அத்தியாயம் 48
மூன்று தனி அறைகளைக் கொண்ட திவாகரின் வீட்டில், யமுனா மற்றும் ஆராதனா ஒரு அறையிலும், சேகர் மற்றும் விஜயலட்சுமி இன்னொரு அறையிலும், திவாகர் மற்றும் பிரியா இன்னொரு அறையிலும் இருந்தனர். தேவைக்கு மட்டுமே பிரியாவிடம் பேசிய திவாகரை, இரவு எப்படியாவது, திவாகரிடம் தஞ்சம் புகுந்தாவது அவன் மனநிலையை மாற்றலாம் என்று நினைத்தாள். அப்படித் தான் இரவு பத்து மணியளவில் அனைவரின் அறையிலும் விளக்கு அணைந்த பின், திவாகர் மட்டும் தன்னுடைய லாப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான். […]
