துருவம் 6

துருவம் 6

“என்னதிது மாமா ஃபோன் அடிக்குது” என்றவள் எட்டிப் பார்க்க வரும் பொழுதே ஃபோனும் ரிங் கட்டாகி விட, 

 

“என்ன பண்ற?” என்ற கணீர் குரலில் கேட்டபடி உள்ளே வந்தான் அஷ்வின். 

 

“உங்க ஃபோன் அடிச்சிடு மாமா.. அதான் யாருன்னு” என்றவள் இழுக்க, 

 

“உன் வேலையைத் தவிர எல்லாம் சரியா பாரு” என்றபடி தன் ஃபோனை எடுத்து பார்த்தவன் புருவத்தை சுருக்க, 

 

‘ம்க்கும் என் வேலையே இவரை கரெக்ட் பண்றது தான் ஆனா அது எங்க நடக்குது.. இவர் தான் நான் இங்கன செய்யுற வேலைய டெய்லி கரெக்டோ கரெக்ட்னு பண்றாரு’ என மனதில் நொந்தவள், 

 

“உத்தரவு மாமா” என தலையசைத்து விட்டு, அவனிடம் வந்த வேலையை பற்றி தெரிவித்துவிட்டு கிளம்பினாள். 

 

அவள் சென்றதும் அனன்யாவிற்கு கால் சென்றவன் தன் வேடத்தை தொடங்கினான். 

 

“சொல்லு அனன்யா” என்று அவன் எதார்த்தமாக பேச, அனன்யாவிற்கோ குளுகுளுவென இருந்தது. 

 

அவ்வளவு தான்.. அந்நொடியில் இருந்து அஷ்வினை, அவனின் நடிப்பை முழுமையாக நம்பத் தொடங்கிவிட்டாள் அனன்யா. 

 

“அஷ்வின்.. இஃப் யூ டோன்ட் மைன்ட் எனக்கு ஆறு மணிக்கு ஹோட்டல் ஸ்டார்ல மியூசிக்கல் நைட் ஈவண்ட் இருக்கு.. நான் தான் இன்னிக்கு கிட்டாரிஸ்ட்” என்றவள் வெளியே சாதாரணமாக சொன்னாலும் தன்னவனிடம் தன் திறமையைப் பற்றிச் சொன்ன பெருமை அவளின் மனதிற்குள் குடிகொண்டது. 

 

“எவ்வளவு நேரம் ஈவண்ட்!” என்றவன் யோசனையாக கேட்க, 

 

“எட்டு மணி வரைக்கும்” என்றாள் அவசரமாக. 

 

“ஓகே எட்டு மணிக்கு மேல ஹோட்டல் பார்க்ல மீட் பண்ணலாம்” என்றவனோ அடுத்து அனன்யா பேசும் முன்னர் அழைப்பை துண்டித்து விட, அனன்யாவிற்குத் தான் முகத்தில் அடித்தது போன்று இருந்தது. 

 

ஆனால் அவளின் இன்னொரு மனமோ, ‘நீ என்ன லூசா அன்னு.. அவர் கிட்ட இன்னிக்கு தான் நீ ஃபோன் பண்ணி பேசுற.. அவர் நார்மலா தானே பேசுனாரு.. அப்போ நம்ம ஹோட்டல் ஸ்டார்லயே மீட் பண்ணலாம்.. நானும் உன்னோட ஈவண்ட்டை பாக்க வரேன்னு அவர் சொல்லணும்னு எதிர்ப்பார்த்த நீ சரியான லூசு தான்.. முந்திரிக்கொட்டை மாதிரி எல்லாத்துக்கும் அவசரப்படாத..’ என தன்னையே மனதில் கடிந்து கொண்டவள் அன்று அஷ்வினை காணப் போகும் ஆவலில் தலை கால் புரியாமல் ஆட்டம் போட்டாள். 

 

அன்று மாலை ஈவண்ட்டிற்காக முட்டிக்கு சற்று மேல் இருக்கும் ஒன் பீஸ் உடை அணிந்துருந்தாள். 

 

அடர் நீல வண்ணத்தில் உடலை ஒட்டி இருந்த உடை அது.. அனன்யாவிற்கு அந்த உடை அணிவது புதிது எல்லாம் அல்ல. 

 

அவளின் உயிர்த்தோழிகள் சாருபாலா மற்றும் அமிர்தா ஹோம்லி டைப்.

 

ஆனால் சோனியா நன்றாகவே மாடர்ன். இப்போது அவளின் வாழ்க்கையில் ஒரு பேரிடி வந்து அவளின் உடை பழக்கத்தை மாற்றிக் கொண்டாள். 

 

அனன்யா சோனியா அளவிற்கு மாடர்ன் உடை அணியவில்லை என்றாலும் பெரும்பாலும் மாடர்ன்னாக தான் இருப்பாள். 

 

வீட்டு விஷேஷங்களுக்கு என்றால் சுடிதார், ஹாஃப் சாரி, சேலை என ஹோம்லி வகைக்கு மாறிவிடுவாள். 

 

மொத்தத்தில் அவளுக்கு எல்லா வகையான உடையுமே அழகாக இருக்கும்.. 

 

லேயர் கட் செய்துருந்த தன் கூந்தலை அப்படியே ஓபன் ஹேராக விட்டவள் எப்போதும் போல் மியூசீக் ஈவண்ட்டில் அனைவரையும் ஈர்க்கும் அளவுக்கு கிட்டார் வாசித்தாள். 

 

ஆம், அனன்யா ஒரு கிட்டாரிஸ்ட்.. அவளுக்கு வீணை மற்றும் பியானோ வாசிப்பதும் அத்துப்படி தான்.. 

 

பெரும்பாலும் இருச்சக்கர வாகனத்தை தான் பயன்படுத்தும் அனன்யா இன்று கிட்டாரை எடுத்து வர வேண்டி தன் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த கார்களில் ஒன்றை எடுத்து வந்தாள். 

 

ஈவண்ட்டை முடித்து விட்டு அஷ்வினை பார்க்கும் ஆவலில் மனதில் சந்தோஷத்துடனும், பெண்களுக்கே இருக்கும் ஒரு வித வெட்கத்துடனும் அஷ்வினை காண காரில் பயணித்தாள் பெண். 

 

அஷ்வினுக்கு கால் செய்து அவன் எங்கு இருக்கிறான் என்று கேட்டுக்கொண்டு அவ்விடம் நோக்கி அனன்யா வர, தன்னை புன்னகை முகத்துடன் பார்த்தபடி வந்தவளைக் கண்ட அஷ்வினின் புருவம் இடுங்கியது. 

 

‘எல்லா பணக்கார பந்தா.. ஏதோ டிரெஸ் போட்டு உடம்பை மறைக்கணுமேன்னு கடமைக்கு ஒரு டிரெஸ்.. இதுக்கு எதையும் போடமாலே இவ வந்துருக்கலாம்’ என மனதில் அவளை ரொம்பவே எளக்காரமாக எள்ளி நகையாடினான். 

 

பிரச்சனை அவளின் உடையில் இல்லை உன் மூளையில் தான் இருக்கிறது அஷ்வின் என்று அவனிடம் அப்போது சொல்லத் தான் யாரும் இல்லை.. 

 

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அனன்யாவின் உடை அவளுக்கு மிகவும் அழகாக இருந்தது.. அதில் ஆண்வர்க்கத்தையே தன் பக்கம் ஈர்க்க வேண்டிய கவர்ச்சியும் திணிக்கபடவில்லை. அவர்களின் பாலுணர்வை தூண்டும் விதமாகவும் அவள் உடை அணியவில்லை.. 

 

ஸ்டைலாக இருந்த அந்த உடை அஷ்வினுக்கு செக்ஸியாக தெரிந்தால் பிரச்சனை யாரிடம்? 

 

தன் மனதில் அவளை எளக்காரமாக நினைத்தாலும் வெளியே அவளிடம் இலகுவாக தான் உரையாடத் தொடங்கினான் அஷ்வின். 

 

அதில் தான் தெரிந்துக்கொண்டான்.. தங்கை விஜய்யிடம் சொல்லவேண்டிய விஷயத்தை எல்லாம் அனன்யாவிடம் தான் சொல்கிறாள் என்று. 

 

“உன் அண்ணன் விஜய் எல்லாமே உன்னைக் கேட்டு தான் தெரிஞ்சிப்பாரா..தங்கச்சின்னா அவ்வளவு பிடிக்குமா” என யோசனையுடன் கேட்டான். 

 

“ஐய்யயோ அப்படி எல்லாம் சுத்தமா இல்ல அஷ்வின்.. விஜய் அண்ணா க்கு அவர் அம்மான்னா ரொம்ப பிடிக்கும். ஆனா அவங்க கிட்டயே அவர் ரொம்ப லாம் பேச மாட்டாரு.. அப்போ என்கிட்ட எல்லாம் யோசிச்சு பாருங்க! எனக்கு பவித்ரா அண்ணியை ரொம்ப பிடிச்சுது” என்றவள் இழுக்க, 

 

“ஒ ஓ” என்றான் நம்பாத த்தொனியில். 

 

அதில் தடுமாறியவள், “அண்ணிக்காக போய் அண்ணாக்கிட்ட அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் கேட்குறேன்.. அண்ணாவும் சில தடவ பதில் சொல்லுவாரு.. சில தடவ சொல்லாம திட்டுவாரு” என அசடு வழிய சிரித்தாள். 

 

“உன் அண்ணனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லயா” என அடக்கப்பட்ட கோபத்துடன் அஷ்வின் கேட்க அனன்யா திகைத்து விட்டாள்.

அனன்யாவோ அதிர்ந்து விழிக்க, “உன் கிட்ட தான் கேட்குறேன்.. எனக்கு இதுக்கு பதில் தெரியலைன்னா நான் கண்டிப்பா இந்த கல்யாணத்தை கால் ஆஃப் பண்ணிடுவேன்” என்றான் பாருங்க.. ஆடிப்போய் விட்டாள் அனன்யா.. 

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
Share on
❤️ Loading reactions...
2 Comments
error: Content copy warning!!