பிரியாதிரு 17
“அமிர்தா.. உன் அண்ணி உன் கிட்ட பேசணுமாம்” என புன்னகைத்தபடி தன்னவளிடம் ஃபோனை கொடுத்தான் இந்திரஜித். “ஏய் அம்மு” என பாசமாக ஆரம்பித்த சாருபாலா அமிர்தாவின் திடீர் திருமணத்தைப் பற்றி கேட்கவில்லை… அவளுக்கு அனன்யா மூலம் தெரிந்தது.. அமிர்தாவின் நலன் மட்டுமே அவளின் கருத்தில் பட, திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது என்று பொய் சொன்னாள் அமிர்தா. ஆத்மனை யாரிடமும் அவளால் விட்டுக்கொடுக்க முடியவில்லை.. மஞ்சள் கயிறு மகிமை அவளுள் தொடங்கிவிட்டது போல.. […]
