பிரியாதிரு 13
இந்தியா முழுவதுமே இன்று பிளாஷ் நியூஸ் இல் வந்தது என்னவோ ஆத்மன் ரெட்டி மற்றும் அமிர்தா தான்..
“பிரபல இந்திய இயக்குனர் ஆன ஆத்மன் ரெட்டிக்கும், அமிர்தா என்னும் பெண்ணிற்க்கும் ரகசியமாக திருமணம் நடந்து முடிந்து இருந்தது. இன்று இது தான் டாப் டிரெண்டடிங் நியூஸ்” என்று அனைத்து தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பாகிக் கொண்டு இருந்தது.
இதோ இந்த நொடி அமிர்தா ஆத்மனின் வீட்டில் தான் இருக்கிறாள். நேற்று அந்த பிரலயமே வந்திருக்க, அமிர்தா அவ்வளவு அழுது கதறிய பின்னர் பத்திரிக்கையாளர்களோ ஆத்மனின் கண் அசைவில் பயந்து விலகி விட்டார்கள்..
அதன் பின்னர் அமிர்தாவிற்கே என்ன செய்வதென்று தெரியவில்லை…
அனன்யாவிற்கு இனி பிரச்னை இல்லை தான்.. ஆனால் ஆத்மன் ரெட்டி இதே போல் பிரச்சனையை திருப்பி கொண்டு வர மாட்டான் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை தானே…
அதனால் அவளுக்கு அவனின் வீட்டிற்கு செல்வதைத் தாண்டி வேறு வழியே இருக்கவில்லை…
இத்தனைக்கும் ஆத்மன் வீட்டிற்கு அழைக்கவில்லை… ஆனால் மனைவியாக அழைக்காமல் மீண்டும் படுக்கைக்கு அழைத்தால்! அதை விட அமிர்தாவிற்கு பெரிய கேவலம் இருந்துவிட முடியாது என்பதை உணர்ந்தவள்…
எதுவும் பேசாமல் இறுக்கமான முகத்துடன் தன் காரை நோக்கி சென்றவன் பின் வேகமாக மூச்சு வாங்க ஓடினாள்…
அவனின் நடையில் தான் அத்தனை வேகமும் கோபமும் இருக்கிறதே…
அவன் காரில் ஏறிய நொடி.. இவளும் வேகமாக மறுப்பக்கம் ஏறிக்கொண்டாள்…
“என் கார்ல ஏற உனக்கு யார் ரைட்ஸ் கொடுத்தா!” என அவளைப் பார்ப்பதை வேண்டும் என்றே தவிர்த்து, நேரே பார்த்தபடி இறுக்கமான முகத்துடன் கேட்டான் ஆத்மன்.
இப்போது அவளுக்குத் ஏறிக்கொண்டது..
“எல்லாம் என் தலைவிதி… இதுக்கு அப்புறம் நான் உங்க கூட தானே இருந்து ஆகணும்” என கோபம் கலந்த அழுகையுடன் சொன்னாள்…
‘இப்போ கூட தலைவிதியேன்னு தான் என் கூட வர… எஸ் அதே தலைவிதி நான் செஞ்ச சதியால மட்டும் தானே இன்னிக்கு பிரெஸ் முன்னாடி நான் தான் புருஷன்னு சொல்லியிருக்க’ என மனதில் ஆதங்கமாக நினைத்தவன் தானே பிரெஸ் மக்களை வரவே வைத்தான்…
ஆனால் அவர்கள் பேசிய அவதூறான வார்த்தைகளுக்கு அவர்களை எங்கே அடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்து விட்டான்…
இந்திரஜித்தின் வீட்டிற்கு, அனன்யாவிற்கு ஏன் சர்வாவின் வீட்டிற்கு கூட அமிர்தாவின் பிளாஸ் நியுஸ் சென்றடைந்தது…
குடும்பத்தினர் அமிர்தாவிற்கு கால் செய்து அதிர்ந்தாலும், “நீ இனி உன் புருஷனோட தான் இருக்கணும்” என்றார்கள் அக்கறையாக.
ஆத்மனே இந்திரஜித்திற்கு கால் செய்து, “இனி உங்க தங்கச்சி இந்த ஊரு உலகம் முன்னாடி என் பொண்டாட்டியா தான் இருப்பா” என்ற உத்தரவாதத்துடன் சொன்னான்.
அமிர்தாவை வேண்டும் என்றே தான் ஹைதராபாத்தில் படிக்க வைத்தான் இந்திரஜித்…
அதனின் முழு செலவையும் நான் தான் பார்ப்பேன் என்று இந்திரஜித்திடம் அமிர்தாவின் கணவன் என்கிற உரிமையில் கேட்டான் ஆத்மன்.
இந்திரஜித்திற்கும் தங்கைக்கு நல்ல கணவன் அமைந்ததை நினைத்து சந்தோஷம் தான்…
“அமிர்தா படிப்பு முடியற வரை தான் உனக்கு டைம் ஆத்மன்… அதுக்கு அப்புறம் எல்லாருக்குமே உங்க கல்யாணம் பத்தி தெரியணும்” என்று அவன் சொன்னதுக்கு ஆமோதிக்கவே செய்தான் ஆத்மன்.
அவனுக்கு தான் அவளின் மீது கொள்ளை காதல் ஆயிற்றே..
அனன்யா மற்றும் சர்வா மாறி மாறி அமிர்தாவிற்கு கால் செய்ய அவளோ கால்லை கட் செய்து விட்டாள்.
ஆத்மனின் பங்களா வரும் வரை அவன் எதுவும் பேசவில்லை… அதே இறுக்கமான முகம் தான்…
‘உன்னை காதலிக்குறேன் அது இது ன்னு முன்னாடி பேசுவான்.. இப்போ என்னை யூஸ் பண்ண அப்புறம் என் முகத்தை கூட பாக்க மாட்டிங்குறான்’ என அவனைப் பார்த்து ஆதங்கப்பட்டவளின் மனதில் அவளுக்கு தாலி கட்டிய மணவாளன் மெல்ல மெல்ல உள்ளே நுழைய ஆரம்பித்தான்.
உண்மை தான்… ஆத்மன் அமிர்தாவை உடலால் ஆட்கொள்ளும் வரை கூட அமிர்தாவிற்கு ஆத்மன் மீது கணவன் உணர்வு இல்லை தான்..
சர்வாவும் அந்த தாலிக்கு மதிப்பு கொடுக்காமல் நாம் திருமணம் செய்யலாம் என பேசிக் கொண்டே இருக்க, ஒருப்பக்கம் ஆத்மன் சர்வாவை ஏதாவது செய்து விடுவான் என்கிற பயம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அவளுக்கு சர்வா மீதும் காதல் பற்று இல்லையே..
ஆனாலும் அவளை பேசியே கரைத்த சர்வா அமிர்தாவை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தான்…
அமிர்தா சர்வாவிற்கு நம்பிக்கை வாக்கு கொடுக்கவில்லை என்றாலும் அவள் கிட்டத்தட்ட சம்மதம் சொன்ன போல தான் சமீபத்தில் இருந்தாள்.
இந்த விஷயம் ஆத்மனுக்குத் தெரிந்துவிட்டது..
ஆம், சர்வாவுடன் பணிவுரியும் ஒருவன் ஆத்மனின் ஸ்பை…
வேண்டும் என்றே சர்வாவிடம் நெருங்கிய நண்பனாகி ஆத்மனுக்கு தூது போனான்…
அதனின் விளைவு சர்வா அனைத்தையும் அவனின் நெருங்கிய நண்பனிடம் உளர, அவ்விஷயம் ஆத்மனுக்கு சென்றது…
அதன் பின் தானே அவன் அவளை மிரட்டி உடல் அளவில் ஆட்கொண்டான்..
ராஜேஷ் ரெட்டி வீடே ஆத்மன் ரெட்டி விஷயத்தை கண்டு அதிர்ச்சியில் திளைத்தது…
ராஜேஷ் ரெட்டிக்கு அங்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தது என்னவோ, ஆத்மனுக்கு பெண் பார்த்திருந்த பிரொடியூசர் சிந்துஜா தான்…
காரை விட்டு கீழே இறங்கியவனோ அமிர்தாவை ஆதங்கமாக பார்த்தான்…
‘உன்னை கைப்பிடிச்சு ராணி போல என் வீட்டுக்குள்ள கூட்டிட்டு போகணும்னு நினைச்சேன் டி ஆனா நீ’ என மனதிற்குள் பொறுமியவன், அவளை அனல் வீசும் பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாது அதே வேக நடையுடன் உள்ளே சென்றான்.
இத்தனை நேரம் வேக நடையுடன் வந்தாலே… இப்போது தயங்கி தயங்கி தான் நடையை வைத்தாள்..
ஆத்மனின் வீட்டில் அவனின் வீட்டினரிடம் எப்படி முகத்தைக் காட்டுவது என்று…
உள்ளே நுழைந்த மகனை, “ஆத்மா” என அழைத்து நிறுத்தியவரிடம், “சொல்லுங்க நானா” என்றான் கூலாக.
“எங்ககிட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாமே ஆத்மா… விஷயம் தெரியாம நம்ம சிந்துவை” என அவர் ஆதங்கமாக சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, உள்ளே நுழைந்த அமிர்தாவிற்கோ அவர் பேசுவது தெளிவாக காதில் விழுந்தது…
“சிந்து ரொம்ப பாவம் ம்பா… உன்னை அவ்வளவு காதலிச்சா…” என்று அவர் வருந்த,
“அன்கிள்… இப்போயும் ஒன்னும் குறைஞ்சு போல.. அமிர்தா ஆத்மனை பிடிக்கன்னு விவாகரத்து கொடுத்தா நான் கல்யாணம் பண்ண ரெடி” என்றாள் பாருங்க… ஆடிப்போய் விட்டாள் அமிர்தா..
அவளை முறைத்த ஆத்மனின் பார்வை முதுகுக்கு பின்னால் நின்றிருந்த அமிர்தாவிற்கே தெரியாமல் வேற போயிற்று…
அப்போது தான் அமிர்தா வந்ததை உணர்ந்த ராஜேஷோ, “இனி நீ இந்த வீட்டு மருமக ம்மா அதுக்கு ஏத்த போல நடந்துக்கோ” என்றவரோ மனைவியை அழைக்க, அமிர்தாவிடம் இலகுவாக தான் பேசினார் ஆத்மனின் சிற்றன்னை.
அங்கிருந்த சிந்துஜாவைப் பார்க்க பார்க்க அமிர்தாவிற்கு பத்திக்கொண்டு வந்தது..
சிந்துஜா உன் பார்வை எல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை என்பது போல, “ஆத்மனுக்கு இனி உண்மையா இரு அமிர்தா.. இல்லன்னா அவனை விட்டு விலகிடு… இந்த நிமிஷம் அவனைக் கல்யாணம் பண்ண நான் ரெடி.. ஐ லவ் ஹிம்” என்றாள் அழுத்தம் நிறைந்த காதலுடன்.
அவள் சொல்வது எல்லாம் ஆத்மனின் பெற்றோர்கள் முன்னிலையில் தான்…
ஆனால் அவர்களோ சிந்துஜாவை அதட்ட கூட இல்லை..
ஏன் ஆத்மன் இருந்த பொழுதும் அவன் எதுவும் சொல்லவில்லையே.. ஒருவேளை அவனின் மனதில் இப்போது இவள் தான் இருக்கிறாளா! என மனது அடித்துக் கொண்டு இருக்கும் போதே,
“ஆத்மன் ரூம் மேலே போய் வலது பக்கம் முதல்ல இருக்கு அமிர்தா” என்றார் கவிதா.
அவரிடம் சோர்வாக தலையாட்டியவள் சிந்துஜா பேசியதற்கு ஒரு அழுத்தமான பார்வையை மட்டும் பதிலாக கொடுத்து அவர் குறிப்பிட்ட அறைக்கு சென்றாள்…
ஆத்மனின் அறைக்குள் நுழையும் போதே சிங்கத்தின் குகைக்குள் நுழையும் மான் போ அத்தனை பயம் அவளுக்கு…
வாழ்க்கை அவளுக்கு என்ன கொடுக்க காத்திருக்கிறதோ?
