பிரியாதிரு 6

பிரியாதிரு 6 

“ஐ வான்ட் விக்னேஷ் டேடி”(I want Vignesh Daddy)” என்று அவள் சொல்லி இருக்க,

முதலில் அபினவ் ஷர்மாவிற்கு அத்தனை ஆத்திரம்.. 

ஏனெனில் அவர் அளவுக்கு விக்னேஷ் பிறவி கோடீஸ்வரன் இல்லை என்பது வேறு விஷயம்!

இப்போதும் கூட விக்னேஷ் ஊட்டியில் பெரிய பங்களா கட்டி இருக்கின்றான். கோயம்புத்தூரில் இருந்த தன்னுடைய லாக்கர் பிசினஸ் மற்றும் பயிற்சிக்  கூடத்தை மூடிவிட்டு ஊட்டியில் பல ஏக்கர் கணக்கு இடம் ஒருவரிடம் வாங்கி இங்கு பார்த்துக்கொள்கிறான். 

சோனியாவை தன் வீட்டை விட்டு தன் வாழ்க்கையை விட்டு துரத்திய கையோடு தான் தன் பிசினஸ் மொத்தத்தை அங்கே மூடிவிட்டு ஊட்டி சென்று விட்டான்.

அவளை அவ்வளவு நேசித்தான்.. இப்போது அவ்வளவு வெறுக்கிறான்!

விக்னேஷ் பொதுவாகவே கறார் பேர்வழி தான்..

அபினவ் சர்மாவிடம் கூட அவன் ரொம்ப ஒட்ட மாட்டான்! தன் வேலையில் சரியாக இருப்பான். அதை தாண்டி அவரின் மீது அவனுக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

அபினவ் ஷர்மாவிடம் இதுவரை எல்லாரும் தலையாட்டி பொம்மையை இருந்து தான் பழக்கம். 

விக்னேஷ் அப்படி இல்லாது அவருக்கு பெரும் கடுப்பு!

ஆனாலும் அவரால் அதை வெளியில் காட்ட முடியவில்லை. ஏனெனில் விக்னேஷ் தான் இப்போது இந்தியாவின் நம்பர் 1 பூட்பால் பிளேயர். 

அவனிடம் முகம் காட்டினால் அவன் பட்டென்று தன்னுடைய டீமில் இருந்து விலகி விடுவான் என பயந்தவர் சற்று பம்மி தான் இருக்கிறார். 

இப்போது தொலைக்காட்சி, சோசியல் மீடியா என பரவியிருக்க அதை அறிந்த அபினவ் சர்மா கொந்தளித்து மகளிடம் வந்து கேட்க, அவள் இப்படி ஒரே போடாக போட்டு விட்டாள். 

அவரின் ஒரே செல்ல மகள் ப்ரீத்தா… ஆனால் அவளை திருமணம் செய்ய வேண்டும் என ஏற்கனவே ஆசைப்பட்டு காத்திருக்கிறான் அவளின் அத்தை மகன் விரேன் சர்மா… 

பாம்பேயில் பெரிய தொழிலதிபரின் மகன் தான் விரேன் சர்மா.. 

அவனுக்கு மகளைத் திருமணம் முடிக்க வேண்டும் என அவர் நினைத்து இருக்க, இங்கு ப்ரீத்தா இப்படி தீர்மானமாக சொல்லவும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை… 

விக்னேஷிடம் அவருக்கு குறையில்லை.. அவன் அவரின் கட்டுக்குள் வர மாட்டான்.. அது தான் அவரின் பிரச்சனையே… 

ஆனாலும் ப்ரீத்தா ரொம்ப பிடிவாதமாக சொல்லியிருக்க, வேறு வழியின்றி கோயம்புத்தூரூக்கு ஃபிளைட் ஏறினார்…

விக்னேஷின் வீட்டு முகவரி அபினவ் சர்மாவிடம் டீம் டேரக்டரியில் இருந்தது.. 

அன்று காலை விக்னேஷ் தன் பயிற்சி கூடத்தில் இருந்தான்… 

அப்போது தான் விக்னேஷின் வீட்டிற்கு விவாகரத்து நோட்டீஸ் வந்துருந்தது.. 

ஆம், சோனியா தான் அனுப்பி இருந்தாள்.. 

அதே நேரம் தன் வீட்டில் குமுறி குமுறி அழுதுக் கொண்டு இருந்தாள் சோனியா. 

கைகள் நடுங்க, கண்களில் கண்ணீருடன் அவள் விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து இட்டு தன் தந்தையிடம் கொடுத்தவளை அதன் பின்னர் யாருமே அவளை தனிமையில் விட வில்லை.. 

எங்கே மறுபடியும் தற்கொலை முடிவுக்கு மகள் சென்றுவிடுவாளோ என்கிற பயம் அவர்களுக்கு.. 

வீட்டினர் இருக்கும் வரை தன் கதறலை கட்டுப்படுத்திக்கொண்டவள், “நான் கண்டிப்பா தற்கொலை பண்ண மாட்டேன் ம்மா… ப்ளிஸ் கொஞ்ச நேரம் என்னை தனியா விடுங்க” என அவள் கெஞ்ச, 

“நீ ரெஸ்ட் எடு சோனியா” என்றார் தந்தை. 

உள்ளே வந்தவள் கதவை சாற்றிவிட்டு அப்படி கதறி அழுதாள்… 

சரியாக அவளின் ஃபோன் ஒலிக்க, அடித்தது அவளின் அண்ணன் இந்திரஜித்… 

அவசரமாக தன் கண்களை துடைத்தவள் ஃபோனை எடுத்தாள்… வீடியோ கால் செய்துருந்தான் இந்திரஜித்… 

சோனியா எவ்வளவு தான் கண்களை அழுத்தி துடைத்து இருந்தாலும் அவளின் அண்ணன் கூர்மையான கண்களில் அது விழாமல் இருக்குமா என்ன… 

“இன்னும் அழணும்னா கூட அழுதுடு சோனி.. பட் அதுக்கு அப்புறம் நீ அவனுக்காக அழக் கூடாது.. அவனுக்கு இனி காதல், கல்யாணம் எல்லாம் நடக்கும்.. அதை எல்லாம் நீ போல்ட்டா ஃபேஸ் பண்ணனும்…”

“அண்ட் இம்ப்பார்ட்டான்ட் திங்.. என்ன நடந்தாலும் உன் மனசுல நல்ல எண்ணங்கள் மட்டும் தான் இருக்கணும்… பழபழிவாங்குற வேலை, சபிக்குற வேலை எல்லாம் இருக்கவே கூடாது” என கறாராக சொன்னான் அண்ணன். 

அனைத்தையும் ஆமோதிப்பதாய் கேட்டுக் கொண்டவளிடம், “ஒரு நல்ல டாக்டர் கிட்ட கவுன்சிலிங் போ… இன்னும் பத்து நாள்ல உனக்கான வேலை தயாரா இருக்கும் சோனி.. பீ ரெடி” என்றவன் இன்னும் சற்று நேரம் தங்கைக்கு ஆறுதல் வார்த்தை சொல்லிவிட்டு கால்லை அணைத்தான். 

முருகன் தான் வீட்டிற்கு வந்த தபாலை பிரித்து பார்த்தார்.. 

“லதா.. இங்க வா” என்றவர் அதிர்ச்சியில் கத்தி அழைத்த முருகன் விஷயத்தை சொல்ல, 

“இனியாவது என் பையன் வாழ்க்கைல நல்லது நடக்கட்டும்” என்று முடித்துவிட்டார் லதா. 

முருகனுக்கு தான் மனசே ஆறவில்லை.. ஆனாலும் மகன் தன்னிடம் எகிறி பேசிய பின்னர் அவர் மகனிடம் பேசுவதையே குறைத்து விட்டார்.. 

இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் தன் குடும்பத்துடன் விக்னேஷின் வீட்டின் கதவைத் தட்டினார் அபினவ் சர்மா.. 

முதலில் லதா மற்றும் முருகனுக்கு வந்தது யாரென்றே தெரியவில்லை.. பின் தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொள்ள, ஆங்கிலம் இப்போது நன்றாகவே புரியும் அளவில் இருந்த முருகனுக்கு புரிந்தது வந்தது யாரென்று..

சில வருடங்கள் முன்னர் சாருபாலா தந்தைக்கு ஆங்கிலம் கத்து கொடுத்து கையோடு அவரை ஆன்லைன் கிளாஸிலும் சேர்த்து விட்டதன் உபயத்தால் இப்போது பிறருடன் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்.. 

மனைவியிடம் விளக்கியவரின் மனதில் அவர்கள் எதற்காக வந்துருக்கிறார்கள் என்கிற யூகிப்பு இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றார்.. 

லதாவோ சொல்லவே வேண்டாம்.. வாய் முழுக்க பல்லுடன் புன்னகைத்து வரவேற்றவர், விருந்தோம்பல் செய்யத் தொடங்கினார்… 

அவர்கள் நினைத்தது போலவே சம்மந்தம் பேசினார் அபினவ் சர்மா.. ஒரே மகளின் ஆசைக்காக, அதையும் தாண்டி இன்னொரு எண்ணமும் அவரின் மனத்தில்.. 

மகளுக்கு திருமணம் செய்துவைத்து விக்னேஷை தன் பக்கம் இழுத்து விடலாம் என்று புது திட்டம் போட்டார் அபினவ் சர்மா.

விக்னேஷை அவர் கட்டுக்குள் வைத்தால் அவனை வைத்து அவர் பிசினஸ் செய்யலாம்.. இதுவரை எந்த ஒரு விளம்பரத்தையும் விக்னேஷ் பண்ணினது கிடையாது!

ஏனோ விக்னேஷுக்கு  இந்த மாதிரி விளம்பரத்தில் எல்லாம் நடிப்பது பிடிக்காது.

எத்தனை கோடி சம்பளம் சொல்லியும் அவன் இதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை!

பெரிய பெரிய மால், கடைகள், மண்டபம் இதையெல்லாம் திறந்து வைக்க திறப்பு விழாவிற்கு எல்லாம் அவனுக்கு அழைப்பு வந்தது. எதற்கும் ஒத்து வர மாட்டான் விக்னேஷ்.

இதோ இப்போது மகளை திருமணம் செய்து விட்டு விக்னேஷை தங்கள் பக்கம் இழுத்து விடலாம் என்று அபினவ் சர்மா திட்டம் பலமாக தீட்டி இருக்கிறார்.

அவரின் மனைவி பாயல் சர்மாவிற்கு தான் இதில் பெரிதாக விருப்பம் இல்லை.. ஏற்கனவே திருமணம் ஆனவனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவருக்கு இல்லை.

ஆனாலும் மகள் அடம்பிடிக்கிறாள்..அதனால் வேறு வழியில்லாமல் அமைதியாக இருக்கிறார்.

“விக்னேஷ் எங்க?” என்று அபினவ் சர்மா கேட்க,

“அவன் கோச்சிங் சென்டர் போயிருக்கான்” என்றவர், “லதா விக்னேஷுக்கு கால் பண்ணி வர சொல்லு” என்றிட,

லதாவும் ஆர்வமாக கால் செய்தாள்..

“உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் இன்னிக்கு உங்க பையனும் என் பொண்ணும் தான் ட்ரெண்டிங் டாப்பிக்” என்று அவர் சிரிக்க, முருகனுக்கு தான் இதெல்லாம் கேட்கவே தர்மசங்கடமாக இருந்தது.

சகிக்கவில்லை அவருக்கு!

லதா கால் செய்த நேரம் விக்னேஷ் எடுக்கவில்லை.. அவன் அங்கு பயிற்சியில் பிஸியாக இருந்தான்.

“நான் நேர விஷயத்துக்கு வரேன்.. விக்னேஷுக்கும் என் மகளுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிடலாம்” அன்று அவர் சொல்ல,

“அதுக்கு அவன் பொண்டாட்டி முதல்ல ஒத்துக்கணுமே” என்று முருகன் அசால்ட்டாக சொல்ல, அங்கு இருந்த அனைவரைக்கும் தூக்கி வாரி போட்டது.

“சுத்தம்… இது வேறயா!” என அவரின் மொழியான ஹிந்தியில் முணுமுணுத்தார் பாயல். 

ஐய்யயோ! இந்த மனுஷன் எதாவது பேசி என் மகனுக்கு நடக்க போற நல்ல காரியத்தை நிறுத்திட போறாரு’ என்று மனதில் பதறிய லதா,

“அதான் அவ கைப்பட போட்ட விவாகரத்து பாத்திரம் இருக்கே” என்று அவசரமாக அங்கே காட்டினார் லதா. 

“இன்னிக்கு தான் மருமக சைன் பண்ணியே கொடுத்துருக்கா.. கோர்ட்க்கு போய் ஹியரிங் எடுத்து அவங்க முடிக்கவே ஒரு வருசம் ஆகுமே” என்றார் முருகன் வேண்டும் என்றே இழுத்தபடி. 

“ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் வைச்சிக்கலாம்.. இப்போ நிச்சயம் பண்ணிக்கலாமே” என அசடு வழிய சிரித்தபடி சொன்னார் லதா. 

அபினவ் சர்மாவோ ப்ரீத்தாவை தான் கேள்வியாக பார்த்தார். 

மகளின் அடத்தால் தானே இங்கு வந்து நிற்கிறார்… அதற்கான பார்வை அது! 

ஆனாலும் அவர் இருக்கும் அந்தஸ்துக்கு எல்லாம் இரண்டாம் கல்யாணம் சாதாரணம் தான்.. 

அதிலும் விக்னேஷின் ஆளுமை, கம்பீரம், அழகுக்கு எல்லாம் பெண்கள் வரிசையில் தானே காத்திருக்கிறார்கள்…

ப்ரீத்தாவை போல வேறு சில நடிகைகள், மாடல்கள் என விக்னேஷிடம் நெருங்கவே முயற்சி செய்தார்கள்… 

அவர்களையும் ப்ரீத்தாவை போல் தான்  தள்ளி நிறுத்தியவன், ப்ரீத்தாவையும் கூட தள்ளி தானே நிறுத்தினான். 

அவளாக அவன் இதழில் முதம் இட்டால் அவன் என்ன செய்ய முடியும்… 

சோனியாவை வேண்டும் என்றே வெறுப்பேற்ற மட்டுமே அவன் அமைதியாக மறுத்தான்.. இல்லையேல் ப்ரீத்தாவின் கன்னம் அந்நொடியே பழுத்துருக்கும்.. 

விக்னேஷ் சிறிய வயதில் இருந்தே கோட்பாடுகளுடன் வளர்ந்தவன்… இதுவரை அவனை மனதாலும், உடலாலும் தீண்டியது சோனியா மட்டும் தான்.. 

இப்போது அவளை முழுசாக வெறுக்கிறான் தான்.. அதற்காக வேறொரு பெண் முத்தமிட்டதும் அவள் பக்கம் சாயும் பண்பு அவனுக்கு கிடையாது.. 

மன வலிமை மிகுந்தவன்.. இன்னும் சொல்லப் போனால் ப்ரீத்தா அவனுக்கு கொடுத்த முத்தம் அவனுக்கு அது எரிச்சலாக, கடுப்பாக இருந்தது.. 

“என்ன ப்ரீத்தா சொல்ற!” என மகளிடம் கேட்டே விட்டார் அபினவ் சர்மா. 

பின்னே, ப்ரீத்தா அவரின் குறிப்பு பார்வையை பார்த்தும் அமைதியாக இருந்தால் அவருக்கும் பொறுமை போய்விட்டது.. 

“ஒ.. ஒரு வருஷம் எல்லாம் ரொம்ப அதிகம் அப்பா.. இந்த மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும்” என ஹிந்தியில் சொன்னாள். 

அவர்கள் பொதுவாக ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் தானே பேசவார்கள்.. 

ஹிந்தி என்பதால் இப்பொது முருகனுக்கும் கூட புரியவில்லை.. 

ஆங்கிலம் முருகனுக்கு புரிகிறது என்று தான் வேண்டும் என்றே தந்தையும், மகளும் ஹிந்திக்கு தாவினார்கள். 

“என்ன பேசுற ப்ரீத்தா நீ! டைவர்ஸ் வரவே ஒரு வருஷம் ஆகும் இந்த மாசத்துக்குள்ள கல்யாணம் எல்லாம் எப்படி பாசிப்பிள்” என கடுகடுத்தார். 

“அப்புறம் இன்னொரு விஷயம் உங்க கிட்ட சொல்லவே மறந்துட்டேன்.. விக்னேஷோட பொண்டாட்டி சோனியாவோட அண்ணன் யாரு தெரியுமா.. இந்தியா இல்ல இல்ல இந்த உலகத்துல ஒன் ஆஃப தி பெஸ்ட் யங் பிசினஸ் டைக்கூன் வேதாந்த் இந்திரஜித்” என்று சொல்ல, 

அப்பாவும் மகளும் ஆடிப்போய் விட்டார்கள்.. 

பின்னே வேதாந்த் இந்திரஜித் என்றால் அவர்களுக்கு நடுங்க தானே செய்யும்.. 

இதன் பின்னரும் இந்த திருமணத்தை தொடர வேண்டுமா என நேசான பயம் அவருக்கு உள்ளுக்குள் படர, ப்ரீத்தாவிற்கு எவளோ ஒருத்தி முகம் தெரியாத சோனியாவிடம் தோர்த்து போவது சுத்தமாக பிடிக்கவில்லை.. 

“அப்பா! நீங்க அவர் கிட்ட பேசிப் பாருங்க” என ப்ரீத்தா விடாது சொல்ல, 

அபினவ் சர்மா கூட இந்த விஷயத்தை இதற்கு மேல் இந்திரஜித்திடம் சொல்லாமல், அவன் சரி சொல்லாமல் செய்ய முடியாது என உணர்ந்தவர்.

“அவர் நம்பர் தரீங்களா.. நான் பேசிப் பார்க்குறேன்” என சற்று பம்மி கேட்டார். 

“என் பொண்ணுக்கு கால் பண்ணி மாப்பிள்ளை கிட்ட தரேன்” என முருகன் சொல்ல, 

“எதே.. மாப்பிள்ளையா!” என முழித்தார்கள் வந்தவர்கள். 

‘ஐய்யயோ! மாப்பிள்ளை கிட்ட விஷயம் போனா அவர் எங்களை எல்லாம் தப்பா எடுத்துடுவாரே’ என லதாவிற்கு உள்ளுக்குள் பதறியது. 

அவர் அதிர்ச்சி முருகனுக்கு உள்ளுக்குள் குளுகுளுப்பு தான்.. 

“அட இதை சொல்லவே மறந்துட்டேனே.. விக்னேஷோட தங்கச்சி சாருபாலா.. அதாவது எங்க பொண்ணு.. அவ கல்யாணம் பண்ணினது சோனியாவுடைய அண்ணனைத் தான்” என்றார் பாருங்க.. 

இதற்கு மேலும் இந்த சம்மந்தம் தேவை தானா என்று தான் தோன்றியது அபினவ் சர்மாவிற்கு.. 

அவரால் இந்திரஜித்தை எதிர்த்து செய்ய முடியாது.. 

அவனின் பணபலம், பதவி எல்லாம் அவருக்கு நன்கு தெரிந்தது தான்.. 

இங்கு முருகன் சாருபாலாவிற்கு கால் செய்ய அபினவ் சர்மாவிற்கு வியர்க்கத் தொடங்கி இருந்தது.. 

ப்ரீத்தாவிற்கோ அப்படி ஒரு கோபம்… இந்திரஜித் அவ்வளவு பெரிய ஆளாக இருந்தால் தன் காதலை அவள் விட்டுக் கொடுக்க வேண்டுமா! என்று அப்படி ஒரு கோபம் அவளுக்கு.. 

அதை வெளிக்காட்ட முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

இவர்களின் முக உணர்வுகளை வைத்தே பாயலுக்கு புரிந்தது.. இந்த கல்யாணம் இனி நடக்க வாய்ப்பில்லை என்று.. அதுவரை சந்தோஷம் தான் அவருக்கு.. 

சாருபாலா ஃபோனை எடுத்ததும் விஷயத்தை சொன்னார் முருகன். 

அவளுக்கோ பேரதிர்ச்சி.. அந்த புகைப்படம் விஷயத்தில் இருந்தே அவளுக்கு தன் அண்ணனின் மீது அத்தனை கோபம் இப்போது வெறுத்தே போனாள். 

தன் கணவனிடம் வேறு அபினவ் சர்மா பேச நினைக்கிறார் என்று முருகன் சொல்ல அவளுக்கு தான் மனதில் உதறல் எடுத்தது.. 

இதனால் தன்னை தன் கணவன் வெறுத்துவிடுவானோ என்று அவள் பயத்தில் ஃபோனை அவனிடம் நீட்டி தயங்கி தயங்கி விஷயத்தை சொன்னாள்.

ஆனால் அவள் நினைத்தது போல இந்திரஜித்தின் முகம் இறுகவெல்லாம் இல்லை.. 

இயல்பாகவே ஃபோனை வாங்கியவன் தன் மாமனாரிடம் பேச, 

“மாப்பிள்ளை நீங்க என்ன முடிவு பண்ணினாலும் சரி.. அது தான் உறுதி.. இன்னொரு விஷயம் மாப்பிள்ளை எனக்கு இந்த விஷயத்துல சுத்தமா விருப்பமும் இல்ல, ஈடுபாடும் இல்ல.. தயவுசெஞ்சு என்னை தப்பா எடுத்துக்காதீங்க” என முருகன் தமிழில் சோர்ந்து சொல்ல, 

“உங்களைப் பத்தி எனக்கு தெரியும் மாமா” என மெலிதாக புன்னகைத்தவன், “அவர் கிட்ட கொடுங்க” என்றான். 

நடுங்கிய கையுடன் ஃபோனை வாங்கிய அபினவ் சர்மாவிற்கு ஹலோ என்று சொல்ல கூட முடியவில்லை காத்து தான் வந்தது.. 

“ஹ.. ஹலோ” என தன் குரலை சரிப்படுத்திவிட்டு அவர் தயங்கி ஆரம்பிக்க, 

“ஹலோ அபினவ் சர்மா வேதாந்த் இந்திரஜித் ஹியர்” என்றான் கம்பீரமாக. 

அவ்வளவு தான்.. சரண்டர் ஆகி விட்டார் அபினவ் சர்மா.. 

“சார்.. சத்தியமா உங்க தங்கச்சியோட கணவன்னு தெரியாது சார்.. மன்னிடுங்க” என பம்ம, 

“என் தங்கச்சியோட எக்ஸ் ஹஸ்பண்ட்” என்றான் திருத்தும் விதமாக. 

“ஆ.. ஆன் புரியுடுங்க சார்” என்றான். 

அபினவ் சர்மாவிற்கு ஏறத்தாழ இந்திரஜித்தின் அப்பா வயது இருக்கும்! 

ஆனாலும் அவன் தொட்ட பெரிய உச்சத்திற்கே அவனுக்கான மரியாதையை அள்ளிக் கொடுத்தார் அவர். மரியாதையை கொடுத்து தானே ஆக வேண்டும். 

“என்ன விஷயம் பேசணும் சொல்லுங்க?” என இந்திரஜித் கேட்க, 

“அது இல்லங்க சார்.. தெரியாம இங்க சம்மந்தம் பேச வந்துட்டோம்.. நாங்க இப்போ கிளம்பிடுறோம்” என பதறி அவர் சொல்ல, 

“உங்க பொண்ணுக்கு நீங்க விக்னேஷை தாராளமா பேசலாம். என் தங்கச்சி விவாகரத்து பேப்பர் ல சைன் பண்ணி கொடுத்துட்டா.. இனி அவளுக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்ல” என்றான் இயல்பாக. 

சாருபாலாவிற்கு தான் தன் கணவன் பேசுவதை எல்லாம் பார்க்க வியப்பாக இருந்தது.. 

அதன் பின்னர் பேச எதுவும் இல்லை என்பது போல இந்திரஜித் கட் செய்து விட்டான். 

“என்ன சொன்னாரு?” என ப்ரீத்தா கேட்க, 

“ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொல்லிட்டாரு.. ஆனா எனக்கு இது சரி வரும்னு தோணல” என்றார் மகளிடம். 

“எல்லாம் சரி வரும் டேடி” என்றாள் அழுத்தமாக. 

மகளும் விடாது இருக்க, இந்திரஜித்தே சரி சொன்ன பின்பு கடவுள் மேல் பாரத்தை போட்டு சம்மந்தம் பேசினார். 

முருகனுக்கோ அதிர்ச்சி… இந்திரஜித் ஒத்துக் கொண்டது அவருக்கு பேரதிர்ச்சி.

லதாவிற்கு மனதிற்குள் பெரிய குற்ற உணர்ச்சி.. மாப்பிள்ளையும், மகளும் தன்னை தவறாக எண்ணி இருப்பார்கள் என மனமெல்லாம் வருந்தியது.

இங்கே இந்திரஜித்திடம், “என் மேல கோபமா!” என கண்களில் கண்ணீருடன் கேட்டாள் சாருபாலா.

அவளின் கண்ணீரைத் தன் விரல்களால் துடைத்தவன் அவளைத் தன்னோடு சேர்த்து இழுத்து அணைத்து, 

“உன் மேல ஏன் சாரு நான் கோபப்படணும்.. இப்போ உன் அண்ணனுக்காக பேசுனேன்னு நினைக்காத.”

“அவன் சீக்கிரம் வேற கல்யாணம் பண்ணினால் தான் சோனியாவுக்கும் இனி விக்னேஷ் அவளுக்கானவன் இல்லன்ற விஷயம் அவளுக்கு நல்லா புரியும்” என்றான் தீர்மானமாக. 

“ஐ ஹேட் மை அண்ணா” என்றாள் முகத்தை கோபமாக வைத்தபடி. 

“இனி அவனை பத்தி நம்ம பேச வேண்டாம்” என இந்திரஜித் முடிக்க, சாருபாலாவிற்கு புரிந்தது.. தன் கணவனெ தன் அண்ணன் மீது பயங்கரமான கடுப்பில் இருக்கின்றான் என்று.. 

இந்திரஜித்தை பொறுத்த வரை விக்னேஷ் சோனியாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்று ஸ்திரமாக நின்ற போது கூட அவனுக்கு கோபம் வரவில்லை.

தன் தங்கை சொன்ன பொய்களுக்கான தண்டனை அது என்றே அமைதியாக இருந்தான். 

ஆனால் விவாகரத்து முன்னரே ஒரு பொண்ணை முத்தமிட்ட விக்னேஷின் நடவடிக்கை அவனுக்கு கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்வதாய் இல்லை.. 

தன் தங்கை உண்மையாக செய்யத் துணிந்த தற்கொலையை அவன் எள்ளி நகையாடியதும் அவனுக்கு பிடிக்கவில்லை.. 

அபினவ் சர்மா சம்மந்தம் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவனின் வீட்டின் உள்ளே நுழைந்தான் விக்னேஷ் கார்த்திக். 

ஸ்போட்ஸ் வியர் அணிந்து இருந்தான்… அவன் முதுகில் கிட் வேறு இருந்தது.. 

விளையாடி விட்டு வந்ததால் அவனின் உடையில் வியர்வையின் சாயல்..

ஆனால் அப்போதும் கூட வசீகரமாக தான் இருந்தான். 

தங்களின் வீட்டில் அபினவ் சர்மா மற்றும் அவனின் குடும்பம் வந்ததைக் கண்டவனின் புருவம் அதிர்ந்து இடுங்கியது. 

“ஹாய் விக்னேஷ்” என அபினவ் சர்மா பல்லைக் காட்ட, 

“என்ன விஷயம் சார்.. வீடு வரைக்கும் வந்துருக்கீங்க.. எனக்கொரு கால் பண்ணி இருந்துருக்கலாமே” என சற்று கடுமையான குரலில் கேட்டான். 

‘இங்க நான் முதலாளியா இல்ல இவன் முதலாளியான்னே தெரியலையே’ என மனதிற்குள் புலம்பிய அபினவ் சர்மாவிடம், 

“நான் குளிச்சிட்டு வரேன்… அம்மா” என அவன் அழைக்க, 

“ஏற்கனேவே காஃபி, பலகாரம் எல்லாம் கொடுத்துட்டேன் ப்பா” என்றார். 

தன் அறைக்குள் சென்று துண்டை எடுத்துக் கொண்டு பாத்ரூமில் சென்று ஷவரில் நின்றவனுக்கு, 

‘ஏன் இவங்க வந்து இருக்காங்க.. அவங்க பொண்ணு தானே கிஸ் பண்ணா.. அவளை நாலு அடி அடிச்சு உட்கார வைக்காம என் கிட்ட நியாயம் கேட்க வந்துட்டாரா.. ஆனா அவர் முகம் ஒன்னும் நியாயம் கேட்க வந்த மாதிரி தெரியலையே’ என யோசித்தவன் சற்று நேரம் ஷவரில் நின்றான்.. 

கோயம்புத்தூரில் சோனியாவுடன் அவன் இருந்த போது கூட அவளிடம் அதட்டி தான் பேசினான்.. தள்ளி தான் நிறுத்தினான்.. 

ஆனால் அவள் இவனிடம் அவ்வப்போது நெருங்க முயற்சிப்பாள்.. 

அப்படி தான் ஒரு முறை அவள் இதே போல் ஷவரில் குளித்துக் கொண்டு இருக்கும் பொழுது, “விக்னேஷ் ப்ளிஸ் உள்ளே வாங்க.. தண்ணீ வர மாட்டிங்குது.. சோப்பு வேற போட்டு இருக்கேன்” என குரல் கொடுத்தாள்.

அச்சமயம் அவளும் அவனும் மட்டும் தான் வீட்டில் இருந்தார்கள். 

அவளின் மீது இருந்த கோபத்தில், “வர முடியாது” என்று அவன் சொல்லியிருப்பான். 

ஆனால் அவனின் மகவை உண்டாகி இருக்கிறாளே.. தண்ணீ இல்லாமல் சோப்பில் எங்காவது கால் வைத்து அவள் வலுக்கி விழுந்து விடக் கூடாது என பதறியவன், 

“நீ அப்படியே நில்லு.. நான் டிப்பர்ல இருந்து தண்ணீ எடுக்குறேன்” என்று உள்ளே வந்தவனை வெறும் துண்டுடன் நின்று இருந்தவள் அவனை பட்டென்று கட்டி பிடித்து முத்தம் கொடுக்க, அவளின் தொடுகையில் தன்னிலை இழந்தவன் அவளின் இதழை வன்மையாக முத்தமிட்டு, அங்கேயே அவளை ஆட்கொண்டு, மோகத்துடன் அங்கே ஷவரில் அவளுடன் சேர்ந்து அவளை தன்னுடன் நெருக்கி தீண்டி குளித்தானே.. அந்த நியாபகம் இப்போதும் அவனை இம்சித்தது.. 

அன்று விக்னேஷிடம் எப்படியாவது நெருங்கி மீண்டும் குழந்தை உண்டாக வேண்டும் என்று தான் அவள் பிளான் போட்டு அவ்வாறு செய்தாள்… 

அவளுடன் மோகம் தீர முக்குளித்தவன் அது வட்டிய பின்னர் அவளிடம் நெருப்பாய் கொதித்தான்.

“இப்படி பொய் சொல்லி என் கூட உனக்கு படுக்கணுமா.. அசிங்கமா இல்ல உனக்கு” என எகிறியவன், 

“என் குழந்தை உன் வயித்துல இருக்குற ஒரே ரீசன்க்காக நான் சும்மா இருக்கேன்.. இல்லன்னா உன்னை” என கொதித்தவன், “ச்ச” என அங்கிருந்த நாற்காலியை காலால் உதறிவிட்டு கோபமாக வெளியில் சென்றான். 

 

 

 

 

  

 

   

 

 

 

 

 

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!