பிரியாதிரு 18
தன்னை வெளியேற சொல்லி விக்னேஷின் வருங்கால மாமனார் வீட்டில் கேட்டதில் இருந்தே சோனியாவிற்கு மனது சரியில்லை.
ஒருவேளை விக்னேஷின் வேலை தானா இது என்று அவளுள் படர்ந்த கவலை அது!
அவனை மறந்து விட்டோம் என்று ஒரு மாயவலையை அவளே பின்னி இருக்க அவளின் இதழ் தீண்டி அப்படி ஒரு வலையே நீ பின்னவில்லை என்று நிருபித்த கையோடு அவளை வார்த்தைகளால் வதைத்து மனதளவில் சாகடிக்கிறான் அல்லவா!
இதோ இப்போது இந்நொடி கிளம்பி விட்டால் தான் என்ன என்று அவளுக்குத் தோன்றியது.
ப்ரீத்தாவின் தந்தை பிரனவ்விடம் சொன்ன விஷயம் சோனியாவை வந்ததையும் போதே, தான் சென்றுவிடுவது தான் சரி என்றே அவளுக்குத் தோன்றியது.ஏனெனில் விக்னேஷ் ப்ரீத்தாவுடன் ஜோடியாக இருப்பதைக் காண அவளுக்கு மனதில் திராணி இல்லை…
“உனக்கு கொடுத்த வேலையை முடிச்சிட்டு கிளம்பு சோனி..” என கால் செய்து அவளின் அண்ணன் இந்திரஜித் சொன்ன பின்னர் அவளால் எங்கணம் நகர முடியும்.
“உன் மேல தப்பு இல்லாம நீ இந்த இடத்தை விட்டு நகர கூடாது சோனி” என்று அவளின் அண்ணன் சொன்ன வார்த்தைகளை மனதில் சொல்லிக் கொண்டவள், தன் வேலையில் முனைந்தாள்.
அப்போது தான் அவளை தேடி கோபமாக வந்த விக்னேஷ், “என் ரூமுக்கு ஜூஸ் எடுத்துட்டு வா” என்றான் கட்டளையாக.
“இப்போ தானே சார் எடுத்துட்டு வந்தேன்”என அவசரமாக பதில் கொடுத்தாள்.
“இங்க நீ வேலை செய்ய வந்த ஸ்டாஃப் மட்டும் தான் மிஸ் சோனியா… எவ்வளவு தடவை ஜூஸ் கேட்டாலும் தரணும்… என் கிட்ட இந்த மாதிரி பதிலுக்கு பதில் பேசுறது எல்லாம் இது தான் கடைசி முறையா இருக்கணும்” என்றான் திமிராக.
“சாரி சார்.. உங்க ரூமுக்கு ஜூஸ் வந்துடும்” என பேச்சை முடித்தவளை அலட்சியமாக பார்த்து விட்டு தன் அறைக்குள் சென்றவன் சோனியா வந்தால் தன் கோபங்களை எல்லாம் அவளின் மீது காட்டிவிடலாம் என்று இருக்க, விக்னேஷ் கேட்ட ஜூஸ் வந்தது ஆனால் அதை எடுத்துக் கொண்டு வந்தது என்னவோ வேறு ஒரு பணிப்பெண் தான்…
“சார் ஜூஸ்” என பணிவாக வந்து நின்று பெண்ணிடம்,
“கால் சோனியா ரைட் நௌ” என்றான் அதிகாரமாக.
அதில் பயந்த அப்பெண்ணோ அங்கிருந்தே சோனியாவிற்கு கால் செய்ய, ‘இவனை பார்க்க கூடாதுன்னு தான் நான் போகாம இருக்கேன்.. மறுபடியும் என்னை கூப்பிட்டு என்னை காயப்படுத்தவே இப்படி எல்லாம் பண்றான்’ என மனதில் நொந்தாலும் வேறு வழியின்றி விக்னேஷின் அறை நோக்கி சென்றாள் சோனியா.
“அவங்க வரன்னு சொன்னாங்க சார்” என்ற பவ்வியமாக பதில் சொன்ன பணிப்பெண்ணிடம்,
“நீங்க கிளம்புங்க” என்றான் இறுக்கமாக.
அப்பெண் கிளம்பிய சில நிமிடங்களில் வந்து சேர்ந்தாள் சோனியா.
ஓடி வந்துருப்பாள் போல அவளுக்கு மூச்சு வாங்கியது.
அவள் மூச்சு வாங்குவதை ஆராய்ச்சியாக பார்த்தவனோ, “உன்ன தான் நான் ஜூஸ் கொண்டு வர சொன்னேன்” என்றான் அதிகாரத் தோரணையில்.
“எனக்கு வேற வேலை வந்துருச்சு சார்” என்ற பொய்யை பவ்வியமாக தான் சொன்னாள்.
“இனி நான் சொல்ற எந்த வேலையை நீ செய்யலன்னாலும் உன்னோட வேலை போய்டும்” என்றான் அலட்சியமாக.
“அதான் ஏற்கனவே என்னை வேலையை விட்டு கிளப்ப பிளான் பண்ணிட்டீங்களே சார்” என்றாள் அவசரமாக…
தன்னையும் மீறி சொன்னவளோ நாக்கைக் கடித்துக் கொண்டு பயத்துடன் அவனை பார்க்க,
“கம் அகைன்” என்றான் கூர்மையாக.
“நத்திங் சார்.. உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா” என பேச்சை மாற்றினாள்.
அவளின் மீது கோபத்தைக் காட்ட வேண்டும் என்று அழைத்தவனுக்கோ இப்போது அவள் தன்னிடம் ஏதோ மறைக்கின்றாள் என்கிற விஷயமே முதன்மையாக தெரிய, “உன்னை இங்க இருந்து அனுப்ப நான் என்ன பிளான் பண்ணினேன்னு நீ இப்போ சொல்ற இல்லன்னா உனக்குத் தான் சேதாரம் ஹெவியா இருக்கும்” என்று அவன் மிரட்டல் த்தொனியில் சொல்ல, சோனியாவோ பயந்தே விட்டாள்.
“அது ப்ரீத்தாவோட அப்பா..” என ஆரம்பித்தவள் பயத்துடன் சொல்லி முடிக்க,
விக்னேஷின் புருவம் இடுங்கியது.
அவனை புரியாமல் பார்த்தவளிடம், “எஸ்.. நான் தான் சொன்னேன்” என்றான் பாருங்க… சோனியாவின் கண்கள் குளம் கட்டியது..
அவளின் ஆழ்மனது இது விக்னேஷின் செயலாக இருக்காது என்று நினைத்திருந்தது. ஆனால் அவனோ ஆம் என்று சொல்லி தவிடுபொடியாக்கி விட்டான்.
“நீ இங்க இருக்குறதே என்னோட கல்யாணத்தை நிறுத்த தானே… அதை எப்படி நான் நடக்க விடுவேன்… அதான் உன்னை இங்க இருந்து அனுப்பலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்” என்றான் தெனாவெட்டாக.
கண்களில் கண்ணீர் பொங்கி பெருகியது அளவுக்கு.. எவ்வளவு அடக்க முயன்றாலும் அவளுக்குக் கட்டுப்படுத்த முடியவில்லை…
அவளின் கண்ணீர் அவனுக்கு எரிச்சலை தான் தந்தது. அவளை கோபத்தில் கத்த வேண்டும் என்று அழைத்து வந்தவனுக்கோ அவளின் அழுகை கண்டு லேசாக மட்டுப்பட்டு தான் இருந்தது..
“ஈஸியா அழ முடியும்னு அழாத.. ஸ்டாப் இட்… இரிடேட்டிங்கா இருக்கு” என்றான் எரிச்சலாக.
“சாரி சார்” என்றவளோ தன் கண்களை அழுத்தமாக துடைத்து, “உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா சார்.. இல்ல நான் கிளம்பவா” என்று அவள் கேட்க,
“எனக்கு ஃபுல் பாடி மசாஜ் பண்ணு” என்றான் கட்டளையாக.
“சா… ர்” என அவள் திணறி அதிர,
“காதுல விழயயா எனக்கு ஃபுல் பாடி மசாஜ் பண்ண சொன்னேன்” என்றான் அவளை விழுங்கும் பார்வை பார்த்தபடி.
“என்னோட வேலை ஈவன்ட் மேனேஜ்மென்ட் பண்றது மட்டும் தான் சார் உங்களுக்கு மசாஜ் பண்றதுக்கு இல்ல” என்றாள் பட்டென்று.
மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி இருந்தவனோ, “வாட்.. கம் அகைன்…” என சத்தமாக சிரிக்க, அவனின் சிரிப்பில் பயந்து தான் போனாள் சோனியா.
“ரொம்ப நல்லவ மாதிரி பேசுற.. இதே நீ என்னை எவ்வளவு தடவை எங்க எல்லாம் மசாஜ் பண்ணி இருக்க” என்றவன் நக்கலாக கேட்க, தன் காதுகளை தன் கைகளால் இறுக்க மூடிக் கொண்டாள் சோனியா.
அதில் வெகுண்டவன், “நீ பண்ணினதை எல்லாம் சொன்னா ஏதோ புதுசா கேட்குற போல ஆக்டிங் போடற!” என்றவனை கண்களில் கோபம் மின்ன பார்த்தவள்,
“அப்போ இருந்த சோனியா வேற.. இப்போ இருக்குற சோனியா வேற.. உங்களுக்கு இப்போ கல்யாணம் ஆகப் போகுது.. இந்த மாதிரி மசாஜ் எல்லாம் உங்க வருங்கால பொண்டாட்டி கிட்ட கேளுங்க சார்” என்றவளோ வேகமாக அறையை விட்டு வெளியேறி விட்டாள்.
தான் ஒன்று கேட்டு அவள் செய்யாமல் செல்வதா என்கிற கோபம் விக்னேஷிற்குள் கனன்றுக் கொண்டே இருந்தது…
அதனின் விளைவில் சிக்கப் போவது என்னவோ சோனியா தான்..
