பிரியாதிரு 28

பிரியாதிரு 28

 

அமிர்தாவிற்கு ஆத்மன் தன்னை கண்டுக்கொள்ளாமல் இருப்பதைக் கண்டு கண்களில் கண்ணீர் படர ஆரம்பித்தது… 

 

“ஐ நீட் டூ கோ நானா” என தந்தையிடம் சொன்னவன் ஃபோன் பேசியபடியே வெளியே சென்றான்..

 

“ஆத்மா இரு..” என்றபடி அவனின் தோளை லேசாக உரசியபடி சிந்துஜாவும் செல்ல, அதைக் கண்ட அமிர்தாவிற்கோ அந்த கண்ணீரிற்கு நடுவிலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது… 

 

அமிர்தாவின் பாட்டு இந்தியா முழுவதும் பட்டையைக் கிளப்பியது… 

 

அனன்யா, சர்வா, சாருபாலா என அனைவரும் கால் செய்து அமிர்தாவிற்கு சந்தோஷத்துடன் வாழ்த்து சொல்ல, அனைவருக்கும் நன்றி சொன்ன அமிர்தாவிற்கோ மனதில் ஒரு வெறுமை… 

 

“உனக்கு உலகத்துலேயே ரொம்ப பிடிச்ச விஷயம் இன்னிக்கு நடந்துருச்சுல அம்மு.. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என அனன்யா மற்றும் சாருபாலா கான்பரன்ஸ் கல்லில் சொல்ல, 

 

“ஆமா இந்த ஒரு நாளுக்காக தான் அத்தனை வருஷம் ஏக்கத்தோட, கனவோட, எதிர்ப்பர்ப்போட என் வாழ்க்கையையே வாழ்ந்து இருக்கேன்.. இன்னிக்கு அது கிடைச்சிருக்சு..ஆனா என்னால சந்தோஷமா இருக்க முடியல” என வெடித்து அழுதாள் அமிர்தா… 

 

“ஏய் அம்மு.. என்ன ஆச்சு டி! ஏன் இப்படி அழுதுட்டு இருக்க என தோழிகள் இருவரும் பதற, 

 

“ஆத்மன் என்கிட்ட பேசவே மாட்டிங்குறாரு.. அவரால தான் இன்னிக்கு என்னொட வாய்ஸ் இந்தியா முழுசும் ஒலிக்குது… ஆனா அவர் எனக்கு ஒரு விஷ் கூட பண்ணல… இந்த வீட்டுக்கு என்னை கூட்டிட்டு வந்ததுல இருந்தே அவர் என்னை கண்டுக்கல.. அந்த ஜீவன் விஷயத்துக்கு அப்புறம் என்னை வான்ட்டடா அவாய்ட் பண்றாரு” என வெடித்து கதறினாள் அமிர்தா. 

 

இத்தனை நாட்கள் தன் மனதிற்குள் அழுத்திக் கொண்டிருந்த விஷயத்தை உள்ளேயே வைத்து இருந்தவளோ, இன்று நடந்த அனைத்தையும் கண்டு உள்ளுக்குள்ளேயே உடைந்து சிதறினாள்.. அதனின் விளைவு இப்போது அவளின் உயிர்த் தோழிகளிடம் வெடித்து விட்டாள்.. 

 

***

 

தன் வீட்டில் சோர்வாக அமர்ந்து இருந்த சோனியாவின் ஃபோன் அலறியது…

 

பிரனவ் தான் அடித்திருந்தான்… விக்னேஷின் திருமணத்திற்கு முந்தைய நாள் கிளம்பிய சோனியா அவளின் வீட்டிற்கு வந்த பின்னர் செல்லை ஆஃப் செய்தவள் தான்.. 

 

அடுத்த இரண்டு நாட்கள் அவள் ஃபோனை எடுக்கவேயில்லை… 

 

காரணம். காதல்! 

 

விக்னேஷுக்கும் ப்ரீத்தா விற்கும் திருமணம் நடத்துவிட்டது என்கிற செய்தியை கேட்க அவள் செவியும், கண்களும், இதயமும் தயாராகவில்லை.. 

 

தங்கையின் ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக் கொண்டு இருந்த இந்திரஜித்தோ அவனின் தாய் மற்றும் தந்தையிடம் சொல்லி தங்கையுடனேவே இருக்க சொன்னான்..

 

அப்படி தான் பெற்றவர்களும் இருந்தார்கள்.. நேற்று இரவு தான் தன் அன்னை அழைப்பேசியில் இருந்து தன் அண்ணனுக்கு கால் செய்தவள், 

 

“அண்ணா… அம் ஓகே! இந்நேரம் விக்னேஷ் க்கு கல்யாணம் ஆகி அவர் ஹனிமூனே போயிருப்பாரு… அதை நினைச்சு எல்லாம் நான்..” என சொல்லிக் கொண்டுருக்கும் போதே அவளின் குரல் லேசாக கரகரத்த து… 

 

அதை இந்திரஜித் உணராமல் இருப்பானா என்ன! 

 

“அதை நினைச்சு நீ..” என அவனும் கேள்வியாக நிறுத்த, 

 

அவளின் அண்ணனை ஏமாற்ற முடியாது என்று உணர்ந்தவளோ, “எனக்கு மனசு வலிக்குது அண்ணா.. ரொம்பவே” எனும் போது வெடித்து அழுதவள் எவ்வளவு நேரம் அப்படி அழுதுருப்பாள் என்று அவளுக்கே தெரியாது.. 

 

தங்கை அழட்டும்… அழுதாலாவது அவளின் மனதில் உள்ள காயம், வலி, வேதனை எல்லாம் சற்று மட்டுப்படும் என நினைத்த இந்திரஜித் அவளை அழவிட்டு அமைதியாக இருந்தான்…

 

வெடித்து அழுதவள் ஒருக்கட்டத்தில்… “நான் ஒகே ஆயிடுவேன் அண்ணா.. எனக்கு இப்படி மனசு விட்டு உங்க கிட்ட அழுத அப்புறம் கொஞ்சம் பெட்டரா இருக்கு அண்ணா.. கவலைப்படாதீங்க! டைம் என்னை ஹீல் பண்ணிடும்” என்றாள்.

 

“குட் சோனி.. இந்த வாழ்க்கை உனக்கு ஒவ்வொரு நிமிஷமும் சர்ப்ரைஸும் வைச்சு இருக்கும் அதே சமயம் ஷாக்கும் வைச்சிருக்கும் அப்போ எல்லாத்துக்கும் எமோஷனல் ஆகாம பேலன்ஸ்ட்டா மைண்டை வைச்சிட்டு திங்க் பண்ணு” என்றான். 

 

“சரிங்க அண்ணா கண்டிப்பா” என உறுதி கொடுத்து கால்லை வைத்தவள் அதன் பின்னர் தான் தன் செல்லையே உயிர்ப்பித்தாள். 

 

இதோ இப்போது பிரனவ்விடம் கால் வந்த போதும் கூட அவளின் மனநிலை சோர்வாக தான் இருந்தது… 

 

ஆனாலும் கால்லை எடுத்தாள்… 

 

“ஹாய் சோனியா!” என பிரனவ் இழுக்க, 

 

“சொல்லுங்க பிரனவ் எப்படி இருக்கீங்க!” என கேட்டவளிடம், “ஐ அம் குட்… ஒரு ஈவண்ட் வந்திருக்கு… கோயம்புத்தூர்ல தான் நீ தான் இதை ஆர்கனைஸ் பண்ணனும்” என்றான் தோழமையாக. 

 

அவள் இருக்கும் மனநிலையில் இப்படியே வீட்டிலேயே அமர்ந்தால் அவளுக்கு பைத்தியமே பிடித்துவிடுமே…

 

அவள் சரியாக வேண்டும் என்றால் அவளின் மனநிலையை வேலையில் ஈடுபட்டு இருக்க வேண்டியது தான் அவளுக்கு இப்போது சரியாக பட, 

 

“சரி பிரனவ் நான் பண்றேன்.. எங்கே? எப்போ?” எனக் கேட்டாள். 

 

“அது டீடெயில்ஸ் எனக்கு தெரியாது சோனியா.. ஆக்சுவலி நான் இன்னும் கொஞ்ச நேரத்துல சிங்கப்பூர் கிளம்புறேன்.. இது நம்ம கிளைண்ட்க்கு தெரிஞ்சவங்க தான்.. அவங்க தான் அந்த கிளைன்ட். அவங்களுக்கு தான் அந்த டீடெயில்ஸ் தெரியும்… உங்க கான்ட்க்ட் நம்பர் அவர் கிட்ட கொடுத்துட்டுறேன்.. ஒகே தானே” என அவன் கேட்க, சரி என்று ஒப்புக் கொண்டாள் சோனியா. 

 

அன்று மாலையே ஒரு தெரியாத எண்ணில் இருந்து சோனியாவிற்கு கால் வந்தது… 

 

“ஹலோ சோனியா மேடமா” என ஒரு ஆண் குரல் கேட்க, 

 

“எஸ் நீங்க..” என கேட்டாள். 

 

“நான் சுப்புரத்னம் ங்க.. மை ஃபாதர் இஸ் கனகுரத்னம் மை கிராண்ட் ஃபாதர் இஸ் கோபிரத்னம் ங்க” என அவன் சொல்லிக் கொண்டே போக, சோனியாவிற்கோ அவன் பேசிய த்தொனியில் பட்டென்று சிரிப்பு வந்துவிட்டது… ஆனாலும் அடக்கிக் கொண்டாள்.. 

 

“தட்ஸ் ஓகே.. உங்க பேரு மட்டும் போதும்ங்க.. நீங்க யாரு எதுக்கு கால் பண்ணிருக்கீங்க” என அவள் சீரியஸாக கேட்க, 

 

“பிரனவ் சார் சொன்னாருங்களா.. ஒரு ஈவண்ட் ங்க ஃபுட்பால் பிளேகிரவுண்ட்ல தானுங்க நடத்தோணும்” என்றான். 

 

“ஓ யா.. சொன்னாரு! என்ன ஈவண்ட் சார்? எப்போ?” என அவள் கேட்க, 

 

“அது ஒரு பத்து நாள் ஈவண்ட்ங்க இன்டர் ஸ்கூல் காம்பெடீசன்ங்க ஸ்டேட் லெவல்ல நடக்கப் போகுது.. நான் தான் அதுக்கு கோஆர்டினேட்டர்” என அவன் விளக்க, அவன் சொன்ன அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டாள் சோனியா. 

 

“ஓகே சுப்புரத்னம் சார்.. நான் உங்களுக்கு நாளைக்குள்ள கோட்(Quote) அனுப்பறேன்.. நீங்க செக் பண்ணிட்டு சொல்லுங்க” என வைத்தவள் தன் வேலையில் மும்முரமாக இருந்தாலும்..

 

சுப்புரத்னம் ஃபுட்பால் என்று சொன்னதும் அவளின் சிந்தையில் வந்து போனான் விக்னேஷ் கார்த்திக்.. 

 

அந்த நினைப்பை அவசரமாக ஒதுக்கி வைத்தவள் தன் வேலையில் முனைந்தாள்…

 

அடுத்த நாள் ஈவண்ட் என்று இருக்கும் பட்சத்தில் எல்லாவற்றையும் தயார் படுத்திக் கொண்டு இருந்த சோனியா நேரத்திற்கே உறங்கினாள்… 

 

கடமையில் தன்னை முழுவீச்சாய் ஈடுபடுத்திக் கொண்டுருந்த சோனியாவிற்கோ தெரியவில்லை நாளை அவளுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்று! 

 

 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!