பிரியதிரு 12

பிரியதிரு 12

“வேற யாரையாவது அனுப்புங்களே பிரமோத்…” என்று தயங்கி சொல்லியும் விட்டாள்.. 

 

“நோ சோனியா அப்படி வேலை எல்லாம் மாத்திக்க முடியாது.. இனி இந்த மாதிரி கேட்காதீங்க” என கறாராக சொல்லிவிட்டு செல்ல, சோனியாவின் கும் வேறு வழியில்லை… 

 

ரெட் கலர் டிசைனர் சேலையில் பார்க்க தேவதை போல் மிளிர்ந்தாள் சோனியா… பின்னே அவள் தான் பேரழகி ஆயிற்றே… 

 

வெகு தயக்கத்துடன் விக்னேஷூக்கு கொடுக்க வேண்டிய பானங்களை எடுத்துக் கொண்டு அவனின் அறை நோக்கி நடந்தாள்… 

 

வந்த கூட்டத்தில் ப்ரீத்தாவின் குடும்பத்துக்கோ சோனியா வந்திருப்பது தெரியாது… 

 

தெரிந்தாலும் அவர்களால் இந்திரஜித்தை மீறி என்ன செய்துவிட முடியும்… 

 

ஆம், சோனியா ஒன்றும் வேண்டும் என்றே வரவில்லையே.. அவளின் நேரம் அவள் வேலைக்கு சேர்ந்த இடத்தில் இங்கு வந்து விட்டார்கள்… 

 

தன் தங்கை மீது தப்பு இல்லாமல் அவளின் மீது கலங்கத்தை உண்டாக்க விட மாட்டான் இந்திரஜித்.. 

 

விக்னேஷின் அறை கடைசியாக தனிமையாக இருந்தது… அங்கு செல்லும் போதே அவளின் மனம் அதி வேகமாக அடிக்க, கஷ்டப்பட்டு தன் இதயத்தை சீராக்கியவள் ஒரு பெருமூச்சுடன் இலகுவாக, 

 

“உள்ளே வரலாமா சார்” என சாற்றி யிருந்த கதவைத் தட்டினாள். 

 

யாரின் குரல் என்று விக்னேஷிற்கு தெரியாதா என்ன.. ஒரு எள்ளல் நகையுடன் கதவைத் திறந்தவனைக் கண்டவளுக்கோ அதிர்ச்சி…. 

 

இப்போது தான் குளித்து முடித்து விட்டு இடுப்பில் ஈரத்துண்டுடன் நிற்கிறான்… அவனை இந்நிலையில் பார்த்தவளோ அதிர்ந்தாலும் அதை முகத்தில் காட்டாமல், “ரூம் செர்வீஸ் சார்.. உங்களுக்கு கூல் டிரிங்ஸ்” என்று சொல்ல, அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவளோ லேசாக நகர்ந்து அவளுக்கு உள்ளே செல்ல வழிவிட, ஒன்று அவனை நன்றாக உரசி செல்ல வேண்டும் இல்லையேல் பானங்கள் கீழே சிதறி விடும் என்கிற நிலை தான் அவளுக்கு இடம் இருந்தது. 

 

“இடம் பத்தல சார்.. கொஞ்சம் தள்ளுங்க” என இலகுவாக தான் சொன்னாள். 

 

அதென்ன நீ சொல்லி நான் கேட்பது என்கிற தோரணையில், “நீ எனக்கு சர்வீஸ் பண்ண வந்துருக்கு.. இந்த அதிகாரம் எல்லாம் என் கிட்ட வேணா சோனியா” என்றான் திமிர் கலந்த அழுத்தத்துடன். 

 

‘நான் எங்க டா உன்னை அதிகாரம் பண்ணேன்… சாதாரணமா தானே சொன்னேன்! சும்மாவா சொன்னாங்க பிடிக்காத பொண்டாட்டி கைப்பட்டா குத்தம் கால் பட்டா குத்தம்ன்னு’ என மனதில் நொந்தவள், 

 

“சாரி சார்… நான் அப்படி மீன் பண்ணல.. சாதாரணமா தான் சொன்னேன்” என்றவளோ

அவன் கொடுத்த அந்த சிறிய இடத்தில் அவள் கையிலிருந்த டிரெயுடன் உள்ளே செல்வதற்குள் நொந்தே விட்டாள்… 

 

அந்த பானங்கள் கீழே விழாது இருக்க அவளுக்கு வேறு வழியில்லை… ஒரு பக்கமாக திரும்பியபடியே அதை எடுத்து உள்ளே செல்ல, அவனின் முதுகுத்தண்டும், மெலிதாக தெரிந்த வெற்றிடைக்கு கீழேயும் அவனை உரசிச் செல்ல, அவனின் உடல் அவளின் தீண்டலில் சிலிர்த்தது…

 

முன்பக்கம் திரும்பி டிரேவை முதலில் உள்ளே விட்டு அவள் வந்திருக்கலாம்… அப்படி செய்தால் அவளின் மென்மை வனப்புகள் அவனைத் தீண்டி வீடும் என்கிற பயத்தில் தான் அவள் திரும்பி வந்தாள்..

 

இதோ இப்போதும் அவனை தீண்டி இம்சித்து விட்டாள்… 

 

அவனுக்கு இம்சையாய் போனது என்றால் இவளுக்கோ அவஸ்தை ஆகிப் போனது… 

 

“சாரி சார் தெரியாம..” என்று தன்னிலையை அவள் விளக்க வர, 

 

“என்னை செடியூஸ் பண்ண தானே இப்படி என் முன்னாடி வந்து நின்னு, என்னை உரசிக்கிட்டு போற” என அவன் அதிரடியாக கேட்டது அவளை சுக்கு நூறாக்கியது… 

 

“மைன்ட் யுவர் வேர்ட்ஸ் விக்னேஷ்” என பொங்கியவளை நக்கலாக பார்த்தவன், 

 

“வை ஷுட் ஐ” என தன் இருகைகளை அலட்சியமாக குலுக்கியவன் அவளை நோக்கி எட்டுகளை எடுத்து வைக்க, அவளின் கைகளோ நடுங்க தொடங்கியது… 

 

டிரே வேறு அவளின் கையில் தான் இன்னும் இருக்கிறது… அது வேறு விழுந்து விடக் கூடாது என்று இறுக்கமாக பற்றிக் கொண்டாள். 

 

ஏன் தன்னை நெருங்குகிறான் என்று அவளுக்குத் தெரியவில்லை… 

 

அவனின் வார்த்தைகள் கோபத்தை கக்கினாலும் அவனின் கண்களில் தாபம் தான் இருந்தது… 

 

இதோ… அவளை இடிப்பது போல நெருங்கி வந்தவனோ அவளின் நடுங்கும் கைகளை இறுக்கி பிடித்து நடுக்கத்தை நிறுத்தியவன், அந்த டிரேயை வாங்கி கீழே வைத்து விட்டு அவனுக்கான பானத்தை எடுத்து அவளைப் பார்த்தபடியே பருகினான். 

 

அவனின் கண்களில் இருப்பது ஆசை… மோகம்…தாபம் மட்டுமே! 

 

குளிர் பானத்தை வேகமாக பருகியவனோ, “குளிர் பானம் உன்னை போல செம டேஸ்ட்டா இருக்கு…” என்றவனின் விழிகளோ அவளின் இதழில் மோகத்துடன் வந்தடைய, அவளோ அவனின் பேச்சில் ஸ்தம்பித்து சிலையாய் நின்றாள். 

 

“பட் அது பாய்சன்… உன்னை போல அதனால எப்பயாவது தான் யூஸ் பண்ணனும்”  என்றவனின் விழிகள் அவளின் கழுத்தை தாண்டி கீழே செல்ல, அவளுக்கோ அவனின் வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ள கூட அவன் அவகாசம் கொடுக்காமல் அவளின் மெலிதான வெற்றிடையைப் பற்றி அவளின் செவ்விதழைக் கவ்வி இழுத்தவன், அவளின் இதழை வன்மையாக ஆட்கொண்டான்… 

 

 

 

   

Share on
❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content copy warning!!