பிரியாதிரு 4
பிரியாதிரு 4
பட்டுச் சேலையில் பார்க்க தேவதை பொல் ஜொலித்தாள் அமிர்தா… எந்த அழகில் ஆத்மன் மயங்கி விழுந்தானோ, இப்போது இத்தனை வருடங்கள் கழித்து வயதும் உடலும் முதிர்வு பெற்று தேவலோகத்து அழகியாவே அவனின் கண்களுக்கு விருந்தளித்தாள் அமிர்தா…
அவளை கண் இமைக்காமல் கண்களாலேயே காதலித்துக் கொண்டுருந்தான் ஆத்மன் ரெட்டி…
அவனின் பெற்றொர்களுக்குமே இப்போது தான் புரிந்தது… ‘கட்டுனா இவளை கட்டுவேன் டா’ என்பது போல் தீர்மானமாக ஆணித்தனமாக பெற்றோர்களிடம் சொல்லி இருந்தானே…
அவர்கள் ஊரில் இல்லாத அழகான பெண்களா என்று கூட பெற்றவர்களுக்கு தோன்றியது… ஆனால் பாந்தமான முகத்துடன் அமிர்தாவை கண்ட பின்னர் தான் அவர்களுக்குமே மகனின் காதல் அழுத்தம் புரிந்தது…
விருப்பமே இன்றி தலை குனிந்து நின்றிருந்தவளை கண்டவனோ அவளின் நாணம் என்றே நினைத்துக் கொண்டான்…
பின்னே தன்னை அவளால் நிராகரிக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்றே ஆணவனுக்கு அதீத நம்பிக்கை இருந்தது…
“எல்லாருக்கும் வணக்கம் சொல்லு அமிர்தா” என வரலட்சுமி புன்னகையுடன் சொன்னார்…
அப்போதெல்லாம் மகனின் முன்னே தான் அவரின் வேஷம் பலமாக இருக்குமே…. அதனின் வெளிப்பாடு தான் இது…
அனைவரிடமும் பொதுப்படையாக வணக்கம் சொன்னவள் ஆத்மனை பார்க்கவே இல்லை… ஏனோ அவளுக்கு அண்ணன் பார்த்த வரன் அதிலும் தெலுங்கு குடும்பம் என்பதெல்லாம் தலைக்குள் உட்கார்ந்து தீரா பயத்தை தான் கொடுத்தது…
‘ஏன் என்னை பார்க்க மாட்டிங்குறா!’ என ஆவலுடன் அவளை பார்த்தவன், “இன்னும் எவ்வளவு நேரம் அமிர்தா குனிஞ்சிக்கிட்டே இருக்க போற” என அனைவரும் முன்னே புன்னகையுடன் இலகுவாக கேட்டான் ஆத்மன்…
அவன் கேட்டதில் திடுக்கிட்டவள் அண்ணன் மீதுள்ள பயத்தில் நிமிர்ந்தாள்…
“அமிர்தா… கொஞ்சம் ஷ்ஷை டைப் ஆத்மன்… நீங்க ரெண்டு பேரும் தனியா பேசிட்டு வாங்க…” என தங்கையின் குனிந்த தலை நிமிராத முகத்தை வைத்து இவ்வாறு கூறினான் இந்திரஜித்…
ஆத்மனுக்கு என்ன கசக்கவா செய்யும்… இந்திரஜித் சொல்லவில்லை என்றால் ஆத்மனே இன்னும் சில நொடிகளில் அமிர்தாவிடம் தனியாக பேச கேட்டுருப்பான் தான்…
‘ஐய்யயோ! தனியா பேசணுமா… பேசாம இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிடலாம்’ என முடிவெடுத்தாள் அமிர்தா…
கார்டனில் நின்றிருந்த அஜய் மற்றும் ஸ்வாதியோ ஆங்கிலத்தில் தான் பேசினார்கள்…
இருவருமே ஒரு சேர ஆங்கிலத்தில் பேச, இப்போதைக்கு குழப்பம் இன்றி நன்றாகவே பேசினார்கள்…
அஜய்யிடம் பேசிய பின்னர் ஸ்வாதிக்கு அவனை ரொம்பவே பிடித்துப் போனது…
விசாலாட்சி க்கு தான் மனதெல்லாம் ஒரு நெருடல்…
ஏன் எப்போதும் பணம் படைத்தவர்களின் குடும்பத்திலேயே வரன் எடுக்க வேண்டும் என்று…
அவரும் பணக்கார வீட்டு பெண் தான்… ஆனால் அது அந்த காலம்… இந்த காலத்து பணக்கார பெண்கள் மீது அவருக்கு பெரிதாக அபிப்ராயம் வரவில்லை… அதுவும் சோனியாவை கூடவே இருந்து பார்த்த பின்னர் சுத்தமாக அதில் பிடித்தம் இல்லை…
ஆனாலும் அவரால் இந்திரஜித்தை மீறி எதுவும் செய்ய முடியாது… அஜய்க்கு வேறு பெண்ணை பிடித்து விட்டதல்லவா… அதனால் மௌனியாகி போனார்…
அந்த பெரிய ஹாலை ஒட்டி இருந்த பால்கனியில் தான் ஆத்மனும் அமிர்தாவும் நின்றுக் கொண்டு இருந்தார்கள்..
அவளுடனான முதல் தனிமை அவனை ஆட்டிப்படைத்தது…
தன் முகத்தை கைகளால் அழுத்தி நீண்ட பெருமூச்சுவிட்டவன் அவளிடம் ஆசையாய் பேச எத்தனிக்க, “எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல… ப்ளிஸ் இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க” என்றாள் தலை குனிந்திருந்தபடியே…
இத்தனை நேரம் வானில் மிதந்து கொண்டுருந்தவனோ பொத்தென கீழே விழுந்தது போல உணர்வு…
அதிர்ச்சியில் அவளை பேசாது பார்த்திருந்தவனை இப்போது நிமிர்ந்து பார்த்தவள், “எ… எனக்கும் உங்களுக்கும் செட் ஆகும்னு தோண மாட்டிங்குது” என்றாள் கலக்கமாக…
“ஏன்.. என் மூஞ்சியில அப்படி செட் ஆகாதுன்னு எழுதி ஒட்டியிருக்கா” என அழுத்தமாக கேட்டான் ஆத்மன் ரெட்டி… அவனை பிடிக்கவில்லை கல்யாணம் வேண்டாம் என்று அவள் சொன்ன பின்னர் அவன் பொறுமை காப்பானா என்ன!
“பாருங்க… இப்போவே நீங்க கோபப்படுறீங்க… எ..எனக்கு இப்போ கல்யாணம் பண்ற மனநிலையே இல்ல… அப்படி பண்ணாலும் என் கூட பிரண்ட் போல இருக்குற பையனை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்” என சிறு பிள்ளை போல சொன்னவளை வெறித்தவன்,
“என்னால உனக்கு பிரண்ட்டா எல்லாம் இருக்க முடியாது… ஆனா உனக்கு பெஸ்ட் ஹஸ்பண்ட்டா இருப்பேன்…” என அவளின் கண்களை பார்த்து கூர்மையாக சொன்னவனோ, அவளை காதலித்ததை சொல்ல நினைத்திருந்து இப்போது அவள் பேசியதில் கடுப்படைந்து அதை சொல்ல தவறிவிட்டான்…
“ப்ளிஸ் ங்க” என கண்களில் அவள் கண்ணீருடன் கெஞ்ச,
“என்னை விட்டா இப்போவே உன்னை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிட்டு அப்படியே கையோட முதல் ராத்திரியையும் முடிச்சிடுவேன்… என் கிட்ட கல்யாணத்தை நிறுத்துறதை பத்தி பேசாத” என அவன் உறுதியாக பேச,
‘ச்ச பொறுக்கி… எப்படி எல்லாம் போடுறான்’ என மனதில் அவனை கடுகடுக்க,
“நீ என்னை மட்டும் தான் கல்யாணம் பண்ணனும்…” என சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்த ஆத்மனோ, என்ன நினைத்தானோ மீண்டும் அவளருகில் வந்து,
“ரொம்ப குழப்பிக்காத பங்காரம்… கண்டிப்பா நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்” என மீண்டும் மென்மையாய் மொழிந்தவன், அவள் கண் இமைக்கும் நேரத்தில் அவளின் நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட, அவனின் செயலில் பெண்ணவள் உறைந்து ஸ்தம்பித்தே விட்டாள்…
ஆத்மன் அவளிடம் பேசிவிட்டு சென்று விட்டான் தான்.. ஆனால் அமிர்தாவால் அந்த இடத்தை விட்டு ஆசைய முடியவில்லை. அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள்.
ஒருவேளை இவன் தங்கையின் திருமணம் நடக்க வேண்டும் என்பதர்காக தான் வேண்டாம் என்று சொல்லியும் வழுக்கட்டாயம் படுத்துகிறானோ என்றே அவளுக்கு தோன்றியது..
எது எப்படியோ அமிர்தாவுக்கு ஆத்மனை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை..
ஆத்மனை பற்றி தெரிந்து கொள்ளலாம் புரிந்து கொள்ளலாம் என்றும் கூட அமிர்தா யோசித்து இருக்கலாம்.. ஆனால் அமிர்தாவும் அத்தகைய கோணத்தில் யோசிக்கவில்லை.
எவ்வளவு நேரம் இப்படி அமிர்தா அசையாது நின்று இருந்தாலோ!
“ஏய் அம்மு” என்று அனன்யா அவளை உலுக்கிய பின்பு தான் தன் சுய உணர்விற்கு வந்த அமிர்தா மலங்க விழித்து பார்க்க,
“என்ன டி இது தான் அழகுல மயங்கி விழுறதா” என வடிவேல் பாணியில் அனன்யா கலாய்க்க,
“கொஞ்சம அமைதியா இரு டி” என கடுகடுத்தாள் அமிர்தா.
“நடிக்காதீங்க மேடம்.. மாப்பிள்ளையோட அழகுல நீ மயங்கி விழுந்துட்ட” என்றாள் அனன்யா.
ஆத்மன் ரெட்டி தங்கைக்கு நல்ல வரன் என்றே தோன்றியது. அவனின் தோற்றம், பேச்சு, நடவடிக்கை இப்படி எல்லாமே ரசிக்கும் விதமாய் இருந்ததை உணர்ந்த அனன்யா.. தங்கைக்கு ஏற்றவன் இவன் தான் என்று தோன்றியது.. எப்படியாவது பேசி தங்கையை சம்மதிக்க வெக்க அவள் முயன்று கொண்டு இருக்க,
அமிர்தாவோ, “எனக்கு அவனை பிடிக்கல அம்மு” என்றாள் ஸ்திரமாக.
“என்ன அம்மு சொல்ற நீ.. ஏன் அவருக்கு என்ன! பார்க்க செம ஹேண்ட்ஸமா இருக்காரு.. ஹி இஸ் அ பேமஸ் டைரக்டர் (He is a famous director). இதெல்லாம் கூட விடு.. அவர் நல்ல குடும்பம்.. நல்லா பேசுராரு” என தங்கையிடம் எடுத்து சொல்லி புரியவைக்க முயன்றாள் அனன்யா.
“உனக்கு அவளோ பிடிச்சு இருக்குன்னா நீயே அவர கல்யாணம் பண்ணிக்கோ.. என்னை விடு” என்றாள் அமிர்தா பட்டென்று.
“நான் ஏற்கனவே அஷ்வின் கூட மனசு அளவுல டை அப் ஆயிட்டேன்” என்றவளிடம், “இவன் எனக்கு வேணாம் அன்னு” என கண்களில் கண்ணீர் மல்க நின்ற தங்கையை இதற்க்கு மேல் வற்புறுத்த விரும்பாத அனன்யா,
தங்கையின் தோளில் ஆறுதலாக கை வைத்து, “இந்தர் அண்ணா கிட்ட நம்மலால மறுக்க முடியுமா டி” என கவலையாக கேட்டாள் அனன்யா.. அண்ணனை எதிர்த்து பேச முடியாது என்பது அவர்கள் இருவருமே நன்கு அறிந்த விஷயம்..
“பாட்டி கிட்ட பேசி பாக்கலாம் அன்னு” என கலங்கிய விழிகளுடன் அவள் சொல்ல, வரவேற்பு அறையில் இவர்களின் திருமண நாளே பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு இருந்தது..
பாட்டியிடம் கெஞ்சி, அழுதும் பார்த்து விட்டாள் அமிர்தா..
பாட்டியும் தயங்கி தயங்கி இந்தரஜித்திடம் கேட்டார்…
“ஆத்மன் ரெட்டி ரொம்ப நல்ல பையன் பாட்டி.. என்னை விட நல்லவன்.. அமிர்தாவை காதலிக்குறான் இதுக்கு மேல வேற என்ன வேணும்” என்று இந்திரஜித் முடித்து விட, பாட்டிக்கும் இதன் பின்னர் என்ன பேச முடியும.. பேரனின் தேர்வில் அவருக்கு நம்பிக்கை அதிகம்.
அதுவும் உண்மை தான்.. ஆத்மன் ரொம்பவே நல்லவன்.. பணக்கார கர்வம் அவனுக்கு இருக்கும் தான்.. அதற்காக பிறரை மட்டம் தட்டும் வகை அவன் இல்லை.
அவனின் அப்பா மற்றும் சிற்றன்னைக்கு அவன் அவ்வளவு மதிப்பு கொடுப்பான்,,,
என்ன தான் தன் வாழ்க்கை தன் முடிவு என்று அவன் ஸ்திரமாக இருந்தாலும் தன்னை சுற்றி இருக்கும் நல்ல உள்ளங்களுக்கு அவன் எப்போதும் மதிப்பு கொடுப்பான்..
“அந்தப் பையன் உன்னை ரொம்ப காதலிக்குறான் அம்மு.. அவனால மட்டும் தான் உன்னை ராணி போல வெச்சிக்க முடியும்” என ஸ்திரமாக முடித்து விட்டார் பாட்டி.
அன்று இரவு அனன்யா மற்றும் அமிர்தா தனிமையில் இருக்கும் போது, பாட்டி தன்னிடம் சொன்ன விஷயத்தை அமிர்தா சலிப்பாக சொல்ல,
“ஓ அப்போ ஆத்மன் உன்னை காதலிக்குறாரா.. இதை விட உனக்கு என்ன அம்மு வேணும்.. உன்னை காதலிக்குறாராம் அவரை கல்யாணம் பண்ணிக்கோ சந்தோஷமா இருப்ப” என அனன்யா சொல்ல,
“நானும் உன்னை கவனிச்சிக்கிட்டே தான் இருக்கேன் அன்னு.. நீ இந்த ஆத்மனுக்கு ரொம்ப தான் கொடி பிடிக்குற! உன்கிட்ட நியாயமே இல்ல அன்னு.. சர்வா என்னை இதை விட அதிகமா காதலிக்குறான்.. ஆனா நான் அவனை பத்தி பேசும் போது எல்லாம் அவசரப்பட்டு முடிவு எடுக்காதன்னு தான் எப்போவும் சொல்வ.. திஸ் இஸ் டோடல்லி அன்ஃபேர்(This is totally unfair)” என்றாள் அமிர்தா கடுப்பாக.
“சரி விடு.. உன் விருப்பம் போல பண்ணு” என பேச்சை நிறுத்தி விட்டாள் அனன்யா.அப்போது அமிர்தாவின் ஃபோன் ஒலிக்க,
“என்ன டி இது புது நம்பரா இருக்கு” என்று அனன்யாவிடம் கூறியபடியே அமிர்தா படுத்துக் கொண்டே ஃபோனை எடுத்து காதில் வைக்க,
“ஹலோ அமிர்தா… ஆத்மன் ஹியர்” என்று வசீகரிக்கும் குரலுடன் அவன் பேச, படுத்திருந்தவள் அதிர்ச்சியில் எழுந்தே விட்டாள்.
“ஹலோ… அமிர்தா… லைன்ல இருக்கியா” என்று ஆத்மன் ஆவலுடன் கேட்க,
“எ…எஸ்” என்று தடுமாறிய அமிர்தா பதில் மட்டும் தந்தாள்…
“யாரு டி?” என்று மெதுவாக அனன்யா வாயசைக்க,
“ஆத்மன்” என்று சத்தமின்றி உதட்டை மட்டும் அசைத்தாள் அமிர்தா.
இப்போது அனன்யாவாவும் எழுந்து அமர்ந்தாள் வேகமாக.
“ஆர் யு ஓகே? (Are you okay?)” என அவன் அக்கறையாக தான் ஆரம்பித்தான்.
“இல்லைங்க.. நான் நல்ல இல்ல.. நீங்க என்ன காதலிக்குறீங்கலாமே” என நம்பகத் தன்மை துளியும் இன்றி சொன்ன அமிர்தாவின் த்தொனி ஆத்மனுக்கு புரியாமல் இருக்குமா என்ன..
புரிந்தும் அமைதியாக தான் இருந்தான்.. அவள் மனதில் இருப்பது முதலில் வெளியில் வரட்டும் என்று அவன் காத்திருக்க, “அது எப்படி சார்.. அன்னிக்கு தான் என்ன முதல் முறை பொண்ணு பார்க்க வந்தீங்க அதுக்குள்ள உங்களுக்கு என் மேல காதல் வந்துடுச்சா” என கிண்டலாக கேட்டாள் அமிர்தா.
“அம்மு.. கொஞ்சம அவரை பேச விடு” என்று அனன்யா மெல்ல சொல்ல, அவளை தீயேன முறைத்தவள், “இந்த நாடகத்தை எல்லாம் நம்ப நான் தயாரா இல்ல” என்றாள் பட்டென்று.
ஆத்மனிடம் இப்படி எல்லாம் பேச அமிர்தாவுக்கு இப்போதும் உள்ளுக்குள் பயம் தான்..
ஆனாலும் இவனிடம் எப்படியாவது பேசி இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று வெகு தீர்மானமாக இருக்கிறாள்.
தன் காதலை புரிந்துக் கொள்ள அவளுக்கு நேரம் எடுக்கும் என ஆத்மனுக்கு தெரியும்.. ஆனால் அதை அவள் நக்கல் அடித்து அலட்சியமாக பேசுவது எல்லாம் ஆத்மனுக்கு கடுப்பைத் தான் கொடுத்தது.
“நான் உன்னை இப்போ பொண்ணு பாக்கும் போது தான் பாத்தேன்னு நினைச்சிட்டு இருக்கியா அமிர்தா.. நான் உன்னை ரொம்ப வருஷம் முன்னாடி” என அவன் ஆரம்பிக்கும் போதே கால்லை கட் செய்து விட்டாள் அமிர்தா.
“ஏய் அம்மு! என்ன டி பண்ணி வைச்சிருக்க” என்று அதிர்ச்சியில் கேட்டாள் அனன்யா.
“எனக்கு அவனை சுத்தமா பிடிக்கல டி” என்று கடுகடுத்தாள் அமிர்தா.
“அது புரியுது லூசு… ஆத்மனுடைய தங்கச்சி ஸ்வாதிக்கும் அஜய் அண்ணாவுக்கும் உங்களோட சேர்த்து கல்யாணம் நடத்த பிளான் பண்ணிருக்காங்க. நீ இப்படி வெளிப்படையா ரியாக்ட் பண்ணினா பிரச்சனை பெருசு தான் ஆகும் டி” என்று படபடத்தாள் அனன்யா.
“எப்படி இருந்தாலும் பிரச்சனை வரத் தான் போகுது அன்னு… சுரணை உள்ளவனா இருந்தால் கண்டிப்பா நான் பேசினதுக்கு இந்த கல்யாணத்தை நிறுத்துவான்” என்று குப்புற படுத்துக் கொண்டாள்…
ஆத்மன் ரெட்டி இவளின் மீது வைத்திருக்கும் வெறி இவளுக்கு தெரியவில்லை!
தன் காதலை புரிய வைக்க முயற்சித்தாலும் அதை கேட்க மறுக்கும் அமிர்தாவிடம் ஆத்மனுக்கு கோபம் தான் வந்தது..
தன் தலையை கோதியபடி உஷ்ண பெருமூச்சுகளை விட்டவன் மீண்டும் அமிர்தாவுக்கு கால் செய்ய, “இவனுக்கு சூடு சுரனை எல்லாம் சுத்தமா இல்லயா.. என்னால கல்யாணத்தை நிறுத்த முடியலனு தானே இவனை சீண்டுறேன்” என்று நொந்த அமிர்தாவிடம்,
“இவனை சீண்டி நீயே ஏதாவது எழரையை கூட்டிக்காத அம்மு.. ஒரு தடவை போனை எடுத்து சரியா பேசு” என அதட்டினாள் அனன்யா.
“இவனுக்கு கோவம் வந்து இந்த கல்யாணத்தை நிறுத்தனும்னு தான் நானும் முயற்சி பண்றேன் அன்னு..” என்றவள் கடுப்புடன் போனை எடுக்க,
“பேசிட்டு இருக்கும் போது கட் பண்ணாத அமிர்தா எனக்கு சுத்தமா பிடிக்காது” என்று அவன் சாதாரண குரலில் தான் சொன்னான். அமிர்தாவுக்கு தான் ஏதோ மாயாவி தன்னை மிரட்டுவது போல தோன்றியது.
ஆனாலும் தன் பயத்தை அவனிடம் வெளிக்காட்டாமல், “நான் அப்படி தான் பண்ணுவேன்” என வேண்டும் என்றே வீம்புக்கே கட் செய்தாள்.
ஆத்மனுக்கு நியாயப்பாடி கோபம் தான் வரணும்.. ஆனாலும் அவனின் இதழுக்குள் மெல்லிய புன்னகை..
“சரியான வாலு இவ” என்றவனோ, “என் கூட வந்து வாழ்ந்து பார்த்துட்டு பிடிக்கலனு சொல்லு டி.. உன்னால அப்படி சொல்ல முடியாது அப்படி சொல்லவும் நான் விட மாட்டேன்! அப்டியே நீ என்னை பிடிக்கலன்னு சொன்னாலும் இந்த ஜென்மததுல நான் தான் டி உன் புருஷன்” என தனக்குள் பேசிக் கொண்டவன் அடுத்து வந்த நாட்களிலும் அமிர்தாவிற்கு கால் செய்தான்..
சில சமயம் ஃபோன் எடுக்க மாட்டாள் அமிர்தா.. சில சமயம் எடுத்துவிட்டு கண்ணா பின்னாவென கத்திவிடுவாள்…
அதை எல்லாவற்றையும் ரசித்த ஆத்மனுக்கு நன்றாகவே தெரிந்தது..
அமிர்தாவிற்கு இந்த கல்யாணத்தை நிறுத்த தைரியம் இல்லை… அவளின் அண்ணனிடம் பேசி நிறுத்த தைரியம் இல்லை..
அதனால் தான் தன்னை எப்படியாவது கடுப்பேத்தி திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று அவள் நினைக்க,
ஆத்மனோ அவள் என்ன சொன்னாலும் கோபம் வந்தாலும் அதை வெளிக்காட்டாது அவளுக்கு மேலும் தான் எரிச்சலை உண்டாக்கினான்.
அப்படித் தான் ஒரு முறை, “உங்களுக்கு வேற வேலையே இல்லையா! எவ்வளவு திட்டுனாலும், கத்துனாலும் விடாது தொல்லாயா இருக்கீங்க” என சலிப்பாக சொன்னாள்.
ஆத்மனுக்கு கோபம் வந்தது தான்… ஆனாலும், “எனக்கு இருக்குற ஒரே வேலை… தினமும் கால் பண்ணி உன் குரலை கேட்குறது தான்… கனவுல கூட உன்னோட வாய்ஸ் தான் என் காதுக்குள்ள ஸ்வீட்டா ஒலிச்சிட்டே இருக்கு அமுலு” என்றான்.
“யூ நோ வாட்… எனக்கு உங்க வாய்ஸ் சுத்தமா பிடிக்கல… இரிடேட்டிங்கா இருக்கு” என்றாள் வேண்டும் என்றே.
ஆத்மனின் கம்பீரமான குரல் அவ்வளவு வசீகரமாக இருக்கும்… அமிர்தாவிற்கு கூட ஆத்மனிடம் இப்படி பேசுவது அபத்தமாக தான் தோன்றியது…
ஆனாலும் தன்னை விடாது துரத்தும் இவனிடம் இருந்து விடுதலை பெற அவள் இவ்வாறு எல்லாம் இஷ்டத்துக்கு பேசுகிறாள்…
இப்படியே இவர்களின் நாட்கள் சென்றுக் கொண்டு இருக்கையில் தான் இன்னும் ஒரு மாதத்திற்குள் திருமணம் என்று தேதி முடிவானது…
அவ்வளவு தான்.. அமிர்தாவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது..
‘அடப்பாவி எவ்வளவு சொல்லியும் இவன் கல்யாணத்துக்கு தயார் ஆயிட்டான்.. இவனுக்கு சுடு சுரணை எல்லாம் சுத்தமா இல்லயா’ என மனதில் பொங்கியவள் அனன்யாவிடம் சொல்லி அழ, இருவரும் இவர்களின் நெருங்கிய தோழியான சாருபாலாவை உதவிக்கு அழைக்க,
அவளோ ஆத்மன் ரெட்டியின் விலாசத்திற்கே அமிர்தாவும் சர்வாயும் உயிருக்கு உயிராக காதலிக்குறார்கள் என மொட்டை கடுதாசி போட்டு விட்டாள்… அதில் அவள் நச்சென்று என்ன பிட்டெல்லாம் போட்டாளோ ஆத்மன் ரெட்டி மற்றும் அமிர்தாவின் திருமணம் நின்று விட்டது..
“ஹே அமிர்தா… அமிர்தா” என அவளின் அறைத் தோழி அமிர்தாவின் தோளை உலுக்க பழைய நினைவுகளில் இருந்து வெளியில் வந்தாள் அமிர்தா…
“உன் ஃபோன் அடிச்சிட்டே இருக்கு பாரு…” என்றவள் உணர்த்த,
பதற்றமாக ஃபோனை நோக்கி சென்றாள் அமிர்தா…
சர்வா தான் கால் பண்ணிக் கொண்டே இருக்கிறான்…
எந்த முகத்தை வைத்து அவனிடம் பேசுவது என்று கூனிக் குறுகினாள் அமிர்தா.
விடாது அடித்துக் கொண்டே இருக்கிறான் சர்வா…
அவனிடம் சந்தோசமாக பேச வேண்டும் என்று நினைத்து இருந்தாளே…
தன் கண்களை அழுத்தி துடைத்தவள் கால்லை எடுக்க,
“அம்மு தூங்கிட்டியா” என அக்கறையாக கேட்டான் சர்வா.
“ஆ.. ஆமா சர்வா கொஞ்சம் தலைவலி” என சமாளித்தவள்,
“அப்போ தூங்கு அம்மு.. நம்ம நாளைக்கு கூட பேசலாம்… நீ சொல்லப் போற ஹாப்பி நீயூஸ்க்காக நான் ஆவலா காத்துக்கிட்டு இருக்கேன்” என்றான் ஆவலுடன்.
தன் மன கஷ்டங்களை எல்லாம் ஒதுக்கி தள்ளியவள், “சொல்றேன் சர்வா” என ஆரம்பிக்க,
“வீடியோ கால் பண்ணவா” என எதிர்ப்பார்ப்புடன் கேட்டான் சர்வா.
“இல்ல சர்வா.. நார்மல் கால்லே போதும்” என்றவள்,
“எனக்கு ஒரு படத்துல பாட சான்ஸ் கிடைச்சு இருக்கு சர்வா” என ஆத்மன் விஷயத்தை தவிர்த்து மற்ற விஷயங்களை சொன்னாள் அமிர்தா.
“வாவ்…சூப்பர் அம்மு… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என சர்வா தொடங்க, அவனிடம் தன் கவலையை மறைத்து, “நம்ம நேர்ல பேசணும் சர்வா” என்றாள் சுரம் குறைந்து.
சர்வாக்கு இருந்த சந்தோஷத்தில் அவளின் சுரம் இறங்கிய வார்த்தைகள் கூட அவனின் மண்டைக்குள் ஏறவில்லை…
“கண்டிப்பா அம்மு…” என சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தவனிடம் தூக்கம் வருகிறது என்று கால்லை அணைத்தவளுக்கு, அடுத்து வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் ஏது செய்ய வேண்டும் என்பது கூட புரியவில்லை..
***
“உன்னோட அப்பாவும், அம்மாவும் உனக்கு வேணும்னா நீ சோனியாவை மனைவியா ஏத்துக்கணும் விக்கி” என அவனின் தாய் லதா சொல்ல உறைந்தே போனான் விக்னேஷ்.
“என்ன ம்மா மிரட்டுறீங்களா… கண்டிப்பா முடியாது” என்றான் விக்னேஷ் அழுத்தமாக.
“அவன் எப்படி சொல்லுவான் லதா..அதான் நீயூஸ், பேப்பர் ல எல்லாம் இவனும் அந்த பொண்ணும் நெருக்கமா இருக்குற ஃபோட்டோஸ் எல்லாம் வருதே… அவனுக்கு இப்போ பொண்டாட்டி எல்லாம் கசக்க தான் செய்யும்” என்றார் முருகன் வெறுப்பாக.
“அப்பா!” என அதிர்ந்து கத்தினான் விக்னேஷ்.
“அவரை ஏன் டா கத்துற.. உன்னை நாங்க தானே வளர்த்தோம்… இன்னும் விவாகரத்து கூட ஆகல… அதுக்குள்ள இன்னொரு பொண்ணொட.. ச்ச” என தலையில் அடித்துக் கொண்டு அழுதார் லதா.
“நான் உங்க வளர்ப்பு ம்மா… என்னை நீங்க தப்பா நினைக்குறீங்களா” என ஆதங்கத்துடன் கேட்டான் விக்னேஷ்.
“நடக்குறதை எல்லாம் பார்த்தா என் வளர்ப்பு தப்பாயிடுச்சுன்னு தான் தோணுது” என்றவரிடம் விக்னேஷூக்கு கோபம் தான் வந்தது.
“ஆமா… நான் அந்தப் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்… போதுமா…” என்றான் வல்லென்று…
தன் தாய் மற்றும் தந்தை தன்னை விசாரிக்காது தன்னை நம்பாமல் பேசுவது அவனுக்கு கோபம் என்றால்… இதெல்லாத்திற்கும் மொத்த காரணமான சோனியாவின் மீது அவனுக்கு கொலைவெறியே வந்தது..
“சட்டப்படி விவாகரத்து பண்ண அப்புறம் நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ” என லதா சொல்ல, முருகனோ பேரதிர்ச்சி அடைந்தார்.
மனைவி இப்படி பேசுவார் என சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை முருகன்..
“லதா.. உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சு இருக்கா” என கத்தினார் முருகன்.

