அத்தியாயம் 40

வம்சி சிஇஓ என்பதால் அவனை முக்கால்வாசி பேர் நேரில் கண்டிருக்க வாய்ப்பில்லை. அவனுடைய அறைக்குச் செல்ல அவனுக்கு என்று தனி லிஃப்ட் இருக்கிறது. அதில் அவன் மட்டுமே செல்வதற்கு உரிமை. அதுவும் கட்டிடத்தின் பின்னே இருப்பதால் அவனை யாரும் பார்க்க முடியாது.

 

வம்சி நுழைந்தவுடன் எதேச்சையாக திரும்பிய அந்த டீமில் இருக்கும் விக்னேஷ், “சிஇஓ வா?” என்று வாயைப் பிளந்து டக்கென்று அவன் டீமில் இருக்கும் ரவியின் கையில் இருக்கும் ஃபோனை பிடுங்கி ஆஃப் செய்து விட்டான். 

 

வேண்டா வெறுப்பாய் ஆடிக்கொண்டிருந்த ராதை பாட்டு நின்ற உடனே நிம்மதி என்று ஆடுவதை நிறுத்தியவள் அனைவரும் ஏன் பேயறைந்த மாதிரி இருக்கிறார்கள் என்று பார்த்தாள். 

 

ஹாலின் கதவின் பக்கத்தில் நின்று கையைக் கட்டிக்கொண்டு அனைவரையும் ஒரு கேள்வி பார்வை பார்த்துக் கொண்டிருந்த வம்சியைக் கண்டு ராதைக்குத் தலையே சுற்றியது. அஜய்க்கு வேறு நடுங்க ஆரம்பித்தது.

 

“ஏன் பாட்டை நிறுத்திட்டீங்க?” என்று பொதுப்படையாக அனைவரிடமும் கேட்ட வம்சியிடம், “சார் அது வந்து… இன்னிக்கு ஃபன் அட் வொர்க், அதான் சாரி சார்” என்று ஒவ்வொருவராக சாரி கேட்டனர். 

 

“ஹே யூ, பிளே த சாங்க்” என்று ரவியைக் கை காட்டினான் வம்சி. 

 

‘ஐய்யயோ சாங்க் பிளே பண்ண ஒரே ரீசன்க்காக எனக்கு ஆப்பு வெச்சிட்டாரே’ என்று யோசித்தவனிடம், “ஐ செட் பிளே த சாங்” என்று இம்முறை கத்திக் கூறிய வம்சி, “தட் சேம் சாங்” என்று அழுத்தமாகக் கூறினான்.

 

 

“நீயே

முதல் வெட்கம் தந்த நீயே

மனபக்கம் வந்த நீயே

காதல் ஆனதே

நீயே நீயே…. 

 

இரவும் பகலும் நீதானே

கடலும் அலையும் நுரையும் நீதானே

உடலும் உயிரும் நீயே

எங்கும் எதிலும் நீயே

எதிலும் அதிலும் நீயே…”

 

பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே தன் கம்பீர நடையோடு அனைவரையும் தாண்டி ராதையை நோக்கி வந்தான் வம்சி. 

 

தன் அழகிய மீன் போன்ற விழிகளை அதிர்ச்சியில் விரித்துக் கொண்டிருந்தவளின் கையைப் பற்றி, அவளின் இடையைத் தனது இடது கையால் பற்றி இறுக்கி அவளைத் தன்னோடு சேர்த்து ஆட ஆரம்பித்தான். 

 

அவன் செய்கையில் திகைத்த அனைவரும் வாயடைத்துப் போயினர். ராதைக்கு ஒன்றுமே புரியவில்லை. அவனின் கண்களை, தொடுகையை அவள் பக்கத்தில் எதிர்கொள்ளும் உணரும் முதல் தருணம் இது! அவன் கண்களில் தெரிந்த காதல் இவளைப் பாதித்தது. 

 

முதலில் அனைவரும் தங்களைப் பார்க்கிறார்கள் என்று மனதில் வருந்திய ராதை பின் அவனுடைய தீண்டல் தரும் இதத்தில், அவனுடைய காதல் பார்வையில் அங்கு சூழ்ந்து இருக்கும் அனைவரையும் மறந்து அந்த பாட்டின் உள்ளே அவனுடன் பயணித்தாள். 

 

‘இவன் எதுக்கு என் கழுத்துல தாலி கட்டுனான்? இவன் என்னை கண்டிப்பாக பழிவாங்க நினைக்கல. இவனுக்குள்ள என்னைப் பத்தி ஏதோ ஒன்னு இருக்கு. அது என்னனு எனக்கு தெரியவும் இல்லை. புரியவும் இல்லை’ என்று தனது மண்டைக்குள் குழம்பியபடியே வம்சியுடன் ஆடியவள், அந்த பாட்டு முடிந்து விட்டது என்பதை உணர்ந்து தன் சுய நினைவுக்கு வந்தாள். அப்போது தான் வம்சி அவளை விடுவித்தான். 

 

“சோ கைய்ஸ், ஷி இஸ் மை வைஃப் மிஸஸ் கோமகள் ராதை வம்சி வேதந்த் கிருஷ்ணா… டெபுடி சிஇஒ ஆஃப் வி2கே சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ்” என்று அவளின் தோள்களை அணைத்தபடி அவன் கூறி முடிக்கும் போது அனைவரும் திகைத்தனர். ராதையோ குனிந்த தலையை நிமிரவே இல்லை. 

 

“நீங்க எல்லாரும் இப்போ உங்களோட வொர்க் பிளேஸூக்கு போய் உங்க வேலையைப் பார்க்கலாம்” என்று தன் பாக்கெட்டில் இரு கைகளை வைத்துக்கொண்டு சொன்னான். எல்லாரும் அமைதியாக நகரும் போதே ராதையும் தலை நிமிராமல் நகர முற்பட்ட போது, அவளின் கையைப் பற்றி அவளை நகர விடாமல் தடுத்தான் வம்சி. 

 

அனைவரும் சென்ற பின் அவனும் அவளும் மட்டுமே அந்த பெரிய கான்பரன்ஸ் ஹாலில் இருந்தனர். பூட்டப்பட்ட கதவைப் பார்த்து இன்னும் திகைத்தவள் மறுபடியும் குனிந்தாள். 

 

“ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான் உனக்கு.. நெத்தியில குங்குமம் இல்லை. தாலியை ஒளிச்சு வெச்சிருக்க. உனக்கு எவ்வளவு திமிர் டி?” என்றபடி அவளை அடிக்க கை ஓங்கியவன், அவள் கண்கள் தன்னை எதிர்கொண்ட விதத்தில் அங்கு பக்கத்தில் இருந்த வைட் போர்ட்டில் தன் கையைப் பலமாக குத்தினான். 

 

“ஐ அம் சாரி… எல்லாரும் ஆட சொல்லி ஃபோர்ஸ் பண்ணாங்க… அப்புறம் எனக்கு குங்குமம் வெச்சு பழக்கம் இல்லை, இனி வைக்குறேன்” என்று நிதானமாக கூறி முடித்தவளை ஒரு பார்வை பார்த்தவன், 

 

“இனி நீ என் கேபின்ல தான் இருக்கணும்” என்றபடி அவள் பக்கத்தில் வந்தவன் அங்கு டேபிளில் இருந்த சிவப்பு வண்ண மார்க்கரை தன் விரலில் நன்றாக தேய்த்து, ராதைக்கு குங்குமம் போல் வைத்துவிட்டுச் சென்றான். அவன் சென்ற பின் ராதை தான் நகர முடியாமல் அதே இடத்தில் திகைத்து நின்றாள். 

 

‘நான் ஏன் இவர் என்னை தப்பா நினைக்கக் கூடாதுனு எக்ஸ்பிளநேஷன் கொடுத்தேன்? எனக்குள்ள என்ன நடக்குது?’ என்று அங்கேயே நின்றுக் கொண்டிருந்தவளுக்குத் தலை வலிக்க ஆரம்பித்தது.

 

தன் இடத்தில் வந்து அமர்ந்த வம்சியின் முகத்தில் மென் முறுவல் மலர்ந்தது. ‘என்னைப் பிடிக்கலைனா என்கூட ஏன்டி ஆடுன? உன்கிட்ட நான் எந்த ஒரு எதிர்ப்பையும் பார்க்கலயே. நான் உன்னை தப்பா நினைச்சா நீ ஏன் உன்னை நிருபிக்க பேசின? இனி குங்குமம் வைக்கிறேன்னா அப்போ உன் மனசுல நான் வந்துட்டேனா?’ என கேள்வியாக வம்சி யோசித்துக் கொண்டுருக்கும் போதே அவனுடைய லான்ட்லைன் நம்பருக்கு கால் வந்தது.

 

“அட்மின்ல இருந்து பேசுறோம் சார், உங்களைப் பார்க்க வனிதா ன்ற ஒரு பொண்ணு வந்திருக்காங்க. உங்களைப் பார்க்க முடியாதுனு நாங்க சொன்னாலும், ராதை பாட்டி இறந்ததை அவ கிட்ட சொல்லணும்னு அழுதுட்டே இருக்காங்க… வேற எதுவும் பேச மாட்டேங்கிறாங்க” என தயங்கியபடி சொன்னாள் அந்த அட்மினில் இருக்கும் பெண். இதைக் கேட்ட வம்சியின் முகம் இறுகியது.

 

***

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!