அத்தியாயம் 45

இப்படியே ஒரு வருடம் சென்றது. யசோதாவின் திருமணத்திற்கும் மைதிலியின் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. தன் பாட்டி இறந்த அந்த வீடு இப்போது வம்சியின் கையில் இருப்பதால், ராதை அந்த வீட்டைப் பார்க்க முயற்சிக்கவில்லை. 

 

ராதையின் சம்பளத்தில் இப்போது மரியாதையாக வாழ ஆரம்பித்தனர் விஜயகுமாரின் குடும்பம். கோதை ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் படிக்கும் கல்லூரியில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தாள். படிப்பில் கவனம் செலுத்திய கோதை தான் உண்டு, தன் படிப்பு உண்டு என இருந்தாள். 

 

ஆனால் ராதையின் மனதில் மட்டும் ஒரு வெறுமை இருந்தது. அது என்ன என்பது அவளுக்குப் புரியவில்லை. புரிந்துக் கொள்ளவும் முயற்சிக்கவில்லை. அப்போது தான் அவளுடைய கம்பெனி எம்டி அனிதா, அவளை தன் அறைக்கு அழைத்தாள்.

 

ராதை வேலை பார்ப்பது ஒரு சின்ன ஸ்டார்ட் அப் கம்பெனி. அதில் மொத்தம் ஐம்பது பேர் தான் வேலை பார்க்கின்றனர். ராதை தன் வேலையில் என்றுமே திறமையானவள் தான். அதனாலேயே அவளை அனைவருக்கும் பிடிக்கும். அனிதாவின் அறைக்கு ராதை வந்தவுடன், “ராதை நம்ம ரெண்டு பேரும் கோவால ஒரு கான்பரன்ஸ்க்கு போறோம், நாளைக்கு பிளைட் ரெடியா இரு” என்றாள். 

 

இருபத்தி ஏழு வயதான அனிதா பார்க்க அழகாக இருப்பாள். ராதைக்கு அவளிடம் பிடித்ததே அவளுடைய ஆளுமையான தோற்றம். ஆண்களே அவளுக்கு அஞ்சுவார்கள். தன் தந்தையின் கம்பெனியைக் கையில் எடுத்தவளுக்குக் கிடைத்தது வெற்றி மட்டுமே. 

 

கோவாவில் நடக்கும் இந்த கான்பரன்ஸ், இந்தியாவிலேயே இருபது சிறந்த ஸ்மால் கேப்பிடல் கம்பெனிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிப்பதே ஆகும். அனிதா எப்போதுமே அவளுடைய தொழிலாளிகளிடம் தோழி போல் தான் பேசுவாள். ஆனால் அவளை எதிர்த்து யாரும் பேச முடியாது. ராதைக்கும் அனிதாவுடன் செல்வதில் மகிழ்ச்சி. இந்த மாதிரி கான்பரன்ஸில் கலந்துக் கொண்டால் அவளின் வேலை தகுதி பெருகும் அல்லவா. 

 

அடுத்த நாள் தன் பெரியப்பா, பெரியம்மாவிடம் விடைபெற்று விமான நிலையத்திற்குச் செல்லும் போதே, மைதிலி கண்களில் கண்ணீர் வந்தது. ராதை செல்லும் வரை தன் உணர்வுகளை கட்டுப்படுத்தியவர் அவள் சென்ற பின் வெடித்தார். 

 

“இப்படியே எவ்வளவு நாள் தான் நம்ம குடும்பத்துக்காகவே இவ உழைக்கணும்? இவளோட வாழ்க்கை என்ன ஆகுறது?” என்று அழுது புலம்பினார். விஜயகுமாருக்கும் மைதிலி சொன்னது சுருக்கென்று இருந்தது. 

 

“கோதைக்கும் ராதைக்கும் ஒரே நேரத்துல மாப்பிள்ளை பார்க்கலாம்னு தான் காத்திருந்தேன்” என்ற விஜயகுமாரிடம், “உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா? ஏற்கனவே கல்யாணமான ராதைக்கு இன்னொரு மாப்பிள்ளை தேடுவீங்களா? அவளோட முதல் கல்யாணமே இன்னும் முடிவுக்கு வரல” என்றார் அழுத்தமாக. அதற்கு விஜயகுமாரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை ஒரு ஆழ்ந்த சிந்தனைக்குச் சென்றவர் அப்படியே உறங்கி விட்டார். 

 

அனிதாவும் ராதையும் கோவா வந்தடைந்த பின், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அந்த ஏழு நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தடைந்தார்கள். ஐந்து நாட்கள் நடைபெற இருக்கும் இந்த கான்பரன்ஸ் நாளை ஆரம்பிப்பதாக உள்ளதால், இன்று குளித்துவிட்டு சாப்பிட்டு சுற்றிப் பார்க்கலாம் என்றாள் அனிதா. ராதையாலும் இதற்கு மறுப்பு தெரிவிக்க முடியவில்லை. 

 

அனிதா பிறவியிலேயே பணக்காரி. அதனால் அவளுடைய நடை, உடை, பாவனை எல்லாமே வித்தியாசமாகத் தான் இருக்கும். இப்போது சுற்றிப் பார்க்கலாம் என்று தன்னுடைய முக்கால் பேண்ட் மற்றும் டீ சர்ட்டை அணிந்தவள், ராதை அணிந்திருந்த சல்வாரைப் பார்த்து சிரித்தாள். 

 

“ராதை இது கோவா. கொஞ்சமாவது இடத்துக்கு தகுந்த மாதிரி டிரெஸ் போட்டுக்கோ. கீழே நிறைய கடைகள் இருக்கு.. ஒரு ஜீன் பேண்ட் வாங்கிக்கோ” என்றவளிடம் எப்படி மறுப்பது என்று தயங்கிய ராதை மனதில் போராடிக் கொண்டு இருந்தாள். 

 

அனிதாவை எதிர்த்து யாராவது பேசினால், அவள் யாரென்று கூட பார்க்கமாட்டாள், வேலையை விட்டே தூக்கி விடுவாள். இப்போது ராதையின் வேலையை நம்பித் தான் குடும்பமே இருப்பதால், “சரி மேம்” என்று கீழே வந்தவள், பக்கத்தில் இருக்கும் ஒரு கடையில் தனக்கு ஒரு உடையைத் தேடி தேர்ந்து எடுத்தாள். ஜீன்ஸ் அணிய விருப்பம் இல்லாதவள் தனக்கென இரு நீளமான கவுனைத் தேர்ந்தெடுத்து வாங்கினாள். 

 

பின் ராதை அறைக்கு வரும்போது அங்கு அனிதா இல்லை. அதற்குள் உடையை மாற்றி ரெடியான ராதைக்கு பசிக்க ஆரம்பித்தது. ஆனால் அனிதா வராமல் அவள் எப்படிச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவளுக்கு ஒரு புது எண்ணில் இருந்து கால் வந்தது. யாரென தெரியாமல் விழித்த ராதை கால்லை எடுக்க, 

 

“ஹலோ…” என்ற கம்பீரமான குரல் ராதையின் காதில் விழுந்தது. அந்தக் குரலை கேட்ட நிமிடம் அவளுடைய மூளை செயல் இழந்தது போல் அப்படியே உறைந்து நின்றாள். 

 

“ஹலோ, எக்ஸ்க்யூஸ் மீ…” என்று இம்முறை அவன் அழுத்தமாக சொல்ல,  தன்னுடைய சுயவுணர்வுக்கு வந்த ராதை, “ஆங்… எஸ்” எனத் தயங்கினாள். 

 

“கம் டு ரூம் நம்பர் 302” என்று பட்டென்று கால்லை அணைத்து விட்டான்.

 

ராதைக்கு தான் மனது படபடவென துடிக்க ஆரம்பித்தது. அவளுடைய கணிப்பு சரி என்றால் அந்த குரலுக்கு சொந்தக்காரன் வம்சியாகத் தான் இருக்க வேண்டும். 

 

‘மறுபடியும் என்னை ஆள வந்துட்டானா?’ என பெண்ணவளின் மனம் பயத்தில் ரீங்காரம் அடிக்க, இப்போது ராதைக்கு உடல் வியர்க்க ஆரம்பித்தது. 

 

“நான் இப்போ அங்க போகலன்னா, அவனே வந்து என்னை தூக்கிட்டு போனாலும் போயிடுவான்” என முணுமுணுத்தவளின் கால்களோ அதன் பாட்டுக்கு தானாக அறை எண் முன்னூற்று இரண்டுக்குச் சென்றது. 

 

அறை எண் முன்னூற்று இரண்டை அடைந்தவள் கண்டது, அங்கு பூட்டி இருந்த கதவைத் தான். ‘இப்போ எப்படி உள்ளே போறது, கதவைத் தட்டலாமா?’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, படார் என்று கதவை திறந்தான் வம்சி. 

 

அவனைக் கண்டவளோ தான் கணித்தது சரி என்று உணர்ந்து அவனை எதிர்கொள்ள தன் மனதை தயார் செய்ய நினைத்தாள். இதயம் அடி வேகமாக அடித்தது… அவளின் உள்ளங் கையில் பயத்தால் உண்டான வியர்வை வேறு… 

 

“ஒரே ஃபிளோர்ல இருந்துட்டு உனக்கு இங்கு வர இவ்வளவு நேரமா? உள்ளே போய் அவளுக்கு ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிவிடு” என முகத்தில் அடித்தது போல சொல்லிவிட்டு வெளியேச் சென்றான் வம்சி. 

 

‘என்ன இது இவன் இப்படி சம்மந்தம் இல்லாம ஏதோ சொல்லிட்டு போறான்’ என்று எண்ணியவள் அவனின் சொல்லிற்கு கட்டுப்பட்டு உள்ளே பார்க்கும் போது தான் அந்த அறையில் இருந்த சோஃபாவில் அரை மயக்கத்தில் இருந்தாள் அனிதா. அவளின் ஆடைகள் ஈரமாகி அதில் இருந்து தண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. 

 

‘வம்சி அனிதா மேடமை என்ன செஞ்சான்?’ என மனதில் எண்ணி திடுக்கிட்டவள், முதலில் அனிதாவின் உடையை எடுக்க அவர்களின் அறை நோக்கி ஓடினாள். 

 

மனதில் ஒரு பெரிய பாறாங்கல் விழுந்தது போல் உணர்ந்தாள் ராதை. ஆனாலும் இன்னொரு மனதில் வம்சி அப்படிப்பட்டவன் இல்லை என்றே தோன்றியது. 

 

மீண்டும்,  ‘தாலியை எறிஞ்சிட்டு வந்த என்னை எப்பயோ அவன் மறந்துருப்பான்… இப்போ அனிதா மேடமை காதலிக்குறானா…’ என்றெல்லாம் யோசிக்கும் போதே தன்னை மீறி அவளுக்கு கண்ணீர் வெளியே உருண்டு ஓடியது. 

 

இருந்தாலும் மடமடவென அறைக்குச் சென்று அனிதாவின் உடை மற்றும் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு அனிதா இருந்த அறைக்கு விரைந்தாள் ராதை.

 

***

 

 வந்தது. அவளின் பக்கத்திலேயே அமர்ந்திருந்த ராதைக்கு, வம்சிக்கும் அனிதாவிற்கும் என்ன சம்பந்தம் என்பதே மண்டைக்குள் குடைந்தது. 

 

அனிதா எழுந்தவுடன் மடமடவென தன் செல்லை எடுத்து யாருக்கோ அழைத்ததைப் பார்த்து, “மேடம் ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க?” என்று கேட்டதை அனிதா கவனிக்கும் மனநிலையில் இல்லை. 

 

“ஹலோ வம்சி, நான் உங்களைப் பாக்கணும் நீங்க எங்கே இருக்கீங்க?” என்று கேட்டபடி வெளியேச் சென்றாள். ராதையும் அவளின் பின்னே சென்றாள். 

 

அங்கு இருந்த இன்டோர் பேட்மிண்டன் கோர்ட்டில் விளையாடிக் கொண்டிருந்த வம்சியிடம் நெருங்கிய அனிதா, அவனின் கையைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அந்த கோர்ட்டின் வாசலில் நின்று இதைப் பார்த்துக் கொண்டு இருந்த ராதைக்கோ யாரோ மனதை ஈட்டியால் குத்துவது போன்ற வலி. 

 

‘வம்சியோட கையை பிடிச்சு பேசுற அளவுக்கு இவங்க ரெண்டு பேருக்குள்ள அவ்வளவு நெருக்கமா?’ என்று யோசித்தவள் தன் மனது வருந்துவதைக் கட்டுப்படுத்த முயற்சித்தாள்.

 

இதற்குப் பின் இங்கு இருந்தால் நன்றாக இருக்காது என்று அவள் வெளியேச் செல்ல எத்தனிக்கும் போது தான், “ராதை இங்கே வா” என்று அனிதா அழைத்ததைக் கேட்டு அவர்களின் பக்கம் சங்கடத்துடன் சென்றாள். 

 

“ராதை, திஸ் இஸ் வம்சி வேதந்த் கிருஷ்ணா… ஹி இஸ் தி ஓனர் ஆஃப் வி2கே சாஃப்ட்வேர் சொலூஸன்ஸ் அன்ட் ஆல்சோ இந்த கான்பரன்ஸ்ல இருக்குற இருபது கம்பெனியோட ஸ்பான்சர் இவங்க தான்” என்றாள். இதற்கு தான் என்ன உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரியாமல் விழித்தான் ராதை.

 

“வம்சி திஸ் இஸ் ராதை, என்னோட ஆபிஸ்ல இவ தான் ஸ்டார் பெர்ஃபார்மர். இந்த கான்பரன்ஸ் அவளுக்கு ரொம்ப முக்கியம், ஷி நீட் டு ரீச் ஹைட்ஸ்” என்றாள் வம்சியிடம் பெருமையாக. 

 

இதற்கு வம்சியோ, ‘இவ என்னோட வைஃப் ராதை’ என்று சொல்லுவான் என முட்டாள்தனமாக நினைத்த ராதையின் மனதை உடைப்பதை போல், “ஓ ஒகே” என்று மட்டும் கூறிவிட்டு, “இனி இப்படி பண்ணாத அனிதா, டோன்ட் பீ சோ சைல்டிஷ்” என்று அந்த இடத்தை விட்டு நகர முற்பட்டால் அவன். 

 

“வம்சி அவுட்டிங் தான் வரல, அட்லீஸ்ட் டின்னர்?” என்று அவள் கேட்கும் பொழுது, “ம்ம் பாக்கலாம்” என்று தன்னுடைய பேட்மிண்டன் கிட் பேக்கை எடுத்துக் கொண்டுச் சென்று விட்டான். 

 

‘என்னை ஒரு பொருட்டா கூட வம்சி கண்டுக்கலயே, இது தான் அவர் என் மேல வைச்சிருந்த காதலா?’ என்று கலங்கியவளின் மனதிற்கு உறக்கம் தேவைப்பட்டது. அனிதா தன்னுடைய பர்சனல் விஷயங்களை யாரிடமும் பெரிதாக பகிர மாட்டாள். ஒரு கம்பெனியின் முதலாளி அப்படி பகிரவும் மாட்டார்கள். 

 

“ராதை டிரெஸ் வாங்கிட்டியா?” என்று கேட்டபடி அனிதா பக்கத்தில் வரும் போது தான் ராதை உணர்ந்தாள், அனிதா மது அருந்தி இருக்கிறாள் என்று. அனிதாவை சீர் செய்யும் போது அவள் இதை கவனிக்கவில்லை.. அனிதாவிடம் இதை ராதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் எப்படி இருந்தாலும் தான் அவளிடம் சம்பளம் வாங்கும் ஊழியர். அதனால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது தான் தனக்கு நல்லது என்று எதையும் காட்டிக்கொள்ளாமல், அனிதாவின் பக்கத்தில் நடக்க குமட்டினாலும் வேறு வழியின்றி சென்றாள். 

 

“கமான் ராதை வெளியே போகலாம்” என்று கட்டளை வந்தபின் எங்கே உறங்குவது? விருப்பம் இல்லாமல் தான் சம்மதித்தாள். 

 

அப்போது, “மேடம், நீங்க ட்ரிங்ஸ் பண்ணிட்டு ஸ்விம்மிங் பூல் பக்கத்துல  கத்தி இருக்கீங்க” என்று மேனேஜர் அனிதாவிடம் சொல்ல, “ஸ்டாப் இட், நான் யார்ன்னு உனக்கு தெரியுமா? இந்த ஹோட்டல் முதலாளியை கல்யாணம் பண்ணிக்க போறவ” என்று சொல்லும் போது அதை கவனிக்கத் தவறவில்லை ராதை. 

 

“நான் ரெடி மேடம் போகலாம்” என்று சொன்னவள் ஒரு மரியாதைக்காக அனிதாவிடம், “கங்கிராட்ஸ் மேடம் ஃபார் யுவர் மேரேஜ் அன்ட் உங்க ஃபியான்சிக்கும் என்னோட வாழ்த்துக்கள்” என்றாள்.

 

“தாங்க்ஸ் ராதை, என் பியான்சியைப் பார்க்கத் தான் இப்போ போறோம். நீ அவர்கிட்டயே உன்னோட வாழ்த்துக்களை சொல்லிடு” என்று வெட்கப்பட்டு சிரித்த அனிதாவை வியப்பாகப் பார்த்தாள் ராதை. 

 

காதல் வந்தால் கல்லும் தேயும் போல, எப்போதுமே கம்பீரமாக இருக்கும் அனிதா இப்போது வெட்கத்தில் இருக்கிறாள் என நினைத்தவள் தன் தலை வலியை ஓரம் வைத்துவிட்டு அனிதாவுடன் சென்றாள்.

 

அந்த பிரபல ஏழு நட்சத்திர ஹோட்டல், மாலை ஆறு மணி நெருங்கும் போது பார்க்கவே அழகாக இருந்தது. அந்த ஹோட்டலின் ஏழாவது மாடியில் இருந்த குளிர்சாதன பாருக்கு உள்ளே சென்றாள் அனிதா. உள்ளேச் செல்ல சங்கடமாக இருந்தாலும் வேறு வழியின்றி சென்றாள் ராதை. 

 

அங்கே இருந்த இருட்டில் மங்கலான வெளிச்சத்தில், ஏதோ குத்து மதிப்பாக நடந்தாள் ராதை. அனிதாவோ ஒரு இருக்கையில் அமர்ந்து யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தாள். 

 

ராதை நடந்து வருவதைக் கண்ட அனிதா, “ஹேய் ராதை கம் ஹியர்… மீட் மை ஃபியான்சி வம்சி வேதந்த் கிருஷ்ணா” என்று தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவனைக் காட்டினாள். 

 

இதைக் கேட்ட ராதையின் இதயம் சுக்கு நூறாய் உடைந்துவிட்டது. அவளின் கண்கள் அவளையும் மீறி வம்சியை நோக்க, அவனின் முகத்தில் எந்த ஒரு உணர்வுகளையும் அவளால் காண முடியவில்லை. 

 

“ராதை உங்களுக்கு வாழ்த்து சொல்லணும்னு சொன்னா வம்சி” என்று சிரித்துக்கொண்டே அங்கு இருந்த டிரிங்ஸைப் பருகினாள் அனிதா. 

 

“ஓ எஸ் சொல்லட்டுமே” என்று அங்கிருந்த கூல்டிரிங்ஸை எடுத்து குடித்தான் வம்சி. 

 

‘இவரால எப்படி இப்படி இருக்க முடியுது? என்னை மறந்துட்டாரா இல்ல, ராதைன்ற ஒருத்தி இருக்கிறேன்றதை கூட மறந்துட்டாரா?’ என மனதில் பொங்கியவள், “வாழ்த்துக்கள் சார்…” என்று சொல்லிவிட்டு அங்கு தனியே இருந்த இருக்கையில் அமர்ந்தவளுக்கு அழுகை பயங்கரமாக வந்தது. தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் திணறியவள் அங்கு இருந்த பெண்கள் நவீன கழிப்பறைக்குள் சென்று பயங்கரமாக அழுதாள்.

 

“ஏன் வம்சி இப்படி பண்ணீங்க? ஒரு வருஷத்துக்கு முன்னாடி உங்கள் கண்ணுல என் மேல் இருந்த காதலை நான் பார்த்தேனே. ஆனா இப்போ என் முன்னாடியே இன்னொரு பொண்ணு உங்களை உரிமையாய் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்றா…” என்று அழுது அழுது அவளுக்கு கண்ணே வீங்கிவிட்டது. 

 

“அனிதா உனக்கு நான் நிறைய தடவை சொல்லிட்டேன். நான் உன்னை கல்யாணம் செஞ்சிக்க போறதில்லைனு. அப்போ ஏன் அந்தப் பொண்ணு கிட்ட அப்படிச் சொன்ன? நீ பிரணவ்வோட அக்கா அன்ட் நீ ஒரு டிர…” என நிறுத்தியவன், “அவ முன்னாடி உன்னை விட்டுக்கொடுக்க வேணாம்னு தான் அமைதியா இருந்தேன்.”

 

“நான் முன்னாடி சொன்னது தான் இப்போவும் சொல்றேன், என் மனசுல என் பொண்டாட்டியைத் தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை… நீ மறுபடியும் இந்த மாதிரி டிரிங்க்ஸ் பண்றதைப் பார்த்தால் இந்த முறை நீச்சல் குளத்துல தள்ள மாட்டேன். நேரா கடல்லயே தள்ளி விட்டுடுவேன்” என்றான் அதட்டலாக. 

 

“வம்சி அம் சாரி… நான் ஒரு டிரக் அடிக்டா இருந்தேன், என்னை மாத்துனதே நீங்க தான். என்கிட்ட பிரணவ்க்காக பொறுமையா இருக்கீங்கனு எனக்குத் தெரியும்.”

 

“உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சுது, உங்க கூட ஒரு நாளாவது வாழணும்னு நினைச்சேன். ஆனால் நீங்கள் தான் ராமன் ஆச்சே. உங்களை கல்யாணம் செய்யக் கேட்டும் மறுத்துட்டீங்க. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் வம்சி… எந்த பொண்ணுக்குத் தான் உங்களைப் பிடிக்காது” என்று வெறுமையாக முடித்தாள்.

 

“நான் உயிராய் நினைச்ச என் பொண்டாட்டிக்கு என்னை பிடிக்கவில்லையே…” என்று வெறுப்பாகப் பேசினான் வம்சி. 

 

“அதான், உங்க பொண்டாட்டி ராதையை வெறுப்பேத்த இப்படி ஒரு பொய் சொன்னேன்” என்றவளை அதிர்ச்சியாகப் பார்த்தான் வம்சி.

 

“என்ன வம்சி, இவளுக்கு எப்படித் தெரியும்னு ஆச்சரியமா இருக்கா? ராதை என்கிட்ட வேலைக்குச் சேரும் போதே மிஸஸ் கோமகள் ராதை வம்சி வேதந்த் கிருஷ்ணானு தான் அவ பயோடேட்டாவுல இருந்துச்சு… அப்புறம் பிரணவ்க்கு இவளோட ஃபோட்டோ அனுப்பி இவ தான் உங்க பொண்டாட்டினு தெரிஞ்சிக்கிட்டேன். உங்க மேல் காதல் இல்லாமலா அவ உங்க பெயரை அவளோட சேர்த்து இருப்பாள்” என்று கேட்டாள்.

 

“ம்ம் பரவாயில்லை, உன் மண்டைக்குள்ள ஏதோ மூளையும் வேலை பார்க்குது. ஆனா ராதை நெருப்பு மாதிரி. அவ புருஷன் நானே அவளை விருப்பம் இல்லாமல் நெருங்கக் கூடாதுனு அவ உயிர் போனாலும் பரவாயில்லைனு கத்தியோட ஃபர்ஸ்ட் நைட்டுக்கு வந்தவ… ஆபிஸ்ல யாராலும் அவளுக்கு பிரச்சனை வரக் கூடாதுனு என் பெயரை பாதுகாப்புக்கு யூஸ் பண்ணிருப்பா” என்று நமட்டு சிரிப்பு சிரித்தவன், 

 

“இப்படி அவளை வெறுப்பேத்தி தான் அவ என்னைத் தேடி வரணும்னா, அது காதல் இல்லை அனிதா. இந்த நாடகத்தை நிறுத்து” என்று அவன் கட்டளையாய் சொல்லும் போதே அழுது வீங்கிய முகத்தோடு வந்த ராதை இவர்களின் பக்கம் வந்தாள்.

 

“மேடம், எனக்குக் கொஞ்சம் தலை வலிக்குது… நான் ரூம்ல இருக்கேன்” என்று விடையைக் கூட எதிர்பார்க்காமல் மடமடவென பாரை விட்டுச் சென்றாள்.

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!