காதலா 4
காதலா 4
பால்கனியில் வந்து நின்ற யாழினிக்கு கண்ணீர் தான் வந்தது…
“என்ன மனுஷன் இவன்! ஹனிமூன் வேஸ்ட் ஆஃப் டைம்மாமே… அவனுக்கு என்ன அவனுக்கு வேண்டியது கிடைச்சிருச்சு… ச்ச” என்று கடுகடுத்துக் கொண்டவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர்.
அவளின் செல் ஒலிக்கும் சத்தம் கேட்க, அதை எடுத்து பார்த்தவளின் முகத்தில் அத்தனை கோபம்…
கால் செய்தது சுந்தர் தான்… அவள் ஃபோனை எடுக்கவேயில்லை…
“உன்னை மலைப்போல நம்பினேனே சீனியர்… இப்படி என்ன நம்ப வைச்சிட்டு கழுத்தை அறுத்துட்டியே!” என்று கண்ணீர் வடித்தவள், அவனை கோபத்தில் பிளாக் செய்துவிட்டு வேலைக்கு கிளம்பினாள்.
தன் ஸ்கூட்டியில் ரேடியோ ஷ்டேஷன் சென்றிருந்தாள் யாழினி. தனக்கு ஏற்கனவே நிச்சயமாகியிருந்த கல்யாணத்தை நிறுத்தி விட எண்ணியதால் தான் வேலைப் பார்க்கும் இடத்தில் அதை சொல்லாமல் மறைத்திருந்தாள் யாழினி.
இப்போது இந்த திடீர் திருமணத்தை பற்றி சொல்ல பிடிக்காமல், தாலியை தன் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்தாள்.
ஷோவை முடித்து விட்டு யாழினி கிளம்ப எத்தனிக்கும் போதே, “ஓய் யாழினி! உன் காதல் கதையை விவரிச்சு சொல்லு டி” என்று பவித்ரா கேட்க,
‘நான் இருக்குற நிலைமையில இவங்க வேற’ என்று கடுப்பில் கொதித்த யாழினி,
“பிரேக் அப் ஆயிடுச்சு க்கா” என்று வேகமாக முடித்துவிட,
“என்னது பிரேக் அப்பா! நேத்து தானே டி பயம், பதற்றம் அப்புறம் காதல் ன்னு டையலாக் எல்லாம் சொன்ன” என்று வாயைப் பிளந்து அதிர்ந்தாள் பவித்ரா.
“ஆமா… நேத்து உங்க கிட்ட அப்படி டையலாக் அடிச்சதுனால நீங்க கண்ணு வைச்சு என் காதல் இப்போ புட்டுக்கிச்சு போல!” என்று வேகமாக சொன்ன யாழினி ஓரக்கண்ணால் பவித்ராவை பார்த்தாள்.
பின்னே நேற்று சுந்தருடன் காதல் இன்று ஷ்யாமுடன் திருமணம் என்று அவளால் பவித்ராவிடம் எப்படி சொல்ல முடியும்!
ஆதலால் கையை வைத்து வாயை நேராக தொடுவது பதிலாய்… தலையைச் சுற்றி இப்போதைக்கு தொட முயன்று கொண்டிருந்தாள்.
“என்ன யாழினி இப்படி சொல்லிட்ட! நான் எதுக்கு உன் மேல கண்ணு வைக்க போறேன்” என்று ஆதங்கப்பட்ட பவித்ராவை,
“கூல் டவுன் கா… நான் உங்களை அந்த மாதிரி மீன் பண்ணல… ஏதோ ஃபிலோல சொல்லிட்டேன்… சாரி!” என்று அவளின் முகத்தை பார்த்தாள்.
“சரி விடு… நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கல” என்று பவித்ரா விட்டாலும், அவளின் மனதில் நெருடல்…
எப்படி யாழினியால் இவ்வளவு இலகுவாக பிரேக் அப் என்று சொல்ல முடிகிறது என்று!
யாழினியின் கேரக்டர் மீது பவித்ராவிற்கு சந்தேகம் இல்லை. ஆனால் மனதில் பெரிய துன்பத்தை வைத்துக் கொண்டு வெளியில் ஏதாவது மறைக்கிறாளா என்று மட்டுமே பவித்ராவின் சிந்தனை.
ஏனெனில் யாழினி சட்டென அழும் வகையும் கிடையாது. அதனால் அவளின் மனதில் என்ன விதமான எண்ணவோட்டம் இருக்கிறது என்பதை யாராலும் கண்டறிய முடியாது.
அதன் பின் யாழினி அங்கே நிற்கவில்லை. வேகமாக தன் வண்டியை எடுத்துக் கொண்டு அவளின் வீட்டிற்கு சென்றாள்.
திருமான்மியூரில் உள்ள கேட்டட் கம்யூனிட்டி ப்ளாட் அது…
தன் வண்டியை எப்போதும் போல் பார்க் செய்து விட்டு லிஃப்டில் நுழைந்தாள் யாழினி.
கடந்த ஒரு வருடமாகத் தான் இந்த ப்ளாட்டில் இருக்கிறார்கள்… அதுவும் வாடகைக்கு தான்!
அதுக்கு முன்னர் திருவான்மியூரிலேயே சற்று சிறிய வீட்டில் தான் இருந்தார்கள். திருமணம் முடிவான பின்னர் சரண்யாவிற்காக வெற்றி இந்த வீட்டிற்கு மாறினான்…
மூன்றாவது தளம் வந்ததும் இறங்கிய யாழினி தன் வீட்டை நோக்கி செல்லும் போதே, “என்ன யாழினி உன் புருஷன் கூட வரலையா?” என்று இவளை வாசல் பக்கம் நின்று பார்த்த பக்கத்து வீட்டு யமுனா கேட்க,
‘நேத்து தான் கல்யாணம் ஆச்சு அதுவும் சாயந்தரம் மேல தான் அதுக்குள்ள எதுக்கு அம்மா இவங்க கிட்ட இதையெல்லாம் சொல்லணும்’ என்று மனதில் கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாது,
“அவர் ஆபிஸ் போயிருக்காரு க்கா” என்று பாசாங்காக சிரித்து விட்டு வீட்டின் கால்லிங் பெல்லை அழுத்த,
கதவைத் திறந்தது சரண்யா தான்…
“யாழினி…” என்று சந்தோஷத்துடன் தோழியை வரவேற்ற சரண்யா, “அத்தை…மாமா யாழினி வந்திருக்கா” என்று கத்த,
மருமகள் சொன்னதை கேட்டு அதிர்ந்த சாந்தியோ, “அதுக்குள்ள ஏதாவது ஏழரைய கூட்டிட்டு வந்துட்டாளா இவ… இவள நினைச்சாலே எனக்கு பிபி, சுகர் எல்லாம் வந்திடும் போல” என்று பதறியபடியே முணுமுணுத்தவர் பயத்துடன் வெளியே வர,
இன்னொரு அறைக்குள் சேகர் தன் மொபைலில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தார். ஓய்வு பெற்ற பின் சேகர் அதிகமான ஈடுபாட்டில் இருப்பது மொபைல் கேம்களிலும், காமெடி ஷோவிலும் தான்…
மருமகள் குரல் கேட்டு அவரும் வெளியே வர, ஹால் சோஃபாவில் சோர்வாக அமர்ந்திருந்தாள் யாழினி.
“யாழினி ம்மா” என்று தந்தை சந்தோஷத்தில் வர
“யாழினி” என்று மனதில் பயத்திடனும் வெளியில் செயற்கையான சிரிப்புடன் வரவேற்றார் சாந்தி.
மனதில் கடுப்பு இருந்தாலும் தன் வீட்டினரிடம் அதைக் காட்ட முடியாத சூழ்நிலை என்பதால், எதார்த்தமாக பேசுவது போல் நடித்தாள்.
“நானும் வெற்றியும் உன்னை பார்க்க வரலாம் ன்னு தான் யோசிச்சோம் ம்மா… ஆனா உன் அம்மா தான் அதெல்லாம் வேண்டாம் கொஞ்ச நாள் கழிச்சு பாக்கலாம் இல்லைனா நம்ம வீட்டுக்கு ஓடி வந்திடுவான்னு சொன்னா… இப்போ நாங்க வராமலே நீயே வந்துட்டியே டா” என்று புன்னகை முகத்துடன் சேகர் கேட்டாலும் மனதில் அதே நேருடல்.
தன்னை முறைத்துக் கொண்டிருந்த யாழினியைப் பார்த்து அசுடு வழிய சிரித்த சாந்தி தன் கணவனை பார்த்தபடி, ‘பத்த வைச்சிட்டியே பரட்ட’ என்று அவரால் மனதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
“சும்மா உங்களை பார்க்கலாம்னு வந்தேன் ப்பா” என்று சமாளித்த யாழினி, சரண்யா கொடுத்த காஃபியை பருகிவிட்டு சற்று நேரம் அனைவரிடமும் கதை அடித்தாள் ஆனால் தன் தாயிடம் மட்டும் அவள் திரும்பவே இல்லை!
தந்தை மற்றும் சரண்யாவுக்கு சந்தேகம் வந்து விடக் கூடாது என்பதால் அவ்வப்போது அவரையும் உள்ளே இழுத்துக் கொண்டாள்.
சந்தர்ப்பம் பார்த்து அன்னையை சந்தித்த யாழினி, “ஏன் ம்மா கல்யாணமாகி முழுசா ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள பக்கத்து வீட்டு யமுனா க்கா கிட்ட சொல்லியிருக்கீங்க” என்று ஆவேசப்பட்டாள்.
“நீயும் தான் டி கல்யாணமாகி முழுசா ஒரு நாள் ஆகாம இப்படி தனியா பிறந்த வீட்டுக்கு வந்திருக்க” என்று அவரும் ஆவேசப்பட்டார்.
“ஏன் வரக் கூடாதா! பாலுங் கிணத்துல தள்ளிவிட்டுட்டீங்க… அப்போ அப்போ கிணத்துல இருந்து வெளியே வந்து தலைய காட்டலாம்னு பார்த்தால் என்னை முழுசா அங்கயே முங்கி கிடனு சொல்றீங்க… விட்டா நீங்களே என்னை எழ விடாம மொத்தமா முக்கிடுவீங்க போல ம்மா” என்று ஆதங்கப்பட்டாள்.
“உன்னை கிணத்துலயே இருன்னு நான் சொல்லல அந்த கிணறோட வான்னு தான் நான் சொல்றேன்” என்றார் சாந்தி வேகமாக.
“அம்மாமா…மா!” என்று கடுப்பில் இழுத்தவள், “என் வாழ்க்கை உனக்கு காமெடியா இருக்கா!” என்றாள்.
“நீ தான் டி கிணறு, புதருன்னு உளறிட்டு இருக்க… இதெல்லாம் நீ கா…” என்று மகளின் வாயை அடைக்க அவர் எப்போதும் போல தன் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்க,
“அம்மா தாயே… போதும்! நான் வந்தது தப்பு தான் கிளம்புறேன்” என்று தன் கையை தலைக்கு மேலே கைகூப்பியபடி சொன்னவள் வேகமாக கிளம்ப முற்பட்டாள்.
“யாழினி! உன்னை கோபப்படுத்த அம்மா இப்படி பேசல… இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு ஊரை கூட்டி கல்யாணம் நடந்த அப்புறம் உன்னையும் மாப்பிள்ளையையும் மறுவிட்டூக்கு கூப்பிடலாம்னு யோசிச்சோம். ஆனா அதுக்குள்ள நீயே வந்துட்ட! கல்யாணமாகி முதல் தடவை அம்மா வீட்டுக்கு வரும் போது உன் மாப்பிள்ளையோட வந்தா தானே சரியா இருக்கும்” என்று அறிவுரைத்தார்.
“ரெண்டு மாசம் கழிச்சு தானே அதெல்லாம் … அப்புறம் ஏன் யமுனா அக்கா கிட்ட அவசரப்பட்டு கல்யாணம் நடந்ததை சொன்னீங்களாம்.”
“பின்ன ரெண்டு மாசமா நீ ஊருல இல்லன்னு பொய்யா சொல்ல சொல்ற” என்று சாந்தி கேட்டது யாழினிக்கு நியாயமாக தான் பட்டது.
அதன் பின்னர் அவள் எதுவும் பேசவில்லை…
இங்கே ஷ்யாமின் அலுவலகத்தில் அவன் கடுப்பாக அமர்ந்திருந்தான்… காரணம் மதுவந்தி!
இன்று காலையில் திடீர் ராஜினாமா என்று ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு சென்றவளை நினைத்து அவனுக்கு தான் அத்தனை கோபம்!
ரிஷியும் கடந்த இரண்டு நாட்களாக ஆபிஸ் வரவில்லை என்றதால் அவனுக்கு தான் வேலை அதிகமாக இருந்தது…
மதுவந்தி மிகவும் ஏழ்மையான குடும்பம் தான். ஷ்காலர்ஷிப்பில் தான் இவர்களோடு படித்தாள். மிகவும் அறிவான, திறமையான பெண்.அழகான பெண்ணும் கூட!
யாழினி ஷ்யாம் வீட்டிற்கு வரும் போதே மணி ஏழு ஆனது… அவளின் வருகைக்காக காத்திருந்த சகுந்தலா பாட்டியோ அவளை அழைத்தார்!
“சொல்லுங்க பாட்டி” என்று யாழினி அவர் கால்மாட்டில் அமர்ந்தாள்.
“இந்த கிழவி கிட்ட கோவிச்சிக்கிட்டியா?” என்று அவர் வராத கண்ணீரை வா வா என்று வரவழைத்து கேட்டார்.
“என்ன ஆச்சு பாட்டி? ஏன் இப்படி பேசுறீங்க!” என்று பதறினாள் யாழினி.
“இல்ல… கல்யாணத்துக்கு முன்னாடி வர என் கூட நல்லா பேசின… அடிக்கடி வீட்டுக்கு வருவ! கல்யாணம் முடிஞ்ச முதல் நாளே நீ உன் அம்மா வீட்டுக்கு போயிருக்க… நீ ரொம்ப நேரம் ஆகியும் வரலன்னு உனக்கு கால் பண்ணேன்.அப்புறம் என் பேத்தி சரண்யாவே கால் பண்ணி நீ அங்க வந்து இருக்கணு சொன்னா” என்று சோகமாக இருப்பது போல் அவள் பேசி முடித்தார்.
‘அச்சோ! பாட்டிய தனியா விட்டுட்டு போயிட்டோமே… அதுலயும் அவங்க கிட்ட சொல்லாம வேற போயிருக்கோமே’ என்று தன்னையே மனதில் கடிந்தவள்,
“சாரி பாட்டி… இனி உங்க கிட்ட சொல்லிட்டு போறேன்” என்று யாழினி அவரின் மடியில் கைவைத்து ஆறுதலாக சொன்னாள்.
“அப்போ தினமும் என் கிட்ட சொல்லிட்டு அங்க போயிடுவியா” என்று தன் சேலை முந்தானையை வைத்து மூக்கை உறிந்தார் பாட்டி.
“இல்ல இல்ல பாட்டி… நான் ரெண்டு நாளுக்கு ஒரு தடவை” என்று யாழினி சொல்லும் போதே,
“எதே… ரெண்டு நாளுக்கு ஒரு தடவையா!” என்று மறுபடியும் அவர் மூக்கை உறிஞ்ச,
“இல்ல பாட்டி… வாரத்துக்கு ஒரு முறை” என்று அவரின் நடிப்பை நம்பி ஏமாந்த யாழினி வேகமாக சொன்னாள்.
கையில் பால் டம்பருடன் இவர்கள் உரையாடலை கேட்டுக் கொண்டே வந்த வடிவோ பாட்டியின் காது புறத்தில் மிகவும் ரகசியமாக,
“நடிகையர் திலகம் சாவித்திரியவே மிஞ்சிட்டீங்க ம்மா” என்று சலசலக்க
“என்ன ரகசியம் சொல்றீங்க வடிவு ம்மா” என்று ஆராய்ச்சி பார்வையுடன் கேட்டாள் யாழினி.
“நீ அம்மாவை விட்டுட்டு போன சோகத்துல அவங்க காலையில இருந்து பச்சை தண்ணீ கூட சாப்பிடாம இருக்காங்க… அதான் இப்போ பால்லாவது குடிங்கன்னு சொன்னேன் கண்ணு” என்று அவர் பங்குங்கு பிட்டை போட,
‘நம்ம கோடு போட்டா இவ ரோடே போடுறாளே’ என்று வடிவை பார்த்து மனதில் மெச்சினார் சகுந்தலா.
“அச்சோ பாட்டி… நா வாரத்துக்கு ஒரு முறை உங்க கிட்ட சொல்லிட்டு இனி போறேன்.. அதுக்காக ப்ளிஸ் சாப்பிடாம இருக்காதீங்க” என்று அவரை பாசத்தோடு யாழினி அணைக்க,
மாலை சாப்பிட்ட சிக்கன் நக்கட்ஸ்ஸின் உபயத்தால் பாட்டிக்கு பெரிய ஏப்பம் வர, அதை உணர்ந்த யாழினி அவரை யோசனையுடன் வேகமாக பார்க்க,
“சாப்பிடாம உங்களுக்கு வாய்வுல ஏப்பமே வந்திருச்சு பாட்டி… வடிவு ம்மா நீங்க பாட்டிக்கு சுடச் சுடச் சாப்பாடு எடுத்துட்டு வாங்க” என்று பாசகட்டளையிட்டாள் யாழினி.
‘புருஷன் கூட சந்தோஷமா வாழ்ந்து இவ வாந்தி எடுப்பான்னு பார்த்தா, ஏற்கனவே வயிறு நிரம்பி ஏப்பம் வந்த எனக்கு சாப்பாடு கொடுத்து வாந்தி எடுக்க வைச்சிடுவா போல முருகா’ என்று மனதில் புலம்பியவர்,
“நா ரூமுக்கு போய் சாப்பிட்டுக்குறேன் ம்மா” என்று நைசாக எழுந்தவர் எஸ்கேப் ஆகிவிட்டார்.
***
அன்றிரவு ஷியாம் வீட்டிற்கு இரவு வரும் போதே ஒன்பது மணி ஆகியிருந்தது. யாழினி மற்றும் சகுந்தலா பாட்டி சிரித்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அவளின் உடைகள் சிலவற்றை அவள் வீட்டில் இருந்து எடுத்துவந்திருந்ததால் அதில் ஒரு இரவு உடையான பைஜாமாவை தான் உடுத்தியிருந்தாள்.
அத்தனை நேரம் யாழினி முகத்தில் இருந்த புன்னகை ஷியாம் வந்த பின்னர் மறைந்து விட்டது.
வீட்டில் எல்லாவற்றிற்கும் வேலையாள் இருந்ததால் இங்கு யாழினிக்கு வேலையென்று ஒண்ணும் இல்லை… அதுவே அவளுக்கு ஒரு வகை சலிப்பாக இருந்தது.
அவள் வீட்டில் எல்லாம் அவள் ஏதாவது சமைத்து கொண்டே தான் இருப்பாள். சமைப்பதும், சாப்பிடுவதும் அவளுக்கு ரொம்பவே பிடிக்கும்.
எப்போதும் போல் இரவு குளித்துவிட்டு தன் இரவு உடையோடு வந்தவன் சாப்பிட அமர, “யாழினி ஷியாமுக்கு சாப்பாடு வைம்மா” என்று சொன்னார் சகுந்தலா.
மேஜை மீது வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை நோக்கி சலிப்புடன் நடந்தவள் மூடியிருந்த உணவை திறந்தாள்.
ஒரு கப்பில் சூடாக ஓட்ஸ் கஞ்சி இருந்தது! மற்றொரு கப்பில் ஃப்ரூட் சாலட் இருந்தது.
‘இது ஒரு சாப்பாடு இதை பரிமாற வேற செய்யனுமா!’ என்று மனதிற்குள் முணுமுணுத்தபடியே அவனுக்கு வைத்தாள் யாழினி.
யாழினியை யோசனையாக பார்த்த ஷ்யாம் சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு சென்றுவிட, யாழினியும் சற்று நேரத்தில் அவனின் அறைக்கு சென்றாள்.
‘வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு ன்னு நீ சொல்ல வந்ததை சொல்லிடு யாழினி’ என்று மனதிற்குள் திடத்தை கொண்டு வந்தவள் அறைக்குள் வர, பால்கனியில் ரிஷியுடன் மதுவின் மேலுள்ள கடுப்பில் ஃபோன் பேசிக் கொண்டு இருந்தான் ஷ்யாம்.
‘ஆத்தாடி! யார் கிட்டயோ கோபத்துல பேசிட்டு இருக்காரு… நமக்கென்ன வந்துச்சு… நம்ம இன்னிக்கு சொல்லிடணும்’ என்று பால்கனி பக்கத்தில் நின்று அவனை பார்த்தபடி நினைத்துக் கொண்டு இருந்தாள்.
“ஷட் அப் ரிஷி… இன்னும் நீ மதுவந்திக்காக பேசிட்டு இருக்க! உன்னையெல்லாம்” என்று கோபத்தில் கால்லை அணைத்தவன் திரும்பினான்.
அங்கே நின்றிருந்த யாழினியை பார்த்து இத்தனை நேரம் இருந்த ரௌத்திரம் வடிந்தது. என்ன என்பது போல் அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தியவனின் கண்ணில் மோகம் தான் இருந்தது…
சிவப்பு நிறத்தில் உடலை ஒட்டிய போன்ற மெலிதான சேலையை தான் அணிந்திருந்தாள் யாழினி.
இரவு உடையை அணிந்திருந்தவளை சேலை மாற்றியே ஆக வேண்டும் என்று பாட்டி விடாது சொல்லி மாற்றவும் வைத்தவர், மல்லிப்பூ வைக்கவும் சொன்னார். அவளிடம் இருந்த ஒரே சேலையை அணிந்தாள்.
அவர் மாலை செய்த நடிப்பை உணராத வீரியத்தில் அவரை காயப்படுத்த விரும்பாமல் அவர் சொன்னதை எல்லாம் செய்தாள்.
சேலையின் ஊடாக தெரிந்த யாழினியின் வெள்ளை இடையில் கண் பதித்தவனின் கண்கள் பால்கனியில் அடித்த பலத்த காற்றில் யாழினியின் ஃபீரி ஹேரும், அவளின் சேலையும் வேகமாக ஆட பெண்ணவளின் நாபிக் குழி என்னும் சுரங்கம் ஆணவனின் கண்களுக்கு விருந்தளித்தது…
அவனின் பார்வை போன திசையை உணர்ந்த யாழினி கீழே குனிந்து பார்க்கும் போதே, வேகமாக பால்கனி கதவை சாற்றி தாழிட்டு உள்ளே வந்தவன், யாழினியை தன் புறம் இழுத்து வேகமாக இதழ் ஒற்றினான்.
அவனின் ஒரு கரம் பெண்ணவளின் அங்க வனப்புகளை அழுத்த, இன்னொரு கரம் பெண்ணவளின் நாபிக் குழியில் வட்டமிட்டு வருடியது.
யாழினியோ அவனிடம் இருந்து விடுபட முயற்சிக்க, ஷ்யாம் செய்யும் சிற்ப வேலையில் மோகம் பெறுகிற சிற்பமாய் அசைவற்று அவனுள் இழைந்தாள்…
இருவரின் மேனிகளுமே கட்டிலில் இருவருக்கும் போர்வையாக, பெண்ணவளை மோகம் கலந்த தாபத்துடன் கையாண்டான் ஷ்யாம்.
பேச நினைத்த எதையும் அவளால் பேச முடியவில்லை… ஏனெனில் அவளின் உதடும், உடலும் அவன் வசம் சென்றதில் மனதில் உள்ள விஷயம் மக்கித் தான் போனது.
தன் தேவைகளை ஆசை தீர அவளிடம் தீர்த்த பின்னர், யாரோ ஒருவன் போல் திரும்பி படுத்தவன் உறங்கியே விட்டான்.
யாழினிக்கு தான் உறக்கம் வரவேயில்லை… அவனிடம் இணங்கும் தன் மேனியே எரித்து விடும் அளவிற்கு அவளுக்கு அருவருப்பு.
ஆனாலும் அவளின் மனது தளரவில்லை.
‘இல்ல யாழினி கண்டிப்பா நாளைக்கு காலையில எழுந்ததும் பேசிடணும்’ என்கிற முடிவோடு உடைகளை அணிந்து கொண்டவள் ஷ்யாம் கொடுத்த பற்தடங்களின் வலியில், அசதியில் உறங்கியே விட்டாள்.
அடுத்த நாள் காலை, அலார சத்தத்தில் பதறி எழுந்த யாழினி, “படுபாவி, ஆறு மணிக்கே எழுப்பி விட்டிடுரான்” என்று கொட்டாவி விட்டுக் கொண்டே புலம்பியவள் ஷ்யாம் ஜாக்கிங் சென்றிருப்பான் என்று நினைத்திருக்க,
“இதுவே ரொம்ப லேட்…” என்று அவளின் முதுகு பின்னால் கம்பீர குரல் ஒலிக்க, அந்த குரலுக்கு சொந்தக்காரன் யாரென உணர்ந்த யாழினி வேகமாக திரும்பினாள்.
ஷ்யாம் தான் ஜாகிங் உடையில் மார்புக்கு குறுக்கே தன் கைகளை கட்டியபடி நின்றிருந்தான்.
“என்ன இதுவே லேட்டா… நான் லாம் எங்க வீட்டுல எட்டு மணிக்கு தான் எழுந்திருப்பேன்” என்று யாழினி வாதாட,
“நாளையில இருந்து அஞ்சரைக்கு என் கூட எழுந்து ஜாகிங் வரணும்” என்று முடித்தவன் குளிக்க செல்ல திரும்ப,
இனி என்ன நடந்தாலும் இவனிடம் அமைதி காக்க கூடாது என்று தீர்மானமாக இருந்தாள் யாழினி.
ஏனெனில் முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு? இதான் யாழினியின் நிலை இப்போது.
“மாட்டேன்… நீங்க சொன்ன நான் செய்யணுமா? இது என் வாழ்க்கை… நான் என்ன பண்ணனும் என்ன பண்ணக் கூடாதுன்னு சொல்றதுக்கு உங்களுக்கு ரைட்ஸ் இல்ல” என்று வேகமாக சொல்லியே விட்டாள் யாழினி.
அவளை பார்த்து நக்கலாக நகைத்தபடி அவள் புறம் வந்த ஷ்யாம் அவளை வேகமாக தன் புறம் இழுத்து அவளின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியை பற்றி, “இது கொடுத்த ரைட்ஸ் தான்… என் வீட்ல, ஆபீஸ்ல எல்லாமே என் விருப்பபடி தான் நடக்கும்.. அது போல தான் நீயும்… நான் சொல்றதை தான் நீ செய்யணும்” என்று அதிகாரமாக சொன்னவன் அவனின் விரல்களில் இறுக்கமாக பற்றப் பட்டு இருந்த தாலியை பட்டென்று விடுவித்தான்.
அவனை தீயென முறைத்த யாழினி, “நான் உங்களுக்கு வீடும், ஆபிஸ் போலவா? இரத்தமும், சதையும் உள்ள உணர்வுள்ள மனுஷி” என்று கோபம் கலந்த ஆதங்கத்துடன் சொன்னாள் யாழினி.
“என் வீட்லயும், ஆபிஸ்லயும் கூட நீ வசனம் பேசுன அதே ரத்தமும் சதையும் உள்ள ஆளுங்க என் பேச்சை கேட்டு அடங்கி தான் இருக்காங்க! அதே போல தான் நீயும்” என்று அலட்சியமாக சொன்னான் ஷ்யாம்.
“அவங்க எல்லாரும் உங்க பேச்சை கேட்டுட்டு அடங்கி இருக்காங்கன்னா அவங்க உங்க கிட்ட சம்பளம் வாங்குறாங்க.. நான் ஒன்னும் உங்ககிட்ட சம்பளம் வாங்கல.. உங்க பாட்டியும், தங்கச்சியும் உங்களை மீறி ஒண்ணும் பண்ண மாட்டாங்க.. அந்த மாதிரி நீங்க இந்த வீட்டை ரூல் பண்றீங்க! ஆனா நான் அவங்கள போல இல்ல” என்று அழுத்தமாக சொன்னாள் யாழினி.
“இந்த வீடு, ஆடம்பரம், வசதி இது எல்லாமே நீ சொல்ற சம்பளத்தை விட ரொம்ப பெருசு எல்லாத்தையும் நீ சந்தோஷமா தானே அனுபவிக்குற!” என்று திமிராக சொன்னவனை தீயேன முறைத்தவள்,
“எனக்கு இந்த பணம், வீடு, வாசல் எதுவும் தேவையில்லை.. இதெல்லாம் எனக்கு சந்தோஷம் இல்லை. எனக்கு உங்க சர்வாதிகாரம் இருக்க கூடாது சுதந்திரம் வேணும். அது மட்டும் தான் வேணும்” என்று யாழினி சொல்லும் போதே அவளின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.
ஆறு மணிக்கு இப்போது ஷ்யாமால் எழும் யாழினிக்கு ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்திருப்பது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை…
அவளின் பிரச்சனையே ஷ்யாம் அவளிடம் அவன் கோட்பாடுகளை திணிப்பது தான்…
அவளின் கண்ணீரை பார்த்து மேலும் கடுப்பானவன்,
“இப்போ எதுக்கு டி அழுதுட்டு சீன் போடுற… நான் இதான் இப்படி தான்னு தெரிஞ்சு தானே என்னை நீ காதலிச்ச மதுரயாழினி!” என்று வேண்டும் என்றே அவளின் பெயரில் அழுத்தத்தை கொடுத்து நக்கலாக சிரித்தான் ஷ்யாம்.
அதற்கு பின் அவளிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பது போல் குளிக்க சென்றுவிட்டான்.
ஆனால் யாழினி தான் அசைவற்று நின்றுயிருந்தாள்… சத்தமில்லா கண்ணீருடன்!
ஏன் தான் இவனை காதலித்தோம் என்று மனதளவில் நொந்துக் கொண்டவளுக்கு கண்களில் கண்ணீருடன் அழையாத நினைவுகளாய் அவளின் கடந்த காலம் மனத்திரையில் ஒளித்தது…
