அத்தியாயம் 32
பெங்களூர் சென்றுக் கொண்டுருக்கும் போதே தாரிகாவுக்கு கால் செய்த வம்சி, “தாரிகா, இன்னிக்கு இன்டர்வியூ ஸ்டார்ட் பண்ணு. பட் கோமகள் ராதையை மட்டும் கடைசியா தான் கூப்பிடணும். லெட் ஹேர் பீ த ஃபிஃப்ட்டியத் பெர்ஸன்” என்று காலை கட் செய்தவன், காரை ஓட்டியபடி தன்னுடைய அம்மாவுக்கு கால் செய்தான்.
“சொல்லு வேதந்த், நாங்க இப்போ பெங்களூர் வந்திட்டு இருக்கோம்” என்று பட்டும் படாமல் பேசினார்.
“ம்ம் நீங்கள் என்கிட்ட கோபப்பட்டா நஷ்டம் உங்களுக்குத் தான் அம்மா… என்னால உங்கக்கிட்ட பேசாம எவ்வளவு நாள் வேணும்னாலும் இருக்க முடியும். ஆனா உங்களால அப்படி இருக்க முடியாது. அதனால தேவை இல்லாம என்கிட்ட முகத்தைத் திருப்பாதீங்க…”
“இன்னிக்கு நைட் என்னோட ரூம்ல ஃபலவர்ஸ் டெக்கரேஷனோட ரெடி ஆகி இருக்கணும்… எதுக்குனு தெரிஞ்சிக்கோங்க ம்மா.. இன்னிக்கு நைட் நான் என்னோட பொண்டாட்டியோட வருவேன்” என்று அழுத்தமாகக் கூறியவன், கால்லை அணைத்துவிட்டு, வேகமாக அந்த ஹைவேயில் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.
வம்சிக்கு தன் தாயின் மேல் பயங்கரமான கோபம் இருந்தது. லட்சுமியைப் பொறுத்தவரை தன் அண்ணன் மகள் ஷிவானி தான் இந்த வீட்டு மருமகளாக வரவேண்டும். வம்சியின் கோபம் தன் தாயையும் ஷிவானியையும் வெறுப்பேற்ற வேண்டும். அதற்காகவே தான் தன் அன்னையிடம் அவ்வாறு பேசினான்.
இன்டர்வியூவில் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். அப்போது கூட ராதையின் பெயர் அழைக்கப்படவில்லை. ராதை விட்டால் அழுதே விடுவாள் போல, நேரம் ஆக ஆக அவள் மனதில் நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.
அவள் பக்கத்தில் இருந்த வனிதா, பொறுமை தாங்காமல் அங்கு நின்ற தாரிகாவிடம்,
“எக்ஸ்க்யூஸ் மீ மேடம், இவளோட பேர் கோமகள் ராதை. இவளை எப்போ கூப்புடுவீங்க? இவளுக்கு அப்பறம் இன்டர்வியூ டைமீங் இருக்குறவங்க எல்லாரும் போயிட்டு இருக்காங்க” என்று கேட்டே விட்டாள் வனிதா.
“மேடம் இப்போ தான் பத்து பேருக்கு முடிஞ்சிருக்கு… கோமகள் ராதை வர இன்னும் டைம் இருக்கு” என்றபடி ராதையின் தவிப்பைக் கண்ட தாரிகாவோ,
‘இந்தப் பொண்ணு பார்க்க எவ்வளவு அழகா இருக்கு. அதுவும் இந்த ரெட் சுடிதாருக்கு எல்லோ கேதரிங் பேன்ட், எல்லோ ஷால், அவளோட அரிசி ஜடை, அந்த ஜடையை முன்னாடி போட்டு பார்க்கவே ஹீரோயின் ரேன்ஜுக்கு இருக்கா…’
‘ஒருவேளை அதனால தான் பாஸே இவளை இன்டர்வியூ எடுக்கணும்னு நினைக்குறாரோ! ச்ச ச்சே பாஸ் பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப கண்ணியம் ஆனவர் ஆச்சே… ஆனா இந்த பொண்ணோட அழகு அவரோட கண்ணியத்தையே உடைச்சிடும் போல’ என்று எண்ணியவள் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மணி இரவு எட்டை நெருங்கியது. அப்போது வரை நாற்பத்தி ஐந்து பேர் முடிவடைந்திருந்த நிலையில் வனிதா வேறு வழியின்றி பொறுமை தான் காத்தாள். ராதைக்கு பயம் கலந்த படபடப்பு தான் ரொம்ப நேரமாகவே இருந்தது. தனக்கு இன்று வேலை கிடைத்து விட்டால் தான் தன் வாழ்க்கை நகரும், அது போக இரவு நேரம் வந்தும் அவளின் பெயர் அழைக்கப்படாததால் அவளின் மனதிற்குள் அச்சம் படர்ந்தது.
“கோமகள் ராதை கம் இன்” என்று தாரிகா அழைக்க, வனிதாவிடம் லேசாக தலையசைத்து விட்டு தாரிகாவின் பின்னால் சென்றாள் ராதை.
ராதையை ஒரு வெயிட்டிங் ஹாலில் காத்திருக்க வைத்த தாரிகா வெளியில் சென்று விட, “ஸ்டே காம் ராதை.. நீ இன்ட்ர்வீயூ பெஸ்ட்டா பண்ணனும்” என தன்னையே அவள் தயார் படுத்தினாள்.
தன் கைக்கடிகாரத்தில் மணி ஒன்பதைக் காட்டியது. அதைப் பார்த்தவள், ‘இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமோ இன்டர்வியூ எடுக்க’ என்று அவள் நினைக்கும் போது தான் காலையில் வனிதா சொன்னதே அவளின் ஞாபகத்திற்கு வந்தது.
“டி ராதை, கம்பெனியோட எம்டி பேர், அவருடைய விக்கிபீடியா எல்லாம் பாத்துட்டியா?” என்று கேட்டவளிடம், “ஐய்யோ பார்க்கலை டி, இப்போ நெட் சரியா இல்லை. அப்புறம் பாக்குறேன்” என்று சொல்லிருந்தாள்… அது இப்போது தான் பெண்ணவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது…
அதில் தன்னையே திட்டிக்கொண்டவள் தன் மொபைலில் V2K software company Wikipedia என்று தேடினாள். அவளின் கெட்ட நேரம் அப்போதும் நெட் சரியாக வேலை செய்யாததால் அவளுக்குத் தேடியது கிடைக்கவேயில்லை.
“கோமகள் ராதை ஃபாலோ மீ” என்றபடி தாரிகா சொல்லிவிட்டு செல்ல, ராதைக்கு முன் சென்ற ஒரு பெண் வேறு ஒரு அறைக்கு இன்டர்வியூவுக்கு சென்றாள். அவளைத் தொடர்ந்துச் சென்ற ராதை அவள் பின்னாடியே சென்றுக் கொண்டிருந்தாள்.
‘என்ன இவங்க போய்ட்டே இருக்காங்க? ஆள் நடமாட்டம் வேற இங்க சுத்தமா இல்லையே…’ என்று எண்ணியவள் தன் மனதை பயமில்லாமல் இருக்க தனக்குள் கூறிக்கொண்டாள்.
“யூ வெயிட் ஹியர்” என்று தாரிகா ஒரு பெரிய பிரம்மாண்ட அறையினுள் சென்று சாற்றிக்கொண்டாள். தன் ஃபைலை தன் இரு கைகளிலும் இறுக்க கட்டி அணைத்தபடி ராதை வெளியே நின்றுக் கொண்டிருந்தாள். அவள் நின்ற திசையின் மேல் தான் பெரிய தங்கநிறப் பலகையில், Vamsi Vedanth Krishna MD & CEO என்று எழுதப்பட்டு இருந்ததைப் பாவம் பேதையவள் கவனிக்கவில்லை.
“பாஸ் அந்தப் பொண்ணு வெளியே நிக்குறா…” என்று கம்பீரமாக தன் இருக்கையில் அமர்ந்தவனைப் பார்த்து சொன்ன தாரிகா அவனை மெய்மறந்து ரசித்தாள்.
‘ஈவ்னிங் குளிச்சிட்டு ஃபிரெஷ்ஷா வந்திருக்கார் போல அவரோட அடர்த்தியான முடிக்கு ஷாம்பூ போட்டுருக்காரு அது அப்படியே அலை அலையா இருக்கு… அவரோட திகட்டாத அளவான வெள்ளை நிறத்துக்கு இந்த ப்ளூ சட்டை, அரக்கு ஓவர் கோட் செமயா இருக்கு’ என்று தாரிகா வம்சியை வைத்த கண் வாங்காமல் வருணித்தபடி பார்த்துக் கொண்டு இருந்தாள்.
தாரிகா தன்னைப் பார்த்து ஜொல்லு விடுகிறாள் என்று உணர்ந்த வம்சி அவன் அமர்ந்துருந்த அந்த சிம்மாசன இருக்கையிலேயே தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு தன் சுழற் நாற்காலியில் கெத்தாக சாய்ந்து,
“தாரிகா ஐ செட் யூ கேன் கோ நௌ” என்றான் அமைதியாக அமர்த்தலாக.
“பாஸ், அது வந்து… அந்தப் பொண்ணு ரொம்ப பயந்தாங்கோலி மாதிரி தெரியுறா, நான் வேணும்னா இங்க ஒரு ஓரமா இருந்துக்கவா?” என்று இம்முறை உண்மையாக ராதைக்காகக் கேட்டாள் தாரிகா.
“நான் ஒன்னும் அவளை கடிச்சு சாப்டுட மாட்டேன். நீ கிளம்பு அன்ட் என்கிட்ட எத பேசணும், எத பேச கூடாதுனு உனக்கும் அந்த பிரணவ்க்கும் நான் கிளாஸ் எடுக்கணும் போல…” என்று திமிராகக் கூறியவன்,
“கோமகள் ராதையுடைய இன்டர்வியூ கால் லெட்டரை குடுத்துட்டு நீ கிளம்பு. ஆஸ்க் ஹேர் டு கம் இன் சைட் வென் ஷி ஹியர்ஸ் த பெல் சவுண்ட்” என்று அவளிடம் ராதைக்கான இன்டர்வியூ கால் லெட்டரை வாங்கியவன் அவளை வெளியே அனுப்பிவிட்டான்.
வெளியே வந்த தாரிகாவை ஒரு வித படபடப்புடன் பார்த்த ராதையிடம், “யூ பீ ஹியர், கோ இன்சைட் ஒன்ஸ் த பெல் ரிங்ஸ்” என்று சென்றுவிட்டாள் தாரிகா.
அவ்வளவு தான் ராதைக்கு அந்த சென்ட்ரலைஸ்டு ஏசி குளிரிலும் வியர்க்கத் தொடங்கியது. தன் முகத்தைக் கைகுட்டையால் வைத்து துடைத்தவள், அதை தன் கைக்குள் திணித்துக் கொண்டிருந்த சமயம் பெல் அடித்தது.
கதவைத் திறந்தவளுக்குக் காட்சியளித்தது என்னவோ ஒரு பெரிய குஷன் நாற்காலி இவளுக்கு முதுகு காட்டிக் கொண்டிருந்தது தான். அந்த நாற்காலிக்கு பின் இருந்த வம்சியை அவளால் காண முடியவில்லை.
ஒரு ஆடவனின் பின்னந்தலை மட்டுமே தனக்கு காட்சியளித்ததால், “மே ஐ கம் இன் சார்” என்று தன் அழகிய குரலால் கேட்டாள் ராதை.
அவன் தன் முகத்தைக் காட்டாமல், “கெட் இன் மிஸஸ் கோமகள் ராதை” என்றான் கம்பீரமாக.
அவள் இருந்த படபடப்பில், மனநிலையில் இந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் தான் தன் வாழ்க்கையில் பிரளயத்தை ஏற்படுத்தியவன் என்பதை உன்னிப்பாக கவனித்து கண்டறியாதவள், “சார் சாரி ஐ அம் மிஸ் கோமகள் ராதை” என்றபடி தான் உள்ளே மறைத்து வைத்திருந்த தாலி வெளியே தெரிகிறதா என்று ஒரு முறை ராதை சரி பார்த்துக்கொண்டிருந்த சமயம், அவள் கூறிய பதிலின் ஆக்ரோஷத்தில் நாற்காலியைச் சுழற்றிய வம்சி ராதையைச் சுடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
தன் தாலி சரியாக மறைந்திருக்கிறதா என்று பார்த்து நேரே பார்க்கும் போது எரிக்கும் கண்களால் கம்பீரமாக அவளை நோக்கிக்கொண்டிருந்தான் வம்சி வேதந்த் கிருஷ்ணா.
அவனைக் கண்ட அதிர்ச்சியில் தன் ஃபைலை கீழே போட்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென கொட்டிக் கொண்டிருந்தது.
‘கடவுளே, உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட கருணையே இல்லையா? ஏன் என்னை இப்படி மாட்டி விட்டுட்டே இருக்கீங்க’ என்று மனதில் பயத்தின் உச்சிக்கே சென்றவள், வெளியே அதை அழுகையாய் காட்டினாள்.
டக்கென்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவனைக் கண்டதும் அழுதுக் கொண்டே ஒரு அடி பின்னே நகர்ந்தாள் ராதை.
“சார் ப்ளிஸ்… உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன், நான் எங்கேயாவது போயிடுறேன். உங்களுக்கு தான் என்னை பிடிக்காதுல… என்னை விட்டுடுங்க… என் பாட்டியை, என் குடும்பத்தை எல்லாம் பிரிஞ்சு இருக்கேன். அதுவே எனக்கு பெரிய தண்டனை சார் ப்ளிஸ்…” என்று அவள் கெஞ்சும் போது தான் அவளுடைய பாட்டி இறந்ததை நினைத்தவன்,
‘இவக்கிட்ட அவளோட பாட்டி இறந்த விஷயத்தை எப்படி சொல்றது? இவ தாங்குவாளா?’ என மனதில் நினைத்தவன் அந்த நொடி அவளுக்காக குழம்பினான்.
ஒரு நிமிடம் அவளுக்காக வருந்தியவன், அவளின் பக்கத்தில் சென்றான். ராதைக்கு ஒரு அதீத நம்பிக்கை இருந்தது வம்சி தன்னிடம் தவறாய் நெருங்க மாட்டான் என்று. ஏனெனில் தன்னை வைப்பாட்டியாக வைக்க கூட தகுதி இல்லை என்று கூறியவன், தன்னை அடிக்கத் தான் வருவான் என்று நினைத்தாள்.
ஒருவேளை இவன் ஆசை தீர தன்னை அடித்து விட்டால் கூட அப்புறம் ஒழிஞ்சுது சனியன் என்று நினைப்பானோ என்று வம்சி நெருங்கும்போதும் அசையாமல் அழுதுக் கொண்டே இருந்தாள் ராதை.
ராதையின் பக்கத்தில் வந்து நின்ற ஆறு அடி வம்சியின் முன் ராதை ஒரு சிறிய குருவி போல் இருந்தாள். “நான் கட்டுன தாலி எங்க? எவ்வளவு தைரியம் இருந்தா மிஸ் கோமகள் ராதைனு சொல்லுவ?” என்று நிதானமாய் அமர்த்தலாக பேசியவன், “நான் கட்டுன தாலி எங்கே டி?” என்று கத்தி முடித்தான்.
அவன் தன் அருகிலிருந்து கத்திய வேகத்தில் தன் துப்பட்டாவை நகர்த்தி தன் சல்வாரினுள் மறைத்து வைத்துருந்த தாலியை வெளியே தெரியுமாறு போட்டவளின் பக்கத்தில் இன்னும் நெருங்கியவன், அவளின் கன்னத்தில் தன்னுடைய ஒரு கையை வைத்தான்.
இவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தவளிடம் ஏதோ சொல்ல வாய் எடுத்தவன் அவளுடைய அழுகையைத் தன் விரலால் துடைத்தான்.
பின் ஏதோ நினைத்தவனாக அவளிடம் இருந்து விலகியவன், “நான் இப்போ என்ன மூடுல இருக்கேன்னு எனக்கே தெரியல. பட் இப்போ நான் கோபமான மூடுல இல்லை. அதனால ஒழுங்கு மரியாதையா அழாம, ஆர்ப்பாட்டம் பண்ணாம இப்போ என்னோட வந்து, நீ தங்கி இருக்குற இடத்தை வெக்கேட் பண்ணிட்டு என் கூட வரணும்.. நீ வந்து தான் ஆகணும்.. உனக்கு வேற எந்த ஆப்ஷனும் இல்ல” என்று மெதுவாக ஆனால் அழுத்தமாக சொன்னான்.
***
