பிரியாதிரு 10

அமிர்தாவை எப்படி அடையலாம் என்று மனக்கணக்கில் திட்டம் போட ஆரம்பித்தான் ஆத்மன் ரெட்டி.. 

ஏனெனில் அவனுக்கு இந்திரஜித்தைப் பற்றித் தெரியும்… அவனின் பாதுகாப்பில் ஒரு பெரும் சிங்கத்தின் பாதுகாப்பில் இருக்கும் குட்டி பெண் சிங்கமாக அமிர்தா இருப்பாள் என்று ஆத்மனுக்குத் தெரியும்.. 

அவளை எப்படி சாமர்த்தியமாக அடையலாம் என்று அவன் திட்டம் இட்டுக்கொண்டு இருக்கும் போதே அவனின் எண்ணத்தின் நாயகியே முகத்தில் பயம் கலந்த சாயத்துடன் வெளியே வந்து ஒரு ஆட்டோவைப் பிடிக்க, காரினுள் இருந்த ஆத்மன் ரெட்டியை பாவம் அவள் கவனித்து இருக்கவில்லை. 

ஆனால் தன் அறை பால்கனியில் இருந்து செல்லும் அமிர்தாவை கண்காணித்த இந்திரஜித்தோ ஆத்மன் ரெட்டியை அவனின் காரை வைத்தே கண்டு கொண்டான்… 

‘இவன் ஏன் இங்க வந்துருக்கான்!’ என புருவத்தை உயர்த்திய இந்திரஜித்தோ, ஒருவனுக்கு கால் செய்து, 

“அமிர்தாவை ஃபாலோ பண்ணு… அவ ஏதாவது தப்பு பண்ண நினைச்சாலும் நீ நடக்க விட கூடாது.. அதை மீறி ஏதாவது நடந்துது உன் பொணத்தை அள்ள கூட ஆள் இருக்காது” என அசால்ட்டாக ஆனால் அழுத்தமாக மிரட்டிய இந்திரஜித்திடம், 

“பாஸ்…” என்று ஈரக்குலை நடுங்க பயந்தவன், “கண்டிப்பா அவங்களுக்கு எதுவும் நடக்க விட மாட்டேன்” என்று வாக்கு கொடுக்க, 

“அன்ட் ஆத்மன் ரெட்டி அமிர்தாவை ஃபாலோ பண்ணி வரான்… என்ன ஏது ன்னு எனக்கு அப்டேட் பண்ணு” என கால்லை வைத்தவனோ சிங்கப்பூர் கிளம்பினான். 

அவனுக்கு தீடிரென்று அவசரமாக கிளம்ப வேண்டிய சூழ்நிலை… கிளைன்ட் மீட்டிங்… 

ஆம், இந்திரஜித்தே இன்று அமிர்தாவை கண்காணிக்க முடிவெடுத்து இருந்தான்.. ஆனால் திடீரென ஒரு இன்டர்நேஷனல் கிளைண்ட் மீட்டிங்… அவன் கண்டிப்பாக உடனே செல்ல வேண்டிய சூழ்நிலை. 

அன்று மட்டும் இந்திரஜித் இருந்து இருந்தால் கண்டிப்பாக அமிர்தாவை ஆத்மனின் பிடியில் சிக்க வைக்காமல் காப்பாற்றி இருப்பான்.. 

விதி தான் இப்படி விளையாடிவிட்டதோ! 

சிங்கப்பூர் விமானத்தில் சரியாக இந்திரஜித் ஏறிய நேரம், சர்வாவிடம் கோவிலில் பதற்றம் கலந்த கவலையுடன் பேசிக்கொண்டு இருந்த அமிர்தாவின் முன்னே வேக நடையுடன் ஆத்மன் செல்ல, அவனைக் பின் தொடர்ந்து வேகமாக சென்றான் இந்திரஜித் வைத்த ஆள்.. 

சர்வா தன் பாக்கெட்டில் இருந்த தாலியை பதற்றத்துடன் தொட்டபடியே அவளிடம் பேசிக் கொண்டு இருக்க, ஆத்மனோ இந்திரஜித்தின் ஆள் அவனின் கையில் இருந்த தாலியைக் கண்டு தடுக்க முயன்றும் அவனை அடித்து தள்ளிவிட்டு அமிர்தா கண் இமைக்கும் நேரத்தில் அவள் ஸ்தம்பித்துக் கொண்டு உறைநிலையில் இருந்த தருணத்தில் அவளின் கழுத்தில் தாலி கட்டி விட்டான்… 

அமிர்தா நடந்த எதையும் உணராது திகைக்க, அவளின் முன் கம்பீரமாக தின்றவன், “நீ எவனை காதலிச்சு இருந்தாலும் ஐ டோன்ட் கேர்… நீ இப்போ என் பொண்டாட்டி… என்னை மீறி நீ ஏதாவது முயற்சி பண்ணினா இதோ இவன் உயிர் இருக்காது” என்றவனோ, நடந்த விஷயங்களை ஜீரணிக்க முடியாமல் சிலை போல் உறைந்து நின்றிருந்த சர்வாவை குறிப்பிட்டு காட்டி சொல்லிவிட்டு வேக நடையுடன் வெளியேறிவிட்டான்..

தன்னவளை இப்படி கரம் பிடிக்க வைத்த அவளின் மீது மலையளவு கோபத்துடன் ஆக்ரோஷமாக தன் காரை எடுத்த ஆத்மன் ரெட்டி வேகமாக காரை ஓட்டிக்கொண்டே சென்றான்… 

ஹைதராபாத்தில் அவனின் வில்லாவில் அவனின் கார் சீறிக் கொண்டு வந்து பாய்ந்து நிற்க வீட்டில் அதே வேகத்துடன் நுழைந்தவன், 

இறுக்கமான முகத்துடன், “அமிர்தா வீட்ல கால் பண்ணி நடந்ததை சொல்லி நிறுத்திடுங்க நானா” என்றவன் அதிவேகமாக அவனின் அறைக்குள் நுழைய, 

அடுத்த அரை மணி நேரத்தில் அவனுக்கு கால் வந்தது இந்திரஜித்திடம்… 

“என்ன ஆத்மன்! ஒரு பக்கம் அமிர்தாவுக்கு தாலி கட்டிட்டு இன்னொரு பக்கம் கல்யாணத்தை நிறுத்தி விளையாடுறியா” என கோபம் கனன்ற குரலில் அவன் கேட்க, 

அவனிடம் நடந்த விஷயத்தை இறுக்கமான குரலில் சொல்லி முடித்தான் ஆத்மன். 

இந்திரஜித்திற்கோ இப்போது ஆத்மன் செய்தது தவறாக தெரியவில்லை.. 

அதனாலே என்னவோ சற்று நேரம் முன்னர் கால்லில் அவனிடம் உயிர் பிச்சை கேட்டு கதறி அழுதுக்கொண்டு இருந்த அவன் வைத்த கண்காணிப்பு ஆளின் உயிர் இந்திரஜித்திடம் இருந்து தப்பியது. 

“அமிர்தா இனி என் பொறுப்பு” என உத்தரவாதம் கொடுத்த ஆத்மனை பார்த்து மெலிதாக புன்னகைத்தவன், 

“இப்போ அஜய் மேரேஜ் முதல்ல நடக்கட்டும்… அமிர்தாவை கல்யாணம் பண்ண நீ தான் மெல்ல உன் அப்பாவை கன்வின்ஸ் பண்ணனும்… அவர் பீலிங்க்ஸ் என்னால புரிஞ்சிக்க முடியுது… இனி அமிர்தா உன் பொறுப்பு” என்ற இந்திரஜித்தோ அமிர்தாவை வேண்டும் என்றே ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் படிக்க சேர்த்தான். 

இந்நாள் வரை அனன்யா மற்றும் சாருபாலாவுக்கு கூட தெரியாது அமிர்தா திருமணம் ஆனவள் என்று… 

ஆத்மன் மற்றும் அமிர்தாவிற்கு இப்போது நல்ல உறவு இல்லை என்று இந்திரஜித் அறிந்தான் தான்..

ஆனாலும் அதில் தலையிட அவன் விரும்பவில்லை… ஆத்மனிடம் அமிர்தாவிற்கான காதல் கொட்டிக்கிடப்பதால் அவளின் மீதுள்ள கோபத்தை அவனே அணைப்பான் என அவர்களை கண்காணிக்காது விட்டு விட்டான்… 

அமிர்தாவை அதன் பின்னர் ஒரு முறை கல்லூரிக்கு வெளியே சந்தித்தான் ஆத்மன் ரெட்டி… 

அன்று அவனிடம் அதீத கோபம் எல்லாம் இல்லை… தன் மனைவியை பார்க்க வேண்டும் என்கிற எண்ணமே அவனுக்கு மேலோங்கி நிற்க, 

“நீங்க உண்மையான ஆம்பிளையா இருந்தா.. ரொம்ப புத்திசாலியா.. ரொம்ப தைரியசாலியா இருந்தா.. இந்த தாலியை நீங்க தான் கட்டுனீங்கன்னு ஊர் முழுக்க சொல்லாம என்னையே சொல்லவைங்க பாக்கலாம்… அது நான் சாகுற வரை நடக்காது” என முகத்தில் அடித்தது போல சபதம் விட்டு சென்றாள் அமிர்தா. 

அதன் பின்னர் அமிர்தாவை சந்தேகப்பட்டு ஆத்மன் ரெட்டி அவளை கண்காணிக்கவில்லை… அவளின் பாதுகாப்பிற்காக அவளை அவன் கண்காணிக்க, அப்போது தான் அவனுக்கு தெரிய வந்தது… அமிர்தாவை இன்னும் கூட கல்யாணம் செய்ய தயார் என்று நிற்கும் சர்வாவை… 

அவ்வளவு தான்… ஆக்ரோஷத்தில் கொந்தளித்து விட்டான் ஆத்மன் ரெட்டி. 

ஒரு நொடி ஆகாது சர்வாவை அவன் துவம்சம் செய்ய! 

ஆனால் அப்படி மிருகம் போல நடந்துக் கொள்ள அவனுக்கு விருப்பம் இல்லை… 

அதே சமயம் சர்வாவை இப்போதும் திருமணம் செய்ய துணிந்த அமிர்தாவின் மீது காதலை விட கோபமே கனன்று செந்தணலாய் கொந்தளித்தது.. 

அந்த வெறியில் தான் இதோ இன்று அவளை இந்நிலையில் நிறுத்திவிட்டான்..

பத்திரிக்கையாளர்கள் முன்னே கதறி அழுதவளை கட்டி அணைக்க ஆத்மனின் கைகள் பரபரத்தாலும், அவனின் பெரும் கோபம் அவனை விடவில்லை.. கல்லாய் தான் நின்றான். 

 

 

 

 

 

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!