அனல் 4

அவளின் செய்கையிலேயே புரிந்துக் கொண்டான் அவள் படமே பார்ப்பது இல்லை என்று… 

 

“உன் வீட்ல சொல்லிட்டேன்… இப்போ வந்துடுவாங்க” என அவன் சொல்ல, அவளின் முகத்தில் அதீத பயத்தைக் கண்டான் இஷாக்..

 

குடும்பம் வருகிறார்கள் என்றால் நிம்மதியாக இருக்க வேண்டிய பெண் ஏன் பதறுகிறாள் என யோசித்தவனோ எதையும் வெளிக்காட்டாமல், 

 

“உன் அப்பா, அம்மா…” என முடிக்காமல் இழுத்தான்.. 

 

பெரியப்பா எண்ணில் நிறைய கால்கள் வந்ததில் இருந்தே அவனுக்கு ஒரு சந்தேகம்.. ஒருவேளை இவளுக்கு அப்பா, அம்மா இருக்கிறார்களா இல்லை தன் வீட்டை போல் இருந்தும் இல்லை என்பது போலா என… 

 

“அம்மா, அப்பா நான் பத்தாவது முடிக்கும் போதே இறந்துட்டாங்க சார்…” என சொல்லும் போதே அவளின் கண்களில் நீர் சூடாக கொட்டியது.. 

 

“உனக்கு ஏதாவது பிரச்சனைன்னா எனக்கு கால் பண்ணு” என அவளின் செல்லில் தன்னுடைய பேர்ஸ்னல் நம்பரை சேவ் செய்து கொடுத்தான்… 

 

ஆதரவற்ற பெண் என்று அவளைப் பார்க்கையிலேயே அவனுக்கு தெரிந்தது… 

 

அவளுக்கு உதவ மனம் முந்தியது… அவன் இவ்வளவு இறங்கி செய்வது அவனுக்கே பெரிய விஷயமாக தான் பட்டது… 

 

அவன் ஆங்கிலத்தில் இஷாக் என பதிவு செய்துருக்க அதனைக் கண்டவளோ, 

 

அவன் பெயரை மனதிற்குள் எழுத்து கூட்டி வாசிப்பதற்குள் நொந்தே விட்டாள்… 

 

பத்தாவது வரை தமிழ் மீடியம் தான் படித்தாள்… அவள் வீட்டில் வறுமை பாவம் அவளால் என்ன செய்ய முடியும்… 

 

அவ்வப்போது பள்ளியில் பேசிக் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார்கள்.. அது ஏதோ அவளுக்கு ஞாபகத்தில் இருக்கிறது… 

 

“ரொம்ப நன்றி சார்” என கைக்கூப்பியவளிடம் ஒரு தலையசைப்புடன் அவன் வெளியே வர, ஏனோ அவன் இருக்கும் வரை ஒரு பாதுகாப்பை உணர்ந்த பவித்ரா அவன் சென்றப் பின்னர் அந்தப் பெரிய மருத்துவ அறையில் இருக்கவே பயந்தாள்… 

 

இஷாக் அவளின் அறையில் இருந்து சரியாக வெளியே வர பிரவீன் கால் செய்தான்… 

 

“சொல்லு பிரவீன்.. அந்த பொறுக்கியை உள்ள போட்டுட்டியா” என அழுத்தமாக கேட்க, 

 

“போட்டாச்சு… போட்டாச்சு மச்சான்… இன்னும் நீ அவனை கொஞ்சம் அடிச்சு இருந்தா அவன் உடம்புல உயிர் இருந்து இருக்காது டா…” என அவன் சொல்லிக் கொண்டு இருக்கையில், 

 

“அந்த வேலைக்காரி க்கு எவ்வளவு ஏத்தம் இருந்தா இத்தனை பெரிய ஹாஸ்பத்திரியில வந்து படுத்துருப்பா” என மீனாட்சி கத்தியபடி வர, 

 

“லூசு மாதிரி பேசாத மீனாட்சி… பிள்ளைக் கிட்ட யாரோ தப்பா நடந்துக்க முயற்சி பண்ணி இருக்காங்க… அந்த பொறுக்கி கிட்ட இருந்து யாரோ காப்பாத்தி இவளை இங்கன கொண்டான்டு சேர்த்துருக்காங்க” என தன் வாக்கிங் ஸ்டிக் உதவியோடு அவர் மூச்சு வாங்கியபடி நடக்க, 

 

அவர்களுடன் வந்த பிரியாவோ ஹாஸ்பிடலின் பிரம்மாண்டத்தை சுற்றி பார்த்து,”இதுக்கெல்லாம் என் கிட்ட பணம் கேட்டுறாதீங்க ப்பா… பவித்ரா சம்பளத்துல இருந்து கழிச்சிக்கோங்க” என்றாள் வேகமாக.

 

அத்தியாயம் 8

 

மகேஷ் சொல்லி முடித்த பின்னர் அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்கள் அதிர்ச்சியை, கோபத்தை, ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்… 

 

“மகேஷ்… என்ன இதெல்லாம்… எவ்வளவு பெரிய காரியத்தை பண்ணிட்டு வந்திருக்க!” என பாட்டி கத்த, 

 

“சுத்தம்… என்ன லட்சணமா அண்ணி வளர்த்தீங்களோ இப்படி குடும்பத்துக்கே தெரியாம இப்படியொரு காரியத்தை பண்ணிட்டு வந்திருக்க மகேஷ்… இதுக்கு அப்புறம் உங்க ஜாதகம் ஜோசியத்துக்கு எல்லாம் வேலையே இல்லையே அம்மா” என சித்ரா சந்தில் சிந்து பாட, 

 

சக்கரவர்த்தியோ ஒரு படி எழுந்து மகனை அறைந்தே விட்டார்… 

 

அவர் மாலையில் வீட்டிற்கு வந்ததில் இருந்தே சகுந்தலா தேவியும், காயத்ரியும் கணவனிடம் விஷயத்தை சொல்ல அவருக்கு ஐய்யோடா என்று இருந்தது… 

 

இதை எல்லாம் நம்பும் ஆள் அவர் இல்லை… அப்படியே நம்பினாலும் தனக்கு மகன்களின் வாழ்க்கை அவசரமாக அமைய வேண்டும் என்று நினைக்கும் சுயநலமான ஆளும் அவர் கிடையாது… 

 

அதனின் விளைவு அவர், “இந்த பேச்சே வேண்டாம் விட்டுடுங்க” என சொல்லி இருந்தாலும், ஒரு பக்கம் இஷாக் பேசிவிட்டு சென்ற விதம் மனதை அழுத்தியது… 

 

இப்போது மகேஷ் வேறு… எத்தகைய விஷயத்தை தங்களிடம் பகிராமல் மகன் செய்திருக்கிறான் என்பதை அறிந்த நொடி அவனின் நெஞ்சே அடைத்தது… 

 

அது தான் கோபமாக வெளிவந்தது… 

 

“அப்பா… சாரி ப்பா” என கரகரத்த குரலில் மகேஷ் ஒலிக்க, கண்கள் நிரம்பிய கண்ணீருடன், 

 

“என் கிட்ட..” என காயத்ரி ஆரம்பிக்க, 

 

“யாருக்கும் தெரியாது ப்பா.. இது முழுக்க முழுக்க என் தப்பு தான்” என்று அவசரமாக அழுத்தமாக ஒத்துக்கொண்டவனின் கண்கள் அன்னையை கண்களாலேயே எதுவும் பேச வேண்டாம் என சொன்னது… 

 

“அப்பா.. விடுங்க ப்பா அண்ணா க்கு அப்படி சூழ்நிலை அமைஞ்சிருக்கும்” என ஆதரவுக்கு தோழ் கொடுத்தான் விஷாக்… 

 

இந்த கலவரம் ஒருபாடு முடிய, பாட்டி விடுவதாய் இல்லை… 

 

காயத்ரிக்கும் கணவனின் உயிர் முக்கியமாக பட்டது என்பதால் அவரே, “அவங்க வீட்லயே இருக்குற பொண்ணை எடுத்தாலும் ஜோசியர் சொன்னது போல செஞ்சிடலாம் தானே அத்தை” என அவசரமாக சொன்னார்… 

 

“ஆமா பாட்டி… பிரியாவுக்கு ஒரு தங்கச்சி இருக்கா… அவளுக்கு ஒரு சித்தப்பா பொண்ணும் இருக்கா.. அவ வீட்ல தான் வளர்ந்தாள்” என்றான் அவசரமாக. 

 

தன் குடும்பத்தினரைப் பற்றி பிரியா சொல்லி இருக்கிறாள்… ஆனால் பவித்ரா சித்தப்பா பொண்ணாக வளரவில்லை வாழ்வும் இல்லை என்பதெல்லாம் மகேஷிற்கு சொல்லி இருந்து இருப்பாளா என்ன இல்லை… 

 

பாட்டிக்கு இதில் சுத்தமாக விருப்பம் இல்லை தான்…ஆனால் திருமணம் செய்துவிட்டேன் என்று வந்து நிற்பவனிடம் வேறு என்ன பேச முடியும்… 

 

“அப்போ அவங்க கிட்ட பேசலாம்… மூனு பேரோட பிளட் டெஸ்ட் எடுத்து பார்க்கலாம்” என்றார் காயத்ரி அவசரமாக… அவருக்கு அவரின் கணவனின் உயிர் முக்கியம் அல்லவா.. இப்படி ஒரு விஷயம் வரும் முன்னாடியே அவருக்கு தெரிந்து இருந்தால் கண்டிப்பாக அவர் மகேஷின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிருக்க மாட்டார் தானே… 

 

“அம்மா… என்ன நடக்குது” என விசித்திரா கடுப்புடன் காதில் கிசுகிசுக்க,

 

“உனக்கு இஷாக்கை விட நல்ல மாப்பிள்ளை நான் பாக்குறேன்” என்றார்.

 

ஒரு கல்யாணம் என்றால் பிளான் போட்டு அவரால் நிறுத்த முடியும்.. மூன்று கல்யாணத்தை எல்லாம் அவரால் நிறுத்த முடியாது… அப்படியே முடிந்தாலும் யாரால் எதனால் என்று கண்டறியாமல் இருக்க சக்கரவர்த்தி குடும்பம் ஒன்றும் சாதாரண குடும்பம் இல்லை அல்லவா…

 

“நோ வே ம்மா.. எனக்கு இஷாக் அத்தான் தான் வேணும்… அவர் வேற ஒருத்தியை கல்யாணமே பண்ணாலும் நான் தான் அவருக்கு மனைவியா வாழுவேன்” என அன்னையின் காதில் கடுப்பாக சொல்லிவிட்டு அவளின் அறைக்கு விரைந்து சென்றாள் விசித்திரா… 

 

“உன்னால இப்போ சிக்கல்ல நிக்குறது உன் தம்பிகளோட வாழ்க்கையும் தான்… நீ மட்டும் உனக்கு பிடிச்ச பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிட்ட… ஆனா அவனுங்க நிலைமையை யோசிச்சு பார்த்தியா.. அதுலயும் இஷாக் எல்லாம் இந்த கல்யாணத்துக்கு ஒத்துப்பான்னு கனவுல கூட நினைக்காத” என மகனிடம் கத்தினார் சக்கரவர்த்தி… 

 

விஷாக்கின் எண்ணவோட்டத்திலும் அது தான் ஓடியது…

 

அவனுக்கென்று விருப்பு வெறுப்புகள் இருக்கிறது… 

 

அப்படி இருக்கும் பொழுது எவளையோ திருமணம் செய்ய வேண்டும் என்றால் அவனும் தான் என்ன செய்வான்… 

 

சபை நாகரிகம் கருதி அவன் அமைதி காக்க, 

 

“விஷாக் கண்டிப்பா ஒத்துப்பான்” என வாக்கை கொடுத்தார் காயத்ரி… அதில் அதிர்ந்து விழித்த விஷாக், “அம்மா” என ஆரம்பிக்க, 

 

“உன் அம்மைவை உயிரோட பாக்கணும்னா நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கணும் விஷாக்” என்றார் கரகரத்த குரலில்… 

 

எப்போதும் பிள்ளைகளை ஒத்துக்கொள்ள வைக்க பெற்றொர்கள் எடுக்கும் ஆயிதம் இது தானே… 

 

ஏனோ தன் மனதில் என்ன இருக்கிறது தன் விருப்பு என்ன, தன் வெறுப்பு என்ன என கேட்காமல் தன் திருமணத்தை குடும்பத்தினர் முடிவு செய்வது விஷாக்கிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை… 

 

“அம்மா.. ப்ளிஸ் இந்த மாதிரி எல்லாம் எமோஷனல் பிளாக்மெயில் பண்ணாதீங்க” என கோபத்துடன் சொன்ன மகனிடம், 

 

“நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னா உண்மையா செய்வேன்” என சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றார்… 

 

“இதெல்லாம் நடக்கக்கூடாதுனு தான் இந்த விஷயம் வேணாம்ன்னு சொல்லிட்டு இருக்கேன்” என சக்கரவர்த்தி கத்த, 

 

“உன் அம்மா பேச்சை நீ இதுல மீறக்கூடாது சக்கரவர்த்தி… ஜோசியர் சொன்னது போல உன் பிறந்தநாள்க்குள்ள அவர் சொன்னது போல உன் மூனு பசங்களுக்கு கல்யாணம் நடக்கணும்… நான் நடத்தி காட்டுவேன்” என்றவர் மகேஷ் புறம் திரும்பி, 

 

“அந்தப் பொண்ணு பேர் என்ன” என கேட்டார். 

 

“பிரியா பாட்டி” என தயங்கி சொன்னான் மகேஷ்… 

 

“அவ வீட்ல இருந்து நாளைக்கு அவளோட அப்பா அம்மாவை வரச் சொல்லு அதுக்கு முன்னாடி அந்த மூனு பொண்ணுங்களையும் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் இரத்தத்தை பரிசோதனை செய்யணும்” என்றார் கறாராக. 

 

“சரி பாட்டி” என்றவனிடம், 

 

“நம்மளோட ஃபேமிலி டாக்டர் ஹாஸ்பிடலுக்கு நாளைக்கு கூட்டிட்டு போ.. ரிசல்ட் நான் தான் பார்ப்பேன்” என்றார் மீண்டும் கறாராக. 

 

அவரிடம் தலையாட்டலை கொடுத்த மகேஷிற்கோ மனம் முழுக்க குற்ற உணர்ச்சி… 

 

தன்னால் இப்படி தம்பிகளின் வாழ்க்கைக்கும் சிக்கல் வந்துவிட்டது அல்லவா… 

 

அவனுக்கும் இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்து இருந்தால் காதலில் கூட விழுந்து இருக்க மாட்டானே… 

 

இங்கே பவித்ரா கண் விழித்த தருணத்தில் அவள் முன்னே அமர்ந்திருந்தார்கள் மணி மற்றும் பிரியா… 

 

மீனாட்சி தன் மாமியாருடன் பவித்ராவைப் பற்றித் தான் ஃபோனில் குறை பேசிக் கொண்டு இருந்தார்… 

 

பிரியாவிற்கோ பவித்ராவை ஹாஸ்பிடலில் அனுமதித்தவரே பில்லை கட்டி விட்டார் என தெரிந்த பின்னர் தான் அவளுக்கு நிம்மதி பெருமூச்சே வந்தது… 

 

“என்ன பவித்ரா உனக்கு இந்த மாதிரி பணக்கார ஹாஸ்பிடல்ல கூட சேர்த்து பணம் கட்டுறதுக்கு ஆள் இருக்காங்க போல” என நக்கலாக கேட்டாள்… 

 

இஷாக் பவித்ராவின் பேசிவிட்டு சென்ற பின்னர் மருந்தின் அசதியால் மீண்டும் கண் அயர்ந்தாள் பவித்ரா.. இதோ இப்போது தான் கண் விழித்தாள்… 

 

கண் விழித்ததும் இப்படியான வார்த்தைகள்… 

எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து இப்போது தப்பித்து வந்திருக்கிறாள் பவித்ரா… 

 

அந்த ஆபத்தில் இருந்து அவள் காப்பாற்றப்படவில்லை என்றால் இந்நேரம் அவள் செத்து மடிந்து கிடந்து இருந்திருப்பாளே.. 

 

அதுவும் தெய்வம் போல் காப்பாற்றியவரை எப்படி எல்லாம் பேசுகிறார் இந்த அக்கா என பவித்ராவிற்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது… 

 

ஆனால் எப்போத்ம போல் தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் அவள் அமைதியாக இருக்க, “நல்லா அமுக்கினி மாதிரி இருக்குற உன்னை எல்லாம் நம்பவே முடியாது” என்றாள் எகத்தாளமாக… 

 

மணிக்கோ பவித்ராவைக் காணவே பாவமாக இருந்தது… ஆனாலும் எதுவும் பேச முடியாத நிலை… 

 

இன்னும் பவித்ராவை மட்டம் தட்டி இருந்து இருந்து இருப்பாள் பிரியா… ஆனால் அந்நொடி அவளுக்கு மகேஷிடம் இருந்து கால் வர பவித்ரா அவளின் வசைவில் மாட்டாமல் தப்பித்தாள்…

 

மகேஷிடம் இருந்து கால் வந்த நொடி அவசர அவசரமாக இடத்தை விட்டு எழுந்தவள் வெளியேறி காரிடறிற்குச் சென்றாள்… 

 

“மகேஷ்… நான் உங்களுக்கு எத்தனை தடவை கால் பண்ணினேன்…ஏன் எடுக்கல” என அவன் பேசும் முன்னரே அவள் படபடவென பொழிய, 

 

“வில் யூ ஸ்டாப் பிரியா” என வல்லென்று கத்தினான் மகேஷ்… 

 

அதில் திடுக்கிற்ற பிரியாவோ, “என்னாச்சு மகேஷ்.. என்னை கத்தவெல்லாம் செய்றீங்க” என சிணுங்கியபடி கோபப் பட்டாள்… 

 

“என்னை கொஞ்சம் பேச விடுறியா பிரியா” என சலிப்பாக வந்தது மகேஷின் குரல்… 

 

‘என்னமோ சரி இல்லையே’ என மனதிற்குள் நினைத்தபடி படபடத்தவளோ, “சொல்லுங்க” என நிறுத்த, 

 

அன்று காலையில் இப்போது நடந்த வரை அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தான் மகேஷ்… 

 

இதை எல்லாம் கேட்ட பிரியா மயங்கி விழாமல் இருந்ததே பெரிய அதிசயம் தான்… 

 

தன் திருமணத்திற்கு ஏறத்தாழ பச்சை கொடி காட்டி விட்டார்கள் என்கிற சந்தோஷம் எல்லாம் அவளுக்குத் துளி அளவும் இல்லை…

 

தன் தங்கைக்கும் அங்கே வாழ்க்கையா என்கிற எண்ணம் லேசாக வந்தாலும், பவித்ராவை யும் மனதில் வைத்து மகேஷ் பேசுவதை கேட்க கேட்க அவளின் நெஞ்சே வெடித்து விடுவது போல் ஆனது… 

 

“என்ன பேசுறீங்க மகேஷ்… பவித்ரா வெல்லாம்” என அவள் ஆரம்பிக்க, 

 

“அவ உன் சித்தப்பா பொண்ணு தானே அப்போ என்ன” என பட்டென்று கேட்டான் மகேஷ்.. 

 

அதில் பிரியாவிற்கு தான் வார்த்தைகள் வராமல் அடைத்துக் கொண்டது… 

 

அவள் என் வீட்டு வேலைக்காரி என்று சொல்லிவிடும் தைரியம் பிரியாவிற்கு இருக்கா என்ன கண்டிப்பாக இல்லை… 

 

அவளுக்கு அவளின் தங்கை அந்த வீட்டிற்கு வருவதே நெருடலாக இருக்கிறதே… 

 

ஆம், மகேஷை தன் பின்னால் வர வைக்க அவள் எவ்வளவு பிளான் செய்து இருக்கிறாள்… 

 

இப்போது தங்கைக்கு நோகாமல் பணக்கார வீடு கிடைக்கிறதே என ஒருப்பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் தங்கையின மங்கிய நிறத்திற்கு மகேஷின் வீட்டில் ஒத்துக்கொள்வார்களா என்கிற பயம் வேறு… 

 

சொந்த தங்கையாகி போனதால் முத்துமாரி மீது பொறாமை இல்லை… அவளை மகேஷின் வீட்டில் ஏற்றுக் கொள்ள வேண்டுமே என்பதே முதன்மையான கவலையாக அவளுக்குத் தோன்றியது…

 

Share on
❤️ Loading reactions...
0 Comments
error: Content copy warning!!