பிரியாதிரு 8

இரண்டு வருடங்களுக்கு முன்னர்.. 

திருமண தேதி நெருங்கிக் கொண்டே இருக்க, என்ன சொன்னாலும் ஆத்மன் ரெட்டி திருமணத்தை நிறுத்தும் அறிகுறியே காட்டவில்லை… 

“இன்னிக்கு எப்படியாவது அந்த ஆத்மன் ரெட்டி கிட்ட பேசி எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தறேன் பாரு” என அனன்யாவிடம் வீராப்பாக பேசிய அமிர்தா ஃபோனை பார்க்க, அதுவே அணைக்கப்பட்டு இருந்தது.. 

“ஏன் அன்னு.. உன் ஃபோன் கொடு டி.. என் ஃபோன்ல சார்ஜ் இல்ல” என சலிப்பாக ஃபோனை கேட்டாள் அமிர்தா. 

“என்கிட்ட ஆத்மன் ரெட்டி நம்பர் கொடுத்து வைச்ச போல கேட்குற” என தன் கம்ப்யூட்டரில் ஏதோ வேலை செய்தபடி தங்கையைப் பார்த்துக் கேட்டாள் அனன்யா. 

“நான் அவன் நம்பரை மனப்பாடம் பண்ணி வைச்சு இருக்கேன்.. அதனால கொடு” என்று அவள் சொல்ல, 

“ஓஒ.. பிடிக்கல பிடிக்கலைன்னு அவர் நம்பரை எல்லாம் மனசுலயே சேமிச்சு வைச்சு இருக்க” என்று அனன்யா கலாய்த்தாள்.

“தினமும் ரெண்டு தடவையாவது கால் பண்ணிடுறான்.. அப்புறம் எப்படி நம்பர் மனசுல பதியாமல் இருக்கும்.. இன்னொரு முறை நீ என்னை அவன் கூட வைச்சு பேசுனா நான் உன்கிட்ட பேசவே மாட்டேன்” என்றாள் கடுப்புடன்… 

“சரி சரி டென்ஷன் ஆகாத விடு” என தங்கையை சமாதானம் செய்த அனன்யா, தான் செய்துக் கொண்டு இருந்த வேலையில் ஈடுபட, 

ஆத்மனிற்கு கடுப்புடன் ஃபோன் செய்த அமிர்தா, “ஹலோ” என்று ஆரம்பிக்க, 

“சொல்லு அம்மு குட்டி” என்று காதல் குழைந்த குரலில். 

அதில் உண்மையாகவே ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டாள் அமிர்தா.. 

ஏனெனில் அவள் அவனிடம் தன் பெயரை இன்னும் குறிப்பிடவில்லை.. வெறும் ஹலோ என்று தானே சொன்னாள்.. அவனிடம் அனன்யா நம்பர் இல்லை. 

அவன் அவளுக்கு நிறைய முறை கால் செய்து பேசியிருக்கான். சில முறை அவள் எடுத்தது கிடையாது, சில முறை எடுத்தும் பேசாமல் கடுப்பேற்றுவாள்.. 

மேசேஜில் மட்டும் இந்த கல்யாணத்தை நிறுத்துங்க என்று அனுப்பிக் கொண்டே இருப்பாள்.. 

இப்போது எப்படி தன் குரலை கண்டறிந்து விட்டான் என்று அவளுக்கு மனதில் குடைய அதை அப்படியே அவனிடம் கேட்டும் விட்டாள். 

“என்னோட வாய்ஸ் உங்களுக்கு எப்படி.. அது எப்படி உடனே கண்டுபிடிச்சீங்க!” என்று அவள் அந்த கோபத்திலும் தட்டுத் தடுமாறி கேட்க, 

“உன்னோட வாய்ஸ் என் மனசுக்குள்ள ரீங்காரமே ஒலிச்சிட்டே இருக்கு பங்காரம்…  அதை எப்படி நான் உணராம இருப்பேன்.. பக்கத்து தெருவுல இருந்து நீ பேசுனா கூட எனக்கு கேட்கும்.. அவ்வளவு காதல் உன் மேல” என்று உண்மையான காதலில் அவன் நெகிழ, 

“மண்ணாங்கட்டி.. ஸ்டாப் யுவர் நான்சென்ஸ்” என்று கடுகடுத்த அமிர்தா, 

“இந்த கல்யாணத்தை நீங்க நிறுத்தலன்னா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்..” என்றாள் காட்டமாக. 

“நீ ஏலீயனா இருந்தாலும் பரவாயில்ல வாம்ப்பையரா இருந்தா கூட எனக்கு ஓகே தான்… வாட் சோ எவர் பங்காரம்! ஐ லவ் யூ அண்ட் ஐ நீட் யூ” என்றான் அழுத்தமாக. 

தன் வீட்டில், திரைத்துறையில் இருக்கும் அனைவரிடத்தில் என்றும் ஆத்மனின் கை தான் ஓங்கி இருக்கிறது.. 

அப்படி ஒரு ஆளூமை உள்ள பெரிய இயக்குனர்.. இப்படி ஒரு பெண் பேசும் பேச்சிற்கு எல்லாம் அமைதியாக இருக்கிறானே… 

கண்டிப்பாக இல்லை.. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முறையும் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லும் அமிர்தாவின் மீது காதலே இருந்தாலும் அவளின் பேச்சுக்கள் அனைத்தும் அவனின் கோப ஹார்மோன்களை எழுப்புகிறது தான்.. 

ஆனால் காதல் ஹார்மோன்களோ அதை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு நிற்கிறதே… 

தன் கோபத்தை கூட தன்னவளுக்காக அடக்கிக் கொள்கிறான்… 

“உங்களுக்கு வெக்கம், மானம், சூடு, சுரணை எல்லாம் எதுவுமே இல்லயா.. நான் இவ்வளவு சொல்றேன் உங்க தலைக்குள்ள அதெல்லாம் ஏறுதா இல்லயா!” என்று தான் மனப்பாடம் செய்து வைத்ததை நிறைய பயம் இருந்தாலும் கேட்டே விட்டாள்.. 

“shut up (ஷட் அப்) அமிர்தா” என்று ஃபோனே அதிரும் அளவிற்கு கத்திவிட்டு ஃபோனை பட்டென்று கட் செய்து விட்டான்… அதுவரை தான் அமிர்தாவிற்கு தெரியும்… ஆனால் ஃபோன் வெடித்து சிதறியதில் கால் கட்டாகி விட்டது என்பது பாவம் அமிர்தாவிற்குத் தெரியவில்லை… 

அவன் கத்தியது மட்டுமே அவளுக்கு தெரியும்.. அவன் கர்ஜித்ததில் அவளின் முகம் பயத்தில் வெளிறிப் போய் இருக்க அவளின் கண்களில் கண்ணீர் பெருகி கொட்டியது. 

இப்படி கேட்டு அவனின் கோப முகத்தை காண அவளுக்கு பெரும் பயம் தான்… இருந்தாலும் அவளுக்கு வேறு வழியில்லாமல் போனது.. 

அவனின் கோபத்தை உசுப்பேற்றிவிட்டு அவனின் தன்மானத்தில் கைவைத்தால் கண்டிப்பாக அவன் நிராகரித்து விடுவான் என்ற எண்ணமே அவளுக்கு… 

அவள் நினைத்தது போல் அவன் கோபத்தில் கனன்று விட்டான். 

அமிர்தாவின் முகத்தை கவனித்து பதறிய அனன்யாவோ, “அம்மு.. அம்மு.. என்ன ஆச்சு டி?” என்று வேகமாக வந்து உலுக்க, 

தன்னிலை பெற அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது.. 

“கடுப்பாகி… ஃபஃபோனை கட் பண்ணிட்டான் டி” என்று திக்கித் திணறி சொன்னாள் அமிர்தா. 

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!