பிரியாதிரு 15

சர்வாவின் நிலை இப்போது என்னவாக இருக்கும் என அமிர்தாவால் நன்றாகவே உணர முடிந்தது.. 

 

அதிலும் அவன் அழுது போட்ட வாய்ஸ் நோட்டை கேட்கவே அவளுக்கு மனம் தாளவில்லை.. அவனுக்காக ரொம்ப வருந்தினாள்.

 

உடனே அவனுக்கு கால் செய்தாள்.  

 

“அம்மு” என கரகரத்த குரலில் சொன்னவன், 

 

“பேசாம விவாகரத்து அப்ளை பண்ணு அம்மு..” என்றான் அழுதபடியே. 

 

“சர்வா எல்லாமே கை மீறிப் போச்சு.. இனி உனக்கான வாழ்க்கையை நீ பாரு” என சோர்வான குரலில் சொன்னவளிடம், 

 

“என்ன கை மீறிப் போச்சு.. எதுவும் கை மீறி போகல.. எப்படி உன்னை அவன் கல்யாணம் பண்ணின விஷயம் வெளியில தெரிஞ்சிது” என ரொம்ப நேரம் தனக்குள் ஓடிக்கொண்டுருந்த சந்தேகத்தைக் கேட்டான். 

 

ஏனெனில் ஆத்மன் மற்றும் அமிர்தாவின் திருமண செய்தி ஒரு செய்தி போல தான் வெளியில் வந்ததே தவிர அன்று ஹோட்டலில் அவளை அவதுறாக பேசியது எல்லாம் வெளியில் வரவில்லை.. 

 

அதற்கு காரணம் ஆத்மன்.. தன்னவளின் பெயர் வெளியில் அவப்பெயராகவோ தவறாகவோ வர அவன் விடுவானா… கண்டிப்பாக இல்லை. 

 

இருவரும் ரகசிய திருமணம் என்கிற செய்தி மட்டும் தானே வந்தது.. 

 

அதற்கு தான் கெஞ்சி உண்மையை சொன்னால் பத்திரிக்கையில் இவ்வாறு வந்துருக்கிறது என்றே நினைத்தாள் அமிர்தா. 

 

“அது” என திணறிய அமிர்தா சர்வாவிடம் எப்படி சொல்வாள் ஆத்மன் தன்னை உடலால் ஆண்டுவிட்டான் என்று… 

 

“சொல்லு அம்மு என்ன ஆச்சு?” என்று சர்வா விடாது கேட்க, 

 

“சர்வா… அதைப் பத்தி நான் அப்புறம் சொல்றேன்..” என அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பாத்ரூமில் இருந்து குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் வெளியில் வந்துருந்தான் ஆத்மன். அதை அமிர்தா உணரவில்லை.. 

 

“சர்வா நீ உன் உடம்பை பாத்துக்கோ.. ஒழுங்கா சாப்பிடு…” என குழந்தைக்கு புகட்டுவது போல் அவள் சொல்ல தன் மார்புக்கு குறுக்கே கையை கட்டியபடி இதையெல்லாம் கேட்டும் பார்த்தும் கொண்டுருந்த ஆத்மனின் மனது கொதித்தது.. 

 

அதில் இன்னும் தூபம் படுவது போல, “ஐ லவ் யூ சோ மச் அம்மு… ஐ மிஸ் யூ” என அவன் அந்தப்பக்கம் சொல்ல, அமிர்தா விக்கித்து நின்றாள்.

 

கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக சர்வா ஐ லவ் யூ என்கிறான்… அப்போதும் அமிர்தா அவனுக்கு ஐ லவ் யூ என்றும் சொல்லவில்லை அதே போல் திட்டவும் மாட்டாள்… 

 

“டேய்… ஃபோனை வை டா”, 

 

“உன்னை அடிச்சிபுடுவேன் ராஸ்கோல்”, 

 

“இது அந்த ஆத்மனுக்கு தெரிஞ்சா உன்னை செஞ்சிடுவான் டா” என விளையாட்டு கலந்த கலகலப்பு தொனியில் நான் சொல்லியிருக்கிறாள். 

 

ஆனால் இப்போதோ, “அது இனி முடியாது சர்வா.. ஐ வில் மிஸ் யூ டூ” என ஒரு தோழியாக தான் சொன்னாள் தவிர அவளின் மனதில் வேறு எந்த எண்ணமும் இல்லை… 

 

ஆனால் அவளின் முன்னே நிற்கும் மணையாளனுக்கு, அவள் சர்வாவிடம் காட்டிய அக்கறையும், அவள் இறுதியாக சொன்ன மிஸ் யூ வும் போதாதா… அவளுக்கு சர்வாவின் மீது இன்னும் உணர்வுகள் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியது… இதில் அந்த மொட்டை கடுதாசி விஷயத்தில் இருந்தே அமிர்தா அவனை காதலிக்கிறாள் என்று அல்லவா ஆத்மன் நினைத்துக் கொண்டு இருக்கிறான். 

 

அவனின் கண்களோ கோபத்தில் சிவக்க கஷ்ட்ப்பட்டு தன் கோப உணர்வுகளை அடக்கிக் கொண்டவன், 

 

“உன் காதலனோட பேசும் போது நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல” என மனதிற்குள் எரிமலையாய் இருந்தவன் வெளியே அலட்சியமாக சொல்ல, அமிர்தாவிற்கே புசுபுசுவென்று ஏறிக்கொண்டது. 

 

அவளை சர்வாவுடன் இப்படி பேச ஆத்மனால் எப்படி முடிந்தது.. 

 

காதலித்தனாம்… தன்னை மிரட்டி எடுத்துக்கொள்வானாம்… அப்படி இருந்து என்னவெல்லாம் பேசுகிறான் என்கிற கடும் ஆதங்கம் அவளுக்கு. 

 

“உங்களோட காதலி சிந்துஜா அங்க கீழே உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்குற மாதிரியா” என்று பட்டென்று கேட்டு விட்டாள் அமிர்தா. 

 

“ஏய்.. சிந்துஜாவைப் பத்தி பேசுற ரைட்ஸ் உனக்கு இல்ல” என உறுமியபடி கத்தினான் ஆத்மன் ரெட்டி… 

 

அதில் மிரண்டு தான் போனாள் அமிர்தா…

 

ஆனாலும் விடாமல், “அப்போ சர்வாவை பத்தி பேசுற ரைட்ஸ்ம் உங்களுக்கு இல்ல மிஸ்டர் ஆத்மன் ரெட்டி” என்றாள் பயத்தை மறைத்து. 

 

அவளை அனலென முறைத்தவனோ அவளிடம் எதுவும் பேசாமல் தன் உடைகளுக்கு மாற அவளுக்கு தான் தன்ன

முன்னே அவன் உடை மாற்றுவது ஒருமாதிரியாக இருந்தது… 

 

இது அமிர்தாவிற்கு முதல் முறை இல்லை தான்.. ஆனாலும் அவனிடம் உடலைத் தாண்டிய தொடுகை எதுவும் இல்லையே.. 

 

அன்று வெளியில் சென்ற ஆத்மன் வர இரவு நேரம் ஆகிவிட்டது… 

 

அதுவரை அவள் எங்கேயும் செல்லாமல் அறைக்குள்ளேயே இருக்க, கவிதா தான் சாப்பிட அழைக்கச் சென்றாள். 

 

“இந்தா அமிர்தா இந்த பெட்டில உனக்கான டிரெஸ் எல்லாம் இருக்கு” என ஒரு பெரிய பெட்டியை கொடுத்த கவிதா, 

 

“அடுத்த வாரம் ஆத்மனோட போய் உனக்கு தேவையான டிரெஸ், திங்க்ஸ் எல்லாம் வாங்கிக்கோ” என்று அவர் சொல்ல, அமிர்தா பொம்மை போல தலையாட்டினாள். 

 

இங்கு நாம் எதற்காக இருக்கிறோம்.. பேசாமல் தன் அண்ணன் இந்திரஜித்திற்கு கால் செய்து விடலாமா என்று கூட அவளின் மனம் ஏங்கத் தொடங்கியது. 

 

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!