பிரியாதிரு 14
சோனியா சற்றும் எதிர்ப்பார்க்கும் முன்னர் அல்லவா விக்னேஷ் அவளின் இதழ்களை கொய்திருந்தான்..
தன் முழு பலம் கொண்டு அவனை தள்ளி விட கைகள் சென்ற சில நிமிடங்களிலேயே அவனின் முத்தத்திற்குள் மூழ்கி அவனுள் மூழ்கித் தான் போனாள் தன் மனக் கட்டுப்பாட்டையும் மீறி!
அவள் விக்னேஷின் மீது வைத்திருக்கும் காதல் தான் இன்னும் மாறாமல் நிலைத்து இருக்கிறதே…
அவளின் வெற்றிடையை தன்னோடு சேர்த்து இறுக்கியபடி நீண்ட நேரமாக இதழ் ஒற்றி விட்டு வேகமாக தள்ளிவிட்டபடி விடுவித்தவன், “இதுக்கு நானே நீ ஆசைப்பட்ட… என்னை மயக்கி உன் கூட படுக்க வைச்சு மறுபடியும் என்னை உன்னோட டிராப்ல இழுக்க பாக்குற… ரைட்” என கர்ஜித்தான் விக்னேஷ்.
சில நொடிகள் முன்பு அவளை ஆளுமையாக வன்மையாக தான் முத்தமிட்டான்… ஆனால் தன்னை இத்தனை இழிவாக நினைத்து முத்தமிட்டு இருப்பான் என அவள் கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்கவில்லை…
“விக்..னேஷ்..” என தடுமாறியவளின் கண்களோ குளம் கட்டியது..
ஆனாலும், “நீங்க ரொம்ப தப்பா பேசுறீங்க விக்னேஷ்… நா…நான் அந்த மாதிரி எதுவுமே நினைக்கல… எனக்கு கொடுத்த வேலையை செய்ய தான் வந்தேன்” என அழுகுரலில் சொன்னாள்.
“நீ சொன்னா நான் நம்பணுமா.. நீ எவ்வளவு பெரிய பொயக்காரின்னு எனக்கு தெரியும் டி” என எளக்காரமாக சொன்னவனோ,
“என் குழந்தையை கொன்ன பாவி நீ… உனக்கு இன்னும் என் கூட படுக்க கேட்குதோ! அசிங்கமா இல்ல உனக்கு” என எரிமலையாய் பொறிந்தவன் அவளை கத்தினான்.
அவன் வார்த்தைகளைக் கேட்டு அவளுக்கு நெஞ்சே அடைத்தது…
“மைன்ட் யுவர் வேர்ட்ஸ் விக்னேஷ்… கிஸ் பண்ணினது நீங்க! நான் இல்ல” என உதடுகள் நடுங்க சொன்னவளை மார்புக்கு குறுக்கே கை கட்டியபடி அலட்சியமாக பார்த்தவன்,
“நான் கிஸ் பண்ணனும்னு தானே நீ இந்த மாதிரி என் முன்னாடி செக்ஸியா டிரெஸ் பண்ணிட்டு வர” என்றவனோ அவளின் வெற்றிடையைக் காட்டினான்.
அவனோ மேலும், “நீ செடியூஸ் பண்ண… நான் செடியூஸ் ஆயிட்டேன் தட்ஸ் இட்… என் டைம வேஸ்ட் பண்ணாத! எனக்காக ப்ரீத்தா காத்துக்கிட்டு இருப்பா.. கெட் அவுட்” என்றான் எரிச்சலாக.
இத்தனை நேரம் அவன் காயப்படுத்தியதை விட இப்போது ப்ரீத்தாவிற்காக ஆர்வமாக கிளம்புபவனை பார்க்க அவளால் முடியவில்லை.. வெடித்து அழுது விழும் நிலை அவளுக்கு…
அதை அவன் முன் காட்டி இன்னும் தன்னை இழிநிலைக்கு உள்ளாக்க பயந்து வேகமாக வெளியேறினாள் சோனியா.
அவள் செல்லும் வரை நக்கல் கலந்த எளக்கார தோரணையில் இருந்தவனோ அவள் சென்ற பின்னர் இறுக்கமானான்.
சோனியா இங்கு இருப்பதை கண்ட அபினவ் சர்மாவுக்கு அவள் தான் விக்னேஷின் மனைவி என்று தெரியவில்லை..
ஆனால் மேடையில் தன் தோழிகளின் கிண்டலில் சந்தோஷத்துடன் திளைத்திருந்த ப்ரீத்தாவின் கண்களில் பட்ட சோனியாவை அவள் கண்டுக்கொள்ளாமல் இருப்பாளா!
விக்னேஷை காதலிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே ப்ரீத்தா அவனின் கடந்த காலத்தை தோண்டி துருவியவள் ஆயிற்றே…
அதிலும் சோனியாவின் அழகை கண்டு அவ்வளவு பொறாமை பட்டுருக்கிறாள் ப்ரீத்தா.
இதோ தன் கண் முன்னே பேரழகியாய் வலம் வரும் சோனியாவை கண்டவளின் மனம் செந்தணலாய் கொதிக்க, அனைவரின் முன் தன் உணர்வுகளை காட்ட முடியாதவள், தன் தந்தையிடம் தனியாக சென்று,
“அப்பா விக்னேஷோட எக்ஸ் பொண்டாட்டி சோனியாக்கு என் கல்யாணத்துல என்ன வேலை… அவ உடனே இங்க இருந்து கிளம்பணும்…அவ மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கா… நானும் விக்னேஷூம் கல்யாணம் பண்ணிக்குறதை கெடுக்கவே வந்துருக்கா அவ” என கத்திய மகளை சமாதானம் செய்த அபினவ் சர்மா,
“அவ எங்க?” என்று கேட்டறிந்தவருக்கு சோனியாவை வெளியே செல்ல சொல்ல பயம்… இந்திரஜித்தின் மீது அவருக்கு பயம்…
இருந்தாலும் மகள் சொன்னதிற்காக சற்று தயங்கியபடியே அவர் பிரனவ்விற்கு கேட்க, விஷயம் இந்திரஜித்திற்கு செல்லாமல் இருக்குமா என்ன!
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அபினவ் சர்மாவிற்கு ஒரு தெரியாத நம்பரில் இருந்து ஃபோன் வந்தது…
“நான் அந்த பையன் கிட்ட சொல்லிட்டேன் மா.. கொஞ்சம் பொறுமையா வெயிட் பண்ணு” என அவர் மகளை அப்போதைக்கு சமாளித்துக் கொண்டு இருக்கும் போது தான் ஒரு தெரியாத எண்ணில் இருந்து கால் வந்தது..
“யார் கால் பண்றா?” என்கிற யோசனையுடன் அவர் ஃபோனை எடுக்க மறுப்பக்கம்,
“இந்திரஜித் ஹியர்” என்றதும் வாயடைத்து விட்டார்.. கிட்டத்தட்ட அவருக்கு வியர்க்கவே தொடங்கியது…
***
அமிர்தா உள்ளே வந்த போது அங்கு ஆத்மன் இல்லை… சற்று பெருமூச்சுவிட்டுக் கொண்டாள்.
இத்தனை நேரம் அவளின் ஃபோன் சைல்ண்ட்டில் இருப்பதை உணர்ந்தவள் அவசரமாக எடுத்து முதலில் அனன்யாவிற்கு கால் செய்து,
“சாரி டி ஃபோனைப் பாக்கல” என சொல்லும் போதே அவளின் கண்களில் கண்ணீர் திரண்டது.
“உன்னை சுத்தி என்ன நடக்குது அம்மு.. அவர் உன்னை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணினதை நீ ஏன் சொல்லல!” என்று கோபமாக கேட்டாள்.
“எனக்கு வேற வழி இல்ல அன்னு.. பாலாவும் ஃபோன் பண்ணிருந்தா அவ கிட்ட நான் அப்புறம் பேசுறதா சொல்லிடு… நான் நாளைக்கு பேசுறேன் அம்மு ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கு” என ஃபோனை அணைத்தவளுக்கு சர்வாவிடம் இருந்து பல மிஸ்ஸட் கால்கள், மெசேஜ்கள் மற்றும் வாய்ஸ் நோட் வேறு வந்திருந்தது.
