பிரியாதிரு 3
“என்னைப் பார்த்தா உங்களுக்கு பிராஸ்டிடீயூட் மாதிரி இருக்கா” என கோபம் கொப்பளிக்க கேட்டவளை தீயென முறைத்தவன்,
“நீ பாடுனதுக்கு பணம்..” என்றபடி அவளின் கையில் திணித்தவன், “என் கிட்ட எகுறணும்னு நீ உன்னை அசிங்கப்படுத்திக்காத” என்றான் இறுக்கமான குரலில்.
அவளுக்கு இருந்த ஆத்திரத்துக்கு இந்த செக்கும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம் என சென்றுருப்பாள்…
ஆனால் இது அவளின் திறமைக்காக கிடைத்த அங்கீகாரம் அல்லவா… கண்களில் கண்ணீருடன் அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவள் தளர்ந்த நடையுடன் வேளியேற, அவளை அவளுக்கே தெரியாமல் பின் தொடர்ந்த ஆத்மன் ரெட்டி அவள் ஹாஸ்டல் வரை சரியாக செல்கிறாளா என்பதை பார்த்துவிட்டு தான் திரும்பி சென்றான்…
ஹாஸ்டலுக்கு வந்தவள் குமுறி குமுறி அழ, அனன்யாவிடம் இருந்து கால் வந்தது…
“ரொம்ப பயமா இருக்கு அம்மு…” என மீண்டும் அனன்யா பதற, அமிர்தாவின் எண்ணவோட்டத்திலோ ஆத்மன் ரெட்டி..
‘என் கிட்ட அன்னுக்காக தான் மிரட்டி அப்படி பலவந்தம் படுத்துனான்.. ஆனா அன்னு க்கு இன்னும் பிரச்சனை முடியலையே’ என அவள் மனதிற்குள் குழம்பிக் கொண்டு இருக்க, அனன்யாவோ உடைந்தே விட்டாள்.
“என்னை ஜெயில்ல போட்டுடுவாங்களாம்… பேப்பர், நியூஸ்ல எல்லாம் வரும்ன்னு சொல்றாங்க டி” என அவள் அழ,
“ஐய்யோ! பாலா கிட்டயாவது சொல்லலாம் டி” என கரகரத்தாள் அமிர்தா… அக்காவின் அழுகை அவளுக்குத் தாளவில்லை.
“வேண்டாம் டி.. அவ வாழ்க்கையையே அத்தனை போராட்டம் கழிச்சு இப்போ தான் ஆரம்பிச்சு இருக்கா.. நான் விஜய் அண்ணா கிட்ட முழுசா கூட சொல்லல… சமர்த்தியா திட்டுனாரு… அப்புறம் என்ன சொல்றது… விட்டுட்டேன்” என்றாள் உணர்வற்று…
அமிர்தாவிற்கு நன்றாக தெரிந்தது அனன்யா இவ்வளவு கஷ்டப்படுவது ஆத்மன் ரெட்டியால் மட்டும் தான்..
ஆனால் அவன் மிரட்டி தன்னை அடைந்ததும் அனன்யாவின் பிரச்சனையை வைத்து மிரட்டி தானே.. அப்போதும் ஏன் அவன் அவளின் பிரச்சனையை சரி செய்யவில்லை என யோசித்தவளுக்கோ ஆத்மன் ரெட்டி மீது கொலைவெறியே வந்தது…
முதலில் அனன்யாவை சமாதானப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தவள்,
“அன்னு நான் சொல்றதைக் கேளு… நீ முதல்ல அழுகுறதை நிறுத்து… உன்னை அப்படியெல்லாம் நாங்க விட்டுடுவோமா என்ன… கவலைப்படாத… நான் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட உதவி கேட்குறேன். அப்புறம் உனக்கு கால் பண்றேன்” என கட் செய்தவள், ரொம்ப நேரமாக யோசித்து ஒரு முடிவு எடுத்தவளாக ஆத்மன் ரெட்டிக்கு கால் செய்தாள்.
அமிர்தாவிடம் இருந்து கால் வரும் என்று அவனுக்கு தெரியும்.. நக்கல் புன்னகையுடன் எடுத்தவனிடம், “ஹலோ” என தயங்கி ஆரம்பித்தாள் அமிர்தா. ஆத்மன் வேண்டும் என்றே, “ஹலோ… ஹூஸ் திஸ்? (hello.. Whose this?)” என்று கேட்டான்.
தன் குரல் அவனுக்கு தெரியாமல் நடிக்கிறானா இல்லை வேண்டும் என்றே இப்படி செய்கிறானா என அவளுக்கு குழப்பம் கலந்த கோபம்.
இவள் இங்கு இவ்வாறு சிந்தனையில் இருக்க, ஆத்மனோ கால்லை கட் செய்து விட்டான்.
“ஹலோ” என்று அவள் மீண்டும் ஒலிக்கும் போது தான் அவன் கால்லை அணைத்து விட்டதை உணர்ந்தாள்.
“அய்யோ ஏன் தான் இப்படி என்ன போட்டு படுத்துறான்” என மனம் நொந்தவள், அவனுக்கு மீண்டும் அடிக்க கால்லை எடுத்தவனோ, “ஹூ ஆர் யு? வாட் டூ யு வான்ட் (who are you? What do you want?”) என காட்டமாகவே கேட்டான்.
“நா.. நான் அமிர்தா! கொஞ்ச நேரம் முன்னாடி உங்க கிட்ட கெஞ்சி கதறிக்கிட்டு இருந்த குரல்.. அதுக்குள்ள உங்களுக்கு எப்படி மறந்துபோச்சு” என ஆதங்கமாக கேட்டவளின் கண்களில் அவளையும் மீறி கண்ணீர் அதன் விளைவு அவளின் குரல் சற்று கரகரத்தது.
“உன் குரலை என் மனசுக்குள்ள ஏத்திக்குற அளவுக்கு நீ எனக்கு முக்கியமானவள் இல்லை” என்று அவன் பட்டென்று சொல்ல, அமிர்தா எவ்வளவு முயன்றும் அவளால் தனக்குள் வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
இவனுக்காக ஏன் அழுகிறோம் என்றும் அவளுக்கு புரியவில்லை.. அந்த ஹோட்டலுக்கு செல்லும் வரை ஆத்மன் ரெட்டி என்கிற ஒருவன் அவள் சிந்தனையிலேயே இல்லையே..
இப்போதோ தன் கற்பை எடுத்தவனுக்கு தன் குரல் நினைவு வைக்கும் அளவுக்கு முக்கியம் இல்லை என்று சொன்னதும் அவளுக்கு அழுகை தான் வருகிறது..
அவளை நினைத்து அவளுக்கே புரியாத கடுப்பு தான்..
தன் கண்ணீர் அவனுக்கு தெரிந்து விடக் கூடாது என்று முனைப்பாய் இருந்தவள் அவசரமாக அவளின் கையில் இருந்த ஃபோனை மியூட்டில் போட்டு தன் கண்ணீரை தன் கைகள் கொண்டு அழுத்தி துடைத்த பின்னர் தான் அவள் போட்ட மியூட்டை எடுத்து விட்டவள்,
“அனன்யா விஷயம் அப்படியே தான் இருக்கு.. அதை வெச்சு தானே நீங்க என்னை” என்று அவள் சங்கடத்துடன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,
“அதை வெச்சு நான் மிரட்டினேன் தான்.. பட் அதுக்கு நீ ஒத்து வரலயே” என்றான் அலட்சியமாக.
“வாட்” என்று அமிர்தா அதிர,
“எஸ் ஐ மீன் இட் (S i mean it)” என அழுத்தமாக சொன்னவன்,
“நான் உன்னை கூப்பிட்டு நீ வந்து இருந்தால் உன் அக்காவை காப்பாத்தி இருந்து இருப்பேன் ஆனா நடந்ததே வேற.. சோ என் டைம் வேஸ்ட் பண்ணாம ஃபோனை கட் பண்ணு” என அலட்சியமாக சொன்னவன் கால்லை கட் செய்ய போக, அவனின் அடுத்த செய்கையை அமிர்தா யூகித்து இருக்க,
“பிளீஸ் பிளீஸ்.. ஃபோனை கட் பண்ணிடாதீங்க! கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க..” என்று அவள் கெஞ்ச கண்களை இறுக்க மூடியவன் தன் கையால் தலையை கோதியபடி, “என்ன சொல்லு?” என்றான்.
“அனன்யா” என்று அவள் ஆரம்பிக்க, “அப்போ என்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு போ” என்றான் பாருங்க..
மீண்டும்.. மீண்டுமா என்பது போல் விழி விரித்து அதிர்ச்சியாக நின்றாள் அமிர்தா.
அவளிடம் சத்தம் இல்லை என்பதை உணர்ந்தவன், “என் டைம்ம வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் சொல்லு.. வரியா இல்லயா” என அவன் கணீர் என்று கேட்க,
“வ.. வரேன்” என்று பதற்றமாக சொன்னவள், “உங்க அட்ரஸ்” என அதே பதற்றத்தோடு கேட்க,
“நான் வரேன்” என்று சொன்னவனோ அமிர்தாவின் பதிலுக்கு எல்லாம் காத்திருக்காமல் கால்லை துண்டித்து விட்டான்.
“இவன் ஹாஸ்டல் க்கு வந்தா என்ன ஆகுறது.. நான் என் ஃபிரண்ட்ஸ் கிட்டயும் வார்டன் கிட்டயும் என்ன சொல்லுவேன்” என அவள் பயந்து புலம்ப,
“என்ன ஆச்சு அமிர்தா.. நீ யார் கிட்ட பேசிட்டு இருந்த” என்று தெலுங்கில் அமிர்தாவிடம் கேட்டாள் அவளின் அறைத் தோழி.
“ஒண்ணும் இல்லை கொஞ்சம் தலைவலி” என சமாளித்தவளின் ஃபோன் அலறியது.
அடித்தது ஆத்மன் தான்..
“இப்போ என்ன சொல்ல போரானோ” என மனதில் புலம்பியபடி போனை எடுத்தவளிடம்,
“இன்னிக்கு வேண்டாம் நாளைக்கு ஈவினிங் அதே ஹோட்டல் அதே ரூம் நம்பர்க்கு வா” என அவன் கட்டளை இட,
ஒரு பக்கம் தற்காலிக நிம்மதி இருந்தாலும் இன்னொரு பக்கம் அவளின் அக்காவின் நிலை மனதில் நெருடலை ஏற்படுத்த, “அப்போ அனன்யா” என்று அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே,
“ஆத்மா” என உரிமையாக ஒரு பெண் அழைப்பது அவளின் காதில் விழுந்தது..
“சிந்து நீ கார்ல ஏறு.. ஐ வில் கம் (I will come)” என மறுப்பக்கம் அவளிடம் மென்மையாக பேசுவது அமிர்தாவின் காதில் விழுந்த நொடி அவளுள் ஏதோ ஒரு வெறுமையான உணர்வு!
ஆனால் ஆத்மனோ கால்லை கட் செய்து விட்டான்..
அவன் கட் செய்த பின்னர் தான் அவள் அதை உணரவும் செய்தாள்..
கண்களில் கண்ணீர் தன்னை மீறி வழிந்துக் கொண்டு இருந்தது.. தான் அடியோடு வெறுக்கும் ஒருவனை நினைத்து கண்ணீர் விடும் தன்னை நினைத்து அவளுக்கு புரியாத புதிர் தான்.
அன்று இரவு கண்களை மூடியவளுக்கு தூக்கம் வர மறுத்தது.
அவளையும் மீறி அவளின் எண்ணவோட்டம் இரண்டு வருடங்கள் முன்னர் நோக்கி சென்றது..
அனன்யா மற்றும் அமிர்தாவின் ஊர் ஊட்டி..
அனன்யா மற்றும் அமிர்தா இருவரும் வெவ்வேறு முகம் கொண்ட இரட்டையர்கள்.. சிறிய வயதிலேயே தாய் மற்றும் தந்தையை விபத்தில் இழந்து அவர்களின் பாட்டி தாத்தாவிடம் வளந்தார்கள்.
இரண்டு வருடங்கள் முன்னர் தான் இவர்களின் பாட்டி லட்சுமி, அவர் கணவர் அதாவது அமிர்தா மற்றும் அனன்யாவின் தாத்தா வேதாச்சாளம் மறைவிற்கு பின்னர் லட்சுமி பாட்டி இத்தனை வருடங்கள் பிரிந்து இருந்த அவர்களின் இரு மூத்த மகன்களின் குடும்பத்தோடு சேர்ந்தார்.
அதில் இருந்து தான் இருவருக்கும் இந்தரஜித்தை தெரியும்.. இவர்களுக்கு பெரியப்பா மகன் அண்ணன் முறை அவன்.. பாசத்தை காட்டவில்லை என்றாலும் அக்கறை என்ற ஒன்று அவனின் ஆழ் மனதில் இருந்தது..
இவர்களின் இன்னொரு பெரியப்பா மகனான அஜய்க்கு ஹைதராபாத்தில் ஒரு பெண்ணை பார்த்து இருந்தார்கள்.
“இன்னிக்கு உன்னையும் தான் பொண்ணு பாக்க வராங்க அமிர்தா…” என்று இவர்களின் அண்ணன் இந்திரஜித் சொல்ல, அமிர்தா மற்றும் அனன்யா இரு பெண்களும் பேர் அதிர்ச்சி அடைந்தார்கள்.
“என்ன டி இது?” என்று அமிர்தா அன்னயாவிடம் புரியாமல் கேட்க,
“பேசிக்கலாம்… இப்போ அமைதியா சாப்பிடு… அஜய் அண்ணா வேற இங்க இருக்காரு அதனால ரியாக்ட் பண்ணாத” என்று தங்கையை அடக்கினாள் அனன்யா.
சாப்பிட்டு முடித்தவுடன் பாட்டி அறைக்கு சென்றார்கள் அனன்யா மற்றும் அமிர்தா.
“பாட்டி! என்ன நடக்குது இங்க?” என்று கண்களில் கண்ணீர் சூழ, அவரின் கால் மாட்டில் அமர்ந்தாள் அமிர்தா.
“உன் அண்ணன் உனக்கு இராஜகுமாரன் மாதிரி மாப்பிள்ளை பார்த்து இருக்கான்… அவனை கட்டிக்கோ அம்மு” என்று பாட்டி பேத்தியிடம் பாசத்துடன் சொல்ல,
“அப்படி பார்த்தா இவ தானே எனக்கு முன்னாடி பிறந்தா… இவளை தானே முதல்ல கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்று அனன்யாவை குறிப்பிட்டாள் அமிர்தா.
“அடிப்பாவி… உனக்கு உதவ தானே டி வந்தேன்… எனக்கே ஆப்பு வைக்குற” என்று அமிர்தாவின் காதில் கடிந்த அனன்யா,
“ஒன்னு நம்ம இந்த வீட்டை விட்டு போகணும் இல்லைன்னா இந்த வீட்டுல எங்க பேச்சுக்கு மதிப்பு கொடுக்கணும்…” என்று முடித்தாள்.
“அழாத அமிர்தா… இன்னைக்கு சாயந்தரம் மாப்பிள்ளை வருவாரு… முதல்ல நீ அவரை உனக்கு பிடிக்கும்” என்று பாட்டி சொல்ல,
தங்கையை வேகமாக அழைத்துச் சென்றாள் அனன்யா.
“எனக்கும் பாட்டி சொல்றது தான் சரின்னு தோணுது அம்மு… நீ முதல்ல மாப்பிள்ளையை பாரு. மே பி உனக்கு பிடிக்கலாம் தானே! உன்னை புரிஞ்சிக்குற குணமா இருக்கலாம்” என்று தேற்றினாள்.
“பேசாம சர்வாவையே கல்யாணம் பண்ணிக்கவா” என்று கலங்கிய விழிகளுடன் தன் அக்காவை பார்த்தாள் அமிர்தா.
பள்ளி படித்துக் கொண்டு இருந்த காலத்தில் இருந்தே சர்வா அமிர்தாவின் நெருங்கிய நண்பன். அமிர்தாவை ஒரு தலையாக காதலிக்குறான். ஆனால் இந்நாள் வரை அமிர்தாவுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை.ஆனால் இன்று ஏனோ தெரியாத எவனோ ஒருவனை நம்ப தன்னை உயிராய் நேசிக்கும் சர்வாவை திருமணம் செய்யலாமா என் அவளுக்குள் ஒரு யோசனை.. இப்போதும் இது காதல் எல்லாம் இல்லை.
“ஏன் அம்மு லூசா ஆயிட்டியா நீ! சர்வாவை பிரண்ட்டா மட்டும் தான் பிடிக்கும் லவ் இல்லைன்னு சொன்ன” என்று எகிறினாள் அனன்யா.
“இப்போயும் அதே தான் சொல்றேன் அன்னு… என்னமோ மனசு மனசு படபடன்னு வருது இன்னைக்கு சாயந்தரத்தை நினைச்சா! சர்வா என்னை நல்லா பார்த்துப்பான்ல” என்று குழந்தை போல் மருகினாள் அமிர்தா.
“சர்வா நல்லவன் தான் அதுக்காக காதலிக்காம அவனை கல்யாணம் பண்ணி வாழப் போற ஒரு வாழ்க்கையில நிம்மதிய இழந்திடாத… ஈவ்னிங் அவர் உன்னை பார்த்துட்டு போன அப்புறம் எதுனாலும் பேசிக்கலாம்” என்று அமிர்தாவை ஆறுதல் படுத்தினாள் அனன்யா.
அதன் பின்னர் அமிர்தாவும் வேறு வழியின்றி அமைதி காத்தாள்! அவளுக்கு இதில் முழு ஈடுபாடு இல்லை தான் ஆனாலும் வேறு வழி இல்லையே.
இப்போது எல்லாம் எல்லாவற்றையும் உடனே உடனே சாருபாலாவிடம் சகோதரிகள் சொல்லவில்லை…
சாருபால, அமிர்தா மற்றும் அனன்யாவின் உயிர் தோழி.. விவரம் தெரிந்ததில் இருந்து மூவரும் அவ்வளவு நெருக்கம்.. அமிர்தா மற்றும் அனன்யா வின் அன்னையின் அண்ணன் மகள் தான் சாருபாலா..
சில சந்தர்ப்ப சூழ்நிலையால் சாருபாலா இவர்கள் வீட்டில் தங்கி இருந்து தான் படித்தாள்.
அமிர்தா மற்றும் அனன்யா இங்கே கோயம்புத்தூரில் இருக்கும் இந்தரஜித் வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட இருபது நாட்கள் ஆகிவிட்டது… இன்னும் சாருபாலாவிற்கு தெரியாது… அவளும் இப்போது கோயம்புத்தூரில் தான் வசிக்கிறாள். ஒருபக்கம் சாருபாலா டாக்டர் ஆகி பிஸியாகி இருந்தாலும் இன்னொரு பக்கம் தோழி முன்னைப் போல் தங்களுடன் நேரம் செலவழிப்பது இல்லை என்றே அவர்கள் இருவருக்கும் கோபம் கலந்த ஆதங்கம்.
அதனால் அவளிடம் சொல்ல இருவரும் அப்போதைக்கு முனையவில்லை.
அன்று அமிர்தாவை பெண் பார்க்க வந்து இருந்தார்கள்..
வீட்டில் அனைவரும் இருந்தனர்… அன்று வார இறுதியும் இல்லை…
அமிர்தா மற்றும் அனன்யா எப்போதும் போல் தங்களுக்கென்ன என்று அந்த வீட்டில் இருந்தார்கள்…
சோனியா மற்றும் வரலட்சமி இந்திரஜித் இல்லாத சமயங்களில் தான் மட்டம் தட்டுவார்கள்…
வேதாந்த் இந்திரஜித்திற்கு அமிர்தா மற்றும் அனன்யாவை பிடிக்காது தான்… ஆனால் பாட்டிக்காக அவர்களின் பொறுப்பை ஏற்றுக் கொண்டமையால் அவர்களை மட்டம் தட்ட மாட்டான்…
தன் அன்னை மற்றும் சோனியா அவ்வாறு செய்தால் அதை ஆதரிக்கவும் மாட்டான்.
அதனால் தான் அவன் இல்லாத போது அவர்களின் ஆட்டம் தொடர்கிறது.
அன்று மாலை பார்லரில் இருந்து வந்தவர்கள் அமிர்தாவை தயார் செய்து கொண்டு இருந்தார்கள்… அமிர்தாவின் மனதில் அத்தனை கலவரம்… மாப்பிள்ளை யின் பெயர் ஆத்மன் ரெட்டி என்று அமிர்தாவிற்கு தெரியும் தான். ஆனாலும் அவனின் முகத்தைப் பார்க்க அவளுக்கு விருப்பம் இல்லை.
இங்கே சுந்தரத்தின் வீட்டில் பணம் படைத்தவர்களாக இருந்தால் போதும்… ஜாதி, மதம், மொழி இப்படி எதையும் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.
அதனால் தான் ஆத்மன் ரெட்டி அமிர்தாவை பெண் கேட்டவுடன் சுந்தரம் வேதாந்த்திடம் சொன்னார்.
அதே போல ஆத்மனின் தங்கையையும் அஜய்க்கு கேட்கலாமா என்று வேதாந்த்திடம் கேட்டார் சுந்தரம். அஜய் மற்றும் விஜய் அமிர்தாவின் இன்னொரு பெரியப்பாவின் மகன்கள்.அவர்களும் வெவ்வேறு முகம் கொண்ட இரட்டையர்கள் தான்..
வேதாந்த் இந்திரஜித் உடனே எல்லாம் இந்த சம்மந்தத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆத்மனை தன் ஆபிஸிற்கு வரவழைத்து அவனை நேரில் பார்த்து, ஆராய்ந்த பின்னர் தான் சம்மதித்தான். அப்படியே ஸ்வாதிக்கும் அஜய்யை கேட்டான் வேதாந்த். ஸ்வாதிக்கும் அஜய்யை ஃபோட்டோவில் பிடித்து விட்டது. அஜய்க்கும் அவளை பிடித்துவிட்டது…
அன்று அவர்கள் தெலுங்கானாவில் இருந்து பார்க்க வருகிறார்கள். கோயம்புத்தூரில் அவர்களுக்காக தங்களின் கெஸ்ட் ஹவுஸை ஏற்பாடு செய்து இருந்தான் இந்திரஜித்.
அமிர்தாவிற்காக இத்தனை வருடங்களில் தமிழ் கற்றுக் கொண்டுருந்தான் ஆத்மன் ரெட்டி….
ஆம்.. பார்த்த இரண்டாம் பார்வையிலேயே அமிர்தாவை காதலித்து விட்டான் ஆத்மன் ரெட்டி.. அது ஒரு பெரிய கதை..
அனன்யா, அமிர்தா மற்றும் சாருபாலா பத்தாவது முடித்த பின் விடுமுறையில் தாத்தா பாட்டி மற்றும் அவர்கள் வீட்டு மேனேஜர் மணியுடன் பெங்களூருக்கு சுற்றுலா சென்றார்கள்.
அவர்கள் தங்கியிருந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் மேலே இருந்த ரூஃப் டாப்பிற்கு பெண்கள் மூவரும் மேனேஜர் மணியுடன் மேலே செல்ல, அங்கு ஒரு தெலுங்கு படம் ஸூட்டிங் நடந்து கொண்டு இருந்தது.
அப்போது தான் இவளை முதல் முறையாக பார்த்தான் ஆத்மன் ரெட்டி.. ஆத்மன் ரெட்டி, ராஜேஷ் ரெட்டியின் மகன்.. ஆத்மன் ரெட்டியின் அன்னை அவன் பிறந்து சில வருடங்களில் இறந்து விட, தன் அக்காவின் மகனுக்காக தன் அக்கா கணவனை திருமணம் செய்தாள்.
தன் அக்காவின் மகனை தன் சொந்த மகன் போலவே வளர்த்தாள் கவிதா.. அவருக்கும் ராஜேஷ்க்கும் ஸ்வாதி என்று ஒரு மகள் பிறக்க, கவிதா மற்றும் ஸ்வாதியின் மீது உயிரையே வைத்து இருக்கிறான் ஆத்மன் ரெட்டி.
அமிர்தாவை முதல் முதலில் பார்க்கும் போது அவளுக்கு பதினைந்து வயது, அவனுக்கு பதினேழு வயது தான்..
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி விடுமுறையில் இருந்த சமயம் அவனுக்கு.. தன் தந்தையுடைய படத்துக்கு அசிஸ்டண்ட் டைரக்டராக பணியாற்ற வந்து இருக்கிறான்..
எந்த ஒரு இடத்திலும் தான் இயக்குரனின் மகன் என்கிற திமிரு, அலட்சியம் இல்லாமல் உழைத்தான் ஆத்மன் ரெட்டி.
அது ஒரு ஷாட்.. அதில் அங்கு இருந்த ஹீரோ அப்படத்தின் ஹீரோயினை ரசித்து பார்க்க, அதை கவனமாக பார்த்து கொண்டு இருந்த ஆத்மன் ரெட்டியோ, எதேர்ச்சையாக வலப் பக்கம் திரும்பி பார்த்தா…
பஞ்சு மிட்டாய் நிறத்தில் ஒரு சல்வர் அணிந்து இருந்த அந்த இளமங்கை, தன் கையில் இருந்த பஞ்சு மிட்டாயை சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.. தன்னையும் மீறி அந்த பதினைந்து வயது அமிர்தாவை ரசித்தான் ஆத்மன் ரெட்டி..
அமிர்தாவை விட அவன் எத்தனையோ அழகான பெண்ணை அவன் பார்த்து இருக்கிறான் தான்.. ஆனால் என்னவோ அவள் அவன் பார்த்து இருந்த அணைத்து பெண்களை விட சற்று விசித்திரமாக இருந்தாள்.
கண்களுக்கு மூக்கு கண்ணாடி அணிந்து இருந்தாள்.. அது அவளின் கண்களை மேலும் கவர்ச்சியாக காட்டியது..
கண்ட முதல் பார்வையிலேயே.. இவள் தான் எனக்கானவள் என்கிற எண்ணம் ஆத்மனுக்கு இல்லை..
அவன் அவளை இரண்டாவது முறை கண்டு இருந்த போது தான் அவனுக்கு அவள் தான் அவனுடைய சரி பாதி என்று தோன்றியது..
அவனுடைய தந்தை ஒரு கதை எழுதி தர சொல்லி இருக்க, அதற்காக ஊட்டி சென்றான்..
அங்கு தான் மலர்கள் தோட்டத்தின் நடுவே அவன் அமிர்தாவை கண்டான்.. அவளுடன் அப்போது சர்வாவும் இருந்தான்.
அவளை அப்போது கண்ட நொடி அந்த மலர்களுக்கு நடுவில் மலராய் மின்னிய அவள் தான் தன்னவள் என்று முடிவு செய்தவன் அவளுக்கே தெரியாமல் அவளை புகைப்படம் எடுத்துக் கொண்டான்…
அதன் பின்னர் அவளை அவளுக்கே தெரியாமல் தொடர ஆரம்பித்தான்.. தான் ஒரு நிலைக்கும், அவளின் படிப்பும் பாதிப்பு அடைய கூடாது என்று தீர்மானமாக இருந்தவன்.. இத்தனை நாள் காத்திருந்தா…
வேதாந்த் இந்திரஜித் அமிர்தாவின் வாழ்க்கைக்குள் வரவில்லை என்றால் இந்நேரம் அவனின் காதலை அவளிடம் சொல்லி திருமணம் வரை சென்றுருப்பான்…
ஆத்மனின் வீட்டில் அனைவரும் வரலட்சுமி விலாஸ் வந்திருக்க, இரு வீட்டு பெரியவர்களும் சந்தோஷமாக கலந்து பேசினார்கள்…
ராஜேஷ் ரெட்டிக்கும் தமிழ் நன்கு தெரியும்… கவிதா மற்றும் ஸ்வாதிக்கு தான் தமிழ் தெரியாது…
அஜய்யை பிடித்துவிட்டதால் மொழி பிரச்சனையை பார்த்துக்கொள்ளலாம் என இப்போது பட்டுச்சேலையில் அழகாக ஒப்பனை இட்டு முகத்தில் நாணத்துடன் அமர்ந்திருந்தாள் பெண்…
அஜய்யும் ஸ்வாதியை தான் வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டுருந்தான்… இவள் தான் தன்னுடைய வருங்காலம் என அவனின் மனதில் ஆணித்தனமாக பதிந்து விட்டது…
இந்திரஜித் ஆத்மனிடம் பொதுப்படையாக பேசிக்கொண்டுருக்க ஆத்மனுக்கு தான், ‘அவளை எப்போ தான் கண்ணுல காட்டுவாங்க’ என மனம் அவளுக்காக துடித்துக் கொண்டுருந்தது…
அவனின் தவிப்பை புரிந்து கொண்ட பாட்டியோ, “அமிர்தாவை வரச் சொல்லு சோனியாமா” என சொல்ல, தலை விதியே என அழைக்க சென்றாள் சோனியா…
அதற்குள் இங்கே, “மாப்பிள்ளையும் பொண்ணும் தனியா பேசிட்டு வாங்க” என சுந்தரம் சொல்ல, ஆர்வத்தில் உடனே எழுந்து விட்டான் அஜய்… அதில் அனைவருக்கும் அதிர்ச்சி…
விஜய்யோ, ‘மானத்தை வாங்குறானே’ என அஜய்யை விசித்திரமாக பார்த்துக் கொண்டு இருந்தான்..
“அலையாத டா.. உனக்குனு ஒரு கெத்து வெச்சு இரு” என அவனுக்கு மட்டும் கேட்பது போல சொன்னான் விஜய்.
“எங்களுக்கு எந்த கெத்தும் வேணாம்.. நான் இப்படியே இருந்துக்குறேன்” என கண்களை சிமிட்டிய அஜய் தன் அண்ணனின் பார்வை தன்னை நோக்கி பாய்வதை எண்ணி அவசரமாக தலை குணிந்தான்.
தன் தம்பியை கூர்மையாக பார்த்த இந்திரஜித் அனைவரிடமும் பொதுப்படையாக, “உங்க பொண்ணுக்கு ஓகேன்னா பேசட்டும்” என ராஜேஷ் ரெட்டியிடம் விருப்பத்தை நேரடியாக கேட்காது மறைமுகமாக தெரிவித்தான்…
“சரி நானா” என தன் தந்தையை பார்த்து வெட்கம் மிளிர சொன்னாள் ஸ்வாதி…
‘இவளுக்கு தமிழ் தெரியாது… மாப்பிள்ளைக்கு தெலுங்கு தெரியாது… எப்படி தான் பேசுவாங்களோ’ என ஆத்மன் யோசித்துக் கொண்டுருக்க, அமிர்தாவை அழைத்துக் கொண்டு வந்தார்கள் சோனியா மற்றும் அனன்யா…
Join Whatsapp Channel (Group) to get quick updates –> Click Here

