பிரியாதிரு 11

சோனியா சைன் மட்டும் தானே போட்டு கொடுத்து இருக்கிறாள்… அது இன்னும் விவாகரத்து இல்லை என்றாலும் கூட விக்னேஷ் அபினவ் சர்மாவிற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறான்… 

இதோ இன்று ஜெய்ப்பூர் கிளம்ப இருக்கிறான்… அவனின் திருமணத்திற்காக! 

ஆம், வீம்பில் எடுத்த முடிவு இங்கு வந்து நிற்கிறது… 

சோனியா பிரச்சனை செய்யட்டும் என்று விக்னேஷ் வேண்டும் என்றே ஒவ்வொரு முடிவும் எடுத்திருக்க, சோனியாவிடம் இருந்து தான் இங்கு ஒரு அரவமும் இல்லை.. 

முருகன் அதீத கோபத்தில் இருக்கிறார்… மகனிடம் பேசவில்லை.. 

லதாவிற்கு ஒருப்பக்கம் சந்தோஷம் என்றாலும் இன்னோரு பக்கம் ஏதோ மகன் அவசரப்படுகிறானோ என்கிற பயம்… 

இதில் முருகனோ, “நீ மட்டும் இந்த கல்யாணத்துக்கு போனா என் பொண்டாட்டியே கிடையாது” என சொல்லியிருக்க, லதாவும் செல்லவில்லை… 

இதோ ஜெய்ப்பூரிற்கு ஃபிளைட் ஏறி விட்டான்… 

அபினவ் சர்மாவின் மகளுக்கும் பிரபல இந்திய கால்பந்து வீரர் விக்னேஷ் கார்த்திக்கிற்கும் திருமணம் என்று இந்தியா முழுவதும் பரவியது… 

பெரிய இடம் விவகாரம் என்பதால் விக்னேஷின் கடந்த காலத்தை கூட எல்லாரும் எளிதாக எடுத்துக் கொண்டார்கள்..

ஜெய்ப்பூரில் பெரிய  பேலஸ் ஒன்றில் தான் திருமணம் முடிவாகி இருந்தது… 

ப்ரீத்தாவிற்கோ சந்தோஷம் தாள முடியவில்லை… 

அவளை நினைத்து கால் ஜெயிக்காமல் வாடினான் விரேன் சர்மா… 

அவனுக்கு எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி ப்ரீத்தாவை தன்னவள் ஆக்க வேண்டும் என்கிற வெளி மனத்துள்..

விக்னேஷிற்கோ ராஜ மரியாதை.. பின்னே மாப்பிள்ளை ஆயிற்றே! 

அவன் சார்பில் அவன் மட்டும் தான் என்று இருக்க.. பாயலுக்கோ எதுவுமே சரியாக படவில்லை…

அவர் பேச்செல்லாம் எங்கே எடுபடுகிறது என்கிற கவலையில் அமைதியாக இருந்தார். 

விக்னேஷை ஆர்த்தி எடுக்க என்று வந்திருந்தார்கள் ப்ரீத்தாவிற்கோ குடும்பத்தினர்கள்.. 

எதிலும் நாட்டம் இல்லாதவன் இறுக்கமான முகத்துடனேயே உபச்சாரத்தைப் பெற்றுக் கொண்டான்… 

“உங்க மாப்பிள்ளை ஏன் சிரிக்கவே மாட்டிங்குறாரு மாமா” என விரேன் வம்பு இழுக்க, 

“அவர் முகமே இப்படித் தான்” என நொடித்துக் கொண்டார் பாய்ல். 

“சிரிக்காமலே ப்ரீத்தா அவருக்கு கவுண்துட்டா” என பெரிய காமெடி போல சிரித்தவரை மனதில் கடுப்பாக முறைத்த விரேனோ, 

“பொண்ணு உலகம் சதுரம்ன்னு சொன்னா கூட ஆமா போடுவாரு ச்ச” என முணுமுணுத்தபடி சென்றுவிட்டான் விரேன். 

உள்ளே வந்த விக்னேஷை பலர் அபிசேகம் தான் வரவேற்றது… 

ஒரு ராஜாவை போல கம்பீரமாக நடந்து வந்தான் அந்த ஆறடி ஆண்மகன்… 

இறுதியில் ஒரு பெண் அவனிடம் அழகான மலர்க்கொத்தை நீட்டியபடி, “வெல்கம் சார்” என்று நீட்ட, அவளைக் கண்டவனோ மனதில் ஒரு நொடி தடுமாறி ஸ்தம்பித்து தான் போனான். 

ஏனெனில் அவனிடம் பூங்கொத்து நீட்டியது வேறு யாரும் இல்லை அவனின் முன்னாள் மனைவி அட அதான் இன்னும் சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை அல்லவா.. விக்னேஷின் மனைவி சோனியா தான் இன்முகத்துடன் அவனை வரவேற்றாள்…

அவளிடம் பூங்கொத்தை வாங்கியவனோ, “எங்க டா இன்னும் இந்த பைத்தியக்காரி ஆளைக் காணுமே ன்னு நினைச்சேன்…” என்று எளக்காரமாக சொன்னவன், “உன் கண் முன்னாடியே இந்தக் கல்யாணம் நடக்கும்” என சாலைப் போல சொல்ல, 

“எக்ஸ்க்யூஸ் மீ சார்… யார் நீங்க?” என்று கேட்டாளே பார்க்கலாம்… ஆடிப்போய் விட்டான் விக்னேஷ்..ஆனாலும் வெளிக்காட்டவில்லை.. 

“சோனியா” என்றழைத்த படி ஒரு ஆடவன் அவளை தேடி வர, 

“எஸ் பிரமோத்…” என்றவள் விக்னேஷ் புறம் திரும்பி, “மாப்பிள்ளைக்கு பொக்கே தர சொன்னாங்க கொடுத்தாச்சு.. அது என் வேலை சார்… ஹாப்பி மேரிட் லைஃப்” என்றவளோ பிரமோத்தை நோக்கி செல்ல விக்னேஷோ அவளை தான் நோட்டம் இட்டான். 

புரிந்துக் கொண்டான்.. இங்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஊழியராக சோனியா வந்துருக்கிறாள் என்று.. 

இப்போதும் அவள் எதுவும் திட்டத்தோடு தான் வந்திருக்கிறாள் என்று அலட்சியமாக நினைத்தான் விக்னேஷ். 

பிரமோத்தை கண்டுவிட்டு அவசரமாக தனக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு சென்று கதவை சாற்றி பெரிய கண்ணீர் விட்டு அழுதாள் சோனியா. 

அவளின் அண்ணன் இந்திரஜித் அவன் நண்பனிடம் சொல்லி வாங்கிக் கொடுத்த வேலை தான் இந்த ஈவண்ட் மேனேஜ்மென்ட் வேலை. 

விக்னேஷ் கல்யாணத்திற்கு தான் வரப் போகிறோம் என்கிற செய்தி தெரிந்தவுடன் யாரோ தன் நெஞ்சில் ஈட்டியால் திரும்ப திரும்ப குத்துவது போன்ற உயிர் பிரியும் வலி அவளுக்கு… 

ஆனாலும் தன் அண்ணனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டவள் அவனை மாப்பிள்ளை தோரணத்தில், கம்பீரத்தில் கண்ட அந்த நொடி அவளின் இதயம் உடைந்து சிதறுவது போன்று வலிப்பதை அவளாலும் கட்டுப்படுத்த முடியவில்லை… 

அப்படி கதறி அழுதாள்… 

“நோ சோனியா.. விக்னேஷ் க்கு நல்ல வாழ்க்கை அமையணும்… அமையப் போகுது… உன்னால அவருக்கு எந்த பிரச்சினையும் வரக் கூடாது.. இனி இப்படி அழக் கூடாது.. அண்ணாக்கு பண்ண சத்தியம் ஞாபகம் இருக்கு தானே” என தனக்கே ஆறுதலும் அதட்டலும் சொல்லியவள், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்ய முனைந்தாள். 

அவளின் நேரமோ என்னவோ சோனியாவிற்கு அடுத்து கொடுக்கப்பட்ட வேலை, மாப்பிள்ளை அறைக்கு பானங்களை எடுத்துச் செல்வது.. 

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!