பிரியாதிரு 34

பிரியாதிரு 34

 

இரவு நேர தென்றல் காற்று ஆத்மனை தீண்டினாலும் அவனின் மனதில் வெறுமை மட்டுமே சூழ்ந்து இருந்தது… 

 

தென்றல் காற்றை அனுபவிக்கும் நிலையில் ஆணவன் இல்லை… 

 

சற்று நேரம் அங்கு நடந்தவனோ அவனின் அறை நோக்கி செல்ல, “ஆத்மா.. அமிர்தா சாப்பிடாமலேயே தூங்கிட்டா” என்றார் கவிதா. 

 

அதற்கு யோசனையாக தலையசைத்தவன், அவனின் அறைக்குள் செல்ல, அமிர்தாவோ அவள் அமர்ந்து இருந்த சோஃபாவிலேயே உறங்கி விட்டுருந்தாள். 

 

அவளை எழுப்ப மனமில்லாதவனோ, உறங்கும் அவளை குழந்தை போல தன் கைகளில் ஏந்தி அவளை கட்டிலில் படுக்க வைத்தான்… 

 

அந்த அசைவில் விழித்த அமிர்தாவோ பட்டென்று விழித்து விட, “சாப்பிட்டு தூங்கு” என்றுவிட்டு கட்டிலில் படுக்க ஆயத்தமானான் ஆத்மன். 

 

“நான் சாப்பிட்டா உங்களுக்கு என்ன சாப்பிடாட்டி உங்களுக்கு என்ன!” என கோபம் கலந்த ஆதங்கத்துடன் கேட்டாள் அமிர்தா. 

 

இப்போது ஆத்மனுக்கும் ஏறிக்கொள்ள, “ஃபுட் வேஸ்ட் பண்ணா எனக்கு சுத்தமா பிடிக்காது.. உனக்காக சமைச்சதை நீ தான் சாப்பிடணும்” என கட்டளையை போல சொல்ல, 

 

“எனக்கு டைவர்ஸ் வேணும்” என்றாள் அமிர்தா பிடிவாதமாக. 

 

இத்தனை நேரம் அழுத்தமாக இருந்தவனின் முகமோ இப்போது முழு கோபத்தை தன் முகத்தில் தத்தெடுத்த நொடி, “அமிர்தாவுக்கு உன்னை பிடிக்கலைன்னு சொல்லட்டும்… அதுக்கு அப்புறம் அவ நிழலை கூட உன்னை நெருங்க விட மாட்டேன் ஆத்மன்” என்கிற வார்த்தைகள் தான் அவனின் மூளைக்குள் ஓடிக்கொண்டு இருந்தது… 

 

“உனக்கு டைவர்ஸ் தானே வேணும்.. சரி பண்ணிடலாம்” என்றவன் படுத்து விட்டான்… 

 

அமிர்தாவிற்கு தான் சில நிமிடங்கள் மூளையே நின்று விட்டது… இதயம் கூட வேலை செய்ய மறுத்தது… 

 

அவள் ஒரு வேகத்தில் விவாகரத்து கேட்டாள் தான்… ஆனால் அதற்கு அவன் காரணம் கேட்பான் அப்போது தன் மன ஆதங்கத்தை எல்லாம் சொல்லலாம் என்று தானே நினைத்துருந்தாள்… ஆனால் அவனோ கொஞ்சம் கூட யோசிக்காது சரி என்று சொல்வான் என்று அவள் கிஞ்சித்தும் நினைக்கவில்லையே! 

 

அப்படி அவன் சொன்ன பின்னர் பெண்ணவளுக்கு உறக்கம் தொலைந்தே போனது…

 

வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கும் போது பெண்ணவளுக்கு உறக்கம் என்பது எப்படி வரும்… அவள் இரவில் சாப்பிடாமல் தான் வந்தாள் பசியும் கூட இப்போது மறத்து விட்டது… 

 

அங்கே கண்களை மூடி உறங்கிக் கொண்டுருக்கும் ஆத்மனை பார்க்க பார்க்க அவளுக்கு ஆத்திரம் மேலோங்கி வந்தது.. 

 

அவளைப் பொறுத்த வரை ஆத்மன் உறங்குகிறான்… ஆனால் கண்கள் மூடியிருந்தாலும் ஆத்மன் உறங்கவில்லை என்பது அவளுக்கு புரியவா போகிறது… 

 

‘உன்னை தொந்தரவு பண்ணக் கூடாதுனு நான் அமைதியா இருந்தால் என்னை விட்டு மொத்தமா விலகி போக முடிவு பண்ணிட்டியே டி… இப்பயும் நான் பண்ணிக் கொடுத்த சத்தியத்துக்காக தான் நீ சொல்ற எல்லாத்துக்கும் சரி சொல்றேன்… இல்லன்னா என்னை விட்டுட்டு போக உன்னை விடமாட்டேன் டி’ என மனதில் வெறுமையாக சொன்னவனோ கண்களை மட்டும் தான் மூடியிருக்கிறான் ஆனால் அவனுக்கு உறக்கம் எட்டாக் கனியாகி தான் போனது!!!! 

 

எவ்வளவு நேரம் தான் நிலாவை வெறித்து பார்க்க முடியும்.. உடல் சோர்ந்தது அப்படியே சோஃபாவில் வந்து விழுந்தவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை… 

 

அடுத்த நாள் முதலில் விழித்தது என்னவோ ஆத்மனுக்கு தான்… 

 

சோஃபாவில் உறங்கிக் கொண்டு இருப்பவளை கண்டவனோ, ‘இனி என்னொட ஒரே கட்டில்ல படுக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணி சோஃபாவுக்கு போயிட்டல.. ஏன் டி உனக்கு என்னை கொஞ்சம் கூட பிடிக்கமாட்டிங்குது’ என மனம் வருந்தியவன் வெறுப்புடன் வொர்க்ஔட்ஸ் செய்ய ஆயத்தமானான். 

 

****

 

“சோனியா இன்னும் வேலைக்கு கிளம்பலையா” என அவளின் தந்தை விசாரிக்க, 

 

“இ.. இதோ கிளம்புறேன் ப்பா” என்றவளுக்கு தான் கிளம்ப சோர்வாக இருந்தது… அதையும் தாண்டி பயம்…

விக்னேஷின் மீது ரொம்பவே பயம்! 

 

ஆனாலும் அவள் பொறுப்பில் இருக்கும் வேலையை விட முடியாமல் கிளம்பினாள்… 

 

அன்று காலையில் இருந்து அவளின் கண்களில் விக்னேஷ் படவே இல்லை…

 

‘ஒருவேளை ஈவ்னிங் வருவானா.. இல்ல ஆபிஸ் ரூம்க்குள்ளயே இருக்கானா’ என்று குழம்பிய மனம் பலவாறு யோசித்தது…

 

“மேடம், இன்னிக்கு விக்னேஷ் சார் இல்லையாம்.. அதனால இன்னிக்கு சுப்புரத்னம் சார் கிட்ட தான் ஈவ்னிங் நம்ம ரிப்போர்ட் பண்ணனும்னு சுப்பு சார் சொன்னாரு” என்றாள் கிருபா. 

 

‘தாங்க் காட்.. இன்னிக்கு அவன் இல்ல’ என மனதில் பெரும் நிம்மதி பெருமூச்சு விட்டவள் தன் வேலையில் ரொம்பவே சுறுசுறுப்பாகவே செயல் பட்டாள். 

 

அன்று கிளம்பும் போது கூட விக்னேஷ் அங்கு வரவில்லை… ஒருப்பக்கம் பெண்ணவளுக்கு நிம்மதி இருந்தாலும் இன்னொரு பக்கம், ‘விக்னேஷ்க்கு உடம்பு ஏதாவது சரி இல்லாம இருக்குமோ!’ என கலங்கியது அவளின் காதல் கொண்ட மனம்… 

 

என்னது காதலா… என ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் அவளின் மனசாட்சியே அவளிடம் பகிரங்கமாக கேள்வி எழுப்ப, 

 

‘அவன் மேல முன்னாடி வைச்ச காதலோட தடம் இப்போ அச்சா மனசுல பதிஞ்சு கிடக்கு.. மத்தபடி அவன் மேல காதலும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல… இன்னொருத்தியோட புருஷனை காதலிக்குற ஈனப் பிறவி நான் இல்ல’ என்று தன் மனசாட்சிக்கே வேகமாக பதில் கொடுத்தாள் சோனியா. 

 

அவளின் மனசாட்சியும் விடாமல், ‘அப்போ அவனுக்கு உடம்பு சரியில்லைன்னு அவனைப் பாத்துக்க அவன் பொண்டாட்டி இருக்கா நீ அதைப் பத்தி யோசிக்காத’ என்று செருப்பால் அடித்தது போல எடுத்துரைக்க, அதை ஏற்று மௌனியானவள் அவனைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு சுப்புரத்னத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள். 

 

***

இரவு மணி ஒன்பது இருக்கும்.. இன்னும் ஆத்மன் வீட்டிற்கு வரவில்லை.. 

 

அன்று காலை அமிர்தா விழிக்கும் போதே ஆத்மன் வீட்டில் இல்லை.. அன்று அவனின் படம் வெளியாகிறது அல்லவா.. 

 

பெரும் பட்ஜெட்டில் படம் உருவாகவில்லை என்றாலும் அப்படத்திற்கு இந்தியா முழுவதும் பிரமோஷன்களிலேயே ஏராளமான வரவேற்பு இருந்தது… 

 

ஆடியோ லான்ச்சை மிக பிரம்மாண்டமாக வைக்க திட்டம் இட்ட சமயத்தில் தான் சிந்துஜாவின் வீட்டில் ஐடி ரைட் வந்தது.. 

 

தன்னிடம் உள்ள பணம் அனைத்திற்கும் சிந்துஜாவிடம் சரியாக கணக்கு காட்டியிருந்தாலும் கூட, “நீங்க வைக்க போற ஆடியோ லான்ச்ல நிறைய பிளாக் பணியை வைட் மணியா கன்வெர்ட் பண்ற பிளான் இருக்குனு எங்க டிபார்ட்மெண்ட்க்கு நியூஸ் வந்துச்சு” என சொல்ல அவளுக்கு தலையில் இடியே விழுந்தது.. 

 

அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு இல்லையே… வரவு, செலவு என எல்லாவற்றுக்கும் அவள் சரியாக கணக்கு காட்டி துக்க இப்படி ஒரு அபாண்டமான பொய் பழி அவளை மனதளவில் ஒடுக்கி விட்டது.. 

 

அப்போது உற்ற தோழனாக அவளுக்கு துணை நின்ற ஆத்மன் தான், “இப்படி ஒரு சினாரியோல நீ ஆடியோ லான்ச் வைக்காத சிந்து.. அது இன்னும் நான் காம்ப்ளிகேஷன்ஸ் வரும்.. நம்ம படத்தை நல்லா பிரமோட் பண்ணலாம்.. நல்ல படத்துக்கு ஆடியோ லான்ச் எல்லாம் தேவையே இல்லை” என தைரியம் கொடுத்த ஆத்மனின் மனதிலோ அமிர்தாவின் முதல் பாடல் ஆடியோ லான்ச்சில் பிரம்மாண்டமாக வராது இருப்பது வருத்தம் தான்.. ஆடியோ லான்ச் வைத்திருந்தால் கண்டிப்பாக அமிர்தாவை அழைத்து மேடையிலேயே பாட வைத்திருப்பானே! 

 

இதோ இன்று ரிலீஸான அவனின் படம் சக்கைப் போடு போட்டுக் கொண்டுருக்க, ஆத்மனின் வீட்டிலோ ராஜேஷ் ரெட்டி பிரத்யேக சினிமை செய்திகள் சொல்லும் சேனலை தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.. 

 

மகனின் படம் சிட்டியில் இருந்து பட்டி தொட்டி வரை தூள் கட்டி பறந்துக்கொண்டுருக்க அதை மனைவியுடன் இன்பமாக கண்டுக்கொண்டுருந்தார்… 

 

அமிர்தாவும் ஹாலில் நான் இருந்தாள்.. தொலைக்காட்சியைப் பார்க்காதே என்று அவளின் மூளை அடித்துக் கொண்டாலும் அவளின் மனமோ அவளையும் மீறி தன்னவனின் வெற்றியைப் பற்றி பிறர் பேசுவதை பார்த்தது… 

 

அதில் படத்தின் முதல் காட்சி முடியும் தருணத்தில் மொத்த படக்குழுவும் இருந்த சமயத்தில், படத்தை பார்த்த மக்கள் அனைவரும் இப்படம் ஹிமாலய வெற்றி அடையும் என்று கூச்சலிட்டு கத்த, சந்தோஷத்தில் திளைத்த சிந்துஜா ஆத்மனை கட்டி அணைத்து அவனின் கன்னத்தில் முத்தமிட அதனை லைவ்வாக கண்டுக்கொண்டுருந்த ஆத்மனின் அப்பா மற்றும் அம்மா அதிர்ந்தார்கள் என்றால் அமிர்தாவோ அவள் கண்ட காட்சியில் அதிர்ச்சியில் உறைந்து சிலையானாள்… 

 

 

 

 

 

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!