சுபாவிற்காக நகையை பரிசு அளித்தனர். இப்படியே அன்று இரவு வரை கழிந்தது அப்போது அவர்களின் கதவு தட்டும் ஓசை கேட்டது கதவைத் திறந்த

சுபாவிற்கு அதிர்ச்சி.

 

“அரவிந்த் நீங்களா! நீங்க எப்படி இங்க இப்போ?” என்று தடுமாறினாள்.

 

“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபா. உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைச்சேன் இன்னிக்கு காலைல தான் சிங்கப்பூர்ல இருந்து வந்தேன் வேலை சீக்கிரம் முடிஞ்சிருச்சு ஆடிட்டர் வேலை இன்னும் முடியல ஆனா இப்போ அது அவ்வளவு அவசரம் இல்லை. என்னை உள்ளே வானு கூப்பிட மாட்டியா?” என்றான். 

 

“அது வந்து சாரி அரவிந்த் உள்ளே வாங்க” என்று அழைத்துச் சென்றாள். ”வாங்க அரவிந்த் தம்பி நீங்க எப்படி இருக்கீங்க? இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கீங்க இன்னும் இரண்டு மாசம் ஆகும்னு சொன்னீங்க. ஆனா ஒரு மாசத்துக்குள்ள வந்துட்டீங்க அப்பா, அம்மா நல்லா இருக்காங்களா?” என்று கேட்டார் சபேசன். 

 

துளசி மற்றும் தீபிகா அரவிந்தை வரவேற்றனர். அவனுக்கு சுபா காபி போட்டுக் கொண்டு கொடுத்தாள். சுபாவின் முகத்தைப் கவனித்த

அரவிந்த்திற்கு ஏதோ குழப்பமாகவே இருந்தது. 

 

காபி குடித்து முடித்து விட்டு சுபாவிற்கு தான் வாங்கி வந்த விலை மதிப்புள்ள பட்டு சாரியை பிறந்தாள் பரிசாக கொடுத்தான். சுபா சற்று தயங்கியே வாங்கினாள். அனைவரும் இவர்கள் பேசட்டும் என்று நினைத்து தனியாக விட்டுச் சென்றனர்.

 

அப்போது, “அரவிந்த் நீங்க எப்பயாவது ஃபிரீயா இருந்தா சொல்லுங்க உங்க கிட்ட நான் பேசணும்” என்று பயந்து சொன்னாள்.

 

“நாளைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாம் சுபா மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திரு” என்றான். அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அரவிந்த் சென்று விட்ட பின் சுபா தன் அறையில் சென்று கதவை சாற்றிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

 

”ஏன் நான் உயிரோட இருக்கணும் என்னால நிம்மதியா சாப்பிட முடியல தூங்க முடியல என் உடம்பெல்லாம் வலிக்குது. அவன் என் கிட்ட முரட்டு தனமா நடந்த தடயங்களை பார்த்தா அந்த சம்பவம் ஞாபகம் வருதே பயமா இருக்கே” என்று அழுதாள். 

 

அஸ்வின் அன்று இரவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்குச் சென்றான் பொதுவாக அஸ்வினுக்கு அலுவலக வேலை அதிகமாக இருக்கும் மற்ற நாட்டில் இருக்கும் தன்னுடைய பிரான்ச்சிற்கு கால் செய்து நிலவரங்களை அறிந்துக் கொள்வான்.

 

கால் முடிந்த பின் அஸ்வின் படுக்கைக்கு செல்லும் சமயம் அரவிந்த்திடம் இருந்து எஸ்எம்எஸ் வந்தது அவன் சென்னை வந்துவிட்டான் என்று. இதைப்பார்த்து யோசித்தவன் சிறிது நேரம் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக தூங்கச் சென்றான். 

 

அடுத்த நாள் மாலை சுபா மற்றும் அரவிந்த் மீனாட்சி அம்மன் கோவிலில் மீட் செய்தார்கள். அரவிந்த்திடம் நடந்த விஷயங்கள் அனைத்தும் சொல்ல வேண்டும் என்று நினைத்த சுபா எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

 

“ஏய் சுபா ஏதோ பேசணும்னு சொன்ன ஆனா அமைதியா இருக்க என்ன ஆச்சு நீ பார்க்கவே ரொம்ப டல்லா இருக்க உனக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டான். 

 

“அரவிந்த் இந்த கல்யாணம் நடக்கக்கூடாது உங்கள கல்யாணம் பண்ற தகுதி இப்போ எனக்கு இல்ல. நான் உயிரோட இருக்கறதே அர்த்தம் இல்ல நடைபிணமாய் அலைஞ்சிட்டு இருக்கேன்” என்று வெறுமையாய் கோவில் குளத்தைப் பார்த்துச் சொன்னாள்.

 

“என்ன ஆச்சு சுபா ஏன் இப்படி பேசுற? உனக்கு என்ன ஆச்சு?” என்று அதிர்ந்தான்.அரவிந்தைக் கண்ட சுபாவின் கண்களில் கண்ணீர் மூண்டது.

 

“நான் ஒரு ரேப் விக்டிம்” என்று சுபா சொன்னதைக் கேட்ட அரவிந்த்திற்கு அதிர்ச்சியில் தன்னை மீறிக் கொண்டு கண்ணீர் வந்தது. “இரண்டு வாரம் முன்னாடி ஆபிஸ் முடிச்சிட்டு என் பிரண்ட்ஸ் கூட ரெஸ்டாரென்ட் போய்ட்டு வர நைட் ஆயிடுச்சு. நான் திரும்பி வரும் போது பஸ்ஸிற்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்போ யாரோ என் முகத்தை கர்ச்சீப் வெச்சு மூடினாங்க” அதுக்கு அப்பறம் நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்கும் பொழுது கதறி அழ ஆரம்பித்தாள்.

 

“உன்னை இப்படி பண்ணது யாரு சுபா?” என்று அவளை உலுக்கினான் அரவிந்த். “எனக்கு அவன் யாருனே தெரியாது அரவிந்த். அவன நான் பார்த்ததே இல்லை ஈசிஆர்ல ஏதோ பங்களா மாதிரி இருந்தது அங்க பக்கத்துல வேற யாரும் இல்லை.”

 

“எனக்கு என்ன பண்றதுனே தெரியல அரவிந்த் சாகலாம்னு யோசிச்சா… அவன் நீ செத்தா நமக்குள்ள நடந்த எல்லாத்தையும் வீடியோ எடுத்து வெச்சிருக்கேன். உன் குடும்பத்துக்கு போட்டு காட்டுவேன்னு மிரட்டுனான். என்னால வாழ முடியல நிம்மதி இல்ல பசி இல்ல தூக்கம் இல்ல இந்த கல்யாணத்தை நிறுத்திருங்க அரவிந்த்”

 

“என் அம்மா, அப்பா கிட்ட எப்படி இத சொல்லி நிறுத்துறதுனு எனக்கு தெரியல. ப்ளிஸ் எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திருங்க” என்றாள்.

 

”நீ சொல்றத பாத்தா கண்டிப்பா உனக்கு தெரிஞ்சவன் தான் பண்ணிருக்கணும் சுபா நல்லா யோசிச்சு பாரு” என்றான் அரவிந்த்.

 

“எனக்கு சத்தியமா தெரியல என் வாழ்க்கை முடிஞ்சிருச்சு அரவிந்த் நீங்க என்ன பத்தி யோசிக்காதீங்க இந்த கல்யாணத்தை நிறுத்தணும்” என்றாள். 

 

“ஏன் சுபா இதே மாதிரி உனக்கு கல்யாணம் அப்புறம் ஆயிருந்தா நான் என்ன பண்ணிருப்பேன் உன் கூட தான இருப்பேன். அதே தான் இப்பவும் சொல்றேன் நீ தான் எனக்கு மனைவி அதுல மாற்றம் இல்ல” என்றான்.

 

“அரவிந்த் நீங்க என்ன பேசுறீங்க? என்னால கண்டிப்பா உங்கள கல்யாணம் பண்ண முடியாது ப்ளிஸ் நான் சொல்றத புரிஞ்சிக்கோங்க” என்றாள்.

 

“ஏன்கா அவர் சொல்றத உன்னால ஏத்துக்க முடியல” என்று பின்னாடி ஒரு பெண் குரல் கேட்டு திரும்பிய இருவரும் திகைத்தனர்.

 

”நீ சென்னையில இருந்து வந்ததுல இருந்து சரியில்லக்கா வந்து இரண்டு வாரங்கள் ஆகுது.  எப்போதுமே ஆபிஸீக்கு லீவ் போட மாட்ட இப்போ இரண்டு வாரம் லீவுல இருக்க நீ வரும்போதே உன் முகம் சரி இல்ல…”

 

“இங்க நீ சரியா சாப்பிடுறதில்ல தூங்குறதில்ல இரண்டு நாள் முன்னாடி ரூம்ல கதறி கதறி அழுத அப்போவே எனக்கு சந்தேகம் இருந்தது. நேற்று அரவிந்த் அத்தான் கூட தனியா பேசணும்னு சொன்னதை நானும் கேட்டேன் உன்னை தொடர்ந்து இப்போ வந்தேன். ஏன்கா இவ்வளவு உனக்கு கொடுமை நடந்திருக்கு என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணலயா? நீ எவ்வளவு கஷ்டத்துல இருக்க” என்று அழுதாள் தீபிகா. 

 

“தீபி எனக்கு நடந்த விஷயம் தெரிஞ்சா நீங்க யாரும் தாங்க மாட்டீங்க அதான் மறைச்சிட்டேன்” என்று அழுதாள்.

 

”ஏன்கா உனக்கு இப்படி நடந்திருக்கு கடவுளே இல்லயாகா. அவர் இருந்தா இப்படி நடந்திருக்காது என் கைல அந்த பொறுக்கி ராஸ்கல் கிடைச்சா நான் கொன்னுடுவேன் பூ மாதிரி இருந்த உன்னை இப்படி கசக்கிட்டானே அவன் சாகணும்” என்று கத்தினாள் தீபிகா. 

 

“தீபிகா உன் அம்மா,அப்பா கிட்ட நீ எதுவும் சொல்லாத சுபாவுக்கு இப்படி நடந்தத எல்லாரும் மறந்துடலாம் அதான் நல்லது” என்றான் அரவிந்த்.

 

”அரவிந்த் நீங்க இந்த கல்யாணத்தை நிறுத்துங்க எனக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்ல” என்று மறுபடியும் கூறினாள்.

 

“முடியாது சுபா நான் இன்னிக்கே என் வீட்டுல சொல்லி அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் பண்ண கேட்கப் போறேன். தீபிகா சுபா இனி உன் பொறுப்பு அவள தனியா விடாத கூடவே இரு” என்றான்.

 

”கண்டிப்பா அத்தான் சுபிக்கா ரொம்ப குடுத்து வெச்சவ நீங்க ஒரு ஜெம்” என்றாள். இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அரவிந்த் சென்றான். தீபிகா சுபாவை சிரிக்க வைக்க நிறைய காமெடி சொன்னாள். ஆனால் அவளின் சோகமான முகம் அப்படியே தான் இருந்தது. 

 

தன் வீட்டிற்கு வந்த அரவிந்த்திற்கு ஏனோ மனது நெருடலாகவே இருந்தது. சின்ன வயதில் சுபாவை பார்த்ததில் இருந்து அவள் மீது அவனுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது அவளின் அழகு, அமைதி,குணம் இப்படி எல்லாவற்றிலும் அவனை கவர்ந்தாள். 

 

சுபாவை கல்யாணம் செய்வதில் அரவிந்த்திற்கு மகிழ்ச்சி ஆனால் சுபாவிற்கு நடந்த அந்த கொடுமை ஏதோ நெருடியது. சுபா மாதிரி ஒரு பெண்ணை ஒருவன் கற்பழித்து இருக்கிறான் என்றால் ஒன்று அவளின் அழகாக இருந்திருக்கலாம் இல்லை அவன் ஒரு பொம்பளை பொறுக்கியாக இருக்கணும்.

 

ஆனால் அவள் சாகக் கூடாது என்று அவன் கட்டளை இட்டிருக்கிறான் என்றால் கண்டிப்பாக அவன் சுபாவைத் தேடி மறுபடியும் வருவான் அவனிடமிருந்து சுபாவை நாம் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தான். 

 

கல்யாணம் முடிந்த கையோடு சுபாவோடு சிங்கப்பூர் சென்று குடியேரலாம் என்று திட்டமிட்டான். 

 

அன்று மாலை அஸ்வின் ஒரு மீட்டிங்கில் இருந்தான். சென்னை வந்த பிறகு அவனுடைய வேலை மிகவும் பரபரப்பாகவே போய்க்கொண்டிருந்தது. அப்போது அவன் அம்மாவிடம் இருந்து கால் வந்தது.

 

“என்ன அம்மா இப்போ மீட்டிங்ல இருக்கேன். நீங்க அப்புறம் கால் பண்ணுங்க” என்றான்.

 

”அஸ்வின் ஒரு நிமிஷம் பா மாளவிகாவும் அவ மாப்பிள்ளை அவங்க குடும்பமே வீட்டுக்கு வந்திருக்காங்க. நீ தான் கல்யாணத்துக்கு கூட வரலியே நியாயப்படி நீ தான் அவள போய் பார்த்திருக்கணும்.ஆனா நீ தான் பெரிய பிசினஸ் மாக்னட் ஆச்சே அதான் அவளே வந்துட்டா. கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வா பா” என்றார்.

 

”ஓகே அம்மா” என்று கட் செய்து தன் மீட்டிங்கை தொடர்ந்தான். பின் அரைமணி நேரம் கழித்து வீட்டிற்குச் செல்ல தயாரானான்.

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!