பிரியாதிரு 36
மாலை நான்கு மணி இருக்கும்…
எப்போதும் தங்களுடன் கலகலப்பாக பேசும் அமிர்தா இப்போது சில நாட்களாக அமைதியே உருவமாக இருப்பது தான் இப்போது ஆத்மனின் பெற்றோர்களின் கவலை…
ஆத்மன் வந்ததும் அவனிடம் பேசவேண்டும் என அவர்கள் முடிவெடுத்துருக்க, அவர்களின் எண்ணத்தின் நாயகனே வந்துவிட்டான்…
ஆம், அவனின் படமோ அமோக வெற்றி.. படம் வெளியாகி முழுதாக ஒரு வாரம் கூட ஆகவில்லை என்றாலும் கூட இதுவரை 650 கோடிகள் அபார வசூலை எடுத்து விட்டது…
அதிலும் அமிர்தாவின் குரலில் வந்த பாடலோ முன்பே வா பாடலை போல கிளாசிக் காதல் பாட்டாக எல்லா இசைத்தளங்களிலும் ட்ரென்டிங்கில் வந்துருக்கிறது…
தன் வீட்டிற்குள் நுழைந்த ஆத்மனை வரவேற்றார்கள் அவனின் பெற்றோர்கள்…
தன் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை எல்லாம் தன்னுடைய வேலையில் என்றுமே ஆத்மன் காட்டியதில்லை.. அப்படித் தான் கடைசி மூன்று நாட்கள் தன் மனதில் உள்ள வெறுமையை வெளியில் காட்டாமல் இருந்திருந்தான்…
வீட்டிற்குள் வந்ததுமே அவனின் முகம் இறுக்கத்தை எடுத்துக் கொண்டது…
மகன் வந்ததும் இதைப் பற்றி பேச வேண்டாம் என எண்ணிய பெற்றோர்கள், “ஆத்மா! வாப்பா” என புன்னகையுடன் வரவேற்க,
அவனிடம் இறுக்கமான மௌனம் மட்டுமே…
இந்தியா முழுவதும் இப்போது அவனின் படம் தான் கொடி கட்டிப் பறக்கிறது.. அந்த சந்தோஷம் அவனின் மனதில் துளி அளவும் இல்லை..
மகனின் முகபாவனையே ஏதோ பிரச்சனை என்று பெரியவர்களுக்கு தெரிய அமிர்தா இருந்த அறைக்கு கால் விடுத்த கவிதா, “ஆத்மன் வந்துட்டான் அமிர்தா.. சாப்பாடு எடுத்து வைக்க வாம்மா” என்று உரிமையான கட்டளையை கொடுத்து கால்லை அணைத்தார்.
‘ஏன் சார் இன்னும் வீட்ல சொல்லலயா! ஒருவேளை அவருக்கும் சிந்துஜாவுக்கும் கல்யாணத்தை முடிச்சிட்டு எனக்கு டைவர்ஸ் கொடுக்கலாம்னு நினைக்குறார் போல’ என்று ஆதங்கமாக நினைத்தவள் பெரியவர் சொல்லை தட்ட முடியாமல் கீழே செல்ல,
“உள்ளே வரலாமா” என கேட்டபடி புன்னகை முகத்துடன் வெளியில் நின்றுருந்தான் சர்வா.
“சர்வா..” என முணுமுணுத்தபடி அமிர்தா அதிர்ச்சியில் நிற்க,
அவனை கண்ட அமிர்தாவின் பெற்றோர்கள் விழிக்க ஆத்மனோ புருவத்தை சுருக்கி,
“வா” என்றான்.
“சார் இவர் நான் சொல்ல சொல்ல கேட்காம மேடம்க்கு தெரிஞ்சவருன்னு வந்துட்டாரு” என ஓடி வந்து மன்னிப்பு கேட்டார் செக்யூரிட்டி.
“தெரிஞ்சவர் தான் நீ போ” என்ற ஆத்மனோ, தெரிஞ்சவர் என்னும் வார்த்தையில் அழுத்தத்தைக் கொடுத்தான்.
“நல்லா இருக்கீங்களா சார்” என மரியாதையாக கேட்ட சர்வாவை, “எஸ்.. நீ” என அதே இறுக்கத்துடன் சொன்ன ஆத்மன் அவனை அமர சொல்ல, அமிர்தா இன்னும் அதிர்ச்சியில் நான் அப்படியே நின்றாள்…
மூன்று நாட்களாக சர்வாவின் கால்லை அவன் எடுக்கவில்லை தான்… ஆத்மனின் மீது இருந்த வெறுப்பில் அவள் கால்லை எடுக்கவில்லை… யாரிடமும் பேச அவளுக்கு விருப்பம் இல்லை.. ஆனால் சர்வாவோ அவளைத் தேடி வீட்டிற்கே வருவான் என்று கொஞ்சம் கூட அமிர்தா எதிர்ப்பார்க்கவில்லை..
வீட்டிற்கு வந்தவனை உபசரிப்பது தானே நம் வழக்கம் என்பதால் கவிதா அவனுக்கு குளிர்பானம் கொடுத்து உபசரிக்க,
“தாங்க்ஸ் ஆன்ட்டி” என பெற்றுக் கொண்டவனின் கண்களில் அமிர்தாவைத் தேட அவளோ அவனுக்கு பின்னே இருந்ததால் அவனுக்கு தெரியாமல் போனது…
“அம்மு எங்க சார்?” என எப்போதும் போல் அவன் கேட்க,
அவனின் அம்மு என்ற அழைப்பில் ஆத்மனின் கை முஷ்டி இறுகியது.. தன்னவளை அவன் உரிமையோடு அழைப்பதால் வந்த கோபம் அது…
“ச.. சர்வா” என பதற்றத்துடன் வேகமாக அவனின் முன்னே வந்த அமிர்தா, “என்ன திடீர்ன்னு வந்துருக்க” என தடுமாறினாள்.
“நீ தான் நான் மூனு நாளா ஃபோன் பண்ணியும் எடுக்கலயே அதான் வீட்டுக்கே வந்துட்டேன்.. இல்லன்னாலுமே நான் கண்டிப்பா வீட்டுக்கு வந்துருப்பேன் தான்” என புன்னகையுடன் சொன்னவனை எரித்துவிடுவது போல் பார்த்துக் கொண்டுருந்தான் ஆத்மன் ரெட்டி.
அமிர்தாவும் சர்வாவும் இதை பேசிக்கொண்டு ருக்க இருவருமே ஆத்மனின் கோப முகத்தை காண வழியில்லாமல் போனது…
“கமிங் சண்டே எனக்கு கல்யாணம்.. கேரளால” என அவன் பத்திரிக்கையை முதலில் ஆத்மனிடம் நீட்டினான்.
ஆத்மன் இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.. அவனுக்கு திருமணம் என்றதும் ஆத்மனின் முகம் இலகுவானது என்றால், அமிர்தாவும் புன்னகையுடன் வாழ்த்தினாள்.
அதில் ஆத்மனுக்கு லேசான குழப்பம் தான்..
“என்ன டா திடீர்ன்னு கல்யாணம்” என ஒரு தோழியாக அதிர்ச்சியாக கேட்டாள் அமிர்தா.
ஆனால் ஆத்மனுக்கு தான் அது தவறாக பட்டுவிட்டது..
அப்பா, அம்மா கம்பள்ஷன்” என அவன் இழுக்க,
அமிர்தாவோ ஆத்மன் டேபிளில் வைத்த பத்திரிக்கையை எடுத்து பார்த்தபடி, “கல்யாணத்துக்கு வரது கஷ்டம் தான் சர்வா.. என்னோட வாழ்த்துக்கள்” என்று சொல்ல,
‘காதலனோட கல்யாணத்தை பாக்குற பெரிய மனசு இவளுக்கு இல்ல போல’ என்று வெறுப்பாக நினைத்தான் ஆத்மன்.
பெரியவர்களோ மகன் மற்றும் மருமகளை எப்படியாவது சேர்க்க வேண்டும் என்கிற முனைப்பில், “என்ன அமிர்தா இப்படி சொல்ற.. தம்பி வீடு தேடி வந்து பத்திரிக்கை வைச்சிருக்கு.. நீயும் ஆத்மனும் கண்டிப்பா போயிட்டு வரீங்க” என கோர்த்துவிட்டார் கவிதா.
ராஜேஷ் ரெட்டியும் மனைவியுடன் சேர்ந்து, “ஆமா சர்வா.. கண்டிப்பா என் மகனும் மருமகளும் வருவாங்க” என வாக்கு கொடுக்க,
புன்னகை முகத்துடன் எழுந்த சர்வா அனைவரிடமும் விடைப்பெற்று கிளம்பினான்.
அவனின் வாழ்க்கை இனி அமிர்தாவோடு இல்லை என்று சர்வா உணர்ந்த தருணமே அவனின் பெற்றோர்களிடம் அதை தெரிவிக்க, அவனின் பெற்றோர்களும் அவசரமாக வேகமாக அவனுக்கு பெண் பார்த்து விட்டார்கள்…
எங்கே மகன் திரும்பியும் மனம் மாறிவிடுவானோ என்று…
சர்வாவின் மனதிலுமே இனி தன்னால் அமிர்தாவின் வாழ்க்கைக்கு எந்தவொரு பிரச்சனையும் வரக் கூடாது.. அதற்கு தன்னுடைய கல்யாணம் ஒரு வகைத் தீர்வு என்று ஒத்துக் கொண்டான்…
சர்வா சென்ற பின்னர் அமிர்தாவும் சரி ஆத்மனும் சரி பேசிக்கொள்ளவே இல்லை.. ஏன் பார்வை பரிமாற்றம் கூட இல்லை..
கவிதா சொன்னதன் காரணத்திற்காக அமிர்தா பரிமாற, “அம்மா நீங்க பரிமாறுங்க.. இல்லன்னா நான் சாப்பிடல” என்றான் முடிவாக.
‘இவனும் ஏன் தான் இப்படி உச்சானி கோபத்துல இருக்கான்’ என புரியாத கவிதா மனம் நொந்து பரிமாற வர,
அன்றும் போல் இன்றும் அமிர்தாவிற்கு அவமானமாக ஏற்பட்டது…
அவளை மீறி முகம் சுருங்க அதனைக் கண்ட ராஜேஷ் ரெட்டி, “என்னாச்சு மா.. இதுக்கு எல்லாம் முகம் வாடாத” என ராஜேஷ் ரெட்டி ஆறுதல் படுத்த,
“நானும் உங்க பையனும் டைவர்ஸ் வாங்க போறோம் மாமா.. இனி நான் அவருக்கு பரிமாற உரிமை எல்லாம் கொஞ்சம் கூட இல்லை” என வேகமாக சொல்லிவிட்டு அவள் செல்ல, ஆத்மனின் பெற்றொர்களோ அதிர்ச்சியில் ஸ்தம்பித்து உறைந்து நின்றார்கள்…
ஆத்மன் ரெட்டிக்கோ அமிர்தா இவ்வாறு தன் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு சென்றது அதீத கோபத்தைத் தான் கொடுத்தது…
