அனல் 3
இதைக் கேட்டதில் இருந்து மகேஷ் மட்டும் இல்ல ஆடிப்போனது காயத்ரியும் தான்..
ஏனெனில் மகேஷ் பிரியாவை காதலித்து திருமணம் செய்த வரை அவருக்குத் தெரியும்…
மகேஷிற்கு என்ன தான் தந்தை நெருக்கம் ஆனாலும் இவ்விஷயத்தை அவரிடம் எப்படி எடுத்துச் செல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை…
அதனால் தான் சில மாதங்கள் முன்னர் தாயிடம் தன் காதலைப் பற்றிச் சொன்னவன் அப்படியே அவளைத் திருமணம் செய்யவேண்டிய நிலையையும் சொன்னான்..
முதலில் காயத்ரி எதிர்த்தார் தான்…
ஆனால் மகேஷ் விடாது அன்னையிடம் கெஞ்ச, எங்கே இஷாக்கை போல் மகேஷூம் தன்னை விட்டு தூரமாக சென்றுவிடுவானோ என பயந்து சம்மதித்தாலும், இந்த வீட்டை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற மலைப்பும் கவலையும் அவரை சூழ்ந்துக் கொண்டது…
சக்கரவர்த்தி முன்னர் சித்ரா அடங்கி இருப்பதும் அவர் வெளியில் சென்ற பின்னர் ஓவராக ஆடுவதும் காலம் காலமாக நடந்துக் கொண்டுருக்கும் விடயம் தான்..
அதிலும் தன் முன்னேவே, “என் பொண்ணு விசித்திராவைத் தான் இஷாக் கல்யாணம் பண்ணிப்பான்” என பெருமையாக கர்வத்துடன் சொல்லித் திரிந்துக் கொண்டு இருந்தார்…
என்ன தான் மகள் சித்ரா தனக்கு நெருக்கமாக இருந்தாலும் சகுந்தலா தேவிக்கு மகனின் உயிர் முக்கியமாகப் பட்டது…
அதனாலேயே வீட்டிற்கு வந்த முதல் வேலையாக மகளை அழைத்து,”நம்ம விசித்திராக்கு நம்ம தகுதிக்கு ஏத்த போல வேற மாப்பிள்ளை நானே பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்குறேன்” என ஜோசியர் சொன்ன அனைத்தையும் சொல்ல, விடுவாரா சித்ரா…
“அம்மா நீங்க என்ன இதெல்லாம் நம்பிட்டு இருக்கீங்க… AI வந்த காலத்துல ஜோசியத்தை எல்லாம் நம்புறீங்களே” என அவர் இழுக்க, ஒரே முறைப்பு தான் மொத்தமாக அடங்கி விட்டார் சித்ரா…
ஆனால் மனதிற்குள் அத்தனை கோபம்… அதெப்படி அவரால் இஷாக்கை விட்டுக் கொடுக்க முடியும்…
ஆம், இந்த வீட்டில் சக்கரவர்த்தியையும் மீறி ஒருவனின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றால் அது இஷாக்குடையது தானே!
மகேஷ் அன்பில் அடங்குபவன், விஷாக் அசராதவன் என்றாலும் அன்னையை மீற மாட்டான்… ஆனால் இஷாக் அப்படி இல்லையே… யாராலும் அவனை அடக்க முடியாது அல்லவா…
அதுப்போக இஷாக்கின் மீது இத்தனை வருடங்கள் உயிரையே வைத்திருக்கிறாள் அவரின் மகள் விசித்திரா..
இதோ இப்போதும் இஷாக்குடன் அவனின் பின்னே தான் சுற்றிக் கொண்டு இருக்கிறாள் விசித்திரா…
தனியாக மாட்டிக்கொண்ட மானை விழுங்க நினைக்கும் புலியாக பதுங்கி இருந்து பவித்ரா மீது பாய்ந்தான் அந்த காமூகன் சுரேஷ்…
இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத பவித்ராவிற்கு அதீத அதிர்ச்சி கலந்த பயம்…
“காப்பாத்துங்க” என அவள் அழுதபடி கத்த,
“உன்னை காப்பாத்த இங்க எவனும் வர மாட்டான் டி” என்றபடியே அவளை புதரின் பக்கம் தள்ளிச்சென்றான் சுரேஷ்..
இருட்டு என்றாலும் கூட அந்த குரல் சுரேஷுடையது என்று பவித்ராவிற்கு தெரியும்…
“காப்பாத்துங்க… காப்பாத்துங்க..” என பெரிய அழுகுரலுடன் அவள் விடாது கத்தியபடி அவனிடம் இருந்து விடுப்பட ம
போராடிக் கொண்டு இருக்க, அவளை பலாரென்று அறைந்த சுரேஷ்,
“மூடிக்கிட்டு இருந்தன்னா உனக்கும் எனக்கும் சொகம் கிடைக்கும்… இல்லன்னா வேலையை முடிச்சிட்டு உன்னை கொன்னு போட்டுடுவேன்” என அவன் மிரட்டிக் கொண்டு இருந்த அடுத்த நொடியே பலமான அடியில் சுருண்டு விழுந்தான் சுரேஷ்… சுருண்டு விழுந்தவனை கொலைவெறியுடன் ருத்ர மூர்த்தியாக பார்த்துக் கொண்டு இருந்தான் அவன்.. இஷாக் சக்கரவர்த்தி…
சில நிமிடங்கள் முன்பு…
பிரவீன்… எல்கேஜியில் இருந்து இஷாக்கின் உயிர் நண்பன்… இருவரும் என்ஜினீயரிங் கூட ஒரே கல்லூரியில் தான் படித்தார்கள்…
அதன் பின்னர் இஷாக் கதாநாயகன் ஆகிவிட, காஞ்சிபுரத்தில் ஒரு சக்கரை ஆலையைத் தொடங்கினான் பிரவீன்…
எப்போதும் இஷாக்கை பார்க்க பிரவீன் தான் சென்னை செல்வான்…
ஆனால் இன்று அதுவும் சில மணி நேரம் முன்பு திடீரென வந்து இறங்கினான் இஷாக்…
“என்ன மச்சான் திடீர்ன்னு என்னை மீட் பண்ண காஞ்சிபுரமே வந்துட்ட.. உலக அதிசயமா இருக்கு.. எப்போவுமே என்னைத் தான் அங்க வர வைப்ப” என புன்னகைத்தபடி கிண்டல் செய்தான் இஷாக்கின் ஆருயிர் நண்பன் பிரவீன்…
“நானே செம கடுப்புல இருக்கேன் டா.. எதுவும் கேட்காத” என்றவனோ தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்து லைட்டர் வைத்து பற்ற வைத்தான்..
“ஏதோ டென்ஷனா இருக்க போல… வா ஒரு வாக் போலாம்” என்ற பிரவீன் கையோடு இஷாக்கை இழுத்துக் கொண்டு சாலையில் நடக்கத் தொடங்கினான்…
இறுக்கமான முகத்துடன் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்த படி நடந்து வந்த இஷாக்கிடம், “என்ன பிரச்சனை டா.. உன் முகமே சரி இல்ல” என புரியாமல் கேட்டான் பிரவீன்…
“என்னோட மூவி நாளைக்கு ரிலீஸ் ஆகுது தெரியும்ல” என அதே இறக்கத்துடன் கேட்டான் இஷாக்…
“இந்தியாவுலயே பெரிய பேன் இந்தியன் ஸ்டாரான இஷாக் சக்கரவர்த்தியோட படம் நாளைக்கு ரிலீஸ் ஆகுற பெரிய விஷயம் சின்ன பாப்பாவுக்கு கூட தெரியும் மச்சான்” என பெருமையாக சொன்ன நண்பனை முறைத்த இஷாக்,
“ஐ அம் இஷாக்… தட்ஸ் இட்.. நாட் இஷாக் சக்கரவர்த்தி” என்றான் பட்டென்று…
“உன் அப்பா, அம்மா ஏதோ நீ சின்ன வயசுல இருக்கும் போது” என தயக்கத்துடன் இழுத்த நண்பனை தீயென முறைத்தவன்,
“இன்னும் ஒரே ஒரு முறை நீ அவங்களுக்காக வக்காலத்து வாங்கி பேசிப் பேரு… யூ ஆர் நத்திங் இன் மை லைஃப்” என கர்ஜித்தான்..
அவ்வளவு தான்… துடிதுடித்து விட்டான் பிரவீன்…
“டேய்.. சாரி டா… இனி கண்டிப்பா அவங்களை பத்தி பேச மாட்டேன்” என இஷாக்கை சமாதானப்படுத்துவற்குள் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டான் பிரவீன்…
பேன் இந்தியன் ஸ்டார் என்பதால் வெளியே வந்தாலேயே ஒரு கேப் அணிந்து தன் முகத்தை முழுதாக காட்டாது மறைத்து தான் வருவான் இஷாக்…
இன்றும் அப்படியே வர அவனை எப்படியே ஒரு வழியா சமாதானம் செய்வதில் இருவருமே வெளிச்சமான ரோட்டிற்குள் செல்லாமல் எப்படியோ அந்த அடர்ந்த காடு போன்ற ரோட்டில் நுழைந்தார்கள்.. அங்கே தான் நம் பவித்ரா அந்த காமூகனிடம் மாட்டி விட்டு துடிதுடித்துக் கொண்டு இருக்கிறாள்…
“சரி என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க” என பேச்சை மாற்றி அவனை சற்று இலகுவாக்க முயற்சித்தான் பிரவீன்…
“இன்னிக்கு பிரொடீயுசர் பாண்டிச்சேரில ஒரு பார்ட்டி தந்தாரு… அதுக்கு தான் வந்தேன்… கூடவே விசித்திராவும் வந்தா” என்றவனிடம்,
“அவ தான் உன் வெறித்தனமான ரசிகை ஆச்சே மச்சான்” என்றான் பிரவீன்…
“ஐ க்னோ தட் பிரவீன்… இன்ஃபாக்ட் என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு ஓபனாவே சொல்லிட்டா..” என்றான்.
“சரி.. ” என பிரவீன் இழுக்க,
“நான் என்ன இங்க கதையா சொல்றேன்” என நண்பனை முறைத்தான் இஷாக்.
“நான் ஏதாவது கேள்வி கேட்க போய் உன் கிட்ட கும்மாங் குத்து வாங்க என் பாடியில தெம்பு இல்ல மச்சான்” என நொந்தவனிடம் சிரித்த இஷாக்,
“இன்னிக்கு பார்ட்டி முடிஞ்ச அப்புறம் அவ குடிச்சா… எப்போவுமே லைட்டா அடிக்குற போல தான் இன்னிக்கும் அடிச்சா… பட் வாமிட் வர போல இருக்கு ஐ நீட் சம் ரெஸ்ட்… ரூம் புக் பண்ண சொல்லி கேட்டா… நானும் பண்ணேன்..”
“என்னை ரூம் வரை விடுங்க மாமு ன்னு சொன்னா… நானும் பண்ணேன்… யூ நோ வாட் ரூம்ல என் கிட்ட செடியூஸ் பண்ண டிரை பண்ணா… நான் செம கடுப்பாகி அவளை அப்படியே தள்ளிவிட்டுட்டு பாண்டிச்சேரில இருந்து இங்க வந்துட்டேன்” என்றான் கடுப்பாக…
இஷாக் இந்தியாவே போற்றும் பேன் இந்தியன் ஸ்டார்.. இள வயதிலேயே இந்த பட்டம் அவனுக்கு கிடைத்ததுக்கு காரணம்… அவனின் திறமை மற்றும் திடமான அணுகுமுறை…
என்ஜினீயரிங் தான் படித்துக் கொண்டு இருந்தான்… அதுவும் கோல்ட் மெடல், ஃபுட்பால் சேம்பியன், பாக்ஸர் என நிறைய இவனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்…
இவன் நான்காவது வருடம் படிக்கும் பொழுது தான், இவன் படித்துக் கொண்டு இருந்த கல்லூரியின் தாளாளரின் மகன் சினி உலகில் இயக்குனராக இறங்க எல்லா படிகளையும் எடுத்துக் கொண்டு இருந்தான்…
அப்போது அவன் எடுக்கப் போகும் படத்தில் ஒரு புது முக நாயகனை இறக்கினால் ஃபிரெஷ் ஃபேஸ்ஸாக இருக்கும் என அவர்களின் கல்லூரி மாணவர்களிடம் ஆடிசன், விருப்பம் இருப்பவர்கள் வரலாம் என சொல்லியிருக்க,
இதில் எல்லாம் ஈடுபாடு இல்லாத இஷாக் எப்போதும் போல் ஃபுட்பால் கோச்சிங்கில் இருக்க, பிரவீன் தான் கலந்துக்கொள்ள ரொம்ப ஆர்வமாக இருந்தான்…
“மச்சான் தனியா போக ரொம்ப பயமா இருக்கு.. ப்ளிஸ் நீயும் வாயேன்… அப்போ தான் எனக்கு யானை பலம் வரும்” என காலில் விழாத குறையாக இஷாக்கையும் அழைத்துக் கொண்டு சென்றான்…
அங்கிருந்த மாணவர்கள் கூட்டத்தைப் பார்த்த இஷாக், ‘முக்கால்வாசி காலேஜ் பசங்க இங்க தான் இருக்காங்க போல’ என மனதில் கிண்டலாக முணுமுணுத்தவன்,
‘அப்படி என்ன தான் இவனுங்க ஆடிசன்னு பண்றாங்க.. நம்மளும் சும்மா போய் பார்ப்போம்’ என்று தான் அவன் சென்று அவர்கள் சொன்ன சீன்னை நடித்து காட்டினான்…
அதன் பின்னர் அவன் அதைப் பற்றி யோசிக்க கூட இல்லை… ஏனெனில் அவன் கனவு லட்சியமே யாரின் உதவியும் இல்லாமல் தான் தன் சொந்த காலில் நின்று ஒரு டேட்டா அனல்டிக்ஸ் கம்பெனியை உருவாக்க வேண்டும் என்பது தான்…
ஆனால் அவனுக்கு தெரியாது அவனைத் தான் நடிகனாக தேர்வு செய்து இருக்கிறார்கள் என்று…
அவ்விஷயம் இவனை வந்ததையும் முன்னே இவனின் அப்பாவிற்கு வந்தடைந்தது…
ஏனெனில் இவன் படித்த கல்லூரியின் தாளாளர் இவனின் தந்தைக்கு நல்ல பழக்கம்… அவ்விஷயம் இவனுக்கு முன்னமே தெரிந்து இருந்தால் கண்டிப்பாக இந்தப் கல்லூரியில் கால்லை எடுத்து வைத்திருக்க மாட்டான் அது வேற கதை…
தன் மகன் தான் பேசினால் காது கொடுத்து கூட கேட்க மாட்டான் என தெரியும்… இருந்தாலும் பேசினார் சக்கரவர்த்தி… “இஷாக்… நடிக்குறது எல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாது… சக்கரவர்த்தி குடும்பத்துக்குன்னு ஒரு தனி மரியாதை இருக்கு… எத்திக்ஸ் இருக்கு… பண்பாடு இருக்கு… உன் அடாவடித்தனத்தை இதுலயும் காட்டாத” என சொல்லி முடிக்க,
அவ்வளவு தான்.. இஷாக்கிற்கு சுர்ரென்று ஏறியது…
****************************************
ஒகே டியர்ஸ்… இப்போ சொல்லுங்க நம்ம கதையில யாருக்கு யார் ஜோடி? யார் ஹீரோ அண்ட் ஹீரோயின் சொல்லுங்க பார்ப்போம்…
அவ்வளவு தான்… இஷாக்கின் ஈகோவை பக்காவாக தூண்டிவிட்டார் சக்கரவர்த்தி…
அவனுக்கு தான் அப்படி எல்லாம் ஒரு எண்ணமே இல்லையே..
அவனின் கனவே வேறு அல்லவா…
அதீத கோபத்தில் ஏதாவது ஒரு முடிவு எடுப்பார்களே… அப்படித் தான், “நான் முடிவே பண்ணிட்டேன் ஹீரோ ஆகணும்னு” என முடித்தான்… அப்பாவையும், அம்மாவையும் அப்பா அம்மா என அழைத்து வருடங்கள் ஆகின…
அதன் பின்னர் சக்கரவர்த்தி பேசியது எல்லாம் காற்றோடு தான் கரைந்தது…
அப்படி சினிமா துறையில் நுழைந்தவன் தான்.. கிட்டத்தட்ட பத்து படங்கள் நடித்து இருந்து இருப்பான்…
எல்லா வகையான படமும் நடிப்பது அவனுக்கு பிடிக்கும்… அப்பா, அம்மா சென்டிமென்ட் படம் மட்டும் நடிக்க மாட்டான்..
அதீத ரொமான்ஸ் காட்சிகள் இதுவரை அவன் நடித்தது இல்லை…
இதுவரை பெண்கள் என அவன் நாடியது கிடையாது..
ஏனோ பெண்கள் விஷயத்தில் வீக்காகி விட்டால் தனக்கு நல்லது அல்ல என தீர்மானிக்க யோசித்து இருந்ததால் மட்டும் தான் அவனால் இப்படி கட்டுப்கோப்பாக இருக்க முடிகிறது..
கண்டிப்பாக தன்னுடைய கல்யாணம் தன் இஷ்டப்படி தான் நடக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பவன்…
தனக்காக வரும் ஒருவளை ஆசை தீர காதலிக்க வேண்டும் என மனதில் அவனுக்கு ஆசைகள் இருக்கிறது…
அவனின் அழகிற்கும், அறிவிற்கும், திறமைக்கும், வசதிக்கும் ஏற்றது போல ஒரு பெண் தான் அவனுக்கு சரி என்பதில் தீர்மானமாக இருந்தான்…
இதுவரை அவனின் படிப்பு, நடவடிக்கை, செயல் என அவனே உருவாக்கியது மட்டும் தான்… அதே போல் தான் வாழ்க்கை துணையும் என அவன் இருக்க, விதி என்ன வைத்திருக்கிறதோ!
விசித்திரா இஷாக்கின் பின்னே சுற்றுவது அவனுக்கே தெரியும்… அவள் இவனைத் திருமணம் செய்ய விரும்புவதும் அவனுக்குத் தெரியும்…
அவளை இஷாக்கிற்கு பிடிக்கும் தான்… திருமணம் என்று வரும் பொழுது கண்டிப்பாக அவளை தான் முதலில் சிந்தித்துப் பார்ப்பான்…
அவள் குடிகாரி எல்லாம் கிடையாது… வைன் அடிப்பாள்… இன்று வைனிற்கே ஏன் அப்படி நடந்துக் கொண்டாள் என அவனுக்கு புரியவில்லை.. ஒருவேளை புது சரக்கு ஏதாவது அடித்து விட்டாள் என்று கூட யோசித்தான்…
விசித்திராவைத் திருமணம் செய்வதாகவே இருந்தாலும் கூட இப்போது அவளுடன் அத்து மீறுவது என்பது மகா கேவலமான விஷயமாக தான் அவனுக்கு பட்டது…
இப்போதும் அவளின் செயலால் கோபமே தவிர அவளை அவன் வெறுக்கவில்லை…
இங்கே கால் டாக்சியில் வீட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்த விசித்திராவோ தன் அன்னைக்கு கால் செய்து ஓ வென அழுதாள்…
காலை வீட்டில் நடந்த கூத்து தெரிந்ததால் தானே தன் மாமு தன்னை விட்டு போகக் கூடாது என இவ்வாறு அதிரடியான முடிவை எடுத்தாள் விசித்திரா…
“லூசு.. லூசு.. என்ன வேலை பண்ணி வைச்சிருக்க நீ… இஷாக் தான் உன் பின்னாடி சுத்தணும்… ஆனா இங்கே நீ தான் அவன் பின்னாடி சுத்துற.. அதுப்போக என்ன காரியம் பண்ண பார்த்த… அவனுக்கு வேற ஒரு பொண்ணு கூட கல்யாணம் ஆயிடுச்சுன்னா உன் வாழ்க்கை பத்தி யோசிச்சுப் பார்த்தியா… இனி இந்த மாதிரி எல்லாம் செய்யாத” என மகளை சரமாரியாக திட்டிவிட்டு தான் ஃபோனை வைத்தார் சித்ரா…
“இஷாக் மாமுவை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்… அவர் எனக்கு மட்டும் தான்” என மனதில் வெறித்தனத்துடன் சொன்னாள் விசித்திரா…
ஏனோ அவளுக்கு இஷாக் என்றாலே அப்படி ஒரு காதல், மோகம் மற்றும் ஆசை…
மகேஷ் அப்பா பையன்… விஷாக் அம்மா பையன்… இஷாக் மட்டுமே பக்காவான ஆம்பிளை என்கிற மாதிரி அவளுக்குள் ஒரு கிளர்ச்சி… மயக்கம்…
இதையெல்லாம் தாண்டி பெற்றவர்களின் கட்டுப்பாட்டில் இஷாக் இல்லாததால் அவனை தங்கள் பக்கம் வளைத்து வைக்க வேண்டும் என சித்ரா எப்போது இருந்தோ திட்டம் இட்டு இருக்க, அதை மகளிடம் சொல்லி சொல்லி வளர்க்க அவளுக்குள் ஆசை வெள்ளப் பெருக்காய் ஓடத் தொடங்கியது…
இஷாக் பிரவீனுடன் இதை எல்லாம் பேசிக் கொண்டு வரும் பொழுது தான் ஒரு பெண்ணின் குரல், “காப்பாத்துங்க” என தொடரந்து அழுகுரலாய் ஒலிக்க, குரல் வந்த புறம் சீறிப் பாய்ந்தான் இஷாக்…
தன்னை யார் வந்து காப்பாற்றினார்கள் என்றெல்லாம் பவித்ராவிற்குத் தெரியவில்லை… இஷாக்கிடம் சுரேஷ் அடிவாங்கிய நொடி பாவம் பேதைப் பெண்ணும் போராட முடியாமல் மயங்கி விழுதாள்…
பவித்ரா கண் விழிக்கும் பொழுது அவளின் பக்கத்தில் அவளின் பெரியப்பா மணி மற்றும் பிரியா தான் இருந்தார்கள்…
இரண்டு நாட்கள் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துருந்த பிரியா பின் மாலை போல காஞ்சிபுரம் வந்துருந்தாள்…
சுரேஷை அடித்து துவம்சம் செய்த இஷாக் அவனை கையோடு போலிஸில் மாட்ட வைத்து வைத்தான்… பிரவீனை வைத்து சுரேஷை போலிஸில் தள்ளச் செய்தவன், அங்கு மயங்கி கிடந்த பவித்ராவை தன் கைகளில் ஏந்தினான்… அங்கு தான் அவளின் கைப்பையும் இருந்தது… அவளின் நல்ல நேரத்திற்கு அவள் இன்னும் வீடு வரவில்லையே என அவளின் பெரியப்பா கால் செய்துருக்க, தன் ஃபோன் லைட்டைப் போட்டு அவளின் ஹேன்ட் பேக்கை எடுத்தவன் வேகமாக தன் காரில் போட்டு மருத்துவமனைக்கு விரைந்தான்…
முதலில் அவளை பெரிய மருத்துவமனையில் சேர்த்தவன் அதன் பின்னர் தான் அவளின் செல்லை எடுத்தான்… அவளின் வீட்டிற்கு விஷயம் சொல்ல!
அவன் வந்தது பெரிய பணக்காரர்கள் வரும் மருத்துவமனை என்பதால் மக்கள் அவன் மீது வந்து விழவில்லை… இருந்தாலும் அவன் மாஸ்க் அணியும் முன்னர் கண்டவர்கள் எல்லாம் ஆச்சரியமாக பார்த்தனர் ஆனாலும் அவனை நெருங்க பயம்… ஏனெனில் திரைக்குப் பின்னால் இஷாக் சிரிப்பை தான் பெரிதாக யாரும் கண்டதில்லையே…
அதுவும் மருத்துவமனையில் நுழைந்ததும் அவளை எமர்ஜென்சியில் சேர்த்ததும் அதிவேகமாக அங்கு ரிசப்சனில் வைக்கப்பட்டு இருந்த மாஸ்க்கைப் போட்டு விட்டான்… இருந்தாலும் சிலர் கண்டுக்கொண்டார்கள் தான்…
அதிமுக்கியமாக டாக்டரிடம் வந்தவன், “அந்தப் பொண்ணு ரோட்டுல மயங்கி விழுந்துட்டாங்க… நான் அவங்களை ஜஸ்ட் அட்மிட் பண்ணிருக்கேன் அவ்வளவு தான்… இதை வைச்சு கண்ணு காது மூக்கு போட்டு எந்த நியூஸூம் வெளிய வரக் கூடாது என கிட்டத்தட்ட மிரட்டினான்… அதில் பயந்த டாக்டரோ,”நாங்க சிசிடிவி ஃபுட்டேஜ் கூட டெலீட் பண்ணிடுறோம் சார்” என பம்மினார்.. அதன் பின்னர் தான் இஷாக் அமைதியாகினான்…
அவளை சேர்த்த பின்னர் அவளின் நைந்த ஹேன்ட்பேக்கை எடுத்தவனுக்கு அதைத் தொடவே ஒரு மாதிரி இருந்தது..
ஆனாலும் பவித்ராவை பார்க்க ஏனோ அவனுக்கு பாவமாக இருந்தது… அதனாலேயே தன் சங்கடத்தை விடுத்து அதைத் திறந்தவன் கண்ணில் அவளின் டப்பா பட்டன் ஃபோன் பட்டது…
‘ஆதி காலத்து டப்பா ஃபோன் வைச்சிருக்கா’ என யோசித்தவனோ அவளின் செல்லைத் திறந்து ஆராய்ந்தான்..
மிஸ்ட் காலில் பெரியப்பா என நான்கு முறை வந்துருக்க அந்த நம்பருக்கு அவளின் செல்லில் இருந்தே கால் செய்தவன் மணி எடுத்தவுடன் அவரை பேசவிடாமல், “இந்த ஃபோன் வைச்சிருந்த பொண்ணு மயங்கி விழுந்துட்டா.. அவளை ***** ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்கேன் உடனே வாங்க” என அவன் கட் செய்துவிட்டான்…
அடுத்த பதினைந்து நிமிடத்தில் கண் விழித்து இருந்தாள் பவித்ரா..
அவள் கண் விழித்தவுடன் நர்ஸ் இஷாக்கிடம் வந்து விஷயத்தை சொல்ல, வேகமாக ஓடி வந்த டாக்டரோ அவசரமாக,
“சாரி சாரி சார்.. இந்த நர்ஸ் வந்து நீங்க அவங்க ரிலேஷன்னு நினைச்சிட்டாங்க.. நான் அந்தப் பொண்ணு கிட்ட அவ வீட்டு ஃபோன் நம்பர் கேட்டுக்குறேன் சார்” என அவர் பயப்பட யோசனையாக எழுந்தவன் எதுவும் பேசாமல் பவித்ரா அட்மிட் ஆகியிருந்த அறைக்குள் சென்றான்…
மயங்கி எழுந்து அமர்ந்திருந்தாள்… முகத்தில் அத்தனை பயம் அவளுக்கு… கண்களில் தேங்கிய கண்ணீர் வேறு…
“ஆர் யூ ஓகே” என கணீர் குரல் ஒலிக்க, திடுக்கிட்டு அவனைக் கண்டவள்,
“அதிர்ச்சி மயக்கம் தான் சார்… நீங்க தான் என்னை காப்பாத்துனீங்களா” என நா தழுதழுக்க கேட்டாள்..
முதலில் கண் விழித்ததும் தன் மானம் தன்னிடம் இருக்கிறதா என்று தான் வேகமாக படபடப்புடன் தன் உடலை ஆராய்ந்தாள்… தன் உடலில் சிராய்ப்பு இல்லை, தன் உடைகளும் அவள் போட்டது போல் தான் அப்படியே இருந்தது…
அதிலேயே தன்னை யாரோ காப்பாற்றி இருக்கிறார்கள் என புரிந்துக் கொண்டாள்..
இஷாக்கை கண்டதும் தன்னைக் காப்பாற்றியது அவன் தான் தோன்ற வேகமாக அவ்வாறு கேட்டு விட்டாள்…
“எஸ்… அவனை போலிஸ்ல புடிச்சு கொடுத்தாச்சு” என்றான் ரத்தின சுருக்கமாக.
“ரொம்ப நன்றி சார்… தெய்வம் மாதிரி என் மானத்தை காப்பாத்தி கொடுத்து இருக்கீங்க” என சோர்வாக இருந்தாலும் எழுந்து அவனின் காலிலேயே விழுந்து விட்டாள்…
“எழுந்திரு மா பரவாயில்ல” என்றான் சற்று கணிவாக…
ஏனோ அப்பெண்ணை பார்க்க பார்க்க அவனுக்கு ஏதோ பாவமாக இருந்தது…
அவளின் நைந்த உடையே அவள் எத்தனை வறுமையில் இருக்கிறாள் என்று அவனுக்கு பறைச்சாற்றியது…
மகேஷ் மக்களிடம் தராதரம் பார்க்க மாட்டான்…
ஆனால் விஷாக் பார்ப்பான்… ஏழை எளியவர்களிடம் தள்ளி தான் நிற்பான்… அதிலும் படிப்பு இல்லை என்றால் அவர்களை அற்ப புளு போல பார்ப்பான்..
இஷாக் அனைவரிடமும் இறுக்கம் தான்… ஏழைகளின் நைந்த உடைகள், அழகற்ற பொருட்கள் எல்லாம் இவனுக்கு சுத்தமாக பிடிக்காது… ஆனால் இப்பெண்ணின் இந்நிலையில் அதை எல்லாம் காட்ட அவனுக்கு தோன்றவில்லை… முகத்தில் ஒரு கணிவை கொண்டு வந்தவனிடம்,
“சார்… நீங்க எனக்கு தெய்வம் சார்… உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா உங்க முகத்தை ஒரு முறை பார்த்துக்கலாமா” என கைக்கூப்பி பவித்ரா அழ, அவனையும் மீறி மாஸ்க்கை கழட்டினான்…
ஆனால் பாவம் அவளுக்கு தான் அவன் பெரிய சினிமா ஸ்டார் என்று கூடத் தெரியவில்லை… அவளுக்கு தொலைக்காட்சி பார்க்க வெல்லாம் எங்கு நேரம் இருக்கிறது…
தன்னைக் கண்டதும் குறைந்த பட்சமாக,” அக்டர் இஷாக்கா” என அவள் கேட்பாள் என்று பார்க்க, அவளோ அவனின் முகத்தைக் கண்டதும் இறுக்கமாக கைக்கூப்பி,
“தெய்வம் சார் நீங்க” என குலுங்கி அழுதபடி கைக்கூப்பினாள்…
இதுவரை யாரிடமும் கரிசணம் காட்டாத இஷாக் முதல் முறையாக பவித்ராவை கண்டு கரிசணம் காட்டுகிறான்… அவள் மீது ஒரு இனம் புரியாத இரக்கம் வந்தது அவனுக்கு…
