“மொத்தம் இருபத்தி ஓரு லட்சம்…” என தன்னுடைய நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்த சர்வஜித்தோ தன் பற்களை நரநரத்தபடி கர்ஜித்தான்…
“ச… சார்” என குரல் நடுங்க பரிமளா விசும்ப,
“நாளைக்குள்ள பணம் வட்டியோட வந்தாகணும்” என்று அவளை பார்த்து கனல் தெறிக்க சொன்னான்.
“ச… சார் இப்போ ப.. பணம் கையில இல்ல” என சொல்லி முடிக்கும் போதே பெண்ணவளின் தொண்டை குழி வறண்டது…
“வாட்… பணம் கையில இல்லயா!” என புருவம் உயர்த்தி அவன் பார்த்த பார்வைக்கு எரிக்கும் சக்தி இருந்தால் அது கண்டிப்பாக பரிமளாவை எரித்திருக்கும்…
அதற்கு என்ன விடை சொல்வாள்… தலை குனிந்து தான் இருந்தாள்… கண்களில் கண்ணீர் மட்டும் விடாமல் சுரந்து கொண்டே இருந்தது
“நாளைக்குள்ள பணம் வரலன்னா… நீ என்கிட்ட வரணும்! இந்த இருபத்தி ஓரு லட்சம் வட்டியோட முடியற வரை உன்னை அனு அனுவா அனுபவிச்சிக்குறேன்…” என அவளை விழுங்கும் பார்வையில் பார்த்தபடி சொல்ல, பரிமளாவோ அவனின் வார்த்தைகளில், பார்வையில் அதிர்ச்சியில் மனமும், உடலும் கூசி உறைந்தே போனாள்…
“என்னடி பாக்குற… இன்னும் மூனு மாசத்துல கல்யாணத்தை வைச்சிட்டு உன்னை படுக்க கூப்பிடுறேன்னு தானே!” என கழுத்தை நெத்தி முறித்தபடி அவன் நக்கலாக சிரிக்க, பரிமளாவிற்கு அவனின் அந்த சிரிப்பில் பயம் பீறிட்டு வந்தது…
“கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு நீ வைப்பாட்டி… ச்ச ச்ச… வைப்பாட்டி எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை… அதுக்கு எல்லாம் உனக்கு தகுதி இல்ல.. வேசியா இருந்துட்டு போ!” என கண்களில் ஏளனத்துடன் அவளை பார்க்க, இந்நொடி உயிரை விட்டு மண்ணுக்குள் புதைந்து விடலாமா என்று கூட பெண்ணவளுக்கு தோன்றியது…
கண்கள் இரண்டும் கண்ணீரில் தத்தளிக்க, அவளின் மூக்கோ கோவைப்பழமாய் சிவந்திருந்தது… அவன் கக்கிய வார்த்தை எனும் விஷத்தால் உண்டான அழுகை கலந்த கோபம் அது!
“என் உயிரே போனா கூட நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்” என்றாள் உதடுகள் நடுங்க.. கண்ணீர் வேறு அவளின் முகத்தைத் தாண்டி கழுத்தில் பாய்ந்தது..
“அப்போ சாகட்டும்… உன் அப்பாவும், அம்மாவும் சாகட்டும்…” என தன் தாடையை நீவியபடி இலகுவாக சொன்னபடியே எழுந்தவன் அவளின் புறம் வந்து நின்று அலட்சியமாக பார்க்க, பரிமளாவிற்கு யாரோ தன் மண்டையை சமட்டியால் அடித்தது போன்ற உணர்வு…
“ச… சார் பளிஸ் சார்…” என ஓடிவந்து அவனின் கால்களில் விழுந்தவளை வேடிக்கையாக பார்த்து விசிலடித்தவன், தன் நீண்ட ஷூ காலை வைத்து அவளின் முகத்தின் தாடையை நிமிர்த்தி தன்னை பார்க்கும் படி செய்தான்.
“நாளைக்கு பணத்தோட வா.. இல்லன்னா” என இழுத்தபடியே அவளை திண்பது போல் பார்த்தவன்,
“நாளைக்கு நைட் ஷார்ப் பத்து மணிக்கு நீ என் கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்து இருக்கணும்… குடும்பத்தோட தப்பி ஓட நினைச்சிங்கன்னா உன் அப்பனையும், ஆத்தாவையும் குழி தோண்டி போட்டு பொதச்சிடுவேன்… நீ சாக நினைச்சாலும், அவங்களை சாகடிச்சிடுவேன்” என அதட்டலுடன் மிரட்டியவன், அவளின் தாடையை பிடித்திருந்த தன் காலை எடுத்து கீழே வைத்துவிட்ட பின்னர் வேகமாக வெளியேறி விட்டான்…
உன்னுடன் இனி பேசுவதற்கு என்று எதுவும் கிடையாது… நான் சொன்னது, சொன்னது தான் என்கிற ரீதியில் தான் வேக நடையிட்டு வெளியில் சென்றான்…
சர்வஜித்தின் ஆள் தான் அவனின் கட்டளைப்படி பரிமளாவை காரில் அழைத்து வந்துருந்தான்…
இப்போது அவனே திரும்பி விட்டுவிட்டு, “மேடம்… நாளைக்கு நைட் ஒன்பது மணிக்கு நீங்க ரெடியாகி இருக்கணுமாம்… நான் வந்து அழைச்சிட்டு போறேன்” என சொல்லிவிட்டு சென்றான்..
அந்த ஓட்டுனர் செல்லும் வரை ஜடம் போல் நின்றிருந்த பரிமளாவின் வருகையை கண்டு வேகமாக வெளியில் வந்து உலுக்கிய சரளா,
“என்ன டி சொன்னான் அவன்?” என பயத்துடன் கேட்க,
அவளின் தந்தையும்,”என்ன சொன்னான் அவன்?” என பதற்றமாக கேட்டார்.
“நாளைக்கு நைட்குள்ள இருபத்தி ஓரு லட்சத்தை வட்டியும், முதலுமா திருப்பித் தரணுமாம்.. இல்லன்னா” என உதடுகள் நடுங்க அவள் திணற,
“இல்லன்னா என்ன?” என பெற்றொர்கள் இருவரும் ஒருங்கே இணைந்து பதற்றமாக கேட்க,
“இல்லன்னா” என எச்சிலை கூட்டி விழுங்கியவள், “அவனுக்கு வை.. வேசியா இருக்கணுமாம்” என சொன்ன கணமே அவள் வெடித்து அழ, அவளின் பெற்றொர்கள் இருவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்கள்…
சரளா தான் முதலில், “ஏங்க எப்படியாவது பணத்தை திரட்டி கொடுத்துடுவோம்” என கணவனை அழுதபடி உலுக்க,
“அப்போ என்னை மறந்திடு…” என கல்லாக சொன்னார் பாண்டியன்.
“ப்பா” என தந்தையின் சொல்லில் பெண் கதறி பதற,
“பணம் திரும்பி வராது… அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல” என அழுத்தமாக சொன்னவரை சரளா முறைத்தாலும் எதுவும் பேசாது தான் நின்றார்.
“சரளா… பரிமளாக்கிட்ட பேசி புரிய வை” என பட்டென்று சொல்லி விட்டு அவரின் அறைக்குள் செல்ல, இங்கே சரளா மற்றும் பரிமளா பேரதிச்சியில் உறைந்து நின்றார்கள்…
மகளை பாவமாக பார்த்த சரளாவோ கணவனின் பின்னே அவரின் அறைக்குள் சென்று, “ஏங்க! என்ன சொல்லவரீங்க நீங்க?” என்று எகிறினார்.
“உன்னாலயும் என்னாலயும் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியுமா?” என காட்டமாகக் கேட்டார்.
“ஏ… ஏதாவது முயற்சி” என அழுதபடியே சரளா சொல்ல ஆரம்பிக்க,
“கிழிப்ப… பணத்தை வைச்சி இடத்தை வாங்கிட்டு இப்போ சரக்கு எல்லாத்தையும் இறக்கியாச்சு… இதை திருப்பிக் கொடுக்க சொல்றியா” என மனைவியிடம் கத்தினார்.
“அதுக்காக நம்ம பொண்ணோட மானத்தை அடகு வைக்க சொல்றீங்களா… அதுக்கு அப்புறம் அவளை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க!” என முந்தானையை வைத்து முகத்தை மூடியபடி அழுதார்.
“உனக்கு அவளை யாரு கல்யாணம் பண்ணப் போறான்றது தான் பிரச்சனைன்னா… மாப்பிள்ளை ரெடி தான்” என்றார்…
“யார சொல்றீங்க?” என புரியாமல் கேட்ட மனைவியை பார்த்து வெற்றிச் சிரிப்பு சிரித்தவர்,”வேற யாரு நம்ம முத்து தான்” என்றார்.
“அவனா” என சரளா அலற,
“ஏன் அவனுக்கென்ன?” என கத்தினார் பாண்டியன்.
எப்படியோ அடுத்த அரை மணி நேரத்தில் மனைவியின் மூளையை சலவை செய்து மாற்றி விட்டார் பாண்டியன்…
ஒரு முடிவோடு வெளியே வந்த பெற்றோர்கள், “நீ மட்டும் இதுக்கு ஒத்துக்கலன்னா நாங்க செத்துடுவோம்” என்று இருவரும் ஒரு சேர அழ, பரிமளாவை இப்படி மிரட்டி மிரட்டியே எப்படியோ சம்மதிக்க வைத்தார்கள்.
கணவனின் அறிவுரைப்படி பரிமளாவிடம் இப்போதைக்கு முத்துவை பற்றி சொல்ல வேண்டாம் என மறைத்தார் சரளா.
அடுத்த நாள் இரவு கண்ணை மூடி திறப்பதற்குள் ஓடி விட்டது…
பணத்துக்காக படு என்று சொல்லும் பெற்றொர்கள் எவ்வளவு ஈனப் பிறவியாக இருக்க வேண்டும்…
பரிமளாவின் கண்களில் கண்ணீர் ஆறாய் கொட்டிக் கொண்டே இருந்தது…
அதை துடைத்து விட்ட சரளாவோ, “அவனுக்கு அனுசரிச்சு நடந்துக்கோமா அதுக்கு அப்புறம் நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்” என கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் சொல்ல,
“மானத்தை வித்துட்டு சொகுசா வாழுறதுக்கு சாகுறதே மேல்…” என உதடு நடுங்க சொன்னவள், “சாகாம இதுக்கு சம்மதிக்குறேன்னா அதுக்கு காரணம் உங்க ரெண்டு பேரோட உயிர்” என அவள் தழுதழுத்த குரலில் சொல்லும் போதே, சர்வஜித்தின் ஆள் பரிமளாவை அழைக்க வந்துருந்தான்…
பரிமளாவின் உடைகள் அடங்கிய பேக்கை தயார் செய்துருந்தார் சரளா…
பெற்ற தாய் செய்யும் வேலையா இது?
மனக் கொதிப்புடனும், வெறுப்புடனும், வெறுமையுடனும் சர்வஜித்தின் ஆள் பின்னே சென்றாள் பரிமளா…
மறந்தும் அவளின் தாய் மற்றும் தந்தை புறம் அவள் திரும்பவேயில்லை..
சுடிதார் தான் அணிந்திருந்தாள்..
காரில் ஏறியவளோ கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்…
இப்படியே கண்களை மூடி தன் இதயத் துடிப்பு நின்று விட்டால் தான் என்ன! அப்படி நின்றாலும் தன் பெற்றொர்களை கொன்று விடுவேன் என்கிறானே…
அதற்காகவாவது உயிரை பிடித்துக் கொண்டு செல்கிறாள்…
பெற்றொர்கள் மீது மலையளவு வெறுப்பு, கோபம் தோன்றினாலும் கூட அவர்களுக்கு சாகும் நிலை வரும் என்றால் பெண்ணவளின் மனது பயத்தில் துடிக்கிறது, பதறுகிறது…
கண்களை அழுத்த மூடியிருந்தவள் சர்வஜித்தின் கெஸ்ட் ஹவுஸ் வரும் வரை அப்படியே தான் இருந்தாள்…
சர்வஜித்தின் கெஸ்ட் ஹவுஸ் ஈசிஆரில் உள்ள உத்தண்டியில் இருக்கிறது…
அடித்துப் போட்டால் கூட யாருக்கும் தெரியாத அளவிற்கு மக்கள் ஜனமே பெரிதாக இல்லாத இடம் அது…
பெரும் கோடிஸ்வரர்களின் கெஸ்ட் ஹவுஸ் ஆங்காங்கே தென்பட, அதில் சர்வஜித்தின் கெஸ்ட் ஹவுஸ் உயர்ந்து நின்றது…
“மேடம்… மேடம்” என ஓட்டுனர் அழைத்த பின்னர் தான் சோர்வாக கண்களைத் திறந்தாள் பரிமளா.
“கெஸ்ட் ஹவுஸ் வந்திடுச்சுங்க மேடம்” என சொல்ல, உயிருள்ள ஜடத்தை போல இறங்கினாள்.
“வாம்மா” என வயதான பெண்மணி ஒருவர் பரிமளாவின் கையை பிடித்துக் கொள்ள, அவளின் மூளைக்கோ எதுவும் எட்டவில்லை…
கால்கள் அது பாட்டுக்கு நடந்தது…
பரிமளாவை ஒரு அறைக்குள் விட்டவர், “உள்ளே உனக்கான துணிமணி இருக்குமா… அதை போட்டுக்கோ” என சொல்லி விட்டு வெளியில் சென்றுவிட்டார்…
அவர் சென்ற பின்னர் கதவை சாற்றிவிட்டு அங்கிருந்த சோஃபாவில் சோர்வாக அமர்ந்தாள்…
இந்த இருபது வயதில் வாழ்க்கையே வெறுத்து வெறுமையாகி விட்டது…
‘மறுபடியும் அவன் கிட்ட கெஞ்சி பார்ப்போமா’ என மனது ரீங்காரம் இட்டுக் கொண்டே இருக்க, அந்த அறையில் இருந்த லேன்ட்லைன் ஃபோன் அலறி தன் இருப்பைக் காட்டியது…
திடீரென அடித்தத்தில் திடுக்கிட்டவள் அதை தான் எடுக்க வேண்டுமா இல்லை கூடாதா என்பது கூட தெரியாமல் விழித்து நின்றாள்.
ரிங் நீண்டு முடிந்து கட்டாகி இருக்க,’ ஒருவேளை அவனா’ என நினைக்கும் போதே அவளுக்கு ஈரக்குலை நடுங்கியது.
மறுபடியும் அந்த அறையின் லேன்ட்லைன் ஃபோன் அலற, இப்போது பயத்தில் தானாக கால்கள் அதனை நோக்கி சென்றன…
கைகள் நடுக்கத்துடன் அதனை எடுத்தவள் காதில் வைக்க, “ஃபோனை எடுக்க உனக்கு இவ்வளவு நேரமா!” என சுள்ளென்று விழுந்தான்… அவன் தான்..
அவனே தான்… சர்வஜித்!!!
“ந… நான் அது வ.. வந்து” என பரிமளா திணற, “இன்னும் பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன், சும்மா அழுத மூஞ்சா சீன் கிரியேட் பண்ணாம குளிச்சிட்டு நல்ல அலங்காரம் பண்ணிட்டு அங்க இருக்குற டிரெஸை போட்டு நீ இருக்கணும்… அப்படி மட்டும் நீ பண்ணலைன்னு வை” என்று அழுத்தி நிறுத்தியவன், “உன் உடம்புல உயிர் இருக்கும் ஆனா சாகுறதே மேல்னு உன்னை என்கிட்ட கதற வைக்குற அளவுக்கு உன்னை வெச்சு செய்வேன்” என்றான் ரௌத்திரமாக…
அதில் திடுக்கிட்டவள்,” ச.. சரி” என படபடப்புடன் சொல்ல கால்லை பட்டென்று கட் செய்துருந்தான் சர்வஜித்…
அவன் ஒரேடியாக கொன்றுவிடுவேன் என்று சொல்லி இருந்தால் இந்நொடி சந்தோஷமாக செத்திருப்பாள்!
ஆனால் அவன் சொன்னதை நினைக்கும் போதே அவளின் அடி வயிற்றிலிருந்து பயப்பந்து உருண்டது…
