பிரியாதிரு 23

பிரியாதிரு 23

 

அங்கு நிறைய மெஹந்தி கோன்களை வைத்து தான் இருந்தாள் சோனியா.. அதை ஆள் வைத்து எடுத்து திருடிவிட்டு வேண்டும் என்றே பிரச்சனையை கிளப்புகிறாள் ப்ரீத்தா. 

 

ஏற்கனவே சோனியா அங்கு இல்லாததால் குழப்பத்தில் இருந்த விக்னேஷ் இப்போது ப்ரீத்தா இப்படி கத்துகையில் எரிச்சலாக இருந்தது.. 

 

“மெஹந்தி கோன்க்கு ஏன் இப்படி சீன் கிரியேட் பண்ற ப்ரீத்தா.. இன்னிக்கு ஹால்டி ஃன்ஷன் தான் மெஹந்தி இல்ல” என கடுப்பான த்தொனியில் கேட்டான் விக்னேஷ். 

 

‘என்ன திட்டுறதுக்காவது இப்போ பேசினாரே!’ என மனதில் குளிர்ந்தவள், 

 

“அது விக்கி..” என அவள் திணறிக்கொண்டு இருக்கும் போதே, 

 

“மேடம் சோனியா அப்படி எல்லாம் விட்டு போக மாட்டாங்க… இந்தப் பொண்ணு கிட்ட அஞ்சு நிமிஷம் கடைய பாத்துக்க சொல்லிட்டு போனாங்க… இன்னும் காணும்” என்றான் பிரனவ். 

 

விக்கிக்கு ஏதோ தப்பாகப் பட்டது… 

 

“அப்படி என்ன அவ பண்ணிட்டு இருக்கா.. விக்கி வாங்க! வேலை பார்க்குறேன் வேலை பார்க்குறேன்னு நல்லா மகாராணி மாதிரி வேலை செய்யாம ஓபி அடிக்குறா” என்ற ப்ரீத்தா விக்னேஷை பார்க்க, விக்னேஷுக்குமே இப்போது சோனியாவைப் பற்றித் தெரியவேண்டி இருந்தது… 

 

“வா போலாம்” என்றவனோ ப்ரீத்தாவுடன் செல்ல, ப்ரீத்தாவிற்கோ மனமெல்லாம் சந்தோஷம். 

 

‘இன்னியோட உன்னோட சேப்டரையே நான் முடிக்குறேன் சோனியா’ என நினைத்தவளோ வன்மம் சூழ்ந்த புன்னகையுடன் விக்னேஷுடன் செல்ல, 

 

விக்னேஷின் காலடியோ அவளின் அறையை நோக்கி வேகமாக சென்றது.. 

 

அவளின் அறையோ சாற்றப்பட்டு இருக்க, கதவை ஓங்கி அடித்தான் விக்னேஷ்.. கதவு 

 

சரியாக அவன் அவளின் அறையைத் திறக்க, அங்கு கண்ட காட்சியை கண்டவனோ ஸ்தம்பித்து உறைந்து போனான்… 

 

****

 

அடுத்த நாள் காலை விழித்த அமிர்தாவிற்கு அனன்யா நம்பரில் இருந்து கால் வந்தது..

 

“சொல்லு அன்னு” என சோர்வாக பேசியவளிடம், “எப்படி இருக்க அம்மு… உன் வாய்ஸ் ஏன் ரொம்ப டல்லா இருக்கு” என பரிதவிப்புடன் கேட்டாள். 

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல டி” என கரகரத்த குரலில் ஆரம்பித்தவள் என்ன நினைத்தாளோ தன் அக்காவிடம் வெடித்து அழுதாள்… 

 

“ஏய் அம்மு என்ன ஆச்சு டி!” என்றவள் பதற, 

 

முதலில் இருந்து தனக்கும் ஆத்மனுக்கும் நடந்த அனைத்தையும் அனன்யாவிடம் சொல்லிவிட்டு அழுதாள் அமிர்தா… 

 

“அம்மு..” என அவள் அதிர்ச்சியில் பேச முடியாமல் திணற, 

 

“எனக்கு பாட்டு எவ்வளவு பிடிக்கும் அன்னு” என மீண்டும் அழுதபடி ஆரம்பித்தவள் இன்று வரை நடந்ததை விளக்க, 

 

“எனக்கு என்னவோ நீ ஆத்மன் அத்தானை ரொம்ப தப்பா நினைக்குறியோன்னு தோணுது அம்மு” என்றாள் அனன்யா தயங்கியபடி. 

 

“உனக்கு என்னை விட அந்த ஆத்மன் மேல தான் அதிக நம்பிக்கையா!” என கோபம் கலந்த அழுகையுடன் கேட்டாள் அமிர்தா. 

 

“இல்ல அம்மு.. எனக்கு என்னமோ அவர் உன் மேல இருக்குற காதல்ல தான் இப்படி எல்லாம் பண்றாரோன்னு தோணுது” என்றாள் அனன்யா. 

 

“மண்ணாங்கட்டி” என்றாள் அமிர்தா கடுப்பாக. 

 

“சரி அம்மு உன் வழிக்கே வரேன்… ஆனா இன்னிக்கு நீ அவசரப்பட்டு போகாத.. ஆத்மன் அத்தான் வந்ததும் அவர் கிட்ட நடந்ததை சொல்லு… நீ அவசரப்பட்டு இன்னிக்கு போகாத” என்றவள் சொல்ல, 

 

“நான் போவேன் அன்னு.. எனக்கு எல்லாத்தையும் விட என்னோட பாட்டு தான் முக்கியம்… ஆத்மன் என்னை வலுக்கட்டாயமா சந்தர்ப்ப சூழ்நிலையில் கட்டிப்போட்டு தொட்டான் தான்.. அதுக்கு அப்புறம் கூட நான் அவனை என்னோட கணவனா அக்செக்ட் பண்ண ஆரம்பிச்சிட்டேன் அன்னு… நான் ஒரு மடச்சி தானே!” என அழுதபடி தலையில் அடித்துக் கொண்டாள் அமிர்தா.. 

 

“அம்மு… நீ ஆத்மனை காதலிக்குறியா” என மிக தயங்கியபடி கேட்டாள் அனன்யா. 

 

“தெரியல அன்னு… ஆனா அவரை என் ஹஸ்பண்ட்டா அக்செப்ட் பண்ண ஆரம்பிச்சிட்டேன்… அதை நினைச்சா எனக்கே அவமானமா இருக்கு” என குலுங்கி குலுங்கி அழுதவளின் ஃபோன் செகண்ட் கால் வர, 

 

“அன்னு… சர்வா கால் பண்றான் நான் உனக்கு போயிட்டு வந்து கால் பண்றேன்” என்றவள் கண்களை அழுத்த துடைத்துக் கொண்டபடி சொல்ல, 

 

“அம்மு.. எதுவா இருந்தாலும் யோசிச்சு பண்ணு டி” என அக்கறையாக சொன்னவளிடம், “ம்” என்று மட்டும் சொன்னவள் கால்லை அணைத்துவிட்டு சர்வாவுக்கு அழைத்தாள். 

 

“அம்மு.. கிளம்பிட்டியா” என கேட்டவனின் குரல் தொண்டை அடைத்தது போல இருந்தது. 

 

அவனின் அந்த குரலே காட்டிக்கொடுத்தது அவன் அழுது துவண்டு இருக்கிறான் என்று… 

 

“அழுதுருக்கியா சர்வா” என சோர்ந்த குரலில் அவள் கேட்க, 

 

“ஆமா அம்மு.. பட் நான் இதுல இருந்து வெளியே வந்திடுவேன்… நீ உன் வாழ்க்கையைப் பாரு… ஆத்மனை நீ உன் புருஷனா ஏத்துக்குறது எல்லாம் உன் இஷ்டம் ஆனா உன் பாட்டை உன் உரிமையை விட்டுக்கொடுத்துடாத… இன்னிக்கு உன்னோட ரெக்கார்டிங் முடிச்ச அப்புறம் கண்டிப்பா உன் புருஷன் கிட்ட உனக்கான நியாயத்தைக் கேளு” என்றான். 

 

“கண்டிப்பா சர்வா.. நான் எனக்கான நியாயத்தை ஏன் பறீச்சீங்கன்னு கண்டிப்பா கேட்காம விட மாட்டேன்.. இந்த கல்யாண வாழ்க்கை விட எனக்கு என் பாட்டு தான் முக்கியம்” என விரக்தியாக ஆரம்பித்தவளோ உறுதியாக முடித்தாள்.

 

அடுத்த ஒரு மணி நேரத்தில் கீழே இறங்கி வந்த அமிர்தா சாப்பிட்டுவிட்டு, 

 

“ஆன்ட்டி ப்ராஜெக்ட் விஷயமா என் பிரண்ட்ஸ் பாக்கணும்… அவளே என்னை கூப்பிட வரா… நாமே போயிப்பேன்” என்று அவள் அவசரமாக சொல்ல, 

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல ஆத்மன் வந்திடுவான் அமிர்தா.. அதுக்கு அப்புறம் கிளம்பு” என்றார். 

 

“என் பிரண்ட்ஸ் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க ஆன்ட்டி.. டைம்க்கு வரலேன்னா தப்பா எடுத்துப்பாங்க” என்றவள் சொல்ல, 

 

“சரிம்மா” என விட்டுவிட்டார். 

 

ராஜேஷ் ரெட்டி அன்று வீட்டில் இல்லை.. 

 

அமிர்தாவும் சாப்பிட்டு முடித்த பின்னர் சர்வாவுடன் அவனின் காரில் கிளம்பினாள்… 

 

இதை தன் வீட்டு பால்கனியில் இருந்து கவனித்த கவிதாவிற்கோ முகம் சுருங்கியது… 

 

சர்வாவின் கார் ஒரு பெரிய ஸ்டுடியோவில் நின்றது… 

 

ஊருக்கு ஒதுக்கு புறம் இருந்தது அந்த ஸ்டுடியோ.. சுற்றி ஆட்கள், வீடுகள் ஏன் போக்குவரத்து கூட எங்கும் இல்லை… 

 

சர்வாவுடன் இறங்கிய அமிர்தாவிற்கோ அந்த இடத்தைப் பார்த்ததுமே உள்ளுக்குள் பயம் பரவியது… 

 

“என்ன சர்வா இந்த இடம் இவ்வளவு லோன்லியா இருக்கு!” என அவள் மருட்சியாக கேட்க, 

 

“பாட்டு மியூசிக் போடுறாங்க தானே.. டிஸ்டர்பன்ஸ் இல்லாம இருக்கணும்னு இப்படி இருக்கலாம்” என சொன்னாலும் சர்வாவுக்கும் இந்த இடத்தைக் கண்டு லேசான பயம் பரவத் தான் செய்தது. 

 

ஆனாலும், “அதான் நான் இருக்கேன் ல அம்மு… நீ பாடுறது தான் முக்கியம்” என்றான் நம்பிக்கையுடன். 

 

அரை மனதுடன் தலை ஆட்டியவள் அவனுடன் உள்ளே செல்ல, அவளுக்காக காத்துக்கொண்டு இருந்தார்கள் இசைக் குழுவினர்கள்… 

 

அதில் சில பெண்களும் இருக்க அவளுக்கு அப்போது தான் நிம்மதியே வந்தது… 

 

இசையமைப்பாளர் தன்னை அமிர்தாவிடம் அறிமுகப்படுத்தி விட்டு பாடுவதற்காக சொல்லி கொடுக்க அதை எல்லாம் கூர்ந்து கவனித்தாள் அமிர்தா. 

 

சர்வா வெளியே போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்து இருந்தான்… 

 

அப்போது அந்த இடத்தில் சீறிப்பாய்ந்து வந்தது ஒரு பென்ஸ் கார்… 

 

அதிலிருந்து இறங்கி வந்தான் ஆடவன் ஒருவன்… அவன் ஜீவன்.. தற்போது ஆத்மனுக்கு இருக்கும் மிகப் பெரிய போட்டி இவன் தான்… 

 

வெற்றி பெறுவது என்னவோ ஆத்மன் தான்.. 

அதனால் அவன் மீது பயங்கர பொறாமையில் கடுப்பில் இருக்கிறான்… 

 

கிட்டத்தட்ட ஆறடி இருப்பான்.. அவன் ஆக்ரோஷமாக காரில் இருந்து கீழே இறங்கி வர, அவனின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடி வந்தான் வெங்கட். 

 

அவர்களைப் பார்த்த சர்வா புன்னகையுடன் எழ, அவனைக் கண்டுக்கொள்ளாமல் உள்ளே சென்றான் ஜீவன்.. 

 

“ஹாய் சர்வா.. வெயிட்” என்றுவிட்டு ஜீவனின் பின்னே சென்றான் வெங்கட்… 

 

தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் அமிர்தா பாடலை பாடியபடி பிராக்டிஸ் செய்துக் கொண்டு இருக்க, அவளின் அறைக்கதவை தட்டாமல் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் ஜீவன். 

 

அதில் திடுக்கிற்றுப்போனாள் அமிர்தா… 

 

ஆனால் அவனோ அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல், “ஹாய் அமிர்தா” என கையை நீட்டியபடியே அவளை மேலிருந்து கீழ் ஒரு மாதிரியாக பார்க்க, அமிர்தாவிற்கு சற்று முன்னால் விட்ட பயம் இப்போது மீண்டும் எழ ஆரம்பித்தது… 

 

அவளோ “ஹா.. ஹாய்” என திக்கித் திணறியபடி கை கொடுக்காமலே சொல்ல, 

 

“என்ன அமிர்தா..  கை கொடுக்கவே இவ்வளவு யோசிக்குற… இதுக்கே இவ்வளவு தயங்குனா அப்போ மத்ததுக்கு என்ன பண்ணுவ..” என்றவனோ அவனின் சட்டை பட்டனை கழட்ட, அமிர்தாவின் உடலோ சிலையாகி உறைநிலைக்கே சென்றது… 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!