பிரியாதிரு 25

அமிர்தா கண் விழிக்கும் போது அவளுடன் இருந்தது கவிதா, ஸ்வாதி மற்றும் அஜய்

 

ஆம், தன் தங்கையைப் பார்க்க அஜய் வந்துருக்க, ஸ்வாதிக்கும் அதே ஆர்வம்… 

 

அவர்கள் வரும் பொழுது இங்கே அமிர்தா இல்லை.. 

 

ராஜேஷ் ரெட்டிக்கு ஏற்கனவே காலையில் இருந்து ஏகப்பட்ட கால்கள்.. 

 

“ஆத்மன் ஏன் ஆடியோ லான்ச்சை ரெண்டு நாள் கழிச்சு தள்ளி வைச்சிருக்கார்” என வரிசையாக கால்கள் வந்தன. 

 

ஒரு சில பத்திரிக்கைகளிலோ, “ஆத்மனுக்கும் சிந்துஜா வுக்கும் இருந்த ரகசிய தொடர்பில் விரிசல்.. அதனால் படத்தின் ஆடியோ விழா பின்னர் தேதிக்கு செல்கிறது” என வதந்திகள் வர ஆரம்பித்தது… 

 

இத்தனைக்கும் சிந்துஜாவுக்கும் ஆத்மனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட விஷயத்தை அவர்கள் பத்திரிக்கையில் வெளியிடவில்லை… 

 

ஆனாலும் சிலருக்கு விஷயம் கசிந்திருந்தது.. 

இந்த பிரச்சனையை ராஜேஷ் ரெட்டி சரிப்பார்த்து கொண்டுருக்க, ஆத்மனுக்கு அழைத்துப் பார்த்தார் கவிதா.. 

 

அவனோ அழைப்பை எடுத்தால் தானே… 

 

சில மணி நேரங்கள் இப்படி பதற்றமான சூழல் நிகழ, அப்போது தான் அஜய் மற்றும் ஸ்வாதி வீட்டிற்கு வந்தார்கள்… 

 

“அண்ணி எங்க ம்மா?” என ஸ்வாதி ஆர்வமாக கேட்க, 

 

“அது… வெளியே போனா ம்மா இன்னும் வரல” என்று அவர் இழுக்கும் போதே, 

 

மயங்கிய நிலையில் இருந்த அமிர்தாவை கையில் ஏந்தியபடி இறுக்கமான முகத்துடன் வந்தான் ஆத்மன்… 

 

அவனைக் கண்ட குடும்பத்தினர் அனைவரும் பதறியபடி, “ஆத்மா அமிர்தா வுக்கு என்னாச்சு” என பதற, 

 

“ஒன்னும் இல்ல ம்மா…  அவ சரியா சாப்பிடல போல.. நான் டாக்டரை பார்த்துட்டு தான் வரேன்..” என்றவனோ அவர்களின் அறைக்கு சென்று அமிர்தாவை கட்டிலில் படுக்க வைத்தான். அவள் இன்னும் மயக்க நிலையில் தான் இருந்தாள்… 

 

கண்களில் கசிந்த கண்ணீருடன் அவளைக் கண்டபடியே சோஃபாவில் சோர்வாக அமர்ந்தவன், கண்களை இறுக்க மூடினான்… 

 

அவனின் ஃபோன் அலறல் சத்தம் கேட்க அதை எடுத்தவனோ, “எஸ்” என வரண்ட குரலில் சொல்ல, 

 

“சார்.. அந்தப் பையன் சர்வாவையும் ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டோம்” என ஒருவன் சொல்ல, 

 

“குட்.. அவன் ஓகே தான” என கேட்டான். 

 

“மயக்கம் மாத்திரையை எதுலயோ கலந்து கொடுத்துருக்காங்க சார்.. மயக்கம் தெளிய ஒரு மணி நேரம் ஆகுமாம்” என்றான் மறுப்பக்கத்தில் இருந்தவன், 

 

“ஓகே.. அவன் முழிச்ச அப்புறம் கால் பண்ணு” என்றவனோ கால்லை கட் செய்தவன் அடுத்து யாருக்கோ கால் செய்து, 

 

“அந்த ஜீவனும் வெங்கட்டும் இனி சினிமா இன்டஸ்ட்ரீலயே இருக்க கூடாது…” என கட்டளையாக சொல்லிவிட்டு வைத்தவன் அடுத்து இன்னொருவனுக்கு கால் செய்து, 

 

“ஜீவனுக்கும், அந்த வெங்கட்டுக்கும் உடம்புல உயிர் மட்டும் தான் இருக்கணும்… அவனுக்கு மரணத்தை விட கொடுமையா தண்டனை கொடு” என ஆக்ரோஷமாக சொன்னவன் கால்லை அணைத்துவிட்டு சற்று நேரம் அதே ஆக்ரோஷத்துடன் தான் அமர்ந்து இருந்தான்… 

 

சர்வாவுக்கு பால் கொடுத்து அதில் தூக்க மாத்திரையை கலந்திருந்தார்கள்… அவன் மயங்கிய நிலையில் இருந்த கோலமே அவனுக்கு உணர்த்தியது அவனுக்கு ஜீவனுடன் தொடர்பு இல்லை என்று… 

 

சில வருடங்கள் முன்னர், அமிர்தா ஒரு பாட்டு போட்டியில் வெற்றி பெற்றாள்.. அதற்காக அவளை பாட வைப்பதாக ஒப்புக் கொண்டான் இசையசைப்பாளர்.. அதை தூண்டியதே ஜீவன் தான்… 

 

அது அந்த இசையமைப்பாளருக்கு முதலில் தெரியாது… 

 

இவனின் இசையில் தான் அமிர்தா பாடப்போகிறாள் என்று அறிந்த ஆத்மன் அந்த இசையமைப்பாளரிடம் அமிர்தா அவனுக்கு மிகவும் முக்கியமானவள் என்று சொல்லியிருக்க, ஆத்மனின் நேர்மை திறமை மிகவும் பிடித்த அந்த இசையமைப்பாளருக்கு ஜீவனின் அமிர்தா மீதான மோகம் புரிந்து அவனிடம் உடனே சொல்லிருக்க, ஜீவனை அப்போதே அடித்து துவம்சம் செய்த ஆத்மன் தன் பண பலத்தையும், ஆள் பலத்தையும் வைத்து ஜீவனை அமிர்தாவை நெருங்க விடாமல் செய்தான்.. 

 

அதனின் விளைவு அமிர்தா பாடிய பாட்டு வெளியே வரவில்லை.. 

 

வெங்கட் ஜீவனின் அசிஸ்டெண்ட் டேரக்டர், அவனும் அடுத்து வந்த படங்கள் வைத்து அமிர்தாவை அடைய முனைய அதற்கும் செக் வைத்தான் ஆத்மன்… 

 

வெங்கட்டையும் ஜீவன் போல பலமாக வைத்து செய்தான் ஆத்மன்… 

 

அந்த பழி வெறியில் தான் இருவரும் இப்போது அமிர்தாவை பிளான் போட்டு வர வைத்தனர்… 

 

அதன் பின்னர் தான் தன்னவளை ஆத்மன் ஹீரோவாக வந்து காப்பாற்றி விட்டானே! 

 

***

 

விக்னேஷ் கொடுத்த அடியில் அதிர்ச்சியில்  கன்னத்தில் கைவைத்தபடி அசையாது நின்றாள் ப்ரீத்தா.. 

 

“ஒரு பொண்ணைப் பத்தி தெரியாம தப்பா பேசாத ப்ரீத்தா..” என்றவனோ, சோனியா புறம் திரும்பி, 

 

“இது நீ இல்ல யார் இருந்தாலும் இப்படித் தான் பேசுவேன்… உடனே இதை சாக்கா வைச்சு என்னை நெருங்க முயற்சி பண்ணாத” என அதிரடியாக சொன்னவன் வேகமாக தன் அறைக்குச் சென்றான் என்று பெண்கள் நினைத்திருக்க, விக்னேஷோ அந்த ஆடவனை தேடியல்லவா வேகமாக சென்றான். 

 

அவனின் வேக நடைக்கு அவன் மறையும் முன்னே கண்டு கொண்டவன் அவனைப் பிடித்து சரமாரியாக அடிக்கத் தொடங்கினான்… 

 

கிட்டத்தட்ட வெறிப்பிடித்த போல அடித்தான்! 

 

“சொல்லு டா.. உன்னை யார் அனுப்பி இந்த மாதிரி பண்ண சொன்னா” என விக்னேஷ் அவனை அடித்தபடி கர்ஜித்தான்… 

 

ப்ரீத்தா தான் இவ்வாறு செய்ய சொல்லியிருப்பாள் என்கிற யூகிப்பு அவனுக்கு இருந்தது…

 

அவனோ விக்னேஷிடம் வாங்கிய அடியை பொறுக்க மாட்டாமல் மயங்கியே விழுந்துவிட, அதற்கு மேல் விக்னேஷ் அங்கு நிற்கவில்லை.. 

 

அன்று இரவு விக்னேஷிற்கு உறக்கம் வரவில்லை… 

 

இந்த கல்யாணத்தை வீம்புக்கென்று ஒப்புக் கொண்டான்.. அதன் பின்னர் ஏராளமான விஷயங்கள் நடந்துவிட்டன. 

 

அதனால் தான் இன்று இந்நொடி ப்ரீத்தாவை திருமணம் செய்யப் போகிறேன் என்று நிற்கிறான்… 

 

சோனியாவின் மீது வெறுப்பு, கடுப்பு இருந்தாலும் கூட அவள் அவனைத் தவிர யாரையும் பார்க்க மாட்டாள் என விக்னேஷிற்கு நூறு சதவீதம் தெரியும்… 

 

அவளுக்காக துடித்த தன் மனதை கட்டுப்படுத்த நினைத்தவன் முடியாது போக, அந்த ஆடவனை துரத்தி வந்து அவனை துவம்சம் செய்திருந்தாலும் அவனின் மனது ஆறவில்லை… 

 

உறக்கமும் வரவில்லை… உடலில் ஒரு மெல்லிய டீசர்ட்டையும், கீழே அரை பேன்ட்டும் அணிந்தவன் அவனின் அறையில் இருந்து வெளியே வந்து வெளியே இருந்த பூங்காவிற்கு சென்றான்… 

 

இயற்கை காற்றை சுவாசித்தாலாவது தன் மனப்புழுக்கம் குறையுமா என்கிற நோக்கத்துடன் அவன் வந்திருக்க, சோனியாவோ அங்கிருந்த நிலாவை வெறித்தபடி நின்றிருந்தாள்… 

 

கண்களில் சோகம் தழும்ப வெறுமையுடன் நின்றுருந்தவளின் பக்கம் சென்றவனை அவள் கவனிக்கவில்லை… அவளின் கவனம் தான் முழு நிலாவில் இருந்ததே… 

 

“தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க!” என அவன் சாதாரணமாக தான் கேட்டாள்… ஆனால் பெண்ணவள் தான் திடுக்கிட்டு விட்டாள்… 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!