குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி இருக்கிறது…
அவளின் தந்தையின் வீட்டில் தான் இப்போது இருந்தாள்…
“உன் புருஷன் வீட்டுக்கு கிளம்பலயா ராதிகா.. அவர் இன்னிக்கு உன்னை வர சொன்னாரே…” என்றார் ராதிகாவின் சிற்றன்னை தேவி.
“இன்னும் மூனு நாள் கழிச்சு கண்டிப்பா கிளம்பிடுறேன் சித்தி” என சமாளிக்கும் பொருட்டு இழுத்தாள்.
“இது என் பொறந்த வீடு ஏன் ஒரு நாள் அதிகமா நான் இங்க இருக்க கூடாதா” என கேட்க கூட மாட்டாள்… அவளின் மன பதற்றம் அப்படி எல்லாம் அவளை கேட்க விடுவதில்லை..
பிள்ளைக்கு பால் கொடுத்து இப்போது தான் உறங்க வைத்துருப்பாள்…
அவளின் ஃபோன் சட்டென்று ஒலித்து கால் வருவதை அவளுக்கு உணர்த்த, அதனை கண்டவளுக்கோ உடல் எல்லாம் நடுங்க தொடங்கியது..
எப்போதும் போல் அழையாத விருந்தாளியாய் அவளின் மன பதற்றம் வந்தது… இதயம் எல்லாம் வேகமாக துடித்தது… காரணம் அவளுக்கு கால் செய்வது அவளது கணவன் டி கிரேட் பிசினஸ் டைக்கூன் ஆரண்யன்…
‘ஐய்யோ.. எதுக்கு பண்றாரு…’ என்கிற பயத்துடன் அவள் ஃபோனை எடுத்து,
“ஹ.. ஹலோ” என திக்கித் திணறி சொன்னாள் ராதிகா.
“இந்நேரம் நீ பாம்பேல நம்ம வீட்டுல இருந்துருக்கணும்” என கணீர் குரலில் அவன் சொல்ல தான் செய்தான்…
ஆனால் இவளுக்கோ கண்களில் நீர் கோர்த்தது…
“சாரிங்க… எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான் என்னால இன்னிக்கு வர முடியல. கண்டிப்பா மூனு நாள் கழிச்சு கிளம்பிடுறேன்” என்றாள் அவசரமாக.
“இன்னிக்கு மார்னிங் நான் பேசுன போது கூட நல்லா தானே பேசுன… இப்போ என்ன திடீர்ன்னு உனக்கு முடியல” என அவன் சந்தேகமாக கேட்டான்…
அவ்வளவு தான்… அவனின் சந்தேகம் இவளை பதற வைத்தது…
அவளின் முதுகில் எரிச்சல் வந்தது… இதயம் இருக்கும் பகுதியில் உள்ள இடங்கள் எல்லாம் வலிப்பது போன்ற உணர்வு…
இதெல்லாம் பதற்றத்தில் அவளுக்குள் நடக்கும் விஷயம்… எப்போதும் நடப்பது தான்…
“உண்மையா முடியலங்க” என கரகரத்த குரலில் சொன்னாள்.
“அப்படி என்ன முடியல” என மீண்டும் அவன் கணீர் குரலில் சாதாரணமாக தான் கேட்டான். இவளுக்கு தான் அது ரொம்பவே பயமாக இருந்தது..
“எனக்கு பீரியட்ஸ்” என்றாள் சன்னமான கரகரத்த குரலில்.
“அதை வெளிப்படையா சொல்றதுக்கு என்ன… நான் உன்னோட புருஷன் ராதிகா. என் கூட கல்யாணம் பண்ணி, நான் உன்னை முழுசா…” என அவன் அழுத்தம் கலந்த ஆதிக்கத்துடன் ஆரம்பிக்கும் போதே,
‘ஐய்யோ! கடவுளே’ என மனதிற்குள் பதறியவள் வேகமாக தன் காதை மூடிக் கொண்டாள்…
இனி அவன் என்னவெல்லாம் பேசுவான் என அவளுக்குத் தெரியும்.. அவளால் அதை கேட்க முடியவில்லை…
“ராதிகா…” என அவன் கணீரென்று அழைக்க, காதை மூடியிருந்தவளின் காதுக்குள் ஒலித்தது அவனின் குரல்.
“ஆ.. ஆன் இருக்கேன்” என்றாள் மூச்சை இழுத்து விட்டு.
“எனக்கு நீ வேணும்” என்றான் இப்போது மோகமான குரலில்.
அதற்கு இவள் என்ன சொல்வாள்… திருமணமாகி ஒரு வருடம் ஆகப் போகிறது…
இந்த ஒரு வருடத்தில் அவனுடன் இருந்தது ஒரு மாதம் தான்…
