பிரியாதிரு 9

“அது தானே உனக்கு வேணும்… நீ ஏன் டி பேய் அடிச்ச மாதிரி இருக்க.. உன் கண்ணுல தண்ணீ வருது!” என்று புரியாமல் கேட்டாள்  அனன்யா. 

“அவன் கத்துனதுல கண்ணுக்குள்ள இருந்த ஸ்டாக் படார்ன்னு வெளியே வந்திருச்சு டி” என பதறி சொன்னவள், 

“எப்படியோ அவனை உசுப்பேத்தி கல்யாணத்தை நிறுத்தியாச்சு.. இப்போ தான் நிம்மதியா இருக்கு” என்று அமர்ந்து சாய்ந்தாள் அமிர்தா. 

“என்ன.. காதல் மன்னன் கல்யாணத்தை நிறுத்திட்டாரா” என நம்ப முடியாமல் வாயைப் பிளந்து கேட்டாள் அனன்யா. 

“ஆமா.. இனி எப்படி வருவான்? அதான் கத்திட்டு கட் பண்ணிட்டு போயிட்டான்.. அப்புறம் ஃபோனும் வரல” என நிம்மதி பெருமூச்சுடன் சொன்னவளுக்கு தெரியவில்லை ஆத்மனைப் பற்றி அவனின் அதீத காதலைப் பற்றி! 

“எனக்கு அப்படி தோணலயே” என அனன்யா முனுமுனுக்க, 

“என்ன!” என்று புரியாது கேட்டாள் அமிர்தா. 

“ஒன்னும் இல்ல டி” என அனன்யா சமாளித்துவிட்டாள். 

கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆத்மனிடம் இருந்து எந்த ஒரு மெசேஜ் கால் என எதுவும் வரவில்லை.. 

அமிர்தாவோ எப்போது வீட்டில் இந்த கல்யாணம் நின்றுவிட்டது என்கிற செய்தி வரும் என்று வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள்.. 

“அமிர்தா வர வெள்ளிக்கிழமை கல்யாணம்” என்கிற செய்தி காதில் விழ ஆடிப்போய் விட்டாள் அமிர்தா. 

“நான் தான் சொன்னேனே அம்மு.. அவர் உன்னை விடுறதா இல்ல” என அனன்யா சொல்ல, அமிர்தாவிற்கு வயிற்றில் புளியை கரைத்தது.. 

அதன் பின்னர் தான் இந்த விஷயம்  சாருபாலாவுக்கு தெரிந்து அமிர்தாவை காப்பாற்ற வேண்டும் என நினைத்திருந்தவள் ஆத்மன் ரெட்டி வீட்டுக்கு மொட்டை கடுதாசி போட்டாள். 

அமிர்தாவும் சர்வாவும் காதலிப்பதாய் அவள் கடுதாசியில் போட்டிருக்க கடுதாசியை முதலில் படித்தது என்னவோ ராஜேஷ் ரெட்டி தான்.. 

இவ்விஷயம் தெரிந்தும் அமிர்தாவை மகனுக்கு திருமணம் செய்து வைக்க அவர் முனைவரா..அவருக்கு அவரின் மகனின் எதிர்காலம் முக்கியம் ஆயிற்றே! 

மகனிடம் சொல்லாமலே திருமணத்தை நிறுத்தி விட முடிவெடுத்து விட்டார்.. 

ஆனாலும் இந்திரஜித் வீட்டின் சம்மந்தத்தை விட அவருக்கு மனமில்லை.. அதிலும் தன் மகளுக்கு தாங்கள் பார்த்த சம்மந்தம் என்றாலும் இந்திரஜித்தின் தம்பி அஜய்யை பிடித்து விட்டது என்பதால் அதை அவர் நிறுத்தவில்லை.. 

ஆத்மன் ரெட்டி ஷூட்டிங்கில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னர், “இந்த கடுதாசியைப் பாரு ஆத்மா.. இந்த பொண்ணு அமிர்தா உனக்கு தகுதியானவ இல்ல..” என்று மடமடவென தன் முடிவை சொல்ல, 

ஆத்மனுக்கோ அமிர்தாவின் மீது அப்படி ஒரு ஆத்திரம்.. அவனின் கோபத்துக்கு அளவே இல்லாமல் போனது..

அமிர்தா வேறு ஒருவனை காதலிக்குறாள் என்னும் விஷயத்தை கூட அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. 

ஆனாலும் தன்னால் தன் தங்கை திருமணத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் வரக் கூடாது என்று முடிவாக இருந்தவன், 

“இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் ஆனா இப்போ இல்ல நானா நான் சொல்லும் போது இந்த கடுதாசியைப் பத்தி பேசி நிறுத்திடுங்க” என முடிவாக சொன்னவன், 

அடுத்த நாளே ஷூட்டிங் செல்கிறேன் என்று கோயம்புத்தூர் புறப்பட்டான்.. யாருக்கும் தெரியாது.  

நேராக அவன் கார் நின்றது இந்திரஜித்தின் வீட்டிற்கு தான்… 

அவன் கண்களிலோ அத்தனை ரௌத்திரம்.. அவனுக்கு அமிர்தா வேண்டும்.. இப்போதும் அவன் மனதில் காதல் இருந்தாலும் அதைத் தாண்டி ஒரு வெறி.. தனக்காக உருவானவள் எப்படி தன்னை நிராகரித்து இன்னொருவனை காதலிக்கலாம் என்கிற வெறி… கோபம்… ரௌத்திரம்! 

ஏதாவது செய்ய வேண்டும்.. ஏதாவது கண்டிப்பா செய்ய வேண்டும் என்கிற வெறி அவனின் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே, தன் வீட்டில் இருந்து அமிர்தா வெளியில் வருவது அவனுக்கு தெரிந்தது… 

அமிர்தாவை பார்க்க வேண்டும் என்று மூன்று நாட்களாக சர்வா கிட்டத்தட்ட கெஞ்சுகிறான்.. 

“இருக்குற பிரண்சனையில இவன் வேற ஏன் டி இப்படி பண்றான்” என அனன்யா கடுப்பாக சொல்ல, 

“அவன் என்னை காதலிக்குறான் அன்னு” என அமிர்தா அவனுக்காக பேச, 

“நீ தான் அவனை காதலிக்கலயே…” என ஆதங்கமாக கேட்ட அனன்யாவை முறைத்த அமிர்தா, 

“ஆமா.. ஆனா எனக்கு சர்வாவை பிடிக்கும்” என்று முடிவாக சொன்னவள் சர்வாவை நினைத்து பதறியவள், 

“நான் சர்வாவை பார்த்துட்டு வந்திடுறேன்” என்று முடிவாக சொன்னவள், “அண்ணா கிட்ட கேட்டா அவர் கண்டிப்பா வெளிய விட மாட்டாரு டி” என்று பயந்தாள். 

“அண்ணா கண்டிப்பா விட மாட்டாரு.. அதனால சர்வா கிட்ட கிளியரா சொல்லிடு அம்மு” என்றாள் அனன்யா. 

“சர்வா பாவம் டி.. நான் வேணும்னா ஒரு தடவ கேட்டுப் பார்க்குறேன்..” என இழுத்தவள், “என் கூட நீயும் வரியா அன்னு” என அக்காவை கெஞ்சுதலாக பார்த்து கேட்டாள் அமிர்தா. 

“வந்தா..நான் சர்வா மேல இருக்குற கோபத்துல அவனை கடிச்சு குதறிடுவேன் பரவாயில்லையா” என்று வேகமாக கேட்டாள் அனன்யா. 

சர்வாவின் செயல்கள் ஏனோ அனன்யாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. 

“நானே போய்க்குறேன் விடு” என்று வல்லென்று விழுந்த அமிர்தா.. 

மனதில் பெரிய பயத்துடன் அவளின் அண்ணன் இந்திரஜித்திடம் வெளியே கோவிலுக்கு செல்ல வேண்டும் என மிகவும் தயங்கி கேட்க, அவனோ இலகுவாக சரி என்று சொல்லிவிட்டு இருக்க, அது அமிர்தா விற்கே பெரிய அதிர்ச்சி தான்.. 

அப்படி இலகுவாக ஒத்துக்கொள்பவனா இந்திரஜித்.. இப்போது இலகுவாக சரி சொல்லி விட்டு அமிர்தாவை கண்காணிக்க காத்திருக்கிறான் அல்லவா! 

அங்கே வெளியே அவளின் மீது வெறிக்கொண்டு காத்திருக்கும் ஆத்மன் ரெட்டி! 

கோவிலுக்கு வா என்று சொன்ன சர்வாவோ அங்கே அமிர்தாவிற்கே சொல்லாமல் தாலி கட்ட காத்திருக்கிறான்… 

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!