அத்தியாயம் 10
‘ஐய்யோ இவனா!’ என நெஞ்சில் கைவைத்து பதறியவள் ஃபோனை பயத்துடன் எடுக்க,
“முதல் கால்லயே ஏன் ஃபோனை எடுக்கல” என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான் சர்வஜித்.
“அ… அது நான் எடுக்குறதுக்குள்ள கட் ஆயிடுச்சு ங்க” என திணறியபடி பதில் கொடுத்தாள்…
அவளின் குரலிலேயே அழுது இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன், “அழுதிருக்கியா!” என கேட்டான்…
அதற்கு அவளிடம் பதில் இல்லை… மௌனம் மட்டும் தான்!
“உன்னைத் தான் கேட்குறேன் அழுதியா… பொய் சொன்னா அதுக்கும் சேர்த்து உன்னை செய்வேன்” என அழுத்தமாக சொன்னான்…
“ஆ… ஆமா சார்!” என அவள் சொல்ல,
“சாகணும்னு தோணுதோ” என குதர்க்கமாக கேட்டான் சர்வஜித்…
இப்போது அவளிடம் திணறல் இல்லை…
“ஆமா சார் சாகணும்னு தான் தோணுது” என்றாள் வேகமாக…
“நீ சாக கூடாது ஆனா செத்துட்டே இருக்கணும் அதான் எனக்கு வேணும்” என்றான் வன்மமாக…
அதனைக் கேட்டு மனம் கொதித்தவளோ,”நீங்க நினைச்சது ரொம்ப நல்லாவே நடக்குது” என்றாள் அழுத்தமாக…
“பத்தாது… பத்தாது… இன்னும் நீ நிறைய அனுபவிக்கணும்” என்று சத்தமாக சிரித்தவன்,
“நானும் என் வருங்கால பொண்டாட்டியும் எங்க ரிசெப்ஷன்க்காக டிரெஸ் எடுக்க போறோம்” என கர்வத்துடன் சொன்னான்…
அவன் சொன்ன விடயத்தில் அவளின் உதடுகளை பற்களால் கடித்து தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டாள்…
அவளின் மௌனத்தில் வெற்றிப் புன்னகை விடுத்தவன், “இன்னிக்கு நைட் ஃபிரெஷ்ஷா ரெடியா இரு” என ஒரு மார்க்கமாக சொன்னவன் கால்லை அணைத்துவிட,
பரிமளா இன்னும் அசையாது அமர்ந்திருந்தாள்… ஃபோனை இன்னும் காதில் இருந்து அவள் எடுக்கவில்லை…
‘என்னை செக்ஸ் மிஷின்னு நினைச்சிட்டு இருக்கான் இந்த ராட்சசன்’ என வெறுமையாக சொன்னவளோ அதே வெறுமையுடன் படுத்துக் கொண்டாள்…
கோமதி அம்மாள் எத்தனையோ முறை சாப்பிட அழைத்தும் அவள் போகவில்லை…
அடுத்த இரண்டு வாரம் சர்வஜித்தின் காம பசிக்கு இரையானாள் பரிமளா…. சமையலையும் அவளைத் தான் செய்ய வைத்தான்… அதனால் மறுபடியும் கோமதி அம்மாவை அவரின் வீட்டிற்கு அனுப்பி விட்டான் சர்வஜித்…
அவளுக்கு பொருத்தப்பட்ட காப்பர் டீயும் அவளுக்கு வலி கொடுத்து படுத்தியது…
அன்றிரவு அவளை வெறித்தனமாக ஆட்கொண்டு முடித்தவன், “நாளானிக்கு எனக்கு கல்யாணம்… கல்யாணத்தை முடிச்சிட்டு வருவேன்… அன்னிக்கு நீ என்னை நிறையவே சேடிஸ்ஃபை பண்ணனும்” என கசங்கி கிடந்தவளின் மீது புகையை விட்டு சொன்னவனை, விழி ஓர கண்களில் கண்ணீருடன் பார்த்த பரிமளாவிற்கு உடல் இப்போதே கூச ஆரம்பித்தது…
இத்தனை நாட்கள் அவனின் உடற் தேவைக்கு அவள் இரையானதில் அவளின் மனம் லயிக்கவில்லை தான்…
ஆனால் இனி இன்னொருத்தியின் கணவனாகிய பின்னர், அவன் தன்னை தீண்டும் பார்வைகளுக்கே அவளின் மனமும் உடலும் கூசிப்போய் வெட்கித் தான் போகும்…
இதை எப்படி தாங்க போகிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை…
அடுத்த நாள் பரிமளா காலையில் விழித்து எப்போதும் போல் குளிக்க, அவளுக்கு வயிற்றின் கீழே காப்பர் டீ பொருத்திய இடத்தில் வலி எடுக்க ஆரம்பித்தது…
சில சமயம் பொருத்தியது இடத்தை விட்டு நகர வாய்ப்புகள் இருக்கிறது…
இரண்டு வாரங்கள் அதனுடன் எப்படியோ ஒப்பேத்தியவளுக்கு இன்று சற்று வலி அதிகமாகவே எடுக்க ஆரம்பித்தது…
அதே வலியுடன் அவள் ஹாலிற்கு வர, தன் அறையில் இருந்து குளித்து முடித்து வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை பட்டு வேட்டியில் முழுக்கை வரை இருந்த சட்டையை ஸ்டைலாக மடித்துக் கொண்டு மாப்பிள்ளை போல் படிகளில் இறங்கி வந்துக் கொண்டுருந்தவனை கண்டவளின் விழிகளுக்குள் உணர்வில்லாத பார்வைகள்… ஆண்மை மிகுந்த பேரழகன் தான் சர்வஜித்…. அதிலும் அவன் உயரத்திற்கு ஏற்ற போல தினமும் உடற்பயிற்சி செய்யும் பலனினாலும் அவனுக்கு கட்டுக்கோப்பான மேனி…
பரிமளாவும் இன்று தலைக்கு தான் குளித்திருந்தாள்…
கண்களாலேயே அவளை அளவிட்டபடி அவளின் அருகே வந்தவன், கிழிந்த சேலையில் தலையில் ஈரத்துண்டுடன் இருந்தவளை தன் பக்கம் திருப்ப, அவனின் இந்த திடீர் நடவடிக்கையில் திகைத்தே விட்டாள்…
அவளின் கண்களில் இருந்த திகைப்பை கண்டு உதட்டை வளைத்து புன்னகைத்தவன், “நான் என் கல்யாணத்துக்கு கிளம்புறேன்… வரதுக்கு மூனு நாள் ஆகும்… அதுக்குள்ள எங்கேயாவது ஓட நினைச்சன்னா உன் அப்பா, அம்மா டெட்பாடி ஆயிட்டாங்கன்னு உனக்கு நியூஸ் வரும்…” என அவளை அழுத்தமாக பார்த்து சொன்னான்…
“நா.. நான் எங்கேயும் போகல” என சொல்லி முடிக்கும் போதே அவளின் தொண்டை குழி வறண்டது…
அவனின் கல்யாண செய்தி அவளுக்கு இனிக்கவா செய்யும்…
அவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவளை தொட்டவன் ஆயிற்றே!
அவனுக்கு எப்படியோ அவளுக்கு கற்பு என்பது புனிதம் தான்… அந்த புனிதத்தை கெடுத்தவன், வேறு ஒருத்தியை திருமணம் செய்ய போகிறேன் என்று சொல்வதை கேட்டு அவளால் உணர்வின்றி இருக்க முடியுமா என்ன?
“என் கல்யாணத்துக்கு விஷ் பண்ண மாட்டியா!” என வேண்டும் என்றே அவளை சீண்டினான் சர்வஜித்…
அதில் திணறியவள், “வ… வாழ்த்துக்கள்” என்றால் எங்கோ பார்த்தபடி… கண்களில் கண்ணீர் வேற தேங்க ஆரம்பித்தது…
“என்னைப் பார்த்து விஷ் பண்ணு டி” என அவளின் தாடையை தன் புறம் திருப்ப, அவனுக்கு தன் கண்ணீர் தெரியக்கூடாது என வேகமாக தன் கண்களை சிமிட்டி கண்ணீரை உட்வாங்கிக் கொண்டாள் பெண்…
அவனின் முகத்தை பக்கத்தில் பார்த்தவளுக்கு மூச்சு திணறியது..
அவனோ, “வாழ்த்துக்கள் சொல்லு” என அவளின் தாடையை இறுக்க, “வாழ்த்துக்கள்…” என்றாள் உதடுகள் நடுங்க…
அவளின் விழிகளை ஊடுருவ பார்த்தவனின் கண்களில் தெரிந்த குற்றச்சாட்டிற்கு உயிர் இருந்தால் அவளை எரித்து பொசுக்கி இருக்கும்…
அதன் பின்னர் ஒரு நொடி கூட அவளின் பக்கத்தில் இருக்காதவன், அவளை வேகமாக தள்ளிவிட்டு விரைந்து வெளியில் முன்னேறி நடக்க, அசையாத பதுமையாய் நின்றிருந்தாள் காரிகை…
வாசல் வரை சென்றவன் என்ன நினைத்தானோ, சடாரென்று நின்று அவள் புறம் திரும்பாமலேயே சொடக்கிட,
அந்த சத்தத்தில் அதிர்ந்து அவன் புறம் திரும்பினாள் பரிமளா…
“நான் கல்யாணம் பண்ணாலும்… எனக்கு என் பொண்டாட்டியோட முதல் ராத்திரி நடந்த அப்புறமும் கூட என்னோட கண்கள் எப்போவுமே உன் மேல தான் இருக்கும்… அதனால தப்பிச்சிடலாம்னு நினைக்காத… தொலைச்சிடுவேன்” என்று கர்ஜித்தபடி மிரட்டிவிட்டு சென்றான்…
அவன் சென்று கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இருக்கும்… அப்படியே அசையாது உறைந்து நின்றிருந்தாள் பரிமளா… கூடவே அவளின் விடாத கண்ணீரும்…
அவளின் கண்ணீருக்கு மட்டும் வாய் இருந்திருந்தால் சலித்தே விட்டுருக்கும்… அந்த அளவிற்கு அழுது அழுது நொந்து விட்டாள்…
“அம்மாடி!” என அவளின் தோளில் கோமதி அம்மா கைவைத்த பின்னர் தான் சுய உணர்விற்கு வந்தாள் பரிமளா…
வேகமாக தன் கண்ணீரை துடைத்தவளை பாவமாக பார்த்தவர், “ஐயா அவர் கல்யாணத்தை முடிச்சிட்டு வர வரைக்கும் உன் கூட தொணைக்கு இருக்க சொன்னாரு தாயி” என தழுதழுத்த குரலில் சொன்னார்…
அவருக்குமே சர்வஜித் திருமண விஷயத்தை அதுவும் அவன் வாயால் கேட்டறிந்த பின்னர் அத்தனை அதிர்ச்சி…
அவர் அறிந்த சர்வஜித் இத்தகையவன் அல்லவே!
இந்த பங்களாவிற்கு இதுவரை பெண்களை இது போல அழைத்து வந்ததில்லை அவன்….
அவர் தெரிந்த வரை சர்வஜித் பெண்கள் விஷயத்தில் மிகவும் கண்ணியம் காப்பவன்…
ஆனால் எப்போது பரிமளாவை கழுத்தில் தாலி இல்லாமல் சிறைப் பிடித்தானோ, அப்போதே கோமதி அம்மாவிற்கு சர்வஜித் மீது பெரும் வருத்தம் தான்…
இப்போது தன்னிடம் தனக்கு திருமணம் என்றும் தான் வரும் வரை பரிமளாவை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றவனின் செயல் அவரை பெரும் அளவு திகைக்க வைத்தது தான்…
எதற்கோ பரிமளா சர்வஜித்திடம் சிக்கி இருக்கிறாள் என்பதை உணர்ந்தவரால் என்ன தான் செய்ய முடியும்…
அவளின் மீது அவரால் இரக்கம் மட்டுமே பட முடிந்தது..
“அழுகைய கட்டுப்படுத்தாத தாயி… கதறி அழுதுடு.. அப்போவாவது உன் மனசுல இருக்குற பாரமெல்லாம் குறையுதானு பாரு…” என அவளின் தலையில் ஆதரவாக வருட, அவ்வளவு தான் வெடித்து அழுதே விட்டாள் பரிமளா..
காலையில் இருந்தே அவளுக்கு அந்த பாழாப் போன காப்பர் டீ வலி வேறு அதிகமாக,
“அம்மா! வலிக்குது” என்று நின்ற இடத்திலேயே அமர்ந்து விட்டாள் பரிமளா…
“ஐய்யயோ! என்னம்மா ஆச்சு?” என பதறி அடித்துக் கொண்டு பரிமளாவின் பக்கம் குனிந்து கேட்டார் கோமதி…
“முடியல ம்மா வலிக்குது” என கதறினாள் பரிமளா..
“என்னம்மா பண்ணுது… வயிறு வலியா…” என பதறிக் கேட்டார்
“அ.. ஆமாம் ம்மா” என்றாள் அழுகை கலந்த கதறலுடன்…
அச்சமயம் அச்சூழ்நிலையில், “இது வயிறு வலி இல்லை ம்மா காப்பர் டீ வைச்சதால் வந்த வலி” என்றா அவளால் அச்சமயம் சொல்ல முடியுமா என்ன…
அப்படி ஒரு சூழ்நிலை இல்லை என்றாலும் கூட அவளால் அந்த காரணத்தை வெளிப்படையாக சொல்ல இயலாது… அது தான் உண்மை!
“சரிம்மா இரு… எனக்கு தெரிஞ்ச ஆட்டோவை வரச் சொல்றேன் ஆஸ்பத்திரி போவோம்” என வேகமாக எழுந்த கோமதி, தன் செல்லை எடுத்து தனக்கு தெரிந்த ஆட்டோவிற்கு கால் செய்தார்…
அதன் பின் அனைத்துமே மின்னல் வேகத்தில் நடந்தன…
அவர்கள் மருத்துவமனை சென்று திரும்பவே மதியம் ஆயிற்று…
எப்படியோ அவளின் உடல் வலி மருத்துவமனை சென்று வந்த பின்னர் நின்றாலும் கூட அவளின் மன வலி அவளை உயிரோடு கொல்கின்றது…
அவளால் ஒரு வாய் கூட சாப்பிட முடியவில்லை..
மனமெங்கும் ரணம்… சர்வஜித்தின் திருமணத்தை பற்றி நினைத்து நினைத்து மனமெல்லாம் சுட்டது… யாரோ ஒருவர் இதயத்தை சம்மட்டியால் ஓங்கி அடித்தது போன்று உயிர் பிரியும் வலி…
“என்ன தாயி காலையில இருந்து ஒன்னும் சாப்பிடாம கெடக்க” என அவளின் பக்கத்தில் வந்து அமர்ந்த கோமதி கவலையாக கேட்டார்…
“பசியில்லைங்க ம்மா” என இறங்கிய குரலில் சொன்னாள் பரிமளா…
“நீ சாப்பிடாம இருந்தா மட்டும் ஐய்யா கல்யாணம் நின்னுடுமா மா” என வருத்தமாக கேட்டவரை, அதிர்ந்து பார்த்தாள் பரிமளா…
“நீ யாரு… ஏன் இங்க இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கனு எனக்கு எதுவும் தெரியாது… ஆனா ஐய்யா உனக்கு பண்றது தப்பு… அப்புறம் இப்போ கல்யாணம் கட்டப் போறது அதை விட பெரிய தப்பு…” என்றார் கவலையாக…
அவர் சொன்னதை கேட்ட பரிமளாவோ மௌனியாக அமர்ந்திருக்க, “ஆனா ஐய்யா நீ இங்க வர முன்னாடி வர அப்படி இல்லம்மா.. சொக்கத் தங்கம்!” என தலையில் அடிக்காத குறையாய் ஆதங்கப்பட்டார்…
