பிரியாதிரு 20

இத்தனை நேரம் ப்ரீத்தாவை கண்டுக் கொள்ளாத விக்னேஷ் சோனியா பார்ப்பதை உணர்ந்து வேண்டும் என்றே ப்ரீத்தாவிடம் புன்னகை முகமாய் பேசினான். 

 

ப்ரீத்தாவிற்கோ அத்தனை ஆனந்தம்.. இத்தனை நேரம் தன்னை கண்டுகொள்ளாத விக்னேஷ் இப்போது புன்னகை முகமாய் பேசுகிறான் அல்லவா!

 

இப்போதும் கூட சோனியா விக்னேஷை உயிருக்கு உயிராக காதலிக்கிறாள். விக்னேஷூம் அப்படி தானே அவளை காதலித்தான். 

சோனியா அவனுக்கு செய்த பொய்கள், பிழைகள் இதை எல்லாம் அவன் மன்னிக்க தயாராக இல்லை. அதிலும் தன் குழந்தை கலைந்த விஷயத்தில் அவன் எரிமாலையாய் பொங்கி விட்டான்.

 

அதில் உண்மையாக சோனியாவின் தவறு இல்லை தான்.  ஆனால் அதை புரிந்து கொள்ளும் நிலையில் விக்னேஷ் இல்லை. 

 

சங்கீத் விழா கோலாகலமாக நடந்து முடிந்தது… 

 

அன்றிரவு சோனியாவிற்கு கொடுக்கப்பட்ட அறையில் அவள் படுக்க முனைந்த போது ஏதோ பெண் சொனியா என்று பெயரை உச்சரிப்பது அவளின் காதில் விழ, தன் அறைக் கதவை திறந்து பார்த்தாள் சோனியா. 

 

அவளின் அறைக்கு மிக அருகில் இருந்த காரிடரில் நின்றுக்கொண்டுருந்த விக்னேஷிடம் தான் வழிந்துக் கொண்டு இருந்தாள் ப்ரீத்தா.  

 

அன்றிரவு விக்னேஷிற்கு உறக்கம் வர மறுத்தது… வீம்புக்கு ஆரம்பித்த இந்த ப்ரீத்தாவின் விஷயம் இப்போது திருமணத்தில் வந்து நிற்பதை நினைத்து அவனுக்கு கடுப்பு தான்.. 

 

ஆனாலும் அவனால் சோனியாவின் தவறை மன்னிக்க முடியவில்லை.. 

 

சற்று நேரம் முன்னர் அவனின் அறைக்கு திடீரென்று வந்திருந்தாள் ப்ரீத்தா… அப்போது தான் இரவு நேர குளியலை முடித்து விட்டு இடுப்பில் துண்டுடன் இருந்தான் விக்னேஷ். 

 

இது தான் சாக்கு என்று அவனை பின்னிருந்து அணைத்தாள் ப்ரீத்தா. 

 

சோனியாவின் ஸ்பரிசம் உணர்ந்தவனுக்கு கண்டிப்பாக இது அவள் இல்லை என தெரிய வந்தது ப்ரீத்தா என யூகித்தான். 

 

இன்று சோனியாவை வெறுப்பேத்த ப்ரீத்தாவிடம் சிரித்து பேசியதின் விளைவு இப்போது அவனின் அறைக்கே சந்தோஷத்தில், மயக்கத்தில் வந்து விட்டாள். 

 

பட்டென அவளின் கைகளை உதறியவன், அவளை பலாரென்று அறைந்தான்.

 

“உனக்கு கொஞ்சமாச்சம் அறிவு இருக்கா ப்ரீத்தா… முதல்ல என் ரூமுக்குள்ள இந்த நேரத்துல நீ ஏன் வந்த.. அப்படியே வந்தாலும் என் கிட்ட பெர்மிஷன் கேட்டு உள்ளே வந்துருக்கணும்” என கத்த, ப்ரீத்தாவோ அடி வாங்கிய வலியில் கன்னத்தில் கைவைத்து கண்களில் கண்ணீருடன் பயத்துடன் நின்றிருந்தாள். 

 

“இந்த அடி நீ அன்னிக்கு கிஸ் பண்ணும் போதே கொடுத்துருந்தா இன்னிக்கு இப்படி அசிங்கமா பண்ணிருக்க மாட்ட” என்று அவன் கத்த, 

 

“நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க போறேன் விக்கி” என ப்ரீத்தா குழைய, 

 

“அது கல்யாணம் நடந்த அப்புறம் பாத்துக்கலாம்.. அதுக்கு முன்னாடி இதெல்லாம் கண்டிப்பா கிடையாது… இப்போ நீ வெளியே போ நான் டிரெஸ் சேன்ஜ் பண்ணனும்” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன். 

 

அப்போது சோர்வாக வெளியே சென்ற ப்ரீத்தாவோ, “நான் உங்களுக்காக வெளியே வெயிட் பண்றேன்.. இனி இந்த மாதிரி பண்ண மாட்டேன். பட் ப்ளீஸ் அதுக்காக வெளியே வராம மட்டும் இருந்துடாதீங்க” என்றாள் ஏக்கமாக. 

 

உஷ்ண மூச்சுகளை விட்டவனோ, “சரி வரேன்” என்றுவிட்டு உடைகள் அணிந்து அவன் வெளியே வர, 

 

“நம்ம கல்யாணம் பண்ண அப்புறம் இங்க டிராவல் பண்ணனும்” என ஆரம்பித்தவள் அவனிடம் பேணிக்கொண்டே நடக்க, அப்படித் தான் சோனியா இருந்த காரிடார் பக்கம் வந்தார்கள். 

 

“நான் உன்னை அவ்வளவு லவ் பண்றேன் விக்கி… உன்னைக் கல்யாணம் பண்ண அப்புறம் தினமும் உங்களை சந்தோஷமா வைச்சிப்பேன் அந்த சோனியா போல இருக்க மாட்டேன்” என சத்தமாக சந்தோஷத்துடன் சொல்லிக் கொண்டுருக்க அப்போது தான் அறைக் கதவை திறந்து வெளியே வந்தாள் சோனியா. 

 

ப்ரீத்தா மற்றும் விக்னேஷைக் கண்டதும் சோனியா ஸ்தம்பித்து நின்றுவிட, அவள் வந்ததை விக்னேஷ் கூட கண்டுவிட்டான். 

 

ஆனால் இம்முறை சோனியாவை வெறுப்பேற்ற வேண்டும் என்று ப்ரீத்தாவிடம் அவன் சிரித்து பேசவில்லை.. 

 

முகத்தில் எந்தவொரு உணர்வையும் காட்டாமல் அவன் சோனியாவையே அழுத்தமாக பார்க்க, பேணிக்கொண்டே இருந்த சோனியாவோ விக்னேஷின் பார்வை சென்ற பக்கம் புரியாமல் திரும்ப, அங்கு சோர்வான முகத்துடன் இவர்கள் புறம் பார்த்துக் கொண்டு இருந்தாள்.. 

 

ப்ரீத்தா பார்த்ததும் தான் சோனியாவிற்கு உணர்வே வர, பட்டென்று திரும்பியவள் அவளின் அறைக்குள் செல்ல முனைய, 

 

“ஏய் நில்லு” என அதட்டினாள் ப்ரீத்தா. 

 

அதில் சோனியா நின்று அவளை திரும்பி பார்க்க, “என்ன விக்னேஷை வேவு பார்க்குறியா” என கொதித்தாள். 

 

“பார்டன்” என்ற சோனியாவோ, விக்னேஷை கோபமாக பார்த்தபடி, 

 

“நான் இங்க ஒரு வேலையா தான் வந்தேன்.. அந்த வேலையைத் தாண்டி எந்த வேலையும் எனக்கு முக்கியம் இல்ல” என்றாள் உறுதியாக. 

 

சோனியாவின் கோப பார்வையை எல்லாம் அலட்சியப்படுத்திய விக்னேஷோ, “இந்த நைட்ல உனக்கு இங்க என்ன வேலை… ஈவன்ட் மேனேஜ்மென்ட் வேலை இங்க ஏதாவது நடக்குதா என்ன!” என நக்கலாக கேட்டான் விக்னேஷ். 

 

“அவளோட வேலையே உங்களை வேவு பார்க்குறது மட்டும் தான் விக்னேஷ்” என்றாள் ப்ரீத்தா ஏளனமாக. 

 

“மைன்ட் யுவர் வேர்ட்ஸ் மேடம்.. நீங்க பேசுறதைப் பார்த்தா உங்களுக்கு தான் உங்க வருங்கால ஹஸ்பண்ட் மேல நம்பிக்கை இல்லை போல”  என்ற பதிலடி தந்த சோனியாவிடம், “யு இடியட்” என கத்திய விக்னேஷை அலட்சியப்படுத்திய சோனியாவோ அவளின் அறைக்குள் நுழைந்து கதவை பட்டென்று சாற்றி விட்டாள். 

 

விக்னேஷிற்கோ அவள் பேசி விட்டு சென்றதைக் கேட்டு அத்தனை கோபம்… 

 

‘தான் என்ன அவ பின்னாடி சுத்துறேன்னு சொல்றாளா… தப்பு எல்லாம் பண்ணிட்டு எவ்வளவு திமிரா பேசிட்டு போறா.. உனக்கு இருக்கு டி’ என விக்னேஷ் ஒருப்பக்கம் கோபத்துடன் நினைக்க, 

 

ப்ரீத்தாவோ, ‘இவ இங்க இருந்தா கண்டிப்பா எனக்கு பிரச்சனை தான்.. இன்னும் அவளுக்கு விக்னேஷ் மேல ஆசை விடல.. அதனால இவளை கண்டிப்பா ஏதாவது செய்யணும்’ என மனதிற்குள் வன்மமாக நினைத்த ப்ரீத்தா சோனியாவை இங்கு இருந்து விரட்ட பிளானை போட ஆரம்பித்தாள். 

 

***

 

“என்ன விஷயம் சர்வா… எனக்கு நெஞ்சு எல்லாம் படபடன்னு வருது” என அமிர்தா அதிர, 

 

“அம்மு நீ நேர்ல வா.. அவனே சொல்லுவான்” என்றான் சர்வா வேகமாக. 

 

“இரு நான் கிளம்பி வரேன்” என்றவளோ வேகமாக குளித்து முடித்து கீழே செல்ல, 

 

“சாப்பிட வா அமிர்தா” என்றார் கவிதா. 

 

“ஆன்ட்டி அது ப்ராஜெக்ட் வொர்க் க்காக பிரண்ட்டை பாக்க போகணும் நான் வெளியே சாப்பிட்டுக்குறேனே” என்று அவள் தயங்கி சொல்ல, 

 

“நீ ஆத்மன் கிட்ட சொன்னியே மா” என்று கேட்டார் கவிதா. 

 

அவர் கேட்ட கேள்வியில் அமிர்தா விழிக்க, “அவ போயிட்டு வரட்டும் கவிதா” என்றார் அங்கு வந்த ராஜேஷ் ரெட்டி. 

 

“நம்ம வீட்டு மருமக நம்ம கார்ல போயிட்டு வரட்டும்” என்றார் கட்டளை கலந்த அக்கறையில். 

 

‘இப்போ முடியாதுன்னு சொன்னா கண்டிப்பா வெளியே விட மாட்டாங்க.. அதனால இவங்க சொல்ற கார்லயே போயிட்டு வந்திடலாம்’ என எண்ணியவள், “சரி அங்கிள்” என்றாள் பவ்வியமாக. 

 

டிரைவருடன் காரில் ஏறியவள் சென்றது என்னவோ ஒரு ரெஸ்டாரென்ட்டிற்கு தான்… 

 

ப்ராஜெக்ட் என்று சொல்லிவிட்டு இங்கு வருகிறோமே டிரைவரிடம் கேட்டாள் நாம் மாட்டிக்கொள்வோம் என்கிற எண்ணம் எல்லாம் அப்போதைக்கு அவளுக்கு தோன்றவே இல்லை.. 

 

சர்வா என்ன சொல்லப் போகிறானோ என்கிற பதற்றம் மற்றும் பயம் நான் அவளுக்கு மேலோங்கி நின்றது… 

 

அவளின் பயணத்திற்கு ஏற்ற விஷயத்தை தான் சர்வாவும் சொல்லப் போகிறான் என்பதை அவள் அறியவில்லை… 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!