அத்தியாயம் 9

வீட்டிற்கு வந்த அஸ்வினை மாளவிகாவின் குடும்பம் அனைவரும் வியந்து பார்த்தனர். மாளவிகாவின் கணவன் அவினாஷின் தங்கை சோனியா அஸ்வினைப் பார்த்து வாயைப் பிளந்தாள். 

 

ஆறடி உயரத்தில் இருக்கும் அஸ்வின் பார்க்க சிவப்பான நிறத்தில் கட்டுக்கோப்பான உடலைக் கொண்டவன் ஆண்களே பொறாமைப்படும் ஆண்மைதனத்தில் இருந்தான். வந்தவர்களை வரவேற்று நேராக தங்கை மாளவிகாவிடம் சென்று, “சாரி டா என்னால கல்யாணத்திற்கு வர முடியல” என்று வைர நெக்லசை பரிசாக கொடுத்தான்.

 

“ஹாய் அவினாஷ், நீங்க ரொம்ப பாவம் இந்த அழு மூஞ்சிய வெச்சிட்டு எப்படி சமாளிக்கறீங்க எனிவேஸ் கங்கிராட்ஸ் வெல்கம் டு அவர் பேமிலி” என்று கைகுலுக்கினான்.

 

”தாங்க்ஸ் அஸ்வின் எங்க அண்ணா பயங்கர அழகா இருப்பாங்கன்னு இவ சொல்லிட்டே இருப்பா ரியலி யு ஆர் ஸ்மார்ட்” என்றான். 

 

அவினாஷின் தந்தை தாயிடம் மரியாதைக்கு பேசிவிட்டு தன்னுடைய அறைக்குச் செல்ல மேலே ஏறினான். “ஹாய் அஸ்வின் ஐ அம் சோனியா அவினாஷோட சிஸ்டர்” என்று தாமாக அறிமுகப்படுத்தினாள். 

 

“ஹாய் சோனியா நைஸ் டு மீட் யூ” என்று கூறிவிட்டு மேலே சென்று விட்டான்.தன் அறையில் வந்து குளித்துவிட்டு சாப்பிடச் சென்றான். அனைவரும் சேர்ந்து உணவருந்திவிட்டு அவரவர் அறைக்குச் சென்றனர். தன் அறைக்குச் சென்று தன் மொபைலில் வாட்ஸ்அப்பை ஓபன் பண்ணினான். 

 

தன்னுடைய ஸ்பை விஸ்வாவிடம் இருந்து ஒரு வீடியோ வந்திருந்தது. அதைப் பார்த்தவன் ஆத்திரம் அடைந்தான். விஷ்வா… சுபா, அரவிந்த் மற்றும் தீபிகா உரையாடலை வீடியோ எடுத்து அஸ்வினுக்கு அனுப்பினான். “ஏய் சுபா உனக்கு நல்லது நடக்காது நடக்கவும் விடமாட்டேன்” என்று அறைக்கதவை வேகமாக அடித்தான். 

 

அடுத்த நாள் காலை பாபு வாசுதேவனிற்கு போன் செய்தார். “அண்ணா ஒரு முக்கியமான விஷயம் அரவிந்த் சிங்கப்பூர் மறுபடியும் போகணுமாம் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் வெக்க சொல்றான் கையோட சுபாவ கூட்டிட்டு போய்டுவானாம். நீங்க தான் நம்ம குடும்பத்துல மூத்தவங்க நீங்க தான் சொல்லணும்” என்றார்.

 

“சரி டா பண்ணு இவங்க ரெண்டு பேர் தானு முடிவு ஆயிடுச்சுல அடுத்த முகூர்த்தம் இன்னும் பத்து நாள்ல வருது நீ சுபா வீட்ல பேசிட்டு மத்த அரேன்ஜ்மென்ட்ஸ் பண்ணிடு நாங்கெல்லாம் இன்னும் மூணு நாள்ல கிளம்பி மதுரை வரோம்” என்றார்.

 

சபேசனுக்கும் துளசிக்கும் பாபு அழைத்து விஷயத்தைக் கூறினார். அவர்களுக்கும் இதுவே சரி என்று தோன்றியது. சுபா, தீபிகாவை அழைத்து விஷயத்தைக் கூறி, “பத்து நாளில் கல்யாணம் ஷாப்பிங் பண்ணனும் லிஸ்ட் போட்டு வைங்க” என்றார் சபேசன். 

 

வாசுதேவன் சசிகலாவை அழைத்து மாளவிகா மற்றும் அஸ்வின் முன்னிலையில் அரவிந்த் சுபாவின் திருமணம் பத்து நாளில் நடக்கவிருப்பதை அறிவித்தார்.

 

‘எப்படி இவ்வளவு நடந்தும் இன்னொருவனை மணக்க தயாராகிறாள் இவளை சும்மா விடக் கூடாது’ என்று மனதில் ஆக்ரோஷமாக நினைத்தான். 

 

வாசுதேவன் குடும்பத்தில் அனைவரும் மதுரை சென்றனர் அஸ்வினைத் தவிர… அவினாஷ் கல்யாணத்திற்கு முதல் நாள் வருவதாக மாளவிகாவை முன்னாடியே அனுப்பி வைத்தான். அரவிந்த் மற்றும் பாபு, ஈஸ்வரி சுபாவிற்கு முகூர்த்தப்பட்டு எடுத்து விட்டு வந்தனர்.சுபாவிற்கு நடப்பது எதுவும் விருப்பமில்லை ஒரு நடைபிணமாக அலைந்தாள்.

 

சுபா, அரவிந்த் திருமண நாள் வந்தது. மதுரையில் ஒரு பெரிய திருமண மண்டபத்தில் மணப்பெண் அறையில் சுபாவை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். 

 

வாசுதேவன், சசிகலா, பாபு, ஈஸ்வரி மற்றும் சபேசன், துளசி அனைவரும் சுபா மற்றும் தீபிகாவை மண்டபத்திற்கு முதலில் அனுப்பினர். இவர்கள் பாபுவின் வீட்டில் கிளம்பிக்கொண்டிருந்தனர். அரவிந்தும் வீட்டில் இருந்து கிளம்ப தயாரானான்.

 

அப்போது அவன் வீட்டின் முன் பென்ஸ் கார் வந்து நின்றது. “ஏய் அஸ்வின் எப்படி டா இருக்க? நான் மாப்பிள்ளையா இல்ல நீ மாப்பிள்ளையா பட்டு வேட்டி சட்டையில செமயா இருக்க வேற லெவல் போய்ட்ட டா நீ நல்ல வேளை என் கல்யாணத்திற்கு வந்துட்ட” என்று சந்தோஷத்தில் உள்ளே அழைத்துச் சென்றான்.

 

“நான் இங்க உன் கல்யாணத்தை பார்க்க வரல அரவிந்த் என் கல்யாணத்தை நடத்த வந்துருக்கேன்” என்றான் சட்டென்று. இதைக் கேட்ட அனைவரும் திகைத்தனர்.

 

”எஸ் இன்னிக்கு கல்யாணம் எனக்கும் சுபாக்கும் தான் நடக்க போகுது. ஏன்னா சுபாக்கும் எனக்கும் கல்யாணம் மட்டும் தான் ஆகல நாங்க கணவன் மனைவியா வாழ்ந்துட்டோம்” என்று கர்வமாக ஒரு பார்வையை விட்டான். இதைக் கேட்ட சபேசன் மயங்கி விழுந்தார் அனைவரும் அவரைச் சூழ்ந்தனர்.

 

”டேய் நீயா அந்த பொறுக்கி? அநியாயமா சுபா வாழ்க்கைய கெடுத்துட்டியே டா, நீ எப்போடா இப்படி பொறுக்கியா மாறுன?” என்று அஸ்வின் சட்டையைப் பிடித்தான் அரவிந்த்.

 

“ஸ்டே இன் யுவர் லிமிட்ஸ் அரவிந்த் நான் அவள பழிவாங்கணும்னு நினைச்சேன் பழிவாங்கிட்டேன் இன்னும் அவள பழிவாங்குவேன் அதுக்கே அவள கல்யாணம் பண்ணுவேன்” என்று தன் சட்டையின் மேல் இருந்த கையை தள்ளிவிட்டான். 

 

“அஸ்வின் எனக்கு தலையே சுத்துது நான் உன்னை இப்படியா வளர்த்தேன் அரவிந்த் உன்ன பொறுக்கி னு சொல்றான் எனக்கு ஒன்னுமே புரியல” என்ற சசிகலா தன் தலையில் கைவைத்தார்.

 

”சுபா என்கிட்ட எல்லாமே சொல்லிட்டா அது தெரிஞ்சும் நான் அவள கல்யாணம் பண்ண ரெடி அவ வாழ்க்கைய கெடுத்த உன்னை போலீஸ்ல புடிச்சு கொடுக்கணும்” என்றான் அரவிந்த்.

 

”ஹாஹா முடிஞ்சத பண்ணுடா” என்றான் அஸ்வின் திமிராக. 

 

சபேசன் மயங்கி விழுந்தவுடன் துளசி, பாபு மற்றும் வாசுதேவன் தண்ணீர் கொடுத்து எழுந்திருக்க வைத்தனர். “அண்ணா இவர ரூமுக்கு கூட்டிட்டுப் போங்க ப்ளிஸ்” என்று பாபுவிடம் கெஞ்சினார்.

 

”என் பொண்ண என்ன பண்ணடா ராட்சசா? அவ சென்னையில இருந்து வரும்போதே வித்தியாசமா இருந்தா அவ சத்தமா கூட பேச மாட்டாளே அவ்வளவு அமைதியா அடக்கமா என் பொண்ண வளர்த்தேனே அவ வாழ்க்கைய சீரழிச்சிட்டேயே பாவி” என்று சபேசன் அஸ்வினை அடிக்க கை ஓங்கினார். ஆனால் அவன் அவர் கையை பிடித்து தள்ளிவிட்டான். 

 

“எல்லாரும் கேட்டுக்கோங்க சுபா மேல எனக்கு பதினோரு வருஷம் பகை இருக்கு அவளால தான் நான் என் அப்பா அம்மாவ விட அதிகமா விரும்புற என் தாத்தா பாட்டி பாசம் போச்சு. அவங்க சாகுற வரைக்கும் என்ன பொறுக்கியாவே நினச்சி என்ன வெறுட்டாங்க.”

 

“இதுக்கு காரணம் அந்த சுபா எனக்கு பொறுக்கினு பேர் வாங்கி கொடுத்தா அதான் பொறுக்கி என்ன பண்ணுவான்னு காட்டிட்டேன்.இந்த அஸ்வின் நெருப்பு மாதிரி என்னை சீண்டுனா எரிச்சு பொசுக்கிடுவேன்” என்றான் ஆக்ரோஷமாக. 

 

பாபு, ஈஸ்வரி, அரவிந்த், வாசுதேவன், மாளவிகா மற்றும் சசிகலாவிற்கு அரைகுறையாகவே விஷயம் தெரியும் சுபா அஸ்வினை அடித்த விஷயம் மற்றும் அஸ்வின் சுபாவின் கழுத்தை நெறித்தது.

 

ஆனால் துளசிக்கு அவர்களை விட கொஞ்சம் அதிகமாகவே தெரியும் அதற்கு பின் தீபிகா தன் அம்மா அப்பாவிடம் கூறிய வரை.ஆனால் அஸ்வின் சுபாவினை இவ்வாறு பழிவாங்குவதற்கு காரணம் தீபிகா கூறியபின் வந்த விளைவுகள் தான் என்பதை துளசியால் யோசிக்கமுடியவில்லை. 

 

சுபா அன்று இரவு பதினோரு வருஷம் முன் அஸ்வின் பழிவாங்க வருவேன் என்று கூறிச் சென்றதை அப்போதே பெற்றோர்களிடம் சொல்லியிருந்தால் அவர்கள் அவளை எச்சரிக்கையாக இருக்க சொல்லிருப்பார்கள்.

 

“என்ன காரியம் பண்ணியிருக்க நீ” என்று கையை ஓங்கினார் வாசுதேவன்.

 

“ஸ்டாப் இட் டாட்” என்று கையை பிடித்தான் அஸ்வின். “இப்போ நீங்க எல்லாரும் கேட்டுக்கோங்க இன்னிக்கு எனக்கும்

சுபாவிற்கும் தான் கல்யாணம் நடக்கும். நீங்க நடத்தலனா அவள தூக்கிட்டுப்போய் கற்பழிச்ச எனக்கு அவளுக்கு தாலி கட்டுறது பெரிய விஷயம் இல்ல” என்றான். 

 

“ஏங்க நடந்தது நடந்து போச்சு சுபாவ அஸ்வின் தான் கல்யாணம் பண்ணனும்” என்றார் சசிகலா. அரவிந்த்தின் குடும்பம் வாயடைத்துப் போய் நின்றது. அவர்களால் இந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை.

 

”இந்த பொறுக்கிக்கு கண்டிப்பா என் பொண்ண ஒப்படைக்க மாட்டேன். இவன் அரக்கன் என் பொண்ண எதாவது பண்ணிடுவான்” என்று அழுதார் சபேசன்.

 

”ஏங்க ஆனா அஸ்வின் தான் சுபாவ கல்யாணம் பண்ணனும் வேற வழி நமக்கு இல்ல” என்று கதறி அழுதார் துளசி. 

 

“மாப்பிள்ளை, துளசி தயவு செஞ்சு என்ன மன்னிச்சிருங்க இப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கலை சுபாவ நான் பொண்ணு மாதிரி பாத்துப்பேன் கவலைப்படாதீங்க

முகூர்த்தத்துக்கு டைம் ஆகுது. அஸ்வினுக்கும் சுபாவிற்கும் கல்யாணம் நடத்தணும்” என்றார் வாசுதேவன்.

 

“இதை என்னால ஏத்துக்க முடியாது” என்றான் அரவிந்த்.

 

“நம்ம கைய மீறி விஷயம் போயிடுச்சு அரவிந்த் சுபாவ அஸ்வின் தான் கல்யாணம் பண்ணணும்” என்றார் பாபு. 

 

“முகூர்த்தத்திற்கு இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு எல்லாரும் ரெடி ஆகுங்க. ஹலோ கோகுல் வெட்டிங் பிளானர்ஸ் ஆஹ் நான் சொன்ன லொகேஷனிற்கு போய் ரீஅரேன்ஜ் பண்ணுங்க” என்று அஸ்வின் வெட்டிங் பிளானர்ஸ்ஸிடம் பேசிக்கொண்டு இருந்தான். சபேசன் எவ்வளவோ எதிர்த்தும் அனைவரும் அவரை சம்மதிக்க வைத்தனர்.

 

வாசுதேவன் மற்றும் சசிகலா அரவிந்த்திடம் சென்று, ”நீ ரொம்ப நல்லவன் அரவிந்த் சுபா கற்பழிப்பு தெரிஞ்சும் அவள மணக்க சம்மதிச்சிருக்க ஆனா அஸ்வின் தான் அவள மணக்கணும் அது தான் கரெக்ட்” என்றார். 

 

“பெரியப்பா ஆனா அஸ்வின் சுபாவ பழி வாங்க தான் கல்யாணம் பண்ண வந்திருக்கான்” என்றான்.

 

“அரவிந்த் கண்ணா பெரியப்பா பெரியம்மா சுபாவ நல்லா பார்த்துப்பாங்க” என்றார் பாபு.

 

”அப்பா என்னால அந்த சுபாவ எல்லாம் அண்ணியா ஏத்துக்க முடியாது. எங்க வீட்டில திடீர்னு அண்ணா கல்யாணம் இப்படி இவ கூட நடக்குதுன்னு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க” என்றாள் மாளவிகா.

 

”அத நான் பாத்துக்குறேன் மாளவிகா” என்றான் அவினாஷ்.அன்று காலையில் தான் அவினாஷ் அங்கு வந்தடைந்தான்.

 

”ஆனாலும் உன் அண்ணன் இவ்வளவு கெட்டவரா இருப்பாருனு நான் நினைச்சு பார்க்கல. ஆனா என்ன அந்த பொண்ணையே கல்யாணம் பண்ண நினைக்குறாரு அதனால பரவால” என்றான். 

 

பின் அஸ்வினிடம் சென்று, “நீ எல்லாமே பிளான் பண்ணி தான் பண்ணிருக்க” என்றான் அரவிந்த்.

“சுபாக்கு  யாரு கூடவும் கல்யாணம் ஆக கூடாதுன்னு நினைச்சேன். ஆனா நீ எல்லாம் தெரிஞ்சும் அவள கல்யாணம் பண்ண வந்த சோ நானே கல்யாணம் பண்ணி அவள பழிவாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்” என்று அஸ்வின் சிரித்து விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினான். 

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!