அத்தியாயம் 5
“நீ கொஞ்சம் ஓவர் ரியாக்க்ஷன் தான் கொடுக்குற விஜி. அவங்க பெரிய பணக்காரங்க அதுவும் இல்லாமல் நம்ம ஆளுங்களாவது ஏதாவது புரளி பேசுவாங்க. ஆனால் ஜானின் தாத்தா விக்டரின் குடும்பம் ஜெம் மாதிரி. அவ்வளவு இங்கிதம் தெரிஞ்சவங்க. ஏன் நம்ம நிஷாவே வீட்டில் நம்ம சாமியை வெச்சு கும்பிடுறா. அப்போது அவங்க எவ்வளவு நல்லவங்கனு யோசிச்சுப்பாரு.” “அக்கா மறந்துட்டீங்களா, விமலா அக்காவின் மரணத்திற்குக் காரணமே நிஷாவின் திடீர் காதல் திருமணம் தான்.” “நான் ஒன்னும் […]
