Author name: Anu Jey

anujey

பிரியாதிரு 26

அவனின் குரலில் இருந்த கம்பீரம் அவளுக்கு வசீகரம் தாண்டிய பயத்தைக் கொடுக்க அவனுக்கு பதில் கொடுக்க முடியாமல் விழித்தாள் சோனியா.    அவள் விழிப்பதை புருவம் உயர்த்தி பார்த்தவன், “இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கணு கேட்டேன்” என்றான் அதட்டலாக.    “தூ.. தூக்கம் வரல சார்” என திக்கித் திணறி சொன்னவளுக்கோ மனதில் ஒரு அழுத்தம்.. ஒருவேளை விக்னேஷ் தன்னை தவறாக நினைத்து விட்டானோ என அவளின் மனது குமுறியது..    அவளின் கண்களில் தெரிந்த […]

பிரியாதிரு 26 Read More »

பிரியாதிரு 25

அமிர்தா கண் விழிக்கும் போது அவளுடன் இருந்தது கவிதா, ஸ்வாதி மற்றும் அஜய்   ஆம், தன் தங்கையைப் பார்க்க அஜய் வந்துருக்க, ஸ்வாதிக்கும் அதே ஆர்வம்…    அவர்கள் வரும் பொழுது இங்கே அமிர்தா இல்லை..    ராஜேஷ் ரெட்டிக்கு ஏற்கனவே காலையில் இருந்து ஏகப்பட்ட கால்கள்..    “ஆத்மன் ஏன் ஆடியோ லான்ச்சை ரெண்டு நாள் கழிச்சு தள்ளி வைச்சிருக்கார்” என வரிசையாக கால்கள் வந்தன.    ஒரு சில பத்திரிக்கைகளிலோ, “ஆத்மனுக்கும் சிந்துஜா

பிரியாதிரு 25 Read More »

பிரியாதிரு 24

அவள் இதனை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை…    சட்டென தன்னிலை மீண்டவள் அந்த அறையை விட்டு ஓட எத்தனிக்க அவளை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்த ஜீவனோ,    “இப்படி உன்னை சுலபமா விட்டுறதுக்காக இத்தனை வருஷம் உன்னை அடைய வெறியா இருந்தேன்… சும்மா சொல்லக் கூடாது! உன் பாட்டை விட நீ ஆளு செமயா இருக்க. நீ சிங்கிங் காம்படீஷன்ல வின் பண்ணும் போதே உன்னை அடையணும்னு முடிவு பண்ணிட்டேன்…”   “அத் த சேம்

பிரியாதிரு 24 Read More »

பிரியாதிரு 23

பிரியாதிரு 23   அங்கு நிறைய மெஹந்தி கோன்களை வைத்து தான் இருந்தாள் சோனியா.. அதை ஆள் வைத்து எடுத்து திருடிவிட்டு வேண்டும் என்றே பிரச்சனையை கிளப்புகிறாள் ப்ரீத்தா.    ஏற்கனவே சோனியா அங்கு இல்லாததால் குழப்பத்தில் இருந்த விக்னேஷ் இப்போது ப்ரீத்தா இப்படி கத்துகையில் எரிச்சலாக இருந்தது..    “மெஹந்தி கோன்க்கு ஏன் இப்படி சீன் கிரியேட் பண்ற ப்ரீத்தா.. இன்னிக்கு ஹால்டி ஃன்ஷன் தான் மெஹந்தி இல்ல” என கடுப்பான த்தொனியில் கேட்டான் விக்னேஷ். 

பிரியாதிரு 23 Read More »

பிரியாதிரு 22

ஆத்மனின் அறைக்குள் வரவே அமிர்தாவிற்கு கடுப்பாக இருந்தது..   இதோ சர்வாவைப் பார்த்துவிட்டு வந்து விட்டாள்.    ராஜேஷ் மற்றும் கவிதா அமிர்தாவை எதுவும் கேட்கவில்லை…    யாரிடமும் எதுவும் பேசவில்லை அமிர்தா.. வந்ததில் இருந்து சாப்பிடவும் இல்லை…    மனமெங்கும் வெங்கட் மற்றும் சர்வா சொன்னது தான் அவளுக்கு நியாபகத்தில் வந்தது…    “அழாதீங்க அமிர்தா… உங்களுக்கு நல்ல வாய்ப்பு வந்துருக்கு! நாளைக்கு சாயந்தரம் மூனு மணிக்கு நான் சொல்ற ஸ்டுடியோக்கு வாங்க… தெலுங்கு, தமிழ்

பிரியாதிரு 22 Read More »

பிரியாதிரு 21

அமிர்தா இறங்கியது என்னவோ ஒரு உயர் தர உணவகத்தில் தான்..    அமிர்தா இறங்கி சென்றதுமே டிரைவருக்கு ராஜேஷ் ரெட்டியிடம் இருந்து கால் வந்தது..    “சார்” என்று அவன் சொல்ல,    “அமிர்தா இப்போ எங்கே இறங்குனா?” என யோசனையாக கேட்டார்.    “இங்க கோதாவரி ரெஸ்டாரென்ட்ல சார்” என்றான் பவ்வியமாக.    “அவ சேஃபா தானே இருக்கா… அவளை நல்லா பாத்துக்கோ” என்று வைத்து விட்டார்.    மருமகள் மீது அவருக்கு சந்தேகம் இல்லை..

பிரியாதிரு 21 Read More »

பிரியாதிரு 20

இத்தனை நேரம் ப்ரீத்தாவை கண்டுக் கொள்ளாத விக்னேஷ் சோனியா பார்ப்பதை உணர்ந்து வேண்டும் என்றே ப்ரீத்தாவிடம் புன்னகை முகமாய் பேசினான்.    ப்ரீத்தாவிற்கோ அத்தனை ஆனந்தம்.. இத்தனை நேரம் தன்னை கண்டுகொள்ளாத விக்னேஷ் இப்போது புன்னகை முகமாய் பேசுகிறான் அல்லவா!   இப்போதும் கூட சோனியா விக்னேஷை உயிருக்கு உயிராக காதலிக்கிறாள். விக்னேஷூம் அப்படி தானே அவளை காதலித்தான்.  சோனியா அவனுக்கு செய்த பொய்கள், பிழைகள் இதை எல்லாம் அவன் மன்னிக்க தயாராக இல்லை. அதிலும் தன்

பிரியாதிரு 20 Read More »

பிரியாதிரு 19

அன்று இரவாகி இருந்தது..    ஆத்மனின் அறையில் அமர்ந்து இருந்த அமிர்தாவோ சற்று நேரம் முன்னர் தான் அவளின் அக்கா அனன்யாவிடம் பேசி வைத்தாள்.    கவிதா கொடுத்த உடையை தான் அணிந்து இருந்தாள்..    இரவு பத்து இருக்கும்… ஆத்மன் இன்னும் வந்தபாடில்லை.    ‘அவன் வருவானா மாட்டானா… எங்க போனான்!’ என்கிற யோசனையில் அவள் மனம் உழன்றுக் கொண்டு இருக்கும் போதே,    “அமிர்தா” என்றழைத்தபடி உள்ளே வந்தார் கவிதா.    “சொ.. சொல்லுங்க

பிரியாதிரு 19 Read More »

பிரியாதிரு 18

தன்னை வெளியேற சொல்லி விக்னேஷின் வருங்கால மாமனார் வீட்டில் கேட்டதில் இருந்தே சோனியாவிற்கு மனது சரியில்லை.    ஒருவேளை விக்னேஷின் வேலை தானா இது என்று அவளுள் படர்ந்த கவலை அது!    அவனை மறந்து விட்டோம் என்று ஒரு மாயவலையை அவளே பின்னி இருக்க அவளின் இதழ் தீண்டி அப்படி ஒரு வலையே நீ பின்னவில்லை என்று நிருபித்த கையோடு அவளை வார்த்தைகளால் வதைத்து மனதளவில் சாகடிக்கிறான் அல்லவா!    இதோ இப்போது இந்நொடி கிளம்பி

பிரியாதிரு 18 Read More »

பிரியாதிரு 17

“அமிர்தா.. உன் அண்ணி உன் கிட்ட பேசணுமாம்” என புன்னகைத்தபடி தன்னவளிடம் ஃபோனை கொடுத்தான் இந்திரஜித்.    “ஏய் அம்மு” என பாசமாக ஆரம்பித்த சாருபாலா அமிர்தாவின் திடீர் திருமணத்தைப் பற்றி கேட்கவில்லை…    அவளுக்கு அனன்யா மூலம் தெரிந்தது.. அமிர்தாவின் நலன் மட்டுமே அவளின் கருத்தில் பட, திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்று பொய் சொன்னாள் அமிர்தா.    ஆத்மனை யாரிடமும் அவளால் விட்டுக்கொடுக்க முடியவில்லை.. மஞ்சள் கயிறு மகிமை அவளுள் தொடங்கிவிட்டது போல.. 

பிரியாதிரு 17 Read More »

error: Content copy warning!!